இப்போதைய பெரும்பான்மை இளைஞர்கள், பெண்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள், செலவு செய்கிறார்கள், அப்பா அம்மாவின் கஷ்டம் புரிந்து கொள்வதில்லை என்ற பரவலான பொதுவான கருத்துகள் எங்கும், வலைத்தளங்களிலும் சொல்லப்படுகிறது. விதிவிலக்குகளை நான் சொல்லவில்லை.
சமீபத்தில் ஒரு வைரஸ் பற்றிய தகவல்கள் தேடப் போக தேவையில்லாத காணொளி ஒன்று வந்து கொண்டே இருந்தது. இப்படித்தான், நம் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர் போல இந்தக் கொடை வள்ளல் கூகுள் நாம் தேடும் விஷயங்களில் உள்ள ஒரு சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கான விஷயங்களை, காணொளிகளைக் காட்டிக் கொண்டே இருக்கும்.