இதற்கு முந்தைய பகுதியையையும், துளசியின் சென்ற பதிவையும் வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
இரண்டாம் பகுதியில் //வெளியில் வந்து கடற்கரைச் சாலைக்கு வந்தால், எதிரே வா வா என்று அழைக்கும் அழகான கடற்கரை. அலைகளின் சங்கீதத்தைக் கேட்போம்! கடற்கரை பற்றியும் அனுபவங்களும் அடுத்த பகுதியில். // என்று சொல்லி முடித்திருந்தேன் இல்லையா....நீட்டி முழக்காதே மேலே சொல்லு என்று நீங்கள் சொல்வதற்குள் தொடங்கிவிட்டேன்.