தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
புதன், 7 ஜூன், 2023
வெள்ளி, 2 ஜூன், 2023
சில்லு சில்லாய் - 11 - (Reed Bed) இயற்கை நாணல் படுகை/சம்பு (Narrow Leaf Cattail) – புள்ளி மூக்கு வாத்து (Indian Spot Billed Duck) - ஹோக்கர்கார் (Hokersar) சதுப்பு நிலம்
சில்லு – 1 (Reed Bed) நாணல் படுகை/சம்பு (Narrow Leaf Cattail-Typha) – புள்ளி மூக்கு வாத்து (Indian Spot-Billed Duck)
நாணல் என்பது பேரினங்களைச் சேர்ந்த தாவரங்களுக்கான பொதுப்பெயர். கோரை என்றும் சொல்லப்படுவதுண்டு. நாணல் படுகைகள் என்பது நாணல்களால் நிறைந்து இருக்கும் நீர்நிலைகள் அல்லது சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி. அவை ஆரோக்கியமான நதி மற்றும் நீர் நிலைகளின் அடையாளம். மீன்கள், முதுகெலும்பில்லாத விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்வதற்குச் சிறந்த வாழ்விடத்தை வழங்குகின்றன.
திங்கள், 29 மே, 2023
சில்லு சில்லாய் – 10 - இயற்கையும் செயற்கையும்
(Reed Bed) நாணல்/சம்பு நீர்த்தாவர படுகை - செயற்கை
நாணல்/நீர்த்தாவர படுகை
புதன், 24 மே, 2023
எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 21 - குளத்துக் கொக்கு - INDIAN POND HERON
புதன், 17 மே, 2023
மரம் ஒரு வரம்
“மரம் ஒரு வரம்”. ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற வாசகங்கள் பயணத்தின் போதெல்லாம் முன் செல்லும் வாகனத்தின் பின்னால் எழுதியிருப்பதை நாம் எல்லோரும் எத்தனையோ முறை பார்த்திருப்போம். ஒரு மரம் எனக்கு எப்படி வரமானது என்பதைப் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
ஞாயிறு, 23 ஏப்ரல், 2023
சில்லு சில்லாய் - 9 - ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
இரு நாட்களாக ஒரு பணி செய்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டு கிராமங்கள், பஞ்சாயத்துகள், ஊராட்சிகள், துணை மாவட்டங்கள், மாவட்டங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் ஆங்கிலத்தில் பதியப்பட்ட Excell கோப்பு. ஊரின் பெயர்களைத் தமிழில் பதிய வேண்டும்.
வெள்ளி, 14 ஏப்ரல், 2023
பசுமை மாறா நினைவுகள் - 1
அன்பு நட்புகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு-விஷு வாழ்த்துகள்!
********
புதன், 5 ஏப்ரல், 2023
எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 20 - லால்பாக் மலர் கண்காட்சி 2
வெள்ளி, 31 மார்ச், 2023
சில்லு சில்லாய் - 8 - கிழிஞ்சுது போ
கிழிஞ்சுது போ 1
“யாராக்கும் வந்திருக்கறவா, இவா எல்லாம்?”
“ஒன் (கொள்ளுப்) பேரனோட கூட்டாளிங்க”
"கூட்டாளிகளா சரி சரி" என்று சொல்லிவிட்டு, பாட்டி குரலைத் தழைத்துக் கொண்டாள்.
செவ்வாய், 21 மார்ச், 2023
ரப்பர் வேளாண்மை - பகுதி - 3
முந்தைய பதிவில், வெயிலில் உலர்த்திய ரப்பர் ஷீட்டில் இருக்கும் எஞ்சிய ஈரப் பதத்தை வெளியேற்றப் புகையிட வேண்டும், அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம் என்று சொல்லி முடித்திருந்தேன். இப்போது அதைப் பற்றி.
செவ்வாய், 14 மார்ச், 2023
சில்லு சில்லாய் - 7 - மாய வலைத் தொடர்பு உலகம்
என்னிடம் தொடர்பு எண்ணாக இருந்த என் தூரத்து நட்பு!!!! (தூரத்து உறவு என்பது போலான பொருள்!!ஹிஹிஹிஹி) எப்போதேனும் உதவிக்கு அழைப்பதுண்டு. அப்படி ஓர் உதவிக்காக அழைத்தேன். இணைப்பு கிடைத்ததும்,
திங்கள், 6 மார்ச், 2023
எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 19 - சாம்பல் நாரை - Grey Heron
எனது மூன்றாவது விழியின் பார்வையில் - வீட்டருகே இருக்கும் இரு ஏரிகளில் நடைப்பயிற்சி செய்யும் ஒவ்வொரு தினமும் பார்த்து ரசித்த பறவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் படங்களுடன் ஒவ்வொரு பதிவில்.
ஹெரான் வகையில் பல உள்ளன. நான் பார்த்த மூன்று வகைகளில் - Purple Heron (செந்நாரை), Grey Heron (சாம்பல் நாரை), Pond Heron (குளத்துக் கொக்கு) - முன்பு செந்நாரை (Purple Heron) பற்றி நான் எடுத்த படங்களுடன் தகவலும் பகிர்ந்திருந்தேன். இப்போது அதே வகையைச் சேர்ந்த சாம்பல் நாரை - GREY HERON
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023
ரப்பர் வேளாண்மை – பகுதி - 2
முதல் பகுதியை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அதில் ரப்பர் பால் சேகரிப்பது வரை சொல்லியிருந்தேன். இனி அதை அடுத்து என்ன செய்யப்படுகிறது என்பது இப்பகுதியில்.
ரப்பர் பால் சொட்டுவது, மரத்தை சீவி ஓரிரு மணி நேரத்தில் நின்று விடுவதால், அதன் பின் பால் சேகரிக்கப்படுகிறது. அப்படி சேகரிக்கும் போது கப்பிலிருந்து நன்றாகப் பால் வழித்து எடுக்கப்பட வேண்டும்.
சனி, 18 பிப்ரவரி, 2023
எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 18 - வீட்டுத் தோட்டத்தில் கூ...குக்கூ
சென்ற பதிவை வாசித்த கருத்திட்ட அனைவருக்கும்
மிக்க நன்றி. ஒரு சிலருக்குப் பயிற்சிகள் பயன்பட்டன என்பதும் மகிழ்ச்சி.
நாங்க ஜிப்சி கூட்டம். ஊர் ஊரா மாறுவோம் இல்லைனா வீடு மாறுவோம். வீடு கூட மாறலைனா எப்படி? இருப்புக் கொள்ளாது. ஏதானும் ஒரு காரணம் கிடைத்துவிடும்! அப்படி ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்! கிடைத்துக்கொண்டே இருக்கும் அனுபவங்கள்.
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - படுத்துக் கொண்டு செய்யும் சில எளிய பயிற்சிகள்
எல்லா நாட்களையும் நாம் சில சிறிய எளிய பயிற்சிகளுடன் தொடங்குவது நல்லது. இப்பயிற்சிகளைச் செய்யும் போதே நம் உடல் சரியாக இருக்கிறதா என்றும் தெரிந்துவிடும். அப்படி ஏதேனும் சிறிய பிரச்சனை தெரிந்தால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்காமல் உடனே மருத்துவரைச் சென்று பார்த்துவிடலாம்.
புதன், 8 பிப்ரவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - உட்கார்ந்து செய்யும் சில எளிய பயிற்சிகள்
அடுத்து உட்கார்ந்து செய்வது, படுத்துக் கொண்டு செய்வது, மற்றும் சில குறிப்புகள் என்று கூடியவரை ஒரே பதிவிலோ அல்லது இரு பதிவுகளிலோ முடித்துவிடப் பார்க்கிறேன் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். ஆனால் இப்பதிவில் நாற்காலியில் உட்கார்ந்து செய்யும் சில எளிய பயிற்சிகள் மட்டும் சொல்கிறேன். தரையில் அமர்ந்து செய்யும் பயிற்சிகள் உண்டு. அவை பெரும்பாலும் யோகாசனங்கள் என்பதால் இங்கு தரவில்லை. மேலும் பலருக்கும் தரையில் அமர முடிவதில்லை என்பதாலும் தரவில்லை. அடுத்த பதிவில் படுத்துக் கொண்டு செய்யும் பயிற்சிகள் சில சொல்லி சில குறிப்புகளுடன் முடித்துவிடுகிறேன்.
வெள்ளி, 3 பிப்ரவரி, 2023
சில்லு சில்லாய் - 6 - வைரல் பாய்ஸ், பாட்டி, திரு சைலேந்திர பாபு
இப்போதைய பெரும்பான்மை இளைஞர்கள், பெண்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள், செலவு செய்கிறார்கள், அப்பா அம்மாவின் கஷ்டம் புரிந்து கொள்வதில்லை என்ற பரவலான பொதுவான கருத்துகள் எங்கும், வலைத்தளங்களிலும் சொல்லப்படுகிறது. விதிவிலக்குகளை நான் சொல்லவில்லை.
சமீபத்தில் ஒரு வைரஸ் பற்றிய தகவல்கள் தேடப் போக தேவையில்லாத காணொளி ஒன்று வந்து கொண்டே இருந்தது. இப்படித்தான், நம் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர் போல இந்தக் கொடை வள்ளல் கூகுள் நாம் தேடும் விஷயங்களில் உள்ள ஒரு சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கான விஷயங்களை, காணொளிகளைக் காட்டிக் கொண்டே இருக்கும்.
திங்கள், 30 ஜனவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - கைகள், கழுத்து, தோள்பட்டைக்கான பயிற்சிகள்
எழுத்தில், படங்களின் மூலம் சொல்வதை விட நேரடிப்பயிற்சி நல்லது என்பதை நான் மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன். யோகா ஆசனங்களை எப்படி ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொண்டு செய்வது நல்லதோ அப்படி, இப்படியான சில பயிற்சிகளை உடல் உபாதைகள் ஏதேனும் இருந்தால், தகுந்த மருத்துவர், ஃபிசியோதெராப்பிஸ்ட்டிடம் ஆலோசனை பெற்று கற்றுக் கொண்டு செய்வது நல்லது.
வியாழன், 26 ஜனவரி, 2023
ரப்பர் வேளாண்மை - பகுதி 1
இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்து வாழ்பவர்கள்தான் நம் நாட்டில் பெரும்பாலும். அதனால்தான் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்” மற்றவர்கள் எல்லாம் அவர்களைத் “தொழுதுண்டு வாழ்பவர்கள்” என்று சொல்லப்படுகிறது. வேளாண்மையில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றுடன் காப்பி, தேயிலை, ஏலம், ரப்பர் போன்றவைகளும் அவரவர்களுக்கான சூழல்களில் பயிரிடப்பட்டு பராமறிக்கப்படுகிறதுதான். இவற்றில் ரப்பர் பராமரிப்பும், பயனெடுப்பும் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் நான் கண்டறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
திங்கள், 23 ஜனவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள்-தொடர்ச்சி
சென்ற பகுதியில், நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள் இன்னும் சில பற்றி அடுத்த பகுதியில் தொடர்கிறேன், என்று சொல்லியிருந்தேன். இதோ இங்கே. இவை எல்லாமும் நான் செய்வதுதான் ஆனால் நான் செய்யும் படங்கள், காணொளிகள் எடுக்க முடியாததால் இங்குப் பகிர முடியலை. ஒவ்வொன்றையும், லெஃப்ட் ரைட் தவிர நான் 30 எண்ணிக்கை செய்வதுண்டு. லெஃப்ட் ரைட் மட்டும் 100 எண்ணிக்கை செய்வதுண்டு.
வியாழன், 19 ஜனவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள்
சனி, 14 ஜனவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி
தை பிறந்தால் வழி பிறக்கும்! தங்கமே தங்கமான எங்கள் நட்புகள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் மகிழ்வாக வாழ்ந்திட வாழ்த்துகள்! (துளசிதரன், கீதா)
(இந்த வரியைப் பார்த்து வாழ்த்துகளை மட்டும் சொல்லிவிட்டு
ஓடிடாதீங்க! இதை முன்னரே சில பதிவுகளில் சொல்ல நினைத்ததுண்டு. இப்ப
எபி வியாழன் பதிவில் நம்ம ஸ்ரீராம் சொல்லியிருந்த ஒரு வரி எனக்கு இதை நினைவுபடுத்தியது!!)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
வெள்ளி, 6 ஜனவரி, 2023
இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 13 - Bபோரா குஹாலு (Borra Caves)
பகுதி 12, பகுதி 11, பகுதி 10, பகுதி 9, பகுதி 8, பகுதி 7, பகுதி 6, பகுதி 5, பகுதி 4, பகுதி 3, பகுதி 2, பகுதி 1
சென்ற பகுதியின் இறுதியில் தடிகுடா நீர்வீழ்ச்சி பற்றி சொல்லி அங்கிருந்து சுமார் 11.5 கிமீ தூரத்தில் இருக்கும் போரா குகைகளைப் பார்க்கச் சென்றோம் என்று சொல்லி முடித்திருந்தேன். பதிவுகளை வாசிப்பவர்கள், கருத்திடுபவர்கள் அனைவருக்கும் நன்றி.
ஞாயிறு, 1 ஜனவரி, 2023
இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 12 - அனந்தகிரி மலை (G)கலிகொண்டா வியூ பாய்ன்ட் - காஃபி தோட்டம் - தடிகுடா நீர்வீழ்ச்சி
அனைவருக்கும் எங்கள் இருவரின் (துளசிதரன், கீதா) இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! எல்லோரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளும் நல்கிட வாழ்த்துகள்!