கொஞ்சம் காத்திருப்பீங்கதானே! அப்படினு சொல்லிருந்தேன்ல...அதுக்கு மிக்க நன்றி! என்னை பயமுறுத்தியவர் பூனையாராம்/பூஸாராம்!!! அவர் வேறு நான் இங்கிலீஷில் பேசுவதாகச் சொல்லியிருந்தார். ஆமாம்! நான் தமிழ்நாட்டுக் காக்கைக் குஞ்சு தமிழ்தான் பேசணும் இல்லையா. அதனால் தான் 'நன்றி' என்று சொல்லியிருக்கிறேன்.
சரி அடுத்து, கொஞ்சம் தத்திக் கொண்டே மேலே ஏறிச் செல்லப் போகிறேன். போய்க் கொண்டே பேசுகிறேன். நாங்கள் கோர்விடே (Corvidae Family) குடும்பத்தைச் சேர்ந்தவங்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தக் குடும்பத்தில் கோர்விடஸ் எனும் பேரினத்தைச் சேர்ந்த எங்களில் 12 வகை இந்தியாவில் இருக்கிறோமாம். இதோ இங்க தமிழ்நாட்டில் என்னைப் போன்ற அண்டங்காக்கை, காக்கை அதாவது ஹவுஸ் க்ரோ அப்படின்ற ரெண்டு வகை இருக்கோமாம்.
எங்கள் இனத்தைச் சார்ந்த
வால்காக்கை (Rufous Treepie) மரங்கள் அடர்ந்த தமிழக நகர்ப்புறங்களிலும்,
ஊர்ப்புறங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் பார்க்க முடியுமாம். பாருங்க அப்போ எவ்வளவு மரங்கள் எங்களுக்கு வேணும்னு.
வெண்வால் காக்கை (White-bellied
Treepie) னு ஒரு இனமாம் எங்களில். அவங்க மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிழக்கு மலைத் தொடர்ல சில
காட்டுப் பகுதிகளிலும் மட்டுமே இருப்போமாம்..அதாவது ஓரிட வாழ்வி (Endemic species).
இமயமலைப் பகுதிக்குப் போயிருக்கீங்களா? ரொம்ப தூரம். பெரிசா இருக்குமாமே! அம்மா சொல்லியிருக்காங்க. பனி எல்லாம் இருக்குமாமே! அந்தப் பகுதில எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க இரண்டு பறவைகள் கொஞ்சம் வித்தியாசமான தோற்றத்துல இருப்பாங்களாம். அவங்க இப்படி இருப்பாங்களாம். Red-billed Chough எனும் செம்மூக்குக் காக்கையின் அலகும், காலும் சிவப்பு
நிறத்திலிருக்கும், அல்பைன் காக்கையின் (Alpine or Yellow-billed Chough) அலகு
மஞ்சள் நிறமாகவும், கால்கள் இளஞ்சிவப்பாகவும் இருக்கும். பார்க்க ஆசையா இருக்கு. அவ்வளவு தூரம் பறக்க முடியுமா தெரியலை.
எங்கக் கூட்டுல குயில்னு ஒரு பறவை இருக்காமே! அதுங்க வந்து முட்டை இடுமாம். அதனால, நான் வளர்ந்ததும் கவனமா இருக்கணுமாம், அம்மா சொன்னாங்க. அந்தக் குயில்கள் எல்லாம் ரொம்ப சாமர்த்தியமாம். கள்ளக் கூட்டமாம். ஆனா, அவங்க அழகா பாடுவாங்களாமே அது அவங்களுடைய இனப்பெருக்கத்துக்காகப் போராடுற தீனக் குரலாம். தங்கள் வாழ்நாளிலேயே குயில்கள் இனப்பெருக்கத்துக்காகத்தான் ரொம்பப் போராடுவாங்களாம். அதுக்காக செமையா மாஸ்டர் ப்ளான் எல்லாம் போடுவாங்களாம். ரொம்ப நேர்த்தியா திட்டமிடுவாங்களாம். நாங்க கூடு கட்டும் போதோ அல்லது கூட்டைச் சரி செய்யத் தொடங்கும் போதோ அதை ஆண் குயில்கள் பார்த்துக்கிட்டே இருக்குமாம். உடனே தங்கள் பெண் குயிலை அழைக்கக் குரல் கொடுக்குமாம். அப்படிக் கொடுக்கும் போது கூட ரெண்டு மூணு ஆண் குயில்கள் குரல் கொடுக்குமாம். அவங்களுக்குள்ள சண்டையும் வருமாம். என்ன கஷ்டம் பாருங்க!
பெண் குயில் அதுல சுயம்வரம் நடத்தி தன் ஆண் குயிலைத் தேர்ந்தெடுத்து இணையுமாம். அப்புறம் இந்த ரெண்டும் சேர்ந்து அவங்க பகுதில இருக்கற எங்கள் கூட்டில் எந்தக் கூட்டில முட்டை இடலாம்னு நேரம் பார்த்துக்கிட்டே இருப்பாங்களாம். அப்போ அந்த ஆண் குயில் எங்க கூட்டுல ஏதாவது ஒண்ணைத் தேர்ந்தெடுத்து அந்தக் கூட்டுக்குப் பக்கத்துல வந்து எங்க இன ஆண் காக்கையை ரொம்பத் தொந்தரவு பண்ணுவாராம். ஆண் காக்கைக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருமாம். பின்ன எவ்வளவுதான் பொறுத்துக்கறதாம். அப்போ எங்கள் ஆண் காக்கை அந்த ஆண் குயிலைத் துரத்துமாம். ஆண் காக்கை அப்படி வெளிய போற சமயத்துல பெண் குயில் சாமர்த்தியமா அந்தக் கூட்டுல போய் ஒரு முட்டையைப் போட்டுட்டுப் போயிடுமாம். இப்படி அந்தப் பகுதில இருக்கற ஒவ்வொரு கூட்டுலயும் ஒரு முட்டைய போடுமாம்.
அப்புறம், நாங்கதான் ரொம்ப புத்திசாலிகளாச்சே! எங்களுக்குக் கணக்குப்பாடம் நல்லா வரும் இல்லையா, கூட்டுல எத்தனை முட்டை இருக்குனு நாங்க கணக்கு வைச்சுக்குவோம்ன்றதுனால குயில் என்ன பண்ணுமான் தன் முட்டையைப் போடும் போது எங்க முட்டைல ஒண்ணைத் தள்ளிவிட்டுருமாம். அதுமட்டுமில்ல அந்த முட்டையை நாங்கள் அடை காக்கிறோமா என்று வேறு வேவு பார்ப்பாங்களாம். ஒரு வேளை நாங்க அடைகாக்கவில்லைனா எங்கள் கூட்டையே கலைச்சுருவாங்களாம். என்ன கள்ளத்தனம் பாருங்க! இப்படி முட்டை போடும் நேரம், கலைக்கும் நேரம் எல்லாம் எங்களுக்கும் குயில்களுக்கும் சண்டை மண்டை உடையுமாம். இப்படியான ஆட்டத்துல குயில்கள் எங்ககிட்ட மாட்டிக்கிட்டு அல்லல்படுமாம்!
அப்புறம், நாங்க முட்டையிலிருந்து வெளிவர 18 நாள் ஆகுமாம். ஆனா, குயில் முட்டைய்லிருந்து வெளிவர 14 நாள்தான் ஆகுமாம். அதனால அந்தக் குஞ்சுதான் முதல்ல உணவு எல்லாம் கிடைச்சு நல்லா வளருமாம். கண்ணு திறக்கறாதுக்குள்ள கூட எங்க முட்டைகளைக் கீழ தள்ளி விட்டுருமாம். பாருங்க முளைக்கும் போதே என்ன சாமர்த்தியம்! ஒரு மாசம் வரை இதுங்க இருக்கறது தெரியவே தெரியாதாம். அப்புறம் எங்களை மாதிரியேதான் கரையுமாம் முதல்ல. அதன் குரல் மாறும் போது நாங்க கண்டுபிடிச்சு துரத்துவோமாம். அப்படி வெளியே வர குயில் குஞ்சுகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து தோப்புகள்ல போய் இருந்துக்கிட்டு ஒரு வருஷம் முடிஞ்சப்புறம் திரும்ப இப்படித் தாங்கள் குஞ்சு பொரிக்கப் போராடுமாம்! என்னவோ போங்க இப்படியான ஒரு பொழப்பு அதுங்களுக்கு!
எங்க அம்மா முட்டை போட்ட போது கூட குயில் முட்டை இருந்துச்சாம். பாவம் எங்க அம்மா என்னை குயில்கிட்டருந்து எவ்வளவு கஷ்டப்பட்டுக் காப்பாத்தியிருக்காங்க. ஆனா பாருங்க நான் இப்ப ரொம்ப கவனக் குறைவா இருந்து கீழ விருந்துருக்கேன்! ம்ம் சரி நான் அந்த சிமென்ட் மேல ஏறி நின்னுக்கிடறேன்!
ஆஹா! என் அம்மாவின் குரல்
கேட்குதே! அதோ அந்த மரத்துல அம்மா இருக்காங்க. என்னைய எட்டிப் பார்க்குறாங்க
பாருங்க! நான் என்ன பண்ணறேன்னு! ஹப்பா காப்பாத்த வந்துட்டாங்க அம்மா!! அம்மா நான்
இங்க சிமென்ட் மேல இருக்கேன்னு குரல் கொடுக்கறேன்…
ஹை! என் குரல் கேட்டு என்
அண்ணன் அப்பா எல்லாரும் வந்துட்டாங்க! பாருங்க! எல்லாரும் குரல் கொடுத்து என்னையே
பார்க்கறாங்க…என் அண்ணன் கீழ வராராம் என் பக்கத்துல குரல் கொடுக்கறாரு!
இதுதான் என் அண்ணன்! பார்த்துக்கங்க!
பாருங்க பக்கத்துல வந்துட்டு என்னைய கோச்சுக்கிறார். ஏன் இப்படிப் பண்ணின அப்படினு!
இங்க பாருங்க! அவர் திரும்பி நின்னுக்கிட்டு
இதுதான் வழி. எங்கூட வா அப்படினு சொல்லுறாரு பாருங்க!
வான்னு சொன்னவரு ஒரு சின்ன சுவர்
மேல ஏறிக்கிட்டு இதத் தாண்டு அப்படின்னாரே பார்க்கலாம்! நானும் மெதுவா பறக்க முயற்சி
செய்து பாருங்க கீழ கிடக்கறேன்….கொஞ்சமா என் தலை தெரியுதா பாருங்க!! என் அண்ணன் கீழ…
இப்ப நான் கொஞ்சம் நல்லாவே தெரிவேன்
பாருங்க. நான் எழுந்து பாக்குறேன். ஏன் தெரியுமா? அண்ணன் சொல்றாரு… பக்கத்துல இருக்கற
ஒரு சின்ன கம்பம் மேல நான் பறந்து போய் உட்காரணுமாம். ஆ! அப்படினு பார்க்குறேன்! அந்தக் கம்பம் இந்த மரத்துக்குப் பக்கத்துலதான் இருக்கு...
நான் பறந்து போய் ஏறிட்டேன். ஆனா
நான் தடுமாறுவதைப் பார்த்து அண்ணன் வந்து என்னைத் தாங்கிப் பிடிக்கிறாரு பாருங்க!!
நான் இப்ப கொஞ்சம் சரியா உட்கார்ந்துருக்கேன்.
அண்ணன் என்னைத் தாங்கிப் பிடிச்சுத் தொங்கிக்கிட்டு இருக்காரு!! அவருக்கு அதெல்லாம்
பழக்கம். இன்னும் கொஞ்ச நாள்ல நானும் இப்படித்தான் உதவுவேன்!! அடுத்த டார்கெட் இதோ
இங்க ஒரு மதில் இருக்கு பாத்தீங்களா? அதுல போய் உக்காரணுமாம்…அப்புறம் அங்கருந்து பறக்கணுமாம்….மரத்துக்கு!!
பாருங்க நான் பறந்து வந்து மதில்
மேல உக்காந்துட்டேன். வெற்றியில கரையிறேன் பாருங்க!!! அண்ணனும் கூடவே வந்து உக்காந்துட்டாரு.
அடுத்தது மரத்துக்குப் பறக்கணும்!
அண்ணன் நான் ஒழுங்கா செய்யறேனானு
பார்க்கிறார் பாருங்க!! சிறகை விரிச்சுட்டேன்! இதோ பறக்கப் போறேன்! 1….2…3…..விஷ்க்
பறந்துட்டேன்! அதான் உங்க கண்ணுல படல!!!!
எங்களிடமிருந்தும் நீங்கள் கற்பதற்கு
நிறையவே இருக்கு. கற்றுக் கொள்ளுங்கள். அம்மா சொன்னாங்க. மனிதன் எங்களைப் பார்த்து,
எங்களை என்றால் காகம் நாங்கள் மட்டுமல்ல, பறவைகள் அனைத்தையும் பார்த்து, இயற்கையைப்
பார்த்து, ஒவொன்றிலிருந்தும் கற்றுக் கொள்ள நிறையவே இருக்காம். அப்போ நாங்கதானே உங்களுக்கு
முதல் ஆசிரியர்கள்!!! இன்று ஆசிரியர் தினமாமே! எனவே எங்களையும் வாழ்த்துங்கள்! .இவ்வளவு
ஏன்? உங்கள் மனிதர்களிடையே கூட ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்தானே.
எனவே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஆசிரியர்தாம்! ஒவ்வொரு விதத்தில் மாணாக்கர்தாம் வாழ்க்கை முழுவதும்! எனவே எல்லோரையும் வாழ்த்துங்கள்!
எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்!
------கீதா
அதானே..
பதிலளிநீக்குகரவாது கரைந்து உண்ணுவது காக்கை..
காக்கையும் நமக்கு ஒரு குரு அல்லவா!..
ஆக, காக்கைக்கும் ஒரு வணக்கம்!...
அன்பின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..
ஆம்! துரை செல்வராஜு சகோ! நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை, மனிதர், நிகழ்வு என்று எல்லாமே நமக்குப் பாடங்கள் கற்றுக் கொடுக்கத்தான் செய்கிறது. இன்னொன்றும் சொல்லலாம்..காக்கையை சனிபகவானின் வாகனம் என்று சொல்லுவது வழக்கம். ஏழரை சனி என்று சொல்லி அது கஷ்டங்கள் கொடுக்கிறது என்றும் சொல்லபப்டுவதுண்டுதானே! அப்படி நினைப்பதை விட அந்தக் கஷ்டங்களும் நமக்கு ஏதோ ஒரு பாடம் கற்றுக் கொடுக்கிறது என்றும் எடுத்துக் கொள்லலாம் தானே அனுபவமே நல்ல ஆசிரியர்தான் இல்லையா...
நீக்குமிக்க நன்றி சகோ தங்களின் வாழ்த்திற்கு..கருத்திற்கு
தளராத முயற்சியினராகி - இத்தனை படங்களைத் தந்த தங்களுக்கு நல்வாழ்த்துகள்!..
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை செல்வராஜு சகோ தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குசரி.. இந்த படங்களையும் அந்தக் காக்கைக் குஞ்சு வந்து பார்த்ததோ!?..
பதிலளிநீக்குஹாஹாஹாஹா...சகோ அந்தக் குஞ்சுதான் பறக்கத் தொடங்கிவிட்டதே!! போய்விட்டது. அப்புறம் மாமியார் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் பார்க்கவே இல்லை....
நீக்குமிக்க நன்றி கருத்திற்கு
ஆசிரியர் தினத்தன்று பொருத்தமாக கதை கூவினீர்கள்
பதிலளிநீக்குவெளியூர் ஆகவே தமன்னா இடமுடியவில்லை உங்களுடையது செல்வழி உங்களுக்கு இடமுடியாது மன்னிக்கவும்.
கில்லர்ஜி நன்றி!! அட போங்கப்பா...எங்களுக்கே எங்க பெட்டி தெரியலை அப்புறம் ல மொபைல்வழி போட லிங்க் தர முடியும்....இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம்...ஜி அது ரொம்ப நல்ல வார்த்தை...இப்படியெல்லாம் வேஸ்ட் பண்ணாதீங்க...ஹாஹாஹா
நீக்குiங்கு மொபைல் மூலம் வாக்களிக்க இதோ லிங்...
பதிலளிநீக்குhttp://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471017
வாங்க பூஸார்!! ஆஷா போன்ஸ்லே போயிட்டாங்களா ஹாஹாஹா..
நீக்குரொம்ப நன்றி பா லிங்க் கொடுத்ததுக்கு...ஏனென்றால் எங்களுக்கு எங்கள் த ம பெட்டியே தெரிவதில்லை...டிடி யிடம் மீண்டும் பேச வேண்டும்...
// என்னை பயமுறுத்தியவர் பூனையாராம்/பூஸாராம்!!! அவர் வேறு நான் இங்கிலீஷில் பேசுவதாகச் சொல்லியிருந்தார். ஆமாம்! நான் தமிழ்நாட்டுக் காக்கைக் குஞ்சு தமிழ்தான் பேசணும் இல்லையா. அதனால் தான் 'நன்றி' என்று சொல்லியிருக்கிறேன்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா தமிழ்நாட்டில் இருப்போரை இப்பூடி ஏதாவது மிரட்டித்தானே தமிழில் பேச வைக்க முடியுது:). இருப்பினும் சட்டென ஏற்றுக்கொண்டு தமிழுக்கு மாறிய காக்கைக்குஞ்சுக்கு நன்றி:).
ஹாஹாஹா!! சரி சரி காக்கைக் குஞ்சும் பூஸாருக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டது!! காக்கைக்கு அறிவு கூடுதலாச்சே!!! ஹாஹாஹா..நன்றி அதிரா!!
நீக்குஹா ஹா ஹா இலங்கையில் நாம் ஒரு முறை வைத்திருக்கிறோம்.. அதாவது “அண்டங்காகம்” என, ஆண்காகத்தைச் சொல்வோம்:).. அது சைஸில் பெரிதாக இருக்கும். அதேபோல இந்த பெரிய அண்டங்காகம் அழுதால்.. சந்தோசப்படுவோம்.. யாரோ விருந்தாளி அல்லது நல்ல தகவல் ஏதோ வரப்போகிறதென.
பதிலளிநீக்குஅதே நேரம் குட்டியான காகம் இருந்து கரைந்தால்.. அதை கலைத்துவிடு ஏதோ பிணி வரப்போகுது இப்பூடிக் கதுதுதே என வயதானோர் பேசுவார்கள் ஹா..ஹா..ஹா...
ஆம் அண்டங்காகத்தை ஆண் காகம் என்றுதான் சொல்லுகிறார்கள். ஆனால் எனக்கு அதிலும் ஒரு சந்தேகம். நான் தேடினேன் கிடைக்கவில்லை...ஒரு சில இடங்களில் இந்த அண்டங்காக்கை மட்டுமே இருக்கிறது. இந்தப் படங்களில் இருப்பவை அனைத்துமே கரு கரு என்று அண்டங்காக்கைகளே.... அப்படி என்றால் அங்கு எப்படி இனப்பெருக்கம் நடைபெறும் என்பதே என் சந்தேகம்...
நீக்குஆம் காகம் கரைந்தால் விருந்தாளி வருவது பற்றிய அறிவிப்பு என்று இங்கும் சொல்லுவதுண்டு..//அதே நேரம் குட்டியான காகம் இருந்து கரைந்தால்.. அதை கலைத்துவிடு ஏதோ பிணி வரப்போகுது இப்பூடிக் கதுதுதே என வயதானோர் பேசுவார்கள் //.ஆனால் இது பற்றி தெரியவில்லை...
குயில் காகக் கூட்டில்தான் முட்டை இடும் எனத் தெரியும்.. ஆனா அதுக்குள் இவ்ளோ கதை இருக்கா என்பது இப்போதான் தெரியும்.. மிக சுவாரஷ்யம்.. நல்ல ஆராட்சி.. வியப்பாக இருக்கு. முட்டை எண்ணிக்கை.. அது காக முட்டையைக் குயில் கொத்திக் குடித்துவிடுமாம் என அறிந்தேன்.
பதிலளிநீக்குஇது பற்றி ஒரு சில புத்தகங்கள் வாசித்த போது அறிந்தது. தமிழ் ஹிந்துவிலும் கூட வந்திருந்தது....ஓ காகத்தின் முட்டையைக் குயில் குஞ்சு தள்ளி விடும் என்பது அறிவேன் ஆனால் கொத்திக் குடித்துவிடும் என்பது புதிய தகவல் அதிரா..
நீக்குமிக்க நன்றி...
ஆஹா.. விடாமுயற்சியான தொடர் படங்கள் அருமை.. நல்லவேளை அவர்களிடமிருந்து கொத்து வாங்காமல் தப்பித்துக் கொண்டீங்க.
பதிலளிநீக்குநல்ல நேர்முக வர்ணனை..:).
ஹாஹாஹா நம்ம ஃப்ரென்ட்ஸ் ஆச்சே கொத்திடுவாங்களா என்ன...ஆனா நீங்கள் சொல்லுவது போல இப்பல்லாம் காகம் ரொம்ப கிட்டவே பறக்குதுதான்...சில சமயம் தலையில் தட்டுவது போலக் கூடப் பறக்குதுதான்.....ஹாஹா..//விடாமுயற்சியான தொடர் படங்கள் அருமை..நல்ல நேர்முக வர்ணனை..:).//.. மிக்க நன்றி
நீக்குநாம பார்க்கிற பஞ்சத்தில் அடிபட்ட காக்கையைத் தவிர வேறு படத்தைக் காணோமே? லண்டனில் பார்த்த அண்டங்காக்கை, ரொம்ப குண்டாவும் பெரியதாகவும் இருந்தது. நம்ம ஊரிலேயே செம்போத்து என்ற பறவை உண்டு. இதுவும் காக்கை இனம்தானா? மற்றபடி நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா வங்க நெல்லை!! நான் எடுத்தவை மட்டுமே! அப்போ எப்படி இருக்கும்...ஹாஹஹா...குளிர்பிரதேசங்களில் இருக்கும் எந்த விலங்கினமுமே நலல் கொழு கொழு என்று நன்றாகவே இருக்கின்றன. இங்கும் இமயமலையில் இருக்கும் பைரவர்களுக்கும் இங்கிருக்கும் பைரவர்களுக்குமே நல்ல வித்தியாசம் இருக்கின்றன. இங்குள்ளவை சொறி பிடித்து ஆனால் அங்கிருப்பவற்றின் தோல் நன்றாகவே இருக்கிறது முடி அடர்த்தியாக...குளிரைத் தாங்குவதற்கு ஏற்றாற் போல் இருக்கும் போல....எனவே லண்டனில் அண்டங்காக்கை நன்றாகவே இருக்கும் அமெரிக்காவுல் கூட நல்ல பெரிதாக செழுமையாக இருக்கின்றன. அங்கு இருப்பவை எல்லாமே கரு கரு என்றுதான் இருக்கின்றன.
நீக்குசெம்போது அல்லது உப்பன் என்று சொல்லப்படுவது கேரளத்தில் நிறைய இருக்கின்றன...இது கார்விடே குடும்பமல்ல குக்குலிடே குடும்பத்தைச் சேர்ந்தது அதாவது குயில் போன்றது ஆனால் அது குயிலைப் போன்று முட்டையைக் காக்கைக் கூட்டில் இடுவதில்லை. தன் குஞ்சை தானே தான் அடைகாக்கும்...இதுவும் காக்கையைப் போல இருக்கும் ஆனால் வால் கொஞ்சம் நிட்டமாக இருக்குமே...
மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு
காக்கை இமயத்தில் கூட இருக்குனு தெரிந்தது இப்போத் தான். இதைப் படித்ததும் எனக்குக் காகபுஜண்டர் நினைவில் வந்தார். குயில்கள் பற்றி ஏற்கெனவே நானும் படிச்சிருக்கேன். இங்கே குயில்கள் காலை வேளையில் ஒரே அமர்க்களம்! கத்திக் கூப்பாடு போடும். மாலை ஆனால் அக்காக்குருவிங்க "அக்கூ" "அக்கூ" எனக் கத்திட்டு இருக்கும்.
பதிலளிநீக்குகாகபுஜண்டர்!!!? அதைப் பற்றி எழுதலாமே கீதாக்கா...புதிது இது எனக்கு....மாலையில் ஆம் அக்கூ அக்கூ என்று இங்கு கூடக் கத்திக் கொண்டு இருக்கின்றன. ஆனால் பார்பப்து அரிது மறைந்து இருந்து கூவும்....மிக்க நன்றி கீதாக்கா
நீக்குகாகபுஜண்டர்--அனுமன்-- ராமாயணம் சம்பந்தப்பட்ட கதை/புராணம்/நிகழ்வு படிச்சிருக்கீங்க தானே! காகபுஜண்டர் நினைவு வந்ததில் இருந்து மறுபடியும் சித்தர்கள் பற்றிப் படிக்கத் தோன்றுகிறது. பார்ப்போம்.
நீக்குஆஞ்சு வின் கதையில் வருமா....படித்ததில்லை போன்று தெரிகிறது...பார்க்கிறேன்..நெட்டில் கிடைக்குமே தெரிந்துகொள்கிறேன்...நீங்களும் முடிந்தால் பதிவு போடுங்கள்...மிக்க நன்றி கீதாக்கா
நீக்குகாகங்களை குறித்த செய்திகளும் படங்களும் நேரடியான வர்ணனையும் உங்களின் கற்பனையும்..... கா கா கா போ. (காகம் உள்ள காலம் வரை காப்பாற்றி போற்றவேண்டியவை).
பதிலளிநீக்குகோ
மிக்க நன்றி கோ!! ஹாஹாஹாஹா கா கா கா போ விற்கும் சேர்த்து நன்றி!!!
நீக்குதுளசி சார் அவர்களுக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅவரிடம் சொல்லிப் பார்க்கச் சொல்கிறேன் இதனை... மதுரை சகோ! அவர் சார்பில் இப்போ நன்றி சொல்லுகிறேன்...அவர் ஓணம் லீவில் ஊரில் இருக்கிறார்...
நீக்குபதிவு பாதி தான் படிச்சேன் மீதி ஈவினிங்க் வந்துதான் படிக்கனும்
பதிலளிநீக்குவாங்க எப்போ உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ பாருங்க மதுரை!!
நீக்குமிக்க நன்றி
tm 2
பதிலளிநீக்குத ம விற்கும் நன்றி மதுரை சகோ...இதெல்லாம் பார்ப்பதே இல்லை...
நீக்குபுறாக் குஞ்சு தப்பித் தவறி கூண்டில் இருந்து விழுந்து விட்டால் ,அதை இந்த காக்கைகள் படுத்தும் பாடு இருக்கே ,ஏனிந்த ஓர வஞ்சனையோ :)
பதிலளிநீக்குத ம , மறக்காமல் போட்டுட்டேன் :)
பகவான் ஜி! இதெல்லாம் இயற்கையில் நிகழ்வதுதானே ஜி! இயற்கைச் சங்கிலி! யோசிக்கத் தெரிந்த ஆறறிவு படைத்த மனிதர்கள் நாம் செய்யாத இழிவுகளா ஜி! அவர்களுக்குள் நிகழ்வதை நாம் எதுவும் சொல்ல முடியாதே!!! மிக்க நன்றி பகவான் ஜி! கருத்திற்கும் த ம விற்கும். த ம எல்லாம் பார்ப்பதே இல்லை ஜி...
நீக்குகுயிலுக்கு இப்படி ஒரு குணமா? அச்சச்சோ...
பதிலளிநீக்குபடிப்படியாக நிறுத்தி நிதானமாக தெளிவாக படம் எடுத்திருக்கிறீர்கள். அருமை.
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்.. இந்த
உண்மையைச் சொன்ன ஒத்துக்கணும்..
காக்காக் கூட்டத்தைப் பாருங்க அதுக்குக்
கத்துக்கொடுத்தது யாருங்க....
குயிலுக்கு இப்படி ஒரு குணமா?// இயற்கையின் படைப்பு நாம் என்ன சொல்ல முடியும் ஸ்ரீராம்.
நீக்குபடிப்படியாக நிறுத்தி நிதானமாக தெளிவாக படம் எடுத்திருக்கிறீர்கள். அருமை.// மிக்க நன்றி ஸ்ரீராம். மாமியார் வீட்டுக்குப் போகும் போது எடுத்தது. அங்கு மரங்கள் இருப்பதால்..
//ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்.. இந்த
உண்மையைச் சொன்ன ஒத்துக்கணும்..
காக்காக் கூட்டத்தைப் பாருங்க அதுக்குக்
கத்துக்கொடுத்தது யாருங்க.// நல்ல பாடல்!! யெஸ் கத்துக் கொடுத்தது யாரு? 6 அறிவு நாம் கத்துக்கிட்டாலும்...என்ன செய்யறோம்...??!!
மிக்க நன்றி ஸ்ரீராம்
காக்கை குஞ்சு பொரிக்க 18 நாள் ஆகுமா?! குயில் முட்டை காக்கை கூட்டில்தான் குஞ்சு பொரிக்கும்ன்னு தெரியும். ஆனா, இத்தனை அரசியல் நடக்கும்ன்னு தெரியாது.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா அரசியல்!! குயில்கள் செம ப்ளானிங்க் இல்ல ராஜி!! மிக்க நன்றி கருத்திற்கு...
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு
நீக்குசிறப்பான பகிர்வு. படங்கள் அழகு.
பதிலளிநீக்குதுளசிதரன் அவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு..
நீக்குஇதற்கெல்லாம் பதில் கொடுத்திருந்தேன் எங்கே போச்சு என்றே தெரியலையே....உங்கள் வாழ்த்தை சொல்லிவிட்டேன் ஜி அன்றே
அருகே நிற்கும் காக்கை அண்ணன் காக்கை என்று எப்படிச் சொல்லமுடியும்? அம்மாவாயிருந்தால்? ஆணை விட ஒரு பெண்ணுக்குத்தான் கஷ்டம் கண்டு கசிந்துருகும் மனமிருக்கும். காக்கைகளிலும் அப்படித்தானிருக்கும். தண்ணீர்க்குழாய்க்கு அருகிலிருக்கும் காக்கைகளைக் காணுமின் தாகத்தில் தண்ணீர் தேடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஏன் வான்மதி மதிவாணன் அண்ணன் காக்கைகளுக்கும் கருணை இருக்குமே! ஆண்களுக்கும் கருணை உள்ளம் உண்டு என்பது எனது தாழ்மையான கருத்து...இல்லை அவற்றிற்குத் தண்ணீர் வைத்திருக்கோம் எப்போதுமே..தண்ணீர் தேடவில்லை... மிக்க நன்றி வான்மதி தங்களீன் கருத்திற்கு
நீக்குஇந்த காக்கை இனத்துக்கும் சாதிகள் கற்பிப்பதை கேட்டிருக்கிறேன் நாம் அண்டங்காக்கை என்று கூறுவது சூத்திர சாதியாம் கழுத்துப் பகுதி சற்றே வெளுத்திருந்தால் பிராம்மணக் காக்கையாம் சிறு வயதில் எஙள் ஊரில் சொல்லக் கேட்டது துளசிக்கு ஆசிரிய தின வாழ்த்துகள்
பதிலளிநீக்குபுது தகவல் ஜிஎம்பி ஸார்....நான் இதுவரை கேட்டதில்லை சார். மிக்க நன்றி கருத்திற்கு
நீக்குஅருமையான படங்கள். காக்கை, குயில் வாழ்க்கையை அழகாய் விரிவாய் சொல்லிய விதம் அருமை.தார்ஷ்னில் திபெத் சீனாவசம் இருக்கும் ஊரில் கொழு கொழு என்று நல்ல பள பளப்பாய் குண்டாய் இருக்கும் காக்கை.
பதிலளிநீக்குசகோ துளசிதரன் அவர்களுக்கு ஆசிரியதின வாழ்த்துக்கள் காலதாமதமாய்.
எப்படியோ காக்கை வேறு விலங்குகளிடம் சிக்காமல் தப்பித்து விட்டதே! அதுவே மகிழ்ச்சி.
கோமதிக்கா அன்றே கருத்து பதில் கொடுத்திருந்தேன் எங்கே போச்சு என்றே தெரியலை...ஆமாம் திபெத் காக்கைகள் நல்ல கொழு கொழு வென பளபளப்பாய் இருக்கும்..அதே போல் மலைகளில் கூட...துளசிக்கு அன்றே உங்கள் வாழ்த்தைச்க் சொல்லிவிட்டேன் அக்கா..மிக்க நன்றி கருத்திற்கு
நீக்குஉங்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். காக்கையின் வரலாற்றைப் பட வழிக்காவியமாகப் படைத்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குமிக அருமை.
போட்டோ வாட்டர் மார்க் செய்ய எந்த சாப்ட் வேர் பயன்படுத்துகிறீர்கள்?
வணக்கம் கோவிந்தராஜு ஐயா...நாங்கள் இருவர் எழுதுகிறோம். தற்போது நண்பர் துளசி கொஞ்சம் பணிச் சுமையில் இருப்பதால் எழுதுவதில்லை. துளசிதரன் தான் ஆசிரியர். அவருக்கு உங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுகிறேன் ஐயா. நான் கீதா பணி எதுவும் செய்யவில்லை.
நீக்குமிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு...
தன் வரலாறு கூறல் என்பதானது நம்மை ஈடுபாட்டோடு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. பள்ளிக்காலத்திற்குப் பின் தற்போது அந்த உத்தியை இப்பதிவில் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்
நீக்குஒங்கப் பக்கத்துக்கு வந்தா இங்கேயும்..! எங்க பாத்தாலும் காக்காயாப் பறக்குதே.. காக்கைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..!
பதிலளிநீக்குகுயில்களுக்குள் இத்தனை குசும்பா? தெரிந்திருக்கவில்லையே இதுவரை..!
ஹாஹாஹா இப்போது புரிந்தது ஏகாந்தன் சார் இந்த வாரம் காக்கை வாரம் என்று சொல்லிவிடலாம் இல்லையா...உங்கள் கவிதையை மிகவும் ரசித்தோம் சார். ஆம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
நீக்குகுயில்களுக்குள் குசும்பு இருந்தாலும் பாவம் தான் குயில்களும் இறைவன் இயற்கையின் படைப்புதானே!!
மிக்க நன்றி ஏகாந்தன் சார். தங்களின் முதல்வருகைக்கும் கருத்திற்கும்
உங்களது மேற்கண்ட பதிலையும், எங்கள் ப்ளாகில் என் கவிதைக்கான பின்னூட்டத்தையும் சற்றுமுன் தான் பார்த்தேன். நன்றி. மேலும் இவ்வளவு பாராட்டிற்கான தகுதி உண்டோ எனவும் மனம் என்னைக் கேட்டுவைக்கிறது..
நீக்குநீங்கள் பறவைகளில், அதுவும் காகத்தின்மீது ஒரு கண் வைத்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது . சென்னையில் என் தங்கை வீட்டில், சமையலறை ஜன்னலில் மதிய நேரத்தில், சாதத்திற்காகக் காத்திருக்கும் காக்கையைக் கண்டிருக்கிறேன். சாதம் போட்டால்தான் அந்த இடத்தைவிட்டே நகரும்! காங்கோவில் விதவிதமான சிட்டுக்குருவிகளுக்கு தானியங்கள் போடுவோம். இப்படி பறவைகள் எங்களையும் எங்கும் தொடர்கின்றன.
கிராமத்தில் பழகிய நாய்கள்பற்றித் தனியாக எழுதலாம். அப்படி ஒரு நாயைப்பற்றி ’சொல்வனம்’ இணைய இதழில் வெளியாகியிருக்கும் என் ‘சருகுகள்’ என்கிற கதையில் எழுதியிருக்கிறேன். நேரமிருப்பின் வாசித்தறியுங்கள்.
ஏகாந்தன் சார் நான் இன்றுதான் உங்கள் பதிலைப் பார்த்து வெளியிட்டுள்ளேன்...தாமதமாகிவிட்டது வருந்துகிறேன் ஸார்.
நீக்குநிச்சயமாகத் தகுதி உண்டு ஸார். உங்கள் கருத்துகளை அங்கு பார்க்கிறேனே...கருத்து உண்மையான வார்த்தைகள் சார்.எல்லா உயிரினங்களும் பிடிக்கும்....பறவைகள் பிடிக்கும்...காகம் தினமுமே நம்முடன் உறவாடும் பறவை ஆயிற்றே...எங்கள் வீட்டிலும் அந்தந்த நேரத்திற்கு வந்து டிமான்ட் செய்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும்.../காங்கோவில் விதவிதமான சிட்டுக்குருவிகளுக்கு தானியங்கள் போடுவோம். இப்படி பறவைகள் எங்களையும் எங்கும் தொடர்கின்றன// மகிழ்வான விஷயம் சார். இயற்கை நம்முடன் இருப்பதே அலாதியான இன்பம்தானே!!
//கிராமத்தில் பழகிய நாய்கள்பற்றித் தனியாக எழுதலாம். அப்படி ஒரு நாயைப்பற்றி ’சொல்வனம்’ இணைய இதழில் வெளியாகியிருக்கும் என் ‘சருகுகள்’ என்கிற கதையில் எழுதியிருக்கிறேன். நேரமிருப்பின் வாசித்தறியுங்கள்// ஆம் சார் பைரவர்களைக் குறித்து நிறைய எழுதலாம்...எனக்கும் நிறைய பைரவ பைரவி நட்பு வட்டம் உண்டு ஸார். நிச்சயமாக வாசிக்கிறேன் உங்கள் கதையை...மிக்க நன்றி ஸார்...ஹை இயற்கை நட்பு வட்டம் பெரிதாகிறது!!!! மிகவும் மகிழ்ச்சி ஸார்.
ஏகாந்தன் சார் உங்கள் கதையை வாசித்துவிட்டு அங்கு கருத்திட்டேன். ஆனால் வந்ததா என்று தெரியவில்லை. கருத்து வெளியாக நேரமாகுமோ? இதுதான் கருத்து...
நீக்கு//ஏகாந்தன் சார் கதை அப்படியே காட்சிகளாய் மனதில் விரிகிறது!! தத்தானி மனதைக் கலங்க வைத்துவிட்டது. ஆம் பைரவர்கள் தாங்கள் இறுதிக்கட்ட நேரத்தில் நம்மிடமிருந்து ஒதுங்கி தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இறக்கிறார்கள்....நீங்கள் சொல்லியிருக்கும் அந்தக் காரணம் தான் எனக்கும் தோன்றும். அவற்றின் அன்பே அலாதியானது. கண்களில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்...நம்மிடம் இவர்கள் அன்பு காட்ட மாட்டார்களா? ஏதேனும் தர மாட்டார்களா என்று. கதையில் வர்ணனைகள் சூப்பர்.
மிகவும் ரசித்த வரிகள், //அந்த உலகத்திற்குப் போகிறாய். இந்த உலகின் ஆதார் கார்டு, ஐடெண்ட்டிட்டி கார்டெல்லாம் அங்கே எடுபடாது. இந்த நாமத்தையாவது அடையாளமாக நினைவில் கொள்வாயா : ‘ராம் நாம் ஸத்ய ஹை ! ராம் நாம் ஸத்ய ஹை !’’…// உண்மையும் இதுதானே ஸார்!!
@ கீதா: பின்னூட்டங்கள் சொல்வனத்தில் தெரிவதற்கு காலம் எடுத்துக்கொள்கிறது. கீதா சாம்பசிவத்தின் பின்னூட்டத்தையும் மாலை வரை சொல்வனத்தில் காணவில்லை. சற்றுமுன் விடாக்கண்டனாக சொல்வனம் சென்றபோது, தெரிந்தது உங்கள் இருவரின் பின்னூட்டமும். சிறிய பதிலும் சற்றுமுன் அங்கு கொடுத்துள்ளேன். எப்போது தெரியுமோ நிலவு!
நீக்குநாயின் அன்புபற்றி என் தளத்தில் ஒரு கவிதை இரண்டு வருடத்திற்கு முன் எழுதிய நினைவு. அங்கேபோய் நானே தேடவேண்டும்! Blacky என்றொரு நாயும் என் சிறுவயதில் கிராமத்து வீட்டில் இருந்தது. Very sharp and affectionate. அன்பென்றும் விசுவாசமென்றும் மனிதன் - இப்போதிருக்கும் மனிதன் - நாயிடம் கற்றுக்கொள்வது நல்லது. அவனோ திட்டுவதற்கான வசவுச்சொல்லாக ‘நாயை’ ஆக்கிவைத்திருக்கிறான். ஆறாவது அறிவு இருந்துதான் என்ன பயன்?
சொல்வனத்திற்கு வருகை, கருத்து ஆகியவற்றிற்கு மீண்டும் நன்றிகள்.
ஹை! ஏகாந்தன் சகோ பைரவர் பற்றி கவிதையா!! தேடிப்பார்க்கிறேன் உங்கள் தளத்தில். அவர்களைப் போல் அன்பு செலுத்த அதுவும் அன் க்ண்டிஷனல் லவ் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். இதோ என்னிடம் இரு செல்லங்கள் இருக்கின்றன. அதுவும் என் பெண்கள்! 8 வயதாகின்றது. அதில் ஒரு பெண் என் அருகில்தான் படுத்துக் கொள்ளும்.
நீக்கு// அன்பென்றும் விசுவாசமென்றும் மனிதன் - இப்போதிருக்கும் மனிதன் - நாயிடம் கற்றுக்கொள்வது நல்லது. அவனோ திட்டுவதற்கான வசவுச்சொல்லாக ‘நாயை’ ஆக்கிவைத்திருக்கிறான். ஆறாவது அறிவு இருந்துதான் என்ன பயன்?// உண்மை உண்மை!! அப்படியே வழிமொழிகிறேன்.
நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கும் எங்கள் ப்ளாகிற்கும். அப்படித்தானே உங்களைத் தெரிந்து கொண்டோம். உங்களின் அருமையான எழுத்துகளையும் அறிய முடிந்தது, மீண்டும் நன்றி ஏகாந்தன் சகோ...
சொல்வனத்தில் வருவது தாமதமாகுமா....ஓ! சரி போய்ப் பார்க்கிறேன்..பரவால்லை தாமதமானாலும் இதோ இங்கு பார்த்தாச்சே உங்கள் கருத்தை...மிக்க நன்றி
வணக்கம் !
பதிலளிநீக்குதில்லையில் பூத்த மல்லி
...திசைபல வாசங் கொள்ள
எல்லையில் இருந்தேன் ஏனோ
...இதுவரை வந்தி டாமல்
வல்லவோர் கவிகள் சொல்லி
...வணங்கிநான் மகிழ்ந்து பாட
நல்லதோர் வலைப்பூ கண்டேன்
...நறுமுகை வாசம் உண்டேன் !
இதுநாள் வரையில் தில்லைக் காடு என்னும் வலைப்பூவுக்கு வந்து திரும்பி இருக்கிறேன் ஆனால் இங்கே வந்ததில்லை வருந்துகிறேன் சகோ இனி வருவேன் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் !
( காகமும் குயிலும் எப்படின்னு சொல்லிட்டீங்க இல்ல இருங்க கவியோடு மீண்டும் வாறன் )
வாங்க சீராளன்!!! வாங்க! தமிழ் மணம் வீசுகிறது தங்களின் பின்னூட்டம்!! தில்லைக் காடு இல்லை சகோ...தில்லைஅகத்து அதுவும் சரி இதுவும் தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ்....
நீக்குமீண்டும் உங்கள் கவியை எதிர்ப்பார்க்கிறோம்...உங்கள் தளத்திலேயே பதிவிடலாமே!!! காகம் குயில் பற்றி....ஆவலுடன் காத்திருக்கிறோம்
மிக்க நன்றி சீராளன் அழகான கருத்திற்கு...
அருமை நண்பரே
பதிலளிநீக்குஅருமை....
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு...