இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும் வாசித்திருப்பீர்கள்.
ஒரு யுகம் முடிந்து மறு யுகம் தொடங்கும் போது அதாவது காலகட்டம் முடிந்து மற்றொரு காலகட்டம் தொடங்கும் போது நம்மை அறியாமலேயே உள் நுழையும் மாற்றங்கள், எண்ணங்கள், பார்வைகள்… காலம் மாறிக் கொண்டு இருக்கிறது. அதற்கேற்ப எண்ணங்களும் மாறுகிறது, என்பதாகச் சொல்லப்படும் கதை. மனிதர்களும் மாறுகிறார்கள். அதுவும் இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் கண்டிப்பாக நிறைய மாறியிருக்கிறது
என்று சொல்லலாம். நல்ல விதமான மாற்றங்கள் அது. ஆனால் மாற்றங்களை ஏற்க மனப்பக்குவம் வேண்டுமே.
பாட்டி கௌரி தான் பிரதான கதாபாத்திரம்.
பாட்டியின் ஆஸ்தான நாவிதனுக்குப் பிறக்கும் மூன்றாவது குழந்தை ஆண்குழந்தை என்பதைக் கேட்டதும், “நீ அதிர்ஷ்டக்காரன்தான்...எந்தப்பாடாவது
பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?"
"காலம் வெகுவாய் மாறிண்டு
வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும் தான்இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து...
இனிமே இதொண்ணும் நடக்காது.... புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா... பொம்மனாட்டிகள்
லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே....ம் ...எல்லாம் சரிதான்;
காலம் மாறும் போது மனுஷாளும் மாறணும்.... என்ன, நான்சொல்றது?"
பாட்டி அந்தக்காலத்து ஆச்சாரமான
மனுஷி என்றாலும் அவள் பார்வை முற்போக்காக மாறி வருவதைச் சொல்லும் இடங்கள், வசனங்கள்
க்ளாஸ்!
16 வயதில் கையில் ஓர் ஆண்
குழந்தையுடன் விதவையாகிவிடும் பாட்டியின் ஒரே மகனின் மூத்த மகள் கீதாவும் 10 மாதங்களில்
விதவையாகிட தன்னைப் போல் ஆகிவிட்டாளே என்று வருந்தினாலும் அவளைத் தன் ஒட்டுதலில் இருத்திக்
கொண்டு வளர்க்கிறாள். ஹைஸ்கூலோடு நின்றிருந்த கீதாவின் படிப்பைத் தொடர அவளை ஆசிரியப்பயிற்சியில்
சேர்க்க விரும்பும் தன் மகனிடம் மகிழ்வுடன் சேர்க்கச் சொல்கிறாள்.
பாட்டியம்மாள்,
மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்...
பயிற்சி முடிந்து பல காலம்
உள்ளூரிலேயே வேலை செய்தவளுக்கு நெய்வேலிக்கு வேலை மாற்றலாக அவள் தந்தை கணேசய்யர் பாட்டியிடம் அவர் கருத்தைக் கேட்க, அதைப் பாராட்டி, தான் கூடச் சென்று இருக்கிறேன் என்கிறார். காரணம் எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப்
போவாளோ என்ற அச்சம்தான்.
பேத்தி கீதா பல காலம் யோசித்துக்
குழம்பி, பின், ஒரு முடிவை எடுக்கிறாள். அதை வீட்டினருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்துகிறாள். வீட்டில் யாருக்கும் அதை ஏற்க முடியாமல் அவளைத் திட்டுகிறார்கள்.
அப்போது பாட்டி தன் மகனைப் பார்த்து ஒரு நியாயமான, யதார்த்தமான கேள்வி கேட்கிறார்.
முடிவில் ஜெயகாந்தன் அவர்களின் வரிகள் அருமை.
பாட்டி, கீதாவின் முடிவை ஆதரிக்கிறாரா இல்லையா அவரது நிலைப்பாடு என்ன என்பதை ஜெயகாந்தனின் கதைகளை வாசித்திராதவர்கள்
இச்சுட்டியில் வாசிக்கலாம். முதல் கதையே யுகசந்திதான். எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியது சிறுகதை என்றால்
எழுத்தாளர் வாசந்தி இதே தலைப்பில் நாவல் எழுதியுள்ளார். இந்த நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. இந்த நாவலைப் பற்றிய நம் பானு அக்காவின் அழகான விமர்சனத்தை இந்தக் காணொலியில் நேரமிருக்கும் போது கேட்டுப் பாருங்கள். இங்கு ஒரு வேளை காணொலி வேலை செய்ய மறுத்தால் கீழே யுட்யூப் சுட்டியும் தந்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=p_cOJ25KMaQ
எழுத்தாளர் வாசந்தி அவர்களின் நாவல் யுகசந்தி பற்றியது இது
யுகசந்தி எப்போதோ வாசித்தது. மறுபடியும் ஒருமுறை வாசிக்கவேண்டும்.
பதிலளிநீக்குஇது என்று ஷெட்யூஸ் செஞ்சிருந்தேன் என்று நேரம் கூடத் தெரியவில்லை ஸ்ரீராம். ராத்திரி வெளியாகியிருக்கு...
நீக்குஅருமையான கதை ஸ்ரீராம்.
கீழே வாசந்தி அவர்களின் யுகசந்தி நாவல் பற்றியது அக்காவின் காணொளி.
நன்றி ஸ்ரீராம்
கீதா
யுகசந்தி வந்த வருடத்தில் இருந்து இந்த நாள் வரை
பதிலளிநீக்குஎத்தனை முறை படித்திருப்பேனோ தெரியாது.
கீதாவின் கடித வரிகள் அப்படியே மனப்பாடம்.
எனக்காக யாரும் தியாகம் செய்யவில்லையே
என்று கேட்கிறாள். அவள் வைதவ்ய கோலத்தை அடைந்த பிறகு பிறந்த
குழந்தையைப் பற்றியே பேசுகிறாள்.
அதை அவள் பெற்றோர் புரிந்து கொண்டார்களோ இல்லையோ
கௌரிப் பாட்டி புரிந்து கொள்கிறாள்.
அதுதான் யுகசந்தி.
நன்றி கீதாமா.
ஆமாம் அம்மா அருமையான கதை கீதாவின் கடித வரிகள் ரொம்ப நல்லா இருக்கும் அதோடு இடையே வரும் வசனங்கள் ரொம்ப நன்றாக இருக்கும்.
நீக்குஅதுதான் பாட்டியின் அந்தக் கேள்வியும் மகனைப் பார்த்துச் சொல்லும் அந்த வரிகளும் மகனின் மன நிலையைச் சொல்வதும் அருமை.
ஆமாம் பாட்டி புரிந்து கொள்கிறாள். ஆம் அதுதான் யுகசந்தி.
நான் இந்தக் கருத்தை எழுத நினைத்து அப்புறம் சரியா இருக்குமான்னு நினைத்து நீக்கிவிட்டேன். அந்தக் கருத்து இதுதான்...."பெரும்பான்மையான குடும்பங்களில் பாட்டிக்கும் பேரக் குழந்தைகளுக்கும் இருக்கும் புரிதல் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருப்பதை விட கொஞ்சம் கூடுதலாக இருக்குமோ என்றே தோன்றுகிறது" இது நான் சில வீடுகளில் பாட்டி பேரக் குழந்தைகள் என்று வாழும் வீடுகளில் பார்த்திருக்கிறேன், 25 வருடங்களுக்கு முன். இப்போது பெற்றோரும் கூட மாறியிருக்காங்கதான்...அத்னால்தான் அதை நீக்கிவிட்டேன்.
கீழே இருப்பது வாசந்தியின் யுகசந்தி அக்காவின் விமர்சனத்தில்.
நன்றி அம்மா
கீதா
நான் படித்ததில்லை முயற்சிக்கிறேன்...
பதிலளிநீக்குகில்லர்ஜி வாசித்துப் பாருங்க நல்ல கதை
நீக்குநன்றி கில்லர்ஜி
கீதா
இணைப்புகளிலும் விமர்சனங்களை கேட்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குகீதா
அவசியம் வாசிக்கிறேன்
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நன்றி கரந்தை சகோ
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைகள் தொகுப்பில் யுவசந்தி கதை படித்திருக்கிறேன். இன்று தாங்கள் தந்த சுட்டியில் சென்று மறுபடியும் படித்தேன். சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் காணொளியும் இப்போது கேட்கிறேன். வாந்தி அவர்கள் எழுதிய கதையை படித்த நினைவு இல்லை. ஒருவேளை படிக்க ஆரம்பித்தால் படித்திருக்கிறேனா என்பது நினைவுக்கு வரும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசந்தி அவர்கள் எழுதிய நாவல் இணையத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. scribdல் இருக்கு ஆன்லைனில் வாசிக்க ஃப்ரீ ட்ரையல் போனால் வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். நான் இன்னும் முயற்சி செய்யவில்லை. வாசித்தால் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்
நீக்குநன்றி கமலாக்கா
கீதா
ஜெயகாந்தனின் யுகசந்தி பற்றிய தங்கள் பதிவு அருமை. சுட்டியில் சென்று படித்து மகிழ்ந்தேன். நல்லதொரு கதைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅது நல்ல கதை காயத்ரி. அந்தச் சுட்டியில் ஜெயகாந்தன் அவர்களின் சிறு கதைகள் எல்லாமே இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நீக்குஅக்கா கொடுத்திருக்கும் வாசந்தி எழுதிய நாவலின் விமர்சனம் கேட்டீர்களா? அது வேறு கோணத்தில்...
நன்றி காயத்ரி
கீதா
ஜெயகாந்தனின் யுகசந்தி படித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குகெளரி பாட்டி நல்ல மனிதர்.
பேத்தியுடன் போவார். தன் மகனிடம் பேசும் வசனங்கள் மிக நன்றாக இருக்கும் காலம் மாறும் போது நாமும் மாற வேண்டும் என்று சொல்வது சிறப்பு.
பானு சொல்லும் வாசந்தி கதை படித்தது இல்லை. அன்றைய காலக்கட்டம் பெண்கள் கணவர் எத்தனை கஷ்டங்கள் கொடுத்தாலும் பொறுத்துக் கொள்ளும் குணம், ஷகிலா, குமார், அப்துல், காயத்திரி பற்றி எல்லாம் மிக அருமையாக சொல்கிறார்.
படிக்கிறேன் வாஸந்தியின் கதையை.
பகிர்வுக்கு நன்றி.
ஆமாம் அக்கா கௌரிப்பாட்டியின் மனதும் நல்லது. நல்ல ஒரு கதாபாத்திரப்படைப்பு.
நீக்குஆமாம் அக்கா இப்போ நாமும் அப்படித்தானே நிறைய மாறிக் கொண்டுதான் இருக்கிறோம் இல்லை என்றால் கடினம்.
ஆமாம் அக்கா நன்றாகச் சொல்லி இருக்கிறார். அதில் சமூகக் கருத்துகளும் இடையிடையே வரும் போல. இந்த யுகசந்தி வேறொரு கோணம்.
வாசித்துப் பாருங்க கோமதிக்கா
நன்றி கோமதிக்கா
கீதா
என்னுடைய யூ டியூப் சேனலை பார்த்ததற்கு மிக்க நன்றி கோமதி அக்கா.
நீக்குநல்ல சிறுகதை பரிந்துறை மேடம்.
பதிலளிநீக்குவிரைவில் வாசிக்கிறேன்.
நீங்கள் அளித்த சுட்டி நாங்களும் வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்றி அரவிந்த்.
நீக்குஆமாம் பார்த்துதான் இந்தச் சுட்டியைப் பகிர்ந்தேன் அரவிந்த். அருமையான கதை. அப்போதைய காலகட்டத்திற்கு நல்ல முற்போக்கான கருத்துகள்.
வாசந்தி எழுதிய யுகசந்தி நாவலும் வாசித்துப் பாருங்க அது வேறு கோணம்.
கீதா
கதா பாத்திரத்தின் பெயரும் கீதாவாமே... அழகிய கதையாகத்தான் இருக்கும் போலும்.. பானு அக்காவின் வீடியோவைப் பார்க்கிறேன்...
பதிலளிநீக்குவாங்க அதிரா....ஹிஹிஹி எஸ் என் பெயர்தான்....பதிவில் சொல்ல நினைத்து விட்டுவிட்டேன்!!
நீக்குகதை ரொம்ப நல்ல கதை அதிரா. ஜெயகாந்தன் அவர்கள் எழுதியிருக்கும் கதை. சிறு கதைதான் வாசித்துப் பாருங்க.
பானு அக்காவின் விமர்சனம் வாசந்தி அவர்கள் எழுதிய யுகசந்தி பற்றியது அது நாவல். கதை வித்தியாசமான கோணத்தில்...அதுவும் முடிந்தால் வாசியுங்கள் நான் இன்னும் வாசிக்கவில்லை.
நன்றி அதிரா
கீதா
உங்கள் தயவில் ஜெயகாந்தனின் யுகசந்தி சிறுகதையை படித்தேன். ஜெயகாந்தனின் எழுத்தாற்றலுக்கு சொல்ல வேண்டுமா?
பதிலளிநீக்குவாஸந்தியின் யுகசந்தி நாவல் பற்றிய என்னுடைய யூ ட்யூபை பகிர்ந்ததோடு நிற்காமல், எல்லோரிடமும் அதைக் கேட்கச் சொல்லியிருக்கும் உங்கள் அன்பிற்கு மிக மிக நன்றி!
பானுக்கா உங்கள் தளத்தின் பெயர் தம்பட்டம் என்று இருந்தாலும் நீங்கள் அடிக்கத் தயங்குவீங்கன்னு பகிர்ந்தேன்!!
நீக்குஜெயகாந்தனின் யுகசந்தி நீங்கள் வாசித்திருப்பீங்கன்னு நினைச்சேன் பானுக்கா. அந்தச் சுட்டியில் அவர் கதைகள் எல்லாமே இருக்கு என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி பானுக்கா
கீதா
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என் பெயரும் கீதா தான்! அதை மறந்துட்டீங்க போல! இந்தக் கதை அதாவது ஜெயகாந்தனின் கதை பலமுறைபடிச்சிருக்கேன். இப்போது நினைவூட்டிக் கொள்கிறேன். வாசந்தியின் யுகசந்தியும் படிச்ச நினைவு இருக்கு. யுகசந்தி என்றொரு மாபெரும் தொலைக்காட்சித் தொடர் தேசிய ஒளிபரப்பில் வந்து கொண்டிருந்தது. பங்கிம் சந்திர சட்டர்ஜி கதைனு நினைவு. அதுவும் பார்த்திருக்கேன். அப்போல்லாம் நிறைய வங்காளக் கதைகள் தொடர்களாக வந்து கொண்டிருந்தன.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா கீதாக்கா மறப்போமா!! நீங்க ரொம்ப சின்னக் குழந்தையாச்சேன்னு!! ஹிஹிஹிஹி...அப்புறம் ஆர்ச்சியின் ஆச்சி உங்களை அவங்களுக்கும் சீனியர்னு சொல்லிட்டாங்கன்னா?!!!!!
நீக்குயுகசந்தி ஜெயகாந்தனின் கதை சில மாதங்கள் முன் வாசித்தேன். பானுக்காவின் வீடியோ பார்த்ததும் இந்தக்கதை நினைவுக்கு வரவும் அதையும் சொல்லி இதையும் சொன்னேன்.
தொடர் பற்றியவை எல்லாம் எனக்குச் செய்திகள் கீதாக்கா. பொதுவாக வங்காளக் கதைகள் மெதுவாக நகரும். யதார்த்தமாக இருக்கும் எந்தப் பகட்டும் இல்லாமல் அது மட்டும் கொஞ்சம் தெரியும் எப்போதேனும் யுட்யூபில் வங்காளக் கதைகளின் காட்சிகள் பார்க்கும் போது. புதியவை அல்ல. கறுப்பு வெள்ளை..
நன்றி கீதாக்கா
கீதா
நான் முன்னாடி சொல்லி இருக்கேனா, இல்லையானு தெரியலை. எங்க குடும்பத்திலேயே அப்பாவுக்கு நேர் மூத்த அண்ணா ஒருத்தர் (அவரும் ஹிந்தி வாத்தியார் தான்) இப்படித்தான் ஓர் பால்ய விதவையைத் திருமணம் செய்து கொண்டார். 1947 ஆம் ஆண்டோ என்னமோ! நினைவில் இல்லை. குடும்பத்தில் என் பெரிய பெரியப்பா அவரை முற்றிலும் ஒதுக்கிவிட்டார். அவர் பிள்ளைகள்/மருமகள்கள் அனைவரும் இப்போதும் என் அண்ணா குடும்பம்/தம்பி குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதோடு எல்லா விசேஷங்களுக்கும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஊரில் அல்லோலகல்லோலம் ஆனதால் பெரியப்பா அந்தப் பெரியம்மாவுடன் புனே கிளம்பிப் போய்விட்டார். அங்கே போய் ராணுவக் கணக்கு அலுவலகத்தில் வேலையில் சேர்ந்து விட்டார். கடைசி வரை அங்கேயே இருந்தார். அவ்வப்போது மதுரை வந்து போவார். எங்க வீட்டுக்கு மட்டும் வருவார்கள். பெரியம்மா புனே போனதும் படித்து புனே சரஸ்வதி வித்யாலயாவில் வேலையும் பார்த்துப் பணி ஓய்வு பெற்றார். சமீபத்தில் தான் பத்தாண்டுகளுக்கு முன்னர் பெரியம்மா காலம் ஆனார்.
பதிலளிநீக்குநீங்க சொல்லியிருப்பீங்களா இருக்கலாம் ஆனால் நான் இப்பத்தான் தெரிந்து கொள்கிறேன் கீதாக்கா.
நீக்குஅந்தக் காலத்தில் இது ஒரு பெரிய விஷயமாக இருந்தது ஆனால் உங்கள் பெரியப்பா தைரியமாகச் செய்திருக்கிறார்.
இப்போது இதெல்லாம் நன்றாக முன்னேறிவிட்டது. அந்தக் காலத்தில் அது அப்படிப் பார்க்கப்பட்டது. ஜெயகாந்தன் அந்தக் காலத்திற்கு ஏற்ப எழுதியது.
நன்றி கீதாக்கா
கீதா
யுகசந்தி ஒரு சிறப்பான சிறுகதை. நீங்கள் அதைப் பற்றி எழுதி இருந்ததால் படிக்க நேர்ந்தது. உங்களுக்கு மிக்க நன்றி கீதா.
பதிலளிநீக்குநன்றி ரம்யா.
நீக்குஅந்தச் சுட்டியில் இன்னும் சில கதைகள் இருக்கிறது முடிந்தால் நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள் கூடவே பானுக்கா விமர்ச்சித்திருக்கும் வாசந்தியின் கதையும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.
கீதா
யுகசந்தி - ஜெயகாந்தன் அவர்களின் சிறப்பான கதைகளில் ஒன்று. பலமுறை படித்திருக்கிறேன். எங்கள் ஊர் நெய்வேலியும் அக்கதையில் வருவதால் எனக்கு அக்கதை மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகம்! :)
பதிலளிநீக்குஆம் வெங்கட்ஜி! சிறப்பான கதைகளில் ஒன்று.
நீக்குநெய்வேலி வருவதால் எனக்கும் கதையை வாசிக்கும் போது உங்கள் நினைவு வந்தது!!
கருத்திற்கு நன்றி வெங்கட்ஜி
கீதா
யுகசந்தி. இந்தப் பெயர் சின்ன வயதிலே என்னை மிகவும் கவர்ந்தது. சில அழகான தலைப்புகளைத் தன் கதைகளுக்கு சூட்டியிருக்கிறார் ஜெயகாந்தன். ’முன்நிலவும் பின்பனியும்‘ - ஜெயகாந்தனின் இந்த சிறுகதைத் தலைப்பைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரையில் ஆச்சரியப்படுகிறார் வண்ணதாசன்: இப்படிப் பெயர் வைக்க அவருக்கு எப்படித் தோன்றியது!
பதிலளிநீக்குமீண்டும் இந்தக் கதையைப் படித்தேன். ஜெயகாந்தன் எழுத்து மீண்டும் சென்று வாசிக்கவைக்கும் எழுத்து. அவரது சிறுகதைகள் நிதானமாக வாசித்து அனுபவிக்கப்படவேண்டும். அவசரமாக செய்யக்கூடாதது அது!