தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
வியாழன், 24 ஏப்ரல், 2025
ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 7
திங்கள், 21 ஏப்ரல், 2025
ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 6
ரங்கனதிட்டு - இப்பதிவில் பறவைகளைப் பார்வையிடும் கோபுரம்
படகிலிருந்து இறங்கியதும் நேரே இருக்கும் கடையிலிருந்து (சென்ற பதிவில் போட்டிருந்தேனே அக்கடைதான்) வலப்புறம் இதோ பாருங்க ஒரு தகவல் கைகாட்டிப் பலகை. தொங்கு பாலம், கண்ணாடி பாலத்துக்கான வழி என்று காட்டுகிறது.
வெள்ளி, 18 ஏப்ரல், 2025
ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 5
படகில் சென்ற போது எடுத்த சில படங்களை முந்தைய பதிவில்
பகிர்ந்திருந்தேன் இல்லையா? இப்ப மிச்சம் மீதியையும் பகிரணுமே! இல்லைனா எனக்குத்
தூக்கம் வராதே! பறவைகள் எல்லாம் தூக்கத்துல வந்து சண்டை போடும்! திட்டும். மிரட்டும். அந்த
மரத்துல இருந்தவங்களை காட்டின நீ, இந்த மரத்துல நாங்க இருக்கோம் காட்ட மாட்டியா
அப்ப எதுக்குப் படம் புடிச்சேன்னு....
இந்தப் பதிவில் அதிகம் வாசிக்க இருக்காது. பார்ப்பது மட்டும்தான்.
Red Wattled Lapwing Bird - செம்மூக்கு ஆட்காட்டி பறவை
இறங்கியதும் படகுத் துறைக்கு நேர் எதிரே இந்தக் கடை, இங்கு டீ காஃபி, ஏதோ கொறிக்கவும் கிடைக்கிறது. இடப்புறம் கோக்கோகோலா. கடைய சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு டீ காஃபி, கோக் ஏதாச்சும் குடிக்கணும்னா குடித்துவிட்டு...அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது அடுத்த பதிவில்.
------கீதா
சனி, 12 ஏப்ரல், 2025
ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 3
படங்கள் போட்டு விவரங்கள் எழுதினால், இப்படி எத்தனை பகுதிகள் போகும் என்று!! ஹாஹாஹா! சத்தியமாக எனக்குத் தெரியலைங்க பதிவு எப்படி எழுதுவது என்று! நம் கமலாக்கா, கோமதிக்கா ஆசையோடு படங்களைப் பார்ப்பார்களே என்றும், இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படியேனும் பார்த்துக் கொள்ளலாமே என்றும் எனக்குத் தெரிந்ததை, நான் பார்த்தவற்றை எல்லாம் பகிர வேண்டும் என்ற ஆவலில், ஆர்வத்தில், பதிவுகள் கொஞ்சம் நிறைய பகுதிகளாகப் பிரித்துப் போடும்படி ஆகிவிடுகிறது. அதனால் பறவைகள் பகுதி வர தாமதமாகிறது.
வியாழன், 3 ஏப்ரல், 2025
ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 2
பாண்டவபுரா ரயில் நிலையம். வலப்புறம் தெரியும் 2 வது நடைமேடையில் இறங்கி நடைபாதை மேல் பாலம் வழியாக 1 ஆம் நடைமேடையில் இறங்கும் முன் இந்த வளைவு தெரிந்ததும், அழகாக இருக்கா, ஒரு க்ளிக்
ஞாயிறு, 30 மார்ச், 2025
ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 1
பெங்களூரிலிருந்து 3, 4 மணி நேரப் பயணத்தில் - குறிப்பாக சாம்ராஜ்நகர், மாண்டியா மாவட்டங்களில் - சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. (அருகில் மைசூர், மடிக்கேரி). கொக்கரேபெல்லூர் சென்றுவந்த உடனேயே அடுத்த வார ஞாயிறில் அதாவது மார்ச் தொடத்திலேயே ரங்கனதிட்டு சென்று விட்டு வரவேண்டும் - பறவைகள் சீசன் என்பதால் - என்ற திட்டம் இருந்தது. ஆனால், சென்னைக்குச் செல்வது அந்தச் சனிக்கிழமையா அல்லது அடுத்த சனிக்கிழமையா என்ற குழப்பம் இருந்தது.