உடல் நலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் நலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - படுத்துக் கொண்டு செய்யும் சில எளிய பயிற்சிகள்

எல்லா நாட்களையும் நாம் சில சிறிய எளிய பயிற்சிகளுடன் தொடங்குவது நல்லது. இப்பயிற்சிகளைச் செய்யும் போதே நம் உடல் சரியாக இருக்கிறதா என்றும் தெரிந்துவிடும். அப்படி ஏதேனும் சிறிய பிரச்சனை தெரிந்தால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்காமல் உடனே மருத்துவரைச் சென்று பார்த்துவிடலாம்.

புதன், 8 பிப்ரவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - உட்கார்ந்து செய்யும் சில எளிய பயிற்சிகள்

 

அடுத்து உட்கார்ந்து செய்வது, படுத்துக் கொண்டு செய்வது, மற்றும் சில குறிப்புகள் என்று கூடியவரை ஒரே பதிவிலோ அல்லது இரு பதிவுகளிலோ முடித்துவிடப் பார்க்கிறேன் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். ஆனால் இப்பதிவில் நாற்காலியில் உட்கார்ந்து செய்யும் சில எளிய பயிற்சிகள் மட்டும் சொல்கிறேன். தரையில் அமர்ந்து செய்யும் பயிற்சிகள் உண்டு. அவை பெரும்பாலும் யோகாசனங்கள் என்பதால் இங்கு தரவில்லை. மேலும் பலருக்கும் தரையில் அமர முடிவதில்லை என்பதாலும் தரவில்லை. அடுத்த பதிவில் படுத்துக் கொண்டு செய்யும் பயிற்சிகள் சில சொல்லி சில குறிப்புகளுடன் முடித்துவிடுகிறேன். 

சனி, 14 ஜனவரி, 2023

நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி

 

தை பிறந்தால் வழி பிறக்கும்! தங்கமே தங்கமான எங்கள் நட்புகள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் மகிழ்வாக வாழ்ந்திட வாழ்த்துகள்! (துளசிதரன், கீதா)

(இந்த வரியைப் பார்த்து வாழ்த்துகளை மட்டும் சொல்லிவிட்டு ஓடிடாதீங்க! இதை முன்னரே சில பதிவுகளில் சொல்ல நினைத்ததுண்டு. இப்ப எபி வியாழன் பதிவில் நம்ம ஸ்ரீராம் சொல்லியிருந்த ஒரு வரி எனக்கு இதை நினைவுபடுத்தியது!!)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!