திருப்பத்தூர் அருகே சிவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பத்தூர் அருகே சிவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 ஜூலை, 2023

திருப்பத்தூர் (சிவகங்கை) மற்றும் அதன் அருகிலுள்ள சிவன் - வைரவர் தலங்கள் – ஒரே நாளில் 9 கோயில்கள் - 2


என் தங்கைக்குப் பரிகாரம் என்று சொல்லப்பட்ட, திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள சில சிவன் கோயில்கள் / பைரவ வழிபாடு என்று சென்றதைப் பற்றி சென்ற பதிவில் (====>பகுதி 1<====)  ஒரே நாளில் 9 கோயில்கள் அவர் சொன்ன வரிசையில் செல்லச் சொல்லியிருந்தார் என்றும் சொல்லியிருந்தேன். அந்த 9 கோயில்களில் முதல் இரு கோயில்கள் ( 1. திருமெய்ஞானபுரி/ தி-வைரவன்பட்டி - காலபாலபைரவர், 2. திருத்தளிநாதர் கோயில் - யோகபைரவர்) பற்றி முதல் பகுதியில் சொல்லியாச்சு. தொடர்ச்சி இதோ. நாங்கள் சென்ற கோயில்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் அம்சமான பராமரிப்பில் இருப்பவை.