ஞாயிறு, 22 மே, 2022

சில்லு சில்லாய் - 3 - முன்னோர் பாட்டி(கள்) சொல்லைத் தட்டாதீர் - 1


இப்போது.....

"Garden City"  பெங்களூரின் செல்லப் பெயர் காலாவதியாகிவிட்டது. ஊர் இன்னும் மோசமாகிக் கொண்டே போகிறது. சமீபத்திய ஒரே நாள் கடும் மழையில் பெங்களூர் தற்காலிகமாகத் தண்ணீரில் மிதந்தது. பல நகரங்களும் இப்படித்தான் இருக்கின்றன. 

    

“மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் பார்வயிட்டார் ---------கோடி ரூபாய் நிவாரணத்திற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்”

வருடா வருடம் நடக்கும் நகைச்சுவைக் கூத்து.

வளர்ச்சி என்பது தவிர்க்க இயலாத ஒன்றுதான் ஆனால், இதனை வளர்ச்சி என்று சொல்ல முடியவில்லை.

மழையைக் குற்றம் சொல்கிறார்கள். Rain Havoc என்று. அது தன் கடமையை ஒழுங்காகத்தான் செய்கிறது. நாம்தான் நம் கடமையிலிருந்து தவறி நிற்கிறோம்.  

கண்ட இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்குவது, மேம்பாலங்கள், புதியதாய் சாலைகள், கட்டுமானங்கள், அடுக்குமாடிகள் என்று கட்டும் போது, முடித்ததும், சாமான்கள், குப்பைகளை அப்புறப்படுத்தாமல் இருப்பது அல்லது சாலையில் மழைநீர் வடிகால்கள், சாக்கடைகள் அடைக்கும்படி போடுவது;

மேம்பாலங்கள் கட்டும் போது அதன் அடியிலும், சுரங்கப்பாதைகள் கட்டும் போது அடியில் ஏற்றம் இறக்கம் என்று சாலைகள் போடும் போது அந்த இடத்தில் கட்ட முடியுமா? பள்ளமாக இருப்பதால் அங்கிருக்கும் ஓடைகள் அடையாமல் இருக்கிறதா, தங்கு தடையின்றி தண்ணீர் போகும் அளவிற்கு விரிவாகக் கட்டப்படுகிறதா, பராமரிக்கப்படுகிறதா என்று பார்த்து வடிவமைத்துக் கட்டுவதற்கான நகர கட்டமைப்பு வடிவமைப்பாளர்கள் நிபுணர்கள் யோசித்துச் செய்ய மாட்டார்களோ?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொண்டே  கேட்பது நியாயமா என்று நீங்கள் கேட்பதும் தெரிகிறது.

குப்பை அள்ளுபவர்கள் வீடு வீடாக வந்தாலும், தெருவில் குப்பை போடுவது, குவிப்பது. இதற்கும் சட்டம் எதுவும் இல்லை. 

ஓரு ஊரின், நாட்டின் முன்னேற்றத்திற்கு, பொது மக்களையும் நாட்டின் முனேற்றத்தில் ஈடுபடச் செய்வது, கலந்தாலோசிப்பது மிக முக்கியமாகும். 

கட்டுமானப்பகுதியின் நிலை.  எங்கள் பகுதியில் அடக்கம். அதுவும் இப்போது மெட்ரோ வேலை வேறு...

இது ஹோரமாவு - பானுக்கா முன்பு இருந்த பகுதி

இப்படிக் கட்ட வேண்டியது, அதன் பின் தண்ணீரை பம்ப் செய்து எடுக்கச் செலவழிக்க வேண்டியது. பல வருடங்கள் முன் கட்டியதை விடுங்கள் சமீபத்தில் பல அனுபவங்கள் ஏற்பட்டும் கட்டும் போது யோசிக்கவே மாட்டார்களோ?  படங்கள் - நன்றி த ஹிந்து - இணையத்திலிருந்து

மழை அடித்துப் பெய்த அன்றைய இரவு நெஞ்சு வரை இருந்த நீரில் ஒருவர் நீச்சலடிப்பது போலக் கையைத் துழாவி நடந்து கொண்டே, 'புதிய நீச்சல் குளத்திற்கு' கர்நாடக முதல்வருக்கு நன்றி என்று சொல்லி, கூடவே, வெள்ளம் சூழ்ந்த இடத்திற்கு வந்து தன்னோடு சேர்ந்து நீச்சலடிக்க முதல்வரை அழைக்கும் காணொளி (சுட்டி) வைரலானது.  

லால்பாக் அருகே வசிப்பவர் – “கழிவுநீர், வடிகால் வழியாக வருவதால் நாங்கள் கழிப்பறையைக் கூடப் பயன்படுத்த முடியவில்லை”

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை இரவு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட சிரமப்பட்டனர். அவர்களால் வீட்டில் சமைக்க முடியவில்லை. மழை தீவிரமடைந்ததால் உணவு விநியோகம் செய்யும் உணவகங்கள் கூட தங்கள் சேவையை நிறுத்திவிட்டன.

“ஹெச்எஸ்ஆர் லேஅவுட், கோரமங்கலா, ஹெச்ஆர்பிஆர் லேஅவுட், ஹென்னூர், ஆகிய இடங்களின் பிரதிநிதிகளும் இதே புகார்கள் மற்றும் கோரிக்கைகளை வைத்தனர். "மழைக்காலங்களில், பிபிஎம்பி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பார்வையிடுகிறார்கள் மற்றும் உறுதிமொழிகளை வழங்குகிறார்கள், ஆனால் ஆண்டு முழுவதும், அவை உத்தரவாதங்களாக மட்டுமே இருக்கும், எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை," என்று ஒரு பிரதிநிதி கூறினார். (எல்லா ஊர்களிலும் இப்படித்தானே!)

கால்வாய்கள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் ஏரிகள் பகுதிகளை கட்டுமானர்கள் ஆக்கிரமித்துள்ளனர், இதற்கு நகரத் திட்ட அதிகாரிகள் மற்றும் பிபிஎம்பி அதிகாரிகள் அனுமதி வழங்கக் கண்டுதான் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. நில விவரங்களை முறையாக விசாரிக்காமல் மக்கள் இந்தச் சொத்துக்களை வாங்குகிறார்கள்.

இந்த அவல நிலைக்கு 3 வகையினரும் பொறுப்பு ஏற்க வேண்டும்தான். 

எங்கள் பகுதியில் மாதம் மூன்று முறையேனும் ஏதேனும் ஒரு தெருவில், முக்கியத் தெருவில் கழிவுநீர் சாக்கடை நீர் மேலே வந்து தெருவில் ஓடும், யாரேனும் புகார்க் கொடுக்கக் குழிகள் திறக்கப்படும், நோண்டப்படும்.  மக்களும் இதற்குக் காரணம் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

இந்த ஊரின் சாலை மற்றும் கட்டமைப்பின் தலைமைப் பொறியாளர் சொல்வது இது.....

எந்தவொரு நகரமும், அதன் உள்கட்டமைப்பின் தரம் எதுவாக இருந்தாலும், மழையின் போது தெருக்களில் தண்ணீர் வெளியேறும். நகரத்தின் கான்கிரீட் காடு 94% பரப்பளவைத் தாண்டியுள்ளது! இதனால் நீர் நிலத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. டோக்கியோ போன்ற நகரங்களைப் போல, வடிகால்களில் கூட வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்க சாலையில் தண்ணீரைத் தேக்கி, நிலத்தடி நீரை மீள்நிரப்புச் செய்யும் வசதிகளை உருவாக்க வேண்டும். இங்கு இவை இப்படியான நிகழ்வுகளை எதிர்க்கொள்ள உருவக்கப்படவில்லை. மழைநீரைப் பிடிக்கவும், வெள்ளத்தைத் தவிர்க்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மீள்நிரப்புச் செய்யவும், தெருக்களில் நீர் மீள்நிரப்புக் கிணறுகளை உருவாக்க வேண்டும்.

இதை கட்டமைப்பு திட்டமிடும் போதே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன் செய்யவில்லையோ? இப்போது இதைப் பற்றிப் பேசுகிறார்கள்! கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம்! இப்படிச் சொல்லி அடுத்து சாலையை நோண்டுவார்கள். மூட மாட்டார்கள். அடுத்த மழை வரும். மீண்டும் இதே பல்லவி. தொடர்கதை. 

செய்தித் தாள்களுக்கும், இதழ்களுக்கும், எழுதுபவர்களுக்கும் எழுதிட விஷயம் கிடைக்கும்.  நான் உட்பட! அதன் பின் அடுத்த மழையில்தான் மீண்டும் பேசப்படும். 

அப்போது  

42 வருடங்களுக்கு முன்னான அப்போதைய பாட்டிகளில் ஒருவர்...

(கீழே உள்ள வரிகளுக்குப் பாட்டியோடு அவரது பேத்திகளில் ஒருத்திக்கும் அப்போதே பங்கு உண்டு)

 அம்மா, வீடு வாங்கலாம் இல்லைனா கட்டலாம்னு இருக்கேன்.” 

இதப் பாரு, கிராமத்துக்குள்ள பழைய வீடாருந்தாலும் பரவால்ல கிடைச்சா வாங்கிப் புதுப்பிச்சுக்கலாம். இல்லைனா கிராமத்துக்குள்ள சும்மா இருக்கற நிலம் உடமஸ்தா விக்கறான்னா வாங்கிக் கட்டு. வயலையோ தோப்பையோ வாங்கி அதுல நீ வீடு கட்டலாம்னு நினைச்சியானா கட்டப்டாது. வாய்க்கா பக்கம். ஆத்தங்கரைப் பக்கம் தோண்டக் கூடாது சொல்லிட்டேன். லோகமே நாசமாப் போயிடும்

வரப்புயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்நெல் உயரக் குடி உயரும்குடி உயரக் கோல் உயரும்கோல் உயரக் கோன் உயர்வான் - ஔவைப்பாட்டியைத் துணைக்கு அழைத்துக் கொண்டார் பாட்டி.

அதோடு விட்டாரா “இங்கப் பாரு கட்டும் போது மழைத் தண்ணீ வீட்டுக்குள்ள ஏறப்படாது, கொஞ்சம் உசத்திக் கட்டு.  திண்ணை இருக்கட்டும். முற்றத்துல தேங்காம கிணத்துக்குள்ள விழறா மாதிரி பண்ணு. விழறதுக்கு முன்ன தூசி தும்பு இல்லாம வடியறதுக்கு பொடி துவார ஜல்லடை போடு. மழைத்தண்ணிய வாய்க்கால்ல விடும்படியா ஆச்சுனா, கொஞ்சம் பெரிய ஒடையா கட்டு, திறந்தாப்ல இருக்கட்டும் இல்லைனா குப்பை விழுந்து அடைசல் தெரியாது. (பாட்டியின் வீடு அப்படித்தான் இருந்தது. அழகான கிராமத்து வீடு அது கை மாறி இப்போது வீட்டிற்குள் வேண்டாதவை மிதக்கிறது.)

அப்புறம் இந்த கக்கூஸ் அசிங்கம் எல்லாம் தேங்கப்படாது. அது பின்னாடி மூலைல கெடங்குக்குள்ள போறாப்ல அகலமா குழா போட்டு அடைசல் வராமக் கட்டணும். அடைஞ்சு மொதக்கக் கூடாது.

அரிசி உளுந்து களையறது, காய் அலம்பறது தட்டு அலம்பறது, சோப் இல்லாம கை அலம்பறது எல்லாம் பின்னாடி செடிக்குப் போறாப்ல பாத்துக்கோ.

பாத்தியோல்லியோ பக்கத்தாத்துல என்னவோ சரி பண்ணறேன்னு கக்கூஸ் எல்லாம் சரியா கட்டாம சாக்கடைத் தண்ணி எல்லாம் முற்றத்துல தேங்கறது. குத்தி குத்தி விடறா சனியன் போகமாட்டேங்கறது. இப்ப பாரு மழைல அத்தனையும் வெளில நரகல். மாசா மாசம் இதுக்குச் தண்டச் செலவு அழறா. கட்டும் போதே நன்னா யோசிச்சு காலத்துக்கும் வராப்ல  ஒழுங்கா கட்டிருந்தா இப்படி மாசா மாசம் செலவு பண்ண வேண்டாமோல்லியோ? போறும் போ என்ன குடும்பமோ செட்டா இருக்காம. அப்புறம் கடன ஒடன வாங்க வேண்டியது. ஹூம்”

“இப்ப நம்மாத்துக் கிணத்துக்கும் அடில வந்து தண்ணில கலந்துடுமோன்னு கவலையாருக்கு. என்னத்த படிச்சி கிழிச்சதுகள் இஞ்சினீர் சுக்குனீர். நோட்டுல சர்க்கரைன்னு எழுதினா மட்டும் போறுமா? புத்தி வேண்டாமா? ஹூம். கருமம்”

“அதனால இதுக்கு எல்லாம் வழி இருக்கா நன்னா கட்ட முடியுமான்னு யோசிச்சு பேசிட்டு அப்புறம் அஸ்திவாரம் தோண்டறதுல கை வைச்சா போறும். அப்புறம் முறிச்சுக்கப்டாது. கட்டற குப்பை ஒண்ணும் தெருல கிடக்கப்பிடாது கேட்டியா. கரெக்ட்டா வேணுங்கறத மட்டும் வாங்கிக் கட்டணும். பட்ஜெட்டுக்குள்ளதான் வரணும்.”

இதை ஏன் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்! தனிநபர் திட்டத்திற்கு என்றாலும் பல தனிநபர்கள் ஒன்று சேரும் போதுதானே சமுதாயம்! இந்த அடிப்படை விஷயங்கள் நாட்டிற்கும் எந்தக் கட்டமைப்பிற்கும் பொருந்தும்தானே?  

ஆதலால்,  பாட்டிகள் சொல்லைத் தட்டாதீர்!


**********************

ஆதி, இப்போது எழுதி வரும் "யாரிவள்" தொடரில் சமீபத்தில், அவர்கள் வீட்டில் அவர் அம்மா, மாலை நேர சிற்றுண்டிக்குச் "சேவை" செய்வது பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். எனக்கும்  உடனே என் சிறு வயது நினைவுகளும் நான் எழுதிய பதிவும் நினைவுக்கு வந்தன.  அப்பதிவின் சுட்டி   நேரமிருந்தால் வாசித்துப் பாருங்கள். 


---------கீதா

44 கருத்துகள்:

  1. மழைக்காலத்தில் எல்லா ஊர்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது.  சாலை போட விடும் தெமடர்களுக்கு கமிஷன் எதிர்பார்க்கும் அரசுகள்..  கொடுத்த கமிழனுக்குத் தக்கவாறு வேலையை பார்க்கும் கான்டிராக்டர்கள்..  பாதிக்கப் படுவதென்னவோ மக்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். எல்லா ஊர்களிலும் இப்போது இருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பதுக்கு அதே அதே....கடைசில மக்கள் பாதிக்கப்பட்டாலும் பெரும்பான்மை மக்களும் ஒரு காரணமாகத் தான் இருக்காங்கன்னும் சொல்லலாம்....இதில் நிறைய இருக்குதான்

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  2. முன்பு ஒரு காண்டிராக்டர் சொன்னார், "அரசு அதிகாரிகளே தரமான சாலைகளை போடுவதை எதிர்ப்பார்கள்.  அப்புறம் எப்படி வருடாவருடம் கான்டிராக்ட் விட்டு கமிஷன் பார்ப்பது?  எனவே சுமாராயப் போடுங்கள் என்பார்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக் கடவுளே! வெளிப்படையாவே நேரடியாக்வே....உருப்பட்டாப்லதான். தலைமைக்கு எல்லாம் இது போகாதோ

      கீதா

      நீக்கு
  3. அடிப்படை யோசனை எதுவுமின்றி நகரங்களை விரிவுபடுத்திக்கொண்டு நரகமாக்கும் முன்யோசனை இல்லாத, அல்லது அதுபற்றி கவலை இல்லாத அதிகாரிகள், கண்டு கொள்ளாத அரசாங்கம்...  ஹ்ம்ம்....   நாம் மன்னர் காலத்திலேயே இருந்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அதேதான். முன்யோசனை இல்லைன்றதையும் விட அதைப் பற்றிக் கவலைப்படாத...கண்டு கொள்ளாத அரசாங்கம்...

      //ஹ்ம்ம்.... நாம் மன்னர் காலத்திலேயே இருந்திருக்கலாம்!//

      ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  4. பாட்டி விவரமாத்தான் சொல்றார்...  அதென்ன வார்த்தை உடமஸ்தா?  கேள்விப்பட்டதே இல்லை!  இவ்வளவு முன்யோசனையுந் எல்லோரும் வீடு காட்டினாள் சௌகர்யம்தான்.  இதோ பாருங்கள், எங்கள் வீட்டில் நாங்கள் தண்ணீருக்கு படும் அவஸ்தையை..

    பதிலளிநீக்கு
  5. பாட்டி விவரமாத்தான் சொல்றார்...  அதென்ன வார்த்தை உடமஸ்தா?  கேள்விப்பட்டதே இல்லை!  இவ்வளவு முன்யோசனையுந் எல்லோரும் வீடு காட்டினாள் சௌகர்யம்தான்.  இதோ பாருங்கள், எங்கள் வீட்டில் நாங்கள் தண்ணீருக்கு படும் அவஸ்தையை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடமஸ்தர் - உரிமைக்காரர்/வீடு நிலத்துக்குச் சொந்தக்காரர் அதைப் பாட்டி உடமஸ்தா என்று சொல்லுவார்! இரண்டு மூன்று பேர் உரிமையாளர்களாக இருந்தால்!!!

      இதற்கு மட்டும் இப்போது பதில். விட்ட பதிவுகளை எல்லாம் பார்த்துவிட்டு வருகிறேன் ஸ்ரீராம்.

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  6. மழையையும் குற்றம் சொல்ல வேண்டும். இப்படி பேய் மழை பெய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக பெய்தால் என்ன? 

    உங்களுக்கும் மழை வெள்ளத்திற்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை. நீ எங்கே போனாலும் நானும் அங்கே வருவேன் என்று வெள்ளமும் கடம்போடு வாழ்வில் இருந்து பெங்களூர் வந்துவிட்டது. என்ஜாய்  மாடி. 

    வருடத்தில் 7 அல்லது 8 நாட்கள் வரும் வெள்ளம் பற்றி கவலைப்பட்டால் பெங்களூரில் வீடு கட்ட இடமே கிடைக்காது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஜெகே அண்ணா இயற்கையோடு நாம் மோத முடியாதே. அதோடு இயைந்து வாழ்வதுதான் நல்லது இல்லையா....

      எஞ்சாய் மாடி// அதே மழையை ரசிக்கிறேன் தான்.

      அண்ணா வருடத்தில் வருவது பற்றி அல்ல அதில் உயிரிழப்போர், நோய் வருவோர் வீடிழப்போர் எவ்வள்வுபேர்! அப்படி வீடு கட்டுவதால்தானே எல்லோரையும் பாதிக்கும் அளவு வெள்ளம். ஒருவருக்கு ஒரு வீடு என்றால் ஓகே நிறைய வீடுகள்...வீடு கட்டுவது கூடப் பிரச்சனை இல்லை அதில் சரியான திட்டம் இல்லாமல் சாக்கடைகள் எல்லாம் வழிவது நல்ல ஏரிகளில் தினமும் கழிவு நீர் கலப்பதைப் பார்க்கிறேன் இங்கு,

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  7. இந்த அல்ல நிலைக்கு மக்களே முதற்காரணம்.

    அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது என்று பயம் வருகிறதோ... அன்றுதான் இந்த நாடு முன்னேறுவதற்கு நினைக்கிறது என்று அர்த்தம்.

    இந்த நிலை இந்தியா முழுவதும் இருக்கிறது.

    //ஹோரமாவு//
    நான் கோலமாவு என்று படித்து விட்டேன் ஹி.. ஹி.. ஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களும் காரணம்தான் கில்லர்ஜி. //அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது என்று பயம் வருகிறதோ..//
      ஹாஹாஹ கில்லர்ஜி !!! ஆமாம் இந்தியா முழுவதுமே இருக்கிறதுதான்

      ///ஹோரமாவு//
      நான் கோலமாவு என்று படித்து விட்டேன்//

      ஹாஹாஹஹ்.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  8. சேவை மாமி. நல்ல பெயர்.
    இடியாப்பத்திற்கும் சேவைக்கும் சுவை வித்யாசம் உண்டா? இங்கு  மில்களில் பச்சரிசி வறுத்த மாவு கிடைக்கிறது. அதை வாங்கி இடியாப்பம் செய்வோம். தொட்டுக்க சொதி. அல்லது உதிர்த்து தாளிப்பு.
     புழுங்கல் அரிசி ஆனால் சேவைக்கு பதில் ஆவியில் வேக வைத்த கொழுக்கட்டை அல்லது தவல அடை தான். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேவை மாமி. நல்ல பெயர்.//

      ஹாஹாஹாஹா...

      இடியாப்பத்திற்கும் சேவைக்கும் சுவை மணம் வித்தியாசம் உண்டு ஜெகே அண்ணா.

      பரவாயில்லையே அங்கு மில்களில் கிடைக்கிறதே மாவு. நான் இங்கு வீட்டிலேயே தயாரித்துக் கொள்கிறேன். ஆமாம் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு/வறுத்த மாவுதான். நானும் தொட்டுக் கொள்ள சொதி செய்வதுண்டு. குறிப்பாக இலங்கைச் சொதி. எப்போதேனும் திருநெல்வேலி சொதி
      //புழுங்கல் அரிசி ஆனால் சேவைக்கு பதில் ஆவியில் வேக வைத்த கொழுக்கட்டை அல்லது தவல அடை தான். //

      நன்றாக இருக்கும் இரண்டுமே.

      மிக்க நன்றி ஜெகே அண்ணா பதிவு வாசித்தமைக்கும் கருத்திட்டமைக்கும்

      கீதா

      நீக்கு
  9. எல்லா ஊர்களிலும் மழை காலத்தில் இதே வேதனை தான். அரசு மட்டுமல்ல, பொதுமக்களும் தான் காரணம். தனித்தனி வீடுகள் வேண்டும் என்று வீடுகளை கட்டித் தள்ளுகிறார்கள். எல்லா இடங்களிலும், ஊர்களிலும் இதே பிரச்னை.

    எங்கள் பதிவு குறித்தும் எழுதி இருப்பதில் மகிழ்ச்சி. உங்கள் முந்தைய பதிவும் சென்று பார்த்து மீண்டும் படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லா ஊர்களிலும் மழை காலத்தில் இதே வேதனை தான். அரசு மட்டுமல்ல, பொதுமக்களும் தான் காரணம். //

      ஆமாம் வெங்கட்ஜி.

      //தனித்தனி வீடுகள் வேண்டும் என்று வீடுகளை கட்டித் தள்ளுகிறார்கள். எல்லா இடங்களிலும், ஊர்களிலும் இதே பிரச்னை.//

      அதே அதே வெங்கட்ஜி.

      பழைய பதிவை மீண்டும் வாசித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி. அங்கு உங்களுக்கும் அதன் பின் வந்து கருத்திட்டவர்களுக்குப் பதில் கொடுக்காமல் இருந்திருபப்தையும் பார்த்தேன் எதனால் என்று நினைவுக்கு வரவே இல்லை!!!!

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  10. கட்டும் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் பணத்துக்காகவே செய்யும் நிலையில் பின்னர் வருவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அப்போதைக்கு எவ்வளவு முடியுமோ சம்பாதித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். பின்னர் அந்த மோசமான கட்டுமானத்தின் விளைவினை வைத்துக்கூட, அவ்வப்போது தற்காலிக தீர்வினைத் தந்து, சம்பாதிக்கின்றனரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, தற்காலிக தீர்வுகள் ஆமாம் இதுவும் இரு வியாபாரம்தான். வியாபார நோக்கிலும் காலம் வரை வர வேண்டும் என்ற எண்ணமும் தொழிலில் ஈடுபாடும் இல்லாமல் போவதுமாக எல்லாமுமே.

      மிக்க நன்றி முனைவர் ஐயா

      கீதா

      நீக்கு
  11. அனைவருக்கும் வீடு சொந்தமாக வேண்டும் என்ற கனவுகள். உங்கள் "கனவு இல்லம்" விளம்பரங்கள் கவர்ந்து கட்டி விடுகிறார்கள். அதன் கஷ்ட , நஷ்டங்கள் பின்னர்தான் தெரிகிறது.

    ஹோரமாவு மழை வந்தால் எப்போதும் இப்படிதானா?
    மழையை வீட்டுக்குள் உட்கார்ந்து ரசித்து பார்த்து விடுகிறோம்.
    மழையால் ஒரு சில மக்கள் படும் அவதிகளை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. மழை நின்றவுடன் மக்களுக்கு இது மறந்து விடும்.

    //ஓரு ஊரின், நாட்டின் முன்னேற்றத்திற்கு, பொது மக்களையும் நாட்டின் முனேற்றத்தில் ஈடுபடச் செய்வது, கலந்தாலோசிப்பது மிக முக்கியமாகும். //

    ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்.

    பாட்டி சொன்னதை ரசித்தேன். பெரியவர்கள் அந்த காலத்தில் என்று ஆரம்பித்தாலே காத தூரம் ஓடுவார்கள் இப்போது. பாட்டி சொல்லை கேட்டு நடந்தால் நல்லதுதான்.
    பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.








    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் "கனவு இல்லம்" விளம்பரங்கள் கவர்ந்து கட்டி விடுகிறார்கள். அதன் கஷ்ட , நஷ்டங்கள் பின்னர்தான் தெரிகிறது.//

      ஆமாம் கோமதிக்கா. வீடு எல்லோருக்கும் வாங்க வேண்டும் என்று இருக்கும்தான். ஆனால் கட்டபடும் இடம், கழிவு நீர் வெளியேறல், மழைநீர் வடிகால்களுக்கான வசதிகள் செய்து திட்டமிட்டுக் கட்டினால் நன்றாக இருக்கும

      //ஹோரமாவு மழை வந்தால் எப்போதும் இப்படிதானா?//
      சமீபகாலத்தில் இப்படித்தானாம். ஆனால் பானுக்கா இப்போது எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மாறியாச்சே. அங்கு அவர்கள் வளாகத்துக்குள் இருக்காது என்று நினைக்கிறேன்.

      //மழையை வீட்டுக்குள் உட்கார்ந்து ரசித்து பார்த்து விடுகிறோம்.
      மழையால் ஒரு சில மக்கள் படும் அவதிகளை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. மழை நின்றவுடன் மக்களுக்கு இது மறந்து விடும்.//

      ஆமாம் மீண்டும் குப்பையைக் கொட்டுகிறார்கள் என்ன சொல்ல? வெள்ளம் வரும் போது குரல் கொடுத்துவிட்டு அதன் பின் அவர்களும் அமைதியாகிவிடுகிறார்கள். இதனால் அரசிற்குப் பல நஷ்டம் என்பது அரசுக்குத் தெரியாமலா?

      ஆமாம் பெரியவர்கள் சொல்வது பல இப்போது எவ்வளவு பொருந்திப் போகிறது என்று. கூட்டுக்குடும்பம் உட்பட.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  12. பெரியவர்களின் மொழி அனுபவ மொழி, அதாவது பாடம்... ஏட்டில் கிடைக்காது...!

    பதிலளிநீக்கு
  13. சமீபத்தைய கொஞ்ச நேரம் பெய்த அடைமழையில் பெங்களூர் மெயின் ரோடுகளில் காரில் வந்தபோது பார்த்த வெள்ளம் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்த வெள்ளப் படங்கள்தான் இவை நெல்லை...

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  14. நேற்று சென்ற ஒரு கம்யூனிட்டி லிவிங் காம்பவுண்டில் ;20 தனித்தனி வீடுகள்), ஒவ்வொரு வீட்டிற்கும் 15x 20 ல் மரங்களடர்ந்த தோட்டம் கண்டு பிரமித்தேன். வீடுகளின் முன்னால் மாமரங்கள் பெரிய பெரிய காய்களோடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! உடனே அங்கே குடி போகணும்னு இருக்கே! மரம், செடி, கொடிகள்! பார்த்தேப் பத்து வருஷங்கள். :(

      நீக்கு
    2. நெல்லை நீங்கள் சொல்லியிருக்கும் இடம் கனகபுரா பகக்த்தில் இருக்கும் பகுதியா? அங்கு அருகில் அந்த இடத்தின் பெயர் மறந்துவிட்டது கனகபுரா ஆஸ்ரமத்திலிருந்து ஒரு அரை மணிநேரப் பயணத்தில் இருக்கும் பகுதியில் ஒரு காலனிக்குள் 20 தனி தனி வீடுகள் தோட்டத்தோடு அங்கு ஒரு தூரத்து உறவினர் பையன் இருக்கிறார் புகைப்படங்கள் அனுப்பியிருந்தார் அவர் வீட்டைக் கட்டிய விதம் ஏதோ ரெசார்ட் போன்று சுற்றிலும் தோட்டம். நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான். கிட்டத்தட்ட எல்லா மூலிகைகளும் இருக்கின்றன. காடு போன்ற பகுதி.

      அதைப் பார்த்ததும் எனக்கு ஆசை ஆஹா அப்படியான ஒரு இடத்தில் போகமாட்டோமா என்று. ஆனால் அவர் சொன்னது, எல்லாமே அவர்கள் இணையத்தில் ஆர்டர் செய்துதான் பொருட்கள் வாங்குவது, டக்கென்று வாங்க அருகில் கடைகள் கிடையாது என்றும் சொன்னார். இப்போது வந்திருக்கலாம்.

      கீதா

      நீக்கு
  15. ஜெ உருவாக்கிய மழை நீர் சேமிப்பு அவேர்னெஸை, பிறகு வந்தவர்கள் கண்டுகொள்ளாத்து சோகம். பாட்டியின் ஆலோசனைகள் தீர்க்கமானவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க அம்பத்தூர் வீட்டில் முழு அளவில் மழை நீர் சேகரிப்பு ஜெ. சொல்லும் முன்னரே செய்திருந்தோம். :(

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை....உண்மைதான்.

      பாட்டிசொன்னதில் பேத்திக்கும் பங்கு உண்டாக்கும்!!!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  16. அன்பின் கீதாமா,
    என்றும் நலமுடன் இருங்கள்.

    எப்பவோ பங்களூரு வந்த போது இந்த மேம்பாலக் கோலங்களைக் கண்டு
    ஊரின் அழகே கெடுவதைப்
    பார்த்து நானும் அப்பாவும் வருந்தினோம்.
    வாழ்க்கை முழுவதும் பங்களூரு என்றும் தோட்ட நகரமாக இருக்கப்
    போவதில்லை என்று அப்போதே தெரிந்தது.

    சட்டங்களையும் இயற்கையையும் அரசாங்கமே மீறும் போது
    அதற்கு பணக்காரர்களும் மக்களுமே துணை செல்லும்போது
    என்ன செய்ய முடியும்:(

    எதிர்காலம் கவலைக்குறியதே.

    பாட்டியின் பேச்சை எல்லோரும் கேட்டால் நன்று தான். நடக்குமா!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா, இங்கு மேம்பாலங்கள், மெட்ரோ வசதிகள் வரட்டும் ஆனால் அதன் பின் விளைவுகளைச் சந்திக்க ஏற்பாடுகளையும் கவனமாகக் கருத்தில் கொண்டு வடிவமைக்க வேண்டாமா? நானும் 21 வருடங்களுக்கு முன் பார்த்த பெங்களூர் இல்லாமல் இப்போது வந்த போது ரொம்ப வருத்தப்பட்டேன்.
      //சட்டங்களையும் இயற்கையையும் அரசாங்கமே மீறும் போது
      அதற்கு பணக்காரர்களும் மக்களுமே துணை செல்லும்போது
      என்ன செய்ய முடியும்:(//

      அதே அதே!

      எதிர்காலம் எதிர்காலச் சந்ததியினர் என்ன பாதிப்பு வருமோ

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  17. மாமாவுக்கு "பெண்"களூர் வரலைன்னு இன்னமும் வருத்தம். இதை எல்லாம் பார்த்தால்/படித்தால் நல்லவேளைனு நினைச்சுப்பார். "பெண்"களூரில் சர்சிவி ராமன் நகரில் பத்து லக்ஷத்துக்கு வீடு பார்த்து விட்டோம். ஆனால் முன் பணம் கொடுக்கையில் எனக்குள் ஏதோ நெருடல்! வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்னிக்குவரை மாமாவுக்கு வருத்தம் தான். இப்போ நாங்க இருக்கும் இடத்தில் மழை/வெள்ளம்/தண்ணீர் தேங்கல் என்றே இல்லை. ஒரு வேளை திருச்சி நகருக்குள் இருக்கலாம். நாங்க பிழைத்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா எல்லாம் நல்லதுக்கே. அருகில் அரங்கன்!!

      சர்சிவி ராமன் நகரா...அட அது நகரத்திற்குள். செண்டரான இடம். அங்கு இப்போது சமீபத்தில் என் அப்பாவின் அத்தை பேரன் வீடு வாங்கியிருக்கிறார் அடுக்குமாடிக் குடியிருப்பில்.

      திருச்சிக்குள் தண்ணீர் தேங்குவது போலத்தான் இங்கு நகரத்திற்குள்ளும் வேறு சில புறநகர்ப்பகுதிகளிலும்....நல்ல வேளை
      இப்போது நாங்கள் இருக்கும் இடத்திலும் இல்லை ஏனென்றால் நாங்கள் இருப்பது புறநகர்ப்பகுதி மற்றும் நிறைய ஏரிகள், திறந்த வெளி நிலங்கள் நிறைய எனவே தண்ணீர் ஓடிவிடுகிறது. இரண்டாவது எங்கள் பகுதி கொஞ்சம் மேட்டுப் பகுதி.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு

  18. அரசியல்வாதிகள் மற்றும் அரசின் ஊழியர்கள்
    பார்வையிடுகிறார்கள் அத்துடன் உறுதிமொழிகளை வழங்குகிறார்கள்.. யாரும் போய்ச் சேர்ந்திருந்தால் மக்கள் பணத்தை அள்ளி விடுகின்றார்கள்...

    இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்?.. அடுத்த வருடத்திலும் இதே மாதிரி மழை பெய்ய வேண்டும்.. சாக்கடை அடைத்துக் கொள்ள வேண்டும்.. வடிகால் தடங்கள் சீரழிய வேண்டும்!.. அரசு உயர் அலுவலர்களின் வீடுகளில் தங்கமும் வெள்ளியும் நிறைய வேண்டும்!.. வந்தே மாதரம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை அண்ணா. அதேதான் அந்த பாதிக்கப்பட்ட பகுதி மக்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சொல்லி என்ன பயன்? மக்களும் ஒருகாரணமாகத்தான் இருக்கிறார்கள்.

      வருடந்தோறும் ஒரோரு பக்கத்திலிருந்து குரல் எழும் அடங்கும், அவ்வளவுதான்

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  19. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.ஒரு சிறு மழையினால் பல இடங்களில் நேரும்/நேர்ந்த அவலங்களை நன்கு விளக்கியுள்ளீர்கள். ஆம்.... , கட்டுமானங்களின் பாதிப்பால் ஒரு காலத்தில் பசுமைக்கு பெயர் பெற்ற இங்கும் ஒரு மழையை சந்திக்க இயலாமல் போவது கஸ்டந்தான். இன்னமும் பெரிய பெரிய மழைகளை மூன்று மாதங்களுக்கு எப்படி சமாளிக்கப் போகிறோம். தெரியவில்லை.

    பாட்டி சொன்ன உபதேசங்கள் அருமையாக இருந்தது. படித்து ரசித்தேன். அதன்படி நடந்திருந்தால் இன்று நாம் பல நன்மைகளையே சந்தித்திருப்போம். என்ன செய்வது? மூத்தவர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதை சிலபல சமயங்களில் அலட்சிய படுத்துகிறோமோ எனத் தோன்றுகிறது .

    தங்களது சேவை சுட்டிக்கும் சென்று படித்து விட்டு வருகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா...தாமதமாக வருவதற்கு ஒன்றும் பிரச்சனை இல்லை அக்கா. பதிவு இங்குதானே இருக்கப்போகிறது. எப்போது வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம். மன்னிப்பு எல்லாம் வேண்டாமே அக்கா..ப்ளீஸ்.

      ஆமாம் பெங்களூர் ரொம்பவே மாறிவிட்டது. இன்னும் மழையைச் சந்திக்கும் சக்தி இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் பருவ மழை இது போல் அடித்துப் பெய்யாது என்று நினைக்கிறேன். சமீபத்தில் வந்தது தாழ்வழுத்தத்தினால் வந்தது என்று நினைக்கிறேன்.

      ஆமாம் பல நல்ல விஷயங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் தான்.

      சேவை யாய்ப் பார்த்து ருசித்துவிட்டு வாங்க மெதுவா...!!!!

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  20. பதிவு அருமை...

    இதற்கும் ஒரு தீர்வு உள்ளது. மத்திய அரசின் வீட்டிற்கு ஒரு "கழிவறை" கட்டித்தரும் திட்டத்தைப்போல வீட்டிற்கு ஒரு "நீச்சல் குளம்" கட்டித்தரும் திட்டத்தை அறிவித்து வீட்டைச்சுற்றி நீர் தேங்கும் இடத்தையெல்லாம் மத்திய அரசின் "ஜன் ஔஷதி யோஜனா" திட்டத்தின் கீழ் நீச்சல் குளமாக அறிவித்து விட்டால் மக்களும் கவலை மறந்து ஆனந்தமாக நீச்சலடிப்பார்கள். கழிவு நீர் குடிநீர் கால்வாய்களில் சென்று கலப்பதும் இதனால் தடுக்கப்படும். பிரச்சனை சால்வ்...

    இதெல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு எங்கே புரியப்போகுது. ஐடியா இல்லாத பசங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நாஞ்சில் சிவா சிரித்துவிட்டேன் உங்கள் கருத்தைப் பார்த்து!!! நல்ல யோசனைங்கோ!!!!!

      மிக்க நன்றி.

      என்ன உங்கள் பதிவுகளைக் காணவில்லையே! நேரப் பளுவா?

      கீதா


      நீக்கு
    2. "என்ன உங்கள் பதிவுகளைக் காணவில்லையே! நேரப் பளுவா?"

      ஆமாம் சகோதரி! கொஞ்சம் பிஸி... அடுத்த மாதத்திலிருந்து வழக்கம்போல பதிவுகள் தொடரும்.... நன்றி!!.

      நீக்கு
    3. ஓ சரி! தெரிந்தது நீங்கள் பிஸி என்று... தொடருங்கள் சிவா

      கீதா

      நீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு