நம் நண்பர் கில்லர்ஜி, ஏதோ ஒரு படத்தில் வடிவேலு எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஒரு மேட்டின் மீது
ஏறிக் கடவுளைக் காட்டுவாரே அது போன்று நம்மை எல்லோரையும் கடவுளைக் காட்டுகின்றேன்
என்று சொல்லி அழைத்தார். காட்ட வேண்டும் என்றால், நம் ஆசைகள், கனவுகளையும் சொல்ல
வேண்டுமாம். நாம் சொல்லி என்ன பயன்? கமலின் வசனம் இங்கு......
ஆசையைத் துற. துன்பமில்லை வாழ்வில் என்று
அழகாகச் சொல்லிய புத்தமகான் தோன்றிய இந்தியநாட்டில் பிறந்த நாம் ஆசைகளைத் துறக்க
முடிகின்றதா? ஹும். ஒன்றா, ரெண்டா
ஆசைகள்னு ஆயிரக் கணக்குல இருக்கும் போது எதைச் சொல்ல? கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம்
அவர்கள் சொன்னாலும் சொன்னார் நமது சிந்தையில் வண்ண வண்ணமாகக் கனவுகள் கலந்து கட்டி
அடிக்கின்றனவே. எதைப் பற்றி?
ஆசைகளும், கனவுகளும் நமது நாட்டைப் பற்றித்தான்......எல்லோருக்குமே இருக்கும் ஆசைகள்,
கனவுகள்தானே நம் நாட்டைப் பற்றி? இதில் நாம்
என்ன தனியாகச்
சொல்ல இருக்கின்றது? என்று நாங்கள் இருவரும், அவரவர் இடத்தில் யோசிக்கையில்.....யோசிக்கை.....யோசிக்......
திடீரென்று ஒரு கான்ஃப்ரென்ஸ் கால்
அதுவும் ஸ்கைப்பில். ஹலோ! வாட்
ஹேப்பன்ட்? காஃப்ரன்ஸ் கால் டைம் சொல்லியும்
யாரையும் காணல? அமெரிக்கா
ஒபாமா! ஹியர்..
அட! ஹை மிஸ்டர் ஒபாமா! என்ன
ஆச்சரியம்! நீங்க எப்படி எங்க ஸ்கைப்புல? எங்களுக்கு
உங்களைத் தெரியும்.. உங்களுக்கு எங்களைத் தெரியாதே...ஒண்ணுமே புரியலை...
அட போங்கப்பா எனக்குத்தான் ஒண்ணுமே
புரியல...
என்ன மிஸ்டர் ஒபமா!.... என்னது? ஒண்ணும் புரியல? வல்லரசு அதிபர் நீங்க.
வல்லரசு? யு மீன் தட் என்கௌண்டர் ரெட் ஐ மேன். உங்க ஊரு...தேட் மேன், எனக்குப்
போட்டியா, உலகத்துல இருக்கற தீவிரவாதிங்களை எல்லாம் போட்டுத் தள்ளிடறாரு. ஓ மை காட். எனக்குப் பிடிக்கலை..
ஹ்ஹ்ஹ் ப்பூ அப்ப நீங்களும்
நடிகர்தானா!!...
கீதா சும்மாரு... ஐயோ அது எங்க ஊரு கேப்டன் நடிச்ச
ஒரு படமுங்க. வல்லரசுனு.....என்கௌண்டர் இல்லை அது “சின்னக்கவுண்டர்”. நாங்க
வல்லரசுனு சொன்னது உங்க நாட்ட..
இப்ப உங்க நாடுதான் வல்லரசு!
அது தெரியுமே! ஆமாம் எங்க நாடு “வல்”லரசுதான்... என்னவோ பெரிய விஷயம் மாதிரி... இது
டூ லேட்.
தில்லைஅகத்தார்:
ஹ்ஹ்ஹ் அதெல்லாம் முன்னாடி...இப்போ இப்போ...
ஒபாமா: ஹேய் உங்க ஊரு ஊழலில்லாத
நாடுனு டாப் 1ஸ்ட் ராங்க்ல இருக்கு. எப்படி
இது? உங்க ஜி..ஏதோ தில்லுமுல்லு
பண்ணியிருக்காரு..
எங்க ஊர்ல நிறைய “ஜி”க்கள்
இருக்காங்க. தில்லுமுல்லு நிறையவே. ஒபாமா நீங்க எந்த ஜி ய சொல்லுறீங்க?
உங்க ப்ரதமர் ஜி தான்...
ரஷ்யா: யெஸ் யெஸ்! ஐ ஸ்மெல் இட்...
இடையில் ஸ்விஸ் பேங்க் சேர்மேன்
தாமஸ் ஜோர்டான் வருகிறார். ஹலோ...என்னப்பா
நடக்குது இங்க? மிஸ்டர் ஒபாமா உங்களுக்குத் தெரியுமா?
நோ அக்கவுன்ட் ஹோல்டர்ஸ் ஃப்ரம் இண்டியா. எங்க பேங்க் திவால் ஆகிடுச்சு.
ஓ மைகாட்! எல்லாத்துக்கும் இந்த ஜி
தான் காரணமாம். ஐ சஸ்பெக்ட்
சம்திங்க்..ஃபிஷ்ஷி....
ரஷ்யா, ஸ்விஸ் பேங்க் - எங்களுக்கும்
அதே சந்தேகம்தான்.
இந்தியாவின் ப்ரதமர் ஜி! ரொம்ப மோசம். எங்க நிலைமையைப் பாருங்க.
கானடா, ஐரோப்பிய நாடுகள் : எல்லாரும் இங்க வந்துட்டீங்களா. அதை ஏன் கேக்கறீங்க நாங்கதான்
விவசாயத்துல கொடிகட்டிப் பறக்கறதா நினைச்சோம். இப்ப என்னடானா இந்தியா டாப்ல. அதுவும் ஆர்கானிக்காம். நமக்கே
முடியாதப்ப...எப்படி இந்தியா?
அமெரிக்கா: எல்லாம் அந்த ஜி தான். நோ வாட்டர் ப்ராப்ளமாம். எல்லாரும் குளிக்கறாங்களாம்.!
குடிக்கறாங்களாம்...நல்லா சாப்பிடறாங்களாம்
தில்லைஅகத்தார். டேய்! என்னடா இவங்க என்னென்னமோ
பேசுறாங்க...ஜி ஜி நு அதுவும் நம்ம நாட்டைப் பற்றி ரொம்ப நல்ல விஷயமா ....ஒண்ணுமே
புரியலையே...
இருடா துளசி. “ஜி” ந்னு சொல்லறது நம்ம ப்ரதமர்தான்....இரு ரொம்ப
ஸ்வாரஸ்யமா போய்க்கிட்டிருக்கு வெயிட்.....
அப்படி வாருங்கள் எங்கள் நாட்டைப் பற்றி
எல்லோரும் கேவலமாகப் பேசிக்கொண்டிருந்தீர்கள் இல்லையா......நாங்க ரொம்ப சந்தோஷமாக
இருக்கின்றோம்......ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்குக் கவலை இல்ல... அதான்
செல்ஃபியா எடுத்துத் தள்ளுறோம்..... பேசுங்க பேசுங்க
வேறு ஒரு குரல் வருகின்றது.......யாருப்பா
இது இடையில...
ஹூ...
நாங்களும் அதைத்தான் கேக்கறோம் “ஹூ” நு
யெஸ் ஹூ...
ஒபாமா : ஹேய் அது ஹூ..WHO, ஹலோ... மார்க்ரெட் சான்
அப்படி வெவரமா சொன்னாத்தான்
எங்களுக்குப் புரியும்..
ஹூ: ஹேய் தி இஸ் ஹைலி
ரிடிக்குலஸ்...அமெரிக்காதான் ரேபிஸ் ஒழிச்ச நாடுன்னு பார்த்தா இப்ப இந்தியா
டாப்ல...எந்த வியாதியும் இல்லை. பப்ளிக்
ஹெல்த் ல டாப்ல இருக்குது. நோ அனிமல்ஸ் ஆன் த ரோட். யாரும் வெளில கக்கா, ஒன் லாம் போறது இல்ல. ரோட்ல
தண்ணி தேங்கறதே இல்லை...ஸோ ஹாஸ்பிட்டல்ஸ் எல்லாம் காலியா இர்க்குது. உங்க யாராலயும் இனி அங்க
மெடிசின்ஸ் டம்ப் பண்ண முடியாது. நோட் த
பாயின்ட். அங்க இனி மெடிக்கல் காலேஜஸ், அதர் காலேஜஸ், ஸ்கூல்ஸ் பணம் அள்ள முடியாது......கவர்ன்மென்ட்
எஜுகேஷன் டாப். எல்லாரும்
படிச்சுட்டாங்களாம். படிக்கறாங்களாம்..அவார்னெஸ்..இப்படி
எல்லாமே
எல்லா நாடுகளும் ஹா என்று வாயைப்
பிளந்தபடி...
.... Kon'nichiwa (ஹலோ)
ஹேய்
இது யாருடா கொய் கொய்யினு
ஒபாமா
: ஹலோ Shinzō Abe
(ஜப்பான் பிஎம்) ஹௌ ஆர் யு
ஜப்பான் : குட். பட் நாட் குட். எங்க ஊர்லதான் சுனாமி,
நிலநடுக்கம் எல்லாம் வருதே. பாதிப்பைத் தடுக்க எவ்வளவு முயற்சி
எடுத்தும், பாதிப்பு கடுமையாக இருந்து கொண்டே இருக்கு. ஆனால்,
இந்தியாவுல இப்ப எந்தப் பாதிப்புமே இல்லையாமே. பில்டிங்க் எல்லாம் ஸ்ட்ராங்காமே.....எர்த்க்வேக்,
சுனாமி சைரன் சிஸ்டம் இருக்காம்...அதான் எப்படினு தெரிஞ்சுக்கிட்டு போகலாம் என்று
நினைக்கின்றேன். ஹௌ இஸ் இட் பாசிபிள்..
ஒபாமா : யா நானும் அதையேதான்
யோசித்துக் கொண்டிருக்கேன். அங்க நாச்சுரல் கலாமைட்டி மட்டுமில்ல தீவிரவாதமும்
எதுவும் இல்லையாமே. எங்க ட்வின் டவர் இடிஞ்சப்ப எவ்வளவு லாஸ்.....
திஅ: ஹாஹ்ஹா வாங்க ஜப்பான்.
பில்டிங்கும் ஸ்ட்ராங்கு...பேஸ்மென்டும் ஸ்ட்ராங்குதான்...எங்க
ஊர்ல....நாங்கல்லாம் உங்கள மாதிரி ஆயுதம் எல்லாம் தூக்கமாட்டோம். அன்பே கடவுள் தத்துவம்..
நியூசிலாந்து (PM- John Key), ஆஸ்திரேலியாவும் (PM- Tony Abbott )இடையில் வந்து விடுகின்றன(ர்).
வெல்கம் கன்ட்ரிஸ்....யு க்னோ அங்க
இப்போதெல்லாம் மதச் சடங்குகள் இல்லையாமே. மதச்சண்டை
சாதி சண்டை இல்லையாம்... நோ ஆக்சிடன்ட்ஸ்...ரோட் ரூல்ஸ் எல்லாமே நேர்மையா நல்லா
இயங்குதாமே. ஃபாரஸ்ட் எல்லாம் பசுமையா இருக்காம். எங்க நாடுகள் தான் ஸ்டேபில்
எக்கானமினு நினைச்சா இந்தியாதான் இப்ப டாப்பாம்..
சைனா என்ட்ரி Xi Jinping : Nín hǎo (ஹலோ)
என்னடா
இது ஜின் ஜின் ந்னு யாருடா இது..
சைனா
ப்ரெசிடென்ட் நான்... எங்க கூட மக்கள் தொகைல போட்டியியா இருந்த இந்தியா இப்போ
ரொம்ப கன்ட்ரோல் பண்ணிருச்சு...எப்படினு தெரில....அவங்க ஜி யோட ஒரு ஆர்கனைஸேஷன்
நிறைய குழந்தைங்க பெத்துக்கணும்னு சொல்லிச்சுனு கேள்விப்பட்டேன்..ஆனா இப்ப
மற்ற நாடுகள்: இல்லை... இதுக்கும்
ஜிதான் காரணம்.
யுகே: ஹாய் கைஸ்....வெல்கம். யா இந்தியா இப்ப வல்லரசாகிடுச்சு. எல்லாத்துலயும் டாப்பாம்...அப்துல்
கலாம் கனவு கண்ட இந்தியா. பாவம் அவர் பார்க்க கொடுத்து வைக்கலை. ஹும் ஒரு காலத்துல நாங்க ஆண்டு பிச்சை
போட்ட பில்டிங்க்ஸ், ரோட்வேய்ஸ், ரெயில்வேஸ்...டேம்ஸ்..
இப்ப என்னடானா எங்களையே மிஞ்சி....
மற்ற நாடுகள்: தங்களுக்குள் ..ஹேய்
ராணி..நம்மளயும் ஆண்டுச்சுதானே. அடக்கி வாசிங்க...
ஒபாமா: சரி என்ன பண்ணலாம்
சொல்லுங்க கைஸ். நம்ம பாடு ரொம்ப திண்டாட்டம். மக்கள் எல்லாம் கொடி பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க இந்தியா மாதிரி ஆகணும்னு...அதுவும்
செல்ஃப் சஃபிசியன்ட் நாடு ஆகிடுச்சு வேற.....அவங்க இறக்குமதி எதுவுமே பண்றது
இல்ல...எல்லாம் ஏற்றுமதிதான்...
யுகே :
யு க்னோ இப்ப இந்தியாவுல அனிமல்ஸ் கொல்லறது இல்ல. குறிப்பா மாடு. ஸோ நம்ம மக்கள் எல்லாம் அங்க டூரிசம் போனா பீஃப் கிடையாது. சிக்கன் கிடையாது. இதச் சொல்லணும்.. நீங்க எல்லாம் வரிஞ்சு கட்டிக்கிட்டு
சுற்றுலா அங்க போனா இதெல்லாம் கிடைக்காது. அப்படினு
கதை பரப்பணும்...
மத்த நாடுகள் : ஓ! இந்தியா லார்ட் புத்தா கன்ட்ரி?!
நமக்கு எப்படி பீஃப் இல்லாம....ம்ம் அதான் தாய்லாந்து புலம்பிச்சு.
ஸ்டார் டர்டில்ஸ் இப்ப இந்தியாவுலருந்து வரது இல்லையாம்...
யுகே: எப்படி நம்ம ஐடியா
இந்தியாவைக் கவுக்க? வெளிநாட்டவர் சுற்றுலானால
இந்தியாவுக்கு வரும் பணம் எல்லாம் டவுன். நாம அவங்க சாமான் எதுவும் வாங்கக் கூடாது...நாங்க ஆண்ட போது அப்படித்தானே
அவங்க பண்ணினாங்க....பழிக்குப் பழி....இதோ வர்ரோம் ஜி...சிங்கம் ஒன்று
புறப்பட்டுதே...அப்படினு..
திஅ : ஐயையோ இந்தியாவ
கவுக்க போறாங்களாம்....கவுக்க போறாங்களாம்..
மற்ற நாடுகள் : நோ தில்லைஅகத்தார். எங்களுக்கு ஒண்ணே ஒண்ணுதான் தெரியணும். ....நீங்க பிரதமர்ஜியோட
நண்பர்கள்தானே... ஏதோ மந்திரக் கோலாமே! உங்க பிரதமர்கிட்ட..அத மட்டும் என்னனு கேட்டுச் சொல்லுங்க..
திஅ: என்னது நாங்க பிரதமர் ஜி யோட நண்பர்களா?
இதென்ன புதுக்கதையா இருக்கு. உங்கள் பொறாமை எல்லை மீறிவிட்டது. நாங்க சாதாரணமானவங்க....மோதிஜி எல்லாம்
நெருங்க முடியாது.....ஒருவேளை அலாவுதீனும் அற்புத விளக்கு படம் பாத்தீங்களோ...
மோதிஜி? ஹூஸ் தேட்? உங்க பிரதமர் இப்ப, எங்களை எல்லாம் கில் பண்ணுற கில்லர்ஜி. அவரு உங்க
நண்பர்தானே...
என்னது...கில்லர்ஜியா...பிரதமரா....என்னடா
கதை இது...நாம நல்லாத்தானே இருந்தோம்...(அவரு உங்கள மட்டுமா கில் பண்ணறாரு பாருங்க
இப்ப எங்களையும்தான்...)
திடீரென்று
ஸ்கைப் பேஜ் அதிருகின்றது...... “நான்
கடவுள்”
டேய்
இங்கப் பாருடா ஸ்கைப் படம் எல்லாம் போடுது...
தில்லைஅகத்தாரே
படமில்லை இது. நானேதான். முதல்ல எனது
மந்திரக் கோலை அந்தக் கில்லர்ஜியிடமிருந்து வாங்கித்தாருங்கள். என் மவுசே
போய்விட்டது.
மவுஸ்
போனா தேடறது கஷ்டம்தான். எங்கேயாவது ஒளிஞ்சுருக்கும்...இவ்வளவு பெரிய நாட்டுல எங்கனு தேடறது?
ஐயோ!
பவரே போயிருச்சுனு சொல்லறேன். என் கோலை வாங்கித்தாங்கப்பா...
பவர்
போயிருச்சா. உங்கூர்ல? ஹை இங்கல்லாம் பவர் போகவே போகாதே... பேசாம இங்க வந்து செட்டில் ஆகிடுங்க
நீங்க.
என்ன
விளையாடுகின்றீர்களா....அங்கே நான் வந்தால் அவ்வளவுதான் எல்லோரும் சண்டைய ஆரம்பித்துவிடுவார்கள்.
கில்லர்ஜி ஏகபட்டக் கனவுகளுடன் என்னிடம் வந்தார். என்னால் இந்தியாவை அப்படி
எல்லாம் வல்லரசாக உருவாக்க முடியாது என்று சொன்னதும், என் மந்திரக் கோலை நைசாக எடுத்துக் கொண்டுப் போய்விட்டார். எனக்கு என் மந்திரக்கோலை மட்டும்
வாங்கிக் கொடுத்துவிடுங்கள்.
இருங்க
இருங்க லாஜிக் உதைக்குதே. நீங்க இங்க வந்தா சண்டை ஆரம்பிக்கும்றீங்க. இப்போ வல்லரசா இருக்கறதுக்கு மந்திரக் கோல்...னீங்க
அத எடுத்துட்டுப் போனீங்கனா அப்பவும் இங்க சண்டைதானே...வரும்......இப்ப எல்லாரும்
சந்தோஷமா இருக்கறதுனால உங்களுக்கு மக்கள் அப்ளிகேஷன் போடமாட்டாங்க...உங்களுக்கும்
வேலையே இல்லையே அப்புறம் என்ன... நீங்க இங்க வந்துட்டீங்கனா மந்திரக் கோலும் உங்க
கையில...நீங்களும் சுகமாக இருக்கலாமே...
என்
லோகத்திலிருந்து பூலோகமா....யோசிக்கணும்....ம்ம்ம் என் பவர் போகாதுல்ல....
அப்படித்தான்
நினைக்கறோம்....
மற்ற
நாடுகள்: ஹேய் நம்ம உஷாரா இருக்கணும். அந்தக் கோல் கைமாறும் போது அதை நாம யாராவது பறிச்சுக்கிடணும்.
அமெரிக்கா
: அப்படினா அது எங்களுக்கு... எங்களுக்கேதான்.. எங்க ஹாலிவுட் பீப்பிள்ஸ் கில்லாடிங்க.
துளசியும்
கீதாவும் ஹ்ஹ பட்டாசு கொளுத்திப் போட்டாச்சு. இப்ப அவங்க எல்லாரும் மந்திரக் கோலுக்குச் சண்டை போடட்டும். எதுக்கும் நம்ம கேப்டனுக்கு ஒரு ஃபோன்
போட்டு ரெடியா இருக்கச் சொல்லுவோம்.
மந்திரக்
கோலைத் தேடும் சமயம் திடுக்கிட்டு முழிக்க.....ஒன்றுமே புரியாமல் தில்லைஅகத்தார்
விழிக்க..
என்னடா
இது கனவா? சே அருமையான ஃபைட்ட மிஸ் பண்ணிட்டோம். ஹும்....ஒரு ராத்திரிக்குள்ள இந்தியா
வல்லரசா...
துளசி
பாலக்காட்டில், ரூமில், ஜன்னல் வழியே பார்க்க....சுவரில்....ஆ! என்று ஜெர்க்காகிவிட. அதே சமயம்
கீதா
மெதுவாக எழுந்து வந்து ஜன்னல் வழியாக வாசலை நோக்க, “அட புயல் மழை இன்னும் நிற்கலை...தெரு எல்லாம் ஒரே தண்ணி... போட் சர்வீஸ்
சொல்லணுமோ” என்று நிமிர்ந்து எதிர்ப்புற சுவரைப் பார்த்தால்......ஆ!
உடனே தில்லைஅகத்தார்
ஃபோன் பறிமாற்றம்.....இந்தியா வல்லரசு...டிட்டோ டிட்டோ....
டேய் நம்ம
கில்லர்ஜிய பாத்தியா? வல்லரசு அது இதுனு ஏதோ எழுதிக்கிட்டுத்தான் இருந்தார்னு
பார்த்தா
போஸ்டரில்
கொடுவா மீசை சின்னத்துடன், கில்லர்ஜி.. கட்சிக் கொடியுடன்,
அல்லக்கைகள் புடை சூழ, கும்பிடு போட்டு “இந்தியா
வல்லரசு” என்று ஓட்டு யாசித்துக் கொண்டிருந்தார்.
ம்ம்ம்
நம்ம முந்தைய பிரதமர் “ஜி”க்களுக்கு எல்லாம் பொறாமையாம்....எப்படித்
தமிழ்நாட்டுலருந்து “ஜி” நு.
ஆஹா! கில்லர்ஜி
கில்லாடிதான். பெயருக்குப் பின்னாடி “ஜி”
போட்டுக்கிட்டாத்தான் செண்டர் போக முடியும்னு அவருக்குத் தெரியாதா என்ன..
நல்லா
மாட்டிக்கிட்டாருடா ஜி!
(ஹ்ஹ்ஹ்......எல்லாம்
இந்த சென்னைப்பித்தன் சார் தில்லைஅகத்தார்களுக்கு அனுப்பிக் கொடுத்த மாயக்கட்டிலில்
தூங்கியதால் வந்த மாயாஜாலம்.)
நன்றி:
எங்களைத் தொடர்பதிவிற்கு அழைப்புவிடுத்த நண்பர் கில்லர்ஜி, (இவர்தானே இதை ஆரம்பித்து வைத்ததே), சகோ மைதிலி
அவர்களுக்கும் (எங்கள் தளத்திலும் செய்தி சொன்னதால் தெரியும்) மிக்க நன்றி! தொடர்பதிவுகள் எதையும்
வாசிக்காததால் வேறு யாரேனும் அழைப்பு விடுத்திருந்தீர்களா என்று தெரியவில்லை. அழைத்திருந்தால் உங்களுக்கும் நன்றி!
பின்குறிப்பு:
லாஜிக் எல்லாம் தேடாதீர்கள் இதில். சும்மா அப்படியே வாசித்துவிட்டு, முடிஞ்சா கருத்தும் சொல்லிட்டுப் போங்க....
10 பேருக்கு அழைப்பு விட வேண்டும் என்றும் கில்லர்ஜி சொல்லியிருந்தார். மறந்துவிட்டோம். யார் வேண்டுமானாலும், இதுவரை அழைக்கப்படாதவர்கள் தொடரலாம். எங்கள் தாழ்வான வேண்டுகோள்.
என்ன ஒரு உற்சாகம்...உலகைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் நகைச்சுவை...அருமையான பதிவு....ரசிக்கிறேன்..
பதிலளிநீக்குமிக்க நன்றி செல்வா சகோ தங்களின் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு.
நீக்குஹாஹாஹா! அருமையா எழுதி இருக்கீங்க! ஆனா கனவில்தான் இந்தியா வல்லராசாகும் என்று சிந்திக்கும் போது மனதை என்னவோ செய்கிறது! பிரதமர் கில்லர்ஜிக்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் தங்களின் பாராட்டுடன் உள்ள பின்னூட்டத்திற்கு..ஆம் வேதனைதான்...கனவுதான் சுரேஷ்...
நீக்குஹை சூப்பர்..இதைத்தொடராவே நீங்க எழுதலாம் போலவே ....கனவு இந்தியா அருமை..
பதிலளிநீக்குஅட வாங்க கீதா சகோ! தொடரா எழுதற அளவுக்கு எல்லாம் எங்களிடம் மேட்டர் இல்லையே...உங்களின் இந்தக் கனவிற்கும் மிக்க நன்றி!
நீக்குகனவு நனவாக அதிக காலமில்லை என்று தெரிகிறது. நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ தங்களின் நேர்மறை எண்ணத்திற்கு. நம்புவோம்...
நீக்குபதிவர்கள் எல்லாரும் கனவு பற்றியே எழுதுவது ஏற்புடையதாக இல்லையே!..
பதிலளிநீக்குசார் கனவு காண்பதுதான் சுகமே என்று தெரியும்தானே! ஹ்ஹஹ அப்படியாவது சுகமாய் இருப்போமே சார்...
நீக்குஅடடே உலகத்து பிரதமர்களை எல்லாம் வடிவேலு இடத்துக்கு கொண்டு வந்து நல்லதொரு நாடகத்தை போட்டு விட்டீர்கள் மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குகடைசியில் பிரதமர் நான்தானா ? நான் பிரதமர் ஆனால் ? எனது கடவுளைக் கண்டேன் பதிவில் சொன்னது அனைத்தும் உடனே நடைமுறைக்கு வரும்.
எனக்கு கொடுத்த மறுமொழியில் இந்தியாவை சுற்றி வேண்டும் என்று சொன்னது இதற்க்குத்தானா ? அப்ப மோடிஜியை பார்த்து வந்து இருப்பீர்களே...
எனது அழைப்பை ஏற்று நல்லதொரு நாடகம் போட்டமைக்கு எமது நன்றி
தமிழ் மணம் 2
எப்படியோ நம்ம கில்லர்ஜி பிரத(ம)ர் ஆனா சரி. அதுக்காக 1000 கள்ள வாக்கு கூட போட நான் ரெடி..(என்னது அப்படியெல்லாம் போட்டா சட்டீர் சட்டீர்னு அடிவிழும்னு ஸ்ரீபூவு சாமி சொல்ராரே.. ) அதுக்கு அச்சாரமா இதோ என்னோட நல்ல வாக்கு வாங்கிக்குங்க.
நீக்குகில்லர்ஜி உடனே நடைமுறைக்கு வரும் என்பதால்தானே எல்லோரது கனவுகளையும் உங்களிடம் தரச் சொல்லிவிட்டோம்...நனவாக்குங்க்ள்...
நீக்குஹஹஹ் ஆமாம் அதேதான்...மோதிஜி?? யாரப்பா அது?
மிக்க நன்றி ஜி!
ஒரு குறும்(பு)படமே எடுக்கலாம் போலிருக்கே...!
பதிலளிநீக்குஹஹஹ் ஓ அப்படி இருக்கா என்ன மிக்கனன்றி டிடி தங்களின் கருத்திற்கு..
நீக்குஅருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி ராஜி சகோ...ஷார்ட் அண்ட் ஸ்வீட்! கமென்ட்! ஹஹ
நீக்குவித்தியாசமா அசத்திட்டீங்க!
பதிலளிநீக்குமாயக்கட்டில் வேறா?பலே!
மிக்க நன்றி சென்னைப்பித்தன் சார். இந்தப் பதிவு இப்படி வரக் காரணமே மாயக்கட்டில்தானே. அதற்கும் நன்றி சொல்லிவிடுங்கள்..உங்களுக்கும் நன்றி
நீக்குஆஹா! எப்படி ஒரு கற்பனை ! உலகத் தலைவர்கள் எல்லாரும் வந்துட்டாங்களே :-)
பதிலளிநீக்குஹ்ம்ம்ம்ம் அண்ணாவும் கீதாவும் ஏன் விழித்தீர்கள்?
மிக்க நன்றி க்ரேஸ்! சகோ...ஹஹஹஹ் ஆமாம் இப்படியாவது தலைவர்கள் வந்து இந்தியாவைப் பார்த்துக் கொஞ்சம் பொறாமைப்படட்டுமே அப்படினுதான்...
நீக்குகடைசிவரை தாங்கள் கடவுளை கண்டதை பறறி- ஒன்று மே...சொல்லவில்லையே....
பதிலளிநீக்குவலிப்போக்கன் நாங்கள்தான் கடவுளைக் காணவே இல்லையே...பிரதமரைத்தானே பார்த்தோம்...மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..
நீக்குவெறுமனே ஆசைகளை சொல்லி வெறுப்பேற்றாமல் ,உலகமே ஒரு நாடக மேடைன்னு நிரூபிச்சிட்டீங்க :)
பதிலளிநீக்குபகவான் ஜி அதுக்குத்தானே கில்லர்ஜியைப் பிரதமராக்கிட்டோம்னா, எல்லாரும் ஆசையே படவேண்டாமே இப்படித் தொடர்பதிவும் இட வேண்டிவராதே அப்படினுதான்...மிக்க நன்றி ஜி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
வித்தியாசமாக அசத்தி விட்டீர்கள்....வாழ்த்துக்கள்..த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு..
நீக்குஹாஹாஹா! அருமையா எழுதி இருக்கீங்க! வர வர மிக அருமையாக எழுதி வருகிறிர்கள், ஏதாவது அலாவுதின் அற்புத விளக்கு மாதிரி ஏதாவது கிடைச்சுருக்கா என்ன? ரகசியத்தை சொல்லுங்கப்பா
பதிலளிநீக்குஐயோ தமிழா உங்களுக்குத் தெரியாத ரகசியமா...ஏதோ எழுதிவருகின்றோம்..மிக்க நன்றி தமிழா தங்களின் பாராட்டிற்கு...உங்கள் எல்லோரது ஊக்கம்தான்...
நீக்குஎல்லா தலைவர்களையும் இங்கே கொண்டு வந்துட்டீங்க ரொம்ப திறமைசாலியாகிட்டீங்க அதனால அடுத்த பதிவர் சந்திப்பு உங்க தலைமையில் கேரளாவில் வைச்சுகிடலாமா என்ன?
பதிலளிநீக்குஹஹஹ இதெல்லாம் கனவுதானே தமிழா....தலைமையா ஐயோ அதெல்லாம் வேண்டாம் தமிழா...ஒரு கெட்டுகெதர் ஓகே..
நீக்குகற்பனையும் வாய் ஜாலமும் அதாங்க வார்த்தை ஜாலம் அருமை.. ம்ம்ம்.. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் , கனவில் யாரெல்லாமோ வருகிறார்கள், எனக்கு....."பிகர்ஸ்" அதாவது "எண்கள்" மட்டும்தான் வருது; செய்ற வேலைக்கு உண்மையாய் இருக்கனும்ல, அப்பதானே பகவான் படி அளப்பான்.
பதிலளிநீக்குகோ
மிக்க நன்றி கோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் ..என்னது ஃபிகர்ஸ் என்று சொல்லிவிட்டு ஏன் இந்தத் தயக்கம் எண்கள் என்று ...ஹஹஹ
நீக்குவித்தியாசமான கனவு.... ப்பிப் கறி இல்லாத நாடு.... நல்ல நகைச்சுவை.
பதிலளிநீக்குஆமாம்.... கடவுளிடம் கேட்டதை எதையும் குறிப்பிட வில்லையே!
மிக்க நன்றி அருணா சகோ தங்களின் கருத்திற்கு..
நீக்குகடவுளிடம் நாங்கள் கேட்கவே இல்லையே...அதுதான் மற்ற எல்லா நாட்டுப் பிரதமர்களும் சொல்லுவது போல் கனவுகள் கண்டாச்சே...அதுதான்..
அட
பதிலளிநீக்குநான் இதுவரை கடவுளை காண்பது தான் இலகு. பிரதமர்களை காண்பதெல்லாம் கனவில் மட்டும் தான் நடக்கும் என நினைத்திருந்தேன். ஓஓஓஒ நீங்களும் கனவு தான் கண்டீர்களா. நான் நிஜமோ என நம்பி விட்டேன். . அருமையான சிந்தனையும் பதிவும். நன்று.
வாங்க நிஷா சகோ! முதல் வருகை...ஆமம் கனவிலதான் காண முடியும்...மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கு..
நீக்குஅருமை அகத்தொரே.. அருமை.. மிகவும் நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி விசு தங்களின் பாராட்டிற்கு.
நீக்குரசனையான கலாய்ப்புகள்... ரசித்தேன். பாராட்டுகள். :)))
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ கீதாமதிவாணன்..தங்களின் ரசனைக்கும் பாராடிற்கும்..
நீக்குவித்தியாசமாக எழுதியுள்ளீர்கள் நண்பரே
பதிலளிநீக்குரசித்தேன்
நன்றி
தம +1
மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்கு..
நீக்குகலக்கலான கனவு. கனவில் பல நாட்டு தலைவர்களையும் பார்க்க முடிந்ததே!
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குகடவுளைக் காண முடியாதது போலவே பிரதமரையும் காண முடியவில்லை. கில்லர்ஜீ பிரதமராகி விடுவது நல்லதுதான்! சற்றே நீளமான பதிவு! தம வாக்களிக்கப் படுத்துகிறதுங்க.. எனக்கு மட்டும்தானா இப்படி என்றும் தெரியவில்லை. ஆனாலும் விடுவதில்லை.. வாக்களித்து விட்டுத்தான் செல்வது!
பதிலளிநீக்குஐயையோ கில்லர்ஜிக் வாக்களிகாம போய்ட்டீங்கனா இன்னுரு தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்துவிடுவார்....ஹஹ்ஹ
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
Nice post...
பதிலளிநீக்குLOL..
vote plus
ஹா ,ஹா ஹா....உண்மையிலேயே எல்லா பிரதமர்களும் பேசுனாக் கூட இவ்ளோ நல்லா இருந்திருக்காது.....!
பதிலளிநீக்கு