ஒரு
புத்தம் புது சூட்டோடு சுடா பதிவு! அதனால எல்லாரும் கை பிடிச்சிட்டு நில்லுங்க. ஆ!
கீதாவான்னு வியந்து பார்க்கறப்ப தள்ளாடாம இருக்கணுமே!!!
நம்ம
அனுபிரேமுக்குத்தான் நன்றி சொல்லணும். 2018ன்னு நினைக்கிறேன். அவங்க தளத்துல இந்தக்
கோயில் பத்தி படங்களோடு போட்டிருந்தாங்க. சுற்றிலும் இயற்கை, குன்றுக்குக் கீழே ஆறு
ஓடும் படம் எல்லாம் போட்டிருந்தாங்களா, அவ்வளவுதான் எனக்கு அங்கு போகும் ஆசை வந்துவிட்டது.
வீட்டில் சொல்லி வைத்திருந்தேன். ஆனா அப்பதான் இங்கு என்ட்ரி. செட்டிலாகி முடிக்கறதுக்குள்ள
அடுத்தாப்ல கொரோனா. அப்புறம் ஏதேதோ காரணங்கள் போக முடியலை.
கடந்த சனிக்கிழமை இரவு. மறு நாள் ஞாயிறு அன்று சுதந்திர தின- மலர் கண்காட்சிக்கு லால்பாக் போலாமா? தக்ஷின திருப்பதிக்குப் போலாமா? ஒத்தையா ரெட்டையா போட்டு கடைசில அடுத்த வாரம் லால்பாக் போயிக்கலாம், இந்த ஞாயிறு தக்ஷின திருப்பதின்னு முடிவாச்சு.
ஞாயிறு அன்று காலை வீட்டில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு அப்பாவுக்கும் மதியம் வரை எல்லாம் தயார் செய்து வைத்துவிட்டு எங்களுக்குக் கையில் புளியோதரை, சேம்பு ரோஸ்ட், தயிர்சாதம், தண்ணீர் பாட்டில்கள் சகிதம் 7.50 மணிக்குப் புறப்பட்டு ஓசூர் சாலை வரை நடைப்பயிற்சியாக நடந்து அங்கு ஓசூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் நிறுத்தத்தில் கொஞ்சம் காத்திருந்து பேருந்தில் ஏறி - பயணச் சீட்டு நபர் ஒருவருக்கு ரூ 60. Push Back இருக்கை உள்ள பேருந்துகளில் ரூ 70 - ஓசூர் சென்ற போது மணி 9.30.
ஓசூர்
வரை மட்டும் செல்லும் பேருந்து என்றால் பேருந்து நிலையத்திற்குள் செல்லும். கிருஷ்ணகிரி,
தருமபுரி, சேலம், சென்னை வரை செல்லும் பேருந்துகள் என்றால் சில பேருந்துகள் பேருந்து
நிலையத்திற்குள் செல்லாமல் எதிர்புறத்தில் 'மீனாட்சிபவன்' உணவகம் முன்னில் நிறுத்துவார்கள்.
கோயில்
அருகிலும், நெடுஞ்சாலை நிறுத்தத்திலும் கழிவறைகள் எதுவும் இருக்காது என்பது ஏற்கனவே
அறிந்த விஷயம் என்பதால் மீனாட்சிபவனில் காஃபி குடித்துவிட்டு, அப்படியான சமாச்சாரங்களையும்
முடித்துக் கொண்டு எதிரில் இருக்கும் பேருந்து நிலையத்திற்குச் சென்றோம். மணி 10 ஆகியிருந்தது.
பேருந்து வருவதற்குள் ஒரு சில தகவல்கள்.
ஓசூர் - கிருஷ்ணகிரி/சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் ஓசூரிலிருந்து 10 கிமீ தூரத்தில் காமன்தொட்டிக்கு அருகில் கோபசந்திரம் எனும் கிராமத்தில் ஒரு சிறிய குன்றின் உச்சியில் உள்ளது இந்த தக்ஷின திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்.
நம்
தோழி பணியாற்றிய பொறியியல் கல்லூரிக்கு (நம்மவர் உரையாற்றிய கல்லூரிதான்) இந்த வழித்தடத்தில்தான்
செல்ல வேண்டும் என்பதால் ஏற்கனவே சில முறை அந்தக் கல்லூரிக்குச் சென்ற அனுபவம் உண்டு
என்பதால் அந்த வழியில் பல கிராமங்களுக்கும் செல்லும் பேருந்துகள் எல்லாம் தக்ஷின திருப்பதி
நிறுத்தத்தில் நிற்கும் என்பதும் தெரியும். எதிர்புறத்தில் கோயிலுக்குச் செல்லும் பாதையில்
வளைவும் பார்த்ததுண்டு.
கூகுள்
பார்த்து நெடுஞ்சாலையிலிருந்து கோயிலின் தூரம் 1 கிமீ என்றும், பேருந்தில் சென்றால்
இறங்கி நடந்துதான் செல்ல வேண்டும் என்பதும் பார்த்து வைத்திருந்தேன்.
15
நிமிடங்கள் ஆகியும் நமக்கான பேருந்து வரவில்லை. நம்மவர், போறப்ப மட்டும் ஒரு ஆட்டோ
பிடித்து போய்விடலாம் என்று ஆட்டோகாரர் ஒருவரிடம் கேட்டால் ரூ 400 என்றதும் கொஞ்சம்
தயக்கம். அதன் பின் ரூ 380 என்றார். யோசித்த போது பேருந்து வந்திட அதிலேயே ஏறி அரை
மணி நேரப் பயணத்தில் தக்ஷின திருப்பதி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். இனி படங்களின்
வழி சுற்றுவோமா?
முதல்
படம் பேருந்து நிற்கும் இடம், எதிரில் கோயிலுக்குச் செல்லும் பாதை வளைவு தெரிகிறதா?
நெடுஞ்சாலையைக்
கடந்து கோயிலுக்கான பாதையில் ஒரு கிமீ தூரம்
நடந்தால் கோயிலை அடைந்துவிடலாம். இந்த தூரம் நடக்க முடியாதவர்கள் ஓசூரிலிருந்தே வண்டி
அமர்த்திக் கொண்டு செல்வது நல்லது. வண்டி வைத்துக் கொண்டால் கோயிலில் இருந்து கீழே
ஆற்றின் பக்கமும் செல்ல முடியும் என்பதால். நெடுஞ்சாலையில் இருந்து கோயிலுக்குச் செல்ல
எந்த வண்டியும் கிடைக்காது. கோயிலில் இருந்து நெடுஞ்சாலைக்கு வரவும் அங்கு வண்டி எதுவும்
கிடைக்காது. இது தற்போதைய நிலவரம். கோயில் புகழ் பெற்று வருவதால் இனி வரும் காலங்களில்
விஞ்ச் கூட வைச்சிருவாங்களா இருக்கலாம்.
நாங்கள்
நடந்து சென்றுவிடலாம் என்று சாலையைக் கடந்த சமயத்தில் ஏதேச்சையாக ஒரு ஆட்டோக்காரர்
வந்து கோயிலுக்குச் செல்ல வேண்டுமா என்று கேட்டிட, போகும் போது மட்டும் வைத்துக் கொள்ளலாம்
என்று ஏறிக் கொண்டோம். ரூ 40. வலப்பக்கம்
உள்ள இடம் கோயில் வளாகம். இதற்கும் முன்னே நுழைவுக் கம்பிகள் இருக்கும், வண்டிகள்
நிறுத்தவும் நிறைய இடம் இருக்கிறது. அதெல்லாம் கீழே காணொளியில் பார்க்கலாம்.
கோயில்
வளாகத்தின் நுழைவுப் பகுதியின் இடப்புறத்தில் இப்படிக் காட்சிகள். கோயில் அமைந்திருக்கும்
இடம் மிக அழகு. போகும் போது குன்றிலா என்று தோன்றும். (நெடுஞ்சாலையில் கோயில் நிறுத்தம்
வரும் முன்னரே கொஞ்சம் தூரத்தில் வலப்பக்கம் இக்குன்றும் கோயிலும் தெரியும்) சுற்றிலும் பள்ளத்தாக்கு. இடம் அழகோ அழகு. அமைதியான
இடத்தில் இயற்கையின் ஒலி மட்டுமே. காற்றும் ஆறும், மலைகளும் வயல்களும். சுற்றிலும்
அதிகம் வீடுகள் கிடையாது. உட்புறம் தான் வீடுகள்.
இப்படி
இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ஏறினால் மனதிற்குக் குதூகலம்....படிகள் அதிகம்
இல்லை. ஏறுவதும் சிரமம் கிடையாது. Flat ஆகத்தான் படிகள்
மிகச் சிறிய கோயில். ஒரு வீட்டின் ஹால் அளவே. அதில் திருப்பதி பெருமாள் எப்படி இருப்பாரோ அப்படியே இங்கும். இப்படி ஏறி உள்ளே செல்லலாம். அல்லது ஏறிவிட்டு இடப்பக்கம் அப்படியே நடந்து சென்று எதிரில் வாயில் தெரிகிறது இல்லையா? அப்படியும் நுழையலாம். காணொளியில் தெரியும். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. பெருமாளின் நேரே கருடாழ்வார் மற்றும் சன்னதியின் வெளியில் இடப்புறம் உற்சவரும் தாயாரும். அருகில் அர்ச்சனைச் சீட்டு வழங்கும் நபர். மற்றும் அர்ச்சகர் மட்டுமே உள்ளில்.
படத்தில் இடப்பக்கம் உயரமாக ஒன்று தெரிகிறது இல்லையா அதுதான் கொடிமரம் (கொடிமரம் என்று சொல்லியிருந்தேன்.எனக்கு அப்படித்தான் தோன்றியது பீடம் இருந்ததால் அதில் சாதம் இருந்தது. கோமதிக்கா அது விளக்குத் தூண். கொடிமரம் இல்லை என்று கருத்தில் சொல்ல மாற்றினேன். நெல்லை விளக்குத் தூண் இல்லை என்றிட மீண்டும் கொடிமரம்னு மாற்றிவிட்டேன், அக்காவும் மாத்திடச் சொன்னாங்க. மிக்க நன்றி கோமதிக்கா. மிக்க நன்றி நெல்லை) அதன் முழு படம் கீழே இடப்பக்கம்.
கொடிமரம். அடுத்த படம் தேங்காய் உடைக்கும் இடம் தனியாகத் தொட்டி போன்று. கொடிமரத்தின் வலப்பக்கம் எதிரே, அதாவது படத்தில், இருக்கிறது.
முதல்
படத்தில் வாயில் வழி ஏறும் போது எதிர்ப்புறம் வாயில் தெரியுமே அதுதான் இப்பக்கம். வலப்பக்கம்
கொடிமரம் இந்தப் படத்தில் தெரியவில்லை. மேலே கொடிமரம் படம் உள்ளதே. இந்த வாயிலின் எதிர்ப்புறம் ஒரு பெரிய ஹால்
போன்ற அமைப்பு, கூரையுடன் சுற்றிலும் திறந்த வெளி. அங்கு மடப்பள்ளி. கீழே உள்ள படத்தில் பின்பக்கம் தெரியும்.
கோயிலைச்
சுற்றி கம்பிகள் இருக்கு இல்லையா? அந்த மேடையிலும் அப்படியே பிரதட்சிணம் செய்யலாம். அல்லது கீழே வளாகத்திலும்
சுற்றி வரலாம். இப்படம் கேமராவில் எடுத்தது. இதே படம் கீழே இடப்பக்கம் உள்ளது மொபைலில்
எடுத்தது. இப்படத்தில் பின் பக்கம் தெரிகிறது இல்லையா அதுதான் அந்த ஹால் மேலே கூரை
மட்டுமே. பக்கவாட்டுகளில் திறந்த வெளி. (காணொளியில் தெரியும்.) அந்த ஹாலில் தான் மடப்பள்ளி.
அங்கிருக்கும் ஜன்னல் வழி பிரசாதம் கொடுக்கிறார்கள். பின்பக்கம் தெரிகிறது பாருங்க.
அங்கு கை கழுவ பைப்புகள் இருக்கின்றன. படத்தில் வலப்பக்கம் தெரிகிறது. கோயில் வளாகம்
மிகவும் சுத்தமாக இருக்கிறது.
இடப்பக்கம்
உள்ள படம் மேலே உள்ள அதே படம் மொபைலில் எடுத்தது.
வலப்பக்கப் படம் - இதோ சுற்றி நுழைவு இடத்திற்கு வந்தாச்சு. இவ்வளவுதான் மொத்தமே கோயில்.
ஒரு வீடு அளவிற்குத்தான்.
கீழே
உள்ள படங்கள் கோயில் வளாகத்தில் இருந்து சுற்றிலும் தெரியும் காட்சிகளின் படங்கள்
தென்பெண்ணை/பெண்ணை
ஆறு. பாலம் தெரிகிறது இல்லையா அதன் வழி உட்புறம் கிராமங்களுக்குச் செல்லும் வழி மற்றும்
தூரத்தில் தெரியும் மண் பாதை அடுத்துள்ள கிராமங்களுக்குச் செல்லும் பாதை, கார்கள் வண்டிகள்
செல்கின்றன.
காணொளி
3.41 நிமிடங்கள். முடிந்தால் பாருங்கள்.
கோயில் வளாகத்திலிருந்து இறங்கி வெளியில் செல்லும் போது வளாகத்தினுள்ளேயே இடப்பக்கம் ஒரு இடத்தில் சில படிகள் இறங்கினால் கழிவறைகள் இருக்கின்றன. ஆனால் பரமாரிப்பத்தில்லையோ என்று தெரிகிறது. காணொளியில் கடைசியில் பார்க்கலாம். குன்றிலிருந்து எடுத்த இன்னும் சில காட்சிகள் மற்றும் கீழே ஓடும் ஆற்றிற்கு எப்படிச் சென்றோம் என்பது பற்றி அடுத்த இரண்டாவது பதிவில் படங்களுடனும் காணொளியுடனும் வரும்.
------கீதா
wow சூப்பர் அக்கா...
பதிலளிநீக்குரொம்ப சந்தோசம், படங்களும், வர்ணனை வரிகளும், காணொளியும் அனைத்தும் மிக அழகு ....ரசித்தேன்
அந்த காணொளியில் பிரசாதம் ஆஹா மகிழ்ச்சி ..
முதல் படம் ரொம்ப அழகாக இருக்கு, நீங்க பெருசாவே போட்டு இருக்கலாம் செம்ம கிளிக் இப்படி எடுக்கணும் அடுத்த முறை....
எல்லா படங்களும் பெரிசாவே போடுங்க அப்ப தான் பார்வைக்கு சிறப்பா இருக்கும்.
உங்க படங்களை காணும் பொழுது அங்கயே சென்று வந்த சிலுசிலு எண்ணம் ...
அனுபிரேம்
மிக்க நன்றி அனு. நீங்க ரசிப்பீங்கன்னு தெரியும். ஆமாம் அனு இப்ப அங்க பிரசாதம் புளியோதரை கொடுத்தாங்க. சூப்பர்ல. சனிக்கிழமை நல்ல கூட்டம் இருக்கும் போல.
நீக்குமுதல் படம் ரொம்ப அழகாக இருக்கு, நீங்க பெருசாவே போட்டு இருக்கலாம் செம்ம கிளிக் இப்படி எடுக்கணும் அடுத்த முறை....//
போடறேன் அனு இனி. பதிவு நீளமா பெரிசாகிடும்னு எல்லாருக்கும் அயர்ச்சி வந்திடுமேன்னு இப்படிப் போட்டேன் இனி பெரிசாவே போடுறேன். அப்ப ரெண்டு மூன்று நாலு பதிவா போடணும் ஹாஹாஹா ஏன்னா நிறைய படங்களா எடுத்துத் தள்ளிடுவோமே நாமதான்!!!
எல்லா படங்களும் பெரிசாவே போடுங்க அப்ப தான் பார்வைக்கு சிறப்பா இருக்கும்.//
கண்டிப்பா போடறேன், அனு
உங்க படங்களை காணும் பொழுது அங்கயே சென்று வந்த சிலுசிலு எண்ணம் ...//
அனு உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். இப்ப நிறைய மாற்றங்கள் வந்திருக்கு இனியும் வரும்...கோயில் புகழடைய ஆரம்பிச்சிருக்கே....எனக்கு ரொம்பப் பிடிச்சுருச்சு இந்த இடமும் கோயிலும். ஆனால் இன்னும் கூட்டம் அதிகமானா கீழ ஆறும் ஓடுதே சுற்றுலாத் தலம் ஆக்கிடுவாங்களோ என்னவோ...
மிக்க நன்றி அனு
கீதா
கோவில் பற்றிய விபரங்கள் அருமை! புகைப்படங்களும் அழகு! தென்பெண்ணை சின்னதாக தெரிகிறது.
பதிலளிநீக்குவாங்க மனோ அக்கா. ஆறு பெரிதாகத்தான் இருக்கிறது அதாவது ஆற்றுப் படுகை விரிந்து ஆனால் தண்ணீர் இவ்வளவுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல் தென்பெண்ணை சிறிதாகத்தான் இருக்கு. எனக்கும் தோன்றியது. கர்நாடகா நந்திதுர்கத்திலிருந்து பிறந்து இங்கு ஓசூரில் கெலவரப்பள்ளி அணைக்குச் செல்கிறது. சின்னதாகத்தான் இருக்கிறது
நீக்குகோவில் பற்றிய விபரங்கள் அருமை! புகைப்படங்களும் அழகு!//
மிக்க நன்றி மனோ அக்கா
கீதா
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்/தக்ஷின திருப்பதி கோவில் பார்க்க அழகு . புதிதாக கட்டப்பட்ட கோவில் போல.
பதிலளிநீக்குபுளியோதரை,சேம்பு ரோஸ்ட், தயிர்சாதம், ஆஹா ! சூப்பர்.
படிக்கவே சுவை.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது., இயற்கை அழகுடன் அமைதியும் குடி கொண்டும் இருக்கும் இந்த மாதிரி இடத்தில் கோவில் கட்டும் போது.
ஆற்று பாலத்தோடு உள்ள படம் அருமை.
படி அழகு. பக்கத்தில் கை பிடி கம்பியுடன் படிகள் வய்தானவர்கள் ஏற வசதி.
கோவில் போக விரும்புபவர்களுக்கு நல்ல விவரங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்.
காணொளி அருமை. தொடர்கிறேன்.
புதிதாகக் கட்டப்பட்டதா என்று தெரியவில்லை கோமதிக்கா. அனு 5 வருஷம் முன்ன போயிருக்காங்க..இப்ப இப்படி நல்லா புதுப்பிச்சிருக்காங்க. பளிச்சுனு இருக்கு
நீக்கு//
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது., இயற்கை அழகுடன் அமைதியும் குடி கொண்டும் இருக்கும் இந்த மாதிரி இடத்தில் கோவில் கட்டும் போது.
ஆற்று பாலத்தோடு உள்ள படம் அருமை.//
மிக்க நன்றி கோமதிக்கா
படி அழகு. பக்கத்தில் கை பிடி கம்பியுடன் படிகள் வய்தானவர்கள் ஏற வசதி.//
ஆமாம் கோமதிக்கா. பிடிச்சிட்டு ஏறலாம். படிகள் ரொம்ப உயரமாவும் இல்லை
//கோவில் போக விரும்புபவர்களுக்கு நல்ல விவரங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்.//
பயனுள்ளதா இருக்குமேன்னு
//காணொளி அருமை. தொடர்கிறேன்.//
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
படங்கள் வெகு சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குவிளக்கம் நன்று காணொளியும் கண்டேன்.
மிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குகீதா
பதிலளிநீக்குதென் திருப்பதி என்ற பெயரில் எத்தனை திருப்பதிகள். ஆனால் ஒரிஜினல் திருப்பதியோ திருமலை என்றே சொல்லப்படுகிறது. குன்றின் மேல் பெருமாள் நின்றால் பெருமாள் திருப்பதி வெங்கடேசன் ஆகிவிடுவார் போலும்!. TTD ஸ்தாபித்த கோயில்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்,. அப்படிப்பட்ட ஒன்றா இந்தக் கோயிலும்?
புகைப்படங்கள் நன்றாக உள்ளன. காணொளி அவ்வளவாக திருப்தி ஆகவில்லை.
Jayakumar
ஆமாம் ஜெ கே அண்ணா நிறைய தென் திருப்பதி என்று இருக்கின்றன. கோயம்புத்தூரிலும் இருக்கு.
நீக்குஇக்கோயில் TTD கீழ் வரவில்லை என்று நினைக்கிறேன். தக்ஷின திருப்பதி சேவா ட்ரஸ்ட் - தக்ஷின திருப்பதி தேவஸ்தானம் என்று அறிவிப்பு பலகை இருக்கிறது. அடுத்த பகுதியில் தருகிறேன் படம்.
புகைப்படங்கள் நன்றாக உள்ளன. காணொளி அவ்வளவாக திருப்தி ஆகவில்லை.//
மிக்க நன்றி அண்ணா.
காணொளிகள் மொபைலில் எடுத்தேன். vertical ஆக. அதுவும் மக்கள் இல்லாமல் எடுக்க வேண்டும் என்று நினைப்பேன். கையில் கேமராவை பிடிப்பது போல் மொபைலைப் பிடித்து காணொளிகள் எடுக்க எனக்கு இன்னும் பழகவில்லை. அதுவும் பல இடங்களில் நடந்துகொண்டே எடுத்ததால் ஜம்பிங்க் இருக்கும் காணொளியில். என்னுடைய ஆர்வத்தில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அதுவும் நான் இப்படிக்காணொளிகள் எடுத்துக் கொண்டே இருக்கறப்ப கூட வரவங்களுக்கு பொறுமை இருக்க வேண்டும். ஒத்துழைப்பு வேண்டும். எனவே மனதில் ஒரு தயக்கத்தோடுதான் எடுக்க முடிகிறது. concentration இருப்பதில்லை. எங்கேனும் திட்டு விழுமோ அவசரப்படுத்துவாங்களோ பொறுமை இழந்துடுவாங்களே என்று....சின்ன சின்னதா எடுத்து கட் பண்ணிக் கோர்ப்பதால் திருப்தியாக வரவில்லைதான்.
அடுத்த முறை இன்னும் கவனமாக எடுக்கிறேன்....
மிக்க நன்றி ஜெ கெ அண்ணா.
கீதா
கீதா , கொடிமரம் இல்லை அது விளக்குத் தூண் பெருமாள் கோவில்களில் இருக்கும்.
பதிலளிநீக்குகொடிமரம் இப்படி இருக்காது .
ஓ அப்படியா கோமதிக்கா..எனக்குச் சந்தேகம் வந்தது ஆனால் நான் இப்படிப் பார்த்ததில்லை அல்லது கவனித்திருக்க வில்லை மற்ற கோயில்களில். கோயில் போன்ற விஷயங்களில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது. அத்தூணில் கீழே நான்கு பக்கமும் ஹனுமன், சங்கு, கருடன், சக்கரம் என்று மாலை குங்குமம் எல்லாம் போட்டு இருந்தது. புகைப்படம் எடுக்காமல் காணொளி எடுத்துவிட்டேன் அதில் இருக்கும். அதன் முன்னில் பீடம் இருந்தது அதனால் அப்படி நினைத்துவிட்டேன். புதுசா இப்படி இருக்கும் போல என்று.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா....மாற்றிவிடுகிறேன்
கீதா
கோவில் பற்றிய வர்ணணையும், மற்ற படங்களும் மிக அழகாக வந்துள்ளன.
பதிலளிநீக்குதூரத்தில் தெரியும் ஆறு, காணொளியில் தெரியும் பிரசாதம் எல்லாம் பார்த்துக்கொண்டேன்.
ஓசூர் போய், அங்கிருந்து பேருந்து, பிறகு ஒரு கிமீ நடை... அடுத்தடுத்த மாதங்களில் சென்றுவிடலாம். வெயிலும் இருக்காது.
கர்னாடக கோவில்களில் பெரும்பாலும் இந்த கல்லினால் ஆன தூண் உண்டு. பல புராதானக் கோவில்களில் வெற்றித்தூண் என்ற பெயரில் இது வழங்கப்படும். கொடிமரம், கோவில் வளாகத்துள் இருக்கும். இது கொஞ்சம் சிறிய கோவில் என்பதால் நுழைவாயிலுக்கு வெளியே இருக்கும்.
பெங்களூரில் பலப் பல கோவில்களில் இந்தக் கல்லால் ஆன தூண்களை கோவிலின் முன்பு பார்க்கிறேன்.
கோவில் பற்றிய வர்ணணையும், மற்ற படங்களும் மிக அழகாக வந்துள்ளன.
நீக்குதூரத்தில் தெரியும் ஆறு, காணொளியில் தெரியும் பிரசாதம் எல்லாம் பார்த்துக்கொண்டேன்.//
நன்றி நெல்லை.
ஆமாம் நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். அதாவது தீபாவளி சமயம் அல்லது அதுக்குப் பிறகு அந்த சீசன்ல இன்னும் மழை பெய்யுமே அப்ப ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடுமே. நல்லாருக்குமே என்று. இப்ப பாறைகளுக்குச் செல்ல முடிகிறது. அடுத்த பதிவில் ஆறு பற்றித்தான் அப்ப சொல்லறேன்.
கர்னாடக கோவில்களில் பெரும்பாலும் இந்த கல்லினால் ஆன தூண் உண்டு. பல புராதானக் கோவில்களில் வெற்றித்தூண் என்ற பெயரில் இது வழங்கப்படும். //
பார்த்திருக்கிறேன் நெல்லை இப்படி ஆனால் விவரங்கள் தெரியாது. அதிகம் போனதில்லையே...இப்ப உங்க மூலம் விவரம் தெரிகிறது.
கொடிமரம், கோவில் வளாகத்துள் இருக்கும். //
ஆமாம் வளாகத்துள்தான் இருக்கும். அது மட்டும் தெரியும் ஹிஹிஹிஹி...
//இது கொஞ்சம் சிறிய கோவில் என்பதால் நுழைவாயிலுக்கு வெளியே இருக்கும்.//
நுழை வாயில் எதிரேயும் இல்லை. அதாவது வளாகத்துள் நுழையறப்ப இல்லை. இது பெருமாள் இருக்கும் அந்த சிறிய கோயிலின் பெருமாளுக்கு எதிரே. சாதாரணமாக கொடிமரத்திலிருந்து பார்த்தால் நேரே இறைவன் சன்னதி தெரியும் இல்லையா? இங்கு அந்த இடம் சுவர். பெருமாளுக்கு (உட்புறம் அந்த விமானம் தெரிகிறது இல்லையா அது தான் பெருமாள் கர்பக்கிரகம். இடப்புறம் வலப்புறம் நுழைவாயில். புகைப்படத்தில் தெரியும். இரு நுழைவாயிலுக்கும் நடுவில் பெருமாளை நோக்கியபடி கருடன். கர்பக்கிரகத்தின் வெளியே பெருமாளின் வலப்புறம் சன்னதி என்றில்லாமல் உற்சவரும் தாயாரும் இருக்காங்க சுற்றி கம்பித் தடுப்புக் கயிறு. புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற அறிவிப்புடன்.
உள்ளே அமர்ந்து தியானம் செய்ய இடம் இருக்கு கூட்டம் இல்லாததால் அமர முடிந்தது. இவ்வளவுதான் வேறுசன்னதிகள் இல்லை. ஒரு வேளை இனி வரலாம் வளாகத்துள் நிறைய இடம் இருக்கு. ஆனால் congest ஆகாம இப்படியே இருந்தா ரொம்ப நல்லாருக்கு சுற்றி வரவும், இயற்கையையும் பார்த்துக் கொண்டு...செம காத்து பிச்சு உதறுது. மொபைல்ல படம் காணொளி எடுக்கறப்ப பயமா இருந்துச்சு கீழ விழுந்துருமோன்னு...ஸோ கவனமா பிடிச்சு அதனால கை அசைஞ்சு ஜம்பிங்க் நடந்துட்டே காணொளி எடுத்தப்பவும். பின்ன நம்மவர் விடு விடு என்று முன்னே வேகமா போய் தரிசனம் முடிச்சுட்டு எனக்காகக் காத்திருக்க பொறுமை இழந்துடுவாரோன்னு பயம் வேற!! ஹாஹாஹா
பெங்களூரில் பலப் பல கோவில்களில் இந்தக் கல்லால் ஆன தூண்களை கோவிலின் முன்பு பார்க்கிறேன்.//
பழைய ஏரியா கோயில்களிலும் பார்த்திருக்கிறேன் நெல்லை. ஆனால் உங்க அளவுக்கு விவரம் எல்லாம் தெரியாது.
இங்க இருப்பது கொடிமரம்னுதான் நினைத்தேன் ஏன்னா தூணின் அடியில் நான்கு புறத்திலும் பெருமாளை நோக்கியபடி கருடன் பின்னால் ஹனுமன் பெருமாளின் இஅடம் வலம் சங்கு சக்கரம் இருப்பது போல் தூணிலும். முன்னில் பலி பீடம். கீழே கல்லில் பெருமாள் திரு உருவம். அது காணொளியில் இருக்கும். அது கல்வெட்டு போல இருந்தாலும் கோயில் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.
நீங்க போனீங்கனா இன்னும் விவரங்கள் சொல்லுவீங்க. எனக்கோ காது சரி கிடையாது. எனவே பெரும்பாலும் வெளியாட்களிடம் பேச்சுக் கொடுப்பதில்லை காதுல விழணும்....அவங்க பேசறது புரியணுமே. நம்மவர் கூட இருக்கமாட்டார். அவர் வந்தமா தரிசித்தோமா போனமான்னு...ஹாஹாஹாஹா..
மிக்க நன்றி நெல்லை.
கீதா
இந்தக் கோவிலைப் பெரிதுபடுத்திப் பார்த்ததில், கொடிமரமே (இங்கு மரத்துக்குப் பதில் கருங்கல்) இங்கு கருங்கல் தூணாக எழுப்பப்பட்டுள்ளது. எப்போதுமே கொடிமரத்துக்கு வெளிப்புறம் பலிபீடம் உண்டு. இங்கு கல் தூணின் வெளிப்புறத்தில் பலிபீடம் இருக்கிறது. கல் தூணில் ஒரு பக்கம் ஆஞ்சநேயர், ஒரு பக்கம் கருடன் இருப்பார்கள் (கல்லிலேயே செதுக்கியிருப்பார்கள்)
பதிலளிநீக்குஆமாம் பலிபீடம் இருக்கு அதனாலதான் கொடிமரம் என்று நினைத்தேன். அதனாலதான் கொடிமரம் என்று எழுதினேன். இந்த ஒரு விஷயம் மட்டும் தெரியும் அதாவது கொடிமரத்தில் ஆஞ்சு, கருடன், இருப்பாங்கன்னும் இதுல சங்கு சக்கரம் இருந்தது....அதனாலதான் பதிவிலும் அப்படி சொல்லியிருந்தேன். ஆனால் கொடிமரத்துல கொடி ஏற்ற உச்சில இருப்பது போல் எதுவும் இல்லையே நெல்லை.
நீக்குஜெ கே அண்ணாவும் எதுவும் சொல்லலை....கோமதிக்கா நீங்கல்லாம் விவரங்கள் தெரிஞ்சவங்க அதனால அக்கா சொன்னதும் மாத்தினேன்.
இப்ப மீக்கு குழப்பம் போங்க.....ஹாஹாஹாஹா
மிக்க நன்றி நெல்லை
கீதா
கீதா மாற்ற வேண்டாம், நெல்லைத் தமிழன் சொல்வது சரியாக இருக்கும்.பலிபீடம் இருக்கிறது என்கிறார்.
பதிலளிநீக்குகோமதிக்கா பீடம் இருக்கிறது. அதுதான் உங்களுக்கும் பதிலில் சொல்லியிருந்தேன். படத்திலும் தெரியும்...காணொளியிலும் இருக்கும். ஆனால் எனக்கு விஷயங்கள் எதுவும் சரியாகத் தெரியாது இல்லையா.....அதனால்தான்.
நீக்குசரி அக்கா மாற்றி விடுகிறேன்!!! ஹாஹாஹாஹா எனக்கு இப்படியான விஷயங்கள் உறுதியாகத் தெரியாததால் ஒரே குழப்பம் போங்க...ஹாஹாஹா..
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
காணொளி மீண்டும் பார்த்தேன், நன்றாக இருக்கிறது, பின்னனி இசை சேர்ப்பு அருமை. பலிபீடம் தெரிகிறது.
நீக்குமீண்டும் காணொளி பார்த்தமைக்கு நன்றிகோமதிக்கா. யுட்யூப் ல இருக்கும் ஆல்பம்லதான் எடுத்தேன்.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
புளியோதரை, சேம்பு ரோஸ்ட்.. ஆ... நானும் வந்திருக்கலாமோ...
பதிலளிநீக்குஹாஹாஹாஹா நீங்க அன்று ஸ்ரீரங்கம் பயணம். பரவால்ல ஸ்ரீராம் பங்களூர் வாங்களேன். அதாவது வீட்டுக்கு. செஞ்சு தரேன்!!!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
இது என்ன காம்பினேஷன்? தயிர்சாதம் சேம்பு ரோஸ்ட் சூடா சூப்பராக இருக்கும். புளியோதரைக்கு சேம்பு மோர்கூட்டு இல்லை தேங் அரைத்த கூட்டு இல்லை ரெய்த்தா நல்லாருக்கும்
நீக்குஹாஹாஹாஹா ஹையோ நெல்லை இதை நேத்தே எதிர்பார்த்தேன் சொல்லுவீங்கன்னு....சூடா நல்லருக்கும் தான்,
நீக்குஅதுதான் அன்றைய மெனு. மாத்த முடில திடீர்னு கிளம்பினதுனால மெனு மாத்த முடில ராத்திரி வேறு....கடைக்குப் போய் காய் வாங்கி வந்துனு...
நீங்க சொல்ற காம்பினேஷன் இவங்க வீட்டுல. அவியல் உண்டு.
சேம்பு ரோஸ்ட் கொண்டு போக சௌகரியம் இல்லையா...கூட்டுனா அதை எடுத்துச் செல்ல,,,,எலலமே அலுமினியம் ஃபாயில் ல பேக் பண்ணி அதான். பரவால்ல சேம்பு ஓரளவு கிரிஸ்பியா இருந்தது. ஓவன்ல போட்டு ரோஸ்ட்!!!
நன்றி நெல்லை
கீதா
இத்துனூண்டு தூரத்துக்கா 400, 380 என்று கேட்டார் அந்த ஆட்டோக்காரர்? சென்னையிலிருந்து அங்கு சென்றிருக்கும் ஆட்டோக்காரரோ? கோவிலின் அருகே வந்த ஆட்டோக்காரர் உள்ளூர்க்காரர் போல!
பதிலளிநீக்குஓசூரிலிருந்து 10 கிமீ. ஸ்ரீராம். நாங்கள் கேட்டது ஓசூர் பேருந்துநிலையத்திலிருந்து. அதனால்தான் கேட்டார். எங்களுக்குக் கட்டுப்பிடியாகுமான்னுதான் யோசித்தோம். விலைவாசி ஏற்றத்தில் சரியாகத்தான் இருக்கும்னு அப்புறம் தோன்றியது. ஏனென்றால் கோயில் நிறுத்தத்தில், இறங்கியதும், வந்த ஆட்டோக்காரர், கோயிலுக்கு ச் செல்லும் ஒரு கிமீ தூரப் பாதையிலிருந்து வந்தார் உள்ளே யாரையோ விட்டுவிட்டு வந்திருக்கிறார் அதனால் அப்படியே எங்களை விட்டிடட்டுமா என்று கேட்டார். ஒரு கிமீ 40 ரூ அப்ப கணக்குப் பண்ணிப் பாருங்க....10 கிமீ தூரம். சரியாச்சே!!!!!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
நான் ஸ்ரீரங்கம் சென்ற நாளில் நீங்கள் இங்கு சென்றீர்களோ.. அப்படித்தான் தெரிகிறது.
பதிலளிநீக்குஆமாம் அதே அதே....
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஓசூர் பேருந்து நிலையத்தின் பின்னாலேயே ஒரு மலைக்கோவில் போல ஒன்று இருக்கிறது. நன் ஓசூர் சென்ற ஒரு முறை அதைப் பார்த்து வந்தேன்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் அது மலைக்கோயில்தான். சந்திரசூடேஸ்வரர் கோயில். சிவன்.
நீக்குபாறைகள் அடுக்கிய குன்று போல நிறைய படிகள் உண்டு, ஓசூர் பேருந்து நிலையத்தின் அருகில் என்றால் அது 4 கிமீ தூரத்தில். சானசந்திரம் எனும் நிறுத்தம். ஆனால் இப்ப போனமே இதே ரோட்ல 4 கிமீ தூரத்தில். அடுத்த விசிட் அங்கன்னு திட்டம் இருக்கு. அது மிகப் பழமையான கோயில். வெயில் குறைந்து குளிர் தொடங்கியதும் போணும். படிகள் ஏறணுமே...
நீங்க போயிருக்கீங்க்ளா இந்தக் கோயில், ஸ்ரீராம்
மிக்க நன்றி ஸ்ரீராம்.
கீதா
இயற்கை அழகு கொட்டிக் கிடக்கின்றது..
பதிலளிநீக்குகண்கவர் படங்கள்..
தக்ஷிண திருப்பதி குறித்து சிறப்பான செய்திகள்..
ஆமாம் துரை அண்ணா. இடம் செம அழகு. அமைதியான இடம்.
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
பதிலளிநீக்குதாங்கள் சொல்லியிருப்பது போல கொடிமரம் / துவஜ ஸ்தம்பம் அல்ல..
அது விளக்குத் தூண் / தீப ஸ்தம்பம்..
கொங்கு தேசத்தில் சிறப்பாக காணப் பெறும். .
ஓ! அப்படியா? கோமதிக்காவும் அதைத்தான் சொல்லிருந்தாங்க நான் விளக்குத் தூண் என்று மாற்றிட்டேனே....
நீக்குகொடிமரம் இங்கெல்லாம் இப்படி இருக்கும் என்று நெல்லையும் (நானும் அப்படித்தான் முதலில் சொல்லியிருந்தேன். எனக்கு அவ்வளவாக இதெல்லாம் தெரியாது துரை அண்ணா....நீங்களும் கோமதிக்காவும் அதை விளக்குத் தூண் என்று சொல்லியிருக்கீங்க.
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
இதுபோல் மன்னார்குடில உண்டு. விளக்குத் தூண் இல்லை (எப்படி விளக்கு ஏத்துவாங்க?) இது சம்பந்தமா ஞாயிறு பதிவு போடறேன்
நீக்குகோமதிக்காவுக்கும் அந்த வீடியோல ஃபோட்டோ எடுத்து அனுப்பினேன் அப்ப அவங்களும் சொன்னாங்க பலிபீடம் தெரியுதேன்னு...
நீக்குகாலைல அக்கா கமென்ட் கொடுத்திருக்காங்க நெல்லை சொல்லிருப்பது சரின்னு....மாத்திடுங்கன்னு நானும் மறந்து போயிட்டேன் இப்ப மாத்திடறேன். ஏன்னா எனக்கும் கொடிமரம்னேதான் தோன்றியது. வீடியோல திரும்பவும் நானும் பார்த்தேன். நல்லா தெளிவா இருக்கு பீடம், ஆஞ்சு, கருடன் சங்கு சக்கரம் எல்லாம்...
ஞாயிறு போடுங்க, நெல்லை தெரிஞ்சுக்கறேன்,
மிக்க நன்றி நெல்லை.
கீதா
நன்றி நெல்லை. மாற்றிவிட்டேன்.
நீக்குகீதா
இப்போதுதான் இக்கோயிலைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா. வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள். நன்றாக இருக்கிறது.
நீக்குமிக்க நன்றி ஐயா
கீதா
கோவில் தகவல்கள், படங்கள் என் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி. உங்க மகளைப் பார்க்க வரப்ப போய்ட்டு வாங்க டிடி. ரொம்ப அருமையான இடம். இப்ப கூட்டம் இல்லை கூட்டம் கூடுறதுக்குள்ள போய்ட்டு வந்திருங்க. இயற்கை அழகு!!!!! எனக்கு ரொம்பப் பிடித்தது. இயற்கையோடு கோயில்
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. தக்ஷிண திருப்பதி கோவிலின் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது பதிவும், கருத்துக்களும் படித்து பல விபரங்கள் தெரிந்து கொண்டேன். இந்தக் கோவில் நான் கேள்விபட்டதில்லை. (எந்த கோவிலைதான் நீ கேள்விபட்டிருக்கிறாய் என மனசாட்சி இடிக்கிறது. :))) )
கோவிலுக்கு செல்லும் தூரங்கள் பற்றிய கணக்கும், அங்குள்ள இயற்கை காட்சிகளின் விஸ்தரிப்பும் , நதிதீரத்தின் அழகும், கோவிலின் அமைப்புமாக நல்லா விபரமாக சொல்லியுள்ளீர்கள். எனக்கும் அங்கு செல்லும் ஆவல் வருகிறது. இறைவனும் விருப்பப்பட்டு அழைக்க வேண்டும். அதற்காக வேண்டிக் கொள்கிறேன்.
நீங்கள் கொண்டு சென்ற உணவுகள் நன்றாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து சாப்பிட இடம் வசதியாக இருக்கிறதா? நீங்கள் கொண்டு சென்ற உணவும் புளியோதரை. அங்கு அன்று பிரசாதமும் அதுவேதான் போலும்.! (பெருமாள் கோவில்களின் முக்கால்வாசி பிரத்தியேக பிரசாதம்.லட்டும் சிலசமயம் கிடைக்கும். ) கோவிலின் சுற்றுப்புறங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. காணொளியும் கண்டேன்.
நேற்று பதிவுக்கு வர இயலவில்லை. அதனால் இன்று நான்தான் கடைசியாக தாமதமாக வந்துள்ளேன். பொறுத்துக் கொள்ளவும். அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தக்ஷிண திருப்பதி கோவிலின் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது பதிவும், கருத்துக்களும் படித்து பல விபரங்கள் தெரிந்து கொண்டேன். இந்தக் கோவில் நான் கேள்விபட்டதில்லை. //
பதிலளிநீக்குகமலாக்கா நானும் அனுவின் பதிவிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். அது மாதிரி இப்ப நீங்க என் பதிவிலிருந்து தெரிஞ்சுக்கிட்டீங்க. அவ்வளவுதான்
//(எந்த கோவிலைதான் நீ கேள்விபட்டிருக்கிறாய் என மனசாட்சி இடிக்கிறது. :))) )//
அதுக்கு எதுக்கு இப்படி சொல்லிக்கணும் கமலாக்கா...நெவர்!!! நோ. எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்காது. தெரிந்திருக்க வேண்டியதும் இல்லை கமலாக்கா. நாம் எல்லோரும் ஏதோ ஒன்றை தினமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் தெரிந்துகொண்டுதான் இருக்கிறோம். இதுக்கெல்லாம் போய் இப்படி ஃபீல் பண்ணக் கூடாது ஹாஹாஹாஹாஹா!!!
//கோவிலுக்கு செல்லும் தூரங்கள் பற்றிய கணக்கும், அங்குள்ள இயற்கை காட்சிகளின் விஸ்தரிப்பும் , நதிதீரத்தின் அழகும், கோவிலின் அமைப்புமாக நல்லா விபரமாக சொல்லியுள்ளீர்கள். எனக்கும் அங்கு செல்லும் ஆவல் வருகிறது. இறைவனும் விருப்பப்பட்டு அழைக்க வேண்டும். அதற்காக வேண்டிக் கொள்கிறேன்.//
நன்றி அக்கா. கண்டிப்பாக நீங்களும் போய் பார்ப்பீங்க பாருங்க! வாய்ப்பு கிடைக்கும்.
அங்கு உட்கார்ந்து சாப்பிட இடம் வசதியாக இருக்கிறதா?//
அதெல்லாம் நிறைய இருக்கு கமலாக்கா...அடுத்த பதிவுல சொல்லறேன், கமலாக்கா
காட்சிகள் உண்மையாவே ரொம்ப அழகு கமலாக்கா. நமக்கு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும். அங்கு வாழ்பவர்கள் பசுமையோடு இருக்காங்க..ஓசூரில் இப்படியான பல இடங்கள் இருக்கின்றன.
//நேற்று பதிவுக்கு வர இயலவில்லை. அதனால் இன்று நான்தான் கடைசியாக தாமதமாக வந்துள்ளேன். பொறுத்துக் கொள்ளவும். //
கமலாக்கா ப்ளீஸ்....பதிவு எங்க ஓடிடப் போகுது? தாமதமாக வந்தா என்ன? இதுக்கெல்லாம் போய் வருத்தப்பட்டுக் கொண்டு....!!!!
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
கோயில் குறித்த தகவல்கள், படங்கள் மற்றும் காணொளி என அனைத்தும் சிறப்பு. கோயில் நன்றாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி. உங்கள் கருத்திற்கு
நீக்குகீதா
மிகவும் தெளிவான படங்கள். பிராசீனமான கோவிலாக தெரியவில்லை,நவீனமாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம் பானுக்கா, இது பழமையான கோயில் இல்லை. புதிய கோயில் போன்றுதான் இருக்கு. 5 வருடங்கள் முன் நம்ம அனு பிரேம் பதிவில் தெரிந்து கொண்டேன். இப்ப புதுசு பண்ணிருக்காங்க
நீக்குமிக்க நன்றி பானுக்கா
கீதா
கோவில் சிறியது என்றாலும் வர்ண வேலைப்பாடுகளுடன் அழகாக காட்சி தருகிறது. கோவிலை சுற்றியுள்ள இயற்கை அழகு நெஞ்சை கொள்ளை கொள்கின்றன. தங்களுடைய வர்ணனையும் அழகாக இருக்கின்றன....
பதிலளிநீக்கு