பல நாட்களாக (நாட்களாகவா வருடங்களாகவா? கீதா தெளிவா சொல்லிடு) இப்பயணம் குறித்து எழுத நினைத்து ஒரு வழியாக இப்ப பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்கிவிட்டேன். தடங்கல் இல்லாம இத்தொடரை எழுதி முடிக்கணுமே!
இந்தப் பயணம் மேற்கொண்டு, 5 வருடங்கள் ஆகிவிட்டதுன்னு அப்படி எல்லாம் உண்மைய சொல்ல மாட்டேன். அதனாலென்ன. இடங்கள் பற்றியும் என் அனுபவங்கள் பற்றியும் தானே எழுதப் போகிறேன். வருடமா முக்கியம்? வெங்கட்ஜியும் விசாகப்பட்டினம் பயணத் தொடர் எழுதியிருந்தார் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.சென்னையிலிருந்து சென்று, திரும்பி வந்த ரயில்/விமான விவரங்கள் குறித்து
வைத்திருந்தவை எல்லாம் கேடான ட்ரைவில் மாட்டிக் கொண்டுவிட்டது. இப்போது நினைவில்லை. சொல்லியும் இப்போது பயனில்லை. காரணம் விவரங்கள் இப்போது மாறியிருக்கின்றன.
நாங்கள் சென்றது
ஒரு குடும்ப நிகழ்விற்காக என்பதால் அதைச் சுற்றுலா என்றிட முடியாது. ஆனால், என் விருப்பம்,
அப்படியே சுற்றுலாவாகவும் மாற்றிக் கொள்ளலாமே, ஊருக்குள்ளும், கொஞ்சம் வெளியேயும் இடங்கள் பார்த்துவிட்டு வரலாமே என்று. என் விருப்பம் அப்ரூவ் ஆனதால், இருந்த
4 நாட்களில் ஒரு நாள் தவிர மற்ற 3 நாட்களில் எதை எல்லாம் பார்க்கலாம் என்று கூகுள்
உதவியுடன் குறித்து வைத்துக் கொண்டுவிட்டேன்.
என் பட்டியல்,
ஆர்கே கடற்கரை, கடற்கரையில் அமைந்திருக்கும் ஐஎன்எஸ்
குர்சுரா (எஸ்20) நீர்மூழ்கிக்
கப்பல் அருங்காட்சியகம்
மற்றும் ராமகிருஷ்ணா கோயில்,
கைலாசகிரி, ருஷிகொண்டா கடற்கரை, அரக்குபள்ளத்தாக்கு மற்றும் மிகவும் புகழ் பெற்ற போரா குகைகள், செல்வதற்கான ரயில் விவரங்கள், தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று சொல்லப்படும் லம்பாசிங்கி
- நாங்கள் சென்றது மேமாதம் என்பதால் லம்பாசிங்கியில் வரும் பனியை பார்க்க முடியாதுதான் என்றாலும் மலையைப் பார்க்கலாமே என்ற ஆர்வத்தில்
மற்றும் ஸ்ரீகாகுளம் ஸ்ரீமுகலிங்கம் (115கிமீ) – மூன்று சிவன் கோயில்கள் – கோயிலின் அமைப்பு
என்னை மிகவும் கவர்ந்ததால் அதையும் பட்டியலில் போட்டு இடங்களைத் தேர்வு செய்திருந்தேன்.
என் அலைவரிசையை ஒத்தவர்கள் இல்லை. அன்னாவரம், மற்றும் சிம்மாச்சலம் சேர்க்கப்பட்டதால் ஸ்ரீகாகுளம், லம்பாசிங்கி நீக்கப்பட்டன.
அந்த வருடங்களில் நான் புகைப்படம் எடுக்கப் பயன்படுத்தியது சாதாரண நிக்கான் கூல் பிக்ஸ் கேமரா. (இப்போது நான் பயன்படுத்தும் சோனி சைபர் ஷாட் போல. இரண்டுமே பயன்படுத்தப்பட்ட பிறகு என்னிடம் வந்தவைதான்).
என் பழைய பதிவுகளில்
புகைப்படங்கள் நிக்கான் கேமாராவில் எடுக்கப்பட்டவை. நிக்கான் பிரச்சனை பண்ணினாலும் -
அவ்வப்போது எரர் எரர் என்று வந்து கொண்டிருந்தாலும் - விடுவேனா? அதற்கு
ஏற்றார் போல் பக்குவமாகக் கையாண்டு நிறைய படங்கள் எடுத்தேன். ஒரு சில படங்கள் சரியாக வரவில்லை. வந்தவற்றைப்
பகிர்கிறேன்.
அடுத்த பதிவிலிருந்து இடங்கள் பற்றியும் அனுபவங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். இப்போது சென்ற இடங்களின் டீஸர்!
ஆந்திராவில் ஏதோ ஒரு மலைக்கோவில் பற்றி படித்தபோது பார்க்கும் ஆவல் வந்ததது. பெயர் நினைவில்லை. வனங்களூடே, ஆபத்தான மலைப்பாதை என்றெல்லாம் படித்த நினைவு. அது ஸ்ரீகாகுளமா தெரியாது..
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம். நீங்கள் சொல்லும் கோயில் அஹோபிலம் கோயிலாக இருக்கும்..
நீக்குஸ்ரீகாகுளம் மலைப்பகுதி அல்ல. ஸ்ரீகாகுளத்தில் மூன்று கோயில்கள் அதன் கட்டிடக் கலைக்காகவும், சிற்பங்களுக்காகவும் பார்க்க நினைத்ததுண்டு. ஒன்று இங்கு குறிப்பிட்டிருக்கும் கோயில், மற்றவை ஸ்ரீகூர்மம், சூரியநாராயணர் கோயில். அதுதான் செல்ல முடியாமல் ஆகிவிட்டதே.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஏதோ இந்த மட்டில் இந்த புகைப்படங்கள் பிழைத்திருக்கின்றன போல.. அழகாய் இருக்கின்றன. டீசர் வந்தாச்சு.. தாமதமானாலும் எப்படியும் பதிவிட்டு விடுவீர்கள்!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் புகைப்படங்கள் எலலவற்றையும் ஒரு பெரிய எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் போட்டு வைத்தேன். ஆனால் அதுவும் அவ்வப்போதுதான் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் நீங்கள் சொல்லுவீர்களே அது போல. அப்படி இதை எடுத்தேன். இன்னும் இருக்கின்ற்ன அதில் பகிர்வதற்கான படங்கள்.
நீக்குஅழகாய் இருக்கின்றன. //
நன்றி ஸ்ரீராம்.
// டீசர் வந்தாச்சு.. தாமதமானாலும் எப்படியும் பதிவிட்டு விடுவீர்கள்!//
ஹாஹாஹாஹா ஆமாம்....எழுதவேண்டுமே....முடிக்க வேண்டும் என்று இருக்கிறதுதான்.
மிக்க நன்றி ஸ்ரீராம், பாசிட்டிவ் வரிகளுக்கு
கீதா
நானும் இப்படித்தான் பல வருடம் போட வேண்டும் என நினைத்த பதிவுகள் போடவில்லை.
பதிலளிநீக்குஉங்கள் பயணக்கட்டுரை தொடர் பதிவு தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.
படங்கள் நன்றாக இருக்கிறது. கடற்கரை பேர் நல்லா இருக்கே!
ஆர்கே கடற்கரையும் நன்றாக இருக்கிறது.
போரா குகையை போல நானும் ஒரு குகை பதிவு போட எடுத்து வைத்து இருக்கிறேன் படங்களை.(பழசு.)
அக்காவுக்கும், தங்கைக்கும் சில நேரம் நினைப்பு ஒரே மாதிரி இருக்கிறது.
நானும் இப்படித்தான் பல வருடம் போட வேண்டும் என நினைத்த பதிவுகள் போடவில்லை.//
நீக்குஹாஹாஹா இதான் நம்ம அக்கான்றது!!!
வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிக்கா...முடித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். பதிவுகள் என்னவோ நிறைய இருக்கின்றன.
//படங்கள் நன்றாக இருக்கிறது. கடற்கரை பேர் நல்லா இருக்கே!//
படங்களை ரசித்தமைக்கு நன்றி கோமதிக்கா....ஆமாம் அக்கா பேர்கள் அழகு. பதிவில் சொல்கிறேன்.
அக்கா, நீங்களும் அந்த குகைப்படங்களைப் போடுங்கள் பழசாக இருந்தால் என்ன? போடுங்கள்
//அக்காவுக்கும், தங்கைக்கும் சில நேரம் நினைப்பு ஒரே மாதிரி இருக்கிறது.//
ஹாஹாஹாஹா ஆமாம் ஹைஃபைவ்! கோமதிக்கா....பின்னே அக்கா தங்கைன்னு தெரிய வேண்டாமா!!
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
ஆரம்பம் கவர்ச்சியாக உள்ளது. படங்கள் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குJayakumar
ஹாஹாஹா தொடரும் பதிவுகளும் கவர்ச்சியாக இருக்கணுமே!!!
பதிலளிநீக்குபடங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஜெசி அண்ணா
கீதா
முன்னோட்ட படங்களே ஆவலைத் தூண்டுகிறது...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி! தொடர்ந்து வாங்க...
நீக்குகீதா
படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு கீதா அக்கா ...தொடரை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ...
பதிலளிநீக்குவாங்க அனு. உங்களுக்கும் பிடிக்கும்னு தெரியும். வாங்க தொடர்ந்து.
நீக்குமிக்க நன்றி அனு
கீதா
அழகான் படங்கள்.வரவிருப்பவைக்குக் காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி செபி சார். அடுத்த பகுதி அடுத்த வாரத்தில் வரும்.
நீக்குகீதா
படங்கள் அருமை தகவல்கள் வரட்டும் தொடர்ந்து வருகிறேன்...
பதிலளிநீக்குபடங்களை ரசித்தமைக்கு நன்றி கில்லர்ஜி,. நீங்கள் தொடர்ந்து வருவீங்கன்னும் தெரியும்!
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
ஆர்கே கடற்கரை, டிகே கடற்கரை என்று ஒரே த்ரில் தொடராக இருக்கும்போலிருக்கிறதே..
பதிலளிநீக்குஹாஹாஹா பெயர்க்காரணங்கள் அந்தந்தப் பகுதியில் வரும் ஏகாந்தன் அண்ணா.
நீக்குமிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா.
கீதா
அந்த நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம் பற்றி அறிய ஆசை... உள்ளே சென்று பார்க்கலாமா?.... இப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா?....உள்ளே என்னென்ன பொருட்களையெல்லாம் காட்சிக்கு வைத்துள்ளார்கள்???.....
பதிலளிநீக்குஉண்மையாகவே இந்த நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் பார்க்க வேண்டிய ஒன்று சகோ நாஞ்சில் சிவா. மிக மிக அருமையாக இருக்கும். உள்ளே சென்று பார்க்க அனுமதி உண்டு. எப்போதும் அங்குதான் உண்டு விவரங்கள் எல்லாம் அப்பகுதியில் சொல்கிறேன். முழுவதும் அது இயங்குவதற்கான உபகரணங்கள் முதல் மாலுமிகள் தங்குமிடம் ரேடியோ அறை என்று அத்தனையும் உள்ளே இருக்கின்றன. படங்கள் எடுத்திருக்கிறேன் அப்பகுதியில் வரும்
நீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா.
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. படங்கள் எல்லாம் அழகு. தெரியாத இடங்களை நானும் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!! சிவன் கோவில் பெயர்கள் நன்றாக உள்ளன. போட்டோகள் பழுதாகி விட்ட கணினியில் மாட்டிக்கொண்டாலும் இருப்பதை வைத்து நம்பிக்கையுடன் பதிவை தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.
நாங்கள் இங்கு வந்த புதிதில் பலபகுதிகளுக்கு சென்ற போது எடுத்த போட்டோக்களும் இந்த ஹார்ட் டிஸ்க்கில் மாட்டிக் கொண்டு விட்டன என குழந்தைகள் சொன்னார்கள். அதையெல்லாம் பார்க்க இயலவில்லையே என எனக்கும் வருத்தமாக இருக்கிறது.
இதன் மூன்றாம் பதிவை பார்த்தேன். (இதையெல்லாம் படிக்க இயலவில்லை. அப்போது என் கைப்பேசியின் மாறுதல்கள்...) அதற்கு கருத்து தெரிவிப்பதற்குள் மற்ற முன் இரண்டு பதிவுகளையும் படிக்க நேரம் பார்த்து இப்போது முதலிலிருந்தே தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.