சில நாட்களுக்கு முன் பிரயாணம்.வேனலினால் காதிற்குள் கட்டி, சீழ் எனற நிலை! மூன்றாவது காது பயன்படுத்த முடியாத நிலை. காதோடுதான் நான் பாடுவேன்/பேசுவேன்னு நீங்க பேசினாலும் ம்ஹூம் கேட்காது. எனவே மனதோடுதான் நான் பேசுவேன்! விழியோடுதான் விளையாடுவேன்! விழியோடுதான் விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போது பிரச்சனை தீர்ந்து மூன்றாவது காதைப் போட்டுக் கொள்ள முடிகிறது. எனவே நீங்கள் என் காதிலும் பாடலாம், பேசலாம்.... மனதோடும் பேசலாம், நான் விழியோடும் விளையாடலாம்.
எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் குரல்
வித்தியாசமான தொண்டை திறந்து பாடும் high
decibel குரலை
எம் எஸ் வி அவர்கள் ரகசியம் பேசும் குரலில் பாட வைத்திருப்பார். அந்த ரகசியத்தையும்
கேட்டு ரசிக்க முடியும் இப்போது!
மூன்று வருடங்களுக்கு முன், மூன்றாவது
காதை மாற்ற வேண்டியதானது. எனவே Audiologist - செவித்திறன் வல்லுநர்? பார்க்கச் சென்ற போது வழக்கமான,
காது கேட்கும் திறனை பரிசோதிக்கும் சோதனைகள் எல்லாம் முடிந்த பின்
"வேலை செய்கிறீர்களா"
"இல்லை."
"ஹெட்செட் பயன்படுத்துவீங்களா?"
"அவ்வப்போது வரும் வேலைகள் வீடியோ வேலைகள்ன்றதுனால அப்ப மட்டும் தொடர்ந்து.
வேலை இல்லைனா அடிக்கடி பயன்படுத்துவதில்லை."
"ஏன் கேட்டேன்னா, இப்ப சின்ன
பசங்க 22-54 வயதிற்குள்ள உள்ளவவங்களுக்கு Hearing Loss செவித்திறன் குறைஞ்சு மூன்றாவது
காது போடும்படி ஆகிட்டு வருது. காரணம், Ear Phone or Head Set போட்டு கேக்கறது அதிகமாகியிருக்கறதுனால.....
இதுவரை என்ன மாடல் பயன்படுத்தினீங்க?"
"Resound - Analog. Manual. 7 வருஷம் ஆச்சு. எனக்கு ரொம்ப வசதியாக இருக்கிறது.
அதிலேயே இப்பவும் கிடைச்சா நல்லது."
ஒரே ஒரு முறை பழுதாகி சரி செய்யப்பட்டு
வந்தது. இதில் நாமே Volume ஐ கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
ANALOG மாடல்கள் எல்லாவித சத்தங்களையும் சம அளவில் கொடுக்கும். சுற்றி வர சத்தங்கள்
எல்லாம் கேட்கும்தான், சத்தமாக இருக்கும் தான். கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பழகிவிட்டது.
தனியாக வெளியில் செல்வதால் சுற்றி நடக்கும் சத்தங்களும் கேட்க வேண்டுமே. பறவைகளின்
சத்தம் நன்றாகக் கேட்கும்! எனக்கு இதுவே செட் ஆகிவிட்டது. விலை கம்மி என்பதால் அல்ல.
நீண்ட நாட்கள் வரும். பழுது சரி செய்வதும் எளிது.
அவர் பேசிக் கொண்டே, "நீலப்பல்லோடு சேர்ந்து வரும் Samsung
Hearing Aid இருக்கு. உங்க வேலைக்கு ரொம்ப வசதியா இருக்கும்.
நீலப்பல்லை செயல்படுத்திட்டீங்கனா, Head Set போடாம, யுட்யூப் கேட்கலாம், உங்க பட வேலை
எல்லாம் செய்யலாம். முயற்சி பண்றீங்களா?"
"Digital? விலை? அப்ப Analog Model இல்லீங்களா?"
"Analog இல்லைங்க. இந்த நீலப்பல்லோடு இருக்குல்ல இது ஒரு
காதுக்கு 39 ஆயிரம், இது தள்ளுபடியில். இல்லைனா 50 ஆயிரம் மேடம், ANALOG நோ யூஸ் இனிமேல்"
"இல்லைங்க எனக்கு அதுதான் வசதியாக இருக்கு"
Digital என்றால் Programmed Hearing Aid. நம் காதில் மூன்றாவது காதைப் பொருத்தி, அதில் ஒரு
wire இணைத்து அதை கணினியோடு இணைத்து நம்மிடம் பேசி பரிசோதிப்பார்கள்.
சத்தங்கள் - உதாரணமாக அலைபேசி அடிக்கும் சப்தம்; அடுத்த அறையிலிருந்து பேசினால் கேட்கிறதா;
அலைபேசியில் பேசினால் எப்படிக் கேட்கிறது; இப்படி பரிசோதித்து, கணினியில் அந்தக் கருவியின்
program ல் கூட்டிக் குறைத்து, குறிப்பாக வெளிச் சத்தத்தைக்
குறைத்து, கேட்கிறதா என்று கேட்டு, செட் செய்து தருவார்கள்.
அவரிடம் ANALOG மாடல்கள் இல்லை. சிக்னியா மாடல் DIGITALல் இருந்தது. 18 ஆயிரம்.
அதையும் போட்டுப் பரிசோதித்து எனக்குச் சரியாக இல்லை என்று சொல்லியும், அவரோ தனது சந்தைப்படுத்தல்
திற்மையை வெளிப்படுத்த வார்த்தைகள் மேல் வார்த்தைகள் போட்டு, Analog-ஐ விட DIGITAL-ல்தான் நல்லது; தேவையில்லாத இரைச்சல்
இருக்காது; இனி DIGITAL லில்தான் வரும் ANALOG வகைகள் அவ்வளவாக வராது என்று பேசினார்.
அவருடைய வாடிக்கையாளர்களை உதாரணம் சொல்லி அதுவும் அமெரிக்கா ஆப்பிரிக்கா என்று புகழ்
பாடிட....
நம்மவர் "பிரச்சனை உங்கிட்டதான். HEARING AID ல் இல்லை" என்று என்னவோ
இதைப் பயன்படுத்திய அனுபவம் உள்ளது போன்று சொல்லி அங்கு என்னை அதிகம் பேசவிடவில்லை.
அந்த மூன்றாவது மனிதர் முன் வாக்குவாதம் வேண்டாம் என்று கப்சிப். வாங்கி வந்து ஒரு
வாரம் கடந்த போதும் கூட எனக்குச் சத்தங்கள் சரியாகக் கேட்கவில்லை. பேச்சும் தெளிவாகக்
கேட்கவில்லை. வெளியில் செல்லும் போது வண்டிகளின் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. கடைக்காரரிடம்
பேச சிரமப்பட்டேன்.
மீண்டும் இருமுறை அதே Audiologist டிடம் சென்று என் பிரச்சனைகளைச் சொல்லி செட் செய்து
கொண்டு வந்த பிறகும் ஒரு மாதம் ஆகியும் சரியாக வரவில்லை. போட்டுக் கொள்ளும் போது சரியாக
இருக்கும். ஒரு மணி நேரத்தில் வால்யூம் குறைந்து விடும். யார் பேசினாலும் திரும்பச்
சொல்லுங்கள் என்று கேட்கும் நிலை. அப்படி இரண்டு மாதங்கள் ஓட்டினேன்.
அடுத்து வேறு Audiologist டிடம் போனால் மீண்டும் 15 ஆயிரமாவது ஆகுமே என்ற ஒரு
மனஉளைச்சல். என்னடா இது பரிசோதனை. இப்போதுதான் 18 ஆயிரம் செலவாயிருக்கு. மீண்டும் என்னை
நோக்கிக் கை நீட்டினார்கள். பிரச்சனை என்னிடம்
தான் என்று.
இருந்துவிட்டுப் போகட்டும். காட்டிவிட்டுப் போகட்டும், என் பிரச்சனை எனக்குதான்
தெரியும். இந்த DIGITALலை அப்பாவுக்குக் கொடுத்துப் பார்க்கலாம் என்று நினைத்து மீண்டும்
என்னிடம் இருந்த பழைய Resound மூன்றாவது காதை போட்டுக் கொண்டு சமாளிக்கத் தொடங்கினேன்.
ஆனால் அது இரண்டு வாரங்கள் கூட தாங்கவில்லை. பொசுக்கென்று கேடாகிவிட்டது. அதைச் சரி
செய்ய மும்பைக்குதான் அனுப்ப வேண்டும்.
வேறு வழியில்லை, நம்மவரிடம் மெதுவாகப் பிரச்சனையை சொல்லிட, வேறு ஒரு Audiologist-ஐ பார்த்துவிடலாம்
என்று சென்றோம்.
அங்கும் மீண்டும் அதே Signia நிறுவனத்தின்
Digital Model. வேறு எந்த நிறுவனத்தின் Analog மூன்றாவது
காதுகள் இல்லை.
"எதுக்கும் Digital செட் பண்ணி பார்த்திடலாமா" என்று முயற்சி செய்தார்.
ஆனால் எனக்குச் சரியாக இல்லை. அவர் என் எதிரில் அமர்ந்திருக்கும் போதே அவர் பேசியது
தெளிவாக இல்லை.
"ANALOG உங்களுக்கு வசதியாக இருந்தால் அதையே தருகிறேன். உங்களுக்கு எது
வசதியோ அதுதான் நல்லது"
என்று தேடினார்!!!!!!!!!!!
வாங்கிய DIGITALலை அப்பாவின் காதில் பொருத்திப் பார்த்தேன் என்று சொன்னேன் இல்லையா?
சத்தம் எல்லாம் கேட்கிறது. ஆனால் நாம் பேசுவது தெளிவாக இருப்பதில்லை அவருக்கு. திரும்பவும்
சொல்லச் சொல்லிக் கேட்பார். எனக்கிருந்த அதே பிரச்சனைதான். அதனால் பொறுமையாக நிறுத்தி
நிதானமாகப் பேசுவேன்.
இந்தப் பெண் AUDIOLOGIST-ம் ANALOG மாடல்கள் குறைந்துவருகின்றன. இனிமேல் DIGITALல் வகைகள்தான் சந்தையில் அதிகம் வரும்
என்று பயமுறுத்தினார்.
புகைப்பிடித்தல், குடி இவற்றிற்கு
கூடவே ஒரு சட்டபூர்வ எச்சரிக்கை வருமே அப்படி ஒரு எச்சரிக்கை Ear phone/Head set காரர்களும் அப்பெட்டியில் கொடுக்கிறார்கள்தான்.
Head Set பயன்படுத்துவதைக் கூடியவரையில் தவிர்க்கவும் என்று சொன்னாலும், என் வேலைக்குப் பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லையே!
என் தங்கைகளில் ஒரு தங்கையின் மகள் Audiologist. மணிப்பால் மருத்துவமனையில் இக்கல்வி கற்று அங்கேயே இப்போது மேற்படிப்பு படித்துவருகிறாள். இப்பிரச்சனைகளுக்கு மிகவும் புகழ்பெற்ற மருத்துவமனை என்று தெரியவந்தது! அவளையும் விடுவேனா?
அவளும் சொல்வது Analog விட Digital நல்லதுதான்...
"பெரியம்மா உங்களுக்கு என்னெல்லாம் டெஸ்ட் பண்ணினாங்க?"
சொன்னேன்.
"அடக் கடவுளே!" என்று தலையில் கை வைத்துக் கொண்டாள். "அது வேலைக்காவாது,
பெரியம்மா. பெரும்பான்மையான Audiologists எல்லாரும் வியாபாரம் தான்." என்று சொன்னதோடு
அவர்கள் மருத்துவமனையில் என்னென்ன எடுப்பார்கள் என்று ஒரு பட்டியல் சொன்னாள். மிகத்
துல்லியமான, சரியான Hearing Aid அல்லது வழி முறை பரிந்துரைப்பார்களாம்.
"ரெண்டு options. உடுப்பில மருத்துவமனைக்கு வர முடியும்னா எனக்குச்
சொல்லுங்க. ஒரே ஒரு நாள். பெங்களூர்லருந்து ராத்திரி ரயில் ஏறி உடுப்பி வந்தீங்கனா,
நானும் இருப்பேன். இங்க ஒரு நாள் பரிசோதனை முடிச்சு, பிரச்சனை என்னன்னு துல்லியமாகத்
தெரிஞ்சுகிட்டு அதுக்கேத்த Hearing Aid சொல்வாங்க. அன்னிக்கு ராத்திரி ரயில்ல பெங்களூர்
போய்டலாம். இல்லைனா பெங்களூர் மணிபால் மருத்துவமனைகள்லயும் இருக்குன்னு நினைக்கிறேன்.
அங்க கூட நீங்க போய் டெஸ்ட் எடுத்துக்கலாம்"
அவள் சொல்லி 6 மாதங்கள் ஆகிவிட்டன. உடுப்பி என்றால் நான் திட்டமிட்டுப் பயணம்
செய்ய வேண்டும். இங்கிருக்கும் மணிப்பால் மருத்துவமனைகளிலும் இருக்கின்றது என்பது தெரியவந்தது.
யோசித்துக் கொண்டே இருக்கிறேன். இப்போது பயன்படுத்தும் மூன்றாவது காது பழுதாகும் போது
பார்த்துக் கொள்ளலாம். இப்போது வீட்டின் நிதித்துறைத்தலைவர் ஒப்புதல் அளிப்பதற்குக்
காத்திருக்க வேண்டும்.
இந்த ANALOG வகைகள் என் விருப்பத் தேர்வு என்றாலும் DIGITALல் ஒத்துவரவில்லை என்றாலும், போகப் போக ANALOG கிடைப்பது சிரமம் என்பதால், நான் இந்த DIGITAL க்கு அதுவும் நீலப்பலுடன் வரும் மூன்றாவது காதிற்குப் பழகியே ஆக வேண்டும்!
கேட்கும் வரை கேட்கட்டும்.....(மூன்றாவது) காதோடுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது....எனவே மூன்றாவது காதோடுதான்......போகப் போக ஆகிவிடுமோ?!!! மனதோடுதான் நான் பேசுவேன்.....விழியோடுதான் விளையாடுவேன்!
----கீதா
நான் டெஸ்ட் செய்யாமலேயே analog எயிட் அவ்வப்போது மகன் வாங்கித்தருவதையோ அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்தோ வாங்கிக் கொள்வது தான். 10 வருடங்களுக்கு முன் அமெரிக்கா சென்றபோது மகன் costco வில் கூட்டிக்கொண்டு போய் ஆடியோ டெஸ்ட் செய்தான். ஒரு காது 100% அவுட். மற்ற காது 60% அவுட். bone conduction not proper. என்றெல்லாம் கூறி டெஸ்ட் ரிசல்ட் printout கொடுத்துவிட்டு இந்தியாவிலேயே இதைக்காட்டி இரண்டு காதுகளிலும் aid பொருத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி அனுப்பினார். சார்ஜ் வாங்கவில்லை.
பதிலளிநீக்குதற்போது வெளியில் செல்வதே இல்லை. அவ்வாறு செல்லும் போது மட்டும் signia model fun sp உபயோகிக்கிறேன். sp = severe to profound.
Jayakumar
அட! அண்ணா நீங்களும் சிக்னியா அனலாக்!!!! இப்ப அதுதான் முன்னிலையில் போலும்.
நீக்குஎனக்கு இப்போது 50-50 சரி சமமான loss என்பதால் இன்னும் SP போகவில்லை. ஒரு வேளை அடுத்த முறை மாற்ற வேண்டி வரும் போது ஆகுமோ?!!!
ஆமாம் ரெண்டு காதிலயும் போட்டுக்கச் சொல்றாங்க. நான் இரண்டிலும் போட்டுக்கலை. ஒன்றில் மட்டும்தான். ஒரு வேளை இரண்டிலும் போட்டுக் கொண்டால் சத்தத்தை இன்னும் குறைத்து வைத்துக் கொள்ளலாமோ? என்னிடம் ஒன்றுதான் இருக்கிறது.
அங்கு இப்படி பரிசோதனைக்கு கட்டணம் வாங்குவதில்லைதான். Costco எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
உடம்பிலேயே மிகவும் சிறிய, மெலிதான Stapes எலும்பு சரியாக வேலை செய்யவில்லை. otosclerosis என்பது என் பிரச்சனை. அம்மாவுக்கும் இருந்தது எனவே எனக்கும் சொத்தாக!!! இதெல்லாம் முன்ன சின்ன வயசில் தெரியாதே. நல்லாதானே இருந்தது!!! பொதுவாக 20 லிருந்து 50 க்குள் இந்தப் பிரச்சனை தெரிய வருமாம் குறிப்பாக....38 வயதுதான் பெரும்பாலும் இப்பிரச்சனை முழுவதும் வெளிப்பட்டுவிடுமாம்.
எனக்குச் சின்ன வயதில் தெரியவில்லையே....தோராயமாக் 38 வயதில் தெரியவந்து 40 வரை சமாளித்து அதன் பின் அப்போதிலிருந்து இப்போதுவரை மூன்றாவது காதில்தான்!
கீதா
அண்ணா அப்ப உங்களுக்கும் conductive hearing loss என்றுதான் சொல்லப்பட்டிருக்கு நீங்க சொல்லியிருபப்திலிருந்து தெரிகிறது.
நீக்குகீதா
எனக்கு ஒரு சந்தேகம். நீங்க மூன்றாவது காது உபயோகிக்கலைனா நீங்க பேசறதும் கேட்காதா? உலகமே அமைதியாகத் தெரியுமா?
பதிலளிநீக்குஎன்னுடைய சந்தேகத்தை நீங்க கேட்டுட்டீங்க நெல்லை. நான் யார்கிட்டயாவது கேட்டு, "முட்டாள்னு" என்னைச் சொல்லிடுவாங்களோன்னு கேட்காம இருந்த விஷயம்.
நீக்குமூன்றாவது காது உபயோகிக்கலைனா நான் பேசுவது கேட்கிறதே!! எனக்குள்ளயே இல்ல ஹாஹாஹா....நான் மத்தவங்க கிட்ட பேசுவது!!!
ஆனால் மூன்றாவது காது உபயோகிக்கலைனா, உலகமே அமைதியாகத்தான் தெரியும்! ஆனால், இப்போதைக்கு, அணுகுண்டு வெடிச் சத்தம் சிறிதாகக் கேட்க்கும் (படாசு அணுகுண்டு!!!) ஆனால் போகப் போக அதுவும் கேட்காமல் ஆகலாம்.
ஆனால் மூன்றாவது காது போட்டுக் கொண்டாலும், இன்னும் மேலும் செவித்திறன் சீக்கிரம் குறையாமல் இருக்க, சில பயிற்சிகள் இருக்கின்றன. அதைச் செய்துவருகிறேன், நெல்லை.
நன்றி நெல்லை
கீதா
/செவித்திறன் சீக்கிரம் குறையாமல் இருக்க, சில பயிற்சிகள் இருக்கின்றன.// அவை என்ன என்ன என்று பறயலாமே சேச்சி
நீக்குone to one ல சொல்கிறேன் நெல்லை.
நீக்குகீதா
காது சுத்தமாக் கேட்கலைனா ஃபோகஸ், அதாவது கான்சன்டிரேஷன் அதிகமாஇருக்குமா? தியானம் போன்றவற்றிர்க்கு உபயோகமா இருக்குமா?
பதிலளிநீக்குஇருக்கும் என்று நினைக்கிறேன். மூன்றாவது காது போட முடியாத சமயங்களில் தோன்றியதுண்டு. எனவே அச்சமயத்தில் தியானம் செய்வது ரொம்பவே உபயோகமாக இருக்கும் ஆனால், ம்அல்அச்சமயம் நம் மனம் அலைபாயாமல், பக்கத்துல ஏதோ நடக்குதோ....மத்தவங்க என்ன பண்ணறாங்க? காது சரியானதும் மூன்றாவது காது போடும் போது அந்த வீடியோ கண்டிப்பா பார்க்கணும்.....படம் பார்க்கணும்.....இப்படி நாம யோசிச்சோம்னு வைங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குமூன்றாவது காது போடாத சமயங்களில் நான் அமைதியாக இருக்க முனைவதுண்டு. நான் அதைப் பயன்படுத்திக் கொண்டு. அச்சமயத்தில் தியானம் நன்றாகச் செய்யவும்....அப்படிச் செய்வதை. அதாவது வெளிச்சத்தங்கள் கேட்காமல் இருப்பதால் அதையே பயிற்சியாக எடுத்துக் கொண்டு., மூன்றாவது காது போட்டுக் கொண்டு செய்யும் போதும் அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்வதுண்டு.
நான் மூன்றாவது காதுடன் இருக்கும் போதே பொதுவாகவே எங்கள் வீட்டிலும் சரி கூட்டத்திலும் சரி என்னைக் குறிப்பிட்டு என்னைப் பார்த்து யாரும் பேசினாலொழிய நான் கவனம் செலுத்துவதில்லை என்று சொல்லபப்டுவதுண்டு. நான் செய்யும் வேலையில் ஆழ்ந்து விடுவதுண்டு. அப்போதும் இதேதான். அது நிச்சயமாகக் காது கேட்கவில்லை என்பதால் அல்ல. அதுவும் நான் ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கிவிட்டால், என்னிடம் யார் பேசினாலும் என் கவனம் இருக்காது அவர்களிடம். இதற்கும் திட்டு வாங்குவதுண்டு!! ஆனால் காது கேட்கலை என்பார்கள். இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு என்பதைப் பலரும் உள்வாங்குவதில்லை.
கீதா
//என்னிடம் யார் பேசினாலும் என் கவனம் இருக்காது அவர்களிடம். // ஓ இந்த டிரிக் உங்கள்டயும் இருக்கிறதா? நான், மனைவி பிறகு 'அப்போவே சொன்னேனே' என்று சொன்னால், கவனிக்கலை,,, செய்துகொண்டிருந்த வேலையில் கவனமாக இருந்தேன் என்று சொல்லிடுவேன்.
நீக்குநான் கொஞ்சம் வித்தியாசம். கணினியில் வேலை செய்து கொண்டிருப்பேன். என் கவனம் இங்கே தான் இருக்கிறது, அவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை என்று வீட்டில் கோபமாக இருப்பார்கள். உண்மையில் அவர்கள் பேசுவதையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். அதை அவர்களிடம் சொல்வதில்லை. தேவையான இடங்களில் மட்டும் பின்னர் பதில் சொல்லும்போது "கவனித்தீர்களா" என்று கேள்வி வரும். அது மட்டும் காதில் விழுந்தது என்பேன்.
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த ஒரு வரிய மட்டும் எடுத்துக்கிட்டு கருத்தா!!!!!!ஹாஹாஹாஹா....
நீக்குநான் சொன்னது....நான் ஆழ்ந்த வாசிப்பு அல்லது முக்கியமான வேலையில் கவனம் - குறிப்பாக ஏதேனும் வறுத்துக் கொண்டிருந்தால், அல்லது பிரார்த்தனை செய்து கொண்டிருந்தால் அப்ப என் கவனம் இருக்காது என்றேன்.
கூடவே, இப்ப ஒரு குழு இருக்குன்னு வைங்க.....அதில் எனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள் பேசப்பட்டால் என் கவனம் அதில் இருக்காது. நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவேன். உதாரணத்திற்கு - வீட்டில் ஒரு குழு அல்லது வெளியில் ஒரு குழு....அதில் வம்பு பேசப்பட்டால்....நான் கவனம் செலுத்த மாட்டேன்.
என்னிடம் ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் என்னை நோக்கிச் சொன்னால் மட்டுமே என் கவனம் இருக்கும் - நேரில் கண்ணோடு கண் பார்த்துப் பேசுவது - இது என் இயல்பு ப்ளஸ் காது கேட்காததாலும்....
நாம் செய்யும் வேலையில் கவனமாக இருத்தல் என்பது மிகப் பெரிய நல்ல விஷயம் , நெல்லை. இதைக் குறை சொல்ல முடியாது. அப்போது யாரேனும் பேசினால் நாம் சொல்லிடலாம். கொஞ்சம் டைம் கொடுங்க, முடிச்சுட்டுப் பேசலாம்னு...இல்லைனா இப்ப இருக்கவே இருக்கு வாட்சப். இப்படித்தான் நான் மகனோடு தொடர்பில்.
இதுதான் பொதுவாகவே ஆளுமைத் திறனுக்குச் சொல்லப்படுவது.
கீதா
ஸ்ரீராம், wow multi tasking! இது எல்லாருக்கும் வருவதில்லை ஸ்ரீராம்.
நீக்குபார்க்கப் போனால் எனக்கு முன்னர் இருந்தது ஒரே நேரத்தில் அடுக்களை, மற்ற வேலைகள், பேச்சு என்று செம துரிதமாகச் செய்து முடிப்பேன் இப்ப அது இல்லை. காரணம் அப்ப காது கேட்டுக் கொண்டிருந்தது. இப்ப இல்லையே!!!! ரெண்டாவது அப்ப ஃபோன் கிடையாது!!!ஹிஹிஹி
கீதா
ஹெட் செட் பயன்படுத்துவது ஆபத்து என்று சொல்றீங்களே... உண்மையா? ஒரு நாளைக்கு எவ்வளவு நிமிடங்கள், மணி நேரம் பயன்படுத்தலாம்?
பதிலளிநீக்குஅப்படித்தான் சொல்லப்படுகிறது நெல்லை. தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்பது சரிதான். Head set or Ear phone. குறைந்த சத்தத்தில், வைத்துக் கொண்டு அதாவது பொதுவாகச் சொல்லப்படும் விதிமுறை - 60:60 அதாவது 60 % சத்தம் வைத்துக் கொண்டு அதிகபட்சமாக 60 நிமிடங்கள் கேட்கலாம் ஒரு நாளில். ஆனால் தொடர்ந்து இவற்றைப் பயன்படுத்தினாலோ, அதிகச் சத்தமாகக் கேட்டாலோ நாளடவில் செவித்திறன் குறைந்து கேளாமை வரும் என்றுதான் அறிவுறுத்துகின்றனர், நெல்லை.
நீக்குகீதா
நெல்லை, நீலப்பல்லோடு வரும் hearing aid போட்டுக் கொண்டால் மத்தவங்களுக்குக் கேட்காம, எனக்கு மட்டுமே கேட்குமாம் ஹெட் செட்டும் போட்டுக்க வேண்டாமாம்....அப்படி இருக்கின்றன டிஜிட்டல். விலை ஒரு காதுக்கே 50 ஆயிரம்!!!
நீக்குஆனால் நான் மணிப்பால் ஆஸ்பத்திரிக்குப் போய் சரியான பரிசோதனைகள் செய்த பிறகு இதைப்பற்றி எழுத வேண்டும். அல்லது என் தங்கை பெண்ணிடம் கேட்க வேண்டும் அவள் Audiologist அதில் அவள் specialization செய்கிறாள்.
கீதா
ஹெட் செட் பயன்படுத்துவதால் சீக்கிரம் காதுகள் பழுதடைகின்றன என்றுதான் நானும் படித்திருக்கிறேன். ஏனோ அது மட்டும் மனதில் பதிந்து நான் 99.9 % ஹெட் செட் உபயோகிப்பதில்லை!
நீக்குரொம்ப ரொம்ப நல்ல விஷயம் ஸ்ரீராம். இதை அப்படியே கடைப்பிடியுங்கள்!
நீக்குகீதா
கீதா , நீங்கள் சொல்வதை கேட்கும் போது எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது செவித்திறன் குறைந்தால் என்று இருக்கிறது.
பதிலளிநீக்குமணிப்பால் அல்லது உடுப்பி போய் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இப்போது செயற்கை உபகரணங்கள் விலை அதிகம் தான்.
காது, பல், கால்முட்டி எல்லாம் பழுது ஆனால் அதிக விலைதான் கொடுக்க வேண்டி இருக்கிறது.
ஒலி அளவை அதிகம் வைத்து கேட்பது ஹெட் செட் அணிந்து வேலை பார்ப்பது எல்லாம் காதுக்கு கஷ்டம் தான்.
இப்போ உள்ளவர்கள் கணினியில் ஹெட்செட் அணிந்து தான் வேலை பார்க்க வேன்டி உள்ளது . கணினி திரையை வெகு நேரம் பார்க்க வேண்டி உள்ளது.
எல்லாம் பிரச்சனைகளை கொண்டு வருகிறது , என்ன செய்வது.
புத்தாண்டு வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.
வாங்க கோமதிக்கா. வாழ்க்கை முறை மாறிவிட்டதே இல்லையா?
நீக்குஅக்கா அது மணிப்பால் மருத்துவமனை. அது உடுப்பி அருகிலும் இருக்கிறது... chain hospitals என்று சொல்வார்களே அப்படி இங்கு பெங்களூரிலும் இருக்கின்றன.
ஆமா, செயற்கை உபகரணங்கள் நீங்க சொல்லியிருப்பது போல் எல்லாமே விலை கூடுதல்தான்.
இப்ப பல வேலைகள் ஹெட் செட் இல்லாம முடியலை. எனக்கு வரும் வேலையும் அப்படித்தான். கூடவே பிரச்சனைகளும்...
புத்தாண்டு வாழ்த்துகள் கோமதிக்கா
மிக்க நன்றி அக்கா கருத்திற்கு
கீதா
ஆமாம், நேரம் கிடைக்கும்போது போகலாம் என்றிருக்காமல், இது முக்கியமான விஷயம் என்பதால் நேரத்தை உண்டாக்கிக் கொண்டு சென்று வருவது நல்லது என்றுதான் நானும் சொல்வேன்.
நீக்குஸ்ரீராம், நேரம் பிரச்சனை இல்லை ஸ்ரீராம். அதை இங்கு நாங்கள் திட்டமிட்டுக் கொண்டு செய்துவிடுவோம். பதிவில் சொல்லியிருக்கேன் பாருங்க. அதுதான் காரணம்.
நீக்கு//இப்போது வீட்டின் நிதித்துறைத்தலைவர் ஒப்புதல் அளிப்பதற்குக் காத்திருக்க வேண்டும்.//
கீதா
என் பிரச்சனை stapes bone அதிர்வு ஏற்படுத்தாமல் முடங்கி இருப்பதால் என்பதால் மகனும் மருமகளும் கூட இதைப் பற்றிப் பேசியிருக்காங்க. என்னிடம் சொன்னாங்க, அவங்க கொஞ்சம் பணம் சேமித்துக் கொண்டு, மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு சென்று எல்லாப் பரிசோதனைகளும் செய்து குறிப்பாக காது எலும்புகளின் அமைப்பு மாற்றங்கள் எல்லாம் பரிசோதித்து உள்ளே செயற்கை Stapes வைக்க முடியுமா என்று அந்த அறுவை சிகிச்சை அல்லது implantation க்கு கூட வேலை செய்பவர் செய்து கொண்டு நன்றாகக் காது கேட்கிறதாம்....இங்கு 15 லட்சம் ஆகுமாம். கொஞ்சம் டைமெ டுக்கும் என்றும் சொன்னார்கள்.
நீக்குஅதற்கு முன் இங்கு மணிப்பால் மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்வதற்கும் இங்கிருக்கும் நிதிதுறை ஒப்புதல் வேண்டுமே!
கீதா
stapedectomy/stapedotomy - என்றால் கொஞ்சம் குறைவுதான் 50000 - 1.5 லட்சம் வரை. எனக்குச் சொல்லபப்ட்ட otosclerosis என்றால்....இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்து பரிசோதித்து. முடியும் என்றால் மட்டுமே அறுவை சிகிச்சை. எதுவாக இருந்தாலும் இருவரும் தங்களை அனுகூலமான ஸ்திதியில் வைத்துக் கொண்டுதானே செய்ய முடியும். இல்லையா...அதான் காரணம்.
நீக்குகீதா
முதலில் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு கருத்து சொல்லிவிடுகிறேன்! "காதோடு தான் நான் பேசுவேன்" என்று பாடல் வரும் அதே படத்திலேயே "நான் சத்தம் போட்டு தான் பாடுவேன் " என்று பி சுசிலா பாட்டு ஒன்றும் உண்டு.
பதிலளிநீக்குஓ அப்படியா!! அட! அப்ப அந்தப் பாட்டும் கேட்டுவிட வேண்டும்!
நீக்குசொன்னதற்கு நன்றி ஸ்ரீராம். கேட்டதில்லை இப்பாடல்.
கீதா
காது பிரச்சனை பெரிய பிரச்சனை. கேட்காதவர்களுக்கு ஒரு மாதிரி பிரச்சனை என்றால், அவர்களிடம் பேசுபவர்களுக்கு வேறு மாதிரி பிரச்சனை. நான் பார்த்து, என் சித்தப்பா உட்பட சில பேர், காது கேட்கவில்லை என்பதை ஒத்துக் கொள்ளாமல் "நீங்கள் பேசுவது எனக்கு கேட்கிறது" என்றோ, "நான் புரிந்து கொள்வேன்" என்று சொல்லியோ உதட்டசைவினை வைத்து கொஞ்சம் கொஞ்சம் யூகித்து பதில் சொல்கிறார்கள் .
பதிலளிநீக்குஎதிரில் பேசுபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.
காது கேட்காதவர்கள் பலர் இப்படித்தான் சொல்கிறார்கள் ஸ்ரீராம். நான் அப்பாவுக்குச் சில சைகை மொழிகள் கற்றுக் கொடுத்தும், அவருக்கு அதை உள்வாங்க முடியவில்லை. நம்மைச் சுற்றி உள்ளவங்களுக்குப் பிரச்சனையை குறைக்கலாமே என்ற எண்ணம் நமக்கு வந்துவிட்டால் நம்மை, நம் செயல்பாடுகளை மாற்றிக் கொள்வோம்.
நீக்குகீதா
என் அம்மாவுக்கு கிட்டத்தட்ட அவருடைய 40வது வயதில் இருந்து காது கேட்காத பிரச்சினை வந்தது .
பதிலளிநீக்குஅதை நாங்கள் பல்வேறு வகையில் சமாளித்தோம். முன்னர் எழுதியிருக்கிறேன்.
ஜெ கே அண்ணாவுக்குக் கொடுத்திருக்கிறேனே அதே காரணம் தான் ஸ்ரீராம். எனக்கு 38 வயதில் வெளிப்படத் தொடங்கி 40லிருந்து தொடர்ந்து. என் அம்மாவுக்கும் அதே.
நீக்குநீங்கள் எழுதியது நினைவிருக்கிறது ஸ்ரீராம்.
கீதா
காதுக்குக் கருவி பொருத்தம் விஷயத்தில் ஏற்படும் சங்கடங்கள் ,குழப்பங்கள் நானும் சமீபத்தில் அனுபவித்தேன். என் மாமியாருக்கு காதுக்கு கருவி மாட்ட முயற்சித்து வாங்கினோம். இன்று வரை சும்மா ஓரமாகத்தான் வைத்திருக்கிறார் . கேட்டால் அதை போட்டால் தொண்டை வலிக்கிறது என்கிறார்! கட்டி கட்டி பேசி எங்களுக்குத்தான் நெஞ்சு வலிக்கும் போல இருக்கிறது.
பதிலளிநீக்குசொல்லியிருக்கீங்களே ஸ்ரீராம். நம்மைச் சுற்றி இருப்பவங்களுக்கு நாம் சிரமம் கொடுக்கக் கூடாது என்றாவது கண்டிப்பாகப் பயன்படுத்தினால் நல்லதுதான்.
நீக்குகருத்துகள் எல்லாத்துக்கும் நன்றி ஸ்ரீராம். இன்னும் இருக்கு நாளைக்குத் தருகிறேன்
கீதா
காது கேட்காதது ஒரு பிரச்சனை என்றால், கருவி வந்தும் கூட அதை மாட்ட முடியாமல் அங்கு புண் சீழ் என்று வந்து தொல்லை கொடுப்பது இன்னும் சிரமம். எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ..
பதிலளிநீக்குஅந்தச் சமயங்களில் கூட உள்ளவர்களுக்கு, அதுவரை நார்மலாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இப்ப பேசினாலும் கேட்காது எனும் போது டக்கென்று அந்தச் சூழல் அவர்களுக்குக் கைவராமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த ஒரு வாரமும் வீட்டில் சிரமமாக இருந்தது. காரணம் நான் பேசியதும் அவங்களுக்கும் உடனே பேசத்தான் தோன்றுமே அல்லாமல் வேறு விதமாக கம்யூனிக்கேட் செய்ய சிரமப்பட்டு....சங்கடத்துடன் வாட்சப் மெசேஜஸ்னு எப்படியோ சமாளித்தாயிற்று
நீக்குகீதா
வியாபாரத்துக்காக அவர்கள் டிஜிட்டல் விற்கிறார்கள் என்றாலும் அதுதான் இனி மார்க்கெட்டில் கோலோச்ச போகிறது என்னும்போது வேறு வழியும் இல்லை. என்னை கேட்டால் நம் காது பழக்கப்படுத்திக் கொள்வது தான் என்று சொல்வேன். உண்மையில் இது என் அம்மா சொன்னது. முதன் முதலில் ஹியரிங் எய்ட் போட்டதும் ரொம்பவும் கஷ்டப்பட்டார். தலை வலிக்கிறது என்பார். சரியாக கேட்கவில்லை என்பார். போகப் போக பழகி விட்டது. நாங்களும் ஹியரிங் எய்ட் போட்டவர்களிடம் எப்படி பேசுவது என்று பழகிக் கொண்டோம். படபடவென்று பேசக்கூடாது. பரபரப்பாக வேகமாக பேசக்கூடாது. சிறிய குரலில் நிறுத்தி நிதானமாக பேசினாலே அவர்களுக்கு கேட்கும், புரியும்.
பதிலளிநீக்குசரிதான் ஸ்ரீராம். நம் காது பழக்கப்படுத்திக் கொள்வதுதான். நானும் பழகிக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் டிஜிட்டல் போட்ட போது வீட்டிலேயே பிரச்சனையாக இருந்தது. ஆனால் காதை சரியாகப் பரிசோதித்துவிட்டு டிஜிட்டல்.....
நீக்குநீங்கள் சொல்லியிருப்பது போல், ரொம்ப வேகமாகப் பேசறாங்களே இப்பலாம் ஷார்ட்ஸ் அது இதுன்னு. அதுவும் சில காணொளிகளில் ரொம்ப வேகமாகப் பேசுவது எனக்கு மிகவும் சிரமம் புரிந்து கொள்வது. அதனால் அப்படியானவை என்ன சுவாரசியமாக இருந்தாலும் பார்ப்பதில்லை. கூடியவரை கண்ணோடு விளையாடுவது பிடித்திருக்கிறது!!!!
கீதா
இரவுகளில் கழற்றி வைத்துவிட்டு படுப்பது தான் சரி என்று சொன்னாலும், ஏதோ ஒரு வித பயமாக இருக்காது?
பதிலளிநீக்குபல சமயங்களில் கஷ்டமாக இருக்கும் ஸ்ரீராம் அதுவும் தனியாக இருக்க நேரும் போது. ஆனால் பழகிவிட்டது.
நீக்குகீதா
எதிர்காலத்தில் டிஜிட்டல் கருவியே உங்களுக்கு பொருந்துபடியாக வந்துவிடும். நீங்கள் வெளியே செல்வதால் ஹியரிங்க் எய்ட் அவசியம்.
பதிலளிநீக்குபெயரில்லா யார் இது? தயவு செய்து பெயரைக் கொடுக்கலாமே!
நீக்குஆமாம் எனக்கு அவசியம் என்று தெரியும். வெளியே செல்வதால். எதிர்காலத்தில் டிஜிட்டல் வந்துவிடும் என்றும் தெரியும்.
மிக்க நன்றி
கீதா
காதுக்குள் வைத்துக் கொள்ளாமல் காதுக்கு பின்புறம் வைத்துக் கொள்ளும்படியாக ஹியரிங் எய்டுகள் கிடைக்கின்றனவே? அவை உங்களுக்கு பொருந்தவில்லையா?
பதிலளிநீக்குநான் காதுக்குள் வைத்துக் கொள்வதை வாங்கவில்லை. காதுக்குப் பின்புறம் வைத்துக் கொள்ளும்படியான ஹியரிங் எய்டுகள்தான் பொருத்திக் கொண்டிருக்கிறேன். பதிவொ படத்தில் கொடுத்திருக்கிறேனே!
நீக்குமிக்க நன்றி பெயரில்லா
கீதா