சில்லு - 1 - சினிமா வைபவங்கள்
சிறு வயது, இளம் வயதில் சினிமா பார்க்கச் சென்ற அனுபவங்களை ஸ்ரீராம் எழுதியிருந்தார். வாசித்த போது சினிமாவில் ஃப்ளாஷ் பேக் வரும் முன் ஒரு சக்கரம் போல வருமே அது மனதில் வந்தது.
எங்கள் பிறந்த வீட்டில் பாட்டியின்
கீழ் தான் மொத்தக் குடும்பமும். பெரிய குடும்பம். சினிமா, கதைப் புத்தகங்கள், மாத வார
இதழ்கள், ரேடியோவில் பாட்டு எல்லாவற்றிற்கும் 144. அவை Un parliamentary. காவலர்கள்
ரோந்து போவது போல் வீட்டில் கெடுபிடி காவலாக என்னவோ அரண்மனை வீடுன்ற நினைப்புல இருக்கற
ஒரே ஒரு ஹால், அடுக்களைக்குள் ரோந்து நடக்கும், நாங்கள் யார் யார் என்ன படிக்கிறோம்
செய்கிறோம் என்று.
ஆங்கில இலக்கணப் புத்தகங்கள்,
கணக்கு, எதிர்கால வேலை தேடலுக்கான பரீட்சைக்கான புத்தகங்கள், Know your English – அப்போது ஹிந்து பேப்பரில் செவ்வாய்
தோறும் வருமே அது இரவலுக்கு எடுத்து வந்து வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளுதல் இப்படியானவை
மட்டும் தான் வாசிக்கலாம். கூடவே மாமா இருப்பாரே!
இப்படி எங்கள் ஊர் எல்லையைத் தாண்டாமல், வெளியுலக அறிவு, பரந்த அறிவு எதற்கும் வழி இல்லாமல் கிணற்றுத் தவளையாகவே இருந்தோம். வாழ்வாதரத் தேவைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்க்கையை எப்படி உள்ளார்ந்து வாழ வேண்டும் அனுபவிக்க வேண்டும் என்பவை போதிக்கப்படவும் இல்லை, அனுபவ ரீதியாகப் பார்த்ததும் இல்லை.
பாடப் புத்தகங்களுக்கு அப்பால் பலவற்றை வாசிக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும், கற்க வேண்டும், ஊரைச் சுற்றியிருந்த கண்ணில் தெரியும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ் ஊர்களைப் பார்க்க வேண்டும், என்று ஆசைப்பட்ட எனக்கு ஸ்வாசம் முட்டிய காலங்கள்.
அப்படியான வீட்டில் ஒரு சினிமா பார்ப்பது என்றால் அது மிகப் பெரிய வைபவம். முதலில் சின்னவர்கள் எங்களுக்குள் ஒரு டிஸ்கஷன் நடக்கும். யார் பூனைக்கு மணி கட்டுவது!
“பாட்டிக்குப் பிடிச்ச சிவாஜி படம் வந்திருக்குடி. நேத்திக்கு என் ஃப்ரென்ட் சொன்னா. அவ வீட்டுல எல்லாரும் பார்த்தாச்சாம். பாட்டிகிட்ட நைஸா ஐஸ் வைக்கலாமா?”
“ஐயோ நான் மாட்டேன். நேத்திக்கு வீட்டை மொழுகலைன்னு திட்டு வாங்கினேன்”
“கீதா நீதான் சரியான ஆளு, நீ கேளுடி”
“அவ ரேங்க் கார்ட் பாட்டிகிட்ட காமிக்கலை கணக்குல ஃபெயில்” நான் ஃபெயில் ஆவது பெரிதாகப் பேசப்படும். அவங்க எல்லாம் ரேங்க்!
என்றாலும் நான் தான் பாட்டியிடம் பேசும் எதிர்க்கும் தைரியசாலி. அதற்கான தருணம் என்பது, மதியம்/இரவு, பாட்டி கட்டிலில் படுத்துக் கொண்டுவிட்டால் யாரேனும் கால் பிடித்துவிட வேண்டும் அத்தருணம்.
எங்களில் அதற்கும் பங்கீடுகள் பேரம் பேசுதல் நடக்கும். அப்படியாக நான் அடிக்கடி அந்தப் பணியை ஏற்றுக் கொள்வதுண்டு. பாட்டிக்கு விருப்பம் போல் கால் பிடித்து விட்டுக் கொண்டே, “ஓ பாட்டி உங்க கால்ல என்ன பாட்டி இப்படி இங்க லைட்டா புடைச்சிண்டுருக்கு?”
“நன்னா அழுத்திப் பிடிச்சுவிடுவ்ட்டி” (குட்டி என்று கடைசியில் சொல்லிப் பேசுவது எங்கள் வழக்கம். அதுதான் பாட்டியின் அகராதியில் ஏவ்ட்டி!)
“நான் மெதுவா நீவி விட்டு பிடிக்கறேன்”…அப்படிப் பிடித்து விடும் சமயம் பாட்டி அதில் கொஞ்சம் மயங்கி இருக்கும் சமயம்….
“பாட்டி, நாங்க எல்லாரும் ஆத்துலதானே இருக்கோம். வடசேரி சந்தைக்கும், மாவு மெஷினுக்கும் போலாமா? நாங்க எல்லாம் தூக்கிண்டு வருவோமே….சிவாஜி படம் கூட ஏதோ புதுசா வந்திருக்காமே! அப்படியே அதையும்….”
இந்தக் கேள்வியை நான் ஏன் கேட்டேன் என்பதற்கு ஒரு கதை உண்டு. மஹாபாரதக் கதையில் மட்டும் தான் கிளைக் கதைகளா?
பாட்டிக்குச் சிவாஜி ரொம்பப் பிடிக்கும். சிவாஜி படங்களைத் தவிர வேறு எதுவும் பார்க்க மாட்டார். கேரளத்திலிருந்து பாட்டியின் கடைசித் தங்கை வந்துவிட்டால் இருவருமாகக் கண்டிப்பாக சினிமா செல்வது வழக்கம்.
திட்டமிடல்கள் பிரமாதமாக அரங்கேறும். சாம்பார் பொடிக்கு வெஞ்சன சாமான்கள் போட்டு தட்டில் பரப்பி என்னிடம் கொடுத்துக் காய வைக்கச் சொல்வார்கள். அரிசியைக் களைந்து ஊற வைத்து வடிய வைக்கச் சொல்லி துணியில் பரப்புவார்கள். இல்லை என்னிடம் சொல்வார்கள். கோலமாவிற்கு அரிசியை திரிக்க எடுத்து வைக்கச் சொல்வார்கள். உளுத்தம் பொடிக்கு உளுந்தை வெயிலில் காய வைப்பார்கள். .ரவையை வறுத்து சர்க்கரை, ஏலாக்காயுடன் திரிக்க - லட்டு செய்ய……இவை அனைத்தும் அப்போது ஒழுகினசேரியில் இருந்த மாவு மெஷினில் திரிக்க. அடுத்து வடசேரி சந்தையில் காய் வாங்க. காய் லிஸ்ட், வடசேரி பேனா கிருஷ்ணன் கடையில் வெஞ்சன சாமானுக்கு லிஸ்ட் என்று இத்தனையும் கனஜோராக நடக்கும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை!
எங்களுக்கு யோசனையாக இருக்கும். “பாட்டி இப்பதானே சாம்பார் பொடி, ரசப்பொடி, எல்லாம் திரிச்சுண்டு வந்தோம்”
"சட்டம்பி! உன்னை யாரு கேட்டா" பாட்டி முழித்துப் பாத்துக் கண்ணை உருட்டுவார்! நான் தான் சட்டம்பி! (சட்டம் பேசுறேனாம்!)
சட்டம்பி வாய் டம்மியாகும்! என் ரேங்க் கார்ட் என்னை பயமுறுத்தும். அக்காவும் தங்கையுமாகக் காலை சாப்பாடு முடிந்ததும் கிளம்பிவிடுவார்கள். மாலையாகிவிடும் வீடு திரும்ப.
எங்களுக்குப் பாட்டி இல்லாதது கொண்டாட்டம்தான். ஆனால் மற்ற பெரியவங்க யோசிப்பாங்க என்ன இது போனவங்களைக் காணலையே என்று.
இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது போல் எங்கெங்கும் நிறைந்திருக்கும் எங்கள் ஊர் மக்கள்!
“மக்கா, உங்க பாட்டியும், கொச்சிப்பாட்டியும் ஒழுகினசேரி பஸ் ஸ்டாப்புல நின்னுட்டுருந்தால்லா. ஆனா பஸ்ல ஏறல பாத்துக்கங்க. மெஷின்ல மாவு திரிச்சுட்டுவாரோன்னு நிக்கா”
எங்களுக்குச் செய்தி வந்துவிடும்.
மாலை, 5.15 பேருந்தில்தான் வருவார்கள் சாமான்களைச் சுமந்து கொண்டு ஆடி அசைந்து வருவார்கள். வந்த பிறகு சால்ஜாப்பு கதை பிறக்கும்.
“ஒழுகினசேரி மெஷின்ல திரிச்சுண்டு நின்னா 1.30 மணி பஸ் போய்டுத்து. அதுக்கப்புறம் 3 மணி பஸ். வெயில் கொளுத்தித்தா, வெயில் தாழ்ந்தப்புறம் வரலாம்னு ஜானகி சொன்னாளா, அவ்வளவு நேரம் என்ன செய்யறதுன்னு அப்படியே எல்லாத்தையும் அங்க வைச்சுட்டு, எதித்தாப்ல லஷ்மி தியேட்டர் இருக்கே வெயிலுக்கு அங்க நுழைஞ்சுட்டோம்.”
“என்ன படம் பாட்டி?”
“அது உங்க பாட்டிக்குப் பிடிச்ச படம்தான்” - சித்திப்பாட்டியின் பதில்
சிவாஜி படம் என்பது ஊரறிந்த ரகசியம்! லஷ்மி தியேட்டரில் பெரும்பாலும் கொஞ்சம் பழைய சிவாஜி படங்கள் தான் ஓடும். நாங்கள் கமுக்கமாகச் சிரிப்போம். படம் பார்க்க சந்தை, மெஷின் எல்லாம் ஒரு சால்ஜாப்பு. இதெல்லாம் அனுபவங்களுக்குப் பிறகு பின்னால் தெரியவந்தவை.
ஏனென்றால், சனி ஞாயிறுகளில் எங்களைத்தான் கூட்டிக் கொண்டு போவார் காய்கள், சாமான்கள் எல்லாம் தூக்கிக் கொண்டு வர! நாங்களும் அதே ஒழுகினசேரி பஸ் ஸ்டாண்டில் பாட்டியோடு நின்றதுண்டு. எதிர்த்தாற் போல் தியேட்டர். படம் போஸ்டர் கண்ணில் படும்.
ஆனால் எங்களைப் படத்துக்கு? ம்ஹூம் கூட்டிக் கொண்டு செல்ல மாட்டார். சில சமயம் எங்களை சாமான்களுடன் பேருந்தில் ஏற்றிவிட்டுத் தனக்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பது போல தியேட்டருக்குள் நைஸாக நுழைந்துவிடுவார்! இதெல்லாம் எங்களுக்கு எப்படியும் சேதி வந்து விடுமே! பின்னால் தெரிந்த விஷயங்கள்.
அப்படியான பாட்டியிடம், மேலே அந்தக் கறுப்பு வண்ணம் பூசிக் கொண்ட பாராவில் சொன்னது போல் நான் ஒரு பிட் போட்டுப் பார்த்தேன்……!!!
என்ன ஆச்சு?!! குழந்தை அழுததா சிரித்ததா? தொடரும்.
சில்லு – 2 – யார் வரைந்த ஓவியம்
இது யார் வரைந்த ஓவியம் என்று தெரிகிறதா? ஊகியுங்கள். நான் மாலை சொல்கிறேன். யாரென்று. ஊகிப்பவர்களுக்குப் பரிசு என்றெல்லாம் நான் சொல்லமாட்டேனே!!!!
இது நம் மனோ அக்கா வரைந்த படம்! பன்முகத் திறமை கொண்டவர் நம் மனோ அக்கா. மிக நன்றாக வரைவார், பாடுவார் - முறையாகக் கர்நாடக இசை கற்றுக் கொண்டவர். அருமையான எழுத்திற்குச் சொந்தக்காரர் மிக நன்றாகச் சமைப்பார்!!! நம் பரிவை சே குமார், காலக்ஸி தளத்தில், எபியில் வெளியான எனது கதை புரியாத புதிரைப் பகிர்ந்திருந்தார் அந்தக் கதைக்குப் பகிர்ந்திருந்தார்.
சில்லு – 3 – கரும்புலி/கள்
இதென்ன கரும்புலிகள்? சிறுத்தைகளின் வகைகள் - லெப்பர்ட், பாந்தர், புமா, இவற்றில் கருஞ்சிறுத்தை - தெரியும். ஆனால் கரும்புலிகள் இது வரை பார்த்ததில்லை. ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்கா புலிகள் சரணாலயத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அங்கு 16 புலிகள் இருப்பது தெரிய வந்தது. இதில் 10 புலிகள், அரிய வகை கரும்புலிகள் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. கரும்புலிகளின் புகைப்படங்களை மத்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வனத்துறை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார் “இவை இந்தியாவின் கரும்புலிகள். மரபணு மாற்றத்தால் பிறந்த இவை மிக அரிய வகையைச் சேர்ந்தவை. அகவுடி என்ற நிறமி மாற்றத்தால் புலிகளின் உடலில் கருப்பு வரிகள் உருவாகின்றன. கருப்பு அல்லது மெலனிஸ்டிக் புலிகள் என்று அழைக்கப்படும் இந்த அரிதான புலிகளின் உடம்பில் கருப்பு நிறத்திலான பட்டைகள் காணப்படும். .இதன் காரணமாக இவை கரும் புலிகள் என்றழைக்கப்படுகின்றன. (நன்றி இணையம்)
அடுத்து, தொடரும் என்று போட்டிருந்த பதிவுகளைத் தொடர்வேன் என்று நம்புகிறேன்.
எங்கள் தளத்தை வாசிப்பவர்கள் கருத்து சொல்பவர்கள் அனைவருக்கும் நன்றி!
------கீதா
ஓவியம் மாயாவா? கரும்புலி படித்துவிட்டேன்.
பதிலளிநீக்குசினிமா.... என்ன பண்ணறது... சின்னப் பசங்க கெட்டுப் போயிடுவாங்கன்னு நினைக்கும் காலம்
ஓவியம் மாயாவா?//
நீக்குவாங்க நெல்லை! மத்தவங்க யூகம் என்னனு பார்க்கிறேன். மாலை சில்லு இரண்டின் கீழ் சொல்கிறேன் விவரங்களுடன்!
கரும்புலி எல்லாருக்குமே தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது. சமீபத்திய செய்திகளில் அது வந்ததே.
ஆமாம் அந்தக் காலத்துல அப்படித்தான். சினிமா மட்டுமில்லை, பாடப் புத்தகம் தவிர மத்த புத்தகங்கள் எல்லாமே...
மிக்க நன்றி நெல்லை.
கீதா
நெல்லை, இன்னும் யாரும் காணவில்லை, கருத்து சொல்ல. எனவே நாளை வரை பார்க்கிறேன். அதன் பின் யார் அந்த ஒவியர் என்பதை சொல்கிறேன்.
நீக்குகீதா
ஓவியர் கல்பனா
பதிலளிநீக்குபெயரில்லா நீங்கள் யார் என்பதை கீழே குறிப்பிடலாமே.
நீக்குகீதா
ஆர்வமுடன் வந்து கருத்து சொன்ன நீங்கள் உங்கள் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.
நீக்குகீதா
ஓவியர் கல்பனா
பதிலளிநீக்குKumari ஆங்கிலத்தில் இருக்கும் பெயரைத் தமிழில் எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. குமரி? குமாரி? குமார் ஐ?
நீக்குஓவியர் யார் என்பதை நாளை சொல்கிறேன். இன்னும் யாரேனும் சொல்கிறார்களா என்று பார்த்துவிட்டு.
நன்றி Kumari
கீதா
கீதா
ஓவியர் கல்பனா
பதிலளிநீக்குKnow your English ஹிந்து பேப்பரில் வருமா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரிலா என்று சந்தேகமாக உள்ளது. நாங்கள் அதை எடுத்து நோட்டு போட்டு அதன் பக்கங்களில் ஒட்டி வைத்திருந்தோம்..
பதிலளிநீக்குஸ்ரீராம் ஹிந்து பேப்பரில்தான் வந்தது. பிறந்த வீட்டில்தான் வாங்க மாட்டாங்க பேப்பர். மாமா எங்கிருந்தாவது எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். எனக்குத் திருமணம் ஆன பின் நம் வீட்டில் ஹிந்து வருமே அதிலிருந்து கட்டிங்க் எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. சென்னை வரும் போதும் மாமனாரும் நானும் அதைப் பகிர்ந்துகொண்டதுண்டு. ஹிந்து பேப்பர்தானே வாங்குவாங்க அப்ப. இந்தியன் எக்ஸ்பிரஸ் எல்லாம் ம்ஹூம்!! அதனால் எனக்கு இது உறுதியாகத் தெரியும் ஹிந்து பேப்பரில் என்று.
நீக்குஓ நீங்களும் ஒட்டி வைத்திருந்தீர்களா. அட! நாங்களும் அதேதான்,....
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
புத்தகம் படிக்க, வாராந்தரிகள் பார்க்க.. இப்படியான கட்டுப்பாடுகள் எங்களுக்கு இல்லாதிருந்தது நல்லதா, கெட்டதா.. நாயகன் பதில்தான்... தெரியலியேப்பா... தெரியல.... ஆனால் சினிமா போக கொஞ்சம் கெஞ்சணும். அப்பாவிடம் கேட்போம். அடியும் தருவார். அவ்வப்போ காசும் தருவார்! ஒரு முறை ஊரிலிருந்து வந்திருந்த மாமாவிடம் கெஞ்சி மாட்டுக்கார வேலன் பார்த்தோம்.
பதிலளிநீக்குகட்டுப்பாடுகள் இல்லாதிருந்தது நல்லது என்பேன் ஸ்ரீராம். அதாவது அந்த வாசிப்புதான் இப்போது வரை உங்களுக்குக் கை கொடுக்கிறது.....நல்ல பழக்கம் ஸ்ரீராம்.
நீக்குஎன் மகனுக்குச் சிறு வயதிலேயே பழக்கத்தை ஏற்படுத்திவிட்டேன்.
உங்கள் அனுபவமும் சுவாரசியம் ஸ்ரீராம். மாட்டுக்கார வேலன் எம் ஜி ஆர் படமோ?
கீதா
என் பாட்டியும் - அப்பம்மா - சினிமா ரசிகை. அவர் கிராமத்திலிருந்து தஞ்சாவூர் வந்து, அவர் சினிமா பார்க்க என்னை அல்லது என் சகோதரரை துணைக்கழைத்துப் போவார். நிறைய பார்ப்பார். பாகுபாடு கிடையாது. அப்போது தஞ்சையில் ஓடும் முக்கால் வாசி படங்களை பார்த்து விடுவார். சில படங்கள் அப்படி பார்க்கக் கிடைத்திருக்கின்றன! துணைவன், வசந்த மாளிகை, ஓடி விளையாடு தாத்தா (!!)
பதிலளிநீக்குஆஹா சூப்பர் அனுபவங்கள் ஸ்ரீராம். இந்தப் பாட்டி அம்மம்மா எனக்கு.
நீக்குதுணைவன் படம் நீங்க சொன்னப்ப நினைவுக்கு வருகிறது இது அப்பம்மா கூட்டிப் போன படம். வள்ளியூரில்!!! முருகன் பக்திப் படம்! வள்ளியூர் தியேட்டரில் பழைய படம் போட்டப்பன்னு நினைவு. அந்தப் பாட்டி அத்தைகள் எல்லாம் சினிமா பார்க்கும் வகை என்பதால் அங்கு இருந்தப்ப ஒன்றிரண்டு பார்த்த நினைவு. ஆனால் நிழலாக நினைவு
வசந்த மாளிகை பதிவில் சொல்லியிருக்கும் பாட்டி ரசித்த படம் என்று வீட்டில் சொல்லப்படுவதுண்டு!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
சின்ன வீடு என்பதால் தாத்தா பாட்டி உடன் இல்லை. கால் பிடித்து விடும் வேலையும் இல்லை! அப்பாவுக்கு கால் மிதிப்பது தினசரி வழக்கம்!
பதிலளிநீக்குஅதான் அப்பாக்கு கால் மிதிச்சு விட்டிருக்கீங்களே.
நீக்குஎங்க பாட்டிக்கும் கூட சில சமயம் ஏறி நின்று மிதிக்கச் சொல்வாங்க. அப்போது எல்லாம் தெரியவில்லை இந்தக் கால்வலி பற்றிய அறிவு எதுவும் இல்லை. இப்போது எவ்வளவு வசதிகள்!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஓவியம் கல்பனா போலதான் தெரிகிறது. மனோ அக்கா கூட பத்திரிகைகளில் படம் வரைந்திருக்கிறார் தெரியுமோ...
பதிலளிநீக்குஸ்ரீராம் ஆஹா முதல் வரியை விட்டிருந்தால் அடுத்தது சரியா இருந்திருக்கும்!!!! மனோ அக்காவேதான். ஆமாம் அவங்க பல பத்திரிகைகளில் வரைந்திருக்கிறார் தெரியும்....அவங்க பதிவிலும் சொல்லியிருந்தாங்க.
நீக்குநீங்க கிட்டத்தட்ட யூகத்துக்கு வந்துவிட்டதால் பதிவில் சேர்த்துவிட்டேன்!!!
மிக்க நன்றி ஸ்ரீராம்.
கீதா
கரும்புலிகள் மார்க்கிங் பார்த்தேன். மோப்பம் பிடித்தபடி திரும்புகிறது. அடுத்த முறை சரியாக அந்த இடத்துக்கு அவை வந்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள். மனிதனால் வனத்தில் அப்படி அடையாளம் கண்டு மறுபடி இடத்தைப் பிடிக்க முடியாது. (வனத்திலிருந்து வெளியே செல்ல இப்படி தவிப்பவர்களுக்கு சமயங்களில் குரங்குகள் வழிகாட்டி உதவுமாம்... படித்திருக்கிறேன்) 'அக்கேலே ஹை.. தோ கியா கம் ஹை' பாடல் காட்சி நினைவுக்கு வருகிறது!
பதிலளிநீக்குஸ்ரீராம் புலி சூப்பரா எல்லை குறிக்குதுல்ல! நம்ம பைரவ செல்லங்கள் கூட அப்படித்தானே உச்சா அடிக்கும். அப்புறம் பூனாச்சுகள் உரசுதல் எல்லை மார்க்கிங்காம்.
நீக்குஆமாம் மனுஷனால வனத்தில் முடியாது.
//(வனத்திலிருந்து வெளியே செல்ல இப்படி தவிப்பவர்களுக்கு சமயங்களில் குரங்குகள் வழிகாட்டி உதவுமாம்... படித்திருக்கிறேன்)//
ஓ! அப்படியா இது தகவல் எனக்கு. அட சூப்பரா இருக்குதே. பேசாம வனத்துல குரங்கை கைடா போட்டுரலாம்!
அந்த ஹிந்திப்பாட்டு கேட்கிறேன் ஸ்ரீராம். உங்களுக்குத்தான் பாருன்ன எப்படி நினைவு வைச்சு கரெக்ட்டா கனெக்ட் பண்ணறீங்க! சூப்பர் ஸ்ரீராம்!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
கீதா உங்கள் சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்வு.
பதிலளிநீக்குஎன் அப்பாவின் அம்மாவும் தாத்தா இறந்த பின் சினிமா பார்ப்பதி பொழுது போக்காக வைத்து கொண்டார்கள். நல்ல சினிமாக்களை( திருநெல்வேலியில் )பார்ப்பார்கள்.
கோவைக்கு எங்கள் வீடு வந்த போது பார்க்காத தியேட்டர் எல்லாம் பார்த்தோம் பாட்டியை அழைத்து போய் சினிமா காட்ட. ரசித்துப்பார்ப்பார்கள், எம்.ஆர் ராதாவின் நடிப்பு பிடிக்கும் அவர் பேசும் வசனங்களை சமயத்தில் உதராணமாக எடுத்து பேசுவார்கள். நாங்கள் பார்க்காத பழைய படங்கள் எல்லாம் பாட்டிக்காக பார்த்தோம்.
அம்மா பாடி நாங்கள் சிறு வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார்கள், அவர்களுக்கு சினிமா பிடிக்குமா தெரியவில்லை.
மனோ அவர்கள் வரைந்த ஓவியம் முன்பு பார்த்த நினைவு. அழகான ஓவியம்,அவர்கள் பன்முக திறமை வாய்ந்தவர்கள்.
கோமதிக்கா உங்கள் சுவாரசியமான நினைவுகள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. நல்ல அனுபவங்கள். பாட்டியை அழைத்துப் போய் பார்க்காத தியேட்டர் எல்லாம் பாத்திருக்கீங்களே சுவாரசியமா இருந்திருக்கும்.
நீக்குஆமாம், மனோ அக்கா அருமையா வரைவாங்க. பன்முகத் திறமை வாய்ந்தவங்க.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
கரும்புலிகள் பற்றிய விவரமும் காணொளியும் அருமை.
பதிலளிநீக்கு//சிவாஜி படம் கூட ஏதோ புதுசா வந்திருக்காமே! அப்படியே அதையும்….”//
அதையும் பார்த்தீர்களா என்று அறிந்து கொள்ள வருகிறேன்.
கரும்புலிகள் பத்தி இப்பதான் தெரிந்தது கோமதிக்கா முன்ன தெரிந்தது இல்லை. அதான் போட்டுவிட்டேன்.
நீக்குஹாஹாஹா படம் அது பத்தி அடுத்தாப்ல சொல்றேன்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
"சட்டம்பி! உன்னை யாரு கேட்டா" பாட்டி முழித்துப் பாத்துக் கண்ணை உருட்டுவார்! நான் தான் சட்டம்பி! (சட்டம் பேசுறேனாம்!)//
பதிலளிநீக்குபாட்டி சொன்னதை ரசித்தேன், அதிகமாக பேசினால் அடுக்கும் முறை வார்த்தை.
பாட்டிக்கு கால் பிடித்து விடுவது, பாட்டியும், பேத்தியும் உரையாடுவது எல்லாம் கண் முன்னால் விரிந்தது காட்சியாக.
ஆமாம் கோமதிக்கா. அது ஒரு காலம். அப்போது என்னடா இது என்று தோன்றியவை இப்போது நினைத்துப் பார்க்கறப்ப இனிய நாட்கள் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட இருகோடுகள் தத்துவம்!!!
நீக்குஆமா அப்பல்லாம் அதிகமா பேசினா அதுவும் நான் தான் தைரியமா கேள்வி கேட்பேன் பாட்டியை அதனால். இப்படிச் சொல்வாங்க.
உரையாடலை எல்லாம் ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
பழைய நினைவுகள் மகிழ்ச்சியை தரும்.
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்
இந்த புகைப்படம் சகோ மனோ அவர்கள் வரைந்தது. நானும் எனது பதிவு "அகிலா" வில் வெளியிட்டு இருக்கிறேன் இதோ இணைப்பு.
https://killergee.blogspot.com/2016/05/blog-post_21.html?m=1
கில்லர்ஜி தொடர்ந்து வாருங்கள்!
நீக்குஎனக்கு நன்றாக நினைவு இருக்கு கில்லர்ஜி நீங்க மனோ அக்கா வீட்டுக்குப் போனப்ப அவங்க வரைஞ்சத க்ளிக் பண்ணி உங்க பதிவுல போட்டது ஆனா அது இந்தப் படமான்றது பதிவு எழுதும் போது தெரியலை இல்லைனா விடை சொல்லும் போது அதைச் சொல்லியிருப்பேன்.
மிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
இளமைப்பருவ ஓர்மை புதுக்கல் நன்றாக இருந்தது. மனோ மேடம் இவ்வளவு அழகாக படம் வரைவார் என்றால் ஏன் செவ்வாய் கதைகளுக்கு அவரைப் படம் போட சொல்லவில்லை என்று புரியவில்லை.
பதிலளிநீக்குரேடியோ போலும் வீட்டில் இல்லாத காலத்தில் மாதம் ஒரு சினிமா, அதுவும் பெஞ்ச் டிக்கெட் என்பதுதான் பெரிய சந்தோசத்தை தந்தது. தற்போது?
கரும்புலி கருப்பு பெயிண்டை தாறுமாறாக பூசிக்கொண்டது போல் உள்ளது. புலியுடைய கம்பீரம் அழகு அதன் வர்களில் தான். அது மிஸ்ஸிங். படம் பகிர்வுக்கு நன்றி
Jayakumar
ஜெ கே அண்ணா நான் வள்ளியூரில் தரை டிக்கெட் தான் அங்கு மற்ற பாட்டி வீட்டுக்குச் சென்ற போது அத்தையோ அல்லது யாரேனும் வந்தால் அவர்கள் என்னை அழைத்துச் சென்றதுண்டு. பாட்டி கூட துணைவன் பார்த்த நினைவு. நீங்க சொல்லியிருக்காப்ல தரை டிக்கெட்டில் பார்த்த அந்த சந்தோஷம் இப்போது ஹைடெக் தியேட்டரில் பார்ப்பதில் இல்லை என்பது உண்மை!
நீக்குஅது போல கோயில் தேரடியில் பார்த்த சந்தோஷமும் போல் அது தனி!
கரும்புலி எனக்கும் கூடத் தோன்றியது என்னவோ டல்லாக இருக்கே என்று ஆமாம் அதன் வரிகள் தான் அழகு கம்பீரம்! ஒரு வேளை படத்தில் அப்படி இருக்கோ? நேரில் பார்த்தால் தெரியும் என்று தோன்றுகிறது. ஆமா கண்டபடி பெயின்ட் அடிச்சாப்ல இருக்கிறது. ஆனால் இதுவும் இயற்கைதானே!
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
கீதா, துளசி அண்ணன் நலமாக இருப்பது தெரிகிறது மகிழ்ச்சி.. மிய்யும் நலம்:)..
பதிலளிநீக்குஉங்கள் எல்லோருக்கும் இனிய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்தப்புத்தாண்டில் ஒரு போஸ்ட்டாவது போட்டிடோணும் அதிரா என ஆண்டவனை வேண்டுகிறேன், நீங்களும் வேண்டிக்கோங்கோ:)..
வாங்க வாங்க முற்றும் துறந்த.....ஓ சாரி கண்ணு ஸ்லிப்பாகிப் போச்! முற்றும் அறிந்த அதிரா!! நாங்களும் நலம். யுவும் நலம் அறிந்து மகிழ்ச்சி!
நீக்குஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
போடுங்க போடுங்க போஸ்ட். வைரவனுக்கு வேண்டிக்கறோம் அப்ப அந்த பச்சை எனக்குத்தானே!
மிக்க நன்றி முஅஅ!!
கீதா
ஆஹா இது கீத்ஸ் ட சுயசரிதமோ.. படிக்கப் படிக்க சுவாரஷ்யம்.. அந்தப் பாட்டி எவ்ளோ மிரட்டி வச்சிருக்கிறா உங்களை எல்லாம் ஹா ஹா ஹா ஆனா இப்போ நினைச்சுப் பார்க்கையில் கவலையாக இருக்குமே.. அப்படியான காலம் எல்லாம் எவ்ளோ அழகிய பொற்காலம்.. இப்போ அப்படி யாரும் சேர்ந்திருப்பதுமில்லை, பாட்டிக்கு ஆரும் பயப்படுவதுமில்லை.. எப்படி மாறி விட்டது காலம்...
பதிலளிநீக்குஆனாலும் பொல்லாத பாட்டி பாருங்கோ ஹா ஹா ஹா ரகசியமாக தான் படம் பார்க்கப் போயிடுவாவாம் ஹா ஹா ஹா
ஹாஹாஹா ஆமா ....அதென்ன கேள்வி முஅஅ வுக்கு முன்னதாகவே தெரிஞ்சுருக்கணுமே!!
நீக்குஅது ஒரு காலம், அதிரா. அதில் நன்மையும் உண்டு ....சில அந்தப் பக்கமும் உண்டு.
ஆமா அவங்க அப்படித்தான்....
மிக்க நன்றி அதிரா.
கீதா
சிவாஜி படமெனில் பாட்டி வருவா எனும்போது எனக்கொன்று நினைவுக்கு வருது... அர்ஜூனின் கர்ணன் படம் தியேட்டரில் ஓடியபோது நாங்கள் கசின்ஸ் 5 கேள்ஸ் பார்க்க விரும்பினோம், ஆனா தனியே போக அனுமதியும் இல்லை எங்களுக்கும் அப்படி தனியே தியேட்டர் போகப் பயம்...
பதிலளிநீக்குஅப்போ எங்கட அப்பா லீவில வந்து இருந்தார், அப்பாவுக்கு ராமாயணம் , பாரதக் கதைகள் எனில் நல்லாப் பிடிக்கும்... அல்லது சிவாஜி போன்ற நடிகர்கள் பிடிக்கும், ஏனையோரை அதுவும் இளைய தலைமுறை பிடிக்காது, ச்சீஈ அதெல்லாம் படம் நன்றாக இருக்காது என்பார்... வரமாட்டார், வேறு யாரும் ஆண் துணை அப்போ அருகில் இல்லை கூட்டிப்போக, அதனால வேறு வழியில்லை..
ஒன்று யோசித்தோம்... என் கொள்கை "பொய் சொல்லக்கூடாது, ஆனா நம்மிடம் இருக்கும் உண்மைகளை எல்லாம், வலியப்போய்ச் சொல்லோணும் என்றில்லை " என்பது இப்பவரை கடைப்பிடிக்கிறேன் இதை:) ஹா ஹா ஹா
அப்போ அப்பாவிடம் போய்க் கேட்டோம் படத்துக்கு வாறீங்களோ அப்பா?
என்ன படம்? ..இது அப்பா
"கர்ணன்" படம் அப்பா...
ஓ அப்படி எனில் வருகிறேன், எனச் சொல்லி உடனே வெளிக்கிட்டு வந்தார், நாம் மூச்சுக் காட்டவில்லை, அப்பா பாரதக் கர்ணனை நினைச்சு வருகிறார் எனத் தெரியும் ஆனா அவரும் கேட்கவில்லையே, அப்போ நம்மில் தப்பில்லை.
படம் பார்த்து முடிச்சு வீட்டுக்கு வரும்போது சொல்லிக்கொண்டே வந்தார் நான் பாரதக் கதை என நினைச்சேன் இல்லை எனில் வந்திருக்க மாட்டேன் என ஹா ஹா ஹா.... அப்போ அது நமக்கு வெற்றித் தருணம், ஆனா இப்போ நினைக்க கொஞ்சம் கவலை... அப்பாவை ஏமாத்திட்டோமோ என்பதுபோல....
ஹாஹாஹா நானும் முதலில் அர்ஜுனின் என்பதை அர்ஜுனனின் கர்ணன் என்று வாசித்து...இதென்ன புதுப்படமா இருக்கு...அர்ஜுனனின் கர்ணனா? முற்றும் அறிந்த அதிரா பாரதக்கதையே மாத்திட்டாங்களா அதான் முஅஅ ஆச்சே!ன்னு டப்பு டப்புன்னு க்ன்னத்துல போட்டுக் கொண்டேன்!!
நீக்குஅப்புறம்தான் புரிந்தது. அது சரி அப்பா பார்த்துவிட்டுக் கோபித்துக் கொள்ளவில்லையே.இல்லை தியேட்டரில் படம் பார்க்கறப்ப கோபிக்கலையே! பெரிய விஷயம்!
எங்க வீட்டுல இப்படி ஒன்னு நடந்திருந்தா என்ன ஆகிருக்கும்னு ஓசிக்கிறேன். இப்ப வேற ஒரு ஓசனையும் ஓடுது. கர்ணன் படம் வந்தப்ப பார்த்தாங்கனா இப்ப முஅஅ வின் வயசு என்னவா இருக்கும்னு!!!!
மிக்க நன்றி அதிரா
கீதா
ஹா ஹா ஹா இப்ப என்ன உங்களுக்கு என் வயசு தெரியோணும் அவ்ளோதானே?:)).. ச்சோ ஜிம்பில்:).. ஜுவீட் 16 தான் ஆகுது இப்போ நேக்கு:))..
நீக்கு1996 இல் வந்தது என நினைக்கிறேன் அப்படம்..
இல்ல அப்பா கோபிக்கவில்லை, ஏனெனில் நாம் ஒன்றும் பொய் சொல்லலியே, விளக்கம் கேட்காதது அவரின் டப்பூ:) ஹா ஹா ஹா..
பரவால்ல நீங்க ஜுவீட் 16 ன்னே சொல்லிக்கோங்க. நாங்க ஒரு வயசு தோராயமா வைச்சுக்குவோம்!!! ராணி ஆச்சியி கொள்ளுப் பேரனின் ஆச்சி!!
நீக்குgeethaa
அது மனோ அக்கா ஓவியமா, நானும் அவவின் போஸ்ட்டுக்கள் முன்பெல்லாம் ஒழுங்காப் போவேன், 2008 இல் இருந்தே நாமெல்லாம் ஒரு கூட்டமாக இருந்தோம், இப்போ எங்கே போகவும் நேரமும் மனமும் அமையுதில்லை.. சூப்பர் ஓவியம் நம்ப முடியவில்லை...
பதிலளிநீக்குஅது சரி பாட்டி என்ன சொன்னா? முடிவுக்காக மீ வெயிட்டிங்...
ஆமாம் மனோ அக்கா நல்லா வரைவாங்க.
நீக்குஇப்பலாம் எங்களுக்கும் மனம் அமைவதில்லை எழுதவும் கொள்ளவும். சும்மா அப்பப்ப தலைகாட்டுறோம்.
பாட்டி என்ன சொன்னா....வரேன் அது எழுதலையே....அதுக்கு முன்ன வேறு வரும்...
மிக்க முது...ஹையோ இப்ப கை ஸ்லிப்பு....முஅஅ!! நன்றி
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநலமா? முதலில் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிவு அருமை. தங்கள் பாட்டியுடனான பழைய அனுபவ நினைவலைகளை சுவாரஸ்யமாக படித்தேன். எங்கள் அம்மா வீட்டிலும், வாசலுக்கு செல்லக்கூட தடாதான். அம்மா, பாட்டியிடம் சொல்லாமல், பக்கத்து வீட்டு தோழியிடம் சென்று பேசக் கூட முடியாது. அவ்வளவு கண்டிப்பு.
நீங்கள் கடைசியில் பாட்டியின் சம்மதம் பெற்று அந்தப்படத்திற்கு அவர்களுடன் சென்றீர்களா? என அறிய ஆவல்.
சகோதரி மனோ சாமிநாதன் அவர்கள் வரைந்த ஓவியம் மிக அழகாக இருக்கிறது. முதலில் சாண்டில்யன் கதைக்கு வரையும் லதாவின் ஓவியமோ என நினைத்தேன். நீங்கள் தந்த விபரத்தில் படித்தப் பின் நம் மனோ சகோதரி அவர்களின் திறமை கண்டு வியந்தேன். அவர்களின் பன்முகத்திறமை கண்டு பிரமிக்கிறேன். அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
கரும்புலிகள் படங்கள் நன்றாக உள்ளது. அதன் விபரம் பற்றி அறிந்து கொண்டேன். (கரும்புலி, என்றாலும், சாதாரணபுலி என்றாலும், என்றாவது நம்மருகில் வந்து விடும் சந்தர்ப்பம் ஏற்ப்பட்டால் , நம் வயிற்றில் புளி கரைப்பதென்னவோ நிஜம்.:)) )
அத்தனைப்பகிர்வுக்கும் நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நலம் கமலாக்கா.....
நீக்குபாட்டி என்ன சொன்னாங்க?!!!! வரும்...
ஆமாம் கமலாக்கா மனோ அக்கா நல்லா வரைவாங்க....பாடுவாங்க..
//என்றாவது நம்மருகில் வந்து விடும் சந்தர்ப்பம் ஏற்ப்பட்டால் , நம் வயிற்றில் புளி கரைப்பதென்னவோ நிஜம்.:)) //
ஹாஹாஹாஹாஹா.....கமலாக்கா வார்த்தை விளையாட்டில் நீங்க புலி!!!
மிக்க நன்றி கமலாக்கா..
கீதா
சினிமா சென்ற அனுபவங்கள் சுவாரஸ்யம்! ஓவியம் மனோ சுவாமிநாதன் வரைந்ததா? வாவ்! என்ன ஒரு திறமை!
பதிலளிநீக்குமிக்க நன்றி பானுக்க. ஆமாம் மனோ அக்கா பன்முகத் திறமை கொண்டவர்.
நீக்குகீதா