விசாகப்பட்டினத்தில்
மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தில் இரண்டாவது நாளில் மாலையில் சென்ற ருஷிகொண்டா கடற்கரை
பற்றி சென்ற பதிவில் சொல்லி படங்களும் பகிர்ந்திருந்தேன் இல்லையா.
இப்போது கடைசி நாளான மூன்றாவது நாள். ஒரே நாள் பயணமாக, கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில், விசாகப்பட்டினத்திலிருந்து ஏகதேசம் 116-120 கிமீ தொலைவில் ஒடிஸா மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் அரக்கு பள்ளத்தாக்கு சென்று பார்த்துவிட்டு அங்கிருக்கும் போரா குகைகளையும் பார்த்துவிட்டு வரலாம் என்று திட்டம்.