Indian spot-billed duck லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Indian spot-billed duck லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஜூன், 2023

சில்லு சில்லாய் - 11 - (Reed Bed) இயற்கை நாணல் படுகை/சம்பு (Narrow Leaf Cattail) – புள்ளி மூக்கு வாத்து (Indian Spot Billed Duck) - ஹோக்கர்கார் (Hokersar) சதுப்பு நிலம்

சில்லு – 1 (Reed Bed) நாணல் படுகை/சம்பு (Narrow Leaf Cattail-Typha) – புள்ளி மூக்கு வாத்து (Indian Spot-Billed Duck)

நாணல் என்பது பேரினங்களைச் சேர்ந்த தாவரங்களுக்கான பொதுப்பெயர். கோரை என்றும் சொல்லப்படுவதுண்டு. நாணல் படுகைகள் என்பது நாணல்களால் நிறைந்து இருக்கும் நீர்நிலைகள் அல்லது சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி. அவை ஆரோக்கியமான நதி மற்றும் நீர் நிலைகளின் அடையாளம். மீன்கள், முதுகெலும்பில்லாத விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்வதற்குச் சிறந்த வாழ்விடத்தை வழங்குகின்றன.