அடுத்து என்ன பார்த்தோம் என்று அடுத்த பதிவில் தொடர்கிறேன் அது மிகவும் சுவாரசியமானது என்று முடித்திருந்தேன்.
சிம்மாச்சலத்திலிருந்து 2 மணி அளவில் வந்தோம், கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு 3 மணிக்கு மீண்டும் ஊர் சுற்றக் கிளம்பினோம் என்று முந்தைய 4 வது பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா, சரியாக 4 மணிக்குக் கிளம்பி ஆட்டோவில், காலையில் ரசித்த அதே கடற்கரையை சென்றடைந்தோம்.
அழகான ராமகிருஷ்ணா கடற்கரையின் ஓரத்தில்!! கடற்கரையின் காளி மாதா கோயிலில் (இரண்டாவது/மூன்றாவது பதிவில் சொல்லியிருந்த நினைவு) இருந்து 17-20 நிமிடம் கடற்கரை ஓரம் நடக்கும் தூரத்தில் இருக்கிறது இந்த அருங்காட்சியகம்
இப்படி உள்ள போய் பார்க்கலாம் எல்லாரும் வரிசையா வாங்க
கப்பலின் உள்ளே சென்றதும் நிறைய கருவிகள் பொருத்தப்பட்ட சுவர்கள். இடது புறம் சிறிய ஏணிப்படி . கீழ்த் தளம் மேல் தளம். மேல் தளத்திற்கு சிறிய ஏணிப்படி இருக்கிறது.
அதில் ஏறி நீள நடந்தால் இப்படி ஒவ்வொரு அறையும் வரும். பெரும்பாலும் வலது புறம் எல்லா அறைகளும். இடது புறம் கருவிகள் இணைப்புகள்.
சில படங்கள் கண்ணாடி வழியாக எழுத்ததால் சரியாக வரவில்லை. ஏற்கனவே என் மூன்றாவது விழி மக்கர் பண்ணும் இதில் வெளிச்சம் க்ளார் அடித்ததால் கொஞ்சம் சிரமமாக இருந்தது..
1969 ஆம் ஆண்டு ரஷ்யாவில்
பிறந்த இவள் சோவியத் பில்ட்-ஐ-641 - வகையைச்
சேர்ந்தவள். 18 டிசம்பர் 1969 அன்று இந்தியக்
கடற்படையில் சேர்க்கப்பட்டு பணி அமர்த்தப்பட்டவள். பாருங்க பிறந்ததுமே நம்ம நாட்டு படையில் சேர்ந்தாச்சு!
சமையலறை
பாவம் குழந்தை, 2 வயசுல - 1971 இன் இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கேற்று சாகசங்கள் செய்து, அங்கு ரோந்து பணிகளில் முக்கிய பங்கு வகிச்சுருக்கு. பின்னர் மற்ற நாடுகளுடன் கடற்படை பயிற்சிகளில் பங்கேற்று பிற நாடுகளுக்கு goodwill - நல்லிணக்க விஜயங்களை மேற் கொண்டிருக்கு. எவ்வளவு பெரிய சேவை!
18 டிசம்பர் 1969 இல் சேர்ந்தாளில்லையா,
31 வருட சேவைக்குப் பிறகு 27 பிப்ரவரி 2001 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறாள். (ஏன் பணி நீக்கம் செய்யப்பட்டிச்சோ? வயசாகிடுச்சோ? இவங்களுக்கும்
பணி ஓய்வு உண்டு போல! பென்ஷன் உண்டா? அதான் தனி மரியாதை எல்லாம் கொடுத்து காட்சியகமாக
மிளிர வைச்சுட்டாங்களே!)
பணி நீக்கம் செய்யப்பட்டதும் 9 ஆகஸ்ட் 2002 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு நாட்டிற்கு அர்ப்பணித்துவிட்டார். (நேர்ந்து விட்டுவிட்டார்னும் சொல்லலாமோ!)
அர்ப்பணித்த
பிறகு ஊருக்குள்ள வர வேண்டாமா? ஓய்வெடுக்க? தன் இறுதிப் பயணமாக விசாகப்பட்டினத்துக்கு
வந்து, 24 ஆகஸ்ட் 2002 முதல் ஆர்.கே
கடற்கரையில் பொதுமக்கள் பார்ப்பதற்கான அருங்காட்சியகமாக இருக்கிறாள். தெற்கு ஆசியாவிலேயே முதன் முதலாகக்
காட்சியகமாக நிறுவப்பட்ட பெருமையும் இவளுக்கு உண்டு.
குர்சுரா
அசல் தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் மிகச் சில நீர்மூழ்கிக் கப்பல்
அருங்காட்சியகங்களுள்
ஒன்றாகும். அதனால் இது
விசாகப்பட்டினத்தின் “பார்க்க வேண்டிய இடங்கள்” என்பதில் முதலில் வந்துவிடும். அதான்
ஆர் கே கடற்கரை யில்தானே இருக்கிறது. அதோடு வந்துவிடும்.
நீளமான கரிய உடல் என்றாலும் கரிய நிறத்து
யானை நம்மை ஈர்ப்பது போல் இவளும் மையல் கொள்ளச் செய்கிறாள்.
உள்ளே சமையலறை முதல் படுக்கை அறை, நூலகம், வாசிக்கும் அறை என்று எல்லா வசதிகளும் உண்டு. படங்களைப் பார்த்தாலே தெரியும்.
பார்த்தாச்சா....இப்படி இறங்கி வாங்க எல்லாரும்...யாரும் உள்ளே இல்லைதானே!!
இதற்கு மேலே உள்ள படத்தில் உள்ள ஆயுதம் பற்றி
பணிநீக்கம் செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலாக இருந்தாலும், கடற்படையின் "டிரஸ்ஸிங் ஷிப்" (கீழே சின்ன விளக்கம்) மரியாதையை இன்னும் பெறுகிறாள். இது வழக்கமாக, செயல்பாட்டில் உள்ள கப்பல்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒன்று. பாருங்க வயாசிடுச்சு ஓரமா இருந்துக்கனு பழைய பொருட்கள் கிடங்குல போட்டு பூட்டாம பாழடையச் செய்யாம மரியாதை கொடுத்து அலங்காரம் எல்லாம் செய்து வைத்திருப்பது, பாதுகாப்பது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விஷயம்.
குடியரசு தினத்தன்று, கிழக்கு கடற்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு
இந்திய கடற்படையின் அனைத்து 52 அதிகாரப்பூர்வ கொடிகளையும்
தேசியக் கொடியுடன் சூரிய உதயத்தில் குர்சுரா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்றுவார்கள்.
இந்திய கடற்படையின் முதல் தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றானதாலும், 1971 இல் நடந்த இந்திய-பாக் போரில் முக்கிய பங்கு வகித்ததாலும், இந்திய கடற்படை அதற்கு “டிரஸ்ஸிங் ஷிப்” என்ற அந்தஸ்தை வழங்கி, தொடர்ந்துவருகிறது. இந்த குர்சுரா பற்றிய சிறிய தகவல் ஆங்கிலத்தில். நன்றி : விசாகப்பட்டினம் மெட்ரோ தளம்
Life on a Submarine:
Submarine
undergone rigorous trainng at INS Sathavahana which includes damage
control,drills and emergencies,battle tactics and escape training through a
vertical(100’)tower.
Space in a submarine is premium,giving Importance to equipments,ammunitions,life saving systems taking priority.
The day to day activities in a submarine includes action stations,maintenance,weapons firing etc.,
In a Kitchen of size 4’*6’”, 2 cooks prepare meals for the whole crew.
77 men on board share 2 wash basins and 2 toilets for month at sea.
விசாகப்பட்டினத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா இடமான ஐஎன்எஸ் குருசுரா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் அடையாளம் என்பதை நான் இங்கு பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
நுழைவுக்கட்டணம் - பெரியவர்களுக்கு - ரூ 30 - குழந்தைகளுக்கு - ரூ 20 (அப்போது) காமரா - ரூ 40/50 (மறந்து போச்)
நேரம் - 2 pm-8.30pm
உள்ளே விவரங்கள் சொல்லிக் கொண்டு வரும் வழிகாட்டி உண்டு. நான் மட்டுமே விரும்பினேன். அதனால் வைத்துக் கொள்ளவில்லை. படங்கள் போட்கிருக்கிறேனே அதுல பாத்தா புரியாது??!!!
“டிரஸ்ஸிங்க் ஷிப்” என்றால் என்ன? அதிலேயே இருக்கிறது அதன் பொருள்.
Courtesy - The Hindu
டிரஸ்ஸிங் லைன் எனப்படும் நீண்ட
கயிற்றில் கடல்சார்
சமிஞை கொடிகள் கட்டப்பட்டு, ஏற்றப்படுவது கடல்சார்
பாரம்பரிய கொண்டாட்டத்தின் ஓர் அடையாளம்.
இந்திய குடியரசுத் தலைவர் அல்லது
பிற நாட்டுத் தலைவர்கள் பயணம் செய்யும் போதும் தேசிய
முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பங்களிலும் கப்பல்கள்
ஒட்டுமொத்தமாக டிரஸ் செய்யப்படுகின்றன.
பகல் நேரத்தில், கடற்கரைக்கு வருபவர்கள் இந்த ‘டிரெஸ்ஸிங்க் கப்பல்களை’ காண முடியும்.
கப்பல்களில் கடல்சார் சமிஞை கொடிகள் கப்பலின் முன்பகுதியில்
(ஜாக்ஸ்டாஃப்) இருந்து அதன் பின்புறம் (என்சைன் ஸ்டாஃப்) வரை
நடுவில் உள்ள மற்ற மாஸ்ட்கள் (பாய்மரம்)
வழியாக கட்டப்படும்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, நங்கூரத்தில் உள்ள கப்பல்கள் எல்லாம் ஒளிரச் செய்வார்கள். விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டு தூரத்தில் இருந்து பார்த்தாலும் கல்லபின் வளைவுகள் கோடுகள் தெரிவது
போல அலங்காரம் செய்யப்படும்.
(இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இணையத்தில்
உலா வந்தால் நிறைய தென்படும் என்பதால் நான் இங்கு தரவில்லை என்பதோடு எனக்கு மொழி பெயர்க்க
நேரமும் இல்லை)
(இன்னும் நிறைய படங்கள் உள்ளன. இப்பகுதி மட்டுமின்றி முந்தைய பகுதிகளுக்கும். அவற்றைத் தொகுத்து காணொளியாகப் போட்டுவிட்டுச் சுட்டி தருகிறேன். அடுத்த பகுதி வரும் போது. அல்லது அதன் பின். இப்போது தொகுத்து போட நேரம் இல்லை)
அடுத்து சென்ற இடமும் அழகான இடம். அடுத்த பகுதியில் சொல்கிறேன். கொஞ்சம் பிஸி. தாமதமாகும்.
---கீதா
உடன் பயணித்த உணர்வு. நன்றி சகோதரி
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ
நீக்குகீதா
உடன் பயணித்த உணர்வு. நன்றி சகோதரி
பதிலளிநீக்குபடங்களும் செய்திகளும் சிறப்பு. நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.
நீர்மூழ்கிக் கப்பலை நாங்களும் உங்களுடன் சேர்ந்து சுற்றி வந்தது போன்ற தெளிவான நடையில், அழகாக விளக்கங்கள் தந்துள்ளீர்கள். கப்பல் நங்கையின் விவரங்கள் அருமை. தெரிந்து கொண்டேன் நான் அறியாத பல தகவல்களை தங்கள் பாணியில் பதிவில் சுவாரஸ்யமாக தொகுத்து தந்ததற்கு மிகவும் நன்றி. அடுத்தப் பகிர்வையும் காண ஆவலாக உள்ளேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலாக்கா பதிவை ரசித்தமைக்கு...விரிவாக பதில் கொடுக்க இயலவில்லை...பொறுத்துக்கோங்க.
நீக்குகீதா
ஆங்காங்கு பதுமைகள் வைத்து அந்த அந்த இடங்களின் பயனை குறிப்பால் உணர்த்துவது நன்றாக இருக்கிறது. படங்கள் நன்றாக உள்ளன. தேடித்தேடி விவரங்கள் சேகரித்து உள்ளீர்கள். மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜெகேசி அண்ணா ரசித்தமைக்கு
நீக்குகீதா
நேற்றே பார்த்து, படித்து விட்டேன் கருத்து போடுவது படுத்தி விட்டது.
பதிலளிநீக்குபடங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. விபரங்கள் நன்று.
நான் கப்பலுக்குள் சென்று பார்த்து இருக்கிறேன் (இந்திய, ஃப்ரான்ஸ் கப்பல்கள்) ஆனால் நீர்மூழ்கி கப்பல் பார்த்த்ததில்லை.
தொடர்ந்து வருகிறேன்...
கில்லர்ஜி கருத்து போடுவது பல சமயங்களில் மிகவும் சிரமமாக இருக்கிறதுதான் புரிந்துகொண்டேன்...
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி உங்கள் அனுபவமும் பகிர்ந்துகொண்டதற்கும் பதிவை ரசித்தமைக்கும்
கீதா
ஆஹா... உங்களால் நீர்மூழ்கி கப்பலின் உள்ளே சென்று பார்க்கும் அரிய வாய்ப்பை பெற்றேன். கப்பலின் உள்பகுதி தொழில்நுட்ப இயந்திரங்களால் நிரப்பப்பட்டுள்ளதை காணும்போது வியப்பு மேலிடுகிறது. நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ. இன்னும் படங்கள் இருக்கின்றன அதை தொகுத்துப் போடுகிறேன்
நீக்குகீதா
படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.நீர்முழ்கி கப்பலை நங்கு சுற்றி காட்டி விவரங்களை பகிர்ந்து கொண்டது அருமை.
பதிலளிநீக்கு//சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, நங்கூரத்தில் உள்ள கப்பல்கள் எல்லாம் ஒளிரச் செய்வார்கள். விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தூரத்தில் இருந்து பார்த்தாலும் கல்லபின் வளைவுகள் கோடுகள் தெரிவது போல அலங்காரம் செய்யப்படும்.//
தூத்துக்குடியில் இருக்கும் போது அப்பாவுடன் நிறைய கப்பல்களை (நடுக்கடலில் நிற்கும்) போய் பார்த்து இருக்கிறேன்.
இரவு மின் அலங்காரத்தோடு கப்பல்களை பார்த்து இருக்கிறேன்.
என் உறவினர் ஒருவர் கப்பலில் வேலை செய்தார் 6 மாதம் கடலில் கப்பலில் பயணம் செய்வார், ஆறுமாதம் நிலத்தில் இருப்பார் என்று மற்ற உறவினர்கள் அவரை கேலி செய்வார்கள்.
அவர் வரும் போது நிறைய படங்கள் கொண்டு வருவார் கப்பலின் கீழ் தளம், மேல் தளம் கப்பலில் நடக்கும் விழாக்கள், கப்பலில் இருக்கும் நூல் நிலையம், என்று காட்டுவார். பார்க்க ஆசையாக (நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது) அவரை சுற்றி உட்கார்ந்து பார்ப்போம்.
//விசாகப்பட்டினத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா இடமான ஐஎன்எஸ் குருசுரா//
எதிர் வீட்டில் இருப்பவர்கள் சென்னையிலிருந்து குருசில் விசாகப்பட்டினம் வரை பயணம் செய்து வந்தார்கள் போன மாதம்.
கோமதிக்கா உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கும், பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி. விரிவாக பதில் கொடுக்க முடியவில்லை...
நீக்குஎதிர் வீட்டில் இருப்பவர்கள் சென்னையிலிருந்து குருசில் விசாகப்பட்டினம் வரை பயணம் செய்து வந்தார்கள் போன மாதம்.//
ஆஹா...நல்ல அனுபவமாஅ இருந்திருக்கும். முடிந்தால் அவர்கள் சொல்வார்கள் என்றால் அவர்களிடம் எவ்வளவு ஆச்சு, அனுபவம் எல்லாம் கேட்டு ஒரு பதிவு போடமுடிந்தால் போடுங்கள் பலருக்கும் தெரிய வருமே...
நன்றி கோமதிக்கா
கீதா
இதை நான் மிஸ் செய்திருக்கிறேன். எப்படி? எங்கள் பிளாக் லிஸ்டில் அப்டேட் ஆகவில்லையா, தெரியவில்லை. இப்போது நேரமில்லை. மாலை வந்து படிக்கிறேன்.
பதிலளிநீக்குபரவாயில்லை ஸ்ரீராம்....சில சமயம் அப் டேட் ஆவதில்லை....பாருங்க இதுக்கே நான் இப்பத்தான் பதில் கொடுக்கிறேன்...வேலைப் பளு...
நீக்குஎப்ப நேரம் கிடைக்கிறதோ அப்போ பார்த்துக்கோங்க...
நன்றி ஸ்ரீராம்
கீதா
இன்றுதான் வந்து படித்தேன். மிகுந்த சுவாரஸ்யமான இடம், சுவாரஸ்யமான விவரங்கள். முதலில் உள்ளே இருக்கும் உருவங்கள் உண்மை என்று ஒரு கணம் ஏமாறும் அளவு வடிவமைத்திருக்கிறார்கள். குறிப்பாக சமையலறை உறுவான்கள், நின்றுகொண்டு இருக்கும் உருவம், முதலில் இயந்திரத்தின் அருகே இருக்கும் உருவம்... நாட்டுக்கு சேவை செய்த இந்தக் கப்பலை ஏன் விசாகபபட்டினத்துக்கு அனுப்பினார்கள்? ஏதோ ஒரு இடம் என்றா? அலலது வேறு காரணம் உண்டா? எனினும் தகுந்த மரியாதை செய்யப்பட்டிருக்கிறது போல.
பதிலளிநீக்குஇன்றுதான் வந்து படித்தேன்.//
நீக்குநான் இன்றுதான் ப்தில் கொடுக்கிறேன், ஸ்ரீராம்.....ஹாஹாஹா
ஆமாம் ஸ்ரீராம், உள்ளே சென்ற போது டக்கென்று நாம் ஏமா ந்து போவோம்...அது பொம்மை என்று தெரிவதற்குள் முதலில் பார்த்த அறையில் மேசையில் ஏதோ செய்து கொண்டிருப்பவரை பார்த்ததும் நான் டக்கென்று எக்ஸ்க்யூஸ்மி என்று சொல்லி அதன் பின்னர் தெரிந்தது ஹிஹி..இதை பதிவில் எழுதவில்லை...யாராவது இதைக் குறிப்பிடும் போது சொல்லலாம் என்று விட்டேன்/.
நாட்டுக்கு சேவை செய்த இந்தக் கப்பலை ஏன் விசாகபபட்டினத்துக்கு அனுப்பினார்கள்? //
அங்குதானே அது வந்துஇறங்கியிருக்கிறது ஆரம்பத்திலேயே....தலைமையகம் ...அதனால் அப்படி அங்கு
இன்னும் இரு வருடத்தில் சென்னையில் வரப் போகிறது அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னை ஐஎன் எஸ் என்று...
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
96 களில் கப்பலில் வேலை செய்ய ஒரு வாய்ப்பு இருந்தது. பாதி மனதுடன் பெயர் கொடுத்திருந்தேன். ஆனால் செலெக்ட் ஆகவில்லை எனினும் பாஸை அதை வைத்து கொஞ்ச நாட்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தேன்!
பதிலளிநீக்குஅட!! நல்ல வாய்ப்பு என்றாலும் கடினமான வேலை ஸ்ரீராம்...பெரும்பாலும் கடலிலேயே ..
நீக்குஹாஹாஹ பாஸை பயமுறுத்த நல்ல விஷயம் கிடைச்சிருக்கு பாருங்க!!!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
கீதா, துளசி அண்ணன் நலம்தானே...
பதிலளிநீக்குகீதா விசாகப்பட்டினம் வரை போய் வந்தீங்களோ.. நாங்களும் இம்முறை பாகிஸ்தான் போடர் வரை[அட்டகத்தி] போய் வந்தோம்[வட இந்தியா சுற்றுலா].
அது என்னமோ இந்த வருடம் தொடர் பிரயாணமாகவே அமைஞ்சு போச்சு.. இங்கெல்லாம் வர ஆசைதான், முடியாமல் இருந்தது.
படங்களும் சொன்ன விதமும் அழகாக இருக்குது.
வாங்க அதிரா ரொம்ப நாட்களாகிவிட்டது பார்த்து. ஆம் நலம் தான். நீங்களும் நலம்தானே. பயங்கர பிசி போல!!
நீக்குஎனக்கும் வேலைப்பளு பதிவுகள் மெதுவாகத்தான் போட முடியுது.
விசாகப்பட்டினம் போனது 5 வருடங்களுக்கு முன்!!!
அட நீங்களும் பாகிஸ்தான் எல்லை வரையா!! அட்டகத்தி??!! அட்டகட்டி கேரளத்தில் உள்ள இடம்....பாகிஸ்தான் எல்லையிலும் இருக்கா...
அடுத்த முறை இந்த இடங்கள் எல்லாம் பாருங்கள் அதிரா. நிறைய அழகான இடங்கள் உண்டு...
//படங்களும் சொன்ன விதமும் அழகாக இருக்குது.//
மிக்க நன்றி அதிரா...
கீதா