புதன், 11 நவம்பர், 2015

உப்பிட்டவரை உள்ளளவும் நினை


      பரம ஏழை என்பதற்கான எல்லா அடையாளங்களுடனும் காணப்பட்டான் அவன். அவன் என்பதை விட அவனுக்கும் ஒரு பெயர் வைத்துக் கொள்வோமே. கதிரவன்? அப்படியே இருக்கட்டும். அவன் வாழ்க்கைதான் பிரகாசமாக இல்லை இப்போது. பெயரிலாவது ஒளி இருக்கட்டுமே. அவனது வாழ்க்கையிலும் ஒளி பிறக்காதா என்ன.

      புயலாய் மாறிய தென்மேற்குப் பருவக் காற்று ஏற்படுத்திய தொடர் மழைக்குப் பிறகு இன்றுதான் சூரியன் எட்டிப்பார்க்க, பசியினால் வாடியிருந்த கதிர், பக்கத்து வீடுகளில் கடனாகப் பணம் கேட்க அவனது சுயமரியாதை இடம் கொடுக்காததால், பசி மயக்கத்திற்கு அனஸ்தீசியா கொடுக்க எண்ணி தெருவில் நடந்தான். அம்மாவிற்கு உதவியாக, ஏதேனும் சிறிய வேலையேனும் கிடைக்காதா, அன்றைய ஒரு வேளை சாப்பாட்டிற்கேனும் வழிவகுக்காதா என்ற எண்ணத்தில். சாப்பிட்டால்தானே வேலையும் செய்ய முடியும்! சரி கதிரின் நடைக்கு வேகத் தடை வரும் முன் அவனைப் பற்றி.

       +2 முடித்திருந்தான். மதிய உணவு அளிக்கும் அரசுப்பள்ளியின் தயவால். கல்லூரியில் அடி எடுத்து வைக்க வேண்டிய காலம். வழியில்லை. அன்றாடங்காய்ச்சி. அம்மாவின் தினக் கூலி மட்டுமே.

 தொடர் மழையால் அம்மாவின் கூலி இல்லை. அம்மா சுருண்டு படுத்துக் கொண்டிருக்கின்றாள் பசியின் மயக்கத்தில், அதை வெல்ல. அவன் வயிற்றின் கெஞ்சல் முகத்தில் தெரிந்தது. வயிற்றிற்குத் தெரிகின்றதா என்ன அவன் வீட்டில் அடுப்பு எரிந்து இன்று மூன்றாவது நாள் ஆரம்பம் என்று. இரண்டு நாள் தண்ணீர் குடித்தே கழித்தாயிற்று. இன்று முடியவில்லை.

      வயிறோ கெஞ்ச, மூளையோ வயிற்றின் கெஞ்சலைக் கொஞ்சமேனும் தீர்த்தால்தான் நான் வேலை செய்வேன்.  அப்புறம்தான் நீ வேலை செய்வாய் என்று சண்டித்தனம் செய்தது.

      “என்னா கதிரு அதிசயமா இந்தப்பக்கம்? அம்மா நல்லாருக்குதா” – கோயில் வாசலில் பூ விற்கும் பாக்கியம் அம்மாவின் குரல் கேட்டதும்தான், கோயில் பக்கமே செல்லாதவன், தான் கோயிலின் பக்கமாக நடந்து வந்திருப்பது தெரிந்தது. பூக்கார அம்மா அடுத்த தெருவில் வசிப்பவர். அம்மாவிற்குப் பழக்கமானவர்.

      அதற்குமேல் நடக்க முடியாததால், அந்த அம்மாவின் அருகில் இருந்த கல்லின் மீது அமர்ந்துவிட்டான்.

      கதிரின் முகம் பார்த்தே புரிந்துகொண்டாள் பாக்கியம் அம்மா. பாம்பின் கால் பாம்பறியும்.

      “என்ன? புயல், தொடர்ந்து மழையினால அம்மாவுக்கு வேலை இல்ல.  அடுப்பு எரியலை. பசி. உனக்குச் சொல்லத் தயக்கம். எனக்கும் இன்னும் போணியாவல. மழையினால பூ விக்கல. பூவும் கிடைக்கல. இல்லைனா நான் உனக்குக் காசு கொடுத்திருப்பேன்.”

      “இல்லம்மா எனக்கு வேண்டாம். எனக்கு ஏதாவது வேலை கிடைச்சா போதும்.”

      “அடேய். கடனாத்தான் தந்திருப்பேன்.  இனாமா இல்ல. நான் என்ன அம்புட்டுப் பணக்காரியா என்ன? சரி அத வுடு. வயிறு நிறைஞ்சாதான் நீ வேலையும் செய்ய முடியும். கோயிலுக்குள்ள போயி அந்த அம்மாவை வேண்டிக்க. வழி பொறக்கும். பொங்கல் ப்ரசாதம் நிறையவே கொடுப்பாங்க. அதைச் சாப்பிடு. அம்மாவுக்கும் கொண்டு கொடு. மதியம் அன்ன தானமும் உண்டு. உங்க அம்மா தினம் வேண்டுற அம்மாதான் இந்த அம்மா.”

      பாக்கியத்திடம் பூ கேட்க வந்த, கோயிலை நிர்வகிக்கும் அந்தப் பெரியவர் கோயிலின் படியிலேயே நின்று கொண்டு இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

      “பாக்கியம் அம்மனுக்கு ஒரு பூமாலை கட்டிக் கொடு, சின்னதா இருந்தாலும் பரவால்ல, கொஞ்சம் உதிரிப்பூவும் வேணும். கோயில் தோட்டத்துல இருந்த பூவெல்லாம் மழைல உதிர்ந்துபோச்சு. இன்னிக்குச் சத்சங்கம் வேற இருக்குல்லயா. கூட்டம் வேற வர ஆரம்சிச்சுருச்சு பாரு.”

      “சரிங்க ஐயா, இருக்கற பூவை வைச்சுக் கட்டித்தாரேன். பூ சுமாராத்தான் இருக்கு.”

      “பரவால்ல. கட்டிட்டு உள்ள கொண்டுவந்துக் கொடு.”

      அந்தப் பெரியவர் உள்ளே செல்லும் போது அவனையும் பார்த்துக் கொண்டே சென்றார்.

      இந்த அம்மன் கோயில் அந்தப் பகுதி மக்களுக்கு அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற கோயில்.

      “கதிரு, நான் மாலை கட்டிட்டு வாரேன்.  நீ உள்ள போய் பிரசாதம் வாங்கிச் சாப்பிடு” என்று பாக்கியம் சொன்னாள்.

அவன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, கைமுட்டிகள் மடியில் இருக்க, தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். மனதிற்குள் போராட்டம் ஆரம்பித்தது. விவரம் தெரிந்த நாளிலிருந்து கோயிலுக்குச் சென்றதில்லை.
 
சின்னப்பையானாக இருந்தவரை அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அம்மா செல்லும் கோயில்களுக்கு எல்லாம் (அருகில் இருக்கும் கோயில்களுக்கு) சென்றிருக்கின்றான். 10 வருடங்களுக்கு முன் அவன் அப்பா மரிக்கும் வரை. அப்பாவும் கூலி வேலைதான் செய்துவந்தான் என்றாலும் ஏதோ இரு வருமானம் இருந்தது. விஷக் காய்ச்சல் என்று சொல்லப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருக்க, அம்மா கதிரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று,

“சாமிகிட்ட வேண்டிக்கடா.  அப்பா பொழைக்கணும்னு” என்று சொல்ல அவனும் கண்ணை மூடிக் கொண்டு வேண்டிக் கொண்டவன்தான். ஆனால், அப்பா மரித்துவிட, அவனுக்குச் சாமி மேல் கோபம் வந்தது. அப்போது அவனுக்கு 7 வயதுதான் என்றாலும், அவனது மனதிற்குள்,

“அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு, சாப்பிடாம எல்லாம் இருந்து சாமிக்கிட்ட வேண்டிக்கும். ஏன் சாமி அப்பாவக் காப்பாத்தலை” என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. மரணத்தைப் பற்றியோ, சாமி பற்றியோ புரிந்து கொள்ள முடியாத வயது. 

அதன் பின்னர், சாமி மேல் இருந்த கோபத்தால் அவன் அம்மாவுடன் கோயிலுக்குச் செல்வதை விடுத்தான். பின்னர் ஓரளவு புரியும் வயது வந்ததும், அவனுக்குச் சாமி நம்பிக்கை இல்லாமல் போனது. கோயில் இருந்த பக்கமே போனதில்லை இதுவரை.

எனவேதான் இப்போது இந்த மனப்போராட்டம். எப்படிக் கோயிலுக்குள் சென்று பிரசாதத்தை வாங்கிச் சாப்பிடுவது. அது தனது கொள்கைக்கு முரணானது என்று. ஆனால், மூளையின் மறு பகுதியோ வயிற்றின் போராட்டத்தைச் சுட்டியது. மூளை வேலை செய்ய மறுத்தது. போராட்டத்தில் வயிறு வெற்றியின் விளிம்பில் வரும் சமயம்,

“என்ன கதிரு இன்னும் போகாம உக்காந்துருக்க...” என்று தான் கட்டிய மாலையை எடுத்துக் கொண்டு, அவனையும் இழுத்துக் கொண்டு கோயிலின் உள்ளே சென்றாள் பாக்கியம். உள்ளே இருந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு, அர்ச்சகரிடம் மாலையையும், உதிரிப்பூக்களையும் கொடுத்துவிட்டுக் கதிரையும் அம்மனை வேண்டிக் கும்பிடச் சொன்னாள். கதிரின் மனம் ஒப்பாததால் அவனால் அம்மனை வேண்டி வழிபட முடியவில்லை. அவன் அங்கிருந்து விலகி வெளியில் வந்தான் சோர்வுடன்.  பின்னாலேயே வந்த பாக்கியம் அவனை, கோயிலின் பிற சன்னதிகள் வழியாக வெளிப்பிராகாரத்தில் இருக்கும்  பிரசாதம் வழங்கும் இடத்திற்கு அழைத்து வந்தாள்.

பிரசாதம் வழங்கும் பகுதிக்கு அருகில்தான் சத்சங்கம். நம் எல்லோருக்கும் தெரிந்த சுவாமி பித்தானந்தா அருளுரையாற்றிக் கொண்டிருந்தார்.  பிரசாதம் வழங்க ஆரம்பித்ததும் குழுமியிருந்த மக்கள் மெதுவாக எழுந்து அதை நாடிச் செல்லத் தொடங்கினர். நம் பித்தானந்தா சுவாமிகள் மிகவும் யதார்த்தவாதி. அவர் உடனே சொல்லத் தொடங்கினார்.

“செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிற்கு ஈயப்படும் என்று நமது ஐயன் சொல்லியிருந்தாலும், மானுடராகிய நமக்குப் பசி செவியை அடைக்கும் என்பதால் முதலில் வயிற்றிற்கு இட்டுப் பசியைப் போக்கினால்தான் மூளை வேலை செய்து செவிப்புலனை இயங்க வைக்கும். ஆங்கிலத்தில் ஒரு வாக்கு உண்டு.  “டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்” என்று. எனவே, நான் எனது தத்துவ உரைகளைச் சிறிது நேரம் நிறுத்தி வைத்துக் கொள்கின்றேன்.  நீங்கள் போய் அம்மனின் பிரசாதம் உண்டு வாருங்கள்” என்று சொன்னது கதிரின் காதிலும் விழுந்தது. அந்தச் சோர்விலும் அவனது முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது.

கதிரும், பாக்கியமும் பிரசாதம் வாங்கிக் கொண்டு கூடவே, பாக்கியம் கதிரின் அம்மாவிற்கும் வாங்கி வைத்துக் கொண்டு, இருவரும் சாப்பிடும் இடம் வந்து சாப்பிட்டதும், வயிறு நிறைந்து, மனம் அமைதியடைந்து, கதிருக்குச் சற்று தெம்பு வந்தது. கைகழுவும் இடத்தில் கை கழுவி விட்டு திரும்பும் சமயம் கதிரின் தோளில் யாரோ தொட்டு அழைத்தது போல் இருக்கவும் கதிர் திரும்ப, பாக்கியமும் ஆச்சரியப்பட, அங்கு அந்தப் பெரியவர் நின்றிருந்தார். அவர் கதிரிடம்,

“தம்பி நீயும், பாக்கியமும் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டேன். உன் பேரென்னப்பா? என்ன படிச்சிருக்க?”

“கதிர். +2 சார்.”

“மேற்கொண்டு படிக்க காலேஜ் எதுவும் அப்ளை செஞ்சுருக்கியா?”

“இல்லை சார்.  படிக்க வசதி இல்லை” என்று தன் கதையைச் சொன்னான்.  வேலை தேடுவதாகவும் சொன்னான்.

“மேல படிக்க ஆர்வம் இருக்குதா? என்ன படிக்க விருப்பம்?”

“ஆர்வம் இருக்கு சார்.  காமர்ஸ்.”

“சரி. உன்னப் பார்த்தா நல்ல பையன் மாதிரி தெரியுது. அப்ப நீ காமர்ஸ் ஈவினிங்க் கோர்ஸ்க்கு அப்ளை பண்ணு.  காலைல என் கம்பெனில வேலை செய்யலாம். இந்தா என் கார்டு.  நாளைக்கு இதுல இருக்கற விலாசத்துல வந்து பாரு. சரியா? தைரியமா  போப்பா.”

"ரொம்ப ரொம்ப நன்றி சார்.  எனக்கு என்ன சொல்ல எப்படி நன்றி சொல்லன்னே தெரியல சார்."

அவர் அவனைத் தோள்களில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

கதிருக்கு நடப்பது எல்லாமே கனவு போல இருந்தது. தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். ஒரு மணி நேரத்தில் இத்தனை மாற்றமா என்ற வியப்பு. அவர் கொடுத்த அந்த கார்டைப் பார்த்தான். பெயர் காத்தவராயன். பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்பது தெரியவந்தது. ‘ஓ! காத்தவராயன் இண்டஸ்ட்ரீஸ் கேள்விப்பட்டதுண்டே. அதன் நிறுவனரா இவர்!’ என்ற வியப்பு.

“நான்தான் சொன்னேன்ல தம்பி. அம்மன வேண்டிக்க, நல்ல வழி பொறக்கும்னு.  இந்த ஐயா பெரிய ஆளு.  நிறைய கம்பெனிங்க வைச்சுருக்காரு.  இந்தக் கோயிலையும் இவர்தான் நடத்துறாரு. உனக்குப் பெரிய அதிர்ஷடம்தான் கதிரு.  அம்மனுக்கு நன்றி சொல்லிக் கும்பிடு.”

கதிருக்கு மகிழ்வு இருந்தாலும், சாமி மீதான நம்பிக்கை வரவில்லை. என் குடும்பத்தின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட சாமி என்றும், இன்று பெரியவர் உதவிக்கும் சாமிதான் காரணம் என்கிறார் பாக்கியம் அம்மா. அப்படி என்றால் அன்றும் கஷ்டம்தான். தந்தையை இழந்த போதும் சாமி அழைச்சுக்கிடுச்சு என்றார்கள். ஏன் அந்தச் சாமிக்குத் தெரியாதா எங்க கஷ்டம்?’ அவனது இன்னும் பிற கேள்விகளுக்கு விடைகிடைக்கவில்லை.

“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” “நன்றி மறப்பது நன்றன்று” என்று சுவாமி பித்தானந்தா அருளுரை சொல்லிக் கொண்டிருந்தது கதிரின் காதில் ஒலித்தது. ‘பரவாயில்லையே பித்தானந்தா சாமி தமிழ்லயும் சொல்லி யதார்த்தமா அருளுரை சொல்லுறாரே’ என்று நினைத்தவனின் மனதில் அவரது அருளுரை பதிந்தது.

கதிரால், நிகழ்வுக்குக் காரணம் கடவுள் என்று அர்த்தப்படுத்த முடியவில்லை என்றாலும், ஸ்வாமி பித்தானந்தாவின் உரைக்கேற்ப, பிரசாதம் கொடுத்து இன்றைய தினம் தெம்பு கொடுத்த அம்மனின் பிரசாதத்திற்கும், அம்மனுக்கும் நன்றி சொல்லி உள்ளளவும் நினைத்துக் கொண்டான். என்றாலும் அவனுக்கு இந்த ஒரு நல்ல விஷயம் நடக்கக் காரணமான, அவன் கண்ணெதிரே இருக்கும் பாக்கியம் அம்மாவையும், காத்தவராயன் ஐயாவையும், தான் எப்பவுமே நினைத்து வணங்கிட வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,

அங்கு சுவாமி பித்தானந்தாவின் முகத்தில் அர்த்தமுடன் கூடிய ஒரு புன்னகை விரிந்தது!
_______________________________________________________________________________________

 கதிரேசன் தனது மகிழ்வைக் கொண்டாட நம் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்குகின்றான்.  

கூடவே  சகோ ராஜி க்கு, நம் எல்லோர் சார்பிலும் தீபாவளி சீர் பலகாரங்கள். இதோ..

நன்றிwww.awesomecuisine.com

___________________________________________________________________________

பின் குறிப்பு : சுவாமி பித்தானந்தாவிற்கு மிக்க நன்றி! பணிவான வணக்கங்கள். அவரது அப்பாயின்ட்மென்ட் அனுமதி கோராமல் இங்கு சொன்னதற்கு....


----கீதா




58 கருத்துகள்:

  1. மிக இயல்பான நடையில், அளவான ஆனால் வரிக்கு வரி அர்த்தம் பொதிந்த வார்த்தைகளோடு அருமையான தீபாவளி ஸ்பெஷல் சிறுகதை !

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சாம் தங்களின், பாராட்டிச் சொல்லும் பின்னூட்ட வரிகளுக்கு...

      நீக்கு
  2. கதையை சொல்லி சென்ற விதம் மிக அருமை.. படிக்க இனிமையாக இருந்தது. சிறிய சிறிய பாராக்களாக பிரித்து எழுதியது இன்னும் அருமை. இறுதியில் படம்தான்.......ஹும் என்ன சொல்ல அழகாக இருந்தற்கு பாராட்டவா. அல்லது அதை பார்க்கவிட்டு என்னை ஏங்க விட்டதற்கு திட்டவா ஒன்றும் புரியவில்லை.படத்தை பார்த்ததும் வாயில் எச்சி ஊறுது.....பாவி பசங்க இப்படியா ஆசையை தூண்டி விடுவாங்க.. நல்ல நாளும் கிழமையாக இருப்பதால் திட்டாமல் விடுகிறேன்... சரி சரி நான் சீக்கிரம் முனிவரைப் போல சாபம் விடுவதற்கு முன்பு படத்தில் உள்ள அனைத்து ஸ்விட்டையும் 2 கிலோ வீதம் ஒவ்வொறு ஸ்வீட்டையும் வாங்கி அனுப்புங்கள்..

    இப்படிக்கு கேரளாவின் "திருச்சூர் ஹாட் மிக்சரை" சரக்கு ஏதும் இல்லாமல் சாப்பிட்டு கொண்டே இருக்கும்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ!! தங்களின் பாராட்டிற்கு!

      ஹஹஹ் இத இதத்தான் எதிர்பார்த்தோம்...அது சரி..2 கிலோ வீதம் ஜனகராஜ் ஸ்டைல்ல வேணாம்ல....சரி சரி

      .சகோ சாபம் விட்டுடாதீங்க...இருங்க கொஞ்சம் லேட்...ஆனாலும் எல்லா ஸ்வீட்டும் 2 கிலோ வீதம் பார்சல் பண்ணி அனுப்பறோம் சகோ...இதோ பாருங்க லிங்க்

      https://www.youtube.com/watch?v=AlHKrDllZNo

      பாருங்க உங்களுக்கு பிக்கானேரி ஸ்வீட்ஸ் அனுப்பிருக்கோம்...

      திருச்சூர் ஹாட் மிக்சரை....சரக்கு இல்லாமலயா..ஹஹஹஹ்

      நன்றி சகோ....

      நீக்கு
  3. நல்ல நாளும் அதுவுமா.. நல்ல முடிவோடு ஒரு கதை. அது சரி.. சாமி பித்தானந்தா.. எங்கே இருந்து தேடி கண்டுபிடிச்சிங்க இந்த பெயரை..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ விசு...ஸ்வாமி பித்தானந்தா கண்டுபிடிப்பு அல்ல. அவர் பெயரை நீலக் கலரில் கொடுத்துள்ளேன் அது லிங்க். சென்னைப்பித்தன் சார் தான் அவர். அவர் இந்தக் கேரக்டர் மூலம் பல அருமையான கருத்துகள், கதைகளைச் சொல்லிச் செல்பவர். அவரது பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கும். பல சமயங்களில் தன் கதைக்கு வாசகர்களை முடிவு தரச் சொல்லுவார். 3 , 4 முடிவுகள் கூட தருவார் அவரே. அவர் சொல்லும் ஸ்வாமிதான் இங்கு சொல்லப்பட்டவர். அனுபவப் பதிவர்.

      மிக்க நன்றி விசு..தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
    2. என்னது, சென்னைப் பித்தன் அவர்கள் சாமியார் ஆகிவிட்டாரா? அவரது ஆசிரமம் சென்னையில் எங்கே இருக்கிறது? திருவேர்காட்டிலா, இல்லை மாங்காட்டிலா? எங்களைப் போன்றவர்களுக்கு மெம்பர்ஷிப் உண்டா? இல்லைபதினெட்டு வயதிற்குக் குறைந்த கல்லூரி மாணவியருக்கு மட்டும்தானா? - இராய செல்லப்பா

      நீக்கு
    3. ஹஹ்ஹ சார் நாங்கள் ஏற்கனவே சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். அவர் மிக அழகாகச் சொல்லி வரும் கருத்துகளுக்காக பித்தானந்தா சுவாமிகளிடம் ஒரு ஆஸ்ரமம் ஆரம்பிக்கலாமே என்று....உங்கள் கேள்விகளை அவருக்கே அனுப்பிவிடுகின்றோம் சார்.

      மிக்க நன்றி சார்..

      நீக்கு
  4. அருமையான கதை.உபதேசம் சிறப்பானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும்..

      நீக்கு
  5. பதில்கள்
    1. மிக்க நன்றி பழனி.கந்தசாமி ஐயா தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
  6. அருமையான கதை
    பித்தானந்தாவிற்கும் பகிர்ந்த உங்க்களுக்கும்
    மனமாந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார். தங்களின் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும்...

      நீக்கு
  7. அருமையான நடை..பசியை நானே உணர்ந்தேன்..கதிருக்கு நடக்கும் மனப்போராட்டங்கள் கொடுமை.....பித்தானந்தா என்ன பெயர் இது....ஆனாலும் மனதில் பதிந்து விட்டது...வாழ்த்துகள்...சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, சுவாமி பித்தானந்தா என்று சொல்லி பல அருமையான கருத்துகளைப் பதியும் அருமையான பதிவர். மிக மிக அழகான கருத்துகளைப் போகிற போக்கில் கதைகள் மூலமகாவும் சொல்லிச் செல்பவர். அனுபவம் மிக்க பதிவர். உங்களுக்கும் தெரிந்தவர்தான். வேறுயாருமல்ல நம் சென்னைப் பித்தன் சார் அவர்கள். அவரது தளத்தில் வரும் சுவாமிதான் அது. நாங்கள் ரசிக்கும் சுவாமி அவர்....

      மிக்க நன்றி கீதா தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  8. கதையாகத் தெரியவில்லை..
    நேரில் பார்த்ததைப் போன்றதொரு உணர்வு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று உண்மைதான் ஐயா! நடந்த கதையைத்தான் கொஞ்சம் நம் கதை கலந்துச் சொல்லியிருக்கின்றேன். மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  9. அருமையான நடை....முடிவுரை மட்டும் உங்கள் நடையில்...உண்மைதான் சில நிகழ்வுகள் தானே நடந்து விடுகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு செல்வா. மீண்டும் நன்றி தாங்கள் மீண்டும் கருத்திட்டமைக்கு எனது வேண்டுகோளை ஏற்று.

      நீக்கு
  10. அன்புள்ள சகோதரி,

    ஒரு ஏழை மாணவனின் ‘பசி’ போராட்டம்... அவன் பகுத்தறிவுச் சிந்தனையைக் கைவிடாமல் வாழ்க்கையில் வெற்றி பெறும் பாங்கு... பாக்கியம் அம்மாவும், காத்தவராயன் ஐயாவும் அவனைக் காத்த நடமாடும்... பார்த்த தெய்வங்கள் என்பதுதானே நிதர்சனம்!

    ‘பசி செவியை அடைக்கும் என்பதால் முதலில் வயிற்றிற்கு இட்டுப் பசியைப் போக்கினால்தான் மூளை வேலை செய்து செவிப்புலனை இயங்க வைக்கும்’ என்பது எத்தனை உண்மை.

    அருமையான கதையை அழகாக சொல்லியவிதம் அருமை!

    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவையாரே தங்களின் விரிவான கருத்திற்கு. பல இடங்களிலும் பசி என்பது எத்தனைக் கொடுமையானது என்பதைக் கண்டிருக்கின்றோம் நண்பரே.

      மிக்க நன்றி

      நீக்கு
  11. அருமை...

    சுவாமி பித்தானந்தா என்றவுடன் நம்ம ஐயா தான் ஞாபகம் வந்தார்... முடிவில் அதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஐயாவேதான் டிடி. எவ்வளவு அழகாகக் கதைகள் சொல்லிச் செல்வார்...மிக்க நன்றி டிடி...

      நீக்கு
  12. சிந்தனைப் போராட்டம் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹப்பா ...மையக்கருத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீராம் மிக்க நன்றி.

      நீக்கு
  13. தீபாவளியையொட்டி சுவாமி பித்தானந்தாவைக் கண்டதில் மகிழ்ச்சி. பதிவோ நெகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா அவர்களுக்கு. ,,ம்ம் நீங்கள் கண்டுவிட்டீர்கள் சுவாமி பித்தானந்தாவை. நாங்கள் இன்னும் காணவில்லை அவரை. வருவார் அவர். மெதுவாக. பிசி அல்லவா அவர்...

      மிக்க நன்றி முனைவர் ஐயா...

      நீக்கு
  14. இப்படிப் பட்ட அதிசயங்கள் எல்லாம் கதையில் தான் வருகிறது,இவ்வளவு ஸ்வீட்களும் கண்ணில் மட்டுமே தெரிவதைப் போல :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையல்ல நிஜம் என்பது போல் உண்மையாக நடந்த ஒன்றின் அடிப்படையில் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்ட ஒன்று. ஆனால் மையக்கருத்து உண்மை...

      ஸ்வீட்கள் நேரில் வந்தால் கிடைக்குமே...முயன்றால்...அதைப் போலத்தான் ஜி.

      மிக்க நன்றி ஜி..

      நீக்கு
  15. கதை நன்று நானும் தொடர்ந்து சுவாமி பித்தானந்தாவின் அருளுரைகளை கேட்டுக்கொண்டுதான் வருக்கிறேன் பதிவில் பலருக்கும் பித்தானந்தா யார் என்பது தெரியவில்லை போலயே...
    முடிவில் அல்வா கொடுக்காமல் ஸ்வீட் கொடுத்தமைக்கு நன்றி
    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் மிக்க நன்றி சகோ. ஆமாம் பலருக்கும் தெரியவில்லை. ஆச்சரியம்தான்...மிகவும் பிரபலமானவர் இத்தனைக்கும். அழகாக எழுதுபவர்.

      அல்வா கொடுத்துருக்கலாமோ....ஹஹஹ்

      மிக்க நன்றி சகோ...

      நீக்கு
  16. நல்ல முயற்சி! ஆனால், முன்னுக்குப் பின் சில முரண்கள் இருக்கின்றன.

    அவ்வளவு பட்டினியிலும் அந்த அளவுக்கு வைராக்கியமாக இருந்த கதிரவன் பின்னர், சாமியார் எல்லாரையும் சாப்பிட்டு விட்டு வரச் சொன்னவுடன் மட்டும் எப்படி பாக்கியம் அம்மாவின் அழைப்புக்கு இணங்கிச் சாப்பிடச் சென்றான்?...

    பசி வந்தால் பத்தும் பறந்து போம் என்பது உண்மைதான் என்றாலும், மனிதன் தன் கொள்கைக்கு ஊறு நேராதபடி ஏதேனும் ஒரு சாக்கை மனதுக்குள் கண்டுபிடித்துக் கொள்வானே தவிர, கொள்கையை விட்டுக் கொடுப்பானா?...

    கதிரால், நிகழ்வுக்குக் காரணம் கடவுள் என்று அர்த்தப்படுத்த முடியவில்லை எனும்பொழுது உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும் என்பதற்காக அம்மனை அப்படி நினைக்கத் தொடங்கி விடுவானா என்ன? கடவுள் நம்பிக்கை மனதிலிருந்து கழன்றவுடன் அது தானாகவே பகுத்தறிவுக் கருத்துக்களை நோக்கி நகரத் தொடங்கி விடுகிறது. தனக்கு அன்று கிடைத்த சாப்பாடு கடவுளை நம்பும் சிலரால் வழங்கப்பட்டது என்றுதான் கதிர் போன்றவர்களுக்குத் தோன்றுமே தவிர, கடவுள் கொடுத்தது என ஒருக்காலும் தோன்றாது.

    நீங்கள் கணிப்பது போல் இறைமறுப்பு அவ்வளவு இலகுவானதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ! ஐயோ நான் அந்தக் கடைசி வரியை மாற்ற நினைத்து மாற்றியிருக்கின்றேன் என்று நினைத்துவிட்டேன். இப்போது நீங்கள் சொல்லியதும் சென்று பார்த்த போதுதான் மாற்றாமல் விட்டிருப்பதுத் தெரிந்தது. அதாவது அங்கு, பிரசாதத்தை சமைத்து வழங்கியவருக்கும், அதற்கு நிதியுதவி அளித்தவர்கள் என்று எல்லோரையும் நினைத்து நன்றி என்று....

      பசி என்றால் பத்தும் பறக்கும் ..என்பதை நான் நேரில் கண்டதைக் கொண்டு சில சூழ்நிலைகள், நிகழ்வுகள் மட்டும் மாற்றம் செய்து எழுதியதுதான் சகோ...அதன் பிறகு அவன் இன்னும் வளர்ந்த பிறகு சென்றதும் இல்லை.
      தெரியும் சகோ இறைமறுப்பு என்பது அவ்வளவு இலகுவானதில்லை என்று. நாங்களும் நம்புபவர்கள்தான். அதுவும் பொதுவாக வழிபடுவதைப் போலவும் அல்ல. ஆனால் அதைத் தவிர எந்தவித மூடநம்பிக்கைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாதவர்கள்.

      தங்களின் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி சகோ.

      நீக்கு
    2. மிக்க நன்றி! எப்படியோ, என் கருத்து கதையில் நீங்கள் செய்ய நினைத்த மாற்றத்தை நினைவூட்டியதே! அந்த வரையில் மகிழ்ச்சி! ஆனால், இப்பொழுது இன்னொரு குழப்பம்!

      இந்த முறை என் கருத்துரையின் கடைசி வரியை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிகிறது.

      "தெரியும் சகோ இறைமறுப்பு என்பது அவ்வளவு இலகுவானதில்லை என்று. நாங்களும் நம்புபவர்கள்தான்" என்று நீங்கள் கூறியிருப்பதைப் பார்த்தால் நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று நீங்கள் புரிந்து கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், இல்லை. இறைமறுப்பு என்பது அவ்வளவு இலகுவானதில்லை; அவ்வளவு எளிதில் அது மாறிவிடாது என்றுதான் சொல்ல வந்தேன். :-)

      நீக்கு
    3. அட சகோ அது எங்களைப் பற்றியது மட்டுமே. அதைத் தனி வரியாகக் கொடுத்திருக்க வேண்டும். சேர்ந்து வந்துவிட்டதாலும் "நாங்களும்" என்று சொன்னதாலும்....அந்த ளும் கதை சம்பந்தப்படுத்தி அந்த மாற்ற நினைத்த வரிகளை ஒட்டி வந்ததே. அல்லாமல் உங்களைத் தொடர்புபடுத்தியல்ல சகோ...ஆனால் நான் பலரும் வாசித்தாகி விட்டதால் அதைத்திருத்தவில்லை...பதிவு இட்டதுமே மீண்டும் திருத்தம் செய்யும் வேளையில் செய்துவிட்டேன் என்று நினைத்து விட்டதால்...பின்னர் னீங்கள் சொல்லிய போதுதான் அடடா மாற்றாமல் விட்டுவிட்டோமா என்று பார்த்த போதுதான் தெரிந்தது. அப்போது நிறைய பின்னூட்டங்கள் வந்து பதிலும் உரைத்திருந்தேன் என்று நினைவு. அதனால் விட்டுவிட்டேன்...

      உங்களுக்கு இல்லை என்பது தெரியும் சகோ. உங்களது பல பழைய பதிவுகள் சொல்லியிருக்கின்றன அதில் நாங்கள் பின்னூட்டமும் இட்ட நினைவு. அதாவது தற்போதைய வலைத்தளமாக மாறுவதற்கு முன்.

      மிக்க நன்றி சகோ...

      நீக்கு
    4. எப்படிச்சொல்வது என குழம்பிக்கிடந்தேன். நான் சொல்ல நினைத்ததை சகா சொல்லிவிட்டார். "உடுக்கை இழந்தான் கைபோல ":) ஓகே சகாஸ் இம்முறை நான் என் பேனா முனையை உடைக்கிறேன். மீண்டும் சிந்திப்போம்.:)

      நீக்கு
    5. மிக்க நன்றி சகா! ஆனால், பேனா முனையை ஏன் உடைக்க வேண்டும்? யாருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தீர்கள்?! ;-)

      நீக்கு
  17. உங்களுக்கு கதை எழுத தெரியும் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். அருமை, அட்டகாசம். மேலும் மேலும் படைப்புகளை அளிக்க வாழ்த்துகள்!
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ செந்தில்...தங்களின் கருத்திற்கு. இதற்கு முன்னும் எழுதியுள்ளோம். மிக்க நன்றி தங்களின் வாழ்த்திற்கு...

      நீக்கு
  18. நல்ல கதை. சுவாமி பித்தானந்தா ஆஸ்ரமம் ஆரம்பித்தால் எனக்கும் ஒரு துண்டு போட்டு இடம் பிடிக்கும் எண்ணம் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி! நாங்களும் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஒரு துண்டு போட்டு இடம் பிடிக்க வேண்டும் என்று...

      நீக்கு
  19. கதையின் நடுவில் பித்தானந்தாவை இணைத்த விதம் அருமை;சாமி எப்போதுமே விளம்பரத்தை விரும்பதில்லை;ஆனால் இங்கு தானாகவே ஒரு விளம்பரம் அவருக்கு! உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்..கலியுகத்தில் தெய்வம் நேரில் வராது;மனிதன் என்பவன் தெய்வமாகிறான்,தெய்வம் மானுஷ்ய ரூபேண. என்றும் சொன்னார்;கதையை மிகவும் பாராட்டினார்;

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுவாமி பித்தானந்தாவிற்கு! அவரது பாராட்டு கிடைத்ததற்கும்! தெரியும் சுவாமி விளம்பரப் பிரியர் அல்லர் என்று.

      அவரது கருத்திற்கும் நாங்கள் நன்றி சொன்னதாக பித்தானந்தா ஸ்வாமியிடம் சொல்லிவிடுங்கள் சென்னைப்பித்தன் சார்...

      நீக்கு
  20. எனக்கும் கனவு மாதிரிதான் சார் தெரியுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  21. வணக்கம்

    தலைப்பும் கதையும் மிக அருமையாக உள்ளது... படித்து மகிழ்ந்தேன்...
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா. த.ம 13
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி ரூபன் தம்பி. தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும். தாமதமான தீபாவளி வாழ்த்துகள் எங்களிடமிருந்து

      நீக்கு
  22. அருமையான கதை! பிசிறே இல்லாமல் பிரமாதமாய் முடித்த விதம் சிறப்பு! நான் இன்னும் கொஞ்சம் கத்துக்க வேண்டியிருக்கு என்று தோன்றுகிறது இந்த கதையை படித்தபின்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இது சுரேஷ்! நீங்கள் எவ்வளவு நன்றாக எழுதுகின்றீர்கள். இங்கிருந்தா....

      என்றாலும் மிக்க நன்றி சுரேஷ்! தங்களின் பாராட்டிற்கு!

      நீக்கு
  23. இனிய வில்லங்கத்தாருக்கு வணக்கம்
    தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
    முகவரி -
    http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    12.11.2015
    U.A.E. Time: 03.40 pm

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோ!
    இது உங்களின் முதல் முயற்சியாய் இருந்தால் பாராட்டுகள்!

    நடையும் நடைப்பழக்கம்தான்!

    சிறுகதையொன்றை ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே ஓட்டத்தில் படித்துப்போகச் செய்திருக்கிறீர்கள்.

    வாழ்த்துகள்.

    நம்பிக்கை... அதுதானே எல்லாம்...!!!

    நன்றி.

    பதிலளிநீக்கு