Constructed wetlands லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Constructed wetlands லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஜூன், 2023

சில்லு சில்லாய் – 12 - செயற்கை நாணல் படுகை – லால்குடி/திருத்தவத்துறை – ஞானப்பழத்தைப் பிழிந்து



சில்லு – 1 – கட்டப்பட்ட ஈரநிலம், செயற்கை நாணல் படுகை

(என் ஆர்வ மிகுதியில் எழுதியிருக்கும் சில்லு 1 பகுதி கொஞ்சம் பாடம் போன்று இருக்கலாம். வாசிக்கப் பிடிக்காதவர்கள் தவிர்த்துவிடலாம்.)

செயற்கை நாணல்படுகை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன். ஸ்ரீராமும் அது எப்படி இருக்கும் என்று அறிய ஆவல் என்று சொல்லியிருந்தார். செயற்கை நாணல்படுகை பற்றிச் சொல்லும் முன் ஈரநிலங்களின் அவசியம் பற்றி சில குறிப்புகள்.