புதன், 1 ஜூலை, 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 5

ஜடாயுபுரம் 1

ஜடாயுபுரம் 2

பீமநகரி 1

பீமநகரி 2 

==============================================================

பீமநகரி - 3

சில அடி தூரத்தில் வித்தியாசமான பெயருடன் ஒரு விநாயகர் கோயில் உண்டு. பதிவு பெரிதாகிவிட்டதால், அதை அடுத்த பகுதியில் பார்ப்போமா? என்று முடித்திருந்தேன். 

தோ அந்த விநாயகர் கோயிலை வெளியிலிருந்துப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தொடங்குவோம் நம் நடையை! ஜடாயுபுரம், பீமநகரி

முகப்பில் உள்ள பச்சை நிறப் பலகையில் "அருள்மிகு எதிர்வல்லி சோழ விநாயகர் திருக்கோவில்" என்று எழுதப்பட்டுள்ளது. படத்தைப் பெரிது பண்ணி பார்த்தால்தான் ஓரளவு தெரியும். எதிர்வல்லி என்பது "எதிரிகளை வெல்பவர்" அல்லது "எதிர்ப்புகளை முறியடிப்பவர்" எனப் பொருள்படும்.

க்கோயில் சோழ மன்னர்களின் காலத்துடன் தொடர்புடையது, அதனாலேயே விநாயகர் 'சோழ விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. நாஞ்சில் நாடான இப்பகுதி ஒரு காலத்தில் சோழ மன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் (முக்கியமாக முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலங்களில்) இருந்தபோது, எல்லையைக் காக்கும் பொருட்டோ அல்லது போரின் வெற்றியைத் தொடர்ந்தோ இந்த விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனால் தான் இதற்கு "சோழ விநாயகர்" என்ற பெயர் நிலைத்துள்ளது. (ஓவர் டு நெல்லை வேறு ஏதேனும் சரியான தகவல்கள் உண்டான்னு...)

நூற்றாண்டுகள் பழமையான, கருங்கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்ட கோயில்.

ந்த எதிர்வல்லி சோழ விநாயகர், இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றும் நாயகனாகவும் போற்றப்படுகிறார். எதிர்மறை ஆற்றல் (Negative energy) மறைய, இங்கு விநாயகருக்கு சிதறுகாய் உடைத்து வழிபடுவது வழக்கம்.

க்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் (TNHRCE) நேரடி வழிபாட்டு நிர்வாகத்தின் கீழ் வராமல், தனித்துவமான அமைப்பான கன்னியாகுமரி தேவஸ்வம் போர்டின் (Kanyakumari Devaswom Board) கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஆனால் அதுவும் இணைக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

ன்னியாகுமரி மாவட்டம் முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் (கேரளா) இருந்ததால், இங்குள்ள பெரும்பாலான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் "கன்னியாகுமரி தேவஸ்வம் போர்டு" மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றன. தமிழ்நாடு அறநிலையத்துறையின் ஒரு பிரிவாக இது செயல்பட்டாலும், இதன் கணக்கு வழக்குகளும் நிர்வாக முறைகளும் தேவஸ்வம் சட்டதிட்டங்களின் படியே தனியாக நடத்தப்படுகின்றன.

ந்தத் தெப்பக் குளம் பீமநகரி பற்றிய சென்ற பதிவில் கிராமத்துக் கோவில் ஸ்ரீ பால பரமேஸ்வரி கோயில்  பதிவில் போட்டிருந்தேன் இல்லையா அதே குளம் தான் பிள்ளையார் கோயிலுக்கும். இப்படிப் போனால் படித்துறையும் உண்டு. எதிரில் அம்பாள் கோயில் தெரு தெரிகிறது பாருங்க. எதிர் எதிரில். அங்கும் படித்துறை தெரிகிறது பாருங்க.

இப்படத்தில் கோயிலின் இடப்புறம் தங்கக் கலரில் பீமநகரி பாலபரமேஸ்வரி அம்மன் கோயில் முகப்பு தெரிகிறதா?

இக்கோவில் ஊர் காவல் தெய்வங்கள். முன்னர் திறந்த வெளியில் இருந்த தெய்வங்கள் இப்போது அழகான கட்டிடங்களுக்குள் வெயிலில் காயாமல், மழையில் நனையாமல்...

இடப்புறம் ஸ்ரீ கணபதி, நல்ல மாடன், நல்ல மாடத்தி, வலப்புறம் ஸ்ரீ .........மாடன், பீமநகரி என்று இருக்கிறது. அன்றுமே நேரில் பார்த்தப்பவே வலப்புறம் உள்ள கோயிலின் முகப்பில் பீமநகரி என்பதற்கு மேல் உள்ள எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை. 

கோயில்கள் மூடி இருப்பதால் வெளியிலிருந்து கை கூப்பிவிட்டு இதோ இந்தச் சாலையில் நம் நடையைத் தொடர்வோம். 

அச்சாலையில் மேலே உள்ள படத்தில் தெரியும் மின் கம்பம் அருகில் இந்தப் பாழடைந்த  வீடு
இது வேறு ஒன்று...அடுத்தாப்ல....இது முகப்பு வாயில்? அல்லது பக்கவாட்டு எவ்வளவு அழகா இருக்குல்ல? இந ஜன்னலின் அப்புறம் நீண்ட திண்ணை அல்லது அறை போன்று இருந்திருக்கும்....

இதைப் பார்த்ததும் எனக்கு பாபிலோனின் தொங்கு தோட்டம் நினைவுக்கு வந்தது அதன் நடுவே மாளிகை. ஏனோ இந்த வீடு என்னை மிகவும் கவர்ந்தது. 

உயிர்ப்பிருந்த போது இல்லா சுதந்திரம்...

உயிர்ப்பிழந்த நிலையில் கிடைத்திட.

படர்ந்திருக்கும்  செடி, கொடிகள்!

இந்த மாளிகையின் பின் பக்கம் தான் மேலே உள்ள அந்தச் சின்ன மாளிகை. கேரளப்பகுதியாக இருந்ததால் கேரளத்துக் கொட்டாரம் போன்ற வீடு....பெரிய தரவாடாக இருந்திருக்கும் ஒருகாலத்தில். எனக்கு இந்த இரு வீடுகளுமே பிடித்திருந்தன....சரி எவ்வளவு விலை இருக்கும்? உருக்குலையாமல் தட்டிக் கொட்டி, பூசி வலுப்படுத்தி மேம்படுத்த முடியுமா?

ப்போது மிக மிகச் சிறிய கிராமமாக 10-12 வீடுகள் பாலபரமேஸ்வரி கோயில் அருகிலும் அப்புறம் சற்று வெளியில் ஒரு சில வீடுகள் மட்டுமே இருந்த கிராமம் இப்போது  பீமநகரி ஊராட்சியாக வளர்ந்துள்ளது.

இந்த அழகிய கிராமத்திற்கு வந்த சாபக்கேடு - சமீபகாலமாக, விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. எனவே இப்பகுதியின் இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன.

இவை எல்லாம் புதியதாக வந்திருக்கும் எக்ஸ்டென்ஷன் தெரு, வீடுகள், வலப்பக்கம் இன்னும் கட்டப்பட்டுக் கொண்டிருப்பது தெரிகிறதா இதற்கு முந்தைய படம் அப்பகுதிதான். சரி நாம் இச்சாலையில் திரும்பாமல்  நடையைத் தொடர்வோம்...
அடுக்கடுக்காக மலைகள் தெரிகிறதா? அங்குதான் மருங்கூர் முருகன் கோவில் இருக்கிறது. இம்மலைப் பகுதியை இத்தொடரில் மருங்கூர் பற்றி வரும் போது அருகில் பார்ப்போம்... 
சாலையின் ஓரங்களில் இப்படி ஆங்காங்கே நீரோடைகள்...

தோ இந்த உரலைப் பார்த்ததும் ஆச்சரியம். எங்கள் ஊரிலா? நாம சின்ன வயசுல இப்படிப் பார்த்ததே இல்லையே....குங்கும் தீட்டி, விளக்கு, பூ எல்லாம் போட்டு, சுப்பு அக்காவிடமும் கேட்டேன்.  சரி இன்னும் சில மாதங்களில் ஏதேனும்  கோயில் வந்துவிடுமோ? அருகில் வேலியில் அம்மன் துணிகள் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அது அருகில் உள்ள அம்மான் கோயில் துணிகளா என்று தெரியவில்லை. யாரும் இல்லாததால் கேட்கவும் முடியவில்லை. சுப்பு அக்காவிடமும் கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை...

வழியெல்லாம் மேலும் சில சின்ன சின்ன நீரோடைகள்

பாருங்கள் பெருமாள் நகர். Community! ஊரில் இப்படி முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. வயல்கள் அழிந்து வருகின்றன. விவசாயம் குறைந்து வருகின்றது. ஏதேனும் புரட்சி நடக்க வேண்டும் இல்லையேல் எதிர்காலம் கேள்விக்குறி. உணவுப் பற்றாக்குறை ஏற்படும். எனக்கு மிகவும் விருப்பமான விவசாயமும் செய்ய முடியவில்லையே என்று வருத்தத்துடன் அதற்கு எதிரில் உள்ள அழகான தாமரைக் குளத்தை க்ளிக்கிக் கொண்டு நடந்தேன். 

அந்தக் கட்டுமானத்தின் எதிரில் இருக்கும் தாமரைக் குளம்

இப்படத்தில் தூரத்தில் தெரிகிறதா மேலே படத்தில் பார்த்த அடுக்கடுக்கான மலை. இந்தத் தாமரைக் குளத்தைப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது கார் மேகம் திரண்டு மழை பெய்யத் தொடங்கிவிட்டது. குடை எடுத்துக் கொண்டு வரவில்லை. கேமராவை பைக்குள் பொதிந்து வைத்துக் கொண்டு வேகமாக ஓடினேன்....ஒதுங்க இடம் பார்த்தால் சற்று தூரத்தில் ஒரு நெல் குத்தும் மில் அரவை மில், மற்றும் அரிசி வகைகள் வைத்திருந்த மில் இருந்தது. அங்கு ஒதுங்கிக் கொண்டேன். வகை வகையான அரிசி, பருப்புகள் இருந்தன. அரை மணி நேரம் அடர்த்தியான மழை. 

இப்படத்தில் வலப்பக்கம் ஒரு கட்டிடம் தெரிகிறதா? அங்குதான் ஒதுங்கிக் கொண்டேன். சற்று தூரத்தில் வலப்பக்கம் திரும்பினால் திருப்பதிசாரம் கீழூர் சாலை. அது வழி வீட்டிற்கு...

திரும்பிய பிறகு பீமநகரியிலிருந்து வந்த சாலையை ஒரு க்ளிக். இந்த இடம் ஒரு சந்திப்பு....பீமநகரி மற்றும் திருப்பதிசாரம் சாலைகள் நெடுஞ்சாலையில் இணையும் சந்திப்பு
சந்திப்பில் இருக்கும் தாமரைகள் இல்லா தாமரைக் குளம். இதில் பறவைகள் நிறைய இருந்தன. காணொளியில் கொஞ்சம் தெரியும். 

குளத்தை ஒட்டி சுவாமிஸ் சமையல் பொடி தயாரிக்கும் கம்பெனி இது சமீபகாலத்தில் வந்த ஒன்று

இப்படி திருப்பதிசாரம் கிராமத்திலிருந்து பீமநகரி சென்று அப்படியே மீண்டும் கிராமத்திற்குள் வந்துவிடலாம் ஒரு circle route.  கீழே இருக்கும் காணொளியை விருப்பமிருந்தால் பார்க்கலாம். நான் எடுத்திருந்த வேறு சில காணொளிகளில் இருந்த பறவைகளின் சத்தத்தைப் பிரித்தெடுத்து இக்காணொளியுடன் சில இடங்களில் இணைத்திருக்கிறேன்.

இனி திருப்பதிசாரத்தின் கீழூர் சாலையில் வீட்டை நோக்கி நடை! இந்தக் கீழூர் சாலை படங்களை இத்தொடரின் அடுத்த பதிவில் பார்ப்போம்...

-----கீதா

வெள்ளி, 26 ஜூன், 2026

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - நாமக்கோழி - Common Coot - பகுதி - 2

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

=============================================================================

முந்தைய பதிவு <=======

வை     கூட்டமாக   நீந்தும் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தது நினைவில் இருக்கலாம். படமும் பகிர்ந்திருந்தேன். என்றாலும், இனப்பெருக்கக் காலத்தில் பொதுவாகச் ஜோடியாக நீந்தும். (மற்ற சமயங்களில் கூட்டமாக நீந்தும்) கூடுகட்டும் அழகைப் பார்க்கணும் ரொம்ப சுவாரசியமாக இருக்கும். கொஞ்சம் கஷ்டப்படும். (காணொளியில் குச்சி பொறுக்கிக் கொண்டு போவது இருக்கும்) 

புதன், 24 ஜூன், 2026

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - நாமக்கோழி - Common Coot - பகுதி - 1

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

=========================================================================ந்த நீர்ப்பறவையின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? இங்கு பெங்களூர் ஏரிகளில் நிறைய பார்க்கலாம். நாமக்கோழியை இதற்கு முன்னும் பார்த்திருந்தாலும் படங்கள் காணொளிகள் எடுத்ததில்லை. அப்போதெல்லாம் கேமரா அலைபேசி இல்லையே. 

பெங்களூரில் நான் இருந்த/இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் ஏரிகளில் நடைப்பயிற்சி சென்ற/செல்லும் போதெல்லாம் நிறைய புகைப்படங்களும், காணொளிகளும் எடுத்திருக்கிறேன். அவற்றின் செயல்பாடுகள், வாழ்க்கை முறை உட்பட. 

செவ்வாய், 16 ஜூன், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 4

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும். 

============================================================================

பீமநகரி - 2  பண்டைய காலத்தில் வீமனசேரி - வழக்கில் பீமனேரி

சென்ற பதிவில்அதோ தெரிகிறதா ஊர்? அதுதாங்க பீமநகரி கிராமம். இங்க சுத்தி இயற்கையைப் பார்த்துக் கொண்டே ஆசுவாசப்படுத்திக்குவோம். அப்புறம் ஊருக்குள்ளாற போவோம்...என்று படத்தோடு சொல்லியிருந்தேன் இல்லையா...இப்போது நாம் நடக்கத் தொடங்குவோம் சரியா... 

திங்கள், 8 ஜூன், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 3

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

=========================================================================

பீமநகரி - 1

எங்கள் கிராமத்தின் ஜடாயுபுரம் ஆற்றங்கரைப் பகுதி வடக்கு/வடமேற்குப் பகுதியில் என்றால் பீமநகரி எனும் சின்ன கிராமம் (இப்போது பெரிதாகிவிட்டது) எங்கள் கிராமத்தின் வடகிழக்குப் பகுதியில். இரண்டிற்கும் நடுவில் வயல்கள், தோப்புகள், தேரேகால் வாய்க்கால், வீரநாராயணமங்கலம் - நாஞ்சில்நாடன் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர் - செல்லும்  சாலை. பீமநகரி நோக்கி, இயற்கைக் காட்சிகளைப் பார்த்தபடியே நடப்போம் வாங்க...வீட்டிலிருந்து கிளம்பியாச்சு. 

செவ்வாய், 19 மே, 2026

மணாலி - கஸோல் பயணம் - 2

05-05-25 - திங்கள் காலை உணவு முடித்து கஸோல் நோக்கிப் பயணம். போகும் வழியில் மணாலிக்கும் குலு வுக்கும் இடையில் எங்கும், பலூன் - tethered hot air balloon ride, மற்றும் Rafting - மிதவைப் படகுச் சவாரி நடத்துமிடங்கள். நாங்களும், தும்பி மட்டும் ஓட்டுநருக்குத் தெரிந்த ஓரிடத்தில் படகுச் சவாரிக்குத் தயாரானோம். 

செவ்வாய், 12 மே, 2026

மணாலி - கஸோல் பயணம் பகுதி - 1

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும். 

=======================================================================

ஞாயிறு, 10 மே, 2026

வாழத்தெரியாத ராஜீவ் - கதை - குரல்வடிவம்

இந்தக் கதை பிறந்த கதை : எல்லாக் கதைகளும் கற்பனையல்ல. சில கதைகள் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதை எழுதும் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் ஒரு மன நிறைவு பெரிது.

திங்கள், 4 மே, 2026

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 30 - பாம்புத்தாரா / Anhinga - Darter Bird

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

அலகில் மீன் இருப்பது தெரிகிறதா? தூக்கிப் போட்டுப் பிடிக்கத் தயாராகி இருக்க அப்போது வீடியோ  எடுக்காமல் விட்ட  காரணம் இப்பறவையை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்ததால் அதன் இயல்புகள் தெரியவில்லை. 

பேரினம் - Anhinga. ஆங்கிலத்தில் Darter டார்ட்டெர். மிகவும் நீண்ட மெல்லிய கழுத்துடையதால் இதற்குச் சில இடங்களில் நெடுங்கழுத்தன், நெடுங்கிளாத்தி என்ற பெயர்களும் உண்டு. வழுவாங்கி, நெய்காக்கை என்ற பெயர்களும் இருப்பதாகத் தெரிகிறது. 

வியாழன், 30 ஏப்ரல், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 2

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஜடாயுபுரம் - 2

ஜடாயுபுரம் என்பது தனி ஊரோ அல்லது குடியிருப்புகள் உள்ள பகுதியோ அல்ல. இது நம்ம கிராமத்தின் ஆற்றங்கரைப் பகுதி. முந்தைய பதிவில் போகும் வழியிலுள்ள வயல்கள் தென்னந்தோப்புகள், பழையாறு படங்கள் பகிர்ந்திருந்தேன். ஜடாயுபுரீஸ்வரர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறம் இப்பகுதியில்...

திங்கள், 27 ஏப்ரல், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 1

 ஜடாயுபுரம் - 1

அழகே! அழகே! பாரதமே அழகு! வடகோடி மட்டுமா அழகு? தென் கோடியும் அழகு! 
பின்னணியில் மலைகளும், வயல்களும், தோப்புகளும், வாய்க்காலும், ஆறும், சுற்றிலும் நீருமாகப் பின்னிப் பிணைந்து இருக்கும் திருவண்பரிசாரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறு வயதிலிருந்தே ஊரின் மீதான பிடிப்பை விட ஊரைச் சுற்றிப் பொதிந்து கிடக்கும் இயற்கையின் மீது லயிப்பும், காதலும், நேசமும், இயற்கையோடு வாழும் ஆசையும், யதார்த்தத்தில் நடக்கவில்லை என்றாலும், என் மனதுள் ஊறிப் போன ஒன்று. 

திங்கள், 20 ஏப்ரல், 2026

சில்லு சில்லாய் - 25 - Wallowing - சேறு நல்லதா? - மாடி மேல மாடி கட்டி...

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும். 

****************************************

சில்லு - 1 - Wallowing

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

காதோடுதான்.....

சில நாட்களுக்கு முன் பிரயாணம்.வேனலினால் காதிற்குள் கட்டி, சீழ் எனற நிலை! மூன்றாவது காது பயன்படுத்த முடியாத நிலை. காதோடுதான் நான் பாடுவேன்/பேசுவேன்னு நீங்க பேசினாலும் ம்ஹூம் கேட்காது. எனவே மனதோடுதான் நான் பேசுவேன்! விழியோடுதான் விளையாடுவேன்! விழியோடுதான் விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போது பிரச்சனை தீர்ந்து மூன்றாவது காதைப் போட்டுக் கொள்ள முடிகிறது. எனவே நீங்கள் என் காதிலும் பாடலாம், பேசலாம்.... மனதோடும் பேசலாம், நான் விழியோடும் விளையாடலாம்.

வியாழன், 19 மார்ச், 2026

மடிவாலா / BTM (B-பொம்மனஹல்லி-T-தவரேக்கரே-M-மடிவாலா) ஏரி

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவு கொஞ்சம் பெரியதுதான். தயவாய் பொறுத்துக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு தொடங்குகிறேன்.

மடிவாலா ஏரி அல்லது BTM - இதற்கு விரிவாக்கம் (B)பொம்மனஹல்லி (T)தவரேக்கரே (M)மடிவாலா மூன்றும் அடுத்தடுத்து இருக்கும் பகுதிகள் என்பதால் இப்படி அவற்றின் ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்தை எடுத்துக் கொண்டு BTM layout என்று சொல்லப்படுகிறது. இதில் BTM முதல் Stage, BTM இரண்டாம் Stage என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் Stage ல் தான் இந்த ஏரிப்பகுதி.

புதன், 11 மார்ச், 2026

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 29

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

திங்கள், 2 மார்ச், 2026

சில்லு சில்லாய் - 24 - ஊ உ உ - பூண்டு பிரெட் - உரு மாறினாலும் பயன் - மடிவாலா/BTM ஏரி

 சில்லு - 1 ஊ உ உ - கொஞ்சம் தத்துவம்

என் தங்கைகளில் கச்சேரி செய்யும் அளவு சங்கீதப் புலமை உடைய தங்கையுடன் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்ததில் ஒரு பகுதி. இந்தத் தங்கை, என் அறிவிற்கு அப்பாற்பட்ட வைணவப் பாசுரங்கள், தேசிகர் ஸ்லோகங்கள் என்று நிறையவே பேசுவாள். 

அத்தகைய திறமைசாலியின் வாழ்க்கை திசைமாறிவிட்டது என்பது வேறு கதை. தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள  தன் காலனியில் உள்ள குழந்தைகளுக்குப் பாட்டும், கீதையும் கற்றுக் கொடுக்கிறாள். இதைப் பற்றியும் என்னிடம் பேசுவாள்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

தலக்காடு - 12 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 5 - நிறைவுப் பகுதி

 தலக்காடு12345 , 6 , 7 , 8 , 9 , 10 , 11

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தலக்காடு - 11 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 4

 தலக்காடு12345 , 6 , 7 , 8 , 9 , 10

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

சிவராத்திரி

ஜோதிர் லிங்கமாய் பிர்பஞ்சத்தில் எங்கும் சிவமயமாகவும் சிவசக்தியாகவும் நிற்கும் பரம் பொருளுக்கான ஒரு ராத்திரி. மாதமிருமுறை அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் முன் வந்து போகும் பிரதோஷம் விரதம் ஆகின்ற சிவராத்திரி வருடத்தில் மாசி மாதம் வரும் அமாவாசைக்கு முன் வரும் போது மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

தலக்காடு - 10 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 3

  தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8 , 9

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவை படங்களுடன் என்று முடித்திருந்தேன். கோயிலைச் சுற்றி வரும் போது பின் பகுதியில் சிவலிங்க சன்னதி 

இறைவன் லிங்க வடிவில் தெரிகிறாரா? வாயிலில் துவாரபாலகர்கள் சிற்பங்கள். மேலே கஜலக்ஷ்மி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது

அந்த சன்னதி மண்டபத்தின் தூண்கள்

அந்த சன்னதி மண்டபத்திலிருந்து இறங்கினால் அதனோடு இணைந்து பெரிய மண்டபம்.
அந்த மண்டபத்தில் இருந்த ஒவ்வொரு தூணிலும் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள். இந்த மண்டபத்தில் சிற்பங்கள் விஜயநகரக் கலையாம். 

மார்கண்டேயர் புராணம் சொல்லும் சிற்பம். (நன்றி கோமதிக்கா. கோமதிக்காவிடம் கேட்டுக் கொண்டேன்) 

ஞானமே உருவான ஆஞ்சநேயனும்

பார்த்ததுமே தெரிந்துவிடும். 
இரண்டு நந்தி வடிவமைப்பிற்கும் வித்தியாசம் இருப்பது தெரிகிறதா? 
யாளி வடிவம்(ங்கள்)

சிவகணம்.  இக்கோயிலில் இச்சிற்பத்தை ஆங்காங்கே காணலாம்.

காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே

பாலுன் கடைவாய்ப் படுமுன்னேமேல்விழுந்து

உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே

குற்றாலத் தானை நினை - (பட்டினத்தார்)

ஜல் ஜல் ஜல் எனச் சதங்கைகள் ஒலித்திட

கொல் கொல் கொல் எனத் தலைகளை மிதித்திட

நஞ்சுடை காளியன் நலிந்து மடிந்திட

செஞ்சடையனைப் போல் களிநடம் புரிந்திட!

(நன்றி கவிநயாம்மா) 

பிக்ஷாடன மூர்த்தி (பிட்சாடனர்)? சிவனின் 64 மூர்த்தங்களுள் அழகான வடிவம். இந்தச் சிற்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக செதுக்கியிருக்கிறார்கள்

அங்கம் தழைக்க அருளும் பரனே!

அடியார்க்கு பிச்சையளிக்கும் இறைவனே!

தங்கும் பிக்ஷாடன மூர்த்தி போற்றி!

தருணமிதே அருள்புரிய வாராய்!

(திருமூலர் மந்திரம்)

பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே.

(நம்மாழ்வார் பாடல்)

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்*

அன்று ஞாலம் அளந்த பிரான்* பரன்

சென்றுசேர் திருவேங்கடமாமலை*

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே. 

(நம்மாழ்வார் பாடல்) 

கோயிலின் கருவறையின் பின் பகுதி

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

(அபிராமி அந்தாதி)

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் - பரம்

குன்றம் ஏறி நின்று குமரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

(கவிஞர் வாலி)

இன்னும் அடுத்த பகுதியில் தொடரும்...

----கீதா