ஓசூர்Dakshina Thirupathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓசூர்Dakshina Thirupathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்/தக்ஷின திருப்பதி - பகுதி - 1

 

ஒரு புத்தம் புது சூட்டோடு சுடா பதிவு! அதனால எல்லாரும் கை பிடிச்சிட்டு நில்லுங்க. ஆ! கீதாவான்னு வியந்து பார்க்கறப்ப தள்ளாடாம இருக்கணுமே!!!

நம்ம அனுபிரேமுக்குத்தான் நன்றி சொல்லணும். 2018ன்னு நினைக்கிறேன். அவங்க தளத்துல இந்தக் கோயில் பத்தி படங்களோடு போட்டிருந்தாங்க. சுற்றிலும் இயற்கை, குன்றுக்குக் கீழே ஆறு ஓடும் படம் எல்லாம் போட்டிருந்தாங்களா, அவ்வளவுதான் எனக்கு அங்கு போகும் ஆசை வந்துவிட்டது. வீட்டில் சொல்லி வைத்திருந்தேன். ஆனா அப்பதான் இங்கு என்ட்ரி. செட்டிலாகி முடிக்கறதுக்குள்ள அடுத்தாப்ல கொரோனா. அப்புறம் ஏதேதோ காரணங்கள் போக முடியலை.

கடந்த சனிக்கிழமை இரவு. மறு நாள் ஞாயிறு அன்று சுதந்திர தின- மலர் கண்காட்சிக்கு லால்பாக் போலாமா? தக்ஷின திருப்பதிக்குப் போலாமா? ஒத்தையா ரெட்டையா போட்டு கடைசில அடுத்த வாரம் லால்பாக் போயிக்கலாம், இந்த ஞாயிறு தக்ஷின திருப்பதின்னு முடிவாச்சு.