சுருட்டப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுருட்டப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜூன், 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 3

 

பகுதி 1 இங்கே 

பகுதி 2 இங்கே

என்னோடு உலாவந்தவர்கள், வருகிறவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  முந்தைய பதிவில் கோயிலைப் பார்க்கும் முன் அது அமைந்துள்ள இடமான ஆரணி ஆற்றைப் பற்றிய புராணத்தை அறிந்தோம்.  அதன் தொடர்ச்சியாக இப்போது நாம் கோயிலைப் பார்க்கப் போவோம்.  ஏன் இங்கு ஈசன் பள்ளிகொண்டார் என்பதைப் பற்றி.

புதன், 1 ஜூன், 2022

நாராயணவரம் ராமகிரி வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள்/மத்ஸ்ய நாராயணப் பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 2

 

பகுதி 1

என்னோடு எல்லோரும் ஏறிவிட்டீர்கள்தானே! சென்ற பதிவை வாசித்துக் காத்திருந்தமைக்கு மிக்க நன்றி. இப்போது இத்தலத்தைப் பற்றி....

பிரதோஷ வழிபாட்டிற்குப் பெயர் பெற்ற சுருட்டப்பள்ளி – ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் 

தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஊத்துக்கோட்டையிலிருந்து 2 கிமீட்டர் தூரத்தில் ஆந்திர எல்லை தொடங்கும் சுருட்டப்பள்ளி எனும் சிறிய ஊரில்தான், ஆரணி ஆற்றின் கரையில் பள்ளி கொண்டிருக்கிறார் பரமேஸ்வரன்!

வெள்ளி, 27 மே, 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 1

 

சென்ற பதிவை வாசித்த, பதிவிற்குக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

இப்பதிவு, வலைப்பதிவர் கூட்டாஞ்சோறு செந்தில் அவர்கள் கோயில் பற்றிய சுற்றுலா ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று தனது பயணப் பதிவுகள் வலைப்பூவிற்காக 5 வருடங்களுக்கு முன் கேட்க அப்போது இதிலுள்ள சுருட்டப்பளி கோயில் பற்றி மட்டும் எழுதி, அவருக்கு அனுப்பியும் வைத்தேன். வந்ததா என்று தெரியவில்லை. அதன் பின்னர் மற்ற கோயில்கள் பற்றியும் எழுதி வைத்தேன்.