தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!!
இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
படகில் சென்ற போது எடுத்த சில படங்களை முந்தைய பதிவில்
பகிர்ந்திருந்தேன் இல்லையா? இப்ப மிச்சம் மீதியையும் பகிரணுமே! இல்லைனா எனக்குத்
தூக்கம் வராதே! பறவைகள் எல்லாம் தூக்கத்துல வந்து சண்டை போடும்! திட்டும். மிரட்டும். அந்த
மரத்துல இருந்தவங்களை காட்டின நீ, இந்த மரத்துல நாங்க இருக்கோம் காட்ட மாட்டியா
அப்ப எதுக்குப் படம் புடிச்சேன்னு....
இந்தப் பதிவில் அதிகம் வாசிக்க இருக்காது. பார்ப்பது மட்டும்தான்.
Red Wattled Lapwing Bird - செம்மூக்கு ஆட்காட்டி பறவை
நான் அங்கு அப்பெண் அருகில் நின்று தூரத்தில் தெரியும் பறவைகளை கேமராவில் எடுக்க முடியுமா என்று ஆராய்ந்த போது என் கணவர் என் மொபைலில் தூரத்தில் தெரிந்த பறவைகளை க்ளிக் செய்திருக்கிறார். என் கேமராவில் மிஸ் ஆன காட்சி. அப்பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த மரத்தில் உச்சியிலும் நத்தை குத்தி நாரை மரத்தில் வந்து இறங்கிவிட்டது
இந்த மரத்தில் நத்தை குத்தி நாரை இறங்கப் போகிறது
இவை கேமராவில் முந்தைய பதிவிலும், இங்கு கீழேயும்....ஜூம் செய்து
எடுத்தவை
இதே காட்சியை இன்னும் கொஞ்சம் ஜூம் செய்தேன்....கீழே...
அதே காட்சியை இன்னும் கொஞ்சம் கூட ஜூம் செய்து எடுத்தேன்... கீழே
ஜூம் செய்ததில்
பெலிக்கன்ஸ் வந்தன....இடப்புறம் இருந்த நீர்க்காகங்கள் வரவில்லை. மூன்று படங்களுக்கும் வித்தியாசங்கள் தெரிகின்றன இல்லையா? படகு நகர....நான் ஜூம் செய்ய...
இது, மேலே இதுக்கு முந்தைய படத்தில் உள்ள மரம் இல்லைங்க...இது வேற மரம். வித்தியாசம் தெரியும் பாருங்க
நின்று கொண்டிருந்த நாரையை கேமராவில் பிடிக்க முயன்ற போது, அலகில் குச்சியை
எடுத்துக் கொண்டு பறக்க சிறகை விரித்து சில அடிகள் உயரே எழுந்தது. அதன் அசைவில் படம் இப்படி ஆகிவிட்டது. எதிர்பார்க்கவில்லை.
இதுதான் கடைசிப் படம். 1/2 மணி நேரம் படகு சவாரி முடிந்து கரைக்கு வந்தாச்சு படகு நிற்கப் போகிறது. படத்தில் வலப்புறம் ஓரமாக பெரிய
படகுகள் இருப்பது தெரிகிறதா? 18 பேர் செல்லும் துடுப்புப் படகு. இந்தப் படத்தில்
ஒரு நாரை நிற்பது தெரிகிறதா? நம்மவர் அதை க்ளிக் செய்திருக்கிறார் ஜூம்
செய்யாமல்...
இறங்கியதும் படகுத்
துறைக்கு நேர் எதிரே இந்தக் கடை, இங்கு டீ காஃபி, ஏதோ கொறிக்கவும் கிடைக்கிறது.
இடப்புறம் கோக்கோகோலா. கடைய சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு டீ காஃபி, கோக் ஏதாச்சும்
குடிக்கணும்னா குடித்துவிட்டு...அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது அடுத்த பதிவில்.