செருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 மே, 2025

சில்லு சில்லாய் - 22

 சில்லு - 1 - வரலாறு, பாரம்பரியம் என்பவை இப்படித்தானோ?

மரங்களின் வேர்களில் சித்தர்கள் - என்று படங்களுடன், ஸ்ரீராம், ஒரு வியாழன் பதிவில் கொடுத்திருந்தார். பதிவின் ====> சுட்டி  <====

//ஆ! அங்கு சீக்கிரத்தில் கோவில் வந்துவிடும் என்று கருத்தில் சொல்லியிருந்த நினைவு.// அப்போது, இங்கு அருகில் இருக்கும் பூங்காவில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்து குறித்து வைத்திருந்தேன். பின்னர் பதிவாக்க மறந்து விட்டுப் போயிருச்சு.