புதன், 25 நவம்பர், 2015

வரவு எட்டணா....செலவு ரெண்டணா....???!!!!

“மன்னாரு அண்ணே! மழை போதாதுன்னு திண்ணைல கவலையோட உட்கார்ந்திருக்கீங்க போல தெரியுது?”

“தம்பு வாடா வா. வரும்போதே நக்கலா.... நினைச்சேன் எங்கடா ஆளைக் காணலையேனு. மழைய ஏன் குத்தம் சொல்லணும்? வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணி வர அளவு நம்ம ஊரு நிலைமை....என்னத்தச் சொல்ல”

“ஆமாண்ணே.  நம்ப வீட்டுக்குள்ள எப்படி அண்ணே தண்ணி வந்துச்சு?  இந்தத் தெருலதான் தண்ணி தேங்கலையே அண்ணே..”

“டேய் முன்னாடிதான் தேங்கணுமா?  பின்னாடி உள்ள தெருல தான் போட் விடற அளவு தண்ணி தேங்கிருச்சே...பின் வழியா உள்ள தண்ணி வந்துருச்சு...”

“ஆமாண்ணே நான் கூட போட் விட்டேன்.  நம்ம மெயின் ரோட்டுலருந்து உள்ள வரதுக்கு ஒரு ஆளுக்கு 15 ரூபா வைச்சு...”

“அடப்பாவி! போட் விட்டது மக்களுக்கு உதவரதுக்குனு பார்த்தா நீ அதுலயும் துட்டு அள்ளுற...அதுவும் 10 நிமிஷம் கூட நடக்கற இல்லாத தூரம்...."

“சாதாரண நாள்ல ஆட்டோக்காரங்க 40 ரூபா வாங்குறாங்கல்ல....இப்ப தண்ணித் தேங்கியிருக்குதுல. ஒவ்வொரு சீசன்லயும் இப்படி அதுக்கு ஏத்தா மாதிரி சம்பாதிக்கணும் அண்ணே.....”

“அது சரி..உங்கிட்டப் பேசிப் பிரயோசனமே இல்லை.......ம்ம்ம் மக்களும் இப்படித்தான், ஆளறவங்களும் அப்படித்தான். இதோ இங்க பாரு... புகைய மட்டும் அடிச்சுட்டுப் போறாங்க. கொசு வராம இருக்க குப்பைய டெய்லி, ஒழுங்கா அப்புறப்படுத்தி சுத்தமா வைக்காம, கொண்டு கொட்டுறதையும் பொது இடத்துல கொட்டினா...?...கொசு ஒழியவா போகுது? புகை அடிச்சா நம்ம தொண்டையும், கண்ணும் எரியுது. உடம்புக்கு நல்லதே இல்லை இதைச் சுவாசிச்சா.. எல்லாமே தற்காலிகத் தீர்வுதானே தவிர முழுமையான தீர்வு எடுக்கறதே இல்லை....”

“நீங்க உடனே ஆரம்பிச்சுருவீங்களே....அது இருக்கட்டும், இப்ப உங்க கவலை என்னன்னா, உங்க வீட்டுப் பின்பக்க காம்பௌன்ட் சுவர் இடிஞ்சு விழற அளவுக்கு ஆயிருச்சு....வீட்டுக்குள்ள மேல் தளம் ஒழுகுது, எலக்ட்ரிசிட்டி லைன் எல்லாம் ஷாக் அடிக்கற நிலைமை.... சரி பண்ணனும்.....இன்னும் இப்படி நிறைய செலவு இருக்கு..... அண்ணி எல்லாம் சொல்லிச்சு..."

“ம்ம்ம் என்னால அவ்வளவு எல்லாம் செலவழிக்க முடியாதுனுதான்....”

“என்னண்ணே...நீங்க நல்ல கவர்ன்மென்ட் வேலையிலதானே இருக்கீங்க..அப்புறம் என்னண்ணே”

“டேய் என்னடா நீ? நான் என்ன கிம்பளமா வாங்குறேன்? நான் வாங்குறது சம்பளம். என் பொண்ணுங்க ரெண்டு பேரும் மெடிக்கல் படிச்சுக்கிட்டுருக்காங்க...அதுக்கு எவ்வளவு செலவு ஆகுதுன்னு உனக்குத் தெரியுமாடா...அப்புறம் கல்யாணம்...அப்புறம் எங்க வீடுதான் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போலவாச்சே.......உங்கண்ணியோட தம்பிங்க, தங்கச்சிங்க எல்லாரும் இங்கதானே தங்கிப் படிச்சாங்க. இப்ப அவங்க புள்ளைங்க வேற. இங்க இருக்கறவங்களுக்கே வாயையும், வயித்தையும் கட்டித்தான் பொழைக்க வேண்டியிருக்கு.....அப்புறம் எங்க போறது நானு....”

“தம்பு! உங்கண்ணன் இந்த மாதிரிச் சொல்லிக் காட்டுறதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல...அவங்க அம்மா இங்கதானே இத்தன நாள் இருந்தாங்க...இப்ப மழை வந்த உடனே இங்க ஒழுகுது, தண்ணி உள்ள வந்துரும்னு உடனே அவங்க பணக்கார மக வீட்டுக்குப் போயிட்டாங்கல்ல.. இதுக்குத்தான் நான் உங்கண்ணன அவங்க அம்மாகிட்ட பணம் கேக்கச் சொன்னா... உங்கண்ணனுக்கு அப்ப மட்டும் காது செவிடாகிடும்...”

“டேய் தம்பு உங்கண்ணியக் கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லு...அம்மா எல்லாம் தரேனு சொல்லிருக்காங்க...”

“அட! அம்மா எல்லாருக்கும் கொடுக்கறாங்களா.....ஹை! அப்ப எனக்கும் கிடைக்கும்!!..”

“அடேய்! இது என் அம்மா....என்னைப் பெத்த அம்மா...”

“......ஆ! அப்படியே இருக்கட்டும்... அப்ப உங்களுக்கு என்ன கவலை.  அதான் உங்கம்மா தரேன்னு சொல்லிட்டாங்களே...”

“தரேன்னு சொல்லிட்டாங்க. ஆனா, என்ன செலவாகும்னு பட்ஜெட் போட சொல்லிருக்காங்க. அதான் கவலையே....”

“ஹஹஹ அண்ணே இத மாதிரி ஒரு நல்ல சான்ஸ் இல்லவே இல்ல அண்ணே.....கணக்குப் போடறது என்ன கஷ்டமா என்ன? போடும் போது கூடவே போட்டுக்கங்க.  உங்களுக்கும் சேர்த்து...”

“அடப் பாவி! இந்த மாதிரி அம்மாக்கிட்டயே பொய் கணக்குச் சொல்லணும்னு ஐடியா கொடுக்க எப்படிடா உனக்கு மனசு வருது?”

“என்னண்ணே... நீங்க.... காந்தி, காமராசர் கணக்குக் காலத்துல இருக்கீங்க! 5+5=10, 5-4=+1 சேமிப்பு அப்படினு. இந்தக் காலத்துத் கணக்குத் தெரியாதவரா இருக்கீங்களேண்ணே....5+7=10, 5-4= -2 னு சொல்லி அதையும் +2 ஆக்கித்தான் பழக்கம். இதுதான் இங்க நடக்குது.."

“டேய்!  நான் நம்ம “கணக்குப் பிள்ளை” நண்பர்கிட்ட கணக்குப் போடச் சொல்லி அம்மா கிட்டக் கொடுத்துட்டு, அப்புறம் செலவாகுற கணக்கையும் கொடுக்கலாம்னு பார்த்தா...நீ சொல்லுற கணக்கு எல்லாம் என் கணக்குப் பிள்ளை போட மாட்டாரு...அவரு நேர்மையான கணக்குப் பிள்ளை..”

“தெரியுமே...அப்ப வேற கணக்குப் பிள்ளையப் பாருங்க...நாட்டுல தப்புக் கணக்குப் போடற கணக்குப் பிள்ளையே இல்லாத மாதிரி பேசுறீங்களே. பின்ன என்னண்ணே.....அம்மாதான் நிறைய பணம் சேர்த்து வைச்சுருக்காங்கல்ல... எப்படியும் அவங்க காலத்துக்கு அப்புறம் உங்க எல்லாருக்கும் வர வேண்டியது தானே. இப்பவே உங்க எல்லாருக்கும் கொடுக்க வேண்டியதுதானே...அத எதுக்கு இப்படிக் கணக்குப் பார்த்துப் பதுக்கி வைக்கணும்?..”

“தம்பு!  நீ நினைக்கிற அம்மா இல்ல எங்கம்மா.  நேர்மையானவங்க...எல்லாத்தையும் இப்பவே கொடுத்துட்டா எல்லாரும் வீணா செலவழிச்சுடுவாங்கனுதான், அப்பப்ப என்ன தேவையோ அதைக் கரெக்டா கணக்குப் பார்த்துக் கொடுத்துடுவாங்க. எவ்வளவு நல்ல விஷயம்! அது மட்டுமில்ல. அவங்க நிறைய ஏழைங்க படிப்புக்கும் உதவறாங்க. ஆனா, நான் கவலைப்படறது எதுக்குனா....”

“தம்பு! நீ சொல்லறதத்தான் நானும் ரெண்டு நாளா சொல்லிக்கிட்டுருக்கேன் உங்கண்ணங்கிட்ட. சொன்னா கேட்டாத்தானே. அவங்க யாருக்கோ கொடுப்பாங்களாம். அதெல்லாம் கணக்கு கிடையாது....எங்களுக்குத் தரும்போது மட்டும் கணக்கு. இவரு என்னடானா, “வீடு சரி பண்ணாட்டியும் பரவால்ல நான் அம்மாகிட்ட பொய் கணக்குக் கூட்டிச் சொல்ல மாட்டேன் அப்படினு பிடிவாதம் பிடிக்கறாரு..”

“அண்ணே! என்னண்ணே.  இப்படிப் பொழைக்கத் தெரியாதவரா இருக்கீங்க...கொஞ்சம் லட்சங்கள் கூட்டிச் சொல்லி பட்ஜெட் கணக்கு போடறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லண்ணே. அம்மா என்ன போகும் போது எல்லாத்தையும் கொண்டா போகப்போறாங்க. அடப் போங்கண்ணே.ஒழுங்கா நான் சொன்ன மாதிரி பட்ஜெட் போடுற வேலையப் பாருங்க....”

“இல்ல தம்பு...எங்கம்மா பாவம்...நேர்மையான அம்மாவுக்குப் பொறந்த நான் அவங்கள ஏமாத்த மாட்டேன்...”

“தம்பு!  இவரு வேலைக்கு ஆகமாட்டாரு. நீ ரிப்பேர் பண்ணுற ஆளுங்களப் பாருடா. பேசி முடிச்சுக் கூட்டிட்டு வா..”

“ஓகே! அண்ணி!  நீங்க சொல்லிட்டீங்கல்ல...அப்புறம் என்ன!? இன்னைக்கே ஆளைப் பார்த்துட்டாப் போச்சு...அண்ணி...என்னைய மறந்துடாதீங்க....எனக்கும் சேர்த்துக் கணக்குப் போட்டுருங்க.....”
“தம்பு!....எல்ல்ல்லாத்துக்கும் சேர்த்தே.. கணக்குப் போட்டுறலாம்...என் தம்பி..கணக்குப் பிள்ளை... இருக்கான் கணக்குப் போடறதுக்கு.”

“அடப்பாவிங்களா! வீட்டுக்குள்ளயே இப்படினா...நாடு? இப்படிக் கணக்குப் பிள்ளைங்க இருக்கறதுனாலதான் நாடு உருப்படாமப் போகுது....”(தனக்குள் எங்க அம்மா அவங்க காலத்துக்கு அப்புறம் எல்லாம் அனாதைப் பிள்ளைங்களின் படிப்புக்கு உதவும் ட்ரஸ்டிற்குனு அவங்க எழுதி வைச்சுருக்கறது இதுங்களுக்குத் தெரியாம இருக்கறதுதான் நல்லது) என்ற மன்னாரு என்ன செய்வதென்றுத் தெரியாமல் கவலையுடன் முழித்துக் கொண்டிருக்கின்றார். அவர் எதிர்த்தால், மறுத்தால் திண்ணைதான் கதி என்று அவருக்குத் தெரியாதா என்ன...!!
___________________________________________________________________________________________________________
கட்டமைப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்க, 8,481 கோடி ரூபாய் தேவை
 மத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க, சேத மதிப்பீடுகள் குறித்து, நேரடியாக ஆய்வு செய்ய, தமிழகத்திற்கு மத்திய குழுவை, உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.  'வெள்ள சேதம் குறித்து, நேரில் ஆய்வு நடத்த, மத்திய அரசு சார்பில், உயர் அதிகாரிகள் குழு விரைவில், தமிழகத்துக்கு அனுப்பப்படும்; இந்த குழு அறிக்கை தந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' எனவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: பதிவிற்கும் இந்தச் செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை....
____________________________________________________________________________________________________________

இன்றைய எங்கள் பதிவிற்கும், 10 நாட்களுக்கு முன் நம் நண்பர் டிடி கடவுளைக் கண்டேன் http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/All-is-god.html. என்ற தொடர்பதிவில் குறிப்பிட்டிருந்த குறள்களின் ஒருவரி அர்த்தத்திற்கும் ஒரு சிறிய தொடர்பு இருப்பது போல் எனக்குப் பட்டதால் இங்கு அதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

அருமையான திருக்குறள்கள். ஐயன் அப்போதே எப்படி எல்லாம் உலகியல், சமூகம், அரசியல் குறித்து எல்லாம் எழுதியிருக்கின்றார் என்ற வியப்பு. அந்தத் திருக்குறள்கள் பற்றியோ, அதன் அதிகாரம் பற்றியோ இங்கு நான் சொல்லப் போவதில்லை. குறள்கள் என்ன, அதன் தொடர்பான திரைப்படப்பாடல்களை (அவர் குறிப்பிட்டிருந்தாலும்) எப்படித் தொடர்புப்படுத்த உள்ளார், எப்போது பதிவு போடப் போகின்றார் என்று காத்திருக்கும் உங்களில் நாங்களும் அடக்கம்.

நாங்களும் தொடர்பதிவில் இருந்ததால், (இருந்தால்) எங்கள் பதிவை இடும் முன் வேறு எந்தத் தொடர்பதிவையும் பார்ப்பதில்லை என்பது நாங்கள் பொதுவாகக் கடைப்பிடிக்கும் ஒரு நியதி என்பதால், டிடியின் பதிவையும் பார்க்கவில்லை.

டிடி என்னை அழைத்து, “பதிவு பார்க்கலையா?” என்று வினவ, நான் எங்கள் நியதியைச் சொல்ல, அவர், “நான் ஒரு போட்டி வைச்சுருக்கேன்.  10 திருக்குறள் சும்மா ஒரு வரியில் குறிப்பு மட்டும் கொடுத்து, அதுக்கான பாடல் பெயர் மட்டும் கொடுத்துருக்கேன். அந்த 10 குறளும் எந்த அதிகாரம்னு கண்டுபிடிக்கணும். 2 பேர் சரியான விடை சொல்லிருக்காங்க. நீங்களும் முயற்சி செய்யுங்களேன். நீங்க தொடர்பதிவில் இருந்தா என்ன. இதை மட்டும் வாசிங்க.” என்று சொல்லவும், உடனேயே, நானும், அட! இது ஒரு நல்ல போட்டியாக இருக்கின்றதே என்று எண்ணி டிடியைப் பாராட்டிக் கொண்டே வாசித்தேன்.
சில நிமிடங்களிலேயே விடையையும் கண்டுபிடித்துவிட, அவரது தளத்தில் பதிந்துவிட்டு, டிடியையும் அழைத்து விடை சொன்னதும் அவரோ என்னைப் பாராட்டிக் கொண்டே இருக்க, அன்று குளிர்ந்த நானும், சென்னையும் இன்னும் குளிரிலிருந்து வெளிவரவில்லை! ஒருவேளை, கீதா கூட விடை கண்டுபிடித்துவிட்டாளே என்றுதான் சென்னையில் இப்படி மழை பெய்தது போலும்! இயற்கைக்கே பொறுக்கவில்லை!

“ஐயோ டிடி இது ஒன்றும் பெரிய விசயமே இல்லை” என்று சொல்லியும், இரண்டு நாள் முன்பு பேசும் போதும் அவரது வியப்பைச் சொன்னார். பாராட்டினார். எனக்கு இன்னும் புரியவில்லை இதைக் கண்டுபிடித்ததனால் அப்படி என்ன நான் புத்திசாலி என்று. 

நம் விஜு சகோ, முத்துநிலவன் அண்ணாத்தே, பாலமகி சகோ எல்லாம் அதை வாசித்த உடனேயே சொல்லியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நன்றி டிடி ஒரு அதிகாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவியதற்கு.

நீங்களும் அது எந்த அதிகாரம் என்று கண்டுபிடித்து டிடியின் தளத்தில் விடை சொல்ல முயற்சி செய்யுங்களேன்.  

----கீதா


34 கருத்துகள்:

  1. தமிழ் மணம் ஒன்று பிறகு வருவேன்.

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கென்ன...ஒரு பதிவு போட்டாலும் அத்தனையும் அடக்கிவிடுகிறீர்கள்....அகத்தியச்செம்பாய்...
    நாங்கள் தான் பயந்து எழுதுகிறோம்...கண்டிப்பாய் நீங்கள் என் ரோல்மாடல்...பதிவுகளுக்கும்...ஊக்குவிப்பதற்கும்...

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ செல்வா என்னப்பா இது! இப்படியெல்லாம் ...ஹேய் இது சும்மா ....ரோல்மாடல்?!!! குளிருதுப்பா..ஹஹஹ உங்களைப் போல எல்லாம் எழுத வராதுப்பா ....

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் அன்பிற்கும்

      நீக்கு
  3. நீளமான பதிவு! நடுவில் மிகச் சிறிய எழுத்துகளில் ஒரு செய்தி! எப்படியோ படிச்சுட்டோம்ல! எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று திளைப்பதுதானே நம் நாடு! நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு குறைச்சலில்லை என்று பாட வேண்டியதுதான். ஆங்... தம வோட்டு போட்டுட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ் ஹும் ஸ்ரீராம் நான் தான் நாலடி என் பதிவுகள் என்னவோ 6 அடியாகி விடுகின்றன....குறைக்க முயற்சி செய்து செய்து...நீளுகின்றதே அல்லாமல் ...

      என்னத்த சொல்ல..புலம்புவதைத் தவிர....நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. முதலில் நன்றி...

    பதிவிற்கு தொடர்பு கொடுத்தது ரொம்பவே அருமை...

    ஏதேனும் ஒரு குறளை கண்டுபிடித்தால் கூட, எந்த அதிகாரம் என்பது தெரிந்து விடும்... நீங்களோ உடனே சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துகள்...

    முக்கிய விசயம் : தங்களையும் சேர்த்து சரியாக கணித்தவர்கள் 3 பேர்களின் கருத்துரையை இன்னும் வெளியிடவில்லை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி. தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும். நீங்கள் ஒரு அதிகாரத்தை அறியத் தந்தமைக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் . மீண்டும் நன்றியுடன்..

      நீக்கு
  5. வீட்டுக்குள்ளே இப்படி எனில் நாடு உருப்பட்டாப்ல தான்...! நிஜம் தான். ஆனாலும் ஊரோடயும் ஒத்து வாழணுமல்... அதாங்க வீட்டோடயும் கொஞ்சம் ஒத்து வாழணும்.

    செலவு எட்டணா எனில் கணத்து பத்தணா என போட்டால் தான் இப்போதெல்லாம் உருப்படுவோம் எனும் நிலையில் இருக்கின்றோம்.

    சிந்திக்க வைக்கும் பதிவு.. அருமை.

    தொடர் மழை இருந்தாலும் நீங்கள் அனைவரும் நலம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நிஷா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்....மழை விட்டாச்சு....நலமே...

      நீக்கு
  6. #குறிப்பு: பதிவிற்கும் இந்தச் செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை....#
    எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் அதற்குத்தானே அப்படிக் கொடுத்தது....சிகரெட்டில் எல்லாம் சிகரெட் பிடிப்பது உடலுக்குத் தீங்கு அப்படினு குட்டியா போட்டுருப்பாங்களே அது மாதிரிதான் இதுவும் ...மிக்க ந்னறி பகவான் ஜி..

      நீக்கு
  7. தொடர் பதிவு
    மழை ஓய்ந்தும் தூவானை விடவில்லை போல இருக்கின்றது தொடரட்டும் வாழ்த்துகள்
    எனக்கு தெரிந்தது தெருக்குரல் மட்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி கில்லர்ஜி இது போன்றவை தொடர்தான் ஓய்வே கிடையாது...நல்லது நடக்கும் வரை இது போன்ற புலம்பல்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்...

      நீக்கு
  8. கீதா வழக்கம் போல ஊடுகட்டி அடிச்சிருக்கார் நம்ம மன்னார் அண்ணனும், தம்புவும். இதிலே அட்டகாசமா டி.டி அண்ணாவின் மேற்கோளையும் கட்டி கீத்து செல்லம் உங்க ஸ்டைலே ஸ்டைல் தான்!! கலக்குங்க சகாஸ்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மைத்தூ தங்களின் பாராட்டிற்கு....அட போங்கப்பா நீங்க எல்லாம் எழுதறத விடவா....

      நீக்கு
  9. ஒன்றுக்குள் ஒன்றாகப் பல செய்திகள்..

    முன்பெல்லாம் கணக்கு என்றால் பிணக்கு..
    இப்போதோ கணக்கு இல்லை என்றால் பிணக்கு தான்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்..இப்பொதைய கணக்கே வேறு ஆயிற்றேன...என்னசொல்ல...

      நீக்கு
  10. அய்யோ.... கண்டுபிடிப்பா..... விடை சொல்றதா..... என் பரம்பரையிலே அது கிடையாதே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  11. அது எல்லாம் இருக்கட்டும்.உங்க கணக்கு பிள்ளை யாரு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் மன்னாரின் கணக்குப் பிள்ளை விசுவாசம் என்பவர் அது உங்களுக்குத் தெரியாதா? அவரையும் உங்களுக்குத் தெரியாதா?!!! அவர் மிகவும் பிரபலமாயிற்றே!!!

      நீக்கு
  12. நீளமான பதிவுதான்
    ஆனாலும்அருமை
    நன்றி சகோதரியாரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னரி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் ஓட்டிற்கும்

      நீக்கு
  13. ஒரே பதிவில் பல செய்திகள். அதே சமயம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட நிலையில் அமைந்தவிதம் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா. அந்தப் பெட்டிச் செய்தி அடிப்படையில்தான் பதிவே அதனுடன் டிடி யின் அர்த்தம் பொதிந்த பதிவின் இணைப்பு அவ்வளவே ஐயா

      நீக்கு
  14. ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையையும் மனங்களின் நிலைப்பாடுகளையும் மிக அழகாகக் காட்டி ஒரு நாட்டின் நிலையை சூசகமாகச் சொல்லிவிட்டீர்கள். தனபாலன் பதிவில் குறள்களைக் கண்டுபிடித்தமைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ கீதா மதிவாணன் தங்களின் அழகான பின்னூட்டத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  15. வணக்கம்,

    அப்படியா சகோ, டிடி வச்சது போட்டியா? நான் பாட்டுக்கு சொல்லாமல் வந்துட்டேன்.

    தங்களின் பதிவு அருமை, நானும் தங்கள் நினைவுகளில் எனும் என் கண்கள் வழிவது நிறுத்தவில்லை.

    வாழ்த்துக்கள் சகோ, தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஸ்வரி சகோ...ஆமாம் அவரு போட்டிதான் வைச்சாரு....இப்போது கூட நீங்கள் விடை சொல்லலாம்....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  16. சிறிய எழுத்து பெரிய கருத்து!
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சென்னை பித்தன் சார் தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  17. மிக அருமை! இப்போ எங்கே பார்த்தாலும் ஊழல்மயம் தானே! அதிலிருந்து நாம் விலகி நிற்க முயற்சித்தாலும் சுற்றி இருப்பவர்கள் சும்மா இருப்பதில்லை! :(

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அங்கிள்..மிக மிக நல்ல பதிவு..நன்றி

    பதிலளிநீக்கு