பட்டியலில்
இருந்த மற்றொரு இடம் அவர்களில் கண்களில் பட்டுவிட.... மெஜாரிட்டி வின்ஸ்! அந்த
மெஜாரிட்டி வின்ஸ் இடம் எது என்று அடுத்த பதிவில்!//
அந்த மெஜாரிட்டி ஓட்டு பெற்ற இடம் சிம்மாச்சலம். மற்ற இடங்கள் கைவிடப்பட்டன.
ஆர் கே
பீச்சிலிருந்து சிம்மாச்சலம் 19 கி மீ தான். காரில் என்றால் 1/2-3/4 மணி நேரம்தான். பேருந்து என்றால் 1 மணிநேரம் 15 நிமிடங்கள். எல்லோருமே பேருந்துக்கு வாக்களித்தார்கள். ஆச்சரியமான ஆச்சரியம்!
எதிர்புறத்தில் கடற்கரையை ஒட்டி இருக்கும் பேருந்து நிறுத்தம் சென்றதும் உடனே பேருந்து கிடைத்திட ஏறிவிட்டோம்.
பயணச்சீட்டின் விலை ஒருவருக்கு ரூ20க்குள் என்று நினைவு.
நான்தான் கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணியாச்சே. இணையம் இருந்ததால், பேருந்து விவரங்கள், டாக்சி விவரங்கள் எல்லாம் முன் கூட்டியே நெட்டில் பார்த்துக் குறித்துக் கொண்டிருந்தேன்.
நரசிம்மர் கோயில் என்பதால் அம்மலை சிம்மாச்சலம் மலை என்ற பெயர் பெற்றிருக்கும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் கோயில் ரத்னகிரி மலைத்தொடர்களின் நடுவில் அமைந்திருக்கிறது. ஆனால் சிம்மாச்சல மலைக்கு இக்கோயிலோடு தொடர்புடைய வரலாறு உண்டு. வரலாறு பற்றி அதிகம் நான் பேசவில்லை. கூகுள் தேவதையைக் கேட்டால் நிறையத் தருவாள் என்பதால்.
மலையில் ஏறும் வழியில் மிக அருமையான காட்சிகள். மலையின் அடிவாரத்தில் ஒரு புஷ்கரணி இருக்கிறது, மலை மேலும் புஷ்கரணி 'ஆந்திராவிலேயே திருப்பதிக்கு அடுத்தாப்ல பணம் குவியும் பெரிய கோயில்!' என்று குழுவில் இருந்தவர் தகவல் கொடுத்தார்.
கோயில் நிஜமாகவே ஒரு மாளிகை போல பல மண்டபங்களுடன் இருக்கிறது. அழகான சிற்பங்கள். ஒரிஸா பாணியோ? என்றும் தோன்றியது. அதிகம் படங்கள் எடுக்க முடியவில்லை, (எடுத்தா அப்படியே எல்லாம் ஒழுங்கா வந்துடப் போறாப்ல பேச்சு!!) காரணம் ஏதோ புனரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. மற்றும் வெளியில் மட்டுமே புகைப்படங்கள் எடுக்க முடிந்தது. பணிகள் நடப்பது புகைப்படங்களில் தெரியும்.
எடுத்த படங்களில் பல சரியாக வரவும் இல்லை. அதான் சொல்லியிருந்தேனே என் மூன்றாவது விழி அவ்வப்போது இமையை சரியாக மூடித் திறக்காது.
இப்போது எல்லாமே மாறியிருக்கும் இருந்தாலும் நான் பார்த்ததை நினைவில் இருப்பதைச் சொல்கிறேன்.
பேருந்துநிலையத்திலிருந்து கொஞ்சம் மேலே ஏறிச் சென்றதும் இடது புறம் மிகப் பெரிய ஹால் ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட ஒன்று இருந்தது. காலணிகளுக்குத் தனி இடம். ஹாலில் பல கவுண்டர்கள். எந்தப் பொருளுக்கும் உள்ளே அனுமதி கிடையாது.
எல்லாவற்றையும் அங்கு ஒப்படைத்துவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு வெறும் கையோடு செல்ல வேண்டும். நம்மையும் பரிசோதனை செய்துவிட்டுத்தான் உள்ளே அனுமதித்தார்கள்.
சோதனைக்குச் செல்லும் முன்பே மூன்றாவது காதையும் எடுக்கச் சொன்னார் சோதனை செய்த ஒரு பெண்மணி. அதை எதோ ப்ளூடூத் என்று நினைத்துவிட்டார் போலும். அது என் மூன்றாவது காது அகற்ற முடியாது!!!! (கர்ண கவசம்!!!) என்று நான் விளக்கினேன். அந்தப் பெண்மணிக்கு அது புரியவில்லை என்றே தோன்றியது.
'அப்படி எடுக்க வேண்டும் என்றால் பரவாயில்லை, நான் வெளியில் இருக்கிறேன்' என்று சொல்லி ஒதுங்கிவிட்டேன். இவர்கள் உள்ளே சென்று வருவதற்குள் மலையைச் சுற்றிப் பார்த்து ரசித்து ஃபோட்டோ ஷூட் நடத்திவிடலாமே என்று மனம் கணக்கு வேறு போட்டது!!!!
கூட வந்தவர்கள் உடனே என்னைத் திட்டினார்கள். அதன் பின் ஒருவர் அங்கு வந்து நீங்கள் உள்ளே போங்கள் என்று என்னைச் சொன்னதும் உள்ளே சென்றோம். வெளியில் வரும் போது மூன்றாவது விழி நல்லபடியாக இருக்க வேண்டுமே. வாங்கி வைத்தவர்கள் அதை டொக்கென்று வைத்தார்களே!! மனம் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது.
இந்த இடத்தின் தலவரலாறு, கோயில், இறைவன் பற்றிய புராணக் கதைகள் எல்லாம் இணையத்தில் நிறைய இருப்பதால் நான் கதைகள் எதுவும் இங்கு சொல்லவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் இணையத்தில்
தேடித் தெரிந்து கொள்ளலாம்.
அனுபவங்களும் நான் கண்டவையும் மட்டுமே சொல்கிறேன். திருப்பதி அளவு அதிகம் கூட்ட இல்லை என்றாலும் ஓரளவு இருந்தது. தள்ளு முள்ளு இல்லை அப்போது. வளைந்து வளைந்து கம்பித் தடுப்புகளுக்கிடையே வேகமாகச் சென்று அதன் பின் ஒரு பகுதியிலிருந்து மெதுவாக ஊர்ந்தது. அந்த மண்டபம் மிக அழகு. ஒரு மணி நேரம் ஆனது. சன்னதி நெருங்கும் இடத்தில் நிறைய சித்திரங்கள், சில சிலைகள். நெருங்க நெருங்க சிலு சிலு. ஆஹா என்ன இது என்றால் ஏசி!
சன்னதிக்குள் சென்றதும், என்ன இது தெய்வ உருவம் எதுவும் இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த போது அர்ச்சகர் தெலுங்கில் செப்பினார். இறைவன் வராக லக்ஷ்மி நரசிம்மர். கொஞ்சம் அகோர உருவம். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் அன்று மட்டும் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது என்றார்.
த்ரிபங்க தோரணை. இரண்டு கைகள், காட்டுப் பன்றியின் தலை, சிங்க வால், மனித உடல் ஆகியவற்றுடன் காட்சி தருவார் என்று குழுவில் இருந்த ஒருவர் சொன்னார். மற்ற தினங்களில் முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டுதான் இருப்பார். நல்லகாலம் அன்றும் சந்தனத்தால் கவர் செய்யப்பட்டுத்தான் இருந்தார். அகோர உருவங்கள் வழிபாட்டில் மனம் ஒன்றுவதில்லை.
கருவறையினுள் ஒரு சிறிய மேடை போன்று உள்ளது அதன் மீதுதான் சந்தனம் பூசப்பட்டு கிட்டத்தட்ட சிவலிங்கம் போன்ற காட்சி. எல்லோரும் அங்கு ஆழ்ந்த தரிசனத்தில் இருந்தனர். நான் வெளியே வந்துவிட்டேன்.
கருவறையின் இடப்புறம் என்று நினைவு, அங்கு ஒரு தூண் உள்ளது. அது பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு மணிகள் எல்லாம் கட்டப்பட்டிருந்தன. அது கம்பஸ்தம்பம் என்று சொன்னார்கள். அதன் அடியில் சந்தான கோபாலன் யந்திரம் இருப்பதாகவும், அந்தக் கம்பத்தைக் கட்டிக் கொண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
ஸ்ரீதேவி பூதேவி, ஆண்டாள், ஆழ்வார் என்று தனி தனி சன்னதிகள் இருக்கின்றன. ஒரு சுற்று சுற்றி விட்டு வெளியில் வந்தாச்சு. இன்னமும் பிரசாதம் கொடுக்கும் இடத்தைக் காணலையே என்று தேடினால், வெளியில் இறங்கும் இடத்தில் பிரசாதம். புளிஹோரை! ஆஹா இதற்குத்தானே ஆசைப்பாட்டாய் கீதா! ஆமாம் ஆமாம்!
அங்கும் அழகான மண்டபம். சுற்றிலும் மலையும், பூங்காவுமாக அந்த இடம்தான் ரம்மியம் சிம்மாச்சலத்தில். எனக்கு வெளிப்புறம் மிகவும் பிடித்திருந்தது. அங்கேயே உட்கார்ந்து ரசித்துவிட்டு,
கோயிலை வெளிப்புறம் கொஞ்சம் ஃபோட்டோ ஷூட் நடத்திவிட்டு – எல்லா படங்களும் சரியாக வரவில்லை
- முன்புறம் கலி கோபுரம் என்று சொல்லப்படும் முன் கோபுரம் வழி இறங்கினால், அங்கு அழகான காயத்ரி
பீடம், அதுவும் அந்த வாயிலின் இரு புறமும் இருக்கும் யானைகள் (உருவங்கள்) கண்ணில் பட்டுவிட்டன.
கோயிலில் இருந்து இறங்கினால் முன் மண்டபத்தின்
அருகே பேருந்து நிலையம். அதன் கீழே ஸ்ரீ மாதா காயத்ரி நிவாஸம் என்றும் காயத்ரி பீடம்
என்றும் இருந்தது. கோயில் என்றுதான் நினைக்கிறேன். பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
ஆனால் மூடியிருந்ததால் படிகள் ஏறிச் செல்லவில்லை.
இப்பீடத்தின் உள்ளே இந்த நிலைப்படி தாண்டிச் சென்றும் எடுத்தவை ஃப்ளாப்! மேலே சொன்ன அதே காரணம்தான்.
மதியச் சாப்பாடு பற்றி யோசனை வந்ததும், கோயில் பிரசாதமே எல்லோருக்கும் போதும் என்றதால், வேறு எங்கும் சாப்பிடவில்லை.
பேருந்து நிலையம்
குளிர்ந்த ஃப்ளேவர்ட் பால் குடித்துக் கொண்டிருந்த போது புறாக்கள் பறக்கத் தொடங்கியதும் பறப்பதை எடுக்க ஆசைப்பட்டு டக்கென்று மூன்றாவது விழியை இயக்கி எடுத்ததால் இப்படி
காயத்ரி
பீடத்தின் நேரேயேதான் பேருந்து நிலையம். பேருந்து நிலையம் சென்றதும், பேருந்து வரும்
வரை – 10 நிமிடம்தான், அங்கு இருந்த கடைகளை நோட்டம் விட்டுக் கொண்டே குளிர்ந்த சுவையூட்டப்பட்ட
பால் குடித்துக் கொண்டிருந்த போது பேருந்து வந்தது. ஏறி, விசாகப்பட்டினம் ரயில் நிலையம்
நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து அருகில்தானே தங்கியிருந்த இடம், என்பதால்
அங்கு சென்றுவிட்டோம். மதியம் 2 மணிதான் ஆகியிருந்தது என்பதால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்
கொண்டு 3 மணி அளவில் மீண்டும் ஊர் சுற்றக் கிளம்பினோம்.
அடுத்து என்ன பார்த்தோம் என்று அடுத்த
பதிவில் தொடர்கிறேன். அது மிகவும் சுவாரசியமான ஒன்று.
(எனக்குக் கோயில் பற்றி அதிகம் எழுதத் தெரியவில்லை. ஆன்மீகம் தெரிந்தவர்கள், அதில் ஆர்வம் உள்ள வல்லிம்மா, பானுக்கா, கீதாக்கா துரை அண்ணா, கோமதிக்கா, கமலாக்கா, நெல்லை போன்றவர்கள் எழுதியிருந்தால் இன்னும் சுவாரசியமாகவும் நிறைய தகவல்களும் சொல்லியிருப்பார்களாக இருக்கலாம்.)
--------கீதா
விவரமான கட்டுரை. படங்கள் எடுக்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான்.
பதிலளிநீக்குJayakumar
ஆமாம் ஜெகேசி அண்ணா படங்கள் எடுக்க முடியவில்லை என்பதோடு எடுத்த படங்களிலும் சில நன்றாக வரவில்லை. கேமரா படுத்தியதால்
நீக்குவிவரமான கட்டுரை//
மிக்க நன்றி அண்ணா
கீதா
அந்த இன்னொரு இடம் சிம்மாச்சலம் என்றதும் எனக்கே கைதட்ட தோன்றுகிறதே... நீண்ட நாள் ஆசை! 1
பதிலளிநீக்குஉங்கள் ஆசை நிறைவேறிடட்டும், ஸ்ரீராம். அழகான கோயில்! வருடத்தில் ஒரு நாள் சந்தனக்காப்பு இல்லாமல் காட்சிதரும் நாள் தெரிந்து கொண்டு அந்த நாள் போய்ப் பார்த்துட்டு வாங்க. மலை அழகாக இருக்கும் நாங்கள் போனப்ப ஏதோ பணிகள் நடந்து கொண்டிருந்ததால் கோயில் படங்கள் பல எடுக்க முடியவில்லை
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
திருப்பதிக்கு அடுத்து பணம் குவியும் கோவில் என்னும்தகவல் ஆச்சர்யம். 2
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், எனக்குமே. அதை நெட்டில் உறுதி செய்து கொண்டேன் இங்கு எழுதும் முன்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
உள்ளே படம் எடுக்க முடையவில்லை என்பது ஏமாற்றமே... ஹியரிங் எய்டை அகற்றச் சொன்ன அந்த புத்திசாலியின் படம் எங்கே?!!! 3
பதிலளிநீக்குஆமாம் ஏமாற்றம்.
நீக்கு//ஹியரிங் எய்டை அகற்றச் சொன்ன அந்த புத்திசாலியின் படம் எங்கே?!!!//
ஹாஹாஹாஹா அதான் கேமராவை கவுண்டர்ல வைச்சாச்சே அதுவும் டொக்குனு வேற!! அப்புறம் எங்க அந்தப் பெண் மணியைப் படம் எடுப்பது?!!
நன்றி ஸ்ரீராம்
கீதா
//வாங்கி வைத்தவர்கள் அதை டொக்கென்று வைத்தார்களே!!//
பதிலளிநீக்குஏற்கெனவே துர்க்குணி.. அதிலும் கர்ப்பிணி ன்பது போல! ஹா.. ஹா.. ஹா... செல்லத்துக்கு வலித்திருக்குமோ என்றும் தோன்றியதோ! 4
ஹாஹாஹாஹா அதே அதே.....நிஜம்மா ஸ்ரீராம் என் கேமரா செல்லத்துக்கு வலிச்சிருக்கும் அதான் அப்புறம் கொஞ்சம் சிணுங்கியதே!!! ஹை கேமரா செல்லம்!! ரசித்தேன் ஸ்ரீராம். செல்லப் பெட்டிதான் அது.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
புளியோதரையா? ஆ.. சொக்கா... ச்சே... சொக்கி... எனக்கு மட்டும் ஏன் எப்போதும் பொங்கலே வாய்க்கிறது! 5
பதிலளிநீக்குஹாஹாஹாஹா...சொக்கா....சொக்கி!!!!
நீக்குஆமாம்ல உங்களுக்கு எப்ப போனாலும் பொங்கல்தானோ இன்னும் நங்கநல்லூர் ஆஞ்சு அருள்பாலிக்கலையோ புளியோதரை கிடைக்க....டைம்தெரிஞ்சு போங்க ஸ்ரீராம்....கிடைக்கும். காலைல ஓடிருப்பீங்க அப்ப பொங்கல்தான். கொஞ்சம் நிதானமா 10 மணிவாக்குல போனீங்கனா புளியோதரை கிடைக்கும் அல்லது மதியம்...ஆ அன்னிக்குன்னு பார்த்து ஸ்ரீராம் வந்திருக்கார்னு சர்க்கரைப் பொங்கல் கொடுத்திடாம இருக்கணும்!!!
கீதா
//ஆன்மீகம் தெரிந்தவர்கள், அதில் ஆர்வம் உள்ள... //
பதிலளிநீக்குஹிஹிஹி.. லிஸ்ட்டில் என் பெயர் இல்லை! 6/6
ஹாஹாஹா சேம் போட் இல்லையோ!!! அதான்
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
படங்கள் உட்பட தகவல்கள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி.
நீக்குகீதா
படங்கள் மிகத்தெளிவாக இருந்தது. விவரணம் நன்று.
பதிலளிநீக்கு//கூகுள் தேவதையைக் கேட்டால் நிறையத் தருவாள்//
ஆண்பால், பெண்பாலாகி விட்டது
(கூகுள் ஆண்டவர் - கூகுள் தேவதை)
ஹா.. ஹா.. இரசித்தேன்.
மிக்க நன்றி கில்லர்ஜி, கருத்திற்கு
நீக்குஹாஹாஹா நான் எப்பவுமே கூகுளை தேவதைன்னுதானே சொல்லுவேன் இல்லைனா கூகுள் செல்லம் னு சொல்லுவதுண்டு. முன்பே பதிவில் இப்படிக் குறிப்பிட்டதுண்டே கில்லர்ஜி!!!
நன்றி கில்லர்ஜி
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. நல்ல விவரணையாக ஒரு விஷயத்தை சொல்லுவதில் உங்களுக்கு நிகர்.. வேறு யாருமில்லை.. அது கண்டிப்பாக நீங்கள்தான்.
சிம்மாசலம் என்ற பெயரே கேள்விப்பட்டதில்லை. நீங்கள் சொல்வது போல் காரணப்பெயர் அறிந்து கொள்ள வேண்டுமெனில் கூகுளில் தேட வேண்டும். எனினும் உங்கள் பதிவையும், அழகான படங்களையும் கோவிலின் அமைப்பையும், அதன் அணுகு முறைகளையும் பார்த்ததே மனதுக்கு திருப்தியாக இருந்தது.
முதல் படத்தில் கோபுர தரிசனம் பெரிதாக்கி கண்ட போது, பனைமரம் மாதிரி இலைகளை விரித்தாற்போல வாயில் ரத்தச்சிவப்புடன் இருந்த மரத்தின் படமே சற்று பீதியை தருகிறது. இதில் மூலவரின் அகோர உருவத்தை எப்படி காண்பது?
அத்தனை படங்களும் விபரங்களும் அருமை. அழகான தெளிவான எழுத்துகளுடன் கூடிய பதிவை ரசித்துப்படித்தேன். தங்களுடன் பயணம் சென்று வந்த உணர்வை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல விவரணையாக ஒரு விஷயத்தை சொல்லுவதில் உங்களுக்கு நிகர்.. வேறு யாருமில்லை.. அது கண்டிப்பாக நீங்கள்தான்.//
நீக்குஆ கமலாக்கா இங்க நிறையப்பேர் இருக்காங்க என்னைப் போய் இப்படிச் சொல்றீங்களே!!! அதுவும் ரொம்ப தகவல்கள் நான் கொடுக்கவும் இல்லையே...
சரி இருந்தாலும் நன்றி நவின்றுவிடுகிறேன்!!
கோயில் பெயர் கேள்விப்பட்டதில்லையா?!! மகிழ்ச்சி இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டிருப்பீங்களே!
ஹாஹாஹாஅ இலைகளில் ரத்தச்சிவப்பு தெரிகிறதா!!! அங்கு வரை தெரிச்சிருக்குமோ!!!!!!!! மூலவர் உருவம் எல்லா நாட்களிலும் தெரியாது கமலாக்கா. சந்தனத்தால்தான் மூடியிருப்பார்கள்
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅட ராமச்சந்திரா...! ஆன்மிகம் பற்றி, அதில் ஆர்வம் உள்ளவர்கள் எழுதினால்... இதில் என் பெயர் இடம் பெற்றிருப்பதை பற்றி என்ன சொல்ல..? "அட தேவுடா... இக்கட தொந்தரவுவா வண்டனே கொஞ்சம் சூடுடா.. " என்று சொன்னால் போதும் ஆன்மீகம் என்ற பெயரையே சரித்திரத்திலிருந்து எடுத்து விடுவான். ஹா ஹா ஹா.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹாஹாஹா அக்கா நிஜமாகவே நீங்களும் புராணக் கதைகள், இறைவன் பற்றி எல்லாம் எழுதுவீங்களே!!! அதான் சொன்னேன்.
நீக்குஅட தேவுடா... இக்கட தொந்தரவுவா வண்டனே கொஞ்சம் சூடுடா.. " என்று சொன்னால் போதும் ஆன்மீகம் என்ற பெயரையே சரித்திரத்திலிருந்து எடுத்து விடுவான். ஹா ஹா ஹா.//
நானும் சிரித்துவிட்டேன்.
நன்றி கமலாக்கா
கீதா
நரசிம்மர் கோயில் என்பதால் அம்மலை சிம்மாச்சலம் மலை என்ற பெயர் பெற்றிருக்கும் என்றே நினைக்கிறேன். //
பதிலளிநீக்குசிம்மாச்சலம் மலை பார்க்க அழகாய் இருக்கிறது.
கோவில் நன்றாக இருக்கிறது, படங்களும் விவரங்களும் அருமை.
//மூன்றாவது விழி நல்லபடியாக இருக்க வேண்டுமே. வாங்கி வைத்தவர்கள் அதை டொக்கென்று வைத்தார்களே!! மனம் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. //
நிம்மதியாக தரிசனம் மற்றும் விவரங்களை கேட்டு கொண்டு இருக்க முடியாதே!மனசு எல்லாம் மூன்றாவது விழி பத்திரமாக இருக்க வேண்டுமே என்றுதான் இருக்கும்.
புறாக்களின் படமும், பறப்பதும் நன்றாக இருக்கிறது.
//கோயில் பிரசாதமே எல்லோருக்கும் போதும் என்றதால், வேறு எங்கும் சாப்பிடவில்லை.//
போதுமான அளவு பிரசாதம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியே!
ஆன்மீகம் தெரிந்தவர்கள் பட்டியலில் என் பேரும் இடம் பெற்று இருக்கே! முக்கிய விவரங்கள் நீங்களும் எழுதி விட்டீர்கள் கோவிலை பற்றி.
நரசிம்மர் என்றால் மனித உடல், சிங்க முகம் தானே இருக்கும் காட்டு பன்றி முகம் என்றால் வாரக பெருமாள் இல்லையா?
இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து பூமியை மீட்டார் வாரக பெருமான் என்பார்கள்.
எனக்கு ஆன்மீகம் தெரியும் என்றஉடன் நானும் எனக்கு தெரிந்த கதையை சொல்லி விட்டேன்.
நீங்கள் சென்று வந்த கோவிலில் என்ன கதையோ தெரியவில்லை.
ஆமாம் கோமதிக்கா சிம்மாச்சலம் கோயிலும் மலையும் அவ்வளவு அழகு. அந்த மலையில் சில புத்த ஸ்தூபிகள் ஏதோ இருப்பதாகவும் அறிந்தேன் ஆனால் சரியாகத் தெரியவில்லை.
நீக்குநிம்மதியாக தரிசனம் மற்றும் விவரங்களை கேட்டு கொண்டு இருக்க முடியாதே!மனசு எல்லாம் மூன்றாவது விழி பத்திரமாக இருக்க வேண்டுமே என்றுதான் இருக்கும்.//
ஹாஹாஹா ஆமாம் கோமதிக்கா மனுஷங்கதானேநான் அதுவும் நான் ஆசைப்படும் ஒன்று பயன்படுத்தப்பட்டுக் கிடைத்தாலும் பொக்கிஷம்தானே!!
//போதுமான அளவு பிரசாதம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியே!//
அக்கா வீட்டில் சாப்பிடும் அளவு எல்லாம் இல்லை. இரு தொன்னை என்று சொல்லலாம். அவ்வளவுதான் ஆனாலும் யாருக்கும் பசியில்லை. காலை டிஃபனே வயிறு நிரம்பி இருந்தது. நல்ல பெரிய க்ளாஸ் காஃபி வேறு குடித்திருந்தோமே..
நீங்களும் கோயில் பற்றி சுவையாக எழுதுவீங்கக்கா...அதான்
நரசிம்மர் என்றால் மனித உடல், சிங்க முகம் தானே இருக்கும் காட்டு பன்றி முகம் என்றால் வாரக பெருமாள் இல்லையா?//
ஆமாம் அக்கா...எனக்குமே இது புதிய விஷயம்தான். இங்குச் செல்லும் வரை தெரியாத விஷயம். இருங்கள் சுட்டி தருகிறேன். கூகுளில் தகவல்கள் நிறைய டக்கென்று கிடைப்பதால் இங்கு நான் சொல்லவில்லை.
இதோ அடுத்த கருத்தில் சொல்கிறேன் கோமதிக்கா.
நீங்கள் சொல்லுவதும் கூட நான் இப்போதுதான் அறிகிறேன்
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
கோமதிக்கா, உங்களுக்குப் பிரஹலாதன் கதை தெரிந்திருக்கும். பிரஹலாதனை ஹிரண்யகசிபு கடலில் தூக்கி வீசிய போது இஇப்போதிருக்கும் சிம்மாச்சல மலையிலிருந்துதான் அவனை விஷ்ணு காப்பாற்றினாராம். (விசாகப்பட்டினம் கடல் அருகில்தான் அப்போது இந்தமலை அருகில் வரை கடல் இருந்திருக்குமாக இருக்கும்) அப்போது பிரஹலாதன் அவரிடம் ஸ்வரூபத்தைக் காட்டச் சொல்கிறார். விஷ்ணு இதற்கு முந்தைய வராக அவதாரத்தில் ஹிரண்யாஷகனை வதம் செய்ததால் அந்த ரூபத்தைக் காட்டிவிட்டு அதன் பின் இனி ப்ரஹலாதனின் தந்தையான ஹிரண்ஹகசிபுவைக் கொல்ல எடுக்கப் போகும் அவதாரமான நரசிம்ம அவதாரத்தைக் காட்டினாராம் அதனால் பிரஹலாதன் இரு உருவமும் கலந்த அந்த விடிவில் அமைத்துக் கோயில் எழுப்பினார் என்றும் அதன் பின் அந்த யுகம் முடியும் போது அக்கோயில் அழியும் நிலையில் மூலவர் மணல் குவியலாக இருந்ததாகவும் அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூரவன் என்ற மன்னன் தெய்வீக சக்தியால் இந்த இடத்துக்கு வந்து அந்தச் சிலையைக் கண்டெடுத்து அழிவுற்ற கோயிலை மீண்டும் கட்டினான் என்றும் அப்போது ஒலித்த அசரிரீயானது அந்த சிலை உருவத்தைப் பார்க்க முடியாமல் சந்தனத்தால் மூடி வைக்கும்படி கூறியதாம். ஆண்டுக்கு ஒரு முறையே அவருடைய உண்மை உருவை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டதாகவும் அதனாலேயே இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறதாம்.
நீக்குஇதுதான் நான் அறிந்த கதை கோமதிக்கா.
கீதா
விளக்கத்திற்கு நன்றி கீதா
நீக்குநன்றி கோமதிக்கா
நீக்குகீதா
சிம்மாசலம் பற்றிய விவரங்கள் அருமை. பொதுவாக நம் மனது, நல்ல அழகிய கடவுளர்களின் உருவங்களைத்தான் தரிசிக்க ஆசைப்படுகிறது. மட்டப்பள்ளியில் போன்ற இடங்களில் தரிசித்த நரசிம்ஹர் உருவங்கள் சுயம்பு என்பதால் முழுமையாக இல்லாத நினைவு.
பதிலளிநீக்குபிரசாதம் எவ்வளவு கொடுத்தார்கள்? உணவு வேண்டாம் என்று ஒதுக்கும் அளவா?
ஆமாம் நெல்லை, மனம் அழகிய கடவுளர்களின் உருவங்களைத்தான் தரிசிக்க ஆசைப்படுகிறது.
நீக்கு//மட்டப்பள்ளியில் போன்ற இடங்களில் தரிசித்த நரசிம்ஹர் உருவங்கள் சுயம்பு என்பதால் முழுமையாக இல்லாத நினைவு.//
ஓஹோ....
நிறைய சிற்பங்கள் கலை எல்லாம் இருந்தன பல எடுக்க முடியவில்லை.
பிரசாதம் எல்லாக் கோயில்களிலும் கொடுப்பது போலத்தான். அன்று இரண்டு தொன்னை அளவு இருக்கும்,. ஆனால் காலை டிஃபன் ஹெவி மற்றும் காஃபி வேறு குடித்தோமே அதனால் பசியில்லை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டோம்.
மிக்க நன்றி நெல்லை
கீதா
திருப்பதிக்கு ஈடாக அமைத்த கோவிலோ இது?
பதிலளிநீக்குஅப்படித்தான் தோன்றுகிறது நெல்லை. ரொம்ப புகழ்பெற்றக் ககோயில். அங்கிருக்கும் முறைகள், மண்டபங்கள் பணிகள் எல்லாம் அப்படித்தான் எண்ண வைக்கிறது. நீங்கள் போயிருக்கீங்களோ
நீக்குநன்றி நெல்லை
கீதா
இன்னும் போனதில்லை. நெல்லை
நீக்குநெல்லை அடுத்த ப்ளான் இங்கு போவதாக வைச்சுக்கோங்க. நல்ல அழகான கோயில். அகோர உருவம் என்று சொல்லப்பட்டாலும் நெட்டில் இருக்கும் படங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. அப்படி ஒரு படத்தை எடுத்து இங்குச் சேர்க்க நினைத்து விடுபட்டுவிட்டது.
நீக்குகீதா
அடடே... கோவில் வாயிலையே வாயினாலே அமைத்து விட்டார்களே!!! அந்த 8 - வது போட்டோவைத்தான் சொல்கிறேன்... வராகம் வாயை திறந்துகொண்டு வரவேற்பதை பார்க்கும்போது திக்..திக்... பல்லெல்லாம் வேறு பயங்கரமாக இருக்கிறது. பக்தி வருவதற்கு பதிலாக பயம்தான் வருகிறது...
பதிலளிநீக்குநாஞ்சில் சிவா, அந்த ஃபோட்டோவில் இருப்பது வராகம் இல்லை. அது காயத்ரி பீடம் கோயில் வாயில்.
நீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா
கீதா
ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி, அஹோபிலம் ஆகியவை மட்டுமே நாங்க பார்த்திருக்கோம். மற்ற இடங்கள் போனதில்லை. சிகந்திராபாதில் இருந்தப்போ அங்கே உள்ள ஸ்கந்தகிரி கோயில், பிர்லா மந்திர் போன்றவை போனோம். மற்றபடி கர்நாடகா போன அளவுக்குக் கேரளா, ஆந்திரா மத்தியப் பிரதேசம் போனதில்லை. :( இவை எல்லாமே எனக்குப் புதியவை என்பதால் நன்கு ரசித்தேன்.
பதிலளிநீக்குஆமாம் நீங்கள் போயிருக்கீங்கன்னு முன்னரே வேறு எங்கோ சொல்லியிருந்த நினைவு. ஆந்திரா கேரளா, மபி போனதில்லைன்னு.....
நீக்குரசித்தமைக்கு மிக்க நன்றி கீதாக்கா
கீதா