வெள்ளி, 27 மே, 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 1

 

சென்ற பதிவை வாசித்த, பதிவிற்குக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

இப்பதிவு, வலைப்பதிவர் கூட்டாஞ்சோறு செந்தில் அவர்கள் கோயில் பற்றிய சுற்றுலா ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று தனது பயணப் பதிவுகள் வலைப்பூவிற்காக 5 வருடங்களுக்கு முன் கேட்க அப்போது இதிலுள்ள சுருட்டப்பளி கோயில் பற்றி மட்டும் எழுதி, அவருக்கு அனுப்பியும் வைத்தேன். வந்ததா என்று தெரியவில்லை. அதன் பின்னர் மற்ற கோயில்கள் பற்றியும் எழுதி வைத்தேன்.

அதன் பின் அவரிடம் எங்கள் தளத்தில் போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டிட அவர் போட்டுக் கொள்ளலாம் என்ற போது படங்கள் எல்லாம் Maxtor External Drive ல் மாட்டிக் கொண்டதால், அவருக்குப் படங்களை மின் அஞ்சலில் தனியாக அனுப்பியதால் அந்த மின் அஞ்சலும் எப்படியோ அழிந்து போயிருக்க, பதிவு வெளியிட முடியாமல் இருந்தது.

பல முறை கணினியில் இணைத்துப் பார்த்தும் வேலை செய்யாமல் இருந்த Maxtor ஐ ஒவ்வொருநாளும் கணினியில் இணைத்து மீண்டும் பரிசோதிக்க இன்று எப்படியோ கணினி அதனை அடையாளம் கண்டு கொள்ள உடனே விடுவேனா, பதிவிற்கான படங்களை கணினியில் சேமித்துக் கொண்டேன். நிறைய பதிவுகளுக்கான படங்கள் அதில்தான் இருக்கின்றன!

USB ஐ ஒரு நிலையில் பிடித்துக் கொண்டால் கணினி அடையாளம் கண்டுவிடும் அந்த நிலையில் அதன் அடியில் ஒரு சிறு பெட்டியை வைத்துவிட்டேன். (புகைப்படங்களைப் பார்த்து அதில் இருக்கும் தேதி வருடம் எல்லாம் பார்த்து நெல்லை என்னைக் கலாய்ப்பார் என்பதால் இந்த முன்னுரை அவசியமாகிப் போனது!!!!! இன்னும் வரும் சில பயணப்பதிவுகளுக்கும் இந்த முன்னுரையை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமாக்கும்!!!)

என் தங்கையின் சில பிரார்த்தனை பரிகார வேண்டுதல்களுக்காக அவளுடன் சில கோயில்கள் குறிப்பாக பைரவர் கோயில்கள்/பைரவர் சன்னதிகள் உள்ள கோயில்கள் பைரவர் கோயில்கள் என்று திருப்பத்தூரில் உள்ள (நம் தேவகோட்டைக்காரரின் ஊர் பக்கம்) ஆதிபைரவர் கோயில் தொடங்கி அருகிலுள்ள கோயில்கள் 9 (என்று நினைவு!!) ஒரே நாளில் சென்று வர வேண்டும் அதுவும் ஒரு வரிசை முறையில் சென்று தொடங்கிய கோயிலில் முடிக்க வேண்டும் என்பதோடு பிரதோஷ தினங்களில் சிவன் கோயில் சென்று வர வேண்டும் என்று பரிகார வேண்டுதல்கள்.

அப்படியான வேண்டுதல்களின் தொகுப்பில் தமிழ்நாடு ஆந்திர எல்லையில் ஆனால் ஆந்திராவில் இருக்கும் இரண்டு சிவன் கோயில்களும் உண்டு.

முதல் பாரா திருப்பத்தூர் கோயில்களின் படங்கள் வேறு ஒரு பதிவில்.

நான் வேண்டுதல்கள் வைத்துக் கொள்வதில்லை. எனக்குப் பிராயாணத்திற்கு வாய்ப்பு கிடைத்தால் கிளம்பிவிடுவேன் என் மூன்றாவது விழியுடன். அனுமதி இருக்கும் கோயில்களில் கோபுரங்கள், சிற்பங்கள் இவற்றைப் படம் பிடிப்பது பிடித்த விஷயம்!  

கோயில்கள் என்றால் வீட்டில் பெரும்பாலும்நோவராது.  எனக்கோ பயணம் பிடிக்கும் கூடவே மிகவும் ஆர்வத்துடன் நாலு சக்கர வாகனத்தை அனுபவித்து ஓட்டிய சாரதியாகவும் இருந்த சாதகமான சூழல். 

அப்படியாக, இத்தொடர் பதிவில் தமிழ்நாட்டு எல்லையில் ஆந்திராவில் இருக்கும் இரு சிவன் கோயில்களும், கூடவே இரு விஷ்ணு கோயில்களும்.

நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில்

சென்னையிலிருந்து திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை-புத்தூர் வழி திருப்பதி செல்லும் சாலையில் (ஆந்திராவில்) முக்கியமாக 4 கோயில்கள் – புத்தூர் - நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், ராமகிரி - வாலீஸ்வரர், நாகலாபுரம் - வேத நாராயணப் பெருமாள் கோயில், தமிழ்நாடு ஆந்திரா எல்லையை ஒட்டிக் கொண்டு ஆந்திராவில் சுருட்டப்பள்ளியில் இருக்கும் பிரதோஷ வழிபாட்டிற்குப் பெயர் பெற்ற சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோயில்.

ராமகிரி வாலீஸ்வரர் கோயில்

நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள் கோயில்

இந்த நான்கும் ஒரே பாதையில் இருப்பதால், நான்கு சக்கர வண்டி இருந்தால், அல்லது வாடகைக்கு எடுத்துக் கொண்டால், சரியான திட்டமிடல் இருந்தால் நான்கையும் ஒரே நாளில் தரிசித்துவிடலாம் என்பதாலும், நான் சாரதியாக இருந்த காலத்தில் நான்கு சக்கர வண்டியில், வீட்டிற்கு வருவோரை எல்லாம், அழைத்துச் சென்ற பல முறை அனுபவம் உள்ளதாலும் எழுதலாமே என்று இப்பதிவு.

சென்னையிலிருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்பினால் முதலில் புத்தூர் நாராயணவனம் – 2 ½ - 3 மணி நேரத்தில் சென்று அங்கிருந்து சென்னைக்குத் திரும்பும் வழியில் ராமகிரி, அதற்கு மிக அருகில் இருக்கும் நாகலாபுரம் வேத நாராயணப் பெருமாள் கோயில் வரை மதியம் 1 மணிக்குள் முடித்துக் கொண்டுவிடலாம். இக்கோயில்கள் காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டால் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும். 

அதன் பின் சென்னைக்கு வரும் வழியில் கொஞ்சம் காத்திருந்து 4.30 மணிக்கு மேல் திறக்கும் சுருட்டப்பள்ளி கோயிலையும் தரிசித்துவிட்டு முடிந்தால் திருவள்ளூர் கோயில், திருமழிசையும் முடித்துக் கொண்டு வந்துவிடலாம்.

சென்னையிலிருந்து நிறைய பேருந்து வசதிகளும் உண்டு. சென்றதுண்டு ஆனால் அது பல வருடங்களுக்கு முன் என்பதால் இப்போதைய மாற்றங்களைத் தெரிந்துகொண்டு செல்லலாம். பேருந்தில் சென்றால் எல்லாம் கவர் செய்ய முடியாது.

நிற்க, எதற்கும் செல்லும் முன் இணையத்தில் கோயிலின் வழிபாட்டு நேரங்கள் பார்த்துத் தெரிந்துகொண்டுவிடுவது நல்லது. அல்லது கோயிலுக்கான எண்ணை அழைத்துத் தெரிந்து கொண்டுவிடுவது நல்லது. சில திருவிழாக்களின், விசேஷங்களின் போது வழிபாட்டு நேரங்கள் மாறுபடும்.

நான் வழக்கமாகச் சென்ற பாதையைச் சொல்கிறேன். போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை. சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் நெடுஞ்சாலை வழியாகச் சென்று (சந்திப்பில்) வலதுபுறம் திருமழிசை – திருவள்ளூர் சாலையில் சென்று  (திருமழிசை-திருவள்ளூர் சாலையை ;அடையும் வரை கொஞ்சம் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.) திருவள்ளூர் பேருந்து நிலையத்தைக் கடந்ததும் சற்று தூரத்தில் வலது புறம் திருப்பதி செல்லும் சாலையில்  திரும்பிட வேண்டும்.

அப்படிப் போகும் போது 27 கிமீ தொலைவில் உள்ள தமிழ்நாடு ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டையைத் தாண்டியதும் 2 கிமீ ல் சுருட்டப்பளி கோயில் முதலில் இருக்கிறது. அதைக் கடந்து 11 ½ கிமீ தூரத்தில் நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள் கோயில், அங்கிருந்து 5 ½ கிமீ தூரத்தில் ராமகிரி வாலீஸ்வரர் கோயில், அங்கிருந்து 23/24 கிமீ ல் நாராயணவனம். அதே சாலையில் தொடரலாம்.

இப்போது கூகுள் மேப் இருப்பதால் எளிதாக இருக்கும். நான் சென்ற போதெல்லாம் கூகுள் மேப் வைத்துக் கொண்டதில்லை.

கடைசியில் தரிசித்த கோயிலான பிரதோஷ வழிபாட்டிற்குப் பெயர் பெற்ற சுருட்டப்பள்ளி – ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து நம் பயணத்தைத் தொடங்குவோம். 

சுருட்டப்பள்ளி - ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்

என்னோடு வண்டியில் ஏறிக் கொள்ளக் காத்திருங்கள்!!!!


----கீதா

38 கருத்துகள்:

  1. பென் டிரைவ் ஒரு நிலையில் பிடித்தால் வேலை செய்யும்போதே நைஸாய் அதில் உள்ளவற்றைக் காப்பாற்றி விட வேண்டும்.  நானும் சில அப்படி செய்து காப்பற்றி எடுத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்...ஆமாம் நைசாய் இப்போது அப்படித்தான் செய்து இருக்கிறேன்.!!! இது எக்ஸ்டர்னல் ட்ரைவ் மாக்ஸ்டர் கொஞ்சம் பளு உள்ள பெரிய ட்ரைவ். பெட்டி போன்று இருக்கும். மகன் பயன் படுத்தியது. இப்போது நான். மற்ற ஃபைல்களை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்னு. இப்பதிவு முடிந்ததும் கணினியிலுள்ள படங்களை எல்லாம் அழித்துவிட்டால் இடம் கிடைக்கும் அப்போது அடுத்த பதிவுக்கான படங்களை எடுத்துக் கொள்ளலாமே என்று...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. படங்கள் பிரமாதமாக எடுத்திருக்கிறீர்கள்.  பாதை எல்லாம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.  நிறைய கோவில்கள் முன்னரே மூடி விடுவதால் நம் பயணத்தில் நிறைய கோவில்களை கவர் செய்ய முடியாமல் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் பிரமாதமாக எடுத்திருக்கிறீர்கள். பாதை எல்லாம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.//

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      //நிறைய கோவில்கள் முன்னரே மூடி விடுவதால் நம் பயணத்தில் நிறைய கோவில்களை கவர் செய்ய முடியாமல் போகிறது.//

      ஆமாம் ஸ்ரீராம். ஆனால் இந்த நான்கும் கண்டிப்பாக ஒரே நாளில் கவர் செய்து கொண்டு விட முடியும். ..முதலில் நாராயணவனம் சென்றுவிட்டால் அங்கு ஒரு மணி நேரம் செல்விட்டால் கூட, திரும்ப வரும் போது அங்கிருந்து ராமகிரி 45 - 50 நிமிடத்தில் வந்துவிடலாம் என்பதால் கவர் செய்துவிடலாம். மிகவும் சிறிய கோயில்...அதன் பின் அங்கிருந்து 15-20 நிமிடத்தில் வேதநாராயணக் கோயில் வந்துவிடலாம் 1 மணிக்குத்தான் மூடுகிறார்கள். அதன் பின் 1/2 மணி நேரத்தில் சுருட்டப்பள்ளி வந்துவிடலாம். ஆனால் அங்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும். எனவே அங்கு மதிய உணவு சாப்பிட்டு, மாலை கோயில் திறக்க கொஞ்சம் காத்திருந்து இதுவும் சிறிய கோயில்தான் எனவெ முடித்துக் கொண்டு திருவள்ளூர், திருமழிசையும் கூட தரிசனம் செய்துவிட்டு வந்திடலாம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. எனக்கும் ஒரு ஆசை இருக்கிறது, நிறைய பயணம் செய்ய.  ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிருஷ்டம் இருக்கு கழுத்தை மேய்க்க என்பார்கள்.  அது போல இருக்கிறது என் நிலைமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக உங்கள் பயண ஆசை நிறைவேறும் ஸ்ரீராம்! எல்லாம் நடக்கும். எல்லாம் சரியாகும் பாருங்க!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. அதென்னவோ திருவள்ளூர் என்றாலே எனக்கு பெரம்பூர் ஸ்ரீநிவாஸா ஹோட்டல் தான் நினைவுக்கு வருகிறது...  ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  5. அதென்னவோ திருவள்ளூர் என்றாலே எனக்கு பெரம்பூர் ஸ்ரீநிவாஸா ஹோட்டல் தான் நினைவுக்கு வருகிறது...  ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா . சமீபத்தில் கூட அங்கு போனது பத்திதானே எழுதியிருந்தீங்க..

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. பதிவுகளின் முன்னோட்டம் அருமை...

    ஒரு மின்னஞ்சலுக்கு - கூகுள் ட்ரைவ் 15 GB வரை இலவசம் தான்... அதில் தரவேற்றம் செய்து விட வேண்டும்... கவலையில்லை...

    வலைப்பூ பதிவில் (draft post) கூட தரவேற்றம் செய்து வைக்கலாம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி.

      ஆமாம் கூகுள் ட்ரைவில் சேமித்து இருக்கிறேன். இப்போது. அது தவிர ஒன் ட்ரைவ் அதுவும் இருக்கிறது. அதிலும் போட்டு வைத்திருக்கிறேன்.

      இவற்றில் போட்டது போக நிறைய இருக்கிறது. மாக்ஸ்டரில். வேண்டாததை எல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் படங்களை யுட்யூபிலும் போட்டு வைத்துவிடுகிறேன்.

      வலைப்பூ பதிவில் ட்ராஃப்ட் நிறைய இருக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! முடிக்காம. இப்போது இது கூட அதிலிருந்துதான் எடுத்து இங்கு!!!!!

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
    2. டிடி, வலைப்பூ ட்ராஃப்டில் வைப்பதில் ஒரே ஒரு சங்கடம்....சில சமயம் கை தவறுதலாகப் பட்டு வெளியாகிவிடுமோ என்று!!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. என் கூகுள் டிரைவ் Full!  இன்னும் 2 ஜிபிதான் இருக்கிறது.  தேவை இல்லாததை நீக்கிக் கொண்டு இருக்கிறேன்!

      நீக்கு
    4. ஹாஹாஹா அதே ஸ்ரீராம் என் கூகுள் ட்ரைவும் ஃபுல். அதுவும் அவ்வப்ப்போது சொல்லிக் கொண்டும் இருக்கிறது, இன்னும் ட்ரைவ் வேண்டுமென்றால் கட்டணம் கட்டி பெறலாம் என்று...நாம அப்படி எல்லாம் செஞ்சுடுவோமா என்ன!!!!
      நானும் வேண்டாததை நீக்கிக் கொண்டிருக்கிறேன்!!!!

      கீதா

      நீக்கு
  7. அறிந்திராத பல கோவில்களை அறியமுடிந்தது இப்பதிவின்மூலம்... மேலும் இக்கோவில்களைப்பற்றிய பல அரிய தகவல்களை அறிய காத்திருக்கிறோம்... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா. இவை அனைத்தும் அழகான கோயில்கள் அதாவது போகும் வழி மற்றும் இயற்கை சூழ் கோயில்கள்.

      நான் தெரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்ல திட்டமிடலுடன் அருமையான கோவில்களுக்கு செல்லும் வழி சொல்லியுள்ளீர்கள்.உங்கள் திட்டமிடல்கள், திறமைகள் வியக்க வைக்கிறது. அருமையான கோவில் தரிசனங்களுக்கு வழிகாட்டியாக இருந்து அழைத்துச் செல்ல போகும் உங்களுடன் பயணிக்க கசக்குமா? ஆகவே நானும் ரெடியாக காரில் ஏறிக் கொள்ள காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா, திட்டமிடல் எல்லாம் எங்கெங்கே இருக்கின்றன, எவ்வற்றை எல்லாம் நமக்குக் கிடைக்கும் நாட்கள், மணி நேரங்களில் ஒரே பயணத்தில் கவர் செய்ய முடியும், என்று சென்று வந்த அனுபவங்களினால்தான். முதலில் எல்லாம் பேருந்துப் பயணம்தான் ஒவ்வொன்றாக. அதன் பின் விருந்தினரை அழைத்துச் செல்ல, நானும் வண்டி ஓட்டிய காலம் அது என்பதால் திட்டமிட்டு எல்லாம் ஒரே நாளில் முடித்திட நினைத்து சென்றது.

      பேருந்தில் சென்றால், நாராயணவனம் தவிர்த்து மற்ற மூன்றையும் ஒரே நாளில் முடித்துவிடலாம். அந்த அனுபவமும் உண்டு.

      //அருமையான கோவில் தரிசனங்களுக்கு வழிகாட்டியாக இருந்து அழைத்துச் செல்ல போகும் உங்களுடன் பயணிக்க கசக்குமா? ஆகவே நானும் ரெடியாக காரில் ஏறிக் கொள்ள காத்திருக்கிறேன்.//

      ஹாஹாஹா, மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  9. பதிவிற்கான படங்களை கணினியில் சேமித்துக் கொண்டேன். நிறைய பதிவுகளுக்கான படங்கள் அதில்தான் இருக்கின்றன!//

    படங்களை மீட்டது மகிழ்ச்சி.
    இனி பல பதிவுகள் தொடரும்.
    கோவில் உலா அருமை.
    நான் பார்க்காத கோயில்கள்.
    உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்கிறேன்.
    தொலைக்காட்சியில் சுருட்டப்பள்ளி பிரதோஷம் அடிக்கடி காட்டுவார்கள் பார்த்து இருக்கிறேன்.

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா எப்படியோ இப்போது கணினியில் மேக்ஸ்டர் அடையாளம் காணப்படுகிறது.

      பதிவுகள் இருக்கு ஆனால் அவற்றைத் தொகுத்து எழுதி போட வேண்டுமே அதுதானே கீதாவின் பிரச்சனை!!!

      ஆம் சுருட்டப்பள்ளி பிரதோஷம் டிவியில் காட்டுவதாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. மிக உபயோகமான பதிவு. சென்னையில் உள்ளவர்கள் எல்லோரும் பெங்களூருக்கு மாற்றலானபிறகு பதிவு வெளிவந்திருந்தால் மிக மிக உபயோகமானதாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் உள்ளவர்கள் எல்லோரும் பெங்களூருக்கு மாற்றலானபிறகு பதிவு வெளிவந்திருந்தால் மிக மிக உபயோகமானதாக இருந்திருக்கும்//

      ஹாஹாஹா என்னைக் கலாய்க்கிறீர்கள் என்று தெரியும்....மாற்றலாகும் முன்!!!!!! வந்திருக்க வேண்டிய பதிவுதான்...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  11. சில யூ எஸ் பி ஹார்ட்டிஸ்க், ரிப்பேர் ஆகி, எப்போதாவது சரியாக வேலை செய்தால் உடனுக்குடன் எல்லாவற்றையும் காப்பி பண்ணிக்கொள்வது நல்லது. எனக்கும் சில முறை நடந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை இது நல்ல காலம் நன்றாகவே இருக்கிறது மாக்ஸ்டர். ரிப்பேர் ஆகவில்லை. கணினியின் யுஎஸ்பி பிரச்சனையால் தான் சரியாக அதை அடையாளம் காணமுடியாமல் இருந்தது. அதை ஒரு பொஸிஷனில் வைத்தால் நன்றாகவே வேலை செய்கிறது எனவே அந்தப் பொசிஷனில் வைத்து ஒரு சின்ன பெட்டியை அந்த யுஎஸ்பி அடியில் கொடுத்து தூக்கிப் பிடித்துக் கொள்வது போல் வைத்துவிட்டேன்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  12. பதிவைத் தொடர்கிறேன். அறியாத கோவில்கள் பற்றி நல்ல தகவல்களையும் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ எனக்குத் தெரிந்ததைக் கொடுக்கிறேன் நெல்லை.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  13. அன்பின் கீதாமா,
    அருமையான படங்கள் .
    சுருட்டப்பள்ளி பிரதோஷ தினங்கள் தொலைக் காட்சியில் வந்து கொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவே எனக்கு இப்போதுதான் கோமதிக்கா மேலெசொல்லியதிலிருந்து தெரிந்து கொண்டேன். இப்போது உங்கள் கருத்தும்.

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  14. முதலில் எல்லாம் பேருந்துப் பயணம்தான் ஒவ்வொன்றாக. அதன் பின் விருந்தினரை அழைத்துச் செல்ல, நானும் வண்டி ஓட்டிய காலம் அது என்பதால் திட்டமிட்டு எல்லாம் ஒரே நாளில் முடித்திட நினைத்து சென்றது.''
    ''முதலில் எல்லாம் பேருந்துப் பயணம்தான் ஒவ்வொன்றாக. அதன் பின் விருந்தினரை அழைத்துச் செல்ல, நானும் வண்டி ஓட்டிய காலம் அது என்பதால் திட்டமிட்டு எல்லாம் ஒரே நாளில் முடித்திட நினைத்து சென்றது.''

    ஹேய் கீதாமா. நீங்கள் வண்டி ஓட்டுவீர்கள் என்றே
    எனக்குத் தெரியாது.

    மனம் நிறை வாழ்த்துகள். மா. அதிசயப் பெண் நம் கீதா!!!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேய் கீதாமா. நீங்கள் வண்டி ஓட்டுவீர்கள் என்றே
      எனக்குத் தெரியாது.//

      !!!! இங்கு அதிகம் சொன்னதில்லை அம்மா. அது ஒரு காலம். இப்போது வண்டி எல்லாம் இல்லை.

      நான் ஒட்ட வேண்டும் என்றால் அப்போதெல்லாம், இருக்கையில் ஒரு குஷன் போட்டு பின் பக்கம் ஒரு குஷன் அல்லது தலையணை போட்டு, சீட்டையும் முன் பக்கம் இழுத்தால்தான் எனக்கு ABC எட்டும்!!!!! ஹாஹாஹாஹா

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  15. இரு நாட்களாக கணினி HDD தகராறு. சில சமயம் சரியாகப் போகும். பல சமயம் error தான்.
     
    முன்னோட்டமாக முன்னுரை நன்றாக உள்ளது. பொக்கிஷ போட்டோக்கள் திரும்பிக் கிடைத்த மகிழ்ச்சி கட்டுரையில் அப்படியே பொங்கி வழிகிறது. படிக்கும் எங்களுக்கும் அது (மகிழ்ச்சி) தொற்றிக் கொள்கிறது. 

    நாலு சக்கரக் சப்பரம் ஓட்டுவீர்கள் என்பது புது செய்தி. படங்கள் அழகாக இருக்கின்றன.   தொடர்கள் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் (அட்வான்ஸ்). 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு நாட்களாக கணினி HDD தகராறு. சில சமயம் சரியாகப் போகும். பல சமயம் error தான்.//

      ஓஹோ....சரி பண்ண பார்த்தீர்களா?

      //முன்னோட்டமாக முன்னுரை நன்றாக உள்ளது. பொக்கிஷ போட்டோக்கள் திரும்பிக் கிடைத்த மகிழ்ச்சி கட்டுரையில் அப்படியே பொங்கி வழிகிறது. படிக்கும் எங்களுக்கும் அது (மகிழ்ச்சி) தொற்றிக் கொள்கிறது. //

      மிக்க நன்றி ஜெகே அண்ணா.

      //படங்கள் அழகாக இருக்கின்றன. தொடர்கள் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் (அட்வான்ஸ்). //

      அட்வான்ஸ் வாழ்த்துகள்//

      ஹாஹாஹா மிக்க நன்றி அண்ணா. கூடியவரை முயற்சி செய்கிறேன்.

      அது ஒரு காலம். 2000ல் கற்றுக் கொண்டேன். Long distance drive பழக்கமும் உண்டு. விட்டுப் பெரியவர்களைக் கோயில்களுக்கு அழைத்துச் செல்ல என்று. பைக் ஓட்டக் கற்றுக் கொண்டது உண்டு என்றாலும் கால் தரையில் ஊன்ற எட்டாது எனவே வண்டியின் பளுவைத் தாங்க முடியாது என்பதால் ஓட்டியதில்லை. டிவிஎஸ் எக்ஸ் எல் இருந்தது. என் வண்டி பற்றியும் பதிவு எழுதியதுண்டு.

      இப்போது எந்த வண்டியும் இல்லை.

      //படங்கள் அழகாக இருக்கின்றன. தொடர்கள் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் (அட்வான்ஸ்). //

      //அட்வான்ஸ் வாழ்த்துகள்!!!!// ஹாஹாஹாஹா

      மிக்க நன்றி அண்ணா. கூடியவரை முயற்சி செய்கிறேன்.

      கீதா

      நீக்கு
  16. அழகிய படங்களுடன் விவரங்கள் அருமை.

    யாத்திரையில் கலந்து கொள்ள நானும் தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கில்லர்ஜி. வீட்டு நிகழ்வுக்கு இடையிலும் இங்கு வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

      இப்போதைக்கு உங்களுக்கு நேரில் கோயில் செல்ல முடியாது அதனால் இங்கு சென்று கொள்ளுங்கள்!

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  17. முதல் படத்தின் கோணம் சிறப்பு. மற்ற படங்களும் அழகு. உங்கள் பதிவு மூலம் நாங்களும் ஒரு ஆன்மீக உலா வர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். தொடங்கட்டும் உலா.

    இந்தப் பதிவு எப்படியோ என் கண்ணில் படவில்லை என்பதால் தாமதமான வருகை. அடுத்த பகுதி வந்த பிறகு வந்திருக்கிறேன்..... அடுத்த பகுதியை படிக்க அங்கே சென்று கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்ஜி! அதனால் என்ன. மெதுவாக வாசியுங்கள் இங்குதானே இருக்கப் போகிறது. சில சமயம் எனக்கும் இப்படித்தான் கண்ணில் படாமல் போகிறது.

      மிக்க நன்றி ஜி உங்கள் கருத்திற்கு. இன்னும் உங்கள் பதிவுகள் இருக்கின்றன வாசிக்க. மெதுவாக வாசிக்கிறேன். நான் இப்போது ஆமை வேக்த்தில்தான் செல்கிறேன் ஜி.

      கீதா

      நீக்கு
  18. முதல் படத்தின் கோணம் சிறப்பு. மற்ற படங்களும் அழகு. உங்கள் பதிவு மூலம் நாங்களும் ஒரு ஆன்மீக உலா வர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம்.//

    மிக்க நன்றி வெங்கட்ஜி. என் வண்டி மிகவும் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும் மாப்பிள்ளை ஊர்வலம் போல!!! அதனால் நீங்கள் ஓடிவந்தும் கூட ஏறிக் கொள்ளலாம்!!!!!!!!

    //இந்தப் பதிவு எப்படியோ என் கண்ணில் படவில்லை என்பதால் தாமதமான வருகை. அடுத்த பகுதி வந்த பிறகு வந்திருக்கிறேன்..... அடுத்த பகுதியை படிக்க அங்கே சென்று கொண்டிருக்கிறேன்.//

    அதனால் என்ன ஜி. இது எங்கும் போகப் போவதில்லை. உங்களுக்கும் நேரம் சரியாக இருக்கும் என்று தெரியும். அடுத்த பகுதிக்கும் உங்கள் கருத்து வந்துவிட்டது.

    மிக்க நன்றி வெங்கட்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. I really like the colors and the concept of your website.
    Is this a site you created yourself, or did you hire someone to make it for you?
    Please reply as I would like to know where you got this design for my own blog.
    nero backitup crack
    connectify pro crack
    eventsentry light crack
    ukeysoft spotify music converter crack
    kaspersky anti virus crack
    wondershare pdfelement pro crack

    பதிலளிநீக்கு