வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 3

முன்பெல்லாம்  2000 ஆயிரத்திற்கும் மேலான பறவைகள் வந்து கொண்டிருந்ததாகவும், சமீபகாலங்களில் அலைபேசி கோபுரங்களினால் வரவு குறைந்துவிட்டது என்றும், மேலும் சில பறவைகள் இங்கு வந்து நோய்வாய்ப்பட்டதால் அதன்பின் வருவதில்லை என்றும் வருத்தத்துடன், WWFன் இயற்கை விளக்க மையத்தைப் பார்த்துக் கொள்ளும் திரு கிருஷ்ணா சொன்னார். "பறவைகள் வருவதும் தாமதமாகிவிட்டது, ஜனவரி கடைசி, ஃபெப்ருவரியில் வந்துவிடும், என்னை அழைத்துக் கேட்டுவிட்டு வாங்க" என்று  தன் மொபைல் நம்பரைத் தந்து என் கணவரின் நம்பரையும் பெற்றுக் கொண்டார். பார்வையாளர்களின் பெயர், ஊர், அலைபேசி எண், தேதி, கையெழுத்து இவற்றை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யச் சொல்கிறார். 

நாங்கள் அன்றைய ஆட்டோக்காரரின் கார்டையும் வாங்கி வைத்துக் கொண்டோம். ஃபெப்ருவரியில் வரவேண்டி வரலாம் என்று. இது முதல் பயணத்தில்.


ஃபெப்ருவரி மாதம் பிறந்ததும், நாங்கள் மையப் பொறுப்பாளரை அழைத்ததும் பறவைகள் வந்திருப்பதாகச் சொன்னார். திரும்ப அவரிடமிருந்து அழைப்பு.  கிட்டத்தட்ட 600 வந்திருப்பதாகச் சொன்னார். எங்களால் வார இறுதியில்தான் வர முடியும் என்றதும், 'அப்படினா இன்னும் 400 வரலாம்' என்று  ஏதோ திருவிழா, கல்யாணத்துக்கு நாம் எதிர்பார்ப்போமே அப்படியான ஓர் உணர்வுக் குரல்.


எப்படிக் கணக்கெடுப்பார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. (அதற்குத்தான் அங்கு ஒரு குழுவும் இருக்கிறதே. கூடவே கிராமத்தாட்களும்) ஒரு வேளை பறவைகள் உள்ளே வரும் போது வருகைப் பதிவேட்டில் பதியுமோ!!


நாங்கள் ஃபெப்ருவரி 9, ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை செல்லலாம் என்று முடிவு செய்திருந்த போது, நம்ம இளைய/மூத்த பதிவரிடம் இருந்து அழைப்பு. ஓ! மறந்துவிட்டேன் பாருங்கள்! முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா இப்பதிவில் அவர் வருவார் என்று. இதோ இவர்தாங்க அவர்! 

'நான் அவனில்லை' ங்க. நான் ரொம்பச் சின்னப்பையன். என்னை மாதிரி இருக்கறவங்க யாரையோ போட்டுட்டு இந்த அக்கா ஏதோ கதை விடுறாங்க போல!!

“இந்த வார விடுமுறையில் உங்களைப் பார்க்க வரலாமா?”.

“நாங்க ஞாயிறு கொக்கரேபெல்லூர் போகிறோமே”

“என்னது என்ன சொன்னீங்க? வித்தியாசமா இருக்கு. வித்தியாசமான இடங்களுக்குப் போறீங்க. அதெங்கருக்கு" நான் மீண்டும் சொன்னேன்.

"நானும் சேர்ந்துக்கலாமா, உங்க ஹஸ்பண்ட்கும் ஒகேவா இருக்குமா?”

“அதெல்லாம் ஒன்னும் நினைச்சுக்க மாட்டார், நோ ப்ராப்ளம்”

"நான் கண்டிப்பா வரேன். என் ஹஸ்பண்டும் வருவாங்களான்னு உறுதிப்படுத்திவிட்டுச் சொல்கிறேன்"

"டன்". நாங்கள் காலை 5 மணிக்குக் கிளம்புவதாக இருக்கிறோம், சாப்பாடு நாம் கொண்டு செல்வது நல்லது என்றதும் தொடங்கியது வழக்கமான எங்கள் இருவருக்குமான சண்டைகள்!!!!

"நான் ஸ்வீட் கொண்டு வரட்டுமா?" என்னிடமிருந்து "நோ. நோ ஸ்வீட்ஸ் நோ ஸ்னாக்ஸ். நான் உங்களுக்கும் சாப்பிட எடுத்துக் கொள்ளட்டுமா" 

"நான் என் வைஃப் தவிர வேறு யார் செய்யறதும் சாப்பிட மாட்டேனே, டயட், நானே கொண்டு வந்துடுவேன், உங்களுக்கும் கொஞ்சம் கொண்டு வரேன். ஓகேவா"

"நாங்களும் டயட் தான். அதென்ன நான் கொண்டு வரத நீங்க சாப்பிட மாட்டீங்களாம், நீங்க கொண்டு வரத நாங்க சாப்பிடணுமாக்கும்? இது நல்லாருக்கே?!!! நாங்களும் அளவுச் சாப்பாடுதான்." வழக்கமான என் சண்டை!!!!!!! ஒண்ணாப்பு பிள்ளைங்க போல இருக்குல்ல? பின்ன நாங்க சின்ன பிள்ளைங்கதானே! முந்தைய தினம் இப்படிச் சண்டைக்குப் பின் என்ன கொண்டு வரப் போகிறேன் என்று சொல்லி, கடைசியில் அவங்கவங்க கொண்டு வந்துக்கலாம் என்று முடிவானது. அவருடைய ஹஸ்பன்ட் வருவதும் உறுதியானது.

கிளம்பிய அன்று காலை 2.30 மணிக்கு எழுந்து என் அப்பாவுக்குத் தேவையானதை இரவு வரைக்கானவற்றை தயார் செய்து வைத்துவிட்டு - கேழ்வரகு இட்லி, தக்காளிச் சட்னி - மதிய சாப்பாட்டிற்குக் கொஞ்சமே கொஞ்சம் புளியோதரை  தயிர் சாதமும், பாவற்காய் பொரியலும் கட்டிக் கொண்டு (நெல்லையின் மனைவி சுவை பார்ப்பாங்கன்னு அவங்களுக்கும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன்) + தண்ணீர் குப்பிகள் சகிதம் கணவரின் உதவியுடன் தயாராகி, முதுகுப் பையுடன் காலை 5 மணிக்கு ரெடி. நெல்லைக்கு மெசேஜ் கொடுத்து தொடர்பில் இருந்தேன்.

அன்று, வீட்டிலிருந்து பேருந்தில் சென்றால் தாமதமாகிவிடும் என்பதால் சாட்டிலைட் பேருந்து நிலையத்திற்கு நேராக ஓலா ஆட்டோவில் சென்று 5.30க்குச் சேர்ந்தாச்சு. 

நெல்லையிடமிருந்து மெசேஜ். "நாங்க கிளம்பியாச்சு, பஸ் ஸ்டாண்டில் எங்க இருக்கீங்க? லைவ் லொக்கேஷன் அனுப்புங்க"

அனுப்பினேன். 15 நிமிடங்களில் நெல்லையும் அவர் ஹஸ்பண்டும் வந்துவிட்டனர் ஆனால் லைவ் லொக்கேஷன் சரியாக அவருக்குக் காட்டவில்லை என்று அழைத்து எங்கு நிற்கிறோம் என்று கேட்டுக் கொண்டே நாங்கள் நின்றிருந்த 4 வது ப்ளாட்ஃபார்மிற்கு வந்தனர்

அன்று செம கூட்டம் இருந்திட 5, 6 வது ப்ளாட்ஃபார்மில் பார்த்தது பொல இருக்கு என்று என்று நம்ம வீட்டவர் சென்று பார்த்து வந்தார். ம்ஹூம். அங்கும் இல்லை. வரும் போது 1 ஆம் ப்ளாட்ஃபார்மில் மைசூர் செல்லும் பேருந்து இருந்ததைப் பார்த்ததாக அவர்கள் சொல்லிட அது Non Stop பேருந்தாக இருக்குமோ என்ற சந்தேகம். இருந்தாலும் அங்கு சென்று பார்த்த போது அந்தப் பேருந்து மத்தூரில் நிற்கும் என்பதை அறிந்ததும் உடன் ஏறியாச்சு. 6.10க்குக் கிளம்பும் என்று சொல்லப்பட்டு, கூட்டம் சேர்த்து 6.15க்குக் கிளம்பியது. பேருந்தில் இந்த முறை வலப்பக்க ஜன்னல் இருக்கை. எனவே இப்பக்கக் காட்சிகளும்  உங்களுக்குக் காட்ட வேண்டாமா! இதோ...

எவ்வளவு குப்பைகள் பாருங்க. பின்னில் அழகான மலைகள். ஆனால் குப்பைகள் உறுத்துக்கின்றன

ஷிம்ஷா நதி சன்னப்பட்டினா-ராமநகரா இடையில் 


ஆஞ்சு இல்லாமல் ராமநகராவா!

அன்று மத்தூருக்கு இரண்டு மணி நேரத்தில் சென்று சேந்தாச்சு. 8.15. இறங்கி REFRESH செய்துவிட்டு அங்கு பேருந்து நிறுத்தம் ஷெட்டில் உட்கார்ந்து நாங்கள் கொண்டு சென்றவற்றைச் சாப்பிட, நெல்லையின் மனைவிக்கு நாங்கள் கொண்டு சென்றதைச் சுவை பார்க்கச் சொன்னேன். ஒரு விள்ளல்! (இதற்கான பதில் ஓவர் டு நெல்லை!) அது போல அவங்க கொண்டு வந்திருந்த சுவையான பொடி இட்லியை நாங்கள் (நோட் த பாயின்ட் மக்களே!!! நாங்க இருவரும்) ஒரு விள்ளல் எடுத்துக் கொண்டோம்! 

சாப்பிட்டு முடித்ததும், நெல்லை, வாழைப்பழங்கள் வாங்கினார். அதையும் சாப்பிட்டுவிட்டு நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ஆட்டோக்காரரின் எண்ணைத் தொடர்பு கொண்டு கூடவே இன்னொரு ஆட்டோவும் வேண்டும் என்றதும், அவர் ஆஜர். இன்னொரு ஆட்டோவிற்கு வரிசையில் முதலில் நின்ற ஆட்டோகாரரிடம் விவரங்கள் சொல்லியிருப்பதாகச் சொல்லி ஏறச் சொன்னார். நெல்லையையும் அவர் மனைவியையும் ஏற்கனவே அறிமுகமாயிருந்த ஆட்டோக்காரர் வண்டியில் ஏற்றிவிட்டு நாங்கள் அந்தப் புதிய ஆட்டோக்காரர் வண்டியில் ஏறிக் கொண்டோம். 

ஓகே அப்புறம்? அடுத்த நிறைவுப் பகுதியில் சொல்றேங்க! (கண்டிப்பாக அந்த கொக்கரே சாட்சியாக நிறைவுப்பகுதிங்க) 

இப்பகுதியோடு நிறைவுப்பகுதி என்று சொல்லியிருந்தேன். எழுதியும் முடித்து படங்கள் காணொளிகள் சேர்த்தும் விட்டேன். முன்னோட்டம் பார்த்தப்ப தெரிந்தது நம்ம மக்கள் பயந்து பேக்கடிச்சுடுவாங்களோன்னு!! பாருங்க நம்மால அப்படிச் சுருக்கி எழுதிட முடியுதா!? அதனால கத்தரிய போட்டேன். அடுத்த பகுதியை ஷெட்யூலும் பண்ணிவிட்டேன்! ஞாயிறு மாலைக்கு! ஹப்பா! பெரிய Relief! 


----கீதா

9 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  2. ஓ! இதற்கு முந்தய பதிவுகளும் இருக்கின்றனவா? பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் கில்லர்ஜியா? யார் என்று பெயரைக் குறிப்பிடலாமே

      பாருங்கள்.

      நன்றி

      கீதா

      நீக்கு
  3. ​பறவைகளைக் காண காத்திருக்கிறேன். எங்கள் வீட்டிலும் ஒரு சிறகு ஒடிந்த காகம். பறக்க முடியாது. கடந்த சனியன்று வந்தது எப்படி வந்தது என்று தெரியவில்லை. வீட்டை சுற்றி சுற்றி நடந்து நிழல் பகுதிகளில் இளைப்பாறிக்கொள்ளும்.

    படங்கள் சின்ன சைஸாக இருப்பதால் படஙக்ளின் சிறப்பு தெரிவதில்லை. கொஞ்சம் கூடுதல் பெரிதாக போட்டிருக்கலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் அந்தக் காகம். பறக்க முடியலைனா பூனையோ, நாயோ கவ்வி விடும். பாவம்

      படங்கள் மொபைலில் எடுத்தேன் அண்ணா. சின்னது செய்யவில்லை ஆனால் ப்ளாகரில் போடும் போது லார்ஜ் சைஸ்தான் செலக்ட் பண்ணினேன். எக்ஸ்ட்ரா லார்ஜில் போட்டால் ஒரு படம் அதன் கீழே மற்றொன்று இப்படித்தானே போட முடியும் பதிவு ரொம்ப நீளமாகிவிடுமோ என்று போட்டேன். இரண்டாவது பேருந்தில் செல்லும் போது எடுத்ததால் தூரத்தில் தெரிவன.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. அண்ணா இப்ப ஒரிஜினல் சைஸ் மாத்திட்டேன் பாருங்க சரியா தெரியுதான்னு

      கீதா

      நீக்கு
  4. ஆமாம் இப்போது படங்கள் துல்லியமாக அழகாக உள்ளன. இந்த மாதிரி இனி படங்களை பதிவில் உட்படுத்துங்கள். சுண்டல் விற்கும் மாற்று திறனாளி படம் முன்பே எங்கோ கண்டதாக தோன்றுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      சுண்டல் மாதிரி தெரியலையே. வண்டி பக்கத்தில் இருக்கு பாருங்க அருகில் ஒரு பெண்மணி...இப்பதானே போடுகிறேன் இந்தப்படம் அதுவும் பேருந்தில் இருந்து ஆஞ்சுவை எடுத்த படம்.

      கீதா

      நீக்கு