மகிழ்ச்சி என்பது இயற்கை, ஆனால்
துக்கம் என்பது செயற்கை அதாவது துக்கம் என்பது நாமாக உருவாக்கிக் கொள்வது
- இது சத்குருவின் வாக்கு. அதனால்தான் இறைவனை துதித்துப் பாடி ஆடி ஆனந்தம் கொள்வது
ஈஷா மையத்தில் நித்ய நிகழ்வாகிறது. - 1
“சிவ சிவ என்றிடத் தீவினை மாளும். சிவ சிவ என்றிட என்னச் சிவகதி தானே” எனும் சான்றோர் வாக்கும் அதுதானே. பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவன் திருவடி சேர்வதுதானே சைவ நெறி. அதைப் பின்பற்றும் சத்குருவின் ஈஷா மையத்தில் தூரத்திலிருந்து நம்மை அதிசயம் கொள்ள வைக்கும் பிறை சூடிய சிவரூபம் வரவேற்கிறது. - 2