சனி, 14 நவம்பர், 2015

இப்படிக்கு உன் மொய்தீன்

      உண்மை உறங்காது. எவ்வளவு ஆழத்தில் அதைப் புதைத்தாலும் என்றேனும் ஒரு நாள் உயிர்த்தெழும்.  அது போல் இறையுணர்வும் மனித மனதை விட்டு நீங்காத ஒன்றே.  குழந்தை பிறந்த சிலமணி நேரத்திற்குள் தான் கருவாகி உருவான தன் தாயை அடையாளம் காண்பது மட்டுமல்ல எவ்வளவு வளர்ந்து உருமாறினாலும் தனை ஈன்றத் தாயை விட உயரமாய் வளர்ந்த குழந்தைகளால் மறக்கவே முடியாது. 

அதுபோல் தான் நம்முள் உறையும் நாம் உருவாகக் காரணமான இறைவனையும் நாம் மறப்பது கடினம். சிலர், “நான் இறைவனை மறந்துவிட்டேன்”, “நான் இறைவனைப் பற்றி நினைப்பதே இல்லை” என்றெல்லாம் வீம்பளந்தாலும், அது உண்மையாதலால் இறையுணர்வை எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்தாலும் எப்போதாவது உயிர்த்தெழத்தான் செய்யும். 

அது போலவே காதல் எனும் புனிதமான உணர்வும் அழியாத ஒன்றே.  அன்பாக, பாசமாக உருமாறி குழந்தைப் பருவத்திலும், முதுமைப் பருவத்திலும் நம்முள் வாழும் அது இவ்விரு பருவத்தினிடையே விஸ்வரூபமெடுத்து ஒவ்வொருவரையும் முழுமையாக விழுங்கி அவர்களது வாழ்வையே திசை திருப்பிவிடும். அப்படி எங்கும் எப்போதும் எல்லோரிடத்தும் நிலைத்திருக்கும் ஒன்றுதான் காதல். 

அதனால்தான் நாம் கேட்ட கதைகளில் பெரும்பான்மையானவைகள் காதல் கதைகளாக இருந்தன.  நாம் கேட்கும் கதைகளில் பெரும்பான்மையானவைகள் காதல் கதைகளாக இருக்கின்றன. சந்தேகமே வேண்டாம், நாம் மட்டுமல்ல, வரும் தலைமுறையினரும் இனிக் கேட்கப் போகும் கதைகளிலும் பெரும்பான்மையானவைகள் காதல் கதைகளாகவே இருக்கும்.

கற்பனை கலந்த காதல் கதைகளில் வரும் காதலர்களை விட உண்மையாகவே காதலுக்காக வாழ்ந்து காதலுக்காகத் தங்கள் வாழ்வையே தியாகம் செய்தவர்களை நாம் ஒரு போதும் மறப்பதே இல்லை. அதனால்தான் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி போன்றவர்கள் எக்காலத்தும் உண்மையான காதலுக்கு உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். 

இவ்வுலகில் இதன் முன் வாழ்ந்தவர்களிலும், இப்போது வாழ்பவர்களிலும் வெற்றி பெற்ற, வெற்றி பெறப்போகும் காதலர்கள்தான் அதிகம். அதனால்தான், வெற்றி பெற்ற எல்லா காதலர்களையும் மறந்து போகும் நாம் தோல்வியுற்ற மிகக் குறைவான எண்ணிகையுள்ள காதலர்களை மட்டும் மறப்பதே இல்லை.  எப்போதெல்லாம் தோல்வியுற்ற உண்மையானக் காதலர்களைப் பற்றிக் கேள்விப்படுகின்றோமோ அப்போதெல்லாம் நம் மனதை வேதனை சூழ்கின்றது. 

அப்படிப்பட்ட உண்மையானக் காதலர்களும், அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் அத்திப் பூத்தார் போல் எப்பொதாவது திரைப்படமாக்கப்படுவதுண்டு. அப்பொதெல்லாம் அதை எல்லோரும் இருகரம் நீட்டி வரவேற்று அக்காதலர்களையும் மேற்கூறிய பட்டியலில் கடைசியாகச் சேர்த்து அழகு பார்ப்பதுண்டு.  அப்படி அரிய காதலர்களாக அழகு பார்க்க வேண்டிய இரு பெயர்கள் இப்போது மலையாளத் திரைப்பட உலகில் மட்டுமல்ல தென்னகம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றது. 

அவர்களது வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களில் சிலவற்றைத் தொகுத்து எடுக்கப்பட்ட அப்படம் திரையிடப்பட்ட எல்லா திரையரங்குகளிலும் 50 வது நாளை நோக்கி வெற்றி நடை போடுகின்றது.  சில நாட்களுக்கு முன் “ப்ரேமம்” (காதல்) எனும் படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற போது காதல் இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக்கப்படுகின்றதே என்று வேதனைப்பட்டவர்கள் எல்லாம் இப்போது இப்படத்தின் வெற்றி கண்டு உண்மையானக் காதலுக்கு எப்போதும் இது போல் மரியாதை உண்டுதான் என்பதை உணர்ந்து இப்படத்தைப் பார்த்து நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.


 இதற்குக் காரணமான இருவரில் “மொய்தீன்” இப்போது உயிரோடு இல்லை ஆனால், அவரது காதலியான “காஞ்சனமாலா” 70 வது வயதைத் தாண்டினாலும் இப்போதும் ஆரோக்கியத்துடன், “எந்னு நிண்டெ மொய்தீன்” (இப்படிக்கு உன் மொய்தீன்) எனும் இப்படமெடுக்க எல்லாவித்த்திலும் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர், நடிகைகளுக்கும் ஊக்கமளித்து அப்படம் வெளிவர எல்லாவித்த்திலும் உதவியிருக்கிறார். 

முக்கம் பஞ்சாயத்து ப்ரெசிடென்டான உண்ணி மொய்தீன் சாஹிப்பின் மகனான கே பி மொய்தீனும், கொற்றாட்டில் மாதவனின் மகள் காஞ்சனமாலாவும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்.  காஞ்சனாவின் அண்ணன் மொய்தீனுக்கு நெருங்கிய நண்பர். மொய்தீனும் வாப்பாவும் (அப்பா) காஞ்சனாவின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இந்து முஸ்லீம் குடும்பத்தினரான அவர்கள் அன்புடனும் நட்புடனும் வாழ்ந்து வந்தனர்.

 இடையில் எப்போதோ மொய்தீனின் மனதில் காஞ்சனாவின் மேல் காதல் தோன்ற அதைக் காஞ்சனாவுக்கு அவள் படித்தக் கல்லூரிக்கு அனுப்பிக் கொடுத்தப் புத்தகத்தில் வித்தியாசமான முறையில் அடையாளப்படுத்திக் காதலை வெளிப்படுத்த, புத்திசாலியான காஞ்சனா, அனுப்பியது மொய்தீன் என்று அடையாளம் கண்டு மொய்தீனின் காதலை ஏற்க அவர்களிடையே கடிதங்கள் பரிமாறப்படுகின்றன. இடையில் எப்படியோ அனுப்பியக் கடிதங்களை வீட்டார்கள் கண்டு பிடித்து காஞ்சனாவின் கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர். 

காஞ்சனாவும் மொய்தீனும் வீட்டு வேலையாட்கள், பள்ளிச் சிறுவர்கள் போன்றவர்களின் உதவியால் மீண்டும் கடித்தங்களைப் பரிமாறிக் கொள்கின்றார்கள்.  மற்றவர்கள் வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத வித்த்தில் வித்தியாசமான ஒரு மொழியையே கண்டுபிடித்து கடிதம் எழுதித் தங்கள் காதலை வளர்த்துக் கொள்கின்றார்கள். மொய்தீனின் வாப்பா நல்ல உறவிலிருக்கும் இரு குடும்பங்களுக்கிடையே பகை உண்டாகாது இருக்க மகனான மொய்தீனிடம் காஞ்சனாவை மறக்கச் சொல்ல, மறுக்கும் மகனை ஆத்திரத்தில் கத்தியால் குத்தியே விடுகின்றார்.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் மொய்தீனுக்கு, மொய்தீனின் தாய் காஞ்சனாவின் கடிதங்களை மருந்துடன் கொடுத்து வாசிக்க வைத்து உயிர் பிழைகக் வைக்கிறார். கைது செய்யப்பட்ட மொய்தீனின் அப்பாவை ஜாமீனில் எடுப்பதோ காஞ்சனாவின் அப்பா.  திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்படும் காஞ்சனா, பெண் பார்க்க வருபவர்கள் முன்பாக வெள்ளைச் சேலை உடுத்தி வந்து, தான் மொய்தீனின் மனைவி என்று சொல்லி, பெண்பார்க்க வருபவர்க்ளை விரட்டுகிறார். 

மொய்தீனும் காஞ்சனாவும் கடிதம் எழுத முடியாத சூழலில், மொய்தீன் தன் காரில் ஹார்ன் சத்தத்தினால் (ஒரு ஹார்ன் வீட்டிலிருக்கிறேன்.  2 ஹார்ன் கோழிக்கோடு போகிறேன்.இப்படி) தான் எங்கு இருக்கிறேன் எங்கு போகிறேன் என்றெல்லாம் தெரியப்படுத்துகிறார்.  இருவரும் எங்கேனும் ஓடிச் சென்று திருமணம் செய்யாமல் எல்லோரும் சம்மதம் தரும் வரை காத்திருப்போம் என முடிவு செய்கின்றனர். இரு மதத்தினருக்கும் இடையே விரோதம் வளர தாங்கள் காரணமாகக் கூடாது எனவும் முடிவு செய்கின்றனர். 

இடையே தன்னைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சுமத்துப்பட்டுள்ள உண்ணி மொய்தீன், தன்னைக் கத்தியால் குத்தவே இல்லை.  தான் தான் ஆற்றருகே நின்ற வெட்டப்பட்ட ஒரு செடியில் விழுந்தேன் என்றும், வழுக்கியதால் பலமுறை அந்தக் கூர்மையானக் கம்பில் விழ வேண்டியதானது என்றும் கூறி மொய்தீன் தன் தந்தையைக் காப்பாற்றுகிறார்.  மனம் மாறிய உண்ணி மொய்தீன் எதிர்பாராமல் திடீரென்று மரணமடைந்ததால் அவர்களது திருமணம் மீண்டும் நீண்டு போகிறது.

Image result for ennu ninte moideenImage result for ennu ninte moideen

 காஞ்சனா தனக்குத் திருமணம் வேண்டாம் என்பதால் அவளது தங்கைகளுக்குத் திருமணம் நடக்கிறது.  40 தை எட்டிய மொய்தீனும் காஞ்சனாவும் இனிமேலாவது ஒன்றாய் வாழ முடிவு செய்து முக்கத்தை விட்டு ஓர் இரவு  ஓடிவிடத் தீர்மானிக்கிறார்கள்.  எதிர்பாராமல் அன்று இரவு திடீரென மாரடைப்பால் இறந்த காஞ்சனாவின் அண்ணனின் உடல் ஆம்புலன்சில் கொண்டுவரப்படுகிறது.  அப்படி அவர்களது கனவு அன்றும் நிறைவேறாமல் போகிறது.  இறுதியாக இருவரும் யாருக்கும் தெரியாமல் பாஸ்போர்ட் எடுத்து வளைகுடா நாட்டிற்குச் சென்று வாழ முடிவு செய்கிறார்கள். 

ஒரு நண்பனின் உதவியால் பாஸ்போர்ட் வாங்கி வரும் வழியில், படகில் ஆற்றைக் கடக்கும் போது படகில் இருந்த ஓரிருவர் அசைய, படகு கவிழ்கிறது. மொய்தீன் ஆற்றில் நீந்தி ஏறக்குறைய 10 பேரைக் காப்பாற்றியபின் மீண்டும் சிலரைக் காப்பாற்ற தண்ணீருக்குள் மூழ்க எதிர்பாராமல் ஒரு சுழலில் சிக்கி உயிரிழக்கிறார்.  கதறி அழும் காஞ்சனாவின் கைபிடித்து மொய்தீனின் தாய், “நீ என் மருமகள். என் மொய்தீனின் மனைவி. வா!” என்று மொய்தீனின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதுடன் படம் முடிகின்றது.  (உண்மை வாழ்க்கையில் அத்தாயின் மரணத்திற்குப் பிறகு காஞ்சனா வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.  மொய்தீனின் பெயரில் நிறுவப்பட்ட ஒரு க்ளப்பில் (5 சென்ட் இடத்தில்) இப்போதும் தனியே மொய்தீனின் நினைவில் வாழ்கிறார். நடிகர் திலீப் அவ்விடத்தில் மொய்தீனின் நினைவாக ஒரு வீடு கட்ட முடிவு செய்திருக்கிறார்.)

படத்தில் காண்பிக்கப்பட்டக் காட்சிகளெல்லாம் மொய்தீன் மற்றும் காஞ்சனாவின் வாழ்வில் நடந்தைவைதான்.  காண்பிக்கப்படாத எத்தனையோ சம்பவங்களும் நடந்திருக்கின்றன.  காஞ்சனா மற்றும் மொய்தீனின் வாழ்வை படமாக்க இயக்குநரான ஆர் எஸ் விமல் தீர்மானித்த பின் காஞ்சனாவைச் சந்தித்த போது, அவர் மொய்தீனாக நடிக்க ப்ரித்விராஜ் தான் ஏற்றவர் என்று கூறியிருக்கின்றார். காஞ்சனா மாலாவாக நடித்தவர் பார்வதி மேனன். இருவரும் மொய்தீன் மற்றும் காஞ்சனமாலாவாக நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள் படத்தில்.


உண்ணி மொய்தீன் சாகிபாக வரும் சாய்குமார், மொய்தினின் அம்மாவாக வரும் லெனா இவர்களின் நடிப்பும் அருமை.  ஜோமோன் டி ஜானின் ஒளிப்பதிவு அருமை. நெஞ்சைத் தொடும் பாடல்கள்.  அழியாதக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதும் வெற்றியே என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தப்படம். 

படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

48 கருத்துகள்:

  1. ஆமாம் துளசி சார்....
    என்னை மிகவும் கவர்ந்த படம்.
    அழகாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்...
    மழையும் கதையும் சேர்ந்தே பயணிப்பது மனதோடு ஓட்டிக்கொள்கிறது...
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் குமார் ரொம்ப அருமையா எடுத்துருக்காங்க நல்லதொரு படம் பெரும்பான்மையான கேரளப்படங்களில் மழையும் கூடவே பயணிக்குமே!

      மிக்க நன்றி குமார். உங்கள் விமர்சனமும் பார்தோமே அருமை..

      நீக்கு
  2. அருமையான விமர்சனம்
    வாய்ப்பு கிடைக்கும்பொழுது படம் பார்க்க மனம் துடிக்கிறது
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்கு. பாருங்கள் நல்ல படம்..

      நீக்கு
  3. ஏற்கனவே பரிவை குமார் அண்ணா இந்த படத்தை பற்றி அருமையான விமர்சனம் ஒன்றை எழுதி இருக்கிறார். இது உங்கள் பாணியில் அழகாக இருக்கிறது சகாஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ! அதையும் வாசித்தோம். மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  4. sending my comments thro email, as difficulty in tamil software
    pl see your email.
    subbu thatha.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா உங்கள் பின்னூட்டத்தையும் காப்பி பேஸ்ட் செய்து வெளியிட்டுவிட்டோம். மிக்க நன்றி !

      நீக்கு
  5. sury Siva ----கடவுளைக் கண்டேன் எனும் தலைப்பிலே வரும் தொடரோ என்று தான் நினைத்து வந்தேன்.

    கடவுள் யார் அல்லது எது என்று மனிதம் புரிந்துகொள்ளாது தமக்குள் போடும் வேலிகளினால் நிகழும் விபரீதங்களைச் சித்தரிக்கும் கதை இது என பின்பு தான் தெரிந்தது.

    சமூகம் இட்ட சதுரத்துக்குள் தம்மைப் பிணைத்துக்கொண்ட பலர் துன்பக் கடலில் காலமெல்லாம் மூழ்கித் திணறுகிறார்கள். அதே சமயம் தனது வாழ்க்கையின் மகிழ்ச்சி தனது கையிலே என உறுதி பூணும் பலர் வாழ்ந்து காட்டி மற்றவருக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்கள்.

    ஒன்று மட்டும் சொல்லவேண்டும்.
    கடவுள் என்ற ஒரு கன்செப்ட் (தமிழில் அதைக் கருத்து)
    அந்தக் கடவுளை அடையும் வழியில் தன் வழி தான் சிறந்தது என்று மட்டும் அல்லாது, மற்றதெல்லாம் தவறு என நினைக்கும் சிந்தனை
    மனித குலத்திற்கு இல்லை என்று சொன்னால்,

    இப்படிப்பட்ட கதைகள், வாழ்க்கை நிகழ்வுகள் ஏற்படாது.

    அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால்,
    கடவுள் , அவர் காட்டியதாக மனிதம் நினைக்கும் மதம் எல்லாமே
    மனித இனம் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள
    அந்தக் கடவுளே இட்ட மாய வலையோ என்று தான்
    நினைக்கத்தோன்றுகிறது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தாத்தா தங்களின் விரிவான அழகான பின்னூட்டத்திற்கு.

      நீக்கு
  6. எத்தனை தடங்கல்கள் வந்தாலும் உண்மை காதல் மாறுவதில்லை...

    பார்க்க தூண்டும் சிறப்பான விமர்சனம்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி...எத்தனைத் தடங்கல்கள் வந்தாலும் உண்மையான காதல் மாறாதுதான். ஆனால் உண்மையான காதல்கள் வாழ்க்கையில் நிறைவேறுமா என்பதுதான்....

      நீக்கு
    2. மிக்க நன்றி டிடி...எத்தனைத் தடங்கல்கள் வந்தாலும் உண்மையான காதல் மாறாதுதான். ஆனால் உண்மையான காதல்கள் வாழ்க்கையில் நிறைவேறுமா என்பதுதான்....

      நீக்கு
  7. கேள்விப் பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். உணர்ச்சிகரமான காவியம். இப்படியும் காதல்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் நிகழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்....ஆம் உண்மைதான் இருக்கின்றதுதான். நமக்குத் தெரிந்து இது வெளியில். வெளியில் தெரியாமல் இருக்கலாம் இல்லையா..உலகம் பெரிதாயிற்றே....

      நீக்கு
  8. வணக்கம்
    அண்ணா

    விமர்சனத்தை படித்த போது படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ண உணர்வு.. எழுகிறது விமர்சனத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  9. அருமையான விமர்சனம் உண்மைகள் என்றுமே உறங்குதில்லை
    மலையாளப் படங்களில் இடம் பெரும் மழை, மலைக்காட்சிகள் எப்பொழுதுமே கவி பாடும் அது அவர்களின் தனி சிறப்பு படம் பார்க்க முயல்வேன் நன்றி
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! கில்லர்ஜி! நீங்கள் சொல்லுவது சரிதான்...மழை, மலைக் காட்சிகள் என்று படங்கள் எல்லாமே மிக மிக அழகாக இருக்கும்...

      நீக்கு
  10. இன்னொரு 'காதலுக்கு மரியாதை 'படம் போல் இருக்கிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...காதலுக்கு மரியாதைதான்...அதைவிடவும் சிறப்பான கதை....

      நீக்கு
  11. காதல் என்ற உணர்வு ஒன்று போதும் மனித வாழ்க்கை உயிர்ப்புடன் இருப்பதற்கு... !!

    உங்களின் எழுத்து படத்தின் மீதான ஆவலை அதிகப் படுத்துகிறது...

    நன்றி வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ! கௌசல்யா. தங்களது தளத்தையும் தொடர்கின்றோம். நீங்களும் நன்றாக எழுதுகின்றீர்கள்

      நீக்கு
  12. இலக்கியத் தரத்தோடு கூடியதான பின்புலத்தைக் கொண்டு அமைந்துள்ள அருமையான படம், விமர்சனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  13. வணக்கம் .

    படம் பற்றிய ஒற்றை வரி இதழொன்றில் பார்த்தேன்.

    பார்க்க இருக்கிறேன். ஆகையால் இந்த விமர்சனத்தைப் பார்க்கவில்லை.

    பார்த்ததும் வருகிறேன் சகோ.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ! தங்களின் வருகைக்கு. பார்த்துவிட்டு வாருங்கள். நல்ல படம்

      நீக்கு
  14. ஆக, கடவுள் நல்லவர்களை வாழவே விட மாட்டார் என்பதை அடுக்கடுக்கான சான்றுகளோடு சொல்லியிருக்கிறார்கள், அப்படித்தானே? ;-))

    நல்ல கதை! காதலைக் கொச்சைப்படுத்தும் திரைப்படங்கள், காதலித்தால் கொல்வோம் எனும் சமூகம், இவற்றுக்கெல்லாம் பின்னிருந்து அவற்றை இயக்கும் அதிகார - பணக்கார - ஆட்சி வர்க்கம் எனச் சீழ்பிடித்த இந்தச் சமுதாயத்தில் நல்ல மையலை மையமாகக் கொண்ட இப்படிப்பட்ட படங்கள் மூல்மதான் நாம் அடுத்த தலைமுறைக்கு நம் பண்பாட்டைக் கொண்டு செல்ல முடியும்! நல்ல விமர்சனம்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் இபுஞா தோழரே! இப்படியும் காதலுக்காக வாழ்பவர்கள் இருக்கின்றார்கள்! உண்மையான வாழ்விலும். இவர்களுக்கும் தடைகள் வருகின்றன. அதை வெல்லவும் முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இறுதியில் மொய்தீன் இறந்தே போகின்றார். கதையை மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கின்றார்கல் என்பதுதான் அதன் வெற்றியே.

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  15. நல்லதொரு படம் குமாருடைய தளத்திலும் இப்படம் பற்றி படித்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  16. சினிமாவில் காட்டும்.. சாதி மத..எதிர்ப்பு காதலை ஏற்ப்பவர்கள்..நிஜத்தில் வில்லனாகத்தான் இருக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  17. உங்கள் விமர்சனம் படித்தே என் மனதில் இடம்பிடித்துவிட்டார்கள் மொய்தீனும் காஞ்சனமாலாவும். படம் பார்க்கப் போகிறேன். பகிர்விற்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ க்ரேஸ் ..பாருங்கள் மிகவும் ரசிப்பீர்கள்...

      நீக்கு
  18. அன்புள்ள அய்யா,

    உண்மைக் காதல் என்றும் வாழும். அருமையா(ன)கப் படத்தினைக் கண்முன் காட்டினீர்கள்.

    நன்றி.
    த.ம.13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவயாரே! தங்களின் க்ருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  19. சகாஸ்! ஒரு தொடர்பதிவில் உங்களை இணைத்திருக்கிறேன்! தொடருங்கள் ப்ளீஸ் http://makizhnirai.blogspot.com/2015/11/my-wish-list.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ச்கோ மைதிலி..போட்டாச்சு...தொடர்ந்துவிட்டோம்...

      நீக்கு
  20. சிறந்த திரைக் கண்ணோட்டம்
    சிந்திக்கச் சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே ஜீவலிங்கம்யாழ்பாவாணன் தங்கள் வருகைக்கு

      நீக்கு
  21. அருமையானதோர் படம் என்று நண்பர் குமார் அவர்களின் தளத்திலும் படித்தேன். இப்போது உங்கள் பக்கத்திலும். இணையத்தில் இருந்தால் பார்க்க வேண்டும். தேடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி மிக மிக அருமையான படம். இணையத்தில் கிடைக்குமா ..தெரியவில்லை. கேரளத்துப் படங்கள் அவ்வளவு எளிதாக இணையத்தில் கிடைப்பதில்லை என்றுச் சொல்லப்படுவதுண்டு..

      மிக்க நன்றி ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  22. மிக அருமையான விமர்சனம் ..இறுதியில் ஒன்று சேரவே முடியவில்லையா அந்த அன்புள்ளங்கள் பாவம் :(
    எனக்கு தெரிந்த ஒரு ஆன்ட்டி அவர் விரும்பியவர் ஹிந்து என்ற காரணத்தால் குடும்பமே எதிர்த்தது வேடிக்கை பாருங்கள் ..அது 1965 /66 களில் ..பின்னர் அவர் உறவினர் பலர்வேற்று மதத்தினரை காதலித்து மணம் புரிந்த போதும் இந்த மதம் பிரச்சினை வரவேயில்லை ..ஆனால் அந்த ஆன்ட்டி காலம் முழுதும் திருமணம் செய்யவில்லை ..அவர் விரும்பியவரும் தான் :( சென்ற வருடம் ஆண்ட்டி இறந்து விட்டார் ..இதில் இருவருமே ஆசிரியர்கள் ..பெரியவங்க அனுமதிக்கு காத்திருந்து கிடைக்காமலேயே போனது அவங்களுக்கு

    பதிலளிநீக்கு