The technology named ‘Constructed Wetlands for
Treating Wastewater’ is ideal for the treatment of domestic and municipal
wastewater in cities. It is an organic wastewater treatment system that mimics
and improves the effectiveness of the processes that help to purify water
similar to naturally occurring wetlands.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
புதன், 28 ஜூன், 2023
சில்லு சில்லாய் – 12 - செயற்கை நாணல் படுகை – லால்குடி/திருத்தவத்துறை – ஞானப்பழத்தைப் பிழிந்து
சில்லு – 1 – கட்டப்பட்ட ஈரநிலம், செயற்கை நாணல் படுகை
(என் ஆர்வ மிகுதியில் எழுதியிருக்கும் சில்லு 1 பகுதி கொஞ்சம் பாடம் போன்று இருக்கலாம். வாசிக்கப் பிடிக்காதவர்கள் தவிர்த்துவிடலாம்.)
செயற்கை நாணல்படுகை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன். ஸ்ரீராமும் அது எப்படி இருக்கும் என்று அறிய ஆவல் என்று சொல்லியிருந்தார். செயற்கை நாணல்படுகை பற்றிச் சொல்லும் முன் ஈரநிலங்களின் அவசியம் பற்றி சில குறிப்புகள்.
ஈரநிலம் என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்தான். நீர் நிலைகள் இயற்கையாக அல்லது செயற்கையாக நன்னீரைக் கொண்டிருக்கும் ஆற்றின் அருகில் இருக்கும் நிலங்கள் அல்லது உப்பு நீரைக் கொண்டிருக்கும் கடலுக்கு அருகில் இருக்கும் இடங்கள், கடல் நீரும் நன்னீர் கொண்ட ஆறுகள் கலக்கும் இடங்களான முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள், ஏரிப்படுகைகள், எல்லாமே ஈரநிலங்கள் (Wet lands) என்று சுற்றுச் சூழலியலில் சொல்லப்படுகிறது. இவற்றின் கரையோரங்களில் அல்லது நடுவில் திட்டுகளில் நாணல்கள், நீர்த்தாவரங்கள் வளர்கின்றன.
இவை தற்காலிகமாகவும் இருக்கலாம் அல்லது நிரந்தரமாகவும் நீரால் மூடப்பட்டிருக்கலாம். பெரும்பாலும் இந்த ஈரநிலங்களில் ஆழம் குறைவாகத்தான் இருக்குமாம். கடல் நீர் நிலத்தில் உட்புகுந்து 6 மீட்டர் அளவு ஆழம் இருப்பவையும் உவர்ப்பு நீர் ஈரநிலங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன.
பல சதுப்புநிலங்கள், ஈரநிலங்கள் குப்பைக்கிடங்குகளாக மாறி வருவது வேதனை. சென்னையில், நான் இருந்தவரை குப்பைக் கிடங்காக இருந்த பல பறவைகளுக்கு வாழ்வாதாரமாகப் பல்லுயிர் ஓம்பும், பள்ளிக்கரணை நன்னீர் சதுப்புநிலம் தற்போது ராம்சர் சாசனம் (ராம்சர் சாசனம்-Ramsar Convention - என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம்) கீழ் வந்துள்ளதால் மினி சொர்கமாகப் பூங்காவுடன் நடைபாதையுடன் மிளிர்கிறதாமே! பறவைகள் சீசனில் சென்னை விசிட். கேமாராவும் கையுமாக உள்ள புகுந்துர வேண்டியதுதான்!
இந்த ஈரநிலங்கள்/சதுப்புநிலங்கள் ஏன் அவசியம்? அதிக மழை பெய்யறப்ப வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் பெருகி ஓடும் நீரைத் தடுத்து குளங்கள், வயல்வெளிகள், பிற நீர் நிலைகளில் கொண்டு சென்று தேக்குவது முதல் சதுப்பு நிலங்களில் வடியவைப்பது வரை பல நன்மைகள்.
சுனாமி வந்தப்ப சிதம்பரம் பக்கம் இருக்கும் பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் – அலையாத்திக் காடுகள் (Mangrove forest - உலகிலேயே இரண்டாவது பெரிய சதுப்புநிலக்காடு. முதலாவது கங்கைக்கரை சுந்தரவனக்காடு - கோடியக்கரை அருகில் இருக்கும் சதுப்புநிலக் காடுகள் அலைகளைத் தடுத்து ஊருக்குள் அதிக பாதிப்பு இல்லாமல் செய்தவை.
ஈரநிலங்கள் நீர்த்தாவரங்களுடன் இருப்பதால் அவை மண்ணில் இருக்கும் இரசாயனங்கள் உலோகங்களைப் பிரிக்கும் வேலையும் செய்கின்றன. சின்ன சின்ன ஈரநிலங்கள் நீர்த்தாவரங்கள் கூட பல உயிர்களுக்கு வாழ்விடமாகவும், உணவு உற்பத்திக்கும் உதவியாக இருப்பதோடு கழிவு நீரையும் சுத்தப்படுத்துகின்றன என்பதால்தான் ஈர நிலங்களும் அதைச் சுற்றி வளரும் நீர்த்தாவரங்களும் மிக முக்கியம். ஆனால் வேதனையான விஷயம், இந்த ஈரநிலங்கள் தொழிற்சாலைக் கழிவுகளாலும், ஆக்ரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுவதாலும் பேரழிவைச் சந்தித்து அழிந்து வருகின்றன. (மாசடைவதற்குச் சிறந்த? உதாரணம் தமிழ்நாட்டு நொய்யல் ஆறு. கோயம்புத்தூரையே தாண்டுவதில்லை!)
இயற்கையாக இருக்கும் நீர் நிலைகளை இப்படிக் கூடக்கொஞ்சம் வெட்டி விட்டு சீர்படுத்தி நீர்த்தாவரங்களை வளர்க்கிறார்கள் - வெளிநாடுகளில். பூஸார், அவர் பகுதியில் இருக்கும் பூங்கா பற்றிப் போட்டிருந்த பதிவில் இப்படியான ஒன்று என்பது என் அனுமானம்
கட்டப்பட்ட ஈரநிலங்கள்/கட்டப்பட்ட சதுப்பு நிலங்கள் என்பவை தாவரங்கள், மண் மற்றும் உயிரினங்களின் இயற்கையான செயல்பாடுகளைப் பயன்படுத்தி செயற்கையாக நீர்நிலைகள் – அதாவது குட்டைகள், குளங்கள், ஏரிகள் போன்று மழை நீர் வெள்ள நீரைச் சேகரித்து அவற்றை வெட்டி விட்டு நீரோடைகள் அமைத்தல், போன்ற செயல்பாடுகள். கட்டப்பட்ட ஈரநிலங்கள் என்றாலே செயற்கை நாணல்படுகைகளையும் உள்ளடக்கியவைதான். இவை நாணல்வயல்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு.
விவசாய நிலங்களுக்குச் செல்லும் நீர், தேக்கப்படும் மழைநீர், புயலினால் ஏற்படும் வெள்ள நீர், வீடுகளின் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுநீர் இவற்றை இரண்டாம் நிலையாகச் சுத்திகரிப்பு செய்ய பயன்படுகின்றன இந்தக் கட்டப்படும் ஈரநிலங்கள்.
சமீப வருடங்களில், சுற்றுச் சூழலுக்கு உகந்த நீர் சுத்திகரிப்பு முறை என்று செயற்கை நாணல் படுகைகளை நிறுவுவதைக் குறிப்பிடுகின்றனர் சுற்றுச்சூழலியலாளர்கள்.
இயற்கை சதுப்பு நிலங்கள், ஈரநிலங்களைப் போலவே, இந்தக் கட்டப்பட்ட ஈரநிலங்களும் ஒரு Biological வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன மற்றும் நீரிலிருந்து பலவிதமான மாசுபடுத்திகளை - கரிமப் பொருட்கள், நோய்க்கிருமிகளான பாக்டீரியா வைரஸ்களை ஓரளவு அகற்றவும் பயன்படுகின்றன என்றும், நோய்க்கிருமிகளை நீக்குவதில் மேற்பரப்பு ஈரநிலங்களை விட நிலத்தடி ஈரநிலங்களின் பங்கு அதிகம் என்றும் சுற்றுச்சூழலியல் ஆய்வுகள் சொல்கின்றன.
மற்றொரு புதியதொரு கோணமும் சொல்லப்படுகிறது. நகரங்களின் பெருக்கத்தை ஒழுங்குபடுத்த கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படும் "சிறந்த மேலாண்மை நடைமுறைகளில்" ஒன்றாகக் கட்டப்படும் சுத்திகரிப்பு ஈரநிலங்களைச் சொல்கின்றனர். இது வேலைக்காவுமா? அழகான இயற்கை ஈரநிலங்கள் அத்தனையும் இப்ப கட்டிடமாக இருக்கே. அதான் வெள்ளம் புகுது!
பல நீர்நிலைகளை, மரங்களை அழித்துக் கட்டப்பட்ட வீடுகள், குளங்களில் ஆறுகளில் கட்டப்பட்ட பேருந்து நிலையங்கள், சென்னை நகருக்குள் ஓடும்? ஒரு காலத்தில் அழகாக இருந்த பக்கிங்க்ஹாம் வாய்க்கால் மேல் கட்டப்பட்ட பறக்கும் ரயில் பாலம், பங்களூரில் ஏரிகளைச் சுற்றி இருக்கும் அடுக்குமாடிகள் மற்றும் அவற்றின் கழிவு நீர் ஏரிகளில் கலப்பது என்று பலவற்றைச் சொல்லலாம். சென்னை வெள்ளம் நினைவில் இருக்க வேண்டும். விடுங்க…நாம சொல்லி என்னத்த ஆகப் போகுது? இதை எழுதும் நேரத்தில் ஏதேனும் ஒரு ஈரநிலம் துண்டு போடப்படாமல் இருந்தால் சரி.
சரி செயற்கை நாணல் படுகை எப்படி உருவாக்கப்படுகின்றது?
கட்டப்பட்ட ஈரநிலங்கள்
கட்டப்பட்ட ஈரநிலங்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: நிலத்தடி நீர் ஓட்டம் மற்றும் மேற்பரப்பு நீர் ஓட்டம். நாணல் படுகைகள் என்பது நீண்ட மெல்லிய நாணல், நீர்த்தாவரப் படுகைகள், (Phragmites, Astralis, Typha Latifolia-Cattails சம்பு நீர்த்தாவரம் true Bulrush/Scirpus Lacustris, மூங்கில், ஆகாயத்தாமரை, வெர்மிகுலைட்) மண்ணிலோ அல்லது சரளைக்கற்கள் பாத்தியிலோ நடப்படும் இத்தாவரங்கள் (இங்கிலாந்தில் அவை பொதுவாக 'ரீட் படுகைகள்' (Reed Beds) என்று குறிப்பிடப்படுகின்றன) - அசுத்தங்களை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் மணல் மற்றும் சரளைக் கற்களைக் கொண்ட வடிகட்டி படுகைக்கு முக்கியப் பங்கு உண்டு. India's first constructed wetland was installed at Sainik School, Bhubaneshwar in the State of Orissa; planted with two types of macrophytes, viz. Typha latifolia (சம்பு வகை) and Phragmites karka.
சில கட்டப்பட்ட ஈரநிலங்கள் அந்தந்த ஊரின் அல்லது வலசைப் பறவைகள், விலங்குகளின் வாழ்விடமாகவும் இருக்க வாய்ப்புண்டு.
செங்குத்து குறுக்குவாட்டில்
நிலத்தடி ஓட்டம் இருக்கும்படியாகக் கட்டப்பட்ட ஈரநிலங்கள் சரளை மற்றும் மணல் படுகையின் வழியாகக் குறுக்காக அல்லது செங்குத்தாக நீர் ஓட்டம் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன. குறுக்கே ஓட்டம் கொண்ட அமைப்புகளை விட செங்குத்து ஓட்ட அமைப்புகளுக்கு சிறிய இடமே தேவை.
இப்படியும் கட்டப்பட்ட ஈரநிலங்கள்
படுகையில் பொதுவாக திறந்த நீர்மேற்பரப்பு இருக்கும், இது கொசுக்களின் இனப்பெருக்கத்தை விளைவிக்கும் என்பதால் நேரடியான மண் நாணல் படுகைகள் பொதுவாக விரும்பப்படுவதில்லை. மண் சரளைக்கற்கள் படுகையே விரும்பப்படுகிறது இவை மேற்புறத்தில் இருப்பதால். நடப்பட்ட செடிகளின் வேர்கள் நீரைத் தேடி சரளைக்கற்களின் ஊடே சென்று நீரை அடைகின்றன.
நன்கு திட்டமிடப்பட்டால், நாணல், நீர்த்தாவரப் படுகைகள் பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், மாசு பிரச்சினைகளைத் தீர்க்கவும், கழிவுநீர் அமைப்பிற்கும் உறுதுணையாக இருக்கும். மேலை நாடுகளில் இவை அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நம் நாட்டிலும் CSIR ன் NEERI தொழில்நுட்பம் இவற்றை உருவாக்குகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
courtesy - Saleem India blog
Constructed Wetlands for Treating Wastewater in cities
பெப்ரவரி 2ஆம் திகதி சர்வதேச ஈரநிலங்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. சுருக்கமா சொல்லணும்னா, ஈரநிலங்கள், காடுகள், மரங்கள் செடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.
சில்லு 2 - திருத்தவத்துறை – லால்குடியானது எப்படி?
தமிழ்நாட்டுக் கிராமங்களின் பெயர்களைத் தமிழில் எழுதிய வேலை குறித்து எழுதிய பதிவில், பண்டைய தமிழ் வரலாறு மற்றும் தேவாரம், திருவாசகம், பிரபந்தம், போன்றவற்றில் சொல்லப்படும் அழகான தமிழ்ப்பெயர்களை அப்படியே இப்போதும் வைக்கலாமே என்ற என் ஆவலையும் சொல்லியிருந்தேன். அப்படி அறிந்து கொண்ட ஒரு விஷயம். அப்பர் சுவாமிகள் அருளிய பண்டெழுவர் “தவத்துறை” என்ற சொற்றொடரில் உள்ள ‘தவத்துறை’ அதன் பின் வந்த சான்றோர்களால் ‘திரு’ சேர்க்கப்பட்டு திருத்தவத்துறை என்றே பல்லாண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்த அழகான பெயர்.
தமிழகத்தில் நிகழ்ந்த படையெடுப்புகளின் போது திருத்தவத்துறையை நெருங்கிய நேரத்தில் தூரத்தே இருந்து ஒரு கோபுரத்தைக் கண்ட படைத்தலைவனின் கண்களுக்கு அச்சமயம் சப்தரீஷீஸ்வரர் திருக்கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்திருந்ததால், சிவப்பு கோபுரமாகத் தெரிந்திருக்கிறது.
அது என்ன லால்குடி – ‘லால்’ என்றால் சிவப்பு ‘குடி’ என்றால் கோபுரம் என்று பொருளாம் என்று கேட்டிருக்கிறான். அப்படி அவன் கேட்டதால் திருத்தவத்துறை மறைந்து “லால்குடி” எனும் சொல்லே இன்றளவும் நிலைத்துவிட்டதாம். இப்போது தெரிந்த பெயர் லால்குடி!
ஆனால் தமிழக அறநிலையத்துறை ஆவணங்களில் ‘திருத்தவத்துறை’ என்று இன்றளவும் இடம் பெற்று வருகிறதாம். ஆவணங்களில் இருக்கறப்ப, எத்தனையோ தெருப் பெயர்களை அவ்வப்போது மாற்றும் போது, திருத்தவத்துறை என்று ஏன் மாற்றிடக் கூடாது? என்று தோன்றியது. திருத்தவத்துறை ஜெயராமன், திருத்தவத்துறை பாலமுரளிக்கிருஷ்ணா என்றால் டக்கென்று புரிபடுமா?
சில்லு - 3 - ஞானப்பழைத்தைப் பிழிந்து... வகுப்பு முடிந்து Entertainment!
ஞானப்பழத்தை இந்தக் குட்டிப் பெண் பிழிவதைக் கேட்டுப்பாருங்க. கடினமான பாட்டு! எவ்வளவு அருமையாகப் பாடுகிறாள் இக்குட்டிப் பெண் அவனி! நான் ரசித்துக் கேட்டேன். நீங்களும் ரசிப்பீங்க என்று நினைக்கிறேன். ஒரு வேளை நீங்கள் முன்பே கேட்டிருக்கலாம். கொசுறுச் செய்தி – இக்குட்டிப் பெண் புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். விரைவில் கீமோதெராப்பி முடியப் போகிறதாம். பாட்டின் சுட்டி கீழே.
காணொளி முகநூலில் இருந்து
சில்லு 1 ல் உள்ள பல தகவல்கள் இணையத்தில் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டவை. சில்லு 2 ன் தகவலும் இணையத்திலிருந்து.
படங்கள் - இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை
-------கீதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நாணல் படுகை பற்றிய தகவல்கள் சிறப்பு.
பதிலளிநீக்குபடங்கள் அருமை முகநூல் இணைப்புக்கு செல்கிறேன்.
மிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குகீதா
காணொளி கண்டேன் அருமை இந்தப் பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது
பதிலளிநீக்குஆமாம். மிக நன்றாகப் பாடுகிறாள் அந்தப்பெண். அதுவும் கான்சரோடு போராடிக் கொண்டு நல்ல எனர்ஜி லெவலில் எல்லா வகைப் பாடல்களையும் பாடும் திறமை பெற்றிருக்கிறாள். அவள் மீண்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்.
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
அப்படியா ?
நீக்குஇறைவன் அருள் செய்யட்டும்.
இக்குட்டிப் பெண் புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். விரைவில் கீமோதெராப்பி முடியப் போகிறதாம். பாட்டின் சுட்டி கீழே. //
நீக்குபதிவிலும் சொல்லியிருக்கிறேனே கில்லர்ஜி.
மிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
நாணல் படுகை குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. காணொளி பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி. மெதுவா பாருங்க காணொளி. மிக நன்றாகப் பாடுகிறாள் அப்பெண்
நீக்குகீதா
நாணல் படுகை பற்றி அருமையான விவரங்கள்.
பதிலளிநீக்குசெயற்கையாக வளர்கப்படுவது நல்ல செய்தி.
//அப்பர் சுவாமிகள் அருளிய பண்டெழுவர் “தவத்துறை” என்ற சொற்றொடரில் உள்ள ‘தவத்துறை’ அதன் பின் வந்த சான்றோர்களால் ‘திரு’ சேர்க்கப்பட்டு திருத்தவத்துறை என்றே பல்லாண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்த அழகான பெயர்.//
அழகான பெயர்.
காணொளி மிக அருமை. அவனி நன்றாக பாடுகிறார் . கேட்டு மகிழ்ந்தேன் கீதா.
ஆமாம் செயற்கை நாணல் படுகைகள் நல்ல பயனுள்ளவை கோமதிக்கா.
நீக்குஆமாம் அக்கா அவனி ரொம்ப நன்றாகப் பாடுகிறார். பாவம் கான்சர். ஆனால் மீண்டு வந்துவிடுவார். நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை.
/என் ஆர்வ மிகுதியில் எழுதியிருக்கும் சில்லு 1 பகுதி கொஞ்சம் பாடம் போன்று இருக்கலாம். வாசிக்கப் பிடிக்காதவர்கள் தவிர்த்துவிடலாம்/
என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்..? உங்கள் எழுத்துக்கள், ஒரு சம்பவம், அல்லது ஓரிடம் பற்றிய வரலாறுகள், நிகழ்வுகள் என்பதாக தாங்கள் விளக்கிக் கூறும் அருமையான எழுத்துக்கள், அதனை ரசிக்கச் செய்யும்படியான விவரணங்கள் இதற்கெல்லாம் நான் என்றுமே ஒரு ரசிகை..இதோ..! ஆழமாக நீங்கள் படித்ததை, படித்து விவரித்ததை நானும் ரசித்து படித்து விட்டு வருகிறேன் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இல்லை கமலாக்கா, அது சாய்ஸ்! தேர்வுக்குப் பாடங்கள் படிக்கும் போது சுவாரசியம் இல்லாத அல்லது பிடிக்காத சிலவற்றைத் தவிர்த்துவிடுவதுண்டே. அது போலன்னு ...ஹாஹாஹாஹா...எல்லாருக்கும் இப்படியானவை ரசிக்காது கமலாக்கா. ;அதில் தவறும் இல்லை. ஒவ்வொருவர் விருப்பம். இல்லையா..
நீக்குநீங்கள் ரசித்து வாசிப்பதற்கு மிக்க நன்றி கமலாக்கா மகிழ்ச்சியும் கூட.
மெதுவா வாருங்கள்.
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
ஈரநிலங்கள் படுகைகள் பற்றிய பாடங்களை படித்தேன். ஓரளவு புரிந்தது என்று சொல்லிக்கொள்ள வேண்டும். முக்கியத்துவம் புரிகிறது!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா படிச்சிட்டீங்களா, ஸ்ரீராம். முக்கியத்துவம் எல்லாம் ஓரளவு புரிந்தது இல்லையா...சந்தேகம் இருந்தா கேட்டுக்கோங்க...சரி அடுத்து டெஸ்ட் வைப்பேனாக்கும்!!
நீக்குகீதா
டெஸ்ட்டா?. ஹா ஹா ஹா. ஆனால் இதில் நான் கண்டிப்பாக மாட்டிப்பேன். ஏனென்றால், படித்தது கொஞ்சத்தை தவிர நிறைய மறந்திருக்கும். ஆனால், டெஸ்ட் நடுவில் கொஞ்சம் படித்துப் பார்க்க விட்டால், அனைத்தும் நினைவுக்கு வந்து விடும்.:))))
நீக்குஇல்லை கமலாக்கா நீங்க மாட்டிக்க மாட்டீங்க!! எழுதிய எனக்கு மட்டும் என்னவாம் மறதி எல்லாம் உண்டு.
நீக்குடெஸ்ட் நடுவில் கொஞ்சம் படித்துப் பார்க்க விட்டால், அனைத்தும் நினைவுக்கு வந்து விடும்.:))))//
கமலக்கா சிரித்துவிட்டேன். open book test வைக்கச் சொல்றீங்க!!! சரி அதுவும் வைச்சுடலாம்.!! ..நாம சின்னக் குழந்தைகள் போல ஆகிறோம் இல்லையா இப்படி எல்லாம் பேசி நகைக்கும் போது.
திடீர்னு கமலாக்கா போஸ்ட் போடலைதானேன்னு தோன்றியது...உங்க போஸ்ட் வரலைதானே...நான் ஏதாவது விட்டிருந்தால் சொல்லுங்க கமலாக்கா கூச்சமோ தயக்கமோ தேவையே இல்லை.
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
லால்குடி திருத்துவத்துறை என்பது ஏதோ மறை மாவட்ட பெயர் போல இருக்கிறது. லால்குடி தேவலாம்!
பதிலளிநீக்குஆ! ஸ்ரீராம் அது திருத்தவத்துறை.. லால்குடி பழகியிருப்பதால் தோன்றுகிறது. அதுவும் லால்குடி ஜெயராமன், லால்குடி பாலமுரளிகிருஷ்ணா இவர்களை இப்பெயருடன் அழைத்தால் கொஞ்சம் விழிப்போமோ?
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
காணொலி கேட்கிறேன். க்ளிக்கினால் புதிய ஜன்னலில் திறக்குமாறு வைக்கவும்! இங்கேயே திறக்கிறது.
பதிலளிநீக்குபுதிய ஜன்னலில் திறப்பது போலத்தான் வைத்தேன் ஸ்ரீராம் அதை ப்ளாகர் சேமிக்கவே இல்லை போல உங்கள் கருத்து பார்த்ததும் இப்பதான் போய் அடுத்த வீட்டு ஜன்னல் வழியா தெரிவது போல் வைத்துவிட்டேன்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
காணொலி கேட்டேன். பிழிந்து எடுத்து கண்கலங்க வைத்து விட்டார்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்..அருமையாகப் பாடுகிறார் இப்பெண். எல்லா வகைப் பாடல்களூம். அசாத்தியமாகப் பாடுகிறார். கான்சரில் போராடிக் கொண்டே...கீமோ தெராப்பி எடுத்துக் கொண்டு பாடியவை ....இப்போது தெராப்பி முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எல்லாருக்கும் நல்ல உதாரணம். நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதை எதிர் கொள்ள ஆரோக்கியத்துடன் குட்டிப் பெண் வாழ வேண்டும்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
நாணல் படுகை சிறப்பு
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. சதுப்புநிலத்தைப் பற்றிய பல தகவல்களை படித்து தெரிந்து கொண்டேன். ஈர நிலங்களின் அவசியத்தை புரிந்து கொண்டேன். சுனாமியால் வரும் பாதுகாப்பின்மை, அதிக மழையால் வரும் வெள்ளநீர் இவற்றை பெருக விடாமல் சமாளித்து அருகிலிருக்கும் ஊர்களுக்கு அதிக பாதிப்புகள் இல்லாமல் செய்கிறதென்றால் இந்த ஈர நிலங்களின் பயன்கள் எவ்வளவு நன்மையாக இருக்கிறது என்பதை நினைக்கும் போது வியப்பாக உள்ளது. எல்லாம் இறைவன் வகுத்து தந்த கொடையல்லவா? இவற்றை மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவது வேதனை...!
இப்படி ஈர நிலங்களை தக்க வைப்பதும், செயற்கை நாணல் புதர்களை உருவாக்குவதும் சிறப்பான விஷயம். அருகிலிருக்கும் தன்னோடொத்த நிலங்களுக்கும் தக்க பலம், பறவைகளுக்கும் புகலிடங்களாக இருக்கும் இந்த சதுப்பு நில காடுகளை/ ஈர நிலங்களை இனி அழியாமல் பாதுகாக்க வேண்டும். படங்கள் விபரங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. விபரங்கள் படிக்க, படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. தேர்ந்தெடுத்து இந்த தகவல்களை சேகரித்து தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
திருத்தவத்துறை ஊரின் பெயர் விபரங்கள் தெரிந்து கொண்டேன். லால்குடி பெயர் விளக்கம் தெரிந்து கொண்டேன். ஊரை அடைமொழியாக வைத்து பிரபலங்களை சொல்லியே நமக்கு பழக்கமாகி விட்டது. இனி எப்படி மாற்றுவது? சிரமம்தான்...!
மூன்றாவதாக அந்த குழந்தைக்கு உடல் நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அந்த காணொளி எனக்கு வரவில்லை. ஆனால் இந்த மாதிரி தொ. காட்சியில் தேர்வு செய்து பாடுகிறவர்கள் நன்றாக பாடுகிறார்கள். அது அவர்களுக்கு இறைவன் தந்த வரம். அந்தக் குழந்தை நலமுடன் இருக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எல்லாம் இறைவன் வகுத்து தந்த கொடையல்லவா? இவற்றை மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவது வேதனை...!/
நீக்குஆமாம் கமலாக்கா....மிக மிகப் பயனுள்ளவை இவை எல்லாம்.
கூடவே அந்த ஈரநிலங்களில் வளரும் நாணல்கள் நீர்த்தாவரங்களை இப்போது நாமே வளர்த்து நீரைச் சுத்தப்படுத்த ஈரநிலங்கள் கட்டுவது என்பது ரொம்ப நல்ல விஷயமாகப் படுகிறது செயற்கை நாணல் என்றாலும் இயற்கையைப் போல வளர்ப்பதுதானே...
//ஊரை அடைமொழியாக வைத்து பிரபலங்களை சொல்லியே நமக்கு பழக்கமாகி விட்டது. இனி எப்படி மாற்றுவது? //
ஆமாம் ஊரை வைத்து பிரபலங்களின் பெயர்கள். மாற்றினால் கஷ்டமாகத்தான் இருக்கும். லால்குடி என்னமா வாசிக்கிறார் என்று ஜெயராமன் என்ற பெயரைக் கூட விட்டு லால்குடி என்று அத்தனை பிராபல்யம்
ஆமாம் கமலாக்கா பிரார்த்திப்போம் அக்குழந்தைக்கு. ஓ அப்படியா காணொலி வரவில்லையா....இக்குழந்தை எல்லா வகைப் பாடல்களையும் நன்றாகப் பாடுகிறார்.
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
"செயற்கை நாணல் படுகை"யைப் பற்றி அருமையாக சொல்லியுள்ளீர்கள். இயற்கையை பாழ்படுத்திவிட்டதால் இயற்கையை செயற்கையாக உருவாக்கி பார்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்பது வேதனையை தந்தாலும்... இயற்கையை இன்னும் முழுமையாக அழிக்காமல் அடுத்த தலைமுறைக்கு கொஞ்சமாவது விட்டு வைத்திருக்கிறோமே என்பது கொஞ்சமாக ஆறுதலை தருகின்றது....
பதிலளிநீக்குஅடுத்து, அந்த முகநூல் காணொளி பார்த்து மெய் சிலிர்த்துப்போனேன்... நம் ஒவ்வொருவருடைய ஆசீர்வாதத்தாலும் அந்த பெண் கண்டிப்பாக முழு ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்வார் என்பது நிச்சயம்...
https://www.scientificjudgment.com/
ஆமாம் சிவா. என்றாலும் இந்த செயற்கை என்று சொன்னாலும் இயற்கையாகத்தானே செய்கிறோம் என்ற சமாதானம்....நல்ல விஷயமாகவே படுகிறது.
நீக்குஆமாம் அக்குட்டிப் பெண் நீடுழி வாழ்வார். அருமையாகப் பாடுகிறார்.
மிக்க நன்றி சிவா.
உங்கள் பதிவு ஒன்று மிஸ் ஆகிவிட்டது போல....வாசிக்கிறேன்
கீதா
விலாவாரியாக எழுத முடியவில்லைக் கீதா, இவைதான் செயற்கை நாணல் படுகையோ.. சூப்பராக இருக்கு. அந்த டபடில்ஸ் போன்ற மஞ்சள் பூக்களோடு ஒரு படம் போட்டிருக்கிறீங்கள், அப்படி இங்கு பல இடங்கள் இருக்குது, இப்போதான் தெரியுது இவை செயற்கை என, ஆனா இங்கு, மலையால நீர் வீழ்ச்சிபோல ஆனா சிறிதாக தண்ணி ஓட்டம் இருக்கும் பல இடங்களில்..
பதிலளிநீக்குஅவற்றை இப்படி குட்டிக் குட்டி ஓடையாக செய்து அழகாக ஓட விடுவினம் பார்க்க நன்றாக இருக்கும்.
பரவாயில்லை அதிரா.
நீக்குஆமாம் செயற்கை என்றால் இயற்கையாக வளர்வது போல நாமே ஈர நிலங்கள் கட்டி நட்டு உருவாக்குவதுதான்...செயற்கை என்றில்லை அதிரா அந்த மஞ்சள் பூக்கள் எல்லாம் , அவங்க இப்படி நீரோடை ஓட விட்டு அதன் ஓரங்களில் வளர்பவைதான்...அதாவது அவற்றைப் பராமரிக்கறாங்க...கூடவே நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே சிறிதாகத் தண்ணி ஓட்டம் இருக்கும் இடங்களில் இப்படி ஓடையாகச் செய்து விடுவது கூடவே ஓரத்தில் நீர்த்தாவரங்களை வளர்ப்பது...என்று இதுதான் ...
இந்தச் செடிகள் நீரை சுத்தம் செய்யும் என்பதால் இப்போ வீடுகள் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகளையும் இப்படி ஈரநிலம் அமைத்து நாணல் நீர்த்தாவரங்களை அதில் ஜல்லி சரளைக்கற்கள் வைத்து மணல் இட்டு வளர்த்து அதன் அடி வழியே இந்த கழிவு நீரை ஓட விட்டு நுனி முடிவில் அவற்றை நல்ல நீராகப் பெற்று கார்டன், வயல்களுக்குப் பாய்ச்சுவது...அதற்குதான் இந்த செயற்கை நாண்ல் படுகைகள் இயற்கையாக வளர்பவை போலவே...இவையும்
மிக்க நன்றி அதிரா
கீதா
நாணல் படுகை பற்றிய தகவல்கள் சிறப்பு....
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி....
நீக்குகீதா
செறிவார்ந்த தகவல்கள்..
பதிலளிநீக்குஅறிவார்ந்த பதிவு..
நாணல் படுகை சிறப்பு..
இயற்கையும் பசுமையும் என்றென்றும் வாழ வேண்டும்..
ஆமாம், இயற்கை அழியாமல் இப்படியேனும் பாதுகாக்கப்பட்டால் நல்லதே.
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
அந்தக் காணொளி ஏற்கெனவே பார்த்திருக்கின்றேன்..
பதிலளிநீக்குஇந்தப் பதிவு மூலம் விவரம் அறிந்து மனம் வருந்துகின்றது..
இறைவன் துணையிருக்க வேண்டிக் கொள்வோம்..
துரை அண்ணா நீங்கள் ஏற்கனவே அந்தக் காணொளி பார்த்திருப்பது மகிழ்ச்சி.
நீக்குஆமாம் பாவம் ஆனால் கண்டிப்பாக மீண்டு வந்துவிடுவார்
மிக்க நன்றி துரை அண்ணா.
கீதா
அந்தக்குட்டிப் பெண் காணொளி பார்த்திருக்கேன். பாவம். மனதை வேதனையில் ஆழ்த்துகிறது. பதிவு ரொம்பப் பெரிசு எனினும் எல்லோருமே பொறுமையாகப் படித்துப் பதிலும் கொடுத்திருக்காங்க. உங்கள் சமூக அக்கறை வியக்கத்தக்கது.
பதிலளிநீக்குஅந்தக் குட்டிப் பெண் காணொளி நீங்களும் பார்த்தது குறித்து மகிழ்ச்சி கீதாக்கா. ஆமாம் பாவம்...பிரார்த்திப்போம்.
நீக்குபதிவு கொஞ்சம் பெரிசுதான். முதல் பகுதி வகுப்பு போல ஆகிடுச்சே!!! ஹாஹாஹாஹா
சமூக அக்கறை - என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அக்கா...இப்படி எழுதி வைப்போம்னுதான்...இது மிகவும் பயனுள்ள ஒன்று.
மிக்க நன்றி கீதாக்கா
கீதா