திங்கள், 25 டிசம்பர், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 27 - தருமபுரி - கிருஷ்ணகிரி மலைகள் - 1

வணக்கம், வந்தனம். பதிவுகளுக்கு இடையில் ரொம்பவே இடைவெளி வந்துவிட்டது. இதென்ன புதுசான்னு கேட்கக் கூடாது. இது Customary வசனம். எழுதிய பதிவுகளில் சில தொடரும் என்று போட்டிருந்த பதிவுகள் என்னன்னு எனக்கே மறந்துவிட்டது. உங்களுக்கும் மறந்திருக்கலாம். அப்பதிவுகளின் தொடர்ச்சி வருமா? புகழ்பெற்ற வசனமான "வரும் ஆனா வராது" கேஸ் தான்.  இதற்கான காரணத்தை - ஏன் என்னால் எழுத இயலவில்லை என்பதை - என்னை நானே சுயபரிசோதனை செய்து ஆராய்ந்த போது தெரிந்து கொண்டதைச் சொல்ல வேண்டும் என்றால் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல எழுத வேண்டும்.

இப்போது சட்டென்று எழுத முடியாததால் இடைவெளியை நிரப்ப கணினியில் நிலுவையில் இருந்த பதிவுகளை ஆராய்ந்த வேளையில் எபியில் ஞாயிறு பதிவில் நெல்லை தாளவாடி பற்றி போட்டிருந்ததும், (An indirect positive stroke for me. தற்போது) சட்டென்று எனக்கு, நான் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு இரு வருடங்களுக்கு முன் இதே டிசம்பர் மாதத்தில் வந்த போது, ரயில், தருமபுரி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியதும் - அன்று ரயில் தாமதம். 5.20க்கு வர வேண்டிய ரயில் 6 மணி போல்தான் வந்தது. அதனால் - காலை விரியும்  சமயத்தில் கண்ட அருமையான மலைக்காட்சிகளைப் படங்களாகவும், காணொளிகளாகவும் எடுத்தது நினைவுக்கு வந்து தேடியதும் கிடைத்துவிட்டன.  

பிரயாணம் செய்த மாதம் இதே அப்போதைய டிசம்பர். அன்று செம பனி. குளிர். ஆனால்   பல படங்களும் காணொளிகளும் ஏமாற்றிவிட்டன. ஓட்டைக் கேமராயில்லையா அதுவும் அதிகாலை வெளிச்சம் சற்றுக் குறைவாக, பனி சூழ்ந்திருந்தப்ப எடுத்த புகைப்படங்கள் சரியாக வரவில்லை.  நிறைய தருமபுரி பகுதிகள் மலைகள் கிட்டத்தட்ட ராயக்கோட்டை எனும் ஊர் வரும் வரை. அதன் பின் கிருஷ்ணகிரி பகுதிகள். கிருஷ்ணகிரி பகுதிகள் அடுத்த பதிவில். 

கை துறு துறுன்னு வந்து இரு பகுதிகளாகப் போட்டு விடலாம்னு சரியாக வராதவற்றை எல்லாம் அழித்துவிட்டு வெளிச்சம் கொஞ்சம் வந்த போது எடுத்த படங்களையும் பனி சூழ்ந்திருந்த போது எடுத்த சில காணொளியையும் இணைத்து இங்கு பகிர்ந்திருக்கிறேன். இதோ முதல் பகுதியில் சில படங்களும் ஒரு சிறிய காணொளியும்.  












சிறிய காணொளிதான் முடிந்தால் பாருங்கள்

https://youtu.be/hk8I8DdoKlA

கருத்து சொல்லும் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

------கீதா


22 கருத்துகள்:

  1. காணொளியைக் கண்டதும் பின்னணிக்கு செண்டை மேறம் சேர்த்திருக்காங்களோ என்னும்படியான சப்தம். காற்று மற்றும் இரயில் ஓடும் சப்தம் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை, காற்றும் ரயிலின் சத்தமும் சேர்ந்து அதை நீக்காமல் இயற்கையான ஒலியுடன் இருக்கட்டுமே என்று விட்டேன்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  2. மலையும் மேகங்களும் மனதைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  3. வெண் மேகம் மூடிய தருமபுரி மலைகள் அருமை. ரயிலின் சத்தம், காற்றின் ஒலியோடு காணொளி அருமை. ரயில் பாலத்தில் போகு போது வளைந்து போவது அழகு.

    தென்னைமரங்களும் வயல்களும் உள்ள படம், கருவேலம் மரம் நிறைய உள்ள காடு போன்று இருக்கும் மலையடிவாரம் எல்லாம் அழகு.


    நானும் தொடர் பதிவுகளை தொடர முடியாமல் இருக்கிறேன்.சிங்கப்பூர், மலேஷியா பயணம் பாதியில் நிற்கிறது. தொடர வேண்டும்.
    இன்று கிறிஸ்துமஸ் பதிவு போட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயிலில் பயணித்த போது நேரில் காண அத்தனை அருமை. இனி அவ்வழியில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மொபைலில் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் கோமதிக்கா.

      ஆமாம் நினைவிருக்கு உங்கள் தொடர் பதிவுகள் நிற்பதும்....கிறிஸ்துமஸ் பதிவு பார்த்துவிட்டேன் கோமதிக்கா.

      படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா

      இன்னும் இருந்தன சரியாக வரவில்லை என்பதால் அழித்துவிட்டேன்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  4. ஊஹூம் நான் கருத்து சொல்ல மாட்டேன். விசாகபட்டணம் போல் இல்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....ஜெகே அண்ணா சிரித்துவிட்டேன். இது பயணப் பதிவு இல்லை. சும்மா ரயிலில் வந்தப்ப எடுத்தவை. அதுவும் காலையில் பனி வேறு சரியான லைட்டிங்க் இல்லை. வந்ததை எடுத்தேன். நேரில் பார்க்க அத்தனை அழகாக இருக்கும் ஜெ கே அண்ணா.

      என் கேமரா பத்தி தெரியும் தானே. இப்பதான் மொபைலில் எடுக்கத் தொடங்கி உள்ளேன் மொபைல் மாற்றியதால். இனி அவ்வழி போகும் வாய்ப்பு கிடைத்தால் மொபைலில் எடுக்க வேண்டும்.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  5. இந்த தொடரும் போட்டு தொடரா விட்டால் பல்லிடுக்கில் பாக்கு மாட்டிய சிரமம்தான்.  இதற்குதான் முழுவதும் எழுதிக் கொண்டு பிரிக்க வேண்டும்!  எதை பாதியில் விட்டோம் என்றே மறந்து போகும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், உண்மைதான் அப்படி முழுசும் எழுதிப் பிரித்திருந்தால் உடன் உடன் வந்திருக்குமே!!!! ஹிஹிஹி....அப்படித்தான் முன்பெல்லாம் செய்திருந்தேன் இப்ப வண்டி பிரேக் போட்டு நிக்குது அப்பப்ப....பழுது பார்க்க வேண்டும்! ஹிஹிஹி

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. காணொளியிலுள்ள இயற்கைக் காட்சிகளை ரசித்தேன்.  படங்களும் ரசித்தேன்.  மழையும் மலை சார்ந்த பசுமைக் காதுகளும் கண்ணுக்கு விருந்து.  "மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்.."  பாடல் வரிகள் மனதில் ஓடியது!  ஏழு எட்டாவது படங்களைக் கண்டபோது 'மலைராணி முந்தானை சரிய சரிய' வரிகள் மனதில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான இட்ங்கள் ஸ்ரீராம். வலப்பக்கம் இருக்கை ஜன்னலோரம் கிடைத்துவிட்டால் இவற்றை ரசித்துக் கொண்டே வரலாம்.

      பாடல்கள் டக்கென்று கிட்டவில்லை. யுட்யூபில் வரிகளைப் போட்டுத் தேடி விடுகிறேன் கேட்டுவிடுகிறேன். //மலைராணி முந்தானை சரிய சரிய'// இது மட்டும் மனதில் தட்டுப்படுகிறது. கேட்டால் தெரியும் தட்டுப்பட்ட ராகம் பாடல் சரியா என்று!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  7. அதென்ன gk க்ளிக்ஸ், விஷுவல்ஸ்?  GR என்றுதானே இருக்க வேண்டும்!  அடுத்து, அதை எப்படி அமைக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. gk முன்னரே நீங்க கேட்டு இங்கு சொல்லியிருக்கிறேன் ஸ்ரீராம். ஒன் டு ஒன்னில் சொல்கிறேன்.

      கணினியில் செய்வதுதான் ஸ்ரீராம்....படங்களை க்ளிக் செய்து விட்டு ரைட் க்ளிக் செய்தால் பெயின்ட் ஆப் ஆப்ஷன் வரும்...அதில் செய்கிறேன் ஸ்ரீராம். ஒன் டு ஒன் ல சொல்கிறேன் அல்லது பேசும் போது சொல்கிறேன், ஸ்ரீராம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. ஆனால் என்னதான் சொல்லுங்கள்..  எப்பவும் சொல்வதுதான்...  கண்வழி கண்ட காட்சிகளின் அழகு கேமிராவில் பதிவாவதில்லை.  செயற்கையில் தெரிவது பாதிதான்.  இயற்கையில் பூரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அப்படியே டிட்டோ செய்கிறேன்....கண்டிப்பாக நேரடியாகக் கண்டு மகிழ்வது அந்த இன்பம் தனிதான். ஓடும் ரயிலில் இருந்து எடுப்பதும் சிரமமாகத்தான் இருக்கிறது.

      எல்லாருக்கும் எல்லா இடங்களுக்கும் போக முடிவதில்லையே ஸ்ரீராம். அதனால அப்படிக் கிடைக்கும் இன்பத்தை இப்படியாச்சும் பகிரலாமேன்னு...அட்லீஸ்ட் இப்படிக் கண்டு பாதியாச்சும் களிக்கலாமேன்னு.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. காணொளி அழகு..

    மலையும் பசுமையும் கண்ணுக்கு விருந்து..
    இயற்கைக் காட்சிகளுக்கு இணை ஏதும் உண்டோ?..

    படங்கள் அனைத்தும் அழகு... 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கைக் காட்சிகளுக்கு ஈடு இணை எதுவுமே இல்லைதான் துரை அண்ணா.

      மிக்க நன்றி துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  10. காணொளியில் இயற்கை காட்சி அழகாக இருக்கிறது.

    படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி மற்றும் படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி!

      கீதா

      நீக்கு
  11. படங்கள் மிக அழகு! விடியற்காலை பயணங்கள் என்றைக்குமே ஒரு தனி சுகம் தான்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா மனோ அக்கா. பயணங்கள் அதுவும் இயற்கை சூழ் இடங்களில் விடியற்காலை பயணங்களின் சுகம் அலாதிதான்.

      மிக்க நன்றி மனோ அக்கா.

      கீதா

      நீக்கு