சனி, 15 ஜூலை, 2023

திருப்பத்தூர் (சிவகங்கை) மற்றும் அதன் அருகிலுள்ள சிவன் - வைரவர் தலங்கள் – ஒரே நாளில் 9 கோயில்கள் - 1


2016 ஆம் வருடம். என் தங்கை ஏதோ ஒரு ஜோசியர் அவளுடைய பிரச்சனைக்கு ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார் என்றாள்.  அந்த மாபெரும் சக்தி மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள எனக்கு இப்படியான விஷயங்களில் நம்பிக்கை இல்லை. என்றாலும் இந்தச் சாக்கில், போயிருக்காத சில கோயில்களுக்குப் போக ஒரு வாய்ப்பு கிடைக்குதேன்ற மகிழ்ச்சியில் என் தங்கை அழைத்ததும், சொல்லணுமா?! என் ஓட்டை மூன்றாவது விழியுடன் கிளம்பிவிட்டேன்.

சென்னைக்கு வந்தார்கள். 20 ஆம் தேதி இரவு திருப்பத்தூர் வழி மதுரை செல்லும் தனியார் பேருந்தில் படுக்கை வசதி உள்ள பேருந்தில் பதிவு செய்து பயணித்தோம். திருப்பத்தூர் சென்று சேர நிறைய நேரம் இருக்கிறதே! பரிகார விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன்.

என் தங்கை எல்லா ஜோசியத்தையும் நம்பும் வகை. அப்படி அவள் நம்பிய அந்த ஜோசியர் சொன்ன அந்தப் பரிகாரங்களில் ஒன்று  பிரதோஷ தினங்களில் சிவன் கோயில், பைரவர் வழிபாடு என்று சென்னைக்கருகில் ஆந்திரமாநில எல்லையில் இருக்கும் வாலீஸ்வரர் கோயிலில் வைரவர் வழிபாடு மற்றும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் மாலை பிரதோஷ வழிபாடு என்று சென்று வந்தோம். கோயில்கள் பற்றி பதிவும் போட்டிருந்தேன். அப்பதிவில் திருப்பத்தூர் அருகே சென்ற கோயில்கள் படங்கள் பகிர்கிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதுதான் இது.

மற்றொரு பரிகாரம், குறிப்பிட்ட தினமான பைரவ அஷ்டமி – தேய்பிறை அஷ்டமி அன்று திருப்பத்தூர் மற்றும் திருப்பத்தூர் அருகே உள்ள, ஜோஸ்யர் குறிப்பிட்ட 9 கோயில்கள். வைரவர்/பைரவர் கோயில்கள் மற்றும் சிவன் கோயில்களில் பரிகார தெய்வமாக முக்கியத்துவம் பெற்ற பைரவர் வழிபாடுகளைச் செய்யச் சொல்லியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த வரிசையில்தான் அந்தக் கோயில்களுக்குச் செல்ல வேண்டும். தரிசித்துவிட்டு திருப்பத்தூரில் தங்கக் கூடாது என்றும் சொல்லியிருந்தார். 

மறுநாள் காலை 5.30 மணி. திருப்பத்தூர் வந்தாச்சு. இறங்கினோம். சும்மா சாமான்களை வைத்துவிட்டுக் குளித்துவிட்டுக் கோயில் தரிசனம்தானே! அதனால் பேருந்து நிலையம் அருகிலேயே சாதாரண ஒரு லாட்ஜில் அறை எடுத்துக் கொண்டு குளித்துவிட்டு 7.30 மணி அளவில் இறங்கினோம். என் தங்கை கோயிலுக்குச் சென்றுவிட்டு மதியம்தான் சாப்பிடுவேன் என்று சொன்னதால் மற்றவர்கள் காலை உணவை அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டோம்.

ஏற்கனவே கோயில்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு தூர இடைவெளியில் இருக்கின்றன என்று கூகுள் மேப் பார்த்துக் குறித்து வைத்திருந்தேன். மொத்தமாக முழுவதிற்கும் (உத்தேசமாக 70-80 கிமீ) ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டுவிடலாம் என்று ஆட்டோக்காரர் ஒருவரை அமர்த்திக் கொண்டோம். 600 ரூ பேசிக் கொண்டாலும் கடைசியில் 700ரூ கொடுத்தோம். 

ஒரே நாளில் இத்தனைக் கோயில்களை மாரத்தான் ஓட்டம் போன்று கவர் செய்ய வேண்டும். எந்தக் கோயிலையும் நின்று நிதானமாகத் தரிசித்து, பழமை வாய்ந்த கோயில்களில் சிற்பங்களும் தூண்களும் கலைவடிவங்களும் அத்தனை அழகாக இருந்தும் படம் எடுக்க முடியாமல் கோயில் பற்றி தகவல்களும் திரட்ட முடியாமல்......இப்படியான பயணங்கள் எனக்குச் சரிப்பட்டு வராது.

எனவே, பார்த்த கோயில்கள், பெயர்கள், நான் எடுத்த சில படங்கள் மற்றும் நான் அறிந்த சிறு குறிப்புகள் கொடுத்து ஒரு அறிமுகம் போன்று கொடுத்துவிடுகிறேன். கோயில்களைப் பற்றி கூகுளில் அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வரலாம். இதோ வரிசையாக...

1. திருமெய்ஞானபுரி/T.வைரவன்பட்டி T- என்பது திருக்கோஷ்டியூர்  வைரவன்பட்டி) ஸ்ரீ காலபாலபைரவர். திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து உத்தேசமாக 7.5 கிமீ. அங்கிருந்து திருக்கோட்டியூர் சௌம்யநாராயணப் பெருமாள் கோயில் 1 கிமீ தூரம்தான். (நாங்கள் செல்ல முடியவில்லை என்பது என் குறை)

அப்பன் திருமெய்ஞானபுரீஸ்வரர் - அம்மை ஸ்ரீ பாகம்பிரியாள். 1500 வருட பழமை வாய்ந்த கோயில். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு சோழர்களின் கட்டுமானக் கலையும், பாண்டியர்களின் கலைவடிவங்களும் கொண்ட கோயில். 

ஸ்ரீ காலபாலபைரவர்

2. திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் - யோகபைரவர். பேருந்து நிலையத்திலிருந்து வெகு அருகில்.  நடக்கும் தூரம்.  முதல் கோயில் தி.வைரவன்பட்டி காலபாலபைரவர் கோயிலில் தரிசனம் முடித்து  இங்கு வந்ததால் 7.8 கிமீ. 
இறைவன் - மூலவர் - திருத்தளிநாதர். உற்சவர் - சோமஸ்கந்தர். இறைவி - சிவகாமி. தீர்த்தம் - ஸ்ரீதளிதீர்த்தம்
திருத்தளிநாதர் கோயில் பற்றிய விவரங்கள் இதோ படங்களாக. பெரிதாக்கிப் படிக்கலாம் 



கூட ஒரு கோயில் அறிமுகம் கொடுக்கலாமோன்னு Preview பார்த்தா இதுவே பெரிது என்று சொல்லிடுவீங்க!!!!!! என்ற பயம். இத்துடன் இதில் முடிக்கிறேன். மீதி 7 கோயில்கள் அடுத்தடுத்து...


-------கீதா

35 கருத்துகள்:

  1. ஒவ்வொரு கோயிலாக எத்தனை பதிவுகள் எவ்வளவு இடைவெளியில் வரப்போகிறதோ.

    என்ன பரிகாரம், எந்த வரிசையில் கோவில் தரிசனம், வெறும் பைரவ வழிபாடா இல்லை அர்ச்சனையா (எப்போதோ போயிருப்பீங்க, மறந்திருக்கலாம் ஹி ஹி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நெல்லை! பதிவு எழுதும் போதே இதை நினைச்சு சிரித்தேன். இப்பவும்....வருடம் எல்லாம் படங்கள்ல இருக்குமே அண்ணன் கிட்ட மாட்டிக்குவமேன்னு...!!!!

      பரிகாரம் விரிவாகச் சொல்ல முடியலை நெல்லை பொதுவெளி என்பதால். ஆனால் திருமணம் சம்பந்தப்பட்டது.

      // எந்த வரிசையில் கோவில் தரிசனம், வெறும் பைரவ வழிபாடா இல்லை அர்ச்சனையா (எப்போதோ போயிருப்பீங்க, மறந்திருக்கலாம் ஹி ஹி)//

      ஹாஹாஹாஹாஹா மறக்கலை. அதான் வரிசைப்படின்னு சொல்லி கோயில் எண் கொடுத்திருக்கிறேனே....சொல்லிருக்கேனே....பார்க்கலையா....ஹையோ இந்த நெல்லை..கர்ர்ர்ர்ர்ர்....பரிகாரத்தில் என்ன செய்யணும்னு சொல்லிருக்கிறேனே....அதாவது 8 கோயில் முடிச்சு, திரும்ப முதலில் போன கோயிலுக்கு மாலை பைரவ அஷ்டமி பூஜை தரிசனம் செய்து அப்புறம் 9 வது கோயில்...லிஸ்ட் அடுத்த பதிவில் கொடுத்துவிடுகிறேன்...

      வரிசைக் கிரமமாக பட்டியல் போட்டிருந்தேன் அது பதிவு பெரிதாகியதால் எடுத்துவிட்டேன். ஆனால் வரிசை எண் போட்டுதான் கோயில்கள் அறிமுகம். இப்ப முதல் கோயில் அதுக்கு அடுத்து சென்றது என்று இரண்டு....

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. பைரவ வழிபாடு, அர்ச்சனை, அதனால்தான் வேறு சன்னதிகளுக்குச் சென்று தரிசிக்க முடியலை. சொல்லிருக்கேனே....மாரத்தான். நெல்லை இக்கோயில்கள் எல்லாம் செம கலை வடிவங்கள் பெரிய கோயில்கள். பிராகாரம் எல்லாம் முரட்டுத் தூண்கள். கூகுள்ல கோயில்கள் பற்றி நிறைய இருக்கு. படங்களோடு. பெரும்பாலும் நகரத்தார்தான் பொறுப்பெடுத்துப் பார்த்துக் கொள்கிறார்கள்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    3. ஒவ்வொரு கோயிலாக எத்தனை பதிவுகள் எவ்வளவு இடைவெளியில் வரப்போகிறதோ//

      ஹாஹாஹாஹாஹா...வந்திரும் நெல்லை....பெரிசா எழுத ஒன்றும் இல்லையே...படங்கள் எல்லாம் தயாராக இருக்கு...இன்னும் 7 கோயில்கள் இல்லையா...ஸோ 2 பகுதியா போடலாம்னு....வந்திடும்

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  2. பதிவில் கோயில் விளக்கம் நன்று. படங்களும் பரவாயில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. படங்கள் - ஹாஹாஹா அப்ப இன்னும் ஓட்டை கேமரா...அப்பப்ப கண் மயங்கிடும் (Blur) அதுக்கு ரொம்பப் பார்த்து பார்த்து எடுத்தேன். எடுத்ததுல மிக நல்ல படங்கள் நிறைய வீணாகிவிட்டன. சரியா வரலை பின்ன மயங்கிச்சுனா?!

      திருத்தளிநாதர் கோயில் விவரங்கள் படங்களில் நீங்க நேரம் நோட் பண்ணலை!!!!! ஹாஹாஹாஹா.....திருத்தளிநாதர் காலையிலேயே இரண்டாவது கோயில்.....ஆனால் தகவல்களில் மாலை நேரம் இருக்கிறதே என்று...கேட்பீங்கன்னு....

      அடுத்த பதிவில் அந்த நேரம் வரும் போது சொல்கிறேன்... விவரங்கள் கொடுத்தாலும் ஒன்றுதான் கொடுக்கலை என்றாலும் ஒன்றுதான்!!!!!ஹிஹிஹிஹிஹி

      இனி வரும் படங்கள் எல்லாம் ஓரளவு ஓகேயாக இருக்கும்

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. நம்பியாண்டார் நம்பி... பெயர் கேள்விப்பட்டதுபோல இருக்கிறது. திருக்குளம் படம் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜராஜ சோழன் தானே தேவாரத் திருமுறைகள் பொதுவெளிக்குக் கிடைக்கக் காரணம் என்று சொல்லப்படுகிறது இல்லையா? திருமறைகள் இருக்கும் இடத்தைக் காட்டியவர்தான் நம்பியாண்டார் நம்பி. அவர் அவதரித்த இடம் திருநாரையூர். சிதம்பரத்துக்கு அருகில் உள்ளது. சிதம்பரம் சென்றிருந்த போது அறிந்தது.

      இங்கு நான் சொல்லியிருக்கும் முதல் கோயில் திருமெய்ஞானபுரீஸ்வரர் தெய்வம் ராஜராஜ சோழனுக்குக் குலதெய்வமாம். இங்குள்ள இறைவனின் வாக்கு பெற்றுத்தான் தஞ்சை பெரிய கோயில் கட்டியதாகச் சொன்னார் அக்கோயிலில் இருந்த பெரியவர். மீண்டும் இக்கோயில் படங்கள் வரும் என்பதால் அங்கு சொல்லலாம்னு இருந்தேன்.....மேலும் பதிவு பெரிசாகிடுச்சே!!!!!துரை அண்ணா கூட திருமறை, ராஜராஜசோழன் பற்றிய.பதிவுகளில் சொல்லியிருந்த நினைவு. திருநாரையூர் பற்றியும்....

      சென்ற கோயில்களில் பெரும்பான்மை சோழ, பாண்டியர்கள் கீழ் இருந்தவை.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. ஆம், நம்பியாண்டார் நம்பி பற்றி நானும் படித்த நினைவு லேசாய் வருகிறது!

      நீக்கு
    3. ஹை!! ஸ்ரீராம் நம்ம மறதிக்கு (என்னையும் சேர்த்துதான்!!) இடையிலும் இப்படியான சில நினைவு இருப்பதற்கு நாம் நம்மை நாமே தட்டிக் கொடுத்துக்குவோம்!!!

      கீதா

      நீக்கு
  4. கோயில் எல்லாமே நம்ம ஏரியாவாக இருக்கிறதே....
    படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி உங்க ஏரியாவேதான் எல்லாமுமே...அழகான இடங்கள்.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா ஆமாம் ஆனா எதுவுமே உருப்படியா பாக்க முடியலை டிடி...

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  6. இந்த மாதிரி, ஒரு ப்ரார்த்தனைக்கோ இல்லை வேண்டுதலாகவோ பல கோவில்களுக்கு ஒரே நாளில் செல்லும்போது, கடவுள் தரிசனம் அல்லது அர்ச்சனையில் மாத்திரம் மனம் செல்லும். சீக்கிரம் அர்ச்சனையை முடித்தால் நல்லது, ஐயோ இந்த நேரம் பார்த்து பூஜாரி செல்ஃபோன்ல பேசிக்கிட்டிருக்காரே, சட்டுபுட்டுனு நம்ம வேலையை முடித்து அனுப்பினால்தானே அடுத்த கோவிலுக்குப் போக முடியும், அதுவேற மூடிடக் கூடாது... இடையில் எங்க சாப்பிடறது? கோவில் வாசல்ல கார்க்காரனை நிறுத்தினோமே, வெளில போன உடனே வந்துடுவானா இல்லை பார்க்கிங் கிடைக்கலைன்னு தள்ளிப்போய் நிறுத்தியிருப்பானா, ஒருவேளை சாப்பிடப்போறேன்னு சொன்னானோ என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் அலைபாயும்போது, வழிபாடு நல்லா நடக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, உங்க கருத்துக்கு டிட்டோ..எனக்கு இப்படி இல்லைனாலும் மனம் ஒருமித்து தொழ முடியாது. எந்தவித வேண்டுதலும் இல்லாமல் என் மனம் லயித்து செய்ய விரும்புவேன்.

      ஆனா பாருங்க என் தங்கை எனக்கு நேர் எதிர். அப்படியே அங்கேயே மூழ்கிடுவா.....அவ ஒரு புறம் அப்படியே லயித்திருக்கட்டும் நான் சுற்றி என்னென்ன இருக்குன்னு பார்க்கலாம்...க்ளிக்கலாம் என்றால் அவளுக்கு நான் உடன் இருக்க வேண்டும். பாவம்...அதுக்குத்தானே அவளோடு போயிருக்கிறேன். அவளுக்கு மாரல் சப்போர்ட்டுக்கு. எனவே அதிகம் பார்க்க முடியவில்லை. எங்கள் ஆட்டோக்காரர் ரொம்ப ஒத்துழைத்தார். அவர் படம் இப்பகுதியில் போட நினைத்து போடலை. அடுத்த பதிவில் போடுகிறேன்...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. அவசரப்படத் தோன்றும்தான்.  ஆனால் சீக்கிரமே இந்த இடங்களுக்கு நிதானமாய் ஒரு ட்ரிப் வரவேண்டும் என்றும் தோன்றும் என்று எனக்குத் தோன்றும்.

      நீக்கு
    3. ஆனால் சீக்கிரமே இந்த இடங்களுக்கு நிதானமாய் ஒரு ட்ரிப் வரவேண்டும் என்றும் தோன்றும் என்று எனக்குத் தோன்றும்.//

      ஆமாம் ஸ்ரீராம், எனக்கும் தோன்றும். இந்த இடங்களுக்கு மீண்டும் போக ஆசை உண்டு நின்று நிதானமாகத் தொழ வேண்டும். வேண்டுதல் எதுவும் இல்லாமல் மனம் லயித்துச் செய்ய வேண்டும் என்று ....கோயில் முழுவதையும் என்னென்ன சன்னதிகள், அதில் இருக்கும் கலை வடிவங்கள் என்று சுற்றி வர வேண்டும் என்ற ஆசை உண்டு, ஆனால் வாய்ப்பு கிடைப்பதுதான் சிரமமாக இருக்கிறது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. பிரதோஷநாளில் பதிவு போட்டு விட்டீர்கள்.திருத்தளிநாதர் கோயில் தரிசனம் சனி பிரதோஷ நாளில் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! இன்று பிரதோஷமா! அதெல்லாம் எனக்குத் தெரியாது கோமதிக்கா...உண்மைய சொல்லணும்னா நேற்று போட நினைத்து பதிவை வியாழன் செட் செய்யும் போது எல்லாம் முடித்து ஷெட்யூல் செய்ய முயன்ற போது கம்ப்யூட்டர் ஹெங்க் ஆகி பதிவே அழிந்துவிட்டது கோமதிக்கா....அப்புறம் மனம் சோர்வாகி அட போ என்று விட்டு நேற்று மீண்டும் செட் செய்து schedule செய்துவிட்டேன் இன்று வெளியாவது போல். ஏதேச்சையாக அமைந்து இருக்கிறது பாருங்க. நீங்கள் மகிழ்ச்சி அடைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  8. நானும் இந்த கோவில்களை ஒரே நாளில் பார்த்து இருக்கிறோம். காரில் போனதால் பக்கம் பக்கமாக உள்ள கோவில்களை பார்த்தோம். நிறைய தடவை இந்த கோவில்களை தரிசனம் செய்து இருக்கிறோம். நீங்கள் பகிர்ந்து இருக்கும் படங்கள் நன்றாக இருக்கிறது.
    நானும் பதிவுகள் போட்டேன், தேட வேண்டும்.

    திருக்கோஷ்டியூர் கோவில் நன்றாக இருக்கும்.சௌம்யநாராயணப் பெருமாள் கோயில் பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் எல்லாம் நடக்கும் மாசி மாதம் தெப்பத்திருவிழாவில் விளக்கு எடுப்பார்கள். வேண்டுதல் நிறைவேறிய பின்பு மீண்டும் தெப்பத்திருவிழாபோய் நிறைய விளக்கு ஏற்றி வைப்பார்கள் தெப்பக்குள படிகளில். உறவினர்களுடன் தெப்பத்திருவிழா பார்த்து வந்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் ஒரே நாளில் பார்த்திருப்பது மிக்க மகிழ்ச்சி கோமதிக்கா. அதுவும் நிறையதடவை தரிச்சித்திருப்பது...ஆமாம் சில அருகில்...சில மட்டும் கொஞ்சம் தூரத்தில். உங்கள் பதிவு சுட்டியும் தாங்க கோமதிக்கா....

      திருக்கோஷ்ட்டியூர் பல வருடங்களுக்கு முன் போயிருக்கிறேன். அழகர் மலை என்று எல்லாம் சேர்த்து ஒரு பயணம் அதெல்லாம் 30 வருடங்களுக்கு முன்.

      உங்கள் அனுபவங்கள் மிகவும் சிறப்பு!

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  9. நெல்லைக்கு போட்டியா? கோயில் கோயிலாக போய் போட்டோ எடுத்து போடுவதற்கு. அவர் சிலையைப் படம் பிடித்தால் நீங்கள் நோட்டீஸ் போர்டுகளை படம் பிடித்துள்ளீர்கள். நன்று. ஆனால் படிக்க முடியவில்லை.

    2016இல் போனதை 2023 இல் எழுதுவது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஜெ கு அண்ணா, நெல்லைக்குப் போட்டியா!! ஆஆஆஆஆஆ....எனக்கு அவர் அளவு ஆஸ்திகம், பக்தி எல்லாம் கிடையாது!!!

      எனக்குச் சிலைகள் படம் பிடிக்க அன்று நேரம் வாய்க்கவில்லை இல்லைனா அதைத்தான் எடுத்திருப்பேன். இவை எல்லாம் கோயிலுள் செல்லும் போதே பக்கவாட்டில் இருந்தவை அதனால் சும்மா க்ளிக்...என்னன்னு தெரியாமலேயே அப்புறம் வீடு வந்து அதை வாசிச்சப்பதான் கோயில் வரலாறு அதன் சிறப்பு என்று தெரிந்தது.

      ஓ படிக்க முடியலையோ....நான் அதை எழுத்தாகத் தர முயற்சி செய்கிறேன் கடைசியில் எப்படியும் இக்கோயில் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் சொல்கிறேன்...

      //2016இல் போனதை 2023 இல் எழுதுவது!//

      ஹாஹாஹாஹாஹ்ஹா நெல்லையிடம் மாட்டிக்குவேன்...இன்று லைட்டா சொல்லிட்டுப் போயிட்டார்....நீங்களும் நெல்லையோடு கூட்டணி வைச்சிட்டீங்க!!!! எண்டே வைரவா!!! ரக்ஷிக்கு!!

      மிக்க நன்றி ஜெகு அண்ணா

      கீதா

      நீக்கு
  10. நானும் இன்று ஒரு திருத்தலம் சென்று வந்தேன்.  பயங்கர டயர்ட்.  ஆனால் புகைப்படம் எதுவும் எடுக்க முடியவில்லை.  எடுக்க முயற்சிக்கவும் இல்லை!  காலை மூன்றரைக்கு கிளம்பிச் சென்று மாலைதான் வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அதான் ஸ்ரீராமைக் காணலையே என்று நினைத்தேன். நல்ல விஷயம் ஸ்ரீராம். சில சமயங்களில் நாம் நம் வேண்டுதல்கள் என்று சென்றால் மனம் படங்கள் எடுக்கத் தோன்றாதுதான். அயற்சியாக இருந்தாலும் இங்கு வந்து வாசித்துக் கருத்துகளும் சொன்னதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. இவ்வளவு கோவில்கள் ஒரு ட்ரிப்பில் கவர் செய்வது சிரமம்தான். ஜோசியத்தில் எனக்கும் எரிய நம்பிக்கை எதுவும் இல்லை என்றாலும் சில சமயங்களில் அதையும் கேட்டு செய்யத்தான் வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ரொம்பக் கடினம் ஒரே நாளில் எனும் போது.....எனக்கும் எங்கள் வீட்டில் பெரியவர்கள் ஏதேனும் இப்படிச் செய்யச் சொன்னால் செய்ததுண்டு. இப்ப யாரும் இல்லை. நான் தனிப்பட்ட முறையில் மனம் ஒருமித்து பிரார்த்தனை தவிர வேறு எதுவும் செய்வது இல்லை, ஸ்ரீராம்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  12. என்னென்ன இடங்கள் என்பதை அழகாக வரிசைப்படுத்தி விட்டீர்கள்.  விவரங்களும் சூப்பர்.  நீங்கள் சொல்லியுள்ள இடத்தில் ஒரு இடத்துக்கு அருகில் இருக்கும் நீங்கள் சொல்லாத ஒருபுகழ்பெற்ற ஸ்தலம் சென்று வந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னென்ன இடங்கள் என்பதை அழகாக வரிசைப்படுத்தி விட்டீர்கள். விவரங்களும் சூப்பர். //

      நன்றி ஸ்ரீராம். இப்பதானே 2 கோயில்கள் முடிந்திருக்கிறது. இன்னும் 7 கோயில்கள் இருக்கிறதே அடுத்து வரும்..

      ஆ! நீங்கள் சென்ற இடம் என்ன என்று யூகிக்க முடிகிறது. பிள்ளையார்பட்டி!!
      எங்கள் லிஸ்டில் அது 4 வது இடம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நான் தாமதமாக வந்து தாங்கள் சென்று வந்த கோவில்களின் பதிவில் சேர்ந்து கொள்கிறேன். மன்னிக்கவும்.

    படங்கள் நன்றாக உள்ளன. கோவிலின் அருமைகளை தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு ஊர்களிலும், எத்தனை கோவில்கள் என வியக்க வைக்கிறது . இதெல்லாம் நம் ஒவ்வொருரின் வாழ்வில் முறையாக (பரிகாரத்திற்காக என்று மட்டும் இல்லாமல்.) சென்று காண முடியுமா எனவும் ஐயம் வருகிறது.

    நீங்கள் பரிகார நிமித்தம் இத்தனை கோவில்களுக்கும் சென்று வந்து விட்டீர்கள். அதற்கு முதலில் நம் நற்பலன்களை கண்டறிய ஒரு ஜோஸ்யரிடம் செல்ல வேண்டும். அதன் பலாபலன்களை அடைவதற்காக அவர் செய்யச் சொல்லும், போகச்சொல்லும் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால், ஒரே நாளில் இப்படி நிறைய கோவில்களை தரிசித்து விட்டு வருவதென்பது சிரமந்தான்.

    நீங்கள் சொல்வதும் உண்மைதான். எனக்கும் ஒரு கோவிலுக்கும் சென்றால் ஆற அமர தரிசித்து விட்டு, அங்குள்ள சிற்பங்கள், தூண்கள், சுற்றுப்புறங்களை என நிதானமாக கண்டு ரசித்து விட்டு வருவதற்குத்தான் ஆசைப்படுவேன். (அதுவே மனதில் நிற்காமல் சென்று வந்த கொஞ்ச நாளிலேயே புறப்பட்டு சென்று விடும்.) ஆனால், உடன் வருகிறவர்களுக்கும் அந்த எண்ணம் வர வேண்டும். அவர்கள் நேரத்தை மட்டுந்தான் கணக்கிடுவார்கள்.

    இன்னமும் வரவிருக்கும் கோவில்களையும் காண ஆவலோடு இருக்கிறேன். இப்படி உங்கள் அனைவரின் பதிவு வழி கோவில்களோடு உங்கள் அனைவரோடும் சேர்ந்து சுற்றினால்தான் உண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா தாமதத்துக்கு எல்லாம் எதுக்கு மன்னிப்பு!!?

      ஆமாம் ஒவ்வொரு ஊர் கோயிலும் ஒவ்வொரு சிறப்பு. பரிகாரம் என்று பார்க்க முடிந்தது. இல்லை என்றால் வாய்ப்பு கிடைத்திருக்குமா என்றும் தெரியவில்லைதான் கமலாக்கா.

      ஆமாம் அக்கா நம்முடன் வருபவர்கள் நம்மை ஒத்த அலைவரிசையில் இருந்தால் மட்டுமே நின்று நிதானமாக ரசித்து வர முடியும்..

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  14. தங்களின் தங்கையின் நம்பிக்கையால் கோவில்களை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களின் மூலமாக கண்களால் தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்கப்பெற்றது எங்களின் பாக்கியம். எல்லா புகழும் இறைவனுக்கே!

    பதிலளிநீக்கு