பயணத்தில் எடுத்த காட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணத்தில் எடுத்த காட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 டிசம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 27 - தருமபுரி - கிருஷ்ணகிரி மலைகள் - 1

வணக்கம், வந்தனம். பதிவுகளுக்கு இடையில் ரொம்பவே இடைவெளி வந்துவிட்டது. இதென்ன புதுசான்னு கேட்கக் கூடாது. இது Customary வசனம். எழுதிய பதிவுகளில் சில தொடரும் என்று போட்டிருந்த பதிவுகள் என்னன்னு எனக்கே மறந்துவிட்டது. உங்களுக்கும் மறந்திருக்கலாம். அப்பதிவுகளின் தொடர்ச்சி வருமா? புகழ்பெற்ற வசனமான "வரும் ஆனா வராது" கேஸ் தான்.  இதற்கான காரணத்தை - ஏன் என்னால் எழுத இயலவில்லை என்பதை - என்னை நானே சுயபரிசோதனை செய்து ஆராய்ந்த போது தெரிந்து கொண்டதைச் சொல்ல வேண்டும் என்றால் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல எழுத வேண்டும்.