Thiruvanparisaram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Thiruvanparisaram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஏப்ரல், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 1

 ஜடாயுபுரம் - 1

அழகே! அழகே! பாரதமே அழகு! வடகோடி மட்டுமா அழகு? தென் கோடியும் அழகு! 
பின்னணியில் மலைகளும், வயல்களும், தோப்புகளும், வாய்க்காலும், ஆறும், சுற்றிலும் நீருமாகப் பின்னிப் பிணைந்து இருக்கும் திருவண்பரிசாரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறு வயதிலிருந்தே ஊரின் மீதான பிடிப்பை விட ஊரைச் சுற்றிப் பொதிந்து கிடக்கும் இயற்கையின் மீது லயிப்பும், காதலும், நேசமும், இயற்கையோடு வாழும் ஆசையும், யதார்த்தத்தில் நடக்கவில்லை என்றாலும், என் மனதுள் ஊறிப் போன ஒன்று.