எடக்கரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எடக்கரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 மார்ச், 2022

கல்விச் சாலை தந்த தலைவனுக்குப் பாராட்டு விழா

 

எப்போதும் பிறரது குறைகளைச் சுட்டிக் காட்டி ஆத்திரப்படும் நாம் ஏனோ பெரும்பாலும் அவர்களது நிறைகளைச் சொல்லிப் பாராட்டுவதே இல்லை.  சில நேரங்களில் அவர்கள் காலமான பின் அவர்களது சிறப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. 

இதை உணர்ந்த சில நல்ல உள்ளங்கள் அவர்கள் வாழும் சமூகத்திற்கும் அதை உணர்த்தி, கல்விச் சாலையைத் தந்த ஒரு தலைவனுக்குக் கடந்த தினம் ஒரு பாராட்டு விழா எடுத்தார்கள்.