சனி, 23 செப்டம்பர், 2017

இனி அம்மாவுடன்......!

நகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்! வாழ்க்கையிலும் நாம் மேலே செல்லச் செல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களும், இருப்பவைகளும் இப்படித்தான் சிறியவைகளாக, அற்பமாகத் தெரியத் தொடங்கிவிடுகின்றதோ? விந்தையான மனம் கீழே மீண்டும் வேடிக்கை பார்த்தது.

வேகமாகச் செல்லும் வண்டிகளும், ட்ராஃபிக் ஜாமும், சென்னையும் பரபரப்பான நகரம்தான் என்று சொல்லுகின்றனவோ? மருத்துவமனைக்குள் கார்கள் நுழைவதும், போவதுமாக, பரபரப்பு நோயாளிகளின் பெருக்கத்தின் அடையாளமா? அல்லது மக்களின் பண வீக்கத்தின் அடையாளமா? இந்த மருத்துவமனையின் பெயரை விட இதில் என் மருத்துவ நண்பர்கள் வேலை செய்கிறார்கள் என்பதால்தான் அம்மாவின் இதயத்திற்கு இங்கு வைத்தியம். அம்மாவின் இதயத்திற்கு வைத்தியம் என்றதும் மனதுள் என்னென்னவோ எழுகின்றது. வைத்தியம் அவசியமா என்ன? இல்லை இது புற இதயம். அம்மாவின் அக இதயம் அது இனிமையானது!

“ப்ரணவ் தம்பி” குரல் கேட்டுச் சட்டென்று ஓர் அதிர்வில் திரும்பினேன். வியப்பு!

“மாமா நீங்க இங்க எப்படி?”. நீலகண்டன் மாமா! நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டின் மாடி வீட்டிலிருந்தவர். எங்கள் நெருங்கிய நண்பர்.

“மாமிக்கு கேன்ஸர். இங்க அட்மிட் ஆகி ஒரு வாரம் ஆகுது. அம்மா இங்க அட்மிட் ஆகியிருக்கறதா சாப்பாடு கொண்டுவந்த முனியம்மா சொல்லிச்சு. இங்க வந்து பேரு சொல்லி ரூம் நம்பர் பார்த்து வந்தா நீ இங்க நிக்கறத பார்த்தேனா…அதான்..”

“ஆமா, மாமா முந்தா நாள் காலைல அம்மாவே தனக்கு ஒரு மாதிரி ஆகுதுன உடனேயே ஹாஸ்பிட்டல்ல கூப்பிட்டு சொல்லி இங்க வந்து அட்மிட் ஆகிட்டாங்க..அப்படியே என்னையும் கூப்பிட்டுச் சொன்னதும் வந்துட்டேன்..”

“நீயே ஒரு கார்டியாலஜிஸ்ட்…. அப்புறம் என்ன? அம்மாவுக்கும் பெரிய பலம்! சரி அம்மா எப்படி இருக்காங்க?”

“இப்ப அம்மாக்கு ஓகே. மாமா, நான் என்னதான் டாக்டரா இருந்தாலும் அம்மானு வரும் போது பாசம் மருத்துவ அறிவைப் பின் தள்ளிடுது. இங்க நான் டாக்டர் இல்ல. மகன்! மகன் மட்டுமே! மாமா”

“டோக்டர் ஸாரே அம்மைக்கு ட்ரெஸ் மாற்றி. ரூம் க்ளீனிங்கும் கழிஞ்சு. போய்க்கலாம் ஸார். பின்னே உங்க ஃப்ரென்ட் டோக்டர் ரமேஷ் உங்கள விளிச்சு”

“ஓ! ரமேஷ் கூப்பிட்டாரா? மொபைல ரூம்ல சார்ஜ்ல போட்டுருந்தேன்….ஸோ…மிஸ் பண்ணிட்டேன். சரி….அம்மா கண் முழிச்சாங்களா?”

“ஜஸ்ட் நௌ…ஷீ இஸ் கோன்ஷியஸ் ஸார்”. ரூமை நோக்கி நானும், மாமாவும் நடந்தோம்.

“இங்க மலையாளி நர்ஸுங்கதான் அதிகம் போல”

“இங்க மட்டும் இல்ல மாமா. லோகத்துல எங்கெல்லாம் ஹாஸ்பிட்டல் இருக்கோ அங்கெல்லாம் பார்க்கலாம்”

அம்மா கண் விழித்திருந்தாள். முகத்தில் என்னைக் கண்ட சந்தோஷம், மலர்ச்சி, புன்னகை. என் கையைப் பிடித்துக் கொண்டாள். நான் அவள் உச்சி முகர்ந்து தலையைக் கோதிவிட்டேன். அதே அம்மா வாசம்! அம்மாவுக்கு இதமாக இருந்திருக்க வேண்டும். கண்ணை மூடி அனுபவிப்பது தெரிந்தது. பாவம்! தனிமையான வாழ்க்கை. கண் திறந்தவள் என் மனைவி ரஞ்சனியைத் தேடுவது தெரிந்தது. நீலகண்டன் மாமாவைப் பார்த்ததும் அவள் முகத்தில் வியப்பு, சந்தோஷம். மாமா சைகையாலேயே நலம் விசாரித்தார்.

“உங்க பையன் வந்தாச்சு. பாருங்க நீங்க எழுந்து உக்காந்துருவீங்க. சரி உடம்ப பாத்துக்கங்க.” என்று அம்மாவிடம் சொன்னவர் என்னிடம்,

“மாமி படுத்து ஒரு வாரம் ஆகுது. இன்னும் என் பையன் பிரபு வரலை. இத்தனைக்கும் ஹைதராபத்லதான் இருக்கான். அவ தவிக்கறா பிள்ளை வரலை வரலைனு. நீ பாரு வெளிநாட்டுலருந்து உடனே ஓடி வந்துட்ட. ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. ப்ரணவ் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதப்பா. அம்மாக்கு நீ ஒரே பையன். அம்மா பாவம் தனியாவே இருக்காங்க இங்க. இப்ப மாதிரி எப்பவுமே அவங்க கூட பேசி, நேரம் செலவழிச்சு கவனிசுக்கப்பா. அதுதாம்பா எல்லா அம்மாக்களும் விரும்பற ஒரே விஷயம்.” என்று சொல்லிவிட்டு, “நீ எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட. நான் சாப்பாடு கொண்டுவரேன்” என்று சொல்லி விடை பெற்றார். நானும் அப்புறம் மாமியை வந்து பார்ப்பதாகச் சொன்னேன்.

அம்மா தன் அன்பினாலும், நேர்மறை எண்ணங்களினாலும் நிறைய நட்புகளைச் சம்பாதித்து வைத்திருக்கிறாள்! அவளுக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

மாமாவின் வார்த்தைகள் நெற்றிப் பொட்டில் அறைந்தது போலிருந்தது. மாமா என்னை என்னவோ ரொம்ப உயர்வான இடத்தில் வைத்து நல்ல பையன் என்று எண்ணியிருக்கிறார். குற்ற உணர்வு எனக்கு மேலிட்டது.

அம்மா மீண்டும் என் மனைவியைத் தேடுவது புரிந்தது. “அவங்க வீட்டுக்குப் போயிருக்காமா. வருவா….நான் தான் இருக்கேனேம்மா….” மகன் நான் இருந்தாலும் மருமகள் தன்னுடன் இருப்பதில் அப்படியொரு சந்தோஷம் அம்மாவுக்கு எப்போதுமே!

சாத்துக்குடி ஜூஸ் வந்திருந்தது. அதைக் குடிப்பதற்கு ஏற்றவாறு கட்டிலை சற்று உயர்த்தினேன். என் கையைப் பிடித்துக் கொண்டே ஜூஸை குடித்தாள். என் தலையைத் தடவிக் கொடுத்தாள். அம்மாவின் ஸ்பரிஸம். அப்படியே அம்மாவின் மடியில் படுக்க வேண்டும் போல் இருந்தது. கொடுக்க வேண்டிய மருந்துகளை நானே அம்மாவுக்குக் கொடுத்தேன். என் கையைப் பிடித்துக் கொண்டு அப்படியே கண் அயர்ந்துவிட்டாள். நான் இருக்கிறேன் என்ற ஒரு செக்யூர்ட் ஃபீலிங்காக இருக்கலாம். கட்டிலை மீண்டும் கீழே இறக்கிவிட்டு, மானிட்டர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டேன்.

மாமாவின் வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தது. நாங்கள் இன்று காலைதான் கானடாவிலிருந்து வந்திறங்கினோம். மனைவி உடனே தன் குடும்பத்தார் தற்போது பங்களூரில் இருப்பதால் அவர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சென்றுவிட நான் நேரே வீட்டிற்குச் சென்று சாமான்களை வைத்துவிட்டு இங்கு வந்துவிட்டேன்.

நான் யோசித்துப் பார்க்கிறேன். நான் காதலிக்கத் தொடங்கும் முன் வரை அம்மாவும் நானும் எவ்வளவு பேசியிருப்போம். அரட்டை அடித்திருப்போம். காதலிக்கத் தொடங்கியதும் அதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுப் போனதே! ஏன்? இப்போது மனைவி அப்போது காதலி! அம்மாவுக்கு அந்த வாசம் தெரியாமல் போகுமா? அவளது ரத்தம் தானே நான்! காதலைக் கண்டு பிடித்து என்னிடம் மெதுவாகக் கேட்டாள்.

“யாரடா அது எனக்குப் பொண்ணா வரப் போறது?”

“அம்மா நானே சொல்லணும்னு இருந்தேன். ரஞ்சனி!”

“ரஞ்சனியே ரட்சிப்பாய்!” என்று பாடி என்னைக் கலாய்த்தாள். சந்தோஷப்பட்டாள். விவரங்கள் கேட்டாள்.

“நம்ம ஊர்க் குடும்பம்தான். ஆனா ரெண்டு தலைமுறையா பல வெளிநாடுகள்ல இருந்தவங்க. ரஞ்சனி பிறந்து வளர்ந்தது லண்டன்ல.. நான் இப்ப லண்டனுக்குப் படிக்கப் போனப்ப பழக்கம்.”

“ஓ! அப்போ தமிழ் தெரியாதோ?”

“தெரியாதுமா. ஆனா கொஞ்சம் புரிஞ்சுப்பா”

“ஸோ……இங்கிலிஷ் தான் மீடியேட்டர்! இல்லையா? மீடியேட்டரை எப்பவும் நம்ப முடியாதுடா. தாய்மொழில பேசினாலே பல சமயங்கள்ல தப்பா போயிடுது. மீடியேட்டரை ரொம்பவே கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும். என்னதான் சொல்லு நம் உணர்வுகளை நம்ம மொழிலதாண்டா சரியா சொல்ல முடியும்…” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாலும், அம்மா ரஞ்சனியைத் தன் மகளைப் போல ஏற்றுக் கொண்டாள்.

படிப்பு முடிந்து அம்மாவுடன் சில காலம் இருந்த போது, ரஞ்சனியின் கால் வரும் போது, “ரஞ்சனி ம்ருது பங்கஜ லோலசனி” என்று குறும்புடன் பாடி எனக்கு இண்டிகேட் செய்வாள். மகளிடம் பேசுவது போலவே பேசுவாள். அப்பா இருந்த போதும் சரி, இறந்த பிறகும் சரி, அம்மாவுடன் நான் அனுபவித்த நொடிகள் அனைத்தையும் என் காதல் கொஞ்சம் கொஞ்சமாகக் களவாடியது. காதல் அத்தனை சக்தி வாய்ந்தது போலும்!

அம்மா நிச்சயமாக ஃபீல் செய்திருக்கலாம் ஆனால் இதுவரை ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. ரஞ்சனி கூப்பிடும் போது என் ஃபோன் என்கேஜ்ட் என்றால் ரஞ்சனிக்கு கோபம் வரும். ஆனால் அவளை நான் கூப்பிடும் போது அவள் தன் அம்மாவுடன் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பாள். ஒரு நாளைக்கு 4, 5 முறை அவள் அம்மா, அப்பாவுடன் பேசுவது என்பது டிஃபால்ட். அவள் குடும்பத்தார் இந்தியாவில் சில மாதங்கள் அமெரிக்காவில் சில மாதங்கள் என்று இருந்து வருகிறார்கள்.

ரஞ்ச்னியைக் கைபிடிக்க நினைத்த போதே எங்கள் எதிர்காலத் திட்டமிடலில் ஒன்றாக, கனடா பி ஆர் க்கு அப்ளை செய்து படிப்பு முடிந்த மறு வருடத்தில் கிடைத்திட, நான் கனடாவில்  மருத்துவனாக வேலைக்குச் சேர்ந்து அம்மா தன் ஆசிரியத் தொழிலில் சம்பாதித்து, எனக்காகச் செலவழித்த, எனக்காக வாங்கிய கடனை எல்லாம் அடைத்து அம்மாவுக்கும் மருத்துவச் செலவு, மற்றும் அம்மா இனி சுகமாக வாழ்ந்திட வேண்டும் என்று சேமித்து, சென்றவருடம் காதலியை மனைவியாக்கிக் கொண்டு என்று கடந்த இத்தனை வருடங்களில் அம்மாவுக்காகப் பணம் சேமித்தாலும், என் அம்மாவுடன், முன்பு போல் எத்தனை முறை அன்புடன் நிறைவாகப் பேசியிருப்பேன்?

எப்போதேனும் கூப்பிட்டு நலமா, நலம் என்று முடித்ததோடு சரி. அம்மா தினமும் என்னை அழைப்பாள். நான் பிஸி என்றால் பொறுப்பாள். ரஞ்சனி தினமும் தன் பெற்றோருடன் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போவது வரை மூன்று, நான்கு முறையேனும் பேசும் போது நானும் அவள் பெற்றோருக்கு ஹலோ சொல்ல வேண்டும். ஆனால், நான் என் அம்மாவுக்கு?

அம்மா பாவம்! எனக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்திருக்கிறாள். அதுவும் தனியான வாழ்க்கை இங்கு. நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன். அம்மாவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு என் கன்னத்தில் வைத்துக் கொண்டேன். இனி அம்மாவுடனான ஒவ்வொரு நொடியையும் நான் அம்மாவுடன் வாழ வேண்டும். அம்மாவின் இதயத்தில் இல்லை பிரச்சனை. பிரச்சனை என் இதயத்தில்தான்!

நாயகியில் அமைந்த ரங்கநாயகத்தைப் பற்றியும், சேஷு அதை இழைத்துப் பாடியிருப்பதையும் அம்மாவிடம் ஸ்லாகிக்க வேண்டும். மாண்டலின் ஸ்ரீனிவாஸ் ஸ்வர ட்ரான்சிஷனில் புகுந்து விளையாடியிருப்பதை மீண்டும் பிரஸ்தாபிக்க வேண்டும். அம்மாவுடன் சேர்ந்து சக்கைப் பிரதமனும், அக்கி ரொட்டியும், ஷாஹி பனீரும், ராவல்பிண்டி சானாவும், ஆஃப்கானி நாணும் செய்து ருசிக்க வேண்டும். வாசிக்கும் புத்தகத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும். இவற்றுடன் மிக முக்கியமாக அம்மாவின் மடியில் படுத்து அம்மாவின் கையால் சாதம் சாப்பிட வேண்டும்

“My son is 'my son' till he gets a wife. But my daughter is 'my daughter' till the end of my life.” என்று நீலகண்டன் மாமா சொன்ன வரிகள் நினைவில் வந்தது! நோ! நான் அப்படியான மகனல்ல! அம்மா இனி என்னுடன் தான். .என் கண்ணிலிருந்து என்னை அறியாமல் வழிந்த நீர் அம்மாவின் கையை நனைத்தது போலும். அம்மா திடுக்கிட்டுக் கண் விழித்தாள்!

மொபைலில் என் ஆல்பத்திலிருந்து அம்மா தன் குரலில் பாடிப் பதிந்திருந்த, “இப்படியும் ஒரு பிள்ளை” என்ற ஊத்துக்காட்டின் அரிதான ராகமாலிகைக் க்ருதியை ஒலிக்கவிட்டு, அம்மாவைப் பார்த்துக் குறும்புடன் புன்னகைத்தேன்! “அம்மா இனி நீ என்னோடுதான்!”  அம்மாவின் முகத்தில் பிரகாசம்! அம்மாவும் கூடவே பாடினாள்! எங்கள் இருவரின் இதயமும் ஒன்று சேர்ந்து தனியாவர்த்தனம் வாசிக்கத் தொடங்கின!.

----கீதா


(இரு வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதையை, ராயசெல்லப்பா சார், "அம்மாவுடன் பேசினீர்களா" என்று பதிவு போட்டதும் எடுத்து தூசி தட்டி போட நினைத்து போடாமால் இதோ இப்போதுதான் வெளியிடல்...)

97 கருத்துகள்:

  1. மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ... கொஞ்சம் லேட்டா வந்து படிக்கிறேன்... இப்போதைக்கு ட்தமனாக்காவை இணைச்சு விடுறேன்ன்...:)

    பதிலளிநீக்கு
  2. வாங்க அதிரா!!! தம நாவை இணைத்தமைக்கு மிக்க நன்றி. எங்களால பெட்டியே பார்க்க முடியலையே...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. உலகில் எங்கும் மலையாளி செவிலியர்கள் உண்மை.

    தாயின் அன்பை கடைசி காலத்திலாவது புரிந்து கொள்ள உதவியாக வந்த திரு.நீலகண்டன் மாமாவுக்கு நன்றி சொல்வோம்.

    கனடா மருமகளை நேரடியாக பெங்களூரு அனுப்பி வைத்து அவள் தமிழ்நாட்டு மருமகள்தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.

    தமன்னா பிறகு கணினி வழியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனடா மருமகளை நேரடியாக பெங்களூரு அனுப்பி வைத்து அவள் தமிழ்நாட்டு மருமகள்தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.//

      ஹாஹாஹாஹாஹா கில்லர்ஜி!!! இதில் மகனுக்குத் தாயின் அன்போ அல்லது தாய்க்கு மகனின் அன்போ புரியாமல் இல்லை....ஆனால் தாயுடனான நேரம் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டோமோ என்ற அவ்வுணர்வு நீலகண்டன் மாமா சொன்னதும் அவனுக்கு நினைக்கத் தோன்றியது....

      மிக்க நன்றி கில்லர்ஜி!!!

      நீக்கு
  4. TM 2 எந்தவித ஒரு தொய்வு இல்லாமல் எளிய நடையில் அழகாக சொல்லி சென்ற ஒரு உணர்வு பூர்வமான சிறுகதை... குட் கீதா & துளசி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரைத் தமிழன் தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  5. தமனா வோட் போட பொக்ஸ் தெரியாதோருக்காக.. லிங்/

    http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472563

    பதிலளிநீக்கு
  6. //“இங்க மலையாளி நர்ஸுங்கதான் அதிகம் போல”

    “இங்க மட்டும் இல்ல மாமா. லோகத்துல எங்கெல்லாம் ஹாஸ்பிட்டல் இருக்கோ அங்கெல்லாம் பார்க்கலாம்”//

    100 வீதம் உண்மை.. இங்கும் அப்படித்தான்.

    // நேர்மறை எண்ணங்களினாலும்//
    இது பொஸிடிங் திங்கிங்தானே?.. அப்போ நேரான எண்ணங்கள் என வராதோ? ஏன் மறை அங்கு வரோணும்?:)... இது ஸ்ரீராமும் ஓரிடத்தில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணங்களை பிறர் அஅறியமுடியாத. நேர்மறை -பாசிடிவ் எதிர்மறை-நெகடிவ்.

      நீக்கு
    2. இந்த குழப்பம் எனக்கும் அடிக்கடி வருமா அதனாலேயே நான் அப்டியே ஆங்கிலத்தில் எழுதிடுவேன் :)

      நீக்கு
    3. அதிரா உங்கள் கேள்விக்கு நெல்லைத்தமிழன் சொல்லிவிட்டார்....

      ஏஞ்சல் பல சமயங்களில் அப்படி நேர்ந்துவிடுகிறதுதான்....

      நீக்கு
    4. ///நேர்மறை -பாசிடிவ் எதிர்மறை-நெகடிவ்//பாடமாக்கி எடுத்திட்டேன் நெல்லைத்தமிழன் மிக்க நன்றி. பல நேரங்களில் தமிழ் ஈசி, சில நேரங்களில் இங்கிலிஸ் ஈசி:).

      நீக்கு
  7. கற்பனையோ உண்மையோ.. அருமையாக இருக்கிறது கீதா.

    உண்மைதான் பெண்கள் எப்பவும் தம் குடும்பத்தை விட்டுக்குடுக்காமல் ஒட்டாகவே இருப்பார்கள், ஆனா ஆண்களுக்கு எல்லாம் மனதில்தான் இருக்கும்.. வெளியே காட்டத் தெரிவதில்லை... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்:)) ஹா ஹா ஹா நல்ல மனைவி அமைந்தால், தன்னைப்போல தன் கணவரின் குடும்பத்தோடும் தானும் பேசி, கணவரையும் இழுத்து வைத்துப் பேச வைப்பார்.. இல்லையெனில் இக் கதையில் வரும் மகன் போல, தன் தவறைப் புரிந்துகொள்ளும்போது காலம் கடந்திருக்கும்...

    ... அருமை.. கீதா வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனா ஆண்களுக்கு எல்லாம் மனதில்தான் இருக்கும்.. வெளியே காட்டத் தெரிவதில்லை.// உண்மைதான் அதிரா.... வெளியே காட்டத் தெரிவதில்லை ஒரு புறம் என்றால் மனைவி அமைவதைப் பொருத்தும் நீங்கள் சொல்லியிருப்பது போல்.....

      நல்லகாலம் கதையில் காலம் கடக்கவில்லை....

      மிக்க நன்றி அதிரா கருத்திற்கு

      நீக்கு
  8. //அதுதாம்பா எல்லா அம்மாக்களும் விரும்பற ஒரே விஷயம்.”//

    ஆம். எழுத்தாளர் சுஜாதாவிற்கே இந்த நிலை இருந்தது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் தலைவர் அதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். கற்றதும் பெற்றதுமிலேயே வரும். அப்புறம் ஏதோ எங்கோ பேட்டியா இல்லை அவரது கருத்தாகவா இல்லை அவரது ஒரு மகன் ஜப்பானியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட போதா இருவருமே வெளிநாட்டில் இருப்பதைப் பற்றிச் சொல்லும் போதா தெரியவில்லை சொல்லியிருக்கிறார்.

      நீக்கு
    2. அவரின் இறுதிக் காலத்தில் கூட அவரது நெருங்கிய நண்பர் ரசிகர், மாணாக்கர் என்று சொல்லலாமா? சுஜாதா தேசிகன் தான் இருந்தார் என்று நினைவு....

      இப்படி ஒருவர் எழுதியிருந்ததை வாசித்த நினைவு...நெட்டில் தேடி எடுத்தேன்..




      .//நேரில் கொடுத்தால் வாங்க மாட்டீர்கள் அதான் கீழே வைத்து விட்டு போகிறேன்... இதை மறுக்க வேண்டாம், இது ஒரு மகனுக்கு அப்பா செய்யும் கடமை......

      என்று எழுதி இருந்ததாம். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் இதே பெட்டி சங்கரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே அளவு பணம்... அதே போன்று உடன் ஒரு கடிதம்...

      நீ என்னை அப்பாவாக நினைத்ததுக்கு மிகவும் நன்றி. நானும் உன்னை என் மகனாக தான் நினைக்கிறேன். அதனால் தான் இந்த பெட்டியை திருப்பி அனுப்புகிறேன்.... காரணம் ஒரு தகப்பனாக என் மகனிடம் அன்பை மட்டும் தான் எதிர்ப்பார்கிறேன்........... ஆசீர்வாதங்களுடன் தகப்பன் சுஜாதா.....// ஸோ சுஜாதாவும் அன்பைத்தான் எதிர்பார்த்திருக்கிறார் என்று சொல்லலாம் தான் இல்லையா....ஸ்ரீராம்...

      நீக்கு
  9. //தாய் மொழில பேசினாலே பல சமயங்களில் தப்பா போயிடுது//

    அதைச் சொல்லுங்க.. பேசுவது ஒரே வார்த்தைதான். எந்த பாவத்தில் சொல்கிறோம் என்பதும் முக்கியம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த குழப்பம் எனக்கும் அடிக்கடி வருமா அதனாலேயே நான் அப்டியே ஆங்கிலத்தில் எழுதிடுவேன் :)//

      haaa haa :) நானும் பாவம்/ bavam .என்று புரிஞ்சி திகைச்சேன்

      நீக்கு
    2. ஆம் ஸ்ரீராம் சொல்லும் வார்த்தையை உணர்வு பூர்வமாகச் சொல்லுவது ரொம்ப முக்கியம் தான் இல்லையா....

      ஏஞ்சல் ஹாஹாஹாஹ் ......பாவம்-Bhavam ஆம் உச்சரிப்பு முக்கியம் இல்லையா....

      நீக்கு
  10. //“அம்மா இனி நீ என்னோடுதான்!” என்றதும், அம்மாவின் முகத்தில் பிரகாசம்!//

    கோடி சூர்யப் பிரகாசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் கோடி சூர்ய பிரகாசம்...அதற்கு அளவே இல்லை என்றும் கொள்ளலாம் இல்லையா....அந்த இடத்தில் என்னைத்தான் நான் நினைத்துக் கொண்டேன்....(இதைச் சொன்னதும் என் மகன் என்னுடன் பேசாமல் ஃபோனையே கட் செய்துவிட்டான்....யூ டூ என்று சொல்லி....ஹாஹாஹா)

      மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு

      நீக்கு
  11. ஸூப்பர் கீதா.காலையிலொரு அருமையான கதை படித்தேன். உணர்வுகளால் நெய்யப்பட்ட அருமையான கதை. ஒரு தந்தைக்கு மகனை விட மகள்தான் திருமணம் ஆனாலும் உறவில் தொடரும் என்கிற வரி பொய்ப்பிக்கப்பட வேண்டும். பொய்ப்பிக்கும் சில மகன்களையும் நானே அறிவேன். அம்மாவின் உணர்வுகளோடு ஒன்றினேன். அதனாலேயே, "இது அந்த ரஞ்சனி இங்கு வராததால் / இல்லாததால் வந்திருக்கும் ரெஸ்பான்ஸ்... அவள் வந்ததும் என்ன, எப்படி மாறுமோ?' என்கிற எண்ண ஓட்டமும் வந்தது.

    அருமையான கதைக்கு என்னால் ஒரு தம வாக்குதான் அளிக்க முடிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தந்தைக்கு மகனை விட மகள்தான் திருமணம் ஆனாலும் உறவில் தொடரும் என்கிற வரி பொய்ப்பிக்கப்பட வேண்டும்.// யெஸ் ஸ்ரீராம்....உண்மைய சொல்லணும்னா நான் இந்தக் கதையை மிகவும் சோகமாக முடித்திருந்தேன். அதாவது மகன் தான் இனி ஒவ்வொரு நொடியும் அம்மாவுடன் செலவழிக்க வேண்டும் என்று நினைத்து ரூமிற்குள் வரும் போது அம்மா நிரந்தரமாகக் கண் மூடியிருப்பாள் என்று முடித்திருந்தேன்....மகனுடன் பேசிய போது அவனுக்கு வந்ததே கோபம்....ம்மா யூ டூ!! என்ன நினைச்சமா நானும் ஒரு மகன் தான்....நானும் அப்படியா உங்கிட்ட இருக்கேன்? அதெப்படி மகன் நா இப்படினு எழுதுவ.....கதைய மாத்து என்று என்னிடம் வாதாடினான் நான் அப்படியான மகன் இல்லைனு உனக்கு கண் முன்னாடியே இருக்கும் போது அதெப்படி எழுதுவ என்று என்னோடு சண்டை போட்டான். அப்போது நான் அவனிடம் நீ இப்ப சொன்ன அதே வரியை வைத்தே நான் அப்படியான மகன் இல்லை அப்படின்றத வைச்சே அதே சமயம் நான் சொல்ல வந்ததைச் சொல்லப் போறேன் என்று சொல்லி அம்மா இறக்காமல், இப்போதைய பாசிட்டிவ் முடிவு எழுதினேன்....இதுவும் மகனுக்குப் பிடிக்கவில்லை...ஏதோ நான் அவனைச் சொனது போன்று நினைத்துக் கொண்டான். ஏனென்றால் நாங்கள் அடிக்கடி பாட்டு, சமையல், இயற்கை நிகழ்வுகள்னு பேசிப்போமா....அதனால் அவனுக்குக் கோபம்...அப்புறம் நான் அவனிடம் இது கதை என்று சொல்லி சமாதானம் சொன்னாலும் அவன் கன்வின்ஸ் ஆகவில்லை....ஏதோ அவனைச் சொன்னது போலவே...

      //பொய்ப்பிக்கும் சில மகன்களையும் நானே அறிவேன்.// இதற்குத்தான் இதோ மேலே சொன்னது என் மகன் என்னோடு சண்டை போட்டது....

      //அம்மாவின் உணர்வுகளோடு ஒன்றினேன். அதனாலேயே, "இது அந்த ரஞ்சனி இங்கு வராததால் / இல்லாததால் வந்திருக்கும் ரெஸ்பான்ஸ்... அவள் வந்ததும் என்ன, எப்படி மாறுமோ?' என்கிற எண்ண ஓட்டமும் வந்தது.// நீங்கள் ஒன்றுவீர்கள் என்று தெரியும் ஸ்ரீராம். உங்கள் பல பதிவுகளில் நீங்கள் அம்மாவுடனான தருணங்கள் குறித்துச் சொல்லியிருக்கிறீர்கள். அம்மாவுக்குச் சமையலில் உதவியது உட்பட....

      ரஞ்சனி வந்தால் மாறுமா? மாறாது என்று கொள்வோம்....ப்ரணவும் மாற மாட்டான் என்று கொள்வோம். மாறும் என்று சொல்லிவிட்டால் என் மகன் என்னுடன் சண்டைக்கே வந்துவிடுவான்...ஹாஹாஹாஹா...

      மிக்க நன்றி ஸ்ரீராம் உணர்வுபூர்வமான கருத்திற்கு

      நீக்கு
  12. ரொம்ப அருமையான கதை. மனத்தை உருக்கும் உண்மை. பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன் கருத்திற்கு.....வாங்க அப்புறமா...

      நீக்கு
  13. ஏராளமான வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறுகதை வடிவத்தை இன்று தான் முழுமையாக நிதானமாகப் படித்தேன். உங்கள் நடையிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜோதிஜி தாங்கள் நிதானமாகப் படித்து பாராட்டிக் கருத்திட்டமைக்கு...

      நீக்கு
  14. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  15. நான் எழுதிய ஒரு பதிவி ந் சுட்டியே பின்னூட்டம் /http://gmbat1649.blogspot.com/2012/05/blog-post_06.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சுட்டியை வாசித்தேன் ஸார். மிக்க நன்றி ஸார்...கருத்திற்கு...

      நீக்கு
  16. வித்தியாசமான நடை. மகன் தன் தவறை உணர்ந்தாலும் பெரும்பாலும் இப்படித் தான் நடக்கிறது! என்ன செய்ய முடியும்! அதான் யதார்த்தம்! தன் கணவனைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்த பெண்கள் அதே போல் தான் தன் கணவனின் அம்மாவுக்கும் உணர்வுகள் உண்டுனு நினைக்க மாட்டாங்க! என்னவோ போங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு. உண்மைதான் என்றாலும் ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் ஆப்போசிட் மகன்களும் இருக்கிறார்கள்தான்...நான் பார்க்கிறேன்....ஆனால் பெரும்பாலும் நீங்கள் சொல்லியிருப்பதுதான்....இங்கு நான் சொல்லியிருப்பதுதான். அன்பு இல்லாமல் இல்லை...ஜீவி அண்ணா சொல்லியிருப்பது போல் அதை வெளிக்காட்ட இயலாத நிலை...என்றும் சொல்லலாம்....அதே பெண்கள் ஆண் குழந்தைகளுக்கும் தாய்தான்....இறுதியில் உங்களின் வார்த்தைக்கே வருகிறேன்...."என்னவோ போங்க" ஹாஹாஹா...

      நீக்கு
  17. வாழ்க்கை முறை மாறிவரும் உலகில் பொறுப்புகள், கடமைகள் கடந்து அன்பையும் உணர்வுகளையும் முதன்மைப்படுத்தி மிக இயல்பாக எழுதியிருக்கிறீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாண்டியன் சுப்ரமணியம் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. என்ன இயல்பான ஒரு எழுத்து நடை?.. உயிராய் ஒரு ஆற்றொழுக்கு.. வரிவரியாய் கதையொன்றைப் படிக்கிறோம் என்ற நினைவே மறத்துப் போய் அந்த மருத்துவ மனை காட்சிகள் திரைப்படமாய் மனத்தில் ஓட...

    அங்கங்கே தெளித்திருந்த ஆழ்ந்த கருத்துக்கள் வேறே. 'நம்ம உணர்வுகளை நம்ம மொழிலே தாண்டா சரியாச் சொல்ல முடியும்' என்ற வரி அட்சர லட்சம் பெறும். நான் அடிக்கடி உணர்வது.

    சங்கீத ஞானத்தின் இழைதல் கதைக்குத் தனியாக ஒரு களையைக் கொடுக்கிறது.

    பெண்ணின் பாசத்திற்கு மகனின் பாசம் சற்றும் குறைந்ததில்லை என்றாலும் ஆண்பிள்ளைக்கு வெளிக்காட்ட முடியாத அவஸ்தை. தாய்க்கோ மகளுக்கு ஒரு ஏற்பாடு பண்ணி விட்டோம் என்ற நிம்மதி உண்டு. மகனுக்கு அப்படிப் பண்ணவில்லையோ என்ற தடுமாற்றமும் உண்டு. இதையெல்லாம் வரக்கூடிய மருமகளுக்கு அவளின் தாய் தான் பாடம் நடத்துவது போல கற்றுக் கொடுக்க வேண்டும். செய்கிறார்களா என்பது தான் கேள்வி.

    ஒரு சின்ன 'நாட்' (கொக்கி) கதையில் விழுந்து சொன்ன கருத்துக்கு வலு சேர்த்திருக்கலாம்.

    வாழ்த்துக்கள், சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி அண்ணா. தங்களின் பாராட்டிற்கும், ஊக்கமிகு வரிகளுக்கும். உங்களைப் போன்ற எழுத்தாளர்களிடமிருந்து பெறும் கருத்துகள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

      / இதையெல்லாம் வரக்கூடிய மருமகளுக்கு அவளின் தாய் தான் பாடம் நடத்துவது போல கற்றுக் கொடுக்க வேண்டும். செய்கிறார்களா என்பது தான் கேள்வி.// கீதாக்கா இதற்குச் சொல்லியிருக்கிறார்கள்.

      //ஒரு சின்ன 'நாட்' (கொக்கி) கதையில் விழுந்து சொன்ன கருத்துக்கு வலு சேர்த்திருக்கலாம். // இதையும் குறித்துக் கொண்டேன் அண்ணா. மிக்க நன்றி ஜீவி அண்ணா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  19. பாசிடிவ் என்டிங்க் கதை... அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மிடில்க்ளாஸ் மாதவி தங்களின் கருத்திற்கு! முதலில் நெகட்டிவாக மிகவும் சோகமாக முடித்திருந்தேன்...பின்னர் மாற்றினேன்....

      நீக்கு
  20. //இதையெல்லாம் வரக்கூடிய மருமகளுக்கு அவளின் தாய் தான் பாடம் நடத்துவது போல கற்றுக் கொடுக்க வேண்டும். செய்கிறார்களா என்பது தான் கேள்வி.// எந்தத் தாய் செய்கிறாள்? மாமியாரை விரோதியாக நினைக்க வேண்டாம் என்று சொன்னாலே போதும்! :( நான் உன்னைப் பெற்ற மாதிரித் தான் உன் மாமியாரும் உன் கணவனைப் பெற்றிருக்கிறார்கள் என்றாலே போதுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ( நான் உன்னைப் பெற்ற மாதிரித் தான் உன் மாமியாரும் உன் கணவனைப் பெற்றிருக்கிறார்கள் என்றாலே போதுமே!// ஆம் கீதாக்கா! அது மட்டுமே போதும். மட்டுமல்ல பெண் குழந்தையின் மீது பாசமிருக்கலாம் ஆனால் அது கண் மூடித்தனமாக இருக்கவும் கூடாது. அதே போல்தான் பிள்ளையின் மீதான பாசமும்...ஆனால் பெரும்பாலான பெண்களின் அம்மாக்கள் மிகவும் கண் மூடித்தனமான அன்பினால் பெண் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில்லை...

      மிக்க நன்றி அக்கா கருத்திற்கு

      நீக்கு
  21. அருமையான கதை கீதா.
    தினம் இல்லையென்றாலும் அடிக்கடி பேசினாலே போதும் தாய் மகிழ்வாள்.
    மகன் எடுத்த முடிவு மாறாது இருக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா ஆம் அடிக்கடி பேசினாலே தாய் மகிழ்வாள்! மாறாது என்றே கொள்வோம்!!! மிக்க நன்றி அக்கா கருத்திற்கு

      நீக்கு
  22. /நானும் அவள் பெற்றோருக்கு ஹலோ சொல்ல வேண்டும். ஆனால், நான் என் அம்மாவுக்கு?//

    மனதுக்கு வலி தந்த வரிகள் :( வயதான காலத்தில் பெரியவங்க எதிர்ப்பார்ப்பது இம்மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்தான் ..
    ஒரு நண்பர் இங்கே இருக்கார் தனது தாயை கூட அப்படி கவனித்ததில்லை இங்கே பெங்களூரிலிருந்து விசிட்டிங் வந்த மாமியாருக்கு வீல் சேர் தள்றதென்ன என்னென்னமோ பார்த்து பார்த்து கவனிச்சார் ..இவர் போல் பலர் :( தன வயதான தாய் ஊரில் தனியே இருக்காங்க அவர் மனம் குளிர்விக்காம மனைவிக்காக இப்படி விழுந்து புரண்டு கவனிச்சாலும் அது மனதுக்கு வெறுப்பாய் இருந்தது..
    இது போல பல சம்பவங்கள் பார்த்திருக்கேன்...


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல்! ஒரு சில நிகழ்வுகள் இப்படி நானும் பார்த்திருக்கிறேன். இருபுறமும் ஒரே போன்று நடந்து கொள்ளும் மகன்களையும் ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். தன் தாயை மட்டும் போற்றிக் கொண்டு மனைவியின் பெற்றோர், குடும்பத்தை உதாசீனப்படுத்தும் ஆண்களும் இருக்கிறார்கள்...

      இங்கு சொல்லப்பட்டது போன்றவை கொஞ்சம் பெர்செண்டேஜ் கூடுதலாக இருக்குமோ...

      மிக்க நன்றி ஏஞ்சல்....

      நீக்கு
  23. மிக அருமையான மனதை நெகிழ வைத்த கதை கீதா ..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  24. மகன் மனதில் என்னதான் அன்பு இருந்தாலும், பெரும்பாலும் மனைவி குடும்பத்தில் காண்பிப்பதுபோல் தன் வீட்டில் காண்பிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. என்னதான் பாசிடிவ் முடிவு நீங்கள் கதை என்பதற்காகக் கொடுத்திருந்தாலும், அம்மாவைக் காணக்கூட வராமல் நேராக விட்டான் சவாரி என்பதுபோல் தன் வீட்டுக்குச் செல்லும் மனைவி இருக்கும் கணவன், வெறும் சொற்களோடும் உணர்வுகளோடும் இருந்துகொள்ள வேண்டியதுதான். நடைமுறையில் தான் நினைத்தைச் செயல்படுத்தமுடியாது.

    கதை மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகன் மனதில் என்னதான் அன்பு இருந்தாலும், பெரும்பாலும் மனைவி குடும்பத்தில் காண்பிப்பதுபோல் தன் வீட்டில் காண்பிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. // உண்மைதான் நெல்லை பல ஆண்களுக்கு இருக்கிறது....

      முதலில் நெகட்டிவாகத்தான் முடித்திருந்தேன். அப்புறம் என் மகனிடம் சொன்ன போது அவன் என்னோடு சண்டைக்கே வந்துவிட்டான். என்னோடு பேசாமல் ஃபோனைக் கட் செய்தும்விட்டான். அதெப்படி எல்லா மகனும் இப்படித்தானு சொல்லுறியா....நான் அப்படிப்பட்டவன் இல்லைனு சொல்லி அப்புறம் அந்த வரியை வைச்சே மாத்தறேனு சொல்லிஇருந்தாலும் நானும் அவனும் பேசிக் கொள்வது போல் சங்கீதம், சமையல் பற்றி எல்லாம் வைத்தும் கூட அவன் கன்வின்ஸ் ஆகவில்லை. இப்போதையதும் கூட அவன் கன்வின்ஸ் ஆகவில்லை....

      எனவே நடைமுறையில் செயல்படுத்த ப்ரணவால் முடிகிறது என்று கொள்வோம்....

      மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு...

      நீக்கு
  25. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்

    பதிலளிநீக்கு
  26. #அம்மாவின் இதயத்தில் இல்லை பிரச்சனை. பிரச்சனை என் இதயத்தில்தான்!#
    மகன்கள் எல்லோரும் யோசிக்க வேண்டிய கருத்து :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜீ! கருத்திற்கு....குறிப்பாக இந்த வரியைக் கோட் பண்ணிச் சொன்னதற்கு மிக்க நன்றி...

      நீக்கு
  27. இயல்பான எழுத்து நடையில் கற்பனை என உணர முடியாமல் உண்மைச்சம்பவம் போலவே இருந்தது கீதா. ஆண்பிள்ளைகளை பெற்று வெளி நாட்டுக்கு அனுப்பும் அல்லது திருமணமான பின் எல்லா தாய் மாரும் உணரும் உணர்வாய் அனைத்து அன்னை, மகன் சார்பில் எழுதபப்ட்ட கதை. பெண் பிள்ளைகள் எப்போதும் தங்கள் வீட்டாரை விட்டுக்கொடுப்பதில்லை. ஆனால் ஆண்மக்கள் எப்போதுமே திருமணம் எனில் தான் மட்டும் தான் எனும் நிலையில் தன் குடும்பத்தினை விட்டு விலகி நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றான்.மிகவும் வருந்தத்தக்க உண்மை இது. அருமையான கதைக்கரு கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நிஷா...பல அன்னைகளின் உணர்வுகளும், ஆண் பிள்ளைகளுக்கு அன்பு இருந்தாலும் அதைப் பல சமயங்களில் வெளிக்காட்ட இயலாத சூழலும் என்று அந்தத் தவிப்பைக் கண்டு வருகிறேன். அப்படி எழுந்ததுதான் இந்தக் கதை...என் குடும்பங்களிலும் இருக்கிறது...

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு நிஷா

      நீக்கு
  28. "அம்மா தன் அன்பினாலும், நேர்மறை எண்ணங்களினாலும் நிறைய நட்புகளைச் சம்பாதித்து வைத்திருக்கிறாள்!"
    இக் கருத்துதான் கதையின் மணியிடை இழையாக இருப்பதாக எண்ணுகிறேன். கதை அருமை; சொல்லிய விதம் அதனினும் அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா! இந்த வரியையும் நீங்கள் கோட் செய்து சொன்னதற்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

      நீக்கு
  29. >>> அம்மா இனி நீ என்னோடுதான்!” என்றதும், அம்மாவின் முகத்தில் பிரகாசம்!..<<<

    பலவிதமான சிந்தனைகளால் மனம் நெகிழ்ந்து விட்டது..

    ஆனாலும்,
    பெரும்பாலான சமயங்களில் காலத்தின் கட்டளை - நல்ல மகனையும் கட்டிப் போட்டு விடுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு சகோ! உண்மைதான் பெரும்பாலான சமயங்களில் காலத்தின் கட்டளை நல்ல மகனையும் கட்டுப் போட்டுவிடுகின்றது என்பது மிக மிக உண்மை சகோ!! மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  30. உணர்வுப்ப்பூர்வமான அருமையான சிறுகதை

    பதிலளிநீக்கு
  31. பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ராஜி எங்களுக்கே தெரியலை அது எங்க இருக்குனு. அதுக்குத்தான் அதிரா ஒரு லிங்க் கொடுத்திருக்காங்க அவங்களுக்கு அது எங்க இருக்குனு தெரிஞ்சுச்சு போல...ஹாஹாஹாஹா...அவங்க தேம்ஸ்ல குதிச்செல்லாம் கூடத் தேடிக் கண்டுபிடிச்சு கொடுத்துருவாங்க...ஹாஹாஹாஹா

      நீக்கு
  32. முன்பு சீதைத் தொடரில் (எங்கள் ப்ளாக்) வந்த உங்கள் கதைக்கும் இதற்கும்தான் எத்தனை வேறுபாடு! பெருங்கதையாக வளர்த்துவிடாமல் சிறுகதையாக சீராக முடித்துத் திறமை காட்டியிருக்கிறீர்கள்.

    // ரஞ்சனி தினமும் தன் பெற்றோருடன் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போவது வரை மூன்று, நான்கு முறையேனும் பேசும் போது நானும் அவள் பெற்றோருக்கு ஹலோ சொல்ல வேண்டும்..// இம்மாதிரி சம்பவங்கள்பற்றி நான் அடிக்கடி கேள்விப்படுகிறேன். ‘என் புருஷன்னு சொல்லிண்டு திரியற நீ, தினமும் ஒருமுறையாவது என் அப்பா, அம்மாவுக்கு நமஸ்தே சொல்லிடு, புரியறதா!’ என்பது இன்றைய இளம் மனைவிகளின் நிலைப்பாடு. அதுக்கு அப்படியே தலையாட்டுவது பெரும்பாலான பிள்ளைகளின் வழிப்பாடு. மனைவிகளோடு வாழும் பிள்ளைகளல்ல இவர்கள். மனைவிகளை வழிபடும் பிள்ளைகள்..பிழைத்துப்போகட்டும்! கதையில் இயல்பாக இதனைத் தொட்டிருக்கிறீர்கள்.

    மிகக் கொஞ்சப் பிள்ளைகளாவது அம்மாவை நினைத்துக் கொஞ்ச்ம் உருகுகிறார்கள்தான். இங்கே அம்மா ஒரு ideal அம்மாவாகக் காட்டப்பட்டிருப்பதால், உடம்பு சரியில்லாமல்வேறு படுத்திருப்பதால், பிள்ளை நினைந்து நினைந்து உருகுவது எளிதாக நிகழ்கிறது. தர்மபத்தினி ரஞ்சனி தேவி அருகில்லாதிருப்பது makes the atmosphere pretty easy for the beloved son! அம்மணி வந்து சேர்ந்தபின், ஆழமாய் ஒரு பார்வை பார்த்தபின், பிள்ளையாண்டானின் முடிவு நிற்குமா? நீடிக்குமா ? குடிகாரன் பேச்சு..விடிஞ்சாலே போச்சு!-என்பதுபோல பையன்களின் பேச்சு.. மனைவியைக் கண்டவுடன் போச்சு! என்கிறது புதுமொழி. (ஸ்ரீராமுக்கும் இந்தக் கவலைபோலும்!).

    இப்படிச் சொல்வதால், அழகாகக் கையைப்பிடித்துக் கதையை இட்டுச் சென்ற விதத்தைப் பாராட்டவில்லை என்று அர்த்தமில்லை. இடையிடையே ப்ரதமன், ரொட்டி, சக்கை, பனீர், நாண், ஊத்துக்காடு என்று வாசகர்களை மீட்டியிருக்கிறீர்கள். Nice!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு சீதைத் தொடரில் (எங்கள் ப்ளாக்) வந்த உங்கள் கதைக்கும் இதற்கும்தான் எத்தனை வேறுபாடு! பெருங்கதையாக வளர்த்துவிடாமல் சிறுகதையாக சீராக முடித்துத் திறமை காட்டியிருக்கிறீர்கள்.// மிக்க நன்றி ஏகாந்தன் சகோ! அது உணர்வுகள் மிகவும் வெளிப்பட்ட ஒரு கதை..ஏனென்றால் சீதை ராமைனை மன்னிக்க வேண்டுமே!!! .இதுவும் உணர்வுகள் உட்பட்ட ஒன்றுதான்....இதில் அம்மா ஒன்றும் ஐடியல் என்று சொல்லுவதற்கில்லை அதைப் பற்றி ரொம்ப விஸ்தரிக்கவில்லை...ஒரு வரியில் மிகவும் மறைமுகமாக பிள்ளை நினைப்பது போல்....அம்மாவும் ஃபீலிங்க் இருந்திருக்கலாம் என்று.... எந்த அம்மாவுக்குத்தான் இருக்காது என்னையும் சேர்த்துத்தான் எனக்கும் ஒரே மகனாச்சே!!! ஹாஹாஹாஹா......

      ப்ரணவ் மாறமாட்டான் அம்மணியைக் கண்டபின் என்று வைத்துக் கொள்வோம்....அட்லீஸ்ட் கதையிலாவது என்ன சொல்றீங்க ஏகாந்தன் சகோ??!!!!

      ///ஸ்ரீராமுக்கும் இந்தக் கவலை போலும்/// ஹாஹாஹா இருக்காதா பின்ன!!!??

      // இங்கே அம்மா ஒரு ideal அம்மாவாகக் காட்டப்பட்டிருப்பதால், உடம்பு சரியில்லாமல்வேறு படுத்திருப்பதால், பிள்ளை நினைந்து நினைந்து உருகுவது எளிதாக நிகழ்கிறது.// இன்னொன்றும் இங்கு கொள்ளலாமோ....அம்மா ஐடியல் என்பதை விட நல்ல மாமியாராக/மருமகளுக்கும் அம்மாவாக இருக்க விரும்புவதாலும்......இல்லைனா பொழைப்பு நடக்காதாக்கும்....மகனுக்கு மனைவியை அவள் பெற்றோரைப் பார்க்கும் போது தன் அம்மாவின் குணம் புரிவதாலும் இருக்கலாம் இந்த உருக்கம்....உலக இயல்பைப் பார்க்கும் போதுதானே அருமை தெரியும் அதுவரை முற்றத்து முல்லையின் அருமை தெரியாதே!!! ஆனால் ஒன்று பிள்ளையைப் பெற்ற அம்மாக்கள் எல்லோருமே கொஞ்சம் டிப்ளமாட்டிக்காக பொழைப்பை நடத்திக்கத் தெரியணும்...ஹாஹாஹாஹா...அதில்தான் இருக்கிறது சாமர்த்தியம்!!!

      இப்படிச் சொல்வதால், அழகாகக் கையைப்பிடித்துக் கதையை இட்டுச் சென்ற விதத்தைப் பாராட்டவில்லை என்று அர்த்தமில்லை. இடையிடையே ப்ரதமன், ரொட்டி, சக்கை, பனீர், நாண், ஊத்துக்காடு என்று வாசகர்களை மீட்டியிருக்கிறீர்கள். Nice!// மிக்க நன்றி ஏகாந்தன் சகோ!! கருத்திற்கு. எல்லாம் நானும் என் மகனும் பேசிக் கொள்வதுதான். இன்று கூட அவன் மாண்டலின் ஸ்ரீனிவாஸின் தம்பி ராஜேஷ் மற்றும் அனில் ஸ்ரீனிவாஸன் பியானோவில் இருவரும் வாதித்த கச்சேரி பற்றிச் சொல்லி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டோம்....அப்படிச் சிலது கதையில் வந்துவிடுகிறது...

      மிக்க நன்றி ஏகாந்தன் சகோ கருத்திற்கும் பாராட்டிற்கும்...

      நீக்கு
  33. கதை நன்றாக இருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அளவுக்கு மீறிய உருகலோ எனத் தோன்றுகிறது. கதையில் நீங்கள் சொல்ல வந்தது, மகள் கடைசி வரை மகளாகவே இருக்கிறாள்; ஆனால், மகன்களால் அது முடிகிறதா என்பதைத்தான் இல்லையா? அதை இன்னும் கொஞ்சம் மெலிதாகச் சொல்லியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. மகனின் மிதமிஞ்சிய உருகல் ஓர் அளவுக்கு மேல் திகட்டுகிறது. நிற்க, நான் கதையைச் சொன்னேன். ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் இபு ஞா....ஆனால் குற்ற உணர்வு மேலிடும் போது உணர்வுகள் பீறிடும். இதுநடைமுறையில் நடக்கிறது. அதுவும் வெளிநாட்டில் வாழும் மகன்கள் இங்குஇருக்கும் அம்மாக்கள் என்று... சமீபத்தில் கூட இரு நிகழ்வுகள் இப்படியானது. ஒன்று அதுவும் அம்மா இறந்துவிட....குற்ற உணர்வில் மகன் தவித்துவிட்டான்....ரொம்பவே டிப்ரஸ்டாக.........ஏன் எழுத்தாளர் சுஜாதாவுக்கும் உணர்வுகள் இருந்தது....அவரே ஒரு சில இடங்களில் சொல்லியிருக்கிறார்.

      மிக்க நன்றி சகோ...கருத்திற்கு

      நீக்கு
  34. கதையைப் படிக்கவிடாமல் நடுவில் கண்ணீர் வந்துவிடுகிறது. மனைவி இஷ்டம் போல நடந்தால்தான் அவன் இல்லறம் ஒழுங்காக நடைபெறும். அங்கு எதிரிடை கூடாது. இப்படிப்பட்ட மகனின் நிலையை தாய்மார்கள் உணர்ந்து கொண்டு இருக்கிரார்கள். அவர்கள் எதிரிட்டுக் கொண்டு எங்கெங்கோ நிலைகள் விபரீதமாகப் போகாமல் நம்மிடம் ஒதுங்கி இருந்தால்கூடப் பரவாயில்லை என்று நினைக்கும் தாய்மார்கள்தான் அதிகம் இக்காலத்தில். நோயின் பிடியில் பெற்றவளுக்கு அருமருந்து மக்கள்,அதிலும் மகன்தான். யாராவது ஒருவராவது என்பதற்கில்லாமல் மகனும் ஒருவனே. காலங்கள் மாறும். கதையின் முடிவின் சாரம். நல்ல மருமகள்களும், ஸுதந்திர மகன்களும் இருக்கிரார்கள். பெற்ற பாசத்தைவிட,அம்மா,அப்பா என்ற எண்ணம் இருந்தால் எவ்வளவு நன்றாக உள்ளது. உணர்ச்சி பூர்வமான வடிவமைப்பு. அப்பாடி அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை காமாட்சியம்மா...// இப்படிப்பட்ட மகனின் நிலையை தாய்மார்கள் உணர்ந்து கொண்டு இருக்கிரார்கள்.// இந்த வரிகள்....உண்மை !!

      //இக்காலத்தில். நோயின் பிடியில் பெற்றவளுக்கு அருமருந்து மக்கள்,அதிலும் மகன்தான். யாராவது ஒருவராவது என்பதற்கில்லாமல் மகனும் ஒருவனே. // அதைச் சொல்லுங்கள் காமாட்சியம்மா...ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு நு ஒவ்வொரு குடும்பமும் தனித் தனி தீவுகளாகி வருகின்றன...

      மிக்க நன்றி காமாட்சியம்மா கருத்திற்கு

      நீக்கு
  35. அருமையான கதை, அம்மாவை நினைக்கும்போதெல்லாம் என் கண்ணீர் என் இதயத்தை நனைத்து விடுகிறது.

    "ரஞ்சனி கூப்பிடும் போது என் ஃபோன் என்கேஜ்ட் என்றால் ரஞ்சனிக்கு கோபம் வரும். ஆனால் அவளை நான் கூப்பிடும் போது அவள் தன் அம்மாவுடன் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பாள். ஒரு நாளைக்கு 4, 5 முறை அவள் அம்மா, அப்பாவுடன் பேசுவது என்பது டிஃபால்ட்".

    "ரஞ்சனி தினமும் தன் பெற்றோருடன் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போவது வரை மூன்று, நான்கு முறையேனும் பேசும் போது நானும் அவள் பெற்றோருக்கு ஹலோ சொல்ல வேண்டும். ஆனால், நான் என் அம்மாவுக்கு?

    (ரஞ்சினி என்ற இடத்தில் அவரவர் வசதிக்கேற்ப(??) வேறு வேறு பெயர்களை போட்டுக்கொள்ளலாம்).

    இவைகூட ஒரு கணவனுக்கு பல வேளைகளில் நெஞ்சிலே ஒரு பெரும் பாரத்தையும் அம்மாவிடம் பேசமுடியவில்லையே என்ற ஒரு குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிடும் .

    மேலும் டோக்டர்,கோன்ஷியஸ் போன்று பல சொற்களை "மண்வாசனையோடு??" இன்னமும் , உலகம் முழுவதிலும் உள்ள மலையாளி தாதியர் சக ஊழியருடனும் , நோயாளிகளிடமும் பிரயோகிப்பதால் ஒட்டுமொத்த இந்திய தாதியர்கள் "நன் மதிப்பு??" நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது!!!.

    அருமையான சிந்தனையை அழகிய நிகழ்ச்சி கோர்வையாக கொடுத்தமை பாராட்டுக்குரியது.

    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோ தங்களின் கருத்திற்கு. உண்மைதான் கோ!! பல சமயங்களில் கணவனுக்குப் பாரமாக இருக்கிறது. தாயைப் பற்றிய உங்கள் பதிவு நினைவுக்கு வருகிறது கோ உணர்வுபூர்வமான பதிவு அது.

      //டோக்டர்,கோன்ஷியஸ் போன்று பல சொற்களை "மண்வாசனையோடு??" இன்னமும் , உலகம் முழுவதிலும் உள்ள மலையாளி தாதியர் சக ஊழியருடனும் , நோயாளிகளிடமும் பிரயோகிப்பதால் ஒட்டுமொத்த இந்திய தாதியர்கள் "நன் மதிப்பு??" நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது!!!.//ஹாஹாஹாஹாஹா.....ரசித்தோம் கோ இதை...

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  36. அருமை! அருமை! அருமை! அருமை!எழுத்து நடை சொன்ன விதம் அப்பப்பா ! ஒப்பப்பா இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்...

      நீக்கு
  37. வணக்கம் உங்கள் பிளாக்குக் இப்போதான் வருகிறேன் நான் , கதையை படித்துவிட்டு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பூவிழி...மிக்க மகிழ்ச்சி...நாங்களும் உங்கள் தளத்தைத் தொடர ஆரம்பித்துவிட்டோம்...

      நீக்கு
  38. நல்ல எழுத்து நடை நெகிழ வைத்தது
    ஆனால் ஒன்று சப்பை கட்டு இவன் செய்வது, அவள் இயல்பை இயலப்பாய் அவள் பாலோ செய்கிறாள். உன் இயலப்பை நீயென் விடணும்? காதல் வந்தால், இருந்தால், வாழ்ந்தால் ,மற்றதை தொலைக்கவேண்டுமா? கெட்டதை தொலைக்கலாம்.. மற்றத்தை... உன் இருப்பை தக்க வைத்து கொள்லாத்திற்க்கு மற்றவர் மீது பழி போடலாகாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பூவிழி காதல் என்றில்லை பொதுவாகவே ஆண் பையன்கள் பேசுவதுகுறைகிறது...பெண் குழந்தைகள் தான் பேசுவது அதிகம்...எல்லாம் ஷேர் செய்து கொள்வதுண்டு...

      மிக்க நன்றி பூவிழி கருத்திற்கு

      நீக்கு
  39. தாயின் அன்பு பலருக்கு கடைசிகாலத்தில் தான் புரிந்துகொள்ளமுடிகின்றது. அவசர உலகில். நெஞ்சை வருடும் பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! தனிமரம்...சிலசமயம் தாயின் அன்பை ஒரு மகன் சொல்லும் போது அது மிகைப்படுத்தலோ என்றும் தோன்றுகிறது பலருக்கும். ஆனால் அந்த உணர்வைச் சொல்லி முடியாது அதற்கு வார்த்தைகளும் இல்லை...மிக்க நன்றி நேசன் கருத்திற்கு

      நீக்கு
  40. வணக்கம் !

    அடடா அருமையான கதை ஒன்றை காலத்தோடு படிக்காமல் விட்டுவிட்டேனே காலம் தாழ்த்தியமைக்கு மன்னிக்கவும் சகோ ஓர் உண்மைக் கதைபோலவே இருந்தது வாசிக்கும் பொழுது

    ஆமா மத்திய கிழக்கிலும் மலையாளிப் பெண்ணுங்கதான் வைத்திய சாலைகளில் அதிகம் இருக்காங்க செவிலியராக வை திஸ் கொலைவெறி..................?

    அருமையான கதை தந்த உங்கள் கற்பனைக்கு வாழ்த்துகள் சகோ வாழக நலம்
    தமன்னா +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீராளன் மன்னிக்கவும் நானும் காலம் தாழ்த்தித்தான் இங்கு உங்களுக்குப் பதில் கொடுக்கிறேன்.

      மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும்

      நீக்கு
  41. வணக்கம் ஆசான் அவர்களே, நலமா ?

    வரிக்கு வரி கதை அருமை என்றால், அதனை தொடர்ந்த பின்னூட்டங்களும் அவற்றுக்கான பதில் பின்னூட்டங்களும் ஆழமானவை !

    தாங்களே நண்பர் கீல்லர்ஜீயின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதை போல பலருக்கு அம்மாவின் மீதோ அப்பாவின் மீதோ அன்பு இல்லாமல் இல்லை...ஒன்றின் மதிப்பு அது இருக்கும்வரை தெரியாது என்ற விதிக்கேற்ப, " நன்றாகத்தானே இருக்கிறார்கள் " என்ற எண்ணத்தில் மற்ற பணிகளை கவனித்துக்கொண்டு காலத்தை ஓட்டி விடுகிறார்கள்.

    வாழ்வின் ஒரு கட்டத்துக்கு மேல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கேட்பது அருகாமையையும், ஆதரவான வார்த்தைகளையும் தான்.

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சாம் தங்களின் கருத்திற்கு ஆம் அன்பு இருக்கும் ஆனால் அதை வெளிப்படுத்துவது இல்லை அது இருக்கும் போது வருவதை விட மறைந்த பிறகுதான் அருமை தெரிகிறது...அதை உணர்ந்து நாம் நம் பெற்றோர் இருக்கும் போதே அந்த அன்பை வெளிப்படுத்திவிட்டால் அவர்களும் மகிழ்வுடன் இருப்பார்களே இல்லையா....அவர்கள் விரும்புவது ஆதரவும் அன்பான வார்த்தைகளும்தான் ஆம்...மிக்க நன்றி சாம் கருத்திற்கு

      நீக்கு

  42. உயிரோட்டம் மிகுந்த மென்மையான பகிர்தல்

    பதிலளிநீக்கு
  43. இயல்பான கதை மாந்தர்கள், சம்பவங்கள் என்று சென்ற கதையின் முடிவு மட்டும் கொஞ்சம் செயற்கையாக தோன்றியது. (பையன் ரொம்பவே மிரட்டி விட்டானோ?) நீங்கள் நினைத்தபடி முடித்திருந்தால் மெலோட்ராமாவாகியிருக்கும் அதற்கு பாசிட்டிவாக முடித்திருப்பது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுக்கா....

      இறுதியில் பையன் நினைப்பது நானும் என் மகனும் அடிக்கடி பேசிக் கொள்வது....அவன் இப்போது இங்கில்லை..அவன் ஃப்ரீயாக இருக்கும் போது கூப்பிட்டுப் பேசினால்...சொல்லுவான் ம்மா எப்போமா இங்க வருவ...வந்தா 6 மாசம் டேரா போட்டுட்டுத்தான் போணும்...உன் மடில படுத்து 1 1/2 வருஷம் ஆகுது....அப்புறம் நான் கூப்பிட்டு அவன் எடுக்க முடியலைனா ரூமுக்கு வந்ததும் மெசேஜ் கொடுப்பான் அம்மா பாப்பா தாச்சி ....நான் கோபப்பட்டா....ம்மா பாப்பா பாவம் கோச்சுக்காத என்பான்...இப்படித்தான் என்று இன்னமும் சின்னக் குழந்தை போலத்தான் இருக்கான்...27 வயசு..இதோ 28 ஆகப் போகிறது...ஒரு வேளை கதைக்கு அது செயற்கையா இருக்கோ அக்கா...மிக்க நன்றி அக்கா...கருத்திற்கு

      நீக்கு
  44. மிக்க நன்றி நாகேந்திர பாரதி கருத்திற்கு

    பதிலளிநீக்கு