சென்ற பதிவின் தொடர்ச்சி - எங்களை ஏற்றிக் கொண்ட புதிய ஆட்டோகாரர், கிராமத்தின் பேருந்து செல்லும் சாலையில் செல்லாமல் வேறொரு வழியில் சென்றார். இந்த வழி வித்தியாசமாக இன்னும் பசுமையாக இருந்திட நான் அவரிடம் கேட்க, இது "பசுலு பசுலு Road" (பசுமையான சாலை) என்றார். அதே ருத்ராக்ஷிப்பூர்-ஹலகுரு சாலை பேருந்து செல்லாத கிராமத்துச் சாலை. ரொம்பவே வேகமாகச் சென்றார். எனக்கு ஃபோட்டோ எடுப்பது சிரமமாக இருந்தது. "ஐயா கொஞ்சம் மெதுவா போங்கய்யா". ஆனால் மனுஷர் கேட்கத் தயாராக இல்லை. ஏற்கனவே அறிமுகமாயிருந்த ஆட்டோ நண்பர் கிரணிற்கு என் விருப்பம் தெரியும் என்பதால் நிதானமாக ஓட்டிக் கொண்டு வருவார்.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 3
முன்பெல்லாம் இரண்டாயிரத்திற்கும் மேலான பறவைகள் வந்து கொண்டிருந்ததாகவும், சமீபகாலங்களில் அலைபேசி கோபுரங்களினால் வரவு குறைந்துவிட்டது என்றும், மேலும் சில பறவைகள் இங்கு வந்து நோய்வாய்ப்பட்டதால் அதன்பின் வருவதில்லை என்றும் வருத்தத்துடன், WWFன் இயற்கை விளக்க மையத்தைப் பார்த்துக் கொள்ளும் திரு கிருஷ்ணா சொன்னார். "பறவைகள் வருவதும் தாமதமாகிவிட்டது, ஜனவரி கடைசி, ஃபெப்ருவரியில் வந்துவிடும், என்னை அழைத்துக் கேட்டுவிட்டு வாங்க" என்று தன் மொபைல் நம்பரைத் தந்து என் கணவரின் நம்பரையும் பெற்றுக் கொண்டார். பார்வையாளர்களின் பெயர், ஊர், அலைபேசி எண், தேதி, கையெழுத்து இவற்றை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யச் சொல்கிறார்.
வியாழன், 13 பிப்ரவரி, 2025
கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 1
நெடு நாளைய ஓர் ஆசை நிறைவேறியது. (என்னிடம் இப்படியான ஆசைகளுக்குப் பஞ்சமில்லை. Lord Buddha Please! கண்டுக்காதீங்க!) கொக்கரேபெல்லூர். பெயரே வித்தியாசமாக இருக்கு இல்லையா? முதலில் கிராமத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு அதன் பின் அனுபவங்களைச் சொல்லலாம் என்று நினைத்ததால் பதிவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் போட வேண்டி வரும் என்று தோன்றுகிறது.