வியாழன், 17 ஆகஸ்ட், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 24 - லால்பாக் மலர் கண்காட்சி - 2023 - 1


நுழைவு வாயிலின் வெளியில் சந்திப்பு + சிக்னல் இருக்கும் இந்த இடத்தில் இப்படியான பூச்சாடி வடிவங்கள் சாலையின்   நான்கு மூலைகளிலும் வைச்சிருக்காங்க. இன்னும் மெருகூட்டி அழகுபடுத்துவாங்க என்று தோன்றுகிறது. திறந்து வைச்சா உள்ளுக்குள்ள குப்பை, பூச்சி எல்லாம் குடிபுகாதோ!

வடக்கு நுழைவு வாயில்

மலர் கண்காட்சி பாக்க வாங்க வாங்க! வரிசையா வாங்க! இந்த வருடத்து – 2023 – சுதந்திர தின லால்பாக் மலர் கண்காட்சியில் எடுத்த படங்களுடன் சுறு சுறுப்பா வந்துவிட்டேன் பாருங்க! ஆனா, இதுக்கு முன்ன போன இடங்கள், படங்கள் அதெல்லாம் என்னச்சு? இருங்க அது ஒரு கூட்டம் இருக்கு. வரும்…வரும்….அதுல நிறைய தொகுக்க வேண்டியவை இருக்கின்றன. அதனால் நேரம் எடுக்கிறது.

சென்ற ஞாயிறு லால்பாக் மலர் கண்காட்சி கூட்டத்தில் நாங்களும் கலந்தோம். கலக்கலைனா எனக்கு இருப்பு கொள்ளாதே! நம்ம வீட்டவரும் வரார் என்றதும் நெல்லையும் அவர் மனைவியும் (அதான் அவர் ஹஸ்பண்டும்) அங்கு ஆஜர். கொஞ்ச நேரம் அங்கு பேசி சந்தோஷித்துவிட்டு (ஆற அமர எல்லாம் இல்லை அப்படியே நின்று கொண்டு) நெல்லை, இனிப்பு டப்பா கொடுக்க – நெல்லைனாலே ஸ்வீட்டுதானே நினைவுக்கு வரும்! ஊர் நெல்லைய சொன்னேன் -  நான் அவர்களுக்கு எதுவுமே கொண்டு போகலை!!! விடை பெற்ற பிறகு, அப்புறம் நாங்கள் அங்கு ஒரு 2 மணி நேரம் சுற்றிவிட்டு வீட்டிற்கு வழக்கம் போல் காஃபி நேரத்திற்கு வந்தாச்சு.

நாங்கள் வடக்கு வாயில் வழியாகத்தான் செல்வது வழக்கம். இந்த வாயிலின் நேரேதான் பெரிய மடிப்புப் பாறை இருக்கும். அந்தப் படம் எல்லாம் ஏற்கனவே போட்டாச்சு. அந்த வாயில் மற்றும் இதன் அருகே உள்ள கண்ணாடி மாளிகைக்குச் செல்லும் பகுதியில்தான் எல்லாக் கண்காட்சிகளும் நடைபெறுவது வழக்கம் என்பதால்.  

சென்ற வருடம்தான் என் வாழ்நாளிலேயே முதன் முறையாக மலர் கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு. இந்த வருடம் இரண்டாவது முறையாக. சென்ற வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். சென்ற வருடமும் சரி இந்த வருடமும் சரி, நாங்கள் கண்ணாடி மாளிகைக்குள் மலர்களால் வடிவமைக்கப்படும் வடிவங்களைப் பார்க்கவில்லை. அந்தப் பெரிய்ய்ய்ய்ய வரிசை கூட்டத்துல யாரு நிக்கறது. வேலைக்காவாது.

எனக்கு அதைப் பார்ப்பதிலும் ஆர்வம் இல்லை. அதை விட வெளிப்புறத்தில் பூந்தொட்டிகளை ஆங்காங்கே அடுக்கி அமைத்திருப்பதையும், பழைய மரங்களில் செதுக்கியிருக்கும் சிற்பங்களும் அதைச் சுற்றி அடுக்கியிருக்கும் மலர் தொட்டிகளையும் செடிகளையும் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். புதுசா நிறைய சிற்பங்கள். சென்ற முறையை விட இந்த முறை பல இடங்களிலும் மரங்களைச் சுற்றியும் ஆங்காங்கே தொட்டிகளிலும் பூச்செடிகள் அழகாக அடுக்கி வைத்திருந்தாங்க. இவை விற்பனைக்கல்ல.  

விற்பனைக்கானவை தனியாகப் பூச்செடி, மரக்கன்று, காட்டில் வளர்க்கப்படும் மூலிகை மரங்கள் என்று பண்ணைகள் கூடாரம் போட்டும், கூடாரம் போடாமல் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் திறந்த வெளி மர நிழலிலும் என்று விற்பனை செய்தாங்க. மூலிகையாகப் பயன்படும் உலர் பூக்கள் பற்றியும் ஒரு விழிப்புணர்வு கண்காட்சி இருந்தது. ஒவ்வொன்றாகப் படங்களுடன் வருகிறேன்.

நுழைவுச் சீட்டு பெரியவர்கள் ஒருவருக்கு ரூ 80. Camera Prohibited என்று அறிவிப்பு இருந்தது. நல்ல காலம் நான் கேமரா எடுத்துச் செல்லவில்லை. லால்பாகிற்குள் டிஜிட்டல் கேமராவுக்குத் தடை. மொபைலை அனுமதித்தார்கள். இதுதான் எனக்குப் புரியவில்லை.  சரி விடுங்க! எனக்கு மகிழ்ச்சி.

பூக்களால் வடிவமைக்கப்பட்டிருந்த விதான் சௌதா அலங்காரம் இருந்த அந்தக் கண்ணாடி அறைக்கு நின்ன வரிசை ஆஆவ்! பலரும் மொபைலைத் தூக்கிப் பிடிச்சிட்டு க்ளிக்கிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. பின்ன அப்படி ஒரு கூட்டம்! நாங்கள்தான் அதுக்குள் போகலையே! இந்த இடத்தில்தான் பூச்செடி நர்சரிகள், பண்ணைகளின் விற்பனைக் கூடாரங்கள். ஓரிரு பூச்செடி நர்சரிகள் அங்கு படம் எடுக்க – மொபைலிலும் - அனுமதிக்கவில்லை. மற்றபடி பல பூச்செடி விற்பனைக் கூடாரங்களிலும், வெளியிலும் படங்கள் எடுத்தப்ப எதுவும் சொல்லவில்லை. டபுள் டமாக்கா! பின்ன மொபைல் இருந்தா கை பரபரக்காதோ!!!

ஹான் சொல்ல விட்டுப் போச்சே! மலர் கண்காட்சியா தீனிக்கடைக் காட்சியான்னு சந்தேகம் வந்துவிட்டது. கூட்டமோ கூட்டம் பாருங்க!! கூடவே திருவிழால போடறாப்ல விளம்பரங்கள், விற்பனைக் கடைகள் வேற அமோகம் போங்க!

80 வயதான நீலகிரி/யூகாலிப்டஸ் மரத்தில் வரவேற்புச் சிற்பம் அதைச் சுற்றிலும் அழகாக அடுக்கப்பட்ட மலர்க் கூட்டம்- WELCOME SCULPTURE.

  

சிறிய காணொளி - வரவேற்புச் சிற்பமும் சுற்றி மலர்க்கூட்டமும்

நுழைந்ததும் ஆங்காங்கே ஒவ்வொரு மூலையிலும், செதுக்கப்பட்ட சிற்பங்களின் அருகிலும் சுற்றியும் அலங்கரிக்கப்பட்டு இருந்ததைக் க்ளிக்காம இருக்க முடியுமா எனக்கு? கை துறு துறு!! எடுத்த படங்கள் காணொளிகள் இந்தப் பதிவில் பகிர்கிறேன். அப்படியே சுற்றி நடந்து சென்ற போது ஆங்காங்கே எடுத்தவற்றை அடுத்தடுத்த பதிவுகளாக இடையிடையே பகிர்கிறேன். ஹப்பா! ஆசுவாசம்! 

வாயில் வழி நுழைந்து கொஞ்சம் நடந்து வலப்புறம் திரும்பினால் அங்கு பொன்சாய் தோட்டம். அந்த நுழைவு வாயிலின் முன் ஒரு புறத்தில் இப்படி அடுக்கி அழகுபடுத்தியிருந்தாங்க. பூக்களின் பெயர் கீழே 

எல்லாமே ஒரே குடும்பம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு உறவு. கலர் கலராய். பிரிச்சா அதுங்களுக்கு வருத்தமாகிடுமேன்னு எல்லாத்தையும் ஒண்ணா போட்டாச்சு ஸ்பீக்கர் போல இருக்கு இல்லையா! என்ன அழகு. க்ளிக்கித் தள்ளிட்டேன்.
இங்க மேலிருந்து இந்தப் படம் வரை உள்ள பூக்கள் - ALCEA ROSEA MIXED (HOLLYHOCKS/MALLOW)

 

காணொளில கொத்தா கூட்டமா பார்க்கலாம்

******************

இது TORENIA - WISHBONE FLOWER

FOLK SCULPTURE - நாட்டுப்புறக் கலைச்சிற்பம் – 80 வயது நாவப்பழமரத்துல


------கீதா

36 கருத்துகள்:

  1. இது ட்ரைலர்தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் வரும், அப்படித்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹஹா பானுக்கா! மெயின் பிக்சர்னு சொல்றது அந்த கண்ணாடி அறைக்குள் இருந்த விதாசௌதா படமா? அதுக்குள்ள நாங்க போகவே இல்லையே. பதிவில் சொல்லியிருக்கிறேனே. ஸோ வெளில அடுக்கி அழகு செய்திருந்த படங்கள்தான்..

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  2. உங்க சுறுசுறுப்புக்குப் பாராட்டுக்கள். நான் வெளியூர் செல்வதால் ஞாயிறு லால்பாக் வந்தேன். இல்லாவிட்டால் வாரநாட்களில்தான் வந்திருப்பேன்.

    படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....ஆமாம் சொல்லியிருந்தீங்க. தெரியும். எப்படியோ சந்திக்க முடிந்ததே.

      மிக்க நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  3. ஆ..  இந்த வருடத்து நிகழ்ச்சி இப்பவேவா?  லேசா கண்ணைக்கட்டுதே..  மயக்கம் வருதே...!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்துவிட்டேன், ஸ்ரீராம். எனக்கே ஆச்சரியம் கண்ணைக் கட்டிருச்சு!! படங்கள் நிறைய இருக்கே. கொஞ்சம் கொஞ்சமா போட வேண்டும். நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டாமா!
      மொபைலில் இப்பதான் எடுக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன். இதுவரை கேமரா அதில் ஒரு கயிறு இருக்கும் அதைக் கையில் மாட்டிக் கொண்டுவிட்டால் கேமரா ஸ்டெடியா கையில் இருக்கும். தைரியமாக எடுக்கலாம். மொபைல் அப்படி இல்லையே கவனமாக இருக்க வேண்டுமே! இல்லைனா கீழ விழுந்துவிடும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. பூச்சாடி மேலே திறந்து இருக்குன்னு ஏறி பார்த்தவர் யார்?!!  உள்ள பூசி இருப்பாங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூசுவாங்கதான். ஆனால் இதற்கு முன் போனப்ப இந்த இடத்தில் இருக்கவில்லை. மற்ற மூலைகளில் வைத்திருந்தாங்க. மூடியிருக்கவில்லை மெதுவாகத்தான் வேலைகல் நடக்குது போல! அப்ப சாடியை சுத்தம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். இப்ப மூடியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். மழைத்தண்ணீ வேற சேர்ந்திருமே. அதன் வெளியே இனி வடிவங்கள் வடிவமைப்பாங்க இல்லைனா வரைவாங்களா இருக்கலாம். அடுத்த முறை அந்தப் பக்கம் போறப்ப கவனிக்க வேண்டும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஒரு வேளை ஒரு சிறுவனை உள்ளே பூச அனுப்பி, அவன் திரும்ப ஏறி வர வழியில்லாமல், கத்தியும் யாரும் கண்டுகொள்ளாமல், அங்கேயே மயங்கிக் கிடந்தால்?

      உண்மையில் பூச்சாடி போல இருக்கு. மூடி இருப்பாங்க. அதாவது கழுந்து வரை மூடியிருப்பாங்க

      நீக்கு
    3. ஆ நெல்லை பயமறுத்தறீங்க. ஆனா அன்னிக்கு அவங்க ஏணி வைச்சுதான் செஞ்சாங்க நெல்லை. வெளியில் இருந்து ஒருவர் குரல் கொடுத்துக்கொண்டே இருக்க உள்ளே அவர் முழுவதும் இறங்கவில்லை உள்ளேயும் ஒரு ஏணி வைச்சு பெரிய ப்ரஷ் வைச்சு அடிச்சிட்டிருந்தாங்க...கூடவே உள்ளே விழுந்திருந்த இலைக் குப்பை எல்லாம் அள்ளி எடுத்து போட்டும்....

      ஆமாம் பூச்சாடி போலத்தான் இருக்கு....நீங்க சொல்றாப்ல கழுத்து வரை மூடிட்டு மேலே பூக்கள் தொட்டி வைப்பாங்களா இருக்கலாம்...

      என் கற்பனை என்னவோ பெரிசா போகுது....அவங்க என்ன ப்ளானோ?

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  5. 80 வயது யுக்கலிப்டஸ் மரம் வெட்டப்பட்டிருக்கிறதா, இல்லை முழுசாக உயிருடன் இருக்கிறதா?  காணொளியிலும் அது குழப்பமாகவே இருக்கிறது!  பின்னர் வரும் நாவல் மரம் வெட்டப்பட்டிருக்கிறது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம் வெட்டுவதில்லை. பொதுவாக உயிருடன் இருப்பதை அவங்க செய்யறது இல்லை. இறந்த நிலையில் இருக்கும் மரங்கள் அல்லது மழையில் முறிந்து விழும் மரங்களை வெட்டி அங்கு கிடத்தி வடிவங்கள் செய்வதைப் பார்த்தேன் போன முறை போனப்ப. அதாவது இறந்த மரங்கள் ஆங்காங்கே வெட்டின மரங்கள் இருந்தன. இப்படி வடிவமைக்கறாங்க. அடுத்த முறை போறப்ப இன்னும் வடிவங்களைக் காணலாம். இன்னும் இப்படி வடிவங்கள் செய்யப்பட்டவை வரும்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. பூப்பூவா பூத்திருக்கு.. பதிவு முழுக்க.. பூவிலே சிறந்த பூ எந்த பூ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா அதானே சிறந்த பூ எது!!! (சிரிப்பு!!) எல்லாமே அழகுதான். பூமியே அழகுதான். உள்ளுக்குள்ள சுத்தி வரப்ப மனம் அப்படி ஒரு மகிழ்ச்சியடையும். நிஜமாகவே லால்பாக் ஒரு பொக்கிஷம்!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. நெல்லையை சந்தித்தேன் என்கிறீர்கள்.  அவர் கையில் கேமிரா வைத்திருந்தாரா?  நிறைய படங்கள் எடுத்தாரா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், கேமரா எதுக்கு!! லால்பாகில் உள்ளே கொண்டு செல்லத் தடை. பதிவில் சொல்லியிருக்கிறேன். அவர் கையில் மொபைல் இருந்ததே! அவரும் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் உயரம் வேறு. எனவே அவர் உயரத்துக்கு இன்னும் நிறைய படங்கள் வித்தியாசமா எடுத்திருப்பார்!!! ஏன்னா மக்கள் கூட்டம், அதைத் தவிர்த்து எடுக்கணும்னா எனக்குக் கொஞ்சம் கஷ்டம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. அதுவும் நெல்லைக்கு மொபைலில் அட்டகாசமாகப் படம் எடுத்துப் பழக்கம்! மைசூர் அரண்மனைப் படங்கள் எப்படி இருந்துச்சு!!!!! கோயில் படங்களும்...

      கீதா

      நீக்கு
    3. மொபைல் வந்த பிறகு யாருக்குமே ப்ரைவசி கிடையாது. யாரை எப்போ படம் எடுக்கறாங்கன்னு யாருக்குமே தெரியாது.

      நீக்கு
    4. ஆமாம் நெல்லை அது உண்மை. நாம் கூட்டத்தில் இருப்பதை யார் மொபைல் ஷாட்டிலும் விழலாம்...அன்னிக்கு கூட எனக்குத் தோன்றியது. நாம யாரும் வராம எடுக்கணும்னு நினைக்கிறோம் ஆனா அவங்க அப்படி நினைப்பாங்களா? அன்னிக்கு தக்ஷின திருப்பதில கூட சில காணொளிகளில் மக்கள் ஃப்ரேமில் வந்திட்டாங்க கட் பண்ணித்தான் போட்டேன். அது போல அதனால்தான் நான் கூடியவரை மக்கள் இல்லாமல் படம் எடுக்க விரும்புவது. அலல்து தூரத்தில் கண்ணுக்கு கிளியரா புலப்படாத வகையில்னா...

      கீதா

      நீக்கு
  8. படங்கள் வெகு சிறப்பாக இருக்கிறது.

    நெல்லையை சந்தித்ததில் மகிழ்ச்சி

    காணொளி வேலை செய்யவில்லை பிறகு காண்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. காணொளிகள் கண்டேன் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி. காணொளிகளைக் கண்டமைக்கு!

      கீதா

      நீக்கு
  10. படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
    சுறு சுறுப்பா போட மனமும், நேரமும் ஒத்துழைத்து விட்டது , மகிழ்ச்சி.
    நெல்லைத்தமிழனையும் அவர் துணைவியையும் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி.
    பெரிய பூ ஜாடி, முதுமக்கள் தாழி போல இருக்கிறது.

    80 வயதான நீலகிரி/யூகாலிப்டஸ் மரத்திலும், 80 வயது நாவப்பழமரத்துலும் சிற்பங்கள் செதுக்கி இருப்பது அருமை.
    பூக்கள் எல்லாம் அழகு. காணொளியும் பார்த்தேன், பின்னனியில் குரல்கள் கேட்கிறது, சிறிய காணொளிகள் . நன்றாக இருக்கிறது.

    இது TORENIA - WISHBONE FLOWER இருக்கும் தொட்டியில் பல வண்ணத்தில் மலர்கள் இருக்கே எல்லாம் ஒரே செடியிலா? அல்லது பல வண்ணத்தில் பூக்கும் ஒரே ரக செடிகளா?

    ALCEA ROSEA MIXED (HOLLYHOCKS/MALLOW) வெண்டைக்காய் செடியில் வரும் பூ போல இருக்கிறது.

    இன்று இரவு முதல் உறவினர்கள் வருகை இணையம் பக்கம் வர முடியாது. இரண்டு , மூன்று நாட்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
      சுறு சுறுப்பா போட மனமும், நேரமும் ஒத்துழைத்து விட்டது , மகிழ்ச்சி.//

      மிக்க நன்றி கோமதிக்கா. போட்டுவிட்டேன் ...இன்னும் இருக்கிறதே...இதுக்கு முன்ன போன இடங்கள் படங்கள் இருக்கிறதே....அவை எல்லாம் கேமராவில் நெட்டுக்காக எடுத்தவை ஆனால் கணினியில் சேமிக்கறப்ப குறுக்காக இருக்கின்றன. தலைகீழாக, இப்ப அதை எல்லாம் மீண்டும் நெட்டுக்கா மாத்தணும். மாதிதான் தொகுக்க முடியும் அதான்...தாமதமாகிறது. மொபைலில் எடுப்பவை அந்தப் பிரச்சனை இல்லை. அதிகம் தொகுப்பு தேவைப்படுவதில்லை வாட்டர்மார்க் செய்வது தவிர.

      நெல்லைத்தமிழனையும் அவர் துணைவியையும் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி.//

      ஆமாம் அக்கா

      //பெரிய பூ ஜாடி, முதுமக்கள் தாழி போல இருக்கிறது.//

      எனக்கும் தோன்றியது. ஆனால் பூ ஜாடின்னே இருக்கட்டும் என்றும் இன்னும் அவங்க வேற அலங்கரிக்கலாம் அதில் என்பதால்..அப்படி

      //80 வயதான நீலகிரி/யூகாலிப்டஸ் மரத்திலும், 80 வயது நாவப்பழமரத்துலும் சிற்பங்கள் செதுக்கி இருப்பது அருமை.
      பூக்கள் எல்லாம் அழகு. காணொளியும் பார்த்தேன், பின்னனியில் குரல்கள் கேட்கிறது, சிறிய காணொளிகள் . நன்றாக இருக்கிறது.//

      அப்படி வயதான மரங்கள் பலவும் இல்ல அழகான சிற்பங்களாய் இருக்கு அங்க...காணொளியில் குரல்களுக்குப் பதில் இசை கோர்க்க நினைத்து மறந்துவிட்டேன் கோமதிக்கா...சரி போகட்டும்னு விட்டுட்டேன்.

      இது TORENIA - WISHBONE FLOWER இருக்கும் தொட்டியில் பல வண்ணத்தில் மலர்கள் இருக்கே எல்லாம் ஒரே செடியிலா? அல்லது பல வண்ணத்தில் பூக்கும் ஒரே ரக செடிகளா?//

      பல வண்ணங்களில் பூக்கும் ஒரே வகைதான் கோமதிக்கா. செடி தனி தனி ஒவ்வொரு கலருக்கும் அங்கு எல்லா வண்ணச் செடிகளையும்ஒரு தொட்டியில் வைச்சிருந்தாங்க அப்படித்தான் பெரும்பாலும் வளர்க்கறாங்க. இது மருந்திற்கும் பயன்படுதுன்னும் சொல்லப்படுகிறது...சரியாகத் தெரிந்து கொண்டு அப்புறம் எழுதுகிறேன் கோமதிக்கா.

      ALCEA ROSEA MIXED (HOLLYHOCKS/MALLOW) வெண்டைக்காய் செடியில் வரும் பூ போல இருக்கிறது.//

      ஆமாம். செம்பருத்தி குடும்பமாம். இதுவும் உணவில் சேர்த்துக்கலாம்னு சொல்றாங்க ஆனால் உறுதிப் படுத்திக் கொண்டு சொல்கிறேன்

      இன்று இரவு முதல் உறவினர்கள் வருகை இணையம் பக்கம் வர முடியாது. இரண்டு , மூன்று நாட்கள்.//

      ஓகே அக்கா. மகிழ்வான விஷயம். அவர்களுடன் சந்தோஷமாக நேரம் செலவிடுங்கள். அதுதான் முக்கியம். வலைப்பக்கம் இருக்கும் இங்குதானே...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  11. வந்தேன். கண்டேன். வழக்கமான பாராட்டுக்கள் தந்தேன். தொடர் பூ பதிவு தொடரட்டும். கொஞ்ச நாளா ஒரு புத்துணர்ச்சி தோன்றியிருக்கிறது.. ചാട്ടം.. ഓണം വരുന്നേ.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ചാട്ടം.. ഓണം വരുന്നേ - ஹாஹாஹாஹா! .....അതെ ഓണം വരുന്നു....പക്ഷെ சாட்டம்? அங்கு இருந்திருந்தா அது தனி. ஒரு வாரம் கொண்டாட்டம் உண்டே. இங்கு சும்மா தீனிதான்.

      //கொஞ்ச நாளா ஒரு புத்துணர்ச்சி தோன்றியிருக்கிறது//

      புத்துணர்ச்சி பதிவு எழுதுவதில்தான் குறைவானது. மற்ற பல வேலைகளால்..மத்தபடி புத்துணர்வுக்குக் குறைவில்லை....இப்ப இங்கும் கொஞ்சம் தலை நீட்டியிருக்கு. தொடர வேண்டும்.

      பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல நன்றாக வந்துள்ளது.

    தாங்கள் சகோதரர் நெல்லைத் தமிழரையும், அவரது மனைவியாரையும் சந்தித்துப் பேசியதற்கு மிக்க மகிழ்ச்சி.

    பூக்கள், மரச்சிற்பங்கள் படங்கள் அழகாக உள்ளது. நீங்கள் கூறியபடி, வெளியில் உள்ளதை மட்டும் பார்த்து விட்டு வந்து விட்டீர்கள் போலும்.. .வரிசையில் நின்று செல்வதைதான் ஒரே கூட்டமான எங்கள் வீட்டில் இதுவரை தட்டிக் கழித்திருக்கிறார்கள். நீங்கள் சொல்லித்தான் இப்படியும் பார்க்கலாம் என தெரிந்து கொண்டேன். அடுத்த முறை நானும் பிழைத்துக் கிடந்தால் இப்படியாவது சென்று மலர்களை கண்டு வரலாம். பார்க்கலாம்...! நடக்க நடக்க நாராயணன் செயல்.

    முதலில் உள்ள பெரிய கலர் ஜாடி மனதை கவர்கிறது. இந்த மாதிரி ஒரு நெற்குதிர் எங்கள் அம்மா வீட்டில் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் இருக்கிறது. இப்பவும் அது பத்திரமாக இருக்கிறது என எங்கள் மன்னி கூறினார்கள்.

    பூக்களின் கலர்களும் மனதை கொள்ளை அடிக்கிறது. மரச்சிற்பங்கள் வடிவமைப்பு நன்றாக உள்ளது. பூக்கள் வளர்ப்பு, மரத்தில் அழகான சிற்பங்கள் வடித்தல் எல்லாமே ஒரு கலைதானே..! நம் கண்களுக்கும் ஒரு விருந்து. எல்லாமே நன்றாக உள்ளது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா, மிக்க நன்றி உங்களின் விரிவான கருத்திற்கு. ஆமாம் அக்கா எல்லாருமே கூட்டம் என்று சொல்வது அந்தக் கண்ணாடி அறைக்குள் ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு தீம் வைத்து பூக்களால் அலங்கரிக்கிறார்களே அதைப் பார்க்கத்தான் கூட்டம். எங்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. வெளியிலேயே அழகாக ஆங்காங்கே அலங்காரங்கள் நன்றாக இருக்கும். இயற்கையுடனான அலங்காரங்கள். அடுத்த முறை கண்டிப்பாகச் செல்லுங்கள் அதுக்கு முன்ன குடியரசுதின மலர் கண்காட்சியும் வருமே. அதுக்கும் கூடச் செல்லலாம்.

      ஆமாம் அந்தப் பானை நெற்குதிர் போலவும் எனக்குத் தோன்றியது. தண்ணீர்ப்பானை என்று பல கற்பனைகள் விரிந்தது! தண்ணீர் வைத்து பொது மக்களுக்குத் தண்ணீர் விநியோகம் இருக்குமோ, என்றேல்லாம் கூடத் தோன்றியது.

      பூக்கள் பார்க்க அத்தனை அழகு மகிழ்ச்சியும் கூட. அதுவும் ஆங்காங்கே சிற்பங்கள் வேறு வைச்சிருக்காங்க. ரொம்ப அழகு.

      உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் கமலாக்கா.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  13. //லால்பாகிற்குள் டிஜிட்டல் கேமராவுக்குத் தடை. மொபைலை அனுமதித்தார்கள். இதுதான் எனக்குப் புரியவில்லை. சரி விடுங்க! எனக்கு மகிழ்ச்சி.//

    இங்குமட்டுமில்லை... நிறைய இடங்களில் இதுதான் நிலைமை... டிஜிட்டல் கேமராவுக்குத் தடை. ஆனால் மொபைலுக்கு அனுமதி.... இது ஏன் என்பதுதான் நமக்கும் புரியமாட்டேங்கீது.... ஆனால், ஒன்றுமட்டும் நன்றாகவே புரிகிறது... நம்மை இன்னமும் பைத்தியக்காரனாகவே நினைச்சிக்கிட்டு இருக்கிறானுக என்பது மட்டும் புரிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா நாஞ்சில் சிவா, பல இடங்களிலும் கேமராவுக்குத் தடை என்று அறிகிறேன். முதலில் எனக்கும் புரியவில்லை அதன் பின் இம்முறை எல்லாமே மொபைலில் எடுக்கும் போதுதான் தெரிந்தது.......கேமரா மூடித் திறக்கும் போது ஷட்டர் சத்தம் கேட்குமே....லால்பாகில் ஏன் தடை என்றால் அங்கு கூடு கட்டும் சிறிய பூச்சி இனங்கள், வண்டுகள், தேனீக்களுக்கு கேமரா ஷட்டர் சத்தம் அமைதியைக் கலைத்து அவற்றைப் பாதிக்கும் என்பதால்.

      மொபைலில் அந்த சத்தம் வரவில்லை எனவே அதுதான் காரணம் என்பது புரிந்தது சிவா. ஆனால் பாத்தீங்கனா விலங்கியல் பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தடை இல்லை. ஆனால் கேமராவுக்குக் காசு வாங்கறாங்க மொபைலுக்குக் காசு வாங்குவதில்லை இது ஏன்னு புரியலை!!!!

      அவங்க ஏன்னு விளக்கம் கொடுத்தா நல்லாருக்கும் என்று நினைக்கிறேன் என்ன சொல்றீங்க?!!

      //நம்மை இன்னமும் பைத்தியக்காரனாகவே நினைச்சிக்கிட்டு இருக்கிறானுக என்பது மட்டும் புரிகிறது...//

      ஹாஹாஹாஹா

      மிக்க நன்றி சிவா

      கீதா

      நீக்கு
  14. லால்பாக் படங்கள் நன்றாக இருக்கிறது.

    நண்பர் சந்திப்பு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மாதேவி...உங்கள் வருகை மிகவும் சந்தோஷம் அளிக்கிறது மாதேவி. எல்லா பதிவுகளுக்கும் கருத்தும் போட்டிருக்கீங்க மிக்க மிக்க நன்றி மாதேவி

      கீதா

      நீக்கு