உங்களை எல்லாம் ரயில் நிலையத்தில் காத்திருக்கச் சொன்னேன் இல்லையா...இப்ப வாங்க...ஹாங் அதுக்கு முன்ன....முக்கியமானது...
நாம போன ஆட்டோ வலப்புறம் கொஞ்சமா தெரியுது...ஓட்டுநர்
சென்டிமென்ட் நபர் போல...நாம முதல் சவாரி ...ஃபோட்டோ 'பேடா'ன்னாரு. நான் உங்க வண்டிய
எடுக்கலைங்கன்னேன்.
ரங்கனதிட்டு செல்ல ரூ 350 என்றதும், (15/16 கிமீ. கொண்டு விட்டு அவர் திரும்ப வரும் போதுக்கான சார்ஜ் கேட்கலையே என்று மீண்டும் ரேட் கேட்டதும் 350 ரூ என்று உறுதிப்படுத்தினார். ஏறியாச்சு.
ஊரின் சாலை, ஆரம்பத்தில் கொஞ்சம் மேடு பள்ளம். ஆட்டோ ஆடியதில் பல படங்கள் சரியாக வரவில்லை. நம்ம கொக்கரேபெல்லூர் ஆட்டோ ஓட்டுநர் நினைவுக்கு வந்தார் மெதுவாக ஓட்டிச் சென்றாரே!
நான் வழக்கம் போல ஓட்டுநருடன் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன். ஓட்டுநரின் தமிழும் கன்னடம் கலந்த ஒன்று. அவருக்குப் பேசுவதில் சில சிரமங்கள் இருந்ததும் தெரிந்தது. ஆட்டோ சத்தம் கொடுமை. சத்தத்தில் எனக்குக் கேட்கவில்லை சரியாக. அவர் என்ன சொல்கிறார் என்று நம்ம வீட்டவரிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டேன். ஆட்டோ ஓட்டுநர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவராம். தாத்தா காலத்திலிருந்து இங்கு குடிபெயர்ந்து இருக்கின்றனராம். கூடவே, இங்கு நிறைய பார்ப்பதற்கு இருக்கின்றன. எல்லா இடங்களும் போய்வந்துவிடலாமா? என்றார். நாங்கள், ரங்கனதிட்டுவும், ஸ்ரீரங்கப்பட்டினம் கோவிலும் மட்டும்தான் என்றோம். அவர் பாண்டவபுரா பெயர்க்காரணத்தைச் சொல்லத் தொடங்கினார். 'தெரியும் என்றாலும் நீங்களும் சொல்லுங்க' என்றேன்.
பாண்டவபுரா என்றால் "பாண்டவர்களின் நகரம்". உங்கள் எல்லோருக்கும் தெரிந்த மஹாபாரதக் கதைதான். அவர் ஆரம்பித்தது கொந்தம்மா என்று. ஆட்டோ சத்தத்தில் எனக்குக் கேட்கவும் இல்லை புரியவும் இல்லை. அவரது மொழியின் சங்கடமும் சேர்ந்து கொண்டது, நம் வீட்டவர் அவர் சொன்னதை என்னிடம் சொன்னார், அப்பதான் புரிந்தது குந்தியைச் சொல்கிறார் என்று. கன்னடத்தில் குந்தி - கொந்தம்மா. தர்மர் - தர்மராயா. பீமன் - பீமண்ணா.
பாண்டவர்கள், அரக்குமாளிகைத்தீயில் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டு யாருக்கும் தெரியாமல் அஞ்ஞாதவாசம் செய்தாங்க இல்லையா? அப்ப அவங்க இங்கேயும் வந்து கொஞ்ச காலம் ஏகசக்கரபுரா ன்ற கிராமத்துல இருந்தார்களாம். அப்ப இங்குதான் பகாசுரனை பீமன் கொல்லும் சம்பவம் நடந்ததாகவும் அந்த அடையாளமாகத்தான் ஊருக்குச் சற்று வெளியே இருக்கும் மலை குந்தி மலை - குந்தி பெட்டா என்று சொல்ல்லப்படுகிறது. பீமன் பகாசுரனைக் கொன்றதும், தர்மரை கிராமத்தின் தலைவனாக இருக்கச் சொல்கிறார்கள் மக்கள். தர்மர், இங்கு வெகுகாலம் எல்லாம் எங்களால் தங்க முடியாது, மூடி சூட்டிக் கொள்ளவும் முடியாது என்பதால், “அரக்குமாளிகைத் தீயில் இறந்து போன பாண்டவர்களின் நினைவாக இந்த ஊரை பாண்டவபுரா என்று அழையுங்கள்” என்று சொல்லிட பாண்டவபுரா ஆனது. ஆட்டோ ஓட்டுநரின் குழந்தைகள் இதை அவருக்குச் சொன்னார்களாம் இக்கதையை. குந்தியின் பெயரில் அடையாளமாகச் சொல்லப்படும் குந்தி பெட்டாவில் மலையேற்றம் செய்யலாம். இதைப் பற்றியும் நான் இணையத்தில் பார்த்து அறிந்திருந்தேன். அங்கு சென்று பார்த்தால்தான் தெரியும் ஏதேனும் தடையங்கள் இருக்கின்றனவா என்று. இது புராணக் கதை.
வரலாற்றின் படி இந்த ஊர் “ஃப்ரெஞ்சு ராக்”. ஹைதர் அலி, திப்பு சுல்தான் இருவரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் புரிந்ததோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இப்பகுதியைத்தான் பிரெஞ்சு இராணுவம் தங்களின் முகாமாகப் பயன்படுத்தியது என்றும் அதனால் அங்குள்ள அந்தப் பாறை மலை "பிரெஞ்சு பாறை" என்றும் சொல்லப்படுகிறதாம். “அதுக்கும் போலாமா” என்றார். இப்போதில்லை என்று சொல்லிவிட்டோம். இந்த விஷயங்கள் கொஞ்சம் தெரியும். வேற ஏதாவது புதுசா இருக்கா? "இருங்க காட்டறேன்" என்றார்.
நான் பாட்டுக்குக் கதை சொல்லிக் கொண்டே வருகிறேன் படங்கள் காட்ட வேண்டாமா? இதோ…
வழி முழுவதும் காவிரியின் அரவணைப்பில் செழிக்கும் வயல்களும் தென்னைகளும் கண்கொள்ளாக் காட்சி. (மாண்டியா, சாம்ராஜ்நகர் பகுதிகள் முழுவதுமே காவிரியின் கைகளில் தவழ்வன.) பாண்டவபுராவிலிருந்து 10/11 கிமீட்டரில் ஸ்ரீரங்கப்பட்டினம். (கோவிலல்ல. அதற்கு ஊருக்குள் உள்ளே செல்ல வேண்டும்) நெடுஞ்சாலை பெயர்ப்பலகை வரும் முன் காவிரியைக் கண்டதும் நடந்தாய் வாழி காவேரி என்று மனதுள் ஓடியது. அடுத்து, கூடவே ஒரு ரஜனி பாட்டு உண்டே, காவிரி நதியும் கைக்குத்தல் அரிசியும்னு அந்தப் பாட்டும் நினைவுக்கு வந்தது.
நெடுஞ்சாலையிலிருந்து ரங்கனத்திட்டு செல்ல ஒரு சந்திப்பில் வலப்பக்கம் திரும்பும் பக்கம் (திரும்பும் பக்கத்தில் மீண்டும் காவிரியின் ஒரு கிளை... அப்படங்கள் அப்புறம் வரும் தனியாக) “இங்க பாருங்க, நீங்க புதுசா ஏதாச்சும் சொல்லுங்கன்னு கேட்டீங்க, இந்த இடம் பேரு Paschimavahini பஸ்சிமவாஹினி….என்று சொல்லி சில தகவல்கள் சொன்னார். முடிஞ்சா இந்தப் பெயரை நினைவு வைச்சுக்கோங்க. இந்த இடத்தைப் பற்றித் தனியாகப் பதிவு வரும். ஓட்டுநர் சொன்னது அந்த இடத்தில் ஆட்டோ சத்தத்தில் சரியாகக் காதில் விழவில்லை. பரிச்சயம் இல்லாத குரல் வேறு. நான் மீண்டும் கேட்பதற்குள் அந்த இடத்தைக் கடந்திருந்தார். அப்பகுதி வலப்பக்கம் இருந்ததால் ஆட்டோ உள்ளிலிருந்து வெளியில் சரியாகப் பார்க்கவும் முடியவில்லை. சரி வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று நம்மவீட்டவரும் சொல்லிட நேரே ரங்கனத்திட்டு.
மீண்டும் அச்சாலையிலிருந்து வலப்புறம் பறவைகள் சரணாலயத்திற்கான பெயருடன் வளைவு இருக்கும் சாலைக்குள் செல்லும் போது காவிரியின் குடும்பத்தில் ஒன்று பெண்ணோ பேத்தியோ இடப்பக்கம் ஓடிட அதைப் பார்த்துக் கொண்டே கொஞ்சம் காணொளியும் எடுத்துக் கொண்டே சென்றேன். அப்படியே அது இடப்பக்கம் வளைந்திட, நாம் நேரே பறவைகள் சரணாலயம் செல்லும் சாலைக்குள் போகிறோம். இரு பக்கமும் மரங்களும், வயல்களும் தான். இதோ காணொளி. கடைசியில் கொஞ்சமாக செக்போஸ்ட் தெரியும்.
சரணாலயம் நுழைவு வாயிலுக்கு முன் செக்போஸ்ட். அங்கிருந்து நுழைவு வாயில் ஒரு 3-5 நிமிட நடைதான். நம் வண்டியை உள்ளே அனுமதிக்க ரூ 20. ஒவ்வொரு வண்டிக்கும் ஏற்றார் போல் கட்டணம். வண்டி விவரங்களைக் குறித்துக் கொண்டு அனுப்புகிறார் காவலர்.
இங்கு என்னவெல்லாம் பறவைகளைப் பார்க்கலாம்
என்ற பட்டியல். ஒவ்வொரு பறவையின் சீசன் பொருத்து அங்கு பார்க்க முடியும். இவற்றில்
சிலவற்றை பெங்களூர் ஏரிகளில் பார்க்கலாம். அவற்றில் நான் ஹெரான் வகைகள் பற்றி படங்களுடன்
பதிவு போட்டிருக்கிறேன். மற்ற பறவைகள் பற்றி பதிவுகள் வரும் மெ து வா க.
உள்ளே கொண்டு விட்டதும் நம் ஆட்டோ ஓட்டுநர், நாங்கள் பார்த்து முடித்ததும் அவருடைய அலைபேசி எண்ணை
அழைத்தால் தான் வருவதாகச் சொல்லி அலைபேசி எண்ணைக்
கொடுத்து, நம் அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார். பாண்டவபுராவிலிருந்து ரங்கனதிட்டு வருவதற்கு 20-25 நிமிடங்கள் ஆகும் என்பதால் வெளியில்
வருவதற்கு 20 நிமிடங்கள் முன்பே தன்னை அழைக்குமாறு சொன்னார். சரி என்று அவருக்குப்
பேசிய தொகையைக் கொடுத்துவிட்டு நாங்கள் உள்ளே சென்றோம். நீங்களும் வாருங்கள்
நுழைவுச் சீட்டு எடுக்க வேண்டுமே!
அடுத்த பகுதியில் ரங்கனதிட்டு உள்ளேயும், பறவைகளையும் பார்ப்போம். அப்பகுதி மட்டுமே 2 பதிவாக வரலாம்.
தொடர்கிறேன்...
-----கீதா
படங்கள் அழகாக உள்ளன. அதிலும் இரண்டு தென்னைமரங்கள் மிக அழகு
பதிலளிநீக்குநன்றி நெல்லை,
நீக்குநிறைய சரியா வரலை ஆட்டோ ஆட்டத்தில்
கீதா
பாண்டவபுராவிலிருந்து இப்போ ரங்கனதிட்டு நுழைவாயில் வரை வந்திருக்கீங்க.
பதிலளிநீக்குபறவைகள் போன்றவைகளுக்கு எவ்வளவு வாரம் காத்திருக்கணுமோ
ஹாஹாஹா.....அடுத்த பதிவுல ஒன்னு ரெண்டு காட்டறேன். மீதி அடுத்ததுல அதுக்கடுத்ததுல வந்திடும். ..காணொளிகள் தான் நிறைய எடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். ஸோ தொகுக்கணும், நெல்லை.
நீக்குகீதா
போக வர 700 ரூபாயா? ரொம்ப அதிகமில்லை.
பதிலளிநீக்குஇருவரும் இந்த மாதிரி இடங்களுக்குச் செல்ல ரொம்பவே ஆர்வமாக இருக்கீங்க.
காலை உணவு என்னன்னு போன பதிவுல சொல்லியிருந்தீங்களோ? படத்தைப் பார்த்தால் அது பிஸிபெளபாத்தாக இருக்குமா இல்லை காய்கள் கலந்த சாம்பார் சாதமா என்று சந்தேகம் வருது. தொட்டுக்க ஒண்ணும் கொண்டுவரலை போலிருக்கு
நெல்லை, நீங்க சரியா கவனிக்கலை பதிவை.....போகும் போது 350 வாங்கிக் கொண்டார். அவர் திரும்ப போகும் போது ரங்கனதிட்டுல கண்டிப்பா சவாரி கிடைச்சிருக்காது. நோ வே. இடையில் வரும் ஒரு ஜன்ஷனில் தான் கிடைச்ச கிடைச்சிருக்கும் இல்லைனா ஸ்ரீரங்கப்பட்டினா நெடுஞ்சாலைல எங்க கிடைக்கும்?
நீக்கு350 ரூ .இதுவரை மட்டுமே நிறுத்தியிருக்கிறேன். மத்தது அப்புறம் முடிவுலதானே வரும்...என்ன ஆச்சுன்னு
கீதா
350 ரூ என்பதைப் பார்த்தேன். அதனால் இரு வழிக்கு 700 ரூ இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். ஒருவேளை காத்திருந்து அழைத்துச் செல்வதற்கு கூட 100 ரூ வாங்கியிருப்பாரோ என்றும் நினைத்தேன்
நீக்குஅதைச் சொல்றேன். ஆக்சுவலா இரு வழிக்கு நீங்க சொல்ற ரேட் தான். ஆனா அவர் காத்திருக்கலை...போய்விட்டார். ஸோ அங்கதான் நாங்க கொஞ்சம் ஏமாந்தோம்னும் சொல்லலாம் இல்லைன்னும் சொல்லலாம்......நல்லகாலம் பெரிய அமௌன்ட் இல்ல....சொல்றேன் பதிவுல...என்னாச்சுன்னு
நீக்குகீதா
நீங்க ஒரு டிஸிப்பிளினோட ஒவ்வொரு பயணத்தையும் வைத்துக்கொள்வது ஆச்சர்யம் அளிக்கிறது.
பதிலளிநீக்குஉணவு தயாரிப்பு, பேருந்திலிருந்து இறங்கியவுடன் காலை உணவு, தண்ணீர்... பிறகு மதிய உணவு இடங்களைப் பார்த்த பிறகு என்று ஒரு ஒழுங்குடன் அமைத்துக்கொள்கிறீர்கள்.
கன்னடமோ முழுசா தெரியாது. அப்புறம் எதற்கு ஆட்டோக்காரருடன் சம்சாரிப்பது?
நன்றி நெல்லை...ஆனா பெரிசா டிசிப்பிளின் - அதெல்லாம் அப்படி எல்லாம் இல்லை நெல்லை. அது மாத்திரை சாப்பிடுவதனால் கரெக்ட்டா அதுவும் சர்க்கரை நமக்கு ஸோ கவனமாக. அவ்வளவுதான். ஆனா கரெக்ட்டா நேரம் நான் திட்டமிடும் போது போட்டுக் கொண்டுவிடுவேன். கொஞ்சம் முன்னப் பின்ன ஆகலாம்.
நீக்குகன்னடம் தெரியலைனா என்ன? ஓரளவு புரியும். இந்த ஆட்டோக்காரர் தமிழ்னு சொல்லியிருக்கேனே....ஒழுங்கா வாசிக்கறதே இல்ல...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....ஆட்டோ சத்தத்துல தான் எனக்கு மூன்றாவது காதாச்சே பிரச்சனைன்னு சொல்லியிருக்கிறேன்.
நன்றி நெல்லை.
கீதா
நன்றி நெல்லை...ஆனா பெரிசா டிசிப்பிளின் - அதெல்லாம் அப்படி எல்லாம் இல்லை நெல்லை. அது மாத்திரை சாப்பிடுவதனால் கரெக்ட்டா அதுவும் சர்க்கரை நமக்கு ஸோ கவனமாக. அவ்வளவுதான். ஆனா கரெக்ட்டா நேரம் நான் திட்டமிடும் போது போட்டுக் கொண்டுவிடுவேன். கொஞ்சம் முன்னப் பின்ன ஆகலாம்.
நீக்குகன்னடம் தெரியலைனா என்ன? ஓரளவு புரியும். இந்த ஆட்டோக்காரர் தமிழ்னு சொல்லியிருக்கேனே....ஒழுங்கா வாசிக்கறதே இல்ல...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....ஆட்டோ சத்தத்துல தான் எனக்கு மூன்றாவது காதாச்சே பிரச்சனைன்னு சொல்லியிருக்கிறேன்.
நன்றி நெல்லை.
கீதா
செல்லும் இடங்களைப் பொருத்து உணவு, நெல்லை. ஒரு சில இடங்களில் நல்ல உணவு கிடைக்குமென்றால், அதுக்கு ஏற்றாற் போலவும் ப்ளான் செய்வதுண்டு. ஆனால் பொதுவாக நமக்குச் சாப்பிடுவதும் குறைவு, பிரயாணங்களில் வெளியில் சாப்பிட்டு வயிறு பிரச்சனை செய்தால்? அதனால கையில்
நீக்குவைத்துக் கொள்வது நல்லதாச்சேன்னுதான்.
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய ரங்கன்திட்டா பறவைகள் சரணாலயம் பதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல மிக அழகாக இருக்கிறது. இயற்கை வனப்புடன் பச்சைப் பசேன்ற படங்கள் மனதை கவர்கின்றன.
முதல் படம் வளைந்தோடும் தண்டவாளங்கள் சூப்பர். காவிரி அன்னை அழகாக இருக்கிறார். யானை படம் அருமை.அழகு. . (ஒருவேளை அவர்தான் அதற்கு யானைப்பாகனோ..? தன் யானையை விட மனமின்றி, நீங்கே படம் எடுப்பதற்குள் வந்து அதன் அருகில் சுவாதீனமாக வந்தமர்ந்து விட்டாரோ..?
காலை சப்பாத்தி வெண்டை மசாலாவுடன் நன்றாக உள்ளது. ஆனால், ஒரு சப்பாத்தியை கூட என் கண்ணில் காட்டவில்லை நீங்கள். ஹா ஹா ஹா வெண்டை மசாலாவை மட்டும் இன்றைய எங்கள் வீட்டின் தக்காளி சாதத்துடன் தொட்டுக் கொண்டேன்.
பாண்டவபுரா வரலாற்று கதைகள் நன்றாக உள்ளது. ஆட்டோவில் போகும் போது எடுத்த படங்கள் அனைத்தும் இயற்கை வளத்துடன் அழகாக உள்ளது. சரணாலயத்திற்குள்ளே செல்வதற்குரிய விபரங்கள் பற்றி தெரிந்து கொண்டேன். மேலும் அங்குள்ள பறவைகளை காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா, இந்தச் சுட்டியை உங்களுக்கு இப்ப தரேன். மீதி கருத்து, நடைப்பயிற்சி முடிந்து வந்து தருகிறேன்.
நீக்குhttps://engalblog.blogspot.com/2019/06/blog-post_24.html
இந்தச் சுட்டில போய் பாருங்க அக்கா. அதுல ஆம்சூர் பொடி இல்லைன்னு நினைக்கிறேன். அதுவும் சேர்த்துக் கொள்ளலாம். சப்பாத்தி சாதம் எல்லாத்துக்கும் நல்லாருக்கும்.
படம் எடுக்க மறந்து போய்.....ஆஹா நம்ம அக்காஸ், ஸ்ரீராம், நெல்லை எல்லாம் திங்க படம் போடவே இல்லையேன்னு கேப்பாங்களேன்னு அவசர அவசரமா வெண்டைக்காய் தீரும் முன் டக்குனு படம் எடுத்தேன்! ஹிஹிஹி படத்துல தெரியும் பாருங்க குறைந்திருப்பது....
நன்றி கமலாக்கா
கீதா
யானை படம் அருமை.அழகு. . (ஒருவேளை அவர்தான் அதற்கு யானைப்பாகனோ..? தன் யானையை விட மனமின்றி, நீங்கே படம் எடுப்பதற்குள் வந்து அதன் அருகில் சுவாதீனமாக வந்தமர்ந்து விட்டாரோ..?//
நீக்குஹாஹாஹா பாவமா இருக்கு அவரைப் பார்த்தா அவர் யானைய மேச்சு கட்டமுடியுமா!!
நன்றி கமலாக்கா
கீதா
இந்தப் பெயருக்கு (ரங்கணதிட்டு) என்ன அர்த்தம்னு சொல்லியிருக்கலாம். வாசிச்சா, எதுக்கு அவரைத் திட்டச்சொல்றாங்கன்னு நினைக்கத் தோணுது ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஹாஹஹஹஹ நெல்லை உண்மையிலேயே இதை பதிவுல சொல்லலாம்னு நினைச்சு எழுதி அப்புறம் கட் பண்ணிட்டேன்....நான் சொல்லியிருந்தது....ரங்கன எதுக்குத் திட்டணும் அவர் பாட்டுக்குத் தேமேன்னு சயனத்துல இருக்காரு..பாவம் விட்டிடலாம் அவரைன்னு....சும்மா இப்படி ப்ராக்கெட்.ல போட்டிருந்தேன் அப்புறம் எடுத்திட்டேன்...
நீக்குகீதா
தெளிந்த க்ளியர் வானமாய் இருக்கிறது. எனக்கும் எப்போதுமே இந்த தண்டவாளங்கள், நேராகவும் வளைந்தும் செல்லும் காட்சிகள் ரொம்பப் பிடிக்கும். மனதில் என்னென்னவோ ஆசைகளும் கற்பனைகளும் தோன்றும்!
பதிலளிநீக்குஆமா ஸ்ரீராம். எனக்கும் ரொம்பப் பிடிக்கும். சாலைகளும் கூட. அது அடுத்த ஒரு பயணப் பதிவில் வரும். படங்கள் சரியா எடுக்க முடியலை ஆனாலும் வரும் படங்கள். எனக்கும் கற்பனைகள் ஆசைகள் வந்துச்சே......
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
யானை படம் --- அந்த மனிதரை நாங்கள் எல்லோரும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது! அவரே அறியாமல் சட்டென வந்து அமர்ந்திருந்திருக்கிறார்!
பதிலளிநீக்குஹாஹாஹா...ஆனா அது கூட நல்லாருக்குன்னு எனக்குத் தோன்றியது நல்ல ஷாட் என்று...அதுவும் இயல்பாக....படத்தோடு இருப்பது போன்று டக்குனு தோன்றியது...அட பரவாலையே நல்ல ஷாட் என்று சொல்லிக் கொண்டேன்.! இப்படி எதிர்பாரா ஷாட்ஸ் கிடைக்கும் அப்பப்ப...
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
வெண்டை மசாலாவா? பிந்தி மசாலா! சதையே இல்லாமல் தோல் மட்டும் கண்ணில் படுகிறது! வெண்டையைப் பொறுத்தவரை எனக்கு அரைவதக்களாய் வதக்கி லேசாக காரமும் உப்பும் போட்டு சாப்பிட மட்டும்தான் பிடிக்கும். அப்புறம் சாம்பாரில் போட்டு சாப்பிடப் பிடிக்கும்.
பதிலளிநீக்குஹாஹாஹா வெண்டைதானே பிந்தி ஹிந்தியில். இதற்கு வெண்டையை விரலின் பாதி அளவு நீளம் கட் செய்து அதை இரண்டாகவோ நான்காகவோ நெடுக்கில் நறுக்க வேண்டும். நான் இரண்டாகத்தான் நெடுக்கில் கீறினேன். பச்சையாக இருந்தது. சூரிய ஒளி நேரடியாக அதில் பட்டதால் ப்ரைட்னெஸ் கூடித் தெரியுது. அதிகம் வதக்க வேண்டாம் நான் வதக்குவதும் இல்லை. காய் தெரியணும்னு மசாலாவை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ஃபோட்டோ எடுத்தேன். உங்க விருப்பம் கருத்துகளில் பார்த்திருக்கேனே நினைவு இருக்கு.
நீக்குநீங்க கூட உங்க பழைய பதிவு ஒன்றில் வெண்டை மசாலா கிரேவியாகச் செய்திருந்த ஒன்றைப் பார்த்தேனே!!!
நன்றி ஸ்ரீராம்
கீதா
காவிரித்தாயின் முகத்தில் களையில்லை . ஸ்டேஷனுக்கு வெளியே ஜனநடமாட்டமில்லை!
பதிலளிநீக்குயெஸ்....காவிரித்தாயின் முகத்தில் களையில்லை அதான் அப்படி ஒரு கருத்தை அங்கு எழுதினேன்....ஓ தட்டினேன். ஸ்டேஷனுக்கு வெளியே கூட்டம் சென்றபின் எடுத்தேன் ஸ்ரீராம். ஓரளவு நல்ல கூட்டம் இருந்தது. அது போல ப்ளாட்ஃபார்மிலும் மக்கள் இருந்தாங்க. பக்கத்து ஊர்களில் இருந்து வந்து ப்ளாட்ஃபார்ம்லயே குடும்பமே நடத்தறாங்க....இதன் கடைசிப் பதிவில் வரும் அந்தப் படங்கள் ஒன்றிரண்டு.
நீக்குகீதா
திருவண்ணாமலைக்காரர் என்றாலும் தமிழ் மறந்துகொண்டே வருகிறது போல அவருக்கு!
பதிலளிநீக்குஎனக்கு நினைவுக்கு வந்த பாடல் சம்பந்தமில்லாதது... காவிரி பாயும் கன்னித்தமிழ் நாடு... ஆனால் அது கன்னட நாடு!
ஆமாம், ஸ்ரீராம் அவர் பேசிய தமிழ் கொஞ்சம் கன்னடம் கலந்த ஒன்று அதைவிட அவருக்குச் சின்ன பிரச்சனை இருப்பது தெரிந்தது....நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்....சரியாகப் பேச வரவில்லை என்பதும்.
நீக்குகாவிரி பாயும் கன்னித்தமிழ் நாடு... ஆனால் அது கன்னட நாடு!// ஆமாம் கன்னட நாடு. ஆனா பாருங்க எந்த நாடா இருந்தாலும் காவிரிக் கரையில் குப்பைக்கூளங்கள்தான்.
என்னைக் கேட்டால் இந்த புண்ணியம், முன்னோருக்குச் செய்வது அது இதுன்னு சொல்லி நதியை அழுக்குப் பண்ணாமல் இருக்க வேண்டும் என்று. நான் நொந்து போய்விட்டேன் காவிரியை ஆங்காங்கே பார்த்தப்ப...அது தனிப் பதிவாக ஒன்று வரும்...
கீதா
ஓடைபோலவே ஒரு
பதிலளிநீக்குசிறு நீர்நிலையும்
கூடவே வருகிறது
காணொளியில்!
உங்க வரிகள் நல்லாருக்கு, ஸ்ரீராம்
நீக்குஆமாம் அதைத்தான் சொல்லிருக்கேன் காவிரியின் பெண்ணோ பேத்தியோன்னு. காவிரிக்குடும்பம் தான் நிச்சயமாய். இப்பகுதியில் காவிரி ஓட்டத்தில் ஆங்காங்கே பிளந்து நிறைய தீவுகள் வடிவமைத்திருக்கிறாள். திட்டுகளுமாக. அபப்டிக் கிளைகள் நிறைய...
நன்றி ஸ்ரீராம்
கீதா
ஆட்டோக்காரருக்கு 350 கொடுத்து விட்டீர்களா? போகவரதானே 350 என்று சொன்னதாக நினைத்துக் கொண்டேன்!
பதிலளிநீக்குஆமாம் கொடுத்துவிட்டோம். கொண்டுவிடறேன்னு சொன்னாரு...,,,ஆனா ஸ்ரீராம் போக வர இது சரிப்படாது 350. அவருக்கும்..கட்டுப்படியாகாது. கிட்டத்தட்ட 15/16 ம்கிமீ.....அங்க சவாரி கிடைப்பதும் சிரமம். உள்ளூர் இல்லையா? அதுவும் சின்ன ஊர்கள், எல்லாம் பஸ்ல போற கூட்டம். இப்படி வெளியூர்லருந்து வந்தாதான் அவங்களுக்கு வருமானம் கொஞ்சம் கூடுதல் கிடைக்கும்.
நீக்குஅவர் வேற ஒரு டே ப்ளான் நாங்க போட்டிருப்போம் எல்லா இடமும் பார்க்கலாம்னு நினைச்சிருப்பார் போல...ரங்கனதிட்டுவும் கோவிலும் மட்டும்தான்னதும் அவர் மனச மாத்திக்கிட்டார் போல. அவரே காத்திருந்து கோவிலுக்கும் போய் மீண்டும் ஸ்டேஷன்ல விட்டிருந்தா அவருக்கும் எங்களுக்கும் வின் வின் சிச்சுவேஷனா இருந்திருக்கும்.
ஆனா அவர் கொஞ்சம் மனப் பிரச்சனை அல்லது கொஞ்சம் புத்திப் பிரச்சனை இருந்தவராகத் தெரிந்தார்.
நன்றி ஸ்ரீராம்
கீதா
நெல்லையின் "ரங்கன திட்டு" ரசித்தேன். பாண்டவபுர கதையும்.
பதிலளிநீக்குபடங்கள் பரவாயில்லை. ஆனையும் மனிதரும் படம் யதார்த்தம்.
சென்ற வருடம் பெய்த மழையில் காவிரியில் நீர் எப்போதும் இருக்கிறது. அப்படியே ஆகட்டும்.
Jayakumar
நெல்லை சொன்னது யாரை என்பது புரிந்து சிரித்துவிட்டேன்/. ஆனால் நான் சொன்னது ஸ்ரீரங்கப்பட்டின ரங்கநாதரை எழுதிட்டு எடுத்துவிட்டேன்.. அவர்பெயர்லதானே ரங்கனதிட்டு அங்க சுத்தி ஓடுதே காவிரி அதுவும் ஆங்காங்கே தீவுகள் அமைத்துக் கொண்டு.
நீக்குஎனக்கும் அந்த ஆனையும் மனிதரும் படம் பிடித்தது.
ஆமாம் நிறைய தண்ணீர் இருந்தது. வெயில் காலத்திலும் நீடிக்க வேண்டும்.
நன்றி ஜெ கே அண்ணா
கீதா