ரங்கனத்திட்டுவிற்குச் செல்லும் போது ஆட்டோக்காரர் ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவும் அப்போது அங்கு நாங்கள் இறங்கவில்லை, பறவைகளைப் பார்த்த பிறகு வரும் போது பார்க்கலாம் என்றும் முடிவு செய்து சென்றதாகச் சொல்லியிருந்தேன். அந்த இடத்தைப் பற்றி இப்பதிவுத் தொடரோடு சொல்வதா இல்லை தனியாகப் போடலாமா என்று இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்ததில், மனதின் மெஜாரிட்டிக் குரல்கள், 'பயணத்தில் இதைக் கடந்துதானே கோவிலுக்குப் போனோம், தொடரிலேயே போட்டுவிடு' என்பதற்குக் கை தூக்கியதால், இதைப் போட்டுவிட்டு அடுத்ததாக கோவிலுக்குப் போய்விடுவோம் என்று முடிவாகி, இதோ அந்த இடத்தைப் பற்றி.