திங்கள், 9 அக்டோபர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி

படபடவென அழகாய்ப் பறந்து போகும்
 வண்ணத்துப் பூச்சி அக்கா
நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா!!






பட்டர்ஃப்ளை பார்க் என்று வண்ணத்துப் பூச்சிகளுக்கு என்று ஒரு சில இடங்களில் தனியாகவோ அல்லது பூங்காவில் ஒரு பகுதியோ இருப்பதைப்  பார்த்திருக்கிறேன். ஆனால், அங்கு பல சமயங்களில் வண்ணத்துப் பூச்சிகள் அவ்வளவாக இருப்பதில்லை. இருந்தாலும் ஓரிரண்டு பறக்கும் அவ்வளவே. ஆனால், நான் நடைப்பயிற்சி செல்லும் இடத்தில் நிறைய வண்ணத்துப் பூச்சிகளைக் காணலாம். நிறைய காட்டுச் செடிகளும், பூச்செடிகளும், மரங்களும் நிறைந்த இடம். காலை 6.30, 7 மணிக்குத் தொடங்கி அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிப் பின்னர் மதிய நேரத்திற்குப் பிறகு அவற்றை அவ்வளவாகப் பார்க்க  முடியாது. 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் வண்ணத்துப்பூச்சிகளுக்கு என்று பூங்கா அமைப்பதை விட எல்லா இடங்களிலும் செடிகளும், பூக்களும், மரங்களும் வளர்க்கப்பட்டால் வண்ணத்துப் பூச்சிகள் மகிழ்வாகப் பறந்து நம்மையும் மகிழ்விக்கும். 

பல வருடங்களாக வண்ணத்துப் பூச்சியைப் படம் பிடிக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறியது. இன்னும் படம் பிடிப்பேன் என்பது வேறு விஷயம். கட்டடங்கள் பெருகிவருவதைப் பார்க்கும் போது வண்ணத்துப் பூச்சிகளும், அந்துப் பூச்சிகளும் (Moth) அழிந்துவரும் இனப் பட்டியலில் சேர்ந்துவிடப் போகிறதே என்று நினைத்தேன். இப்போது அப்பட்டியலில் சேர்ந்தேவிட்டது. காரணம் அவற்றின் இருப்பிடம் அழிந்து வருவதால்.  அந்துப் பூச்சிகளையும் வாய்ப்பு கிடைக்கும் போது படம் பிடிக்க எண்ணியுள்ளேன். புகைப்படம் எடுத்துப் பதிந்தால் நாளைய தலைமுறையினருக்கு இப்படி எல்லாம் பல வகைகள் இருந்தன என்பது தெரியவருமே! நாம் இப்போது டைனோசரைப் படங்களில் பார்த்துப் பிரமிப்பதைப் போல!!! நான் பெற்ற இன்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதில் ஒரு மகிழ்ச்சியும்!




அதே வண்ணத்துப் பூச்சிகள் பல கோணங்களில் தொங்குவதையும் எடுத்து இங்குப் பகிர்ந்துள்ளேன்.







  


இப்போதெல்லாம் எங்கள் வீட்டுப் பால்கனியில் இருக்கும் செடிகளுக்கு வண்ணத்துப் பூச்சிகள் வரத் தொடங்கியுள்ளன என்பதை அறிந்ததே நான் செடிகளைப் பார்ப்பதற்குக் கதவைத் திறந்த போது  இரண்டு பறந்து சென்றதைப் பார்த்த போதுதான். இனி கவனமாகக் கதவைத் திறக்க வேண்டும் முடிந்தால் புகைப்படம் எடுக்க வேண்டும். எடுக்க முடிந்தால் பகிர்கிறேன். 

-------கீதா













68 கருத்துகள்:

  1. >>> வண்ணத்துப்பூச்சிகளுக்கு என்று பூங்கா அமைப்பதை விட எல்லா இடங்களிலும் செடிகளும், பூக்களும், மரங்களும் வளர்க்கப்பட்டால் வண்ணத்துப் பூச்சிகள் மகிழ்வாகப் பறந்து நம்மையும் மகிழ்விக்கும்..<<<

    நாம் மகிழ்வது ஒருபுறம் இருந்தாலும் -
    வண்ணத்துப் பூச்சிகள் என்றும் மகிழ்வாக இருக்கட்டும்..

    மிக மிக அழகான படங்களுடன் பசுமை விருந்து.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரைசெல்வராஜு சகோ முதல் கருத்திற்கு மிக்க நன்றி...நான் தான் தாமதமாக வந்து பதில் கொடுக்கிறேன்...மன்னிக்கவும் சகோ..இறுதியிலிருந்து வருவது என்று ஒரு பழக்கம்...அதை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்...

      ஆம் வண்ணத்துப்பூச்சிகள் மகிழ்வாக இருக்க வேண்டும்!!

      மிக்க நன்றி சகோ தங்களின் அழகான கருத்திற்கு

      நீக்கு
  2. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  3. கருத்தும் படங்களும் அருமை த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கும் த ம 1 ற்கும்

      நீக்கு
  4. வண்ணத்துப்பூச்சி படங்கள் நல்லா இருந்தன. இவையெல்லாம் நாம் சாதாரணமாகப் பார்க்கும் வண்ணத்துப்பூச்சிகள்தான். இதில் சிவப்பு கலரோடு கொஞ்சம் பெரியதான ஒரு வகையும் இருக்கும்.

    இவைகளெல்லாம் சிறிய வயதில் பிடித்து விளையாடியது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை இவை சாதரணமாகப் பார்ப்பவைதான். இங்கு ஸ்பெஷல் என்று சொல்லப் போனால் இரண்டு இருக்கிறது ஆனால் சிவப்பு என்று சொல்ல முடியலை அது கொஞ்சம் பெரிதுதான் ரொம்ப அழகாக இருக்கிறது ஆனால் அது ஒரு இடத்தில் உட்கார மாட்டேன் என்கிறது !! ஹாஹாஹாஹா கொஞ்சம் மேலே பறந்து கொண்டே இருக்கிறது...மற்றொன்று நல்ல நீலக்கலர் அதுவும்சிக்கவில்லை. மற்றொன்று நல்ல மஞ்சள் சிறியதுதான் அதுவும் பறந்து கொண்டே இருக்கிறது. கேபேஜ் வொயிட் எப்படியோ படம் பிடித்துவிட்டேன்....இன்னும் சில சிறியவையும் இருக்கிறது....கேமரா லென்ஸ் எரர் அதனுடைய ஹாஸ்பிட்டலுக்குபோயிருக்கிறது....

      நானும் சிறுவயதில் நிறைய விளையாடி யிருக்கேன். பறக்க முடியாமல் இருக்குமே அவற்றைத்தான் தொட்டுப் பார்த்து கையில் அதன் கலர் ஒட்டுமெ வியப்பாக இருக்கும். எப்படி இப்படி ஏதோ சாயம் பூசியது போல் என்று...நான் சொல்லுவது மேக்கப் என்று...

      மிக்க நன்றி நெல்லை...

      நீக்கு
  5. இயற்கை கொடுத்த பலவித வேறுவண்ணங்களில் பறக்கும் பட்டாம் பூச்சிகள் கண்ணிற்கு விருந்து. அழகாக படங்கள் எடுத்திருக்கிறீர்கள். இந்த வண்ணத்துப்பூச்சிகள் கிராமங்களில் அடர்ந்த செடிகளினூடே இப்பவும் பார்க்கக் கிடைக்கிறது. பட்டாம்பூச்சி,பட்டாம்பூச்சி பறந்துவா என்று குழந்தைகள் விளையாடும் அழகெல்லாம் ஒருகாலத்தில் இருந்தது ஞாபகம் வருகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சியம்மா....ஆமாம் முன்பெல்லாம் எங்கள்காலத்தில் வியந்து விளையாடியது உண்டு. மிக்க நன்றி காமாட்சியம்மா கருத்திற்கு

      நீக்கு
  6. ஆஹா கீதா, மிக அழகழகான வண்ணத்துப்பூச்சிகள்.. இப்போதான் சீசனோ? ஒரு சீசனுக்குத்தான் அவை கூட்டை உடைத்துப் பறக்கும்.

    இலங்கையில் இப்படி சீசனின்போது, மாதம் நினைவில்லை... குப்பைகுப்பையாக.. அதாவது வானத்தை அடைப்பதுபோல.. ஒரு குறிப்பிட்ட உயரத்தில்.. அதிகம் மேலே போகமாட்டினம்.. பல வண்ணங்களில் பறப்பார்கள்.. ஒரு திசையிலிருந்து மறு திசைக்கு...

    ஆனா இதில் கவலை என்னவெனில்.. அதிகம் உயரமாக இவற்றால் பறக்க முடியாமையால்.. நிறையப் பூச்சிகள் வாகங்களில் மோதி ரோட்டோரம் எல்லாம் இறந்து கிடப்பது மிகக் கவலையாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இது சீசன் தான் பல இடங்களில் பறந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் சொல்லுவது போல் வாகனங்களில் அடிபடுவதும் உண்டு
      அவற்றில் சிறியவற்றின் வாழ்வுகாலம் ஒரு வாரம் தான் ...பெரியதன் வாழ்வுகாலம் ஒரு மாத காலம்...ஒரு சில மொனார்க் எனும் வண்ணத்துப் பூச்சியின் வாழ்வுகாலம் 9 மாதங்கள். vanessa cardui எனும் வண்ணத்துப் பூச்சி ஒரு வருடம் என்றும் வீட்டிலிருக்கும் என்சைக்ளோபீடியா சொல்லுகிறது.

      ஆமாம் அதிக உயரம் பறக்க முடியாதுதான்...நம் தலையில் இடிப்பது போல கூடப் பறக்கும்...சில சமயம் நம் சட்டையில் கூட உட்கார்ந்து கொள்ளும் அழ்குதாமம்ன்...

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  7. அழகாகப் படம் பிடிச்சிருக்கிறீங்க கீதா, இங்கு நம்மிடத்தில் இவை இல்லை:(.. குளிர்.. மழை.. நாடு என்பதால.. மொத் தான் இடைக்கிடை ஒன்றிரண்டு பறக்கும்.. அதை எங்கள் செல்லப்பெண் டெய்சி விடமாட்டா கலைச்சுப் பிடிப்பா:(.

    இன்னொன்று இவ்வளவு அழகான பூச்சியின் ஆயுட்காலமும் 2,3 நாட்கள்தான் என்பதுபோலக் கேள்விப்பட்டேன்.. சரியாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயுட்காலம் கம்மிதான் ஒரு சில வகைகள் கொஞ்சம் நீடிக்கிறது மேலே கருத்தில் சொல்லியிருக்கேன் பாருங்க...அதை எங்கள் செல்லப்பெண் டெய்சி விடமாட்டா கலைச்சுப் பிடிப்பா:(.// ஹாஹாஹா எங்கள் செல்லப் பெண்களும் அப்படித்தான்...வாய்ப்பு கிடைத்தால் பிடிப்பதற்கு அலைவார்கள்.

      மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
  8. புலவர் ஐயா சொல்லியதைப் பார்த்தே திகைக்கிறேன், வழமையாக உங்கள் பக்கம் என் கண்ணுக்கே முதலில் வோட் பொக்ஸ் தெரியும்.. இன்று சத்தியமாக இப்போ தெரியவே இல்லையே... கொஞ்சத்தால வந்து பார்க்கிறேன் தெரியுதோ என..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் கண்ணுக்கு என்றுமே தெரியாது அதிரா. பரவால்ல விடுங்க!அதைவிட முக்கியமா உங்கள் அழகான கருத்துகள் வந்துருச்சுல அப்புறம் என்ன...

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  9. அந்தப் பாட்டை மறந்து விட்டீர்களா... பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.... நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அந்தப் பாட்டு மறக்குமா!!! பட்டுப் பூச்சி என்றால் பட்டு நூல்/பட்டு தயாரிக்கும் பருவம் இல்லையா அந்துப் பூச்சி.வண்ணத்துப் பூச்சியின் பருவம் என்பதால் கொஞ்சம் மாற்றி எழுதினேன் அதே பாடலைத்தான்,....

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  10. எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி... அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி!

    ஓ பட்டர்ஃபிளை... பட்டர்ஃபிளை... பட்டர்ஃபிளை.. ஏன் விரித்தாய் சிறகை...

    பட்டுப்பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு...

    பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பாப்பா...

    வண்ணத்துப்பூச்சி பறக்குது பலவண்ணங்கள் காட்டிச் சிரிக்குது...

    இதெல்லாம் சில பட்டுப்பூச்சி / வண்ணத்துப்பூச்சி பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் இரண்டாம் பாடல் ஓ பட்டர் ஃப்ளை பல முறை கேட்டிருக்கிறேன். மிகவும் பிடித்த பாடல்....மற்றவை கேட்கிறேன் ....

      மிக்க நன்றி ஸ்ரீராம் இதன் தொடர்பாக நிறைய பாடல்கள் கொடுத்தமைக்கு...

      நீக்கு
    2. மறந்து போன ஆனால் எனக்கு பிடித்த பழைய பாடல்களை ஸ்ரீராம் ஞாபகபடுத்தி சென்று இருக்கிறார் இணையத்தில் அதை கேட்க போகிறேன் இப்போது.....

      நீக்கு
    3. வேறு பாடல்கள் ஏதும் உங்களுக்கு நினைவு இல்லையா மதுரை?

      நீக்கு
  11. இவற்றைப் படம் எடுக்க நிறைய பொறுமை வேண்டும். சட்சட்டென மலர்கள் தாவி பாஸ் கொடுக்காமல் ஓடிவிடும். இந்த சீஸனுக்கு எங்கள் காம்பவுண்டிலும் நிறைய வண்ணத்துப்பூச்சிகள்.

    பொறுமையாய் நின்று அழகாய்ப் படம் எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாவித் தாவிச் சென்றுவிடும். அதுவும் அந்தச் சிறிய மஞ்சள் எல்லாம் பறந்து கொண்டேதான் இருக்கும்....பெரிசு எல்லாம் உட்கார்ந்தாலும் அசைந்து கொண்டே இருக்கும்...

      சீஸன் ஆம்!! நிறைய பார்க்க முடிகிறது. மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  12. அழகு, அழகு..... படம் எல்லாம் நல்ல கிளீயாரா வந்து இருக்கு. ஆம் நீங்கள் சொல்லும் பயம் இருக்கத்தான் செய்கிறது நிறைய இயற்க்கை விஷயங்கள் அடுத்தவர போகும் தலைமுறைகளுக்கு படங்கள் தான் பரிசாகுமோ நாம் கண்டு களித்து எல்லாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பூவிழி! வருகைக்கும் கருத்திற்கும்...

      சில படங்களைச் சேமித்து வைப்பது நல்லதுதான் இல்லையா...

      நீக்கு
  13. TM 4 உங்களை இப்படியே விட்டால் சிறந்த புகைப்பட கலைஞர் ஆகிவிடுவீர்கள் போல இருக்கே எல்லாப்படமும் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! தங்க்யூ தங்க்யூ!!! புகைப்படம் எடுப்பது ரொம்பப் பிடிக்கும். என்னிடம் இருப்பது சாதரணமான ஒன்றுதான்...மிக மிகவும் ஓல்ட் மாடல் அவுட் டேட்டட் என்றும் சொல்லப்படுவதுண்டு.

      மிக்க நன்றி மதுரை சகோ.

      நீக்கு
  14. இங்கே நிறைய இருக்குங்க! வண்ணத்திப் பூச்சிப் பூங்காவும் திருச்சியில் இருக்கு. இன்னும் போய்ப் பார்க்கலை. ஆனால் விதம் விதமாய்ப் பறக்கும். வீட்டுக்குள்ளே அனுமதி இல்லாமல் வந்துடும். கூடவே தேனீக்களும் வருவதால் பால்கனிக் கதவைத் திறக்க யோசனை! எதிர் ஃப்ளாட்டில் சமையலறைக்கு அருகே தேனீ கூடு கட்டி அவற்றை விரட்டப் பட்ட பாடு! அதான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா வண்ணத்துப் பூச்சி பூங்கா திருச்சியில் இருக்குனு வெங்கட்ஜி கூட எழுதியிருந்தார். ஆனால் அவர் போயிருந்த போது சீசன் இல்லை போலும்...பார்க்க முடியலைனு சொல்லிருந்தார். இப்போது போனால் ஒரு வேளை நிறைய இருக்குமாக இருக்கலாம்...

      நான் எங்கள் ஊர் கிராமத்தில் இருந்தவரை நிறைய பூச்சிகள் வீட்டிற்குள் வரும். சுற்றிலும் வயல்கள், தோப்புகள், வாய்க்கால், ஆறு என்று இருந்ததால். அந்துப் பூச்சி, வெட்டுக்கிளி, தேனீ, குளவிப் பூச்சி, இன்னும் பெயர் தெரியாத நிறைய பூச்சிகள் வரும்..அதுவும் அறுவடை காலத்தில் நிறையவே வரும். ஒரு பக்கம் அறுவடை செய்ததை தெருவில் சுத்தம் செய்து குவித்து மாடுகளை வைத்து சூடடித்து (சூடடித்து என்று சொல்லுவார்கள் எங்கள் ஊரில்) நெற்களை உதிர்ப்பார்கள். அப்போது பறந்து வரும் சூசி வீட்டை முசுவதும் ஏன் நாம் வெளியில் நின்றாலே நம்மையும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றும்...அதில் பூச்சிகள் வேறு என்று....நினைவுபடுத்திவிட்டீர்கள் கீதாக்கா..தேனீக் கூடு ஆம் விரட்டுவது பாடுதான்...ஆனால் அவற்றிற்கும் இப்போது தேன் கூடு கட்டும் கன்ஃப்யூஷன் வந்திருக்கும் எங்கு கட்டுவது என்று தெரியாமல் கிடைக்கும் இடத்தில் கட்டிவிடுகின்றனதான் என்று நினைக்கிறேன்......மிக்க நன்றி கீதா அக்கா...

      நீக்கு
  15. அந்து, செக்கான், வண்டுகள், விட்டில் பூச்சிகள், தத்துக்கிளிகள், சிராவண்டுகள் என விதம் விதமாய் வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு மழை பெய்தால் சில பூச்சிகள் வருகின்றன அல்லாமல் அத்தனை இல்லை...இதுக்கு..எங்கள் ஊர் பற்றி மேலேயே சொல்லிட்டேன் போல.ஹாஹா...நன்றி கீதாக்கா...

      நீக்கு
  16. ///காலை 6.30, 7 மணிக்குத் தொடங்கி அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிப் பின்னர் மதிய நேரத்திற்குப் பிறகு அவற்றை அவ்வளவாகப் பார்க்க முடியாது///

    வேறென்ன ஆஃபீஸ் போயிருக்கும்

    படங்கள் அனைத்தும் தெளிவாக வந்து இருக்கிறது பொறுமையாக எடுத்தமைக்கு பாராட்டுகள்.
    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஆமாம் அவங்களுக்கு ஆஃபீஸ் செடிகள் தானே....மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      நீக்கு
  17. வண்ணத்து பூச்சிகளுக்கென்று தனியான ஒரு பூங்காவை சிங்கப்பூரில் பார்த்தபோது பரவசமடைந்தேன், எனினும் நீங்கள் சொல்வதுபோல அவற்றிற்கு பிரத்தியேகமான இடம் ஒன்றும் அமைக்காமல் சுதந்தரமாக பறக்கவிடப்பட வேண்டுமாயின், வளர்ந்துவரும் நகரமயமாக்களில் சிக்கி நாளடைவில் அவற்றிற்கான வேறு புகளிடமோ இயற்கை சூழலோ இல்லாத நிலை வந்துவிட வாய்ப்பு இருக்கும் பட்ச்சத்தினுள் ஆங்காங்கே இதுபோன்ற பிரத்தியேக பூங்காக்கள் இருப்பதும் ஒரு கூடுதல் அனுகூலமே.

    உங்களின் கேமரா கண்களில் சிக்கிய இந்த பட்டாம்பூச்சிகள் புகைப்படங்களாகும்போது கூடுதல் அழகுடன் கட்சி அளிக்கின்றன.

    காலை நடைப்பயிற்சி உங்களுக்கு மேலும் உற்ச்சாகத்தையும் ஆரயோக்கியத்தையும் வழங்குவதோடு எங்களுக்கும் உற்சாகத்தையும் மகிழ்வையும் இது போன்ற பதிவுகளால் கிடைப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

    இவற்றை பார்க்கும்போது மனமும் லேசாகிறது.

    வாழ்த்துக்கள் - பட்டாம்பூச்சிகளோடு போட்டிபோட்டு பதிவுகளில் வண்ணம் குழைக்கும் உங்களுக்கும் பட்டாம்பூச்சிசிகளுக்கும்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோ தங்களின் விரிவான அழகான பதில் கருத்திற்கு. உண்மைதான் காலை நடைப்பயிற்சி எனக்கு இந்தச் செடிகள், பூக்கள், சிறு சிறு பூச்சிகள், பைரவர்கள், இயற்கை என்று உற்சாகம் அளிக்கிறதுதான்...உங்களுக்கும் தருவது கண்டு மிக்க மகிழ்ச்சி கோ!

      //நீங்கள் சொல்வதுபோல அவற்றிற்கு பிரத்தியேகமான இடம் ஒன்றும் அமைக்காமல் சுதந்தரமாக பறக்கவிடப்பட வேண்டுமாயின், வளர்ந்துவரும் நகரமயமாக்களில் சிக்கி நாளடைவில் அவற்றிற்கான வேறு புகளிடமோ இயற்கை சூழலோ இல்லாத நிலை வந்துவிட வாய்ப்பு இருக்கும் பட்ச்சத்தினுள் ஆங்காங்கே இதுபோன்ற பிரத்தியேக பூங்காக்கள் இருப்பதும் ஒரு கூடுதல் அனுகூலமே.// சரிதான் கோ. எழுதும் போது இக்கருத்தும் எனக்குள் தோன்றியதுதான். ஆனால் ஏனோ எழுதாமல் விட்டுவிட்டேன். நீங்கள் இங்கு எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி.....கோ....வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  18. /இதிலிருந்து தெரிவது என்னவென்றால் வண்ணத்துப்பூச்சிகளுக்கு என்று பூங்கா அமைப்பதை விட எல்லா இடங்களிலும் செடிகளும், பூக்களும், மரங்களும் வளர்க்கப்பட்டால் வண்ணத்துப் பூச்சிகள் மகிழ்வாகப் பறந்து நம்மையும் மகிழ்விக்கும். //

    அதே அஃதே :) நான் சம்மருக்கு இங்கே தோட்டத்தில் மிக்ஸ்ட் சீட்ஸ் poppies அப்புறம் நைஜெல்லா இன்னும் நிறைய வைல்ட் மலர்கள் மிக்ஸ் தூவிடுவேன் அதே வளர்ந்து பூப்பூவா சிரிக்கும் அதுவும் இந்த granny's bonnet மலர்கள் உள்ளே தேனீக்கள் நுழைந்து தேன் அருந்தும் அழகு அப்பப்பா !!

    எங்க தோட்டத்தில் நிறைய வண்ணத்துப்பூச்சிஸ் வராங்க ஆனா ஜெசி எப்படியாவது அதுங்களை பிடிச்சே தீர தோட்டத்தில்ரவுண்ட்ஸ் வருவா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சம்மருக்கு இங்கே தோட்டத்தில் மிக்ஸ்ட் சீட்ஸ் poppies அப்புறம் நைஜெல்லா இன்னும் நிறைய வைல்ட் மலர்கள் மிக்ஸ் தூவிடுவேன் அதே வளர்ந்து பூப்பூவா சிரிக்கும் அதுவும் இந்த granny's bonnet மலர்கள் உள்ளே தேனீக்கள் நுழைந்து தேன் அருந்தும் அழகு அப்பப்பா//

      யெஸ் யெஸ் ஏஞ்சல்!! அழகோ அழகு! நான் அதையும் சில புகைப்படங்கள் எடுத்துள்ளேன் ஏஞ்சல். போடறேன் அடுத்த மை க்ளிக்ஸ்ல...

      ஜெசி பிடிப்பது ...ஹாஹாஹாஹாஹா என் வீட்டு செல்ல பைரவிகளும் அப்படித்தான் சான்ஸ் கிடைச்சா அவ்வளவுதான் வீட்டுல கட்டெறும்பு கரப்பு வந்தாலே அதை காலால தட்டறதப் பார்க்கணும் ரொம்ப அழகா இருக்கும்...பூச்சி பறக்கக் கூடாது அவ்வளவுதான்...எம்பி எம்பி குதிச்சு குதிச்சு எடுப்பாங்க பாருங்க...அழகோ அழகு!! ஜெஸியும், அதிராவின் டெய்ஸியும் பிடிக்கறத மனசுல நினைச்சு எனக்கு ஒரே சிரிப்பு...

      மிக்க நன்றி ஏஞ்சல்...

      நீக்கு
  19. lantana செடிங்க உங்க பதிவில் குட்டி மஞ்சள் பட்டர்ப்ளை உக்காந்திருக்கே அந்த செடி தான் பெஸ்ட் அது இருந்தா வண்ணத்துபூச்சிஸ் படையெடுக்கும் ..

    இப்போ autumn ஆரம்பிச்சி தோட்டம் பக்கம் போகவே பிடிக்கல :( குளிர் நிறைய cob webs மரத்துக்கு மரம் அவங்களே கட்டியாச்சி .
    அத்தனை படங்களும் அழகு கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்காத்துகாரர் வேஸ்ட் ஏஞ்சல் உங்க வீட்டிலே இரண்டு பட்டம் பூச்சிகல் இருக்கிறதே அதை அவர் படம் எடுத்திருக்கலாம் அல்லவா

      நீக்கு
    2. ஒருவேளை வீட்டில் இருக்கும் பட்டாம் பூச்சியில் ஒன்று கேமராவிற்குள் வராத அளவிற்கு பெரிசாக இருப்பதால் எடுக்காமல் விட்டாரோ என்னவோ அது தெரியாமல் அவரை நான் குறை சொல்லக்கூடாது

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர் :))))) for truth :)

      நீக்கு
    4. மதுரை உங்களுக்கு ரொம்பத்தான் கொயுப்பூபூ.......ஹாஹாஹாஹாஹா...ஏஞ்சல், அதிரா இவரைப் பிடிச்சு தேம்ஸ்ல தள்ளுங்க!!! ஹாஹாஹா

      நீக்கு
    5. ஏஞ்சல் லாண்டனா-உன்னிப்பூ செடி...யெஸ் அதுக்கு நிறைய பட்டர்ஃப்ளை வரும். எங்க வீட்டுப் பக்கத்துல நிறைய இருக்கு....
      லாண்டனாவுக்குத் தமிழ்ல என்னனு தெரியாம இருந்தப்ப கீதாமதிவாணன் சொல்லிருந்தாங்க இது பத்தி. எங்க வீட்டுச் செல்லம் கண்ணழகி இந்த இலைய அப்பபா திம்பா...அவளுக்கு வயிறு அப்செட்டானா பூஷணி இலை, கோவைக்கா இலை, அருகம் புல், அப்புறம் இராவணன் மீசை புல் நு சொல்லுவோமே இதெல்லாம் திம்பா...கீதாவின் பதிவிலிருந்துதான் தெரிஞ்சுச்சு லான்டெனா இலைகள் பாய்ஸன் அப்படினு. இப்ப கண்ணழகிய அதைச் சாப்பிட அனுமதிக்கறது இல்லை...அவ அலைவா அதன் மணத்திற்காக..

      இந்த கேபேஜ் மஞ்சள் பட்டர்ஃப்ளைய படம் எடுக்கறதுக்கு நிறைய டைம் ஆச்சு. அது உக்காரவெ உக்காராது. பறந்துகிட்டே இருந்துச்சு. அப்புறம் எப்படியோ எடுத்துட்டேன்..

      மிக்க நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  20. வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்தான் ,ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  21. நான் நெய்வேலியில் இருந்த போது வீடு நிரய்ய மரமும் பூச்செடிகளும் வண்ணத்து பூச்சிகளும் சிட்டு குருவிகள் தவிட்டு குருவிகள் .திருமணம் வரை இவைகளோடுதான் என் வாழ்க்கை.அது போல் இருக்கு.நல்ல புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மீரா பாலாஜி எங்கள் தளத்திற்கு முதல் வருகைக்கு மிக்க நன்றி...ஓ நீங்கள் நெய்வேலியா..பதிவர்.வெங்கட் ஜி கூட நெய்வேலிதான். உங்களுக்குத் தெரிந்திருக்குமே....

      இங்கேயும் எங்கள் வீட்டருகில் தவிட்டுக் குருவிகளும், சிட்டுக் குருவிகளும் நிறைய....நீங்கள் இவற்றை எல்லாம் ரசிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது மீரா. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  22. நான் வழமையாகச் சொல்லும் மாமியின் சிடியில் இருக்கும் ஒரு பாடல்... நெட்டில் கிடைக்குதில்லை...

    ஒரு பட்டாம்பூச்சி ரெக்கை கட்டிப் பறக்குது கண்ணா....
    அது சூரியனைத் தொட்டு விடத்துடிக்குது கண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... யாருக்கும் தெரியாத பாடல்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது / தெரிகிறதே...

      "ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே.." என்று காதலுக்கு மரியாதை படத்தில் ஒரு பாட்டு உண்டு.

      நீக்கு
    2. அதிரா இந்தப் பாடலும் கேட்டதில்லை. நெட்டில் இருக்கா கேட்கணும் ஸ்ரீராம் மேலே சொன்ன பாடல்களும் கேட்கணும்

      ஸ்ரீராம் காதலுக்கு மரியாதைப் பாடல் கேட்டுள்ளேன்.

      மிக்க நன்றி

      நீக்கு
    3. பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
      வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் // ஜீன்ஸ் படப் பாடலில் வரும் வரிகள். இங்கு பாடல்கள் பற்றிச் சொன்னதும் இது நினைவுக்கு வந்தது. இதுவும்

      நீக்கு
    4. உண்மையில் ஸ்ரீராம் இப்படி இன்னும் பல இனிய பாடல்கள் அங்கிருந்து எடுத்துவரும் சிடியில் இருக்கு, காரில் ரிப்பீட்டில் போட்டுக் கேட்டுவிட்டு ஆசையில் ஓடிவந்து யூ ரியூப்பில் தேடினால் கிடைக்குதில்லை... அதை எல்லாம் ரெக்கோர்ட் பண்ணி எல்லோருக்கும் போட்டுக்கேட்க வைக்க ஆசை...
      ஜீன்ஸ் , காதலுக்கு மரியாதை படப்பாடல் கேட்டதுண்டு...

      நீக்கு
    5. இங்கின ஒரு கொமெண்ட் போட்டனே ... வரல்லியோ?

      நீக்கு
  23. புகைப்படங்கள் இயல்பாக உள்ளன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  24. துரத்தி துரத்தி எடுத்த படங்களா பொறுமை மிக வேண்டும்

    பதிலளிநீக்கு
  25. கருப்பு, மஞ்சள், சிவப்பு, வயலட், வெள்ளைன்னு அனைத்து எத்தனை அழகான பட்டாம்பூச்சிகளை பார்த்திருப்போம். பட்டாம்பூச்சிகளை பிடிச்சு அதன் விரலில் ஒட்டிக்க, அதை முகத்தில் பூசிக்கிட்டு திரிஞ்ச நாட்கள் இனி வருமா?! நான் இருப்பது கிராமத்தில்.... அதும் வயக்காட்டுக்கு மிக அருகில்... அப்பக்கூட பட்டாம்பூச்சிகளை பார்க்குறது மிக அபூர்வம். தும்பி மட்டும் மழைக்காலங்களில் பார்க்க நேரிடும்....

    பதிலளிநீக்கு
  26. வண்ணாத்திப் பூச்சிகள் - சிறு பிள்ளையில் இப்படித்தான் சொல்வோம். படங்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றுகிறது. நாம் கொடுத்து வைத்தவர்கள் -இல்லை இல்லை - கெடுத்து வைத்தவர்கள்; ஆம் அடுத்தத் தலைமுறையினர் பட்டாம் பூச்சிகளைப் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
  27. மிகவும் அழகான புகைப்படங்கள் ! தொடர்ந்தும் பகிர்வு செய்யுங்க!

    பதிலளிநீக்கு
  28. எல்லா இடங்களிலும் செடிகளும், பூக்களும், மரங்களும் வளர்க்கப்பட்டால் வண்ணத்துப் பூச்சிகள் மகிழ்வாகப் பறந்து நம்மையும் மகிழ்விக்கும்.//

    அழகாய் சொன்னீர்கள்.
    அழகான வண்ணத்து பூச்சியின் படங்கள் கண்ணுக்கு விருந்து.

    பதிலளிநீக்கு
  29. வில்லம்போடு புறப்படும் வீரனைப்போலே, காமெராவும் கையுமாகப் புறப்பட்டுவிட்டீர்கள் காலை நேரத்திலே. கண்ணெல்லாம் நிறைந்தன உங்கள் வண்ணத்துப்பூச்சிகள்.

    திரும்பத் திரும்பப் பார்க்கையில் தோன்றியது:

    வண்ணத்தைச் சூடிக்கொண்டே
    எண்ணத்தைச் சீண்டுகிறாய்
    பூச்சியென்று சொல்வதா-உன்னைப்
    புலவன் என்றழைப்பதா ?

    பதிலளிநீக்கு
  30. இன்றைய காலைக்கு இனிமையான வண்ணம் சேர்த்த வண்ணத்துப் பூச்சிகளுக்கும் உங்களுக்கும் மிக நன்றி மா.சிலகாலமே வாழ்ந்து பல நன்மைகள் செய்யும் வண்ணத்துப் பூச்சிகளுக்கு வணக்கம்.

    பதிலளிநீக்கு
  31. புகைப்படங்கள் மிக மிக அழகு! துபாயில் 35000 பட்டாம்பூச்சி வகைகள் கொண்ட அழகிய பார்க் ஒன்று உள்ளது. இப்படித்தான் மிக அழகாக இருக்கும்!

    பதிலளிநீக்கு