பெங்களூரிலிருந்து 3, 4 மணி நேரப் பயணத்தில் - குறிப்பாக சாம்ராஜ்நகர், மாண்டியா மாவட்டங்களில் - சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. (அருகில் மைசூர், மடிக்கேரி). கொக்கரேபெல்லூர் சென்றுவந்த உடனேயே அடுத்த வார ஞாயிறில் அதாவது மார்ச் தொடத்திலேயே ரங்கனதிட்டு சென்று விட்டு வரவேண்டும் - பறவைகள் சீசன் என்பதால் - என்ற திட்டம் இருந்தது. ஆனால், சென்னைக்குச் செல்வது அந்தச் சனிக்கிழமையா அல்லது அடுத்த சனிக்கிழமையா என்ற குழப்பம் இருந்தது.
வேலை வந்ததால், சனிக்கிழமை நான் செல்லவில்லை என்று ஆனதும், உடனே ஞாயிறு அன்று ரங்கனதிட்டு சென்றுவிட்டு வரலாம் என்று முடிவானது.
ரங்கனதிட்டுவிற்கு வெகு அருகில் 5 கிமீருக்குள் ஸ்ரீரங்கப்பட்டினம். அதற்கும் முந்தைய ஊர்தான் பாண்டவபுரா (ரங்கனதிட்டு பாண்டவபுராவிலிருந்து 16 கிமீ). அவ்வழி மைசூர் செல்லும் பேருந்தில் செல்லலாம். இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒரு இடம் வரை பேருந்தில் அல்லது ரயிலில் செல்லலாம். அங்கிருந்து ரங்கனதிட்டு சரணாலயம் வரை செல்ல பேருந்துகள் இல்லை என்பதால் ஆட்டோவில் செல்வதுதான் ஒரே வழி என்பதெல்லாம் ஏற்கனவே பார்த்து வைத்திருந்தேன்.
பேருந்தில் என்றால் நிறைய நேரம் எடுக்கும். அதிகாலையில் 5-6 மணிக்குள் என்னென்ன ரயில்கள் இருக்கின்றன என்பதையும் பார்த்து வைத்திருந்தேன். ஸ்ரீரங்கப்பட்டினத்திற்குப் பயணிகள் ரயில் மட்டுமே. அதுவும் நிறைய சமயம் எடுக்கும். மேலும் அது நம் நேரத்திற்கு இல்லை என்பதும் நல்லதாயிற்று. ஹூப்ளி/ஹூப்பாலியிலிருந்து பாண்டவபுரா வழி மைசூர் செல்லும் ஹம்பி எக்ஸ்பிரஸ் பெங்களூருக்குக் காலை 5.50 க்கு வந்து 6 மணிக்குப் புறப்படுவதில் டிக்கெட் இருக்கா என்று பார்த்தால் கிடைத்துவிட்டது. 7.58 ற்கு பாண்டவபுரா சென்றுவிடும். இரண்டு மணிநேரப் பயணம்தான்.
உடனே ரயிலில் புக் செய்தாச்சு. எனக்கு ஜன்னல் இருக்கை கிடைத்தது. அட நம்ம பக்கமும் கொஞ்சம் அதிர்ஷ்டக் காத்து அடிக்குதேன்னு சின்ன சந்தோஷம். வரும் போது ரயிலா பேருந்தா அப்ப பாத்துக்கலாம்னு சொல்லிக் கொண்டோம். காலை உணவிற்குப் பழங்கள், சப்பாத்தி, வெண்டை மசாலா கறி, மதியத்திற்கு வரகரிசி தயிர் சாதம் வீட்டிலும் செய்து வைத்துவிட்டு எங்களுக்கும் எடுத்துச் செல்ல. இரவே இதற்கான சில ஆயத்தங்களைச் செய்துவிட்டு மீதியை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
மறுநாள் அதிகாலை எழுந்து, உணவுகளையும் தயார் செய்து வீட்டில் வைக்க வேண்டியதை வைத்து instructions கொடுத்துவிட்டு, வீட்டில் இருந்த பப்பாளிப் பழத்தையும் கிர்ணிப் பழத்தையும் துண்டுகளாகக் கட் செய்து எடுத்துக் கொண்டோம். 4.30க்கு ஓலா ஆட்டோ சொல்லி ரயில் நிலையத்திற்குக் கிளம்பியாச்சு.
ரயில் 10 நிமிடங்கள் தாமதம் என்று சொல்லியது விவரங்கள் திரை. ப்ளாட்ஃபார்ம் எண் திரையில் வரவில்லை. 7 அல்லது 8 தான் என்று தெரியும். நடைமேடைகளுக்குச் செல்லும் மேம்பாலத்தில் ஏறி 7, 8 ஆவது நடைமேடைக்கு இறங்கும் படிகளின் அருகில் நின்று கொண்டு அங்கிருக்கும் டிவி திரையில் ஓடிய விவரங்களைப் பார்த்தால், ரயில் 20 மிடங்கள் தாமதமாகும் என்பது தெரிந்தது. அங்கேயே நின்று கீழே பார்த்தால் ரயில் வருவது தெரியும் என்பதால் அங்கேயே நின்று ரயில் விவரங்கள் வரும் திரையையும், கீழே நடைமேடையையும் பார்த்து, 8 வது நடைமேடையில் 6.15க்கு ரயில் வருவது தெரிந்ததும் இறங்கி எங்கள் பெட்டியில் ஏறியாச்சு.
பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் பாதையில் ரயிலில் செல்வது இது எனக்கு இரண்டாவது முறை. முதல் முறை சன்னபட்டினா வரை சென்றிருக்கிறேன். ரயில் என்றாலே குதூகலம் வந்துவிடும் எனக்கு. அதுவும் ஜன்னல் இருக்கை என்பதாலும் சின்னக் குழந்தை எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.
Bidadi தாண்டி மத்தூர் வரை அறுவடையான வயல்களில்
நிறைய மயில்கள், Ibis/அறிவாள் மூக்கன் பறவைகள், சின்னான், கொண்டைலாத்தி, கிளிகள் என்று
பலவகைப் பறவைகளைப் பார்க்க முடிந்தது. ஆனால் படம் எடுத்தாலும் வராதே.
10 நிமிடம் நின்ற ரயில் 6.25 ற்குக் கிளம்பியது. கொக்கரேபெல்லூருக்குப் பேருந்தில் சென்ற போது மத்தூர் வரை சென்றோம் இல்லையா? அதே வழியில் ரயிலில். ஆனால் மத்தூரும் தாண்டி மாண்டியா தாண்டி நாம் இறங்கப் போவது பாண்டவபுரா. (மத்தூர் ரயில் நிலையத்தில் நிற்கவும் செய்யும். முன்பு இதிலேயே கொக்கரேபெல்லூருக்கும் சென்றிருக்கலாம். 1 1/4 மணிநேரப் பயணம்தான் மத்தூருக்கு. ஆனால் என்னவோ அப்ப விட்டுப் போச்சு பாருங்க!)
மத்தூர் தாண்டியதும் வந்த சின்ன ஆறு. பாண்டவபுரா வரை பசுமை பசுமை.....நெல் வயல்கள், கரும்பு வயல்கள், சோள வயல்கள், நீரோடைகள், சின்ன ஆறுகள், வாத்துகள், நீர்ப்பறவைகள் என்று காட்சிகள் மனதைக் கவர்ந்தன,
------கீதா
ஜெ கே அண்ணா, மொபைலில் எடுத்த படங்களை இந்த அளவுதான் கொடுக்க முடிந்தது. இன்னும் பெரிதாக்கினால் அதாவது ஒரிஜினல் சைஸில் கொடுத்தால் படங்கள் க்ளியராக இல்லை என்பதால் extra large option ல் கொடுத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
எங்கள் அதிர்ஷ்டம்தான் 1 1/2 மணி நேரப் பயணத்தில் 20 படங்களை மாத்திரமே கொடுத்துள்ளது... ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குரங்கணத்திட்டு பறவைகள் சரணாலயம் பார்க்க வந்தால் வயல்வெளிகளைக் காண்பித்துவிட்டீங்களே
எங்கள் அதிர்ஷ்டம்தான் 1 1/2 மணி நேரப் பயணத்தில் 20 படங்களை மாத்திரமே கொடுத்துள்ளது... ஹா ஹா ஹா.//
நீக்குஹாஹாஹா....நெல்லை, இன்னும் எடுத்திருந்தேன் ரயில் வேகத்தில் சில இடங்களில் சரியா வரலை. பறவைகள் இருந்த படங்கள். சரியாக வராததை அழிக்கும் போது காணாமல் போயிடுச்சான்னும் தெரியலை!!
ரங்கனதிட்டு மூன்றாவது பதிவில்தான் வரும். மக்களுக்குச் சுத்துப்புறம் எல்லாம் காட்டாண்டமா....எல்லாருக்கும் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்காது இல்லையா? ஸோ இந்த இடங்கள் இப்படி இருக்கும்னு காட்டத்தான். பதிவு நீண்டாலும் எல்லாருக்கும் சிரமமாகிடுமே.
நன்றி நெல்லை
கீதா
முதல் படம் மிக அழகாக வந்துள்ளது. இந்தத் தடவை யாத்திரையின்போது ஜன்னல் பகுதியில் நிறைய படங்கள் எடுத்தேன்.. அதிலும் கோதுமை வயல்கள். அவற்றை நினைவுபடுத்தியது இந்தப் படங்கள்
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
நீக்குஇந்தத் தடவை யாத்திரையின்போது ஜன்னல் பகுதியில் நிறைய படங்கள் எடுத்தேன்..//
ஓ சூப்பர்! கோதுமைவயல்கள் நல்லாருக்கும் அறுவடைக்கு முன்., நாற்று நட்ட பருவம் என்று.
நன்றி நெல்லை
கீதா
பிடதி ஆஸ்ரமம் போகவில்லையா? நித்யானந்த அடிகள் கோபித்துக்கொள்ள மாட்டாரா?
பதிலளிநீக்குயாருங்க அது? பிடதி ஆஸ்ரமம் நித்யானந்த அடிகள்?
நீக்குகீதா
ரயில் பயண படங்கள் நன்றாக இருக்கிறது ரயிலின் வேகம் தெரிகிறது.
பதிலளிநீக்குஒரு நாய் ரோட்டில் ஓடுவது தெரிகிறது. பசுமையான காட்சிகள் கண்ணுக்கு குளுமை.
//மத்தூர் தாண்டியதும் வந்த சின்ன ஆறு. பாண்டவபுரா வரை பசுமை பசுமை.....நெல் வயல்கள், கரும்பு வயல்கள், சோள வயல்கள், நீரோடைகள், சின்ன ஆறுகள், வாத்துகள், நீர்ப்பறவைகள் என்று காட்சிகள் மனதைக் கவர்ந்தன//
என் மனதையும் கவர்ந்தன. நடவுக்கு காத்து இருக்கும் வயல்களும் அருமை. நாத்து நட வைத்து இருக்கிறார்கள் நடும் பெண்களை காணவில்லை.
பாண்டவபுரா ரயில் நிலைய பேர் பலகை படித்து ஊர் வந்து விட்டது பறவைகளை பார்க்கலாம் என்று பார்த்தால் தொடரும் என்று சொல்லி விட்டீர்கள்.
தொடர்கிறேன்.
காணொளி அருமை.
ஆமாம் ஒரு படத்தில் ஒரு நாய் ரோட்டில் ஓடுகிறது. ஆமாம் கோமதிக்கா காட்சிகள் அப்படி அழகாக இருந்தன.
நீக்கு//என் மனதையும் கவர்ந்தன.//
நன்றி கோமதிக்கா.
// நடவுக்கு காத்து இருக்கும் வயல்களும் அருமை. நாத்து நட வைத்து இருக்கிறார்கள் நடும் பெண்களை காணவில்லை.//
ஆமாம் நடவுக்கு வைத்துருந்தாங்க. பெண்கள் இருந்த வயல் பகுதி எடுத்தது சரியாக வரவில்லை. வேகத்தில். அது போல உழுதுகொண்டிருந்த படம், க்ளோசப்பிற்குக் கொண்டு வரும் முன் ரயில் கடந்துவிட்டது...அந்தப் படமும் சரியாக வரவில்லை. எனவே அதை அழித்துவிட்டேன்.
//பாண்டவபுரா ரயில் நிலைய பேர் பலகை படித்து ஊர் வந்து விட்டது பறவைகளை பார்க்கலாம் என்று பார்த்தால் தொடரும் என்று சொல்லி விட்டீர்கள்.
தொடர்கிறேன்.//
ஹாஹாஹா அக்கா அதற்கு இன்னும் 16 கிமீ போக வேண்டுமே...எனவே மூன்றாவது பகுதியில்தான் ரங்கனதிட்டு வரும்....அதுவும் ரங்கனதிட்டு
முன்பகுதி எல்லாம் சொல்லி வர வேண்டுமே...
பாண்டவபுரா பாபற்றி அடுத்த பதிவில் கொஞ்சம் சொல்ல வேண்டும். அங்கிருந்து ரங்கனதிட்டு செல்லும் வழியில் காட்சிகள் எல்லாம் காட்டணும் இல்லையா!!?
நன்றி கோமதிக்கா.
கீதா
காலை உணவிற்குப் பழங்கள், சப்பாத்தி, வெண்டை மசாலா கறி, மதியத்திற்கு வரகரிசி தயிர் சாதம்//
பதிலளிநீக்குஅருமை , அருமை.
நன்றி கோமதிக்கா....அடுத்த பகுதியில் வெண்டை மசாலா படம் மட்டும் வரும். மற்றவை எடுத்தவை அழிந்து விட்டன தெரியாமல். அழிந்த ஃபோல்டரிலும் காணவில்லை மீட்டெடுக்க.
நீக்குநன்றி கோமதிக்கா
கீதா
எப்படியோ பொது போக்குவரத்து வசதிகளை உபயோகித்து பயணங்களை நிறைவேற்றி உங்கள் பங்குக்கு சுற்று சூழல் மாசு படுவதை தவிர்த்திருக்கிறீர்கள். நன்று நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுடைய திறமைக்கு ஏற்றவையாக இல்லை. கமெராவில் எடுத்திருக்கலாம்.
பறவைகள் படங்களுக்காக காத்திருக்கிறேன்.
Jayakumar
ஜெ கே அண்ணா பெரும்பாலும், பொதுப்போக்குவரத்துதான் பொதுவாகவே நாங்கள். ஆனால் இப்ப சமீப வருடங்களாக அது மட்டுமே. நம்ம பாக்கெட்டும் முக்கியம் இல்லையா!!!! இங்கு காலனிலையும் நமக்கு ஓகேவாக இருப்பதால் சௌகரியமாக இருக்கிறது.
நீக்குபடங்கள் பத்தி சொல்லிவிட்டேனே காமரா எக்ஸ்ட்ரா பேட்டரி வாங்கவில்லை. அது இருந்திருந்தால் கண்டிப்பாக கேமரா தான் என் சாய்ஸ். ஒரு எக்ஸ்ட்ரா வாங்கிவிட்டேன் இப்ப. புதிய பேட்டரி வாங்கவும் வேண்டிய நிலைதான். பழையது அத்தனை நிக்க மாட்டேங்குது.
பறவைகள் படங்கள் மூன்றாவது பதிவில் வரும், ஜெ கே அண்ணா
நன்றி அண்ணா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. ரயிலில் செல்லும் போது நீங்கள் எடுத்த படங்கள் படு துல்லியமாக உள்ளது. எப்படி சரியான கோணத்தில் இப்டி எடுக்கிறீர்கள் என வியந்து போகிறேன்...!
வயலின் பசுமை நிறைந்த படங்களும், உழவு செய்யும் காட்சியையும் கண்டு கொண்டேன். அருகில் ஒரு பெண் நாற்று ஏதோ நடுகிறார் போலும்..!
பயண விபரங்கள் அருமை. தாங்கள் திட்டமிட்டு செய்யும் பணிகள் என்னை மிகவும் கவர்கிறது. ஸ்ரீ ரங்கபட்டிணா குழந்தைகளுடன் இரு தடவைகள் சென்றுள்ளோம். ஆனால், இப்படி நடுவில் வரும் ஊர்களுக்கு இடையே வரும் இடங்களுக்கு சென்றதில்லை. உங்கள் பயண வழிகள் நன்றாக உள்ளது. தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா அக்கா, ஒரு மாயமும் இல்லை மந்திரமும் இல்லை என் திறமையும் இல்லை. ஜன்னலில் அருகே இருந்தால் என் கண் வெளியிலேயே தான் இருக்கும். மொபைல் கேமராவை ரெடியாக வைத்துக் கொண்டு. கேமரா என்றால் கேமராவை ஆன் செய்து வைத்து. குறிப்பாக ரயில் போகும் திசையியை நோக்கி நம் இருக்கு இருக்க வேண்டும். அப்பதான் முன்னால் வருவது தெரியும் டக்கென்று தயாராகக் க்ளிக் தொடர்ந்து செய்வேன் இல்லைனா continuous options ஐ தேர்ந்தெடுத்து எத்தனை செகன்ட்ஸ்கு இடைவெளியில் க்ளிக்ஸ் இருக்கணும் என்பதையும் தேர்ந்தெடுத்து வைத்துவிட்டால் ஆன் செய்தால் அது க்ளிக்கித் தள்ளும். நாம் சாதனத்தைக் கரெக்ட்டாக வைச்சுக்கிட்டா போதும். அப்படி வந்தவற்றில் சரியா இல்லாததை டெல் செய்யணும். கொஞ்சம் நேரம் எடுக்கும் சமாச்சாரங்கள்தான். அதான் என் பதிவு வர தாமதமாகும்.
நீக்குஆனா பாருங்க நாம சரியா பிடித்துக் கொண்டிருந்தாலும் ரயிலோ பேருந்தோ திடீர்னு ப்ரேக் இல்லைனா ஆட்டம் எல்லாம் இருக்குமே!
ஸோ வந்தா லக். இல்லைனா டெல். அம்புட்டுத்தான். வேற எதுவும் இல்லை
நீங்களும் ஸ்ரீரங்கப்பட்டினா சென்று வந்தது அதுவும் குழந்தைகளோடு சென்று வந்தது மகிழ்ச்சி. அருகில் நிறைய இருக்கின்றன கமலாக்கா பார்க்க.....ஸ்ரீரங்கப்பட்டினாவிலிருந்து ரங்கனதிட்டு அருகில்தான். அடுத்த சீசனில் குழந்தைகளிடம் சொல்லி போய் பார்த்துட்டு வாங்க.
நன்றி கமலாக்கா
கீதா
பெங்களுருவில் ஊர்ப்பெயர்கள் மனதில் நிறமாட்டேன் என்கிறது. சில வாயிலும் நுழைய மாட்டேன் என்கிறது.
பதிலளிநீக்குஹாஹாஹா மீக்கும் இப்பவும்...சில பெயர்கள் மட்டுமே தங்குகின்றன மனதில். சில ம்ஹூம்....
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
பாண்டவபுராவா... பாண்டவர்கள் அங்கும் வந்து சென்றிருக்கிறார்களா?
பதிலளிநீக்குயெஸ்ஸு....ஹைஃபைவ் ஸ்ரீராம்.....யாராச்சும் கேப்பாங்கந்னு எதிர்பார்த்தேன் ஆனா குறிப்பாக நீங்க கண்டிப்பா கேப்பீங்கன்னு நினைத்தேன். கேட்டுவிட்டீர்கள்!!!!! அதனாலேயே இங்கு சொல்ல வில்லை...அடுத்த பதிவில் சொல்கிறேன்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
சப்பாத்தி, வெண்டை மசாலா - இப்போதெல்லாம் யாரும் புளியோதரை, பொடி இட்லி எடுத்துச் செல்வதில்லை போல... இருங்கள் கமலா அக்காவிடம் சொல்கிறேன்!
பதிலளிநீக்குஹாஹாஹா.....கமலாக்கா பதிவும் பார்த்துவிட்டேன்...அதுவும் உங்க கமென்ட் பார்த்ததும்தான் தெரிஞ்சு ஆஹா அக்கா போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சு அங்கு போய் நானும் ஒரு புராணம் எல்லாம் பாடிட்டு வந்தாச்சு.
நீக்குபுளியோதரை கொக்கரே பெல்லூர் பயணத்தில் கொண்டு சென்றோம். ராகி இட்லி ஆனால் பொடி இட்லி இல்லை...அதனால இந்த முறை....இப்படி அதுவும் பாருங்க டக்குனு முடிவு செய்ததால மாவும் இல்லை. பொடியும் செய்ய வேண்டிய நிலையில். மாவே இல்லாதப்ப பொடி வந்து பார்த்துக்கலாம்னு.... இந்த முறை இப்படி..
கீதா
உண்மையிலேயே சப்பாத்திக்கு வெண்டைக்காய் மசாலா நன்றாக இருந்திருக்கும். நீங்கள் சப்பாத்திக்கென வெண்டையை கொஞ்சம் குழைவாக செய்வீர்களா? இல்லை உதிரியாக சாதத்திற்கு ஏற்ற மாதிரி இருக்குமே அப்படியா.. ! ஆனால், இவர்கள் ((எங்கள் மகன்கள், மருமகள்கள்) வெண்டைக்காயை ஒத்துக் கொள்வார்களோ என்னமோ தெரியவில்லை இவர்கள் பனீர் சேர்த்து தக்காளி, வெங்காயம் சேர்த்து ஒரு செய்முறையை சப்பாத்திக்கு விரும்புகிறார்கள். செய்யும் நான் கூட அதை பற்றி எழுத வேண்டுமென நினைத்துள்ளேன். (எத்தனையோ எழுத இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.)
நீக்குஇன்றைய இட்லி பதிவுக்கு நீங்கள் வந்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி.
இந்த மாதிரி இட்லி, மி. பொடி தடவி பீரீத்தில் வார்த்து (சகோதரர் நெ. தமிழர் சொன்ன மாதிரி அடுக்கடுக்கான தட்டுக்களில்) ஒரு தடவைகளுக்கும் மேலாக பல பிரயாணங்களுக்கு கொண்டு சென்றாக விட்டது கூடவே எ. சாதம், புளியோதரை சாதம், த. சாதமும் என வேறுபட்ட பயணங்களும் உண்டு. இப்படி குடும்பத்துடன் செல்லும் போது அந்த அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். மலர்ந்த நினைவுகளை சொல்லும் வாய்ப்பை தந்து விட்டீர்கள். ஹா ஹா ஹா .. நன்றி. (இதுவும் மாற்றிக் கொள்ள தாமதமாகும் என நினைக்கிறேன். ) ஹா ஹா ஹா
கமலாக்கா இந்த வெண்டை மசாலா பற்றி எபியில் திங்க பதிவில் போட்ட நினைவு. ...இப்பவும் அதே மசாலாதான் கொண்டு சென்றேன். அந்தப் படம் அடுத்த பதிவில் வரும்.
நீக்குஎபி லிங்க் கிடைக்குதான்னு பார்க்கிறேன். ரொம்ப ஈசி கறி. கிடைத்ததும் தருகிறேன்.
இல்லை குழைவாகச் செய்வது இல்லை. வெண்டைக்காய் கிரேவி செய்தாலும் கூட அதில் குழைய செய்வதில்லை கமலாக்கா.
ஒரு முறாய் கொஞ்சமாகச் செய்து பாருங்க...ஒரு 100 கிராம் வெண்டைக்காயில். எல்லாருக்கும் டேஸ்ட் க்குக் கொடுங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க ட்ரையல் மெத்தட்தானே!!!
இங்கும் பனீர் தக்காளி வெங்காயம் சேர்த்து வகைகள் செய்வதுண்டு. எழுதுங்க அக்கா உங்க முறையை...பரவால்ல. மெதுவா எழுதுங்க. பிரச்சனை இல்லை.
ஆமாம் நானும் முன்ன பெரிய குடும்பமாக இருந்தப்ப....அடுக்கடுக்காக வார்த்து மி பொ தடவி எடுத்துச் சென்றதுண்டு. சென்னையில் தனியாக இருந்தப்பவும் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தால் கண்டிப்பாக இது உண்டு...
இப்ப குடும்பம் 3 பேர்.....நம் உடல் பிரச்சனைகள் என்று உணவிலும் கட்டுப்பாடுகள் வந்துவிட்டதால் அதற்கு ஏற்ப உணவு.
கூடவே எ. சாதம், புளியோதரை சாதம், த. சாதமும் என வேறுபட்ட பயணங்களும் உண்டு. இப்படி குடும்பத்துடன் செல்லும் போது அந்த அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். மலர்ந்த நினைவுகளை சொல்லும் வாய்ப்பை தந்து விட்டீர்கள். ஹா ஹா ஹா .. நன்றி. (இதுவும் மாற்றிக் கொள்ள தாமதமாகும் என நினைக்கிறேன். )//
உங்களுக்கும் மலரும் நினைவுகள் வந்ததுசந்தோஷம் அக்கா.
பரவால்ல மெதுவா மாத்திக்கோங்க ஆனா மனசுல சொல்லிக்கிட்டே இருங்க இந்தகீதா என்னை அடுத்த தடவை மிரட்டறதுக்குள்ள இதை மாத்திக்கணும்..இந்த முறை சொல்ல வேண்டாம் கீதா மிரட்ட ஓடி வந்திருவா என்று!!!! ஹாஹாஹா
கீதா
இந்தத் தடவை (அதாவது யாத்திரை சென்ற அன்று) அருகில் கடையில் இட்லி மாவு வாங்கினேன். கடைசியாக 1 கிலோ மாத்திரமே இருந்தது, அதற்கு அப்புறம்தான் அடுத்த பாத்திரத்தை எடுப்பார் (அதில் புது மாவு). அவரிடம் சொல்ல மறந்துவிட்டது, அதிகாலையில் இட்லி செய்து எடுத்துப்போகிறோம் என்று. மறுநாள் இட்லி கொஞ்சம் சாஃப்டாக இல்லை. அதனால் மி.பொடி இட்லி அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
நீக்குஎள் சாதம், என் வீட்டு முறைப்படி (என் அம்மா) கொஞ்சம் இனிப்பா இருக்கும். மனைவி வீட்டு முறைப்படி காரமா இருக்கும். எனக்கு இனிப்பா இருந்தால்தான் பிடிக்கும். புளியோதரை சாதம் எனக்கு ரொம்பவே போர், அதனால் அதில் விருப்பமில்லை. யாத்திரை நடத்துபவர் புளியோதரை தந்தால் நான் அனேகமாக வாங்கிக்கொள்ள மாட்டேன். பயணம் என்றால் எனக்கு இனிப்பு ஒன்றும் எடுத்துச் செல்லப் பிடிக்கும்.
நெல்லை, இந்த ஊர் இட்லி மாவில் தோசா அரிசி கொஞ்சம் போடுறாங்க. அதனால் என்னதான் புளித்தாலும் இட்லி ஓகேயாகத்தான் இருக்கும். சிலர் ஜவ்வரிசியும் போடுவதுண்டு அதனால்தான் அத்தனை வெள்ளையாக இருக்கும் மாவு. ஏதோ ப்ளீச் போட்டது போன்று!
நீக்குஎள் சாதம் நம் வீட்டிலும் கொஞ்சம் இனிப்பாக இருக்கும். பாட்டியும் சரி மாமியாரும் சரி வெல்லம் போடுவதுண்டு. '
காரமாகவும் செய்வதுண்டு....இப்பலாம் வெல்லம் போடுவதில்லை.
கீதா
ரயில் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி. எனக்கு வேப்பங்காய்! ஏனோ எனக்கு ரயில் பயணங்கள் அலர்ஜி - அதில்தான் எவ்வளவோ வசதிகள் இருக்கின்றன என்று தெரிந்தாலும்.
பதிலளிநீக்குதெரியும்....உங்களுக்குப் பேருந்துதான் பிடிக்கும்னு சொல்லியிருக்கீங்க கருத்தில் நினைவும் இருக்கு
நீக்குரயில் ரொம்பவே பிடிக்கும் அதுவும் இப்ப நம்ம வீட்டவருக்கு ரொம்பவே சௌகரியம் ஏன்னா இந்த கழிவறை வசதி இருக்கே!! அதுதான் முக்கியமாக..... அதுவும் ஏதாச்சும் வந்து கொண்டே இருக்கும் திங்க. நமக்கு வேணும்னாலும் வாங்கிக்கலாம். கூடவே ஜன்னல் கிடைத்தால் தனி சுகம், ஸ்ரீராம்
நன்றி ஸ்ரீராம்
கீதா
எனக்கு முன்பு பஸ் பிரயாணங்கள்தாம் பிடிக்கும். ஆனால் அதில் பிரச்சனை என்னன்னா, தேவையான அளவு தண்ணீர் சாப்பிட முடியாது. இரயில் பயணத்தில் அந்தப் பிரச்சனை இல்லை. ஒரு நாள் முழுவதும் இரயில் பயணமாக இருந்தாலும் நான் கம்பார்ட்மெண்டுக்குள்ளேயே 90 நிமிடங்கள் நடந்து 10,000 ஸ்டெப்ஸ் முடித்ததும் இந்த யாத்திரையில் இருமுறை நிகழ்ந்தது.
நீக்குபேருந்துகளை கழிசடை ஹோட்டல்களில் நிறுத்துவான். ஆனால் இரயிலில் பல்வேறு உணவுகள் வந்துகொண்டே இருக்கும்.
நெல்லை நீங்க சொல்லிருக்கும் காரணங்கள்தான் எங்களுக்கும் ரயில் பயணம் பிடிக்கும் என்பது. குறிப்பாகத் தண்ணீர்.
நீக்குஅது போல நிறுத்தும் ரயில் நிலையங்களில் கூட பரவால்லாம உணவு ஏதேனும் கிடைக்கும். ஒருவேளை தேவைப்பட்டால்.
கீதா
// மத்தூர் தாண்டியதும் வந்த சின்ன ஆறு. //
பதிலளிநீக்குஓடை மாதிரி இருக்கிறது. ஒரு ஓடை நதியானதோ!
ஹாஹாஹா...ஆமாம்...ஆனா அது ஒரு கிளை போலதான் இருக்கு....நான் ஓடைன்னு எழுதலாமான்னு யோசித்தேன் ஆனால் ஒரு சின்ன நதிக்கான அடையாளங்கள் இருந்தன...
நீக்குஅதனால // ஒரு ஓடை நதியானதோ!// ம்ஹூம்.... ஒரு நதி ஓடையானது என்று சொல்லிக்கலாம்!!!! அதை எழுத நினைத்து விட்டிருக்கிறேன் படத்தின் கீழ்...
நன்றி ஸ்ரீராம்
கீதா
வழிப் படங்கள் எலலாமே அருமை. நீங்கள் சொல்லி இருப்பது போல பசுமை. கண்களுக்கு குளிர்ச்சியாய்...
பதிலளிநீக்குஆமாம் அந்தப் பசுமைக்காகவே அதைப் பார்க்கவே ரயிலில் செல்லலாம் ஸ்ரீராம். பேருந்தில் கிராமங்களுக்குள் சென்றால் பார்க்கலாம் இல்லைனா மைசூர் ரோட்ல இதெல்லாம் பார்க்க முடியுமான்னு தெரியலை..
நீக்குகீதா
சில சமயங்களில் தாமதமாக வந்தாலும் வேகத்தைக் கூட்டி, நேரத்தை ஈடுகட்டி நேரத்துக்கு அல்லது நேரத்துக்கு சற்று முன்னதாகவே சென்று சேரும் ரயில்களும் (திறமையான டிரைவர்களும்) உண்டு.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்....இந்த ரயில் கூட மத்தூர் எல்லாம் சரியான நேரத்துக்கு வந்துவிட்டது...அதன் பின் மாண்டியாலருந்து பாண்டவபுரா போறப்ப கொஞ்ச நேரம் நின்றுவிட்டது. க்ராசிங்க் போல...
நீக்குகீதா
படங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கின்றன. கொஞ்சம் கம்பி அல்லது சன்னலின் மேற்பகுதி வராமல் எடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்குஅப்படித்தான் முயன்றேன் நெல்லை....ஆனா பாருங்க மொபைல் கீழ விழுந்துருச்சுனா? அதுவும் ரயில் வேகத்தில், அதன் ஆட்டத்தில்.......கேமரானா கம்பிகளின் இடையில் வைத்துக் கொள்ளலாம்...கூடவே அதைக் கைகளுக்குள் மாட்டிக் கொள்ளலாம் ஆனால் கேமரா லென்ச் கம்பிகளுக்கு இடையில் அடிவாங்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
நீக்குகீதா
படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது
பதிலளிநீக்குநல்லதொரு தொடக்கம் தொடர்ந்து வருகிறேன்....
நன்றி கில்லர்ஜி.
நீக்குகீதா