இயற்கைதோவாளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கைதோவாளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 1


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 11 

சென்ற பதிவில் - திருநெல்வேலி - நாகர்கோவில் பதிவு - 5 ல் நாகர்கோவில் சென்றதும் அங்கிருந்து கடம்போடுவாழ்வு செல்வதற்காகப் பேருந்து ஏற வடசேரி பேருந்து நிலையம் செல்வது பற்றிச் சொல்லி முடித்திருந்தேன்.  மீண்டும் யு டர்ன் வந்த வழியே ஆனால் சாலை வழிப்பயணம் ஏர்வாடி வரை. எனவே அதே வெள்ளமடம், தோவாளை, ஆரல்வாய்மொழி, முப்பந்தல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி.