தக்ஷின திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் பற்றிய முதல் பகுதியை இதோ இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்.
=====> முதல் பகுதி சுட்டி <=====
முதல் பகுதியை வாசித்தவர்கள், கருத்து சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி.
சென்ற பதிவிலேயே சொன்னது போல பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல பெருமாளின் இரு புறமும் தான் வாயில்கள். நேரே இல்லை. ஆனால் கொடிமரம் வெளியில் பெருமாளுக்கு நேரே ஆனால் அங்கிருந்து பெருமாள் தெரியமாட்டார். சுவர்!
கோயிலுக்குள் (ஒரே ஒரு சன்னதிதானே) அந்த இடத்தில் ஓரத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்து மாபெரும் சக்தியை தியானித்து விட்டு, தீர்த்தம், சடாரி, துளசி எல்லாம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்த போதுதான் சென்ற பதிவில் எடுத்த வெளிப்புறக் காட்சிகளும் இப்பகுதிக் காட்சிகளும்.
கோயில் வளாகத்தைச் சுற்றிலும் பள்ளத்தாக்கும் மலைகளும், ஆறும் என்பதால் எல்லோருமே குடும்பமாக வந்தாலும் சரி, காதலர்களாக வந்தாலும் (நிறைய பார்க்க முடிகிறது) Photo Shoot தான். Selfie எடுத்து தள்ளுகிறார்கள்.
என் கவலை பிரசாதம்! என்னடா இது? பாலாஜி ஏமாத்திட்டாரே பிரசாதம் கொடுக்காம! அதற்கான அறிகுறியே இல்லையே என்று நினைத்துக் கொண்டே கொடிமரத்தைக் க்ளிக்கி விட்டு கேமராவை திருப்பிய போதுதான் குன்றின் விளிம்பை ஒட்டிய அந்த பெரிய ஹால் கண்ணில் பட்டிட அங்குதான் மடப்பள்ளி. ஹாலை ஒட்டிய கம்பித் தடுப்பு வழி போனால் மடப்பள்ளி ஜன்னல் வழி பிரசாதம். அதானே பார்த்தேன்! பாலாஜியாவது சாப்பாடு கொடுக்காம அனுப்புறதாவது! அன்று பிரசாதம் புளியோதரை. பாலாஜிக்கு நன்றி சொல்லிட்டு சாப்பிட்டாச்சு!
பிரசாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டே அந்த இடத்திலிருந்து தெரிந்த இயற்கைக் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க ஆஹா!. சாப்பிட்டதும் பரபரன்னு க்ளிக்ஸ்! பல இடங்களில் பார்த்துக் கொண்டே இருந்தேன் லயித்துப் போய். நம்ம வீட்டவருக்குப் பொறுமை போய்விடக் கூடாதே! வீட்டவரோ முன்னில் வேகமாக நடக்க, நானும் சில காணொளிகளை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன்.
அடுத்து ஆற்றுப் பகுதிக்குச் செல்ல வளாகத்தின் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இப்ப வாங்க கோயில் குன்றிலிருந்து அழகான காட்சிகளைப் பார்த்துட்டு, அப்புறம் இறங்கிச் சென்று தென்பெண்ணை ஆற்றையும் பார்ப்போம்.
பிரசாதம் சாப்பிட்டு விட்டு அப்படிக் குன்றின் மீதிருந்து க்ளிக்கிய சில காட்சிகள் இதோ கீழே. இங்கு எடுத்த காணொளிகள் சென்ற பதிவின் காணொளியில் வந்துவிட்டன.
சென்ற பதிவில் தெண்பெண்ணை ஆறும் பாலமும் படம் போட்டிருந்தேன் இல்லையா அப்பாலத்தின் வழி செல்ல வேண்டும், தூரத்தில் தெரியும் கிராமத்திற்கு. என்ன அழகு! பாருங்க மலையும் காடும் வயல்களும் ஆறும் சுற்றி...குன்றின் மீதிருந்து பார்த்தால்தான் இவை தெரியும். கீழே ஆற்றிற்குப் போகும் போது கிராமம் தெரியாது. மரங்கள்தான்...அப்படம் கீழே இருக்கிறது. காணொளியிலும் பார்க்கலாம்.
என்ன அழகு இல்லையா? அங்கிருந்து வரவே மனம் வராது.
வளாகத்தின் வாயிலுக்கு வந்தாச்சு. அங்கு வாயிலை ஒட்டி இருக்கும் பலகை. கன்னடத்திலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கு. வெளியில் ஒரே ஒரு கடை. திருவிழாக்களில் இனிப்புகள், உப்புப் பண்டங்கள் விப்பாங்களே அப்படியான கடை.
********************************
வளாகத்திலிருந்து வெளியில் வந்ததும் நேரே தெரியும் சாலைதான் நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே கோயிலுக்கு வரும் சாலை. ஆற்றுக்குச் செல்ல இடப்புறம் சாலை தெரிகிறதா? இடப்புறம் சாலையில்தான் செல்ல வேண்டும். வாங்க என் கூட...1 கிமீ தூரம் நடக்க வேண்டும். நடந்து கொண்டேதான் காணொளி எடுத்தேன். காணொளி இப்பகுதி மட்டும் கொஞ்சம் குதிக்கும் தான்!!!
அந்தச் சாலையின் இருபுறமும் கொஞ்சம் காடு. வலப்புறத்தில் இப்படி ஒரு பகுதியைப் பார்த்ததும் மழை அதிகம் பெய்தால் காட்டாறு பாயும் பகுதி என்று தோன்றியது. க்ளிக்! காணொளியிலும் இருக்கிறது.
ஆற்றிற்குச் செல்லும் சாலையில் இடப்புறம் இப்படிக் குன்றும் கோயிலும் தெரியும் இது Zoom செய்து கேமராவில் எடுத்தது
மேலே உள்ள அதே - மொபைலில் Long Shot
மேலே உள்ள படத்தை எடுத்துவிட்டுக் கடந்ததும் ஆற்றை நெருங்கும் போது இப்படி இடப்புறம் ஒரு பரந்த வெளி. அதோ தெரிகிறதா சிறிய கோயில் போன்று? இந்தச் சாலை வழியும் ஆற்றுப்பகுதிக்குச் செல்லலாம். எனக்கு இப்படிச் சென்றும் அது என்ன என்று தெரிந்துகொள்ளவும் ஆவல், ஆனால் வீட்டவர் வலப்புறம் தார்ச்சாலையிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையில் - அதுவும் தார்ச் சாலைதான் ஆனால் மழையிலும் ஆற்று வெள்ளத்திலும் அரிப்பாகியிருக்கிறது. அப்படிச் சென்றால் பாலம் மற்றும் கிராமத்துக்குச் செல்லும் பாதை. கீழே உள்ள படம். நம்மவர் அப்படிச் செல்லலாம் என்று சொல்லியதால் அந்தச் சிறிய கோயில் என்ன என்றும் அதன் முன்னே பல கல் தூண்கள் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
மேலே முந்தைய படத்தின் கீழ் சொல்லியிருக்கிறேனே அதைக் கடந்து இச்சாலையில் வந்து இதோ பாலம் வந்தாச்சு. இடப்புறம் தெரியும் ஒற்றையடிப் பாதையில் ஆற்றிற்குச் சென்றோம்.
ஒற்றையடிப் பாதை வழியாக வந்து ஓடும் ஆற்றினைக் கண்டதும் என் மகிழ்ச்சியை எப்படிச் சொல்ல? இறங்கிக் குளிக்க ஆசை! ஆனால் முடியாது. அதுக்குத் தயாராகச் செல்லவில்லை. இப்பகுதி காணொளியில் இருக்கும். இங்கு பாறையில் அமரலாம் என்று நினைத்த போது பாலத்தில் அடியில் ஒரு குடும்பம், நாங்கள் நின்றிருந்த பகுதியில் ஒரு குடும்பம் அப்புறம் சற்றுத் தள்ளி இன்னொரு குடும்பம் எல்லாரும் பூஜையில் இருந்தார்கள்.
இப்பகுதியில் பல பாறைக் கற்களிலும் ஆற்றில் இருக்கும் கற்களிலும் கூட மஞ்சள் குங்குமம் பூசப்பட்டிருந்தது தெரிந்தது. அதை எடுக்க முயன்ற போது அப்போதுதான் ஒருவர் வந்து, இங்கு இவர்கள் பிண்டம் போட்டு திதி கொடுக்கிறார்கள் அதனால் நீங்கள் பாலத்தின் அந்தப் பக்கம் போய்டுங்க என்றார். சொன்னதோடு நின்றாரா!! தகவல் சொன்னதற்கு ஒரு வேளைச் சாப்பாட்டுக்குப் பணம் கேட்டார்! நம்மவர் ரூ 50 கொடுத்தார்!
நாங்கள் மீண்டும் ஒற்றையடிப் பாதை வழி சென்று பாலத்தின் மறுபுறம் இறங்கி ஒற்றையடிப் பாதையில் நடந்தோம். காணொளியில் இதுவும் தெரியும்.
பாலத்தின் மறுபுறம். இடப்புறம் அடியில் தெரியும் பகுதிக்குத்தான் முதலில் சென்றோம்.
இதோ இப்பாறைகளின் வழி நடந்து.....தண்ணீரின் அருகில் ...கீழே
ஆற்றின் காட்சிகள். காணொளியிலும் உண்டு
இந்த இடத்தில் தான் பாறையில் அமர்ந்து நாங்கள் கொண்டு சென்றிருந்த புளியோதரை, தயிர்சாதத்தைச் சாப்பிட்டோம். ஆடிப் பெருக்கு அன்று ஆற்றிற்குச் சென்று சாப்பிட்டு பல பல வருஷங்கள் ஆயிடுச்சு. இதை அப்படி நினைச்சு சாப்பிட்டோம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நாங்கள் இந்த இடத்துக்குச் சென்ற போது ஒருகுடும்பம் குளித்து விட்டு உடை எல்லாம் மாற்றிக் கொண்டுவிட்டுக் குழந்தைகளுடன் இப்படத்தில் தெரியும் பாறையில் அமர்ந்து கொண்டு கால்களைத் தண்ணீரில் போட்டுக் கோண்டு புகைபடம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்!
கொஞ்ச நேரம் இருந்து காணொளிகள் படங்கள் எடுத்து விட்டுக் கிளம்பினோம். எங்களை எடுத்துக் கொள்ளும் வழக்கம் கிடையாது. எனவே காட்சிகள் மட்டும்தான். போகும் போது கிளிக்ஸ். தூரத்தில் பாலமும் கோயிலும்
பாலமும் கோயிலும் கிட்டக்காட்சி..கொஞ்சம் ஜூம் செய்து கேமராவில்
ஆற்றுக்குச் சென்ற சாலையில் மீண்டும் கோயில் வாயில் நோக்கி வந்து இடப்புறம் திரும்பினால் நெடுஞ்சாலைக்குச் செல்லும் சாலையில் நடந்து இதோ நெடுஞ்சாலை அருகில் வந்தாச்சு...
இதோ நெடுஞ்சாலை தெரிகிறதா? வண்டிகள் தெரிகிறதே. இங்குதான் பேருந்து நிறுத்தம். இந்த வளைவைக் கடந்ததும் இடப்புறம் மர நிழலில் ஒரு 10 நிமிடக் காத்திருப்பில் பேருந்து வந்தது. இதோ தெரிகிறதே இதே பகுதியில் தான் நிற்கிறது பேருந்து. பேருந்தில் ஏறி ஓசூர் நோக்கி....எனக்கு டிக்கெட் கிடையாது. நம்மவருக்கு மட்டும்தான்...12 ரூ டிக்கெட்
பேருந்தில் இருந்து எடுத்த க்ளிக். என்ன என்று தெரிகிறதா? தொரப்பள்ளி நிறுத்தம். மூதறிஞர் ராஜாஜி நினைவு இல்லம் நுழைவு வாயில்
ஓசூர் வந்ததும் பேருந்து நிலையத்தில் இயற்கை அழைப்பை முடித்துக் கொண்டு 1.30க்கு பெங்களூர் செல்லும் பேருந்தில் ஏறி வீட்டை 2.30 மணியளவில் வந்தடைந்தோம். அரை நாள் பயணம் மட்டுமே நாங்கள் மேற்கொள்ள முடிகிறது. எங்களின், அப்பாவின் காஃபி நேரத்துக்கு வீட்டுக்கு வந்தாச்சு!
தென் பெண்ணை கடலில் கலக்குமிடம் கடலூர் (நான் பிறந்து வளர்ந்த ஊர்).
பதிலளிநீக்குஜெர்க் இருந்தாலும் காணொளி நன்றாக இருந்தது. படங்களுக்கும் காமெரா இந்த தடவை ஒத்துழைத்துள்ளது. புகைப்படங்களை பார்க்கும்போதே வெயில் அனல் நம் மேல் வீசுகிறது. நேரில் எப்படித்தான் சமாளித்தீர்களோ?
தென் திருப்பதி என்று குறிப்பிட்டீர்களே தவிர ஊர் பெயர் எங்கும் குறிப்பிட வில்லை. ஊர் பெயர் என்னவோ? கெலவரப்பள்ளியா?
Jayakumar
ஆமாம் ஜெ கெ அண்ணா உங்க ஊர்லதான் கலக்கிறது. அங்கு வரும் முன் பெரிய அகலமாக இருக்கும்.
நீக்குஜெர்க் இருந்தாலும் காணொளி நன்றாக இருந்தது. படங்களுக்கும் காமெரா இந்த தடவை ஒத்துழைத்துள்ளது.//
மிக்க நன்றி ஜெ கே அண்ணா.
வெயில் பார்க்க பளிச்சுனு இருந்தாலும் சென்னை வெயிலுக்குப் பழகியிருந்ததால் இது உரைக்கவில்லை. பங்களூரிலும் ரொம்பத் தெரிவதில்லை வெயில் இருந்தாலும்.
ஆஹா ஊர் பெயர் சொல்ல விட்டுப் போச்சா? முதல் பதிவில் சொல்லியிருந்தேன் என்று நினைத்துவிட்டேன் ஜெ கே அண்ணா..ஆனால் எழுதியிருந்தேன். வேர்டிலிருந்து காப்பி பண்ணி போட்டு, ப்ளாகர் பிரச்சனையில் சரி பதிவைச் சரி செய்த போது விட்டுப் போயிருக்கிறது. அங்கும் இங்கும் சேர்த்துவிடுகிறேன்.
ஊரின் பெயர் காமன்தொட்டி, கோபசந்திரம்.
கெலவரப்பள்ளி அணை இருக்கிறது. அங்கும் தென்பெண்ணை தான். அருவிகள் இரண்டு இருக்கின்றன. போக நினைத்திருக்கிறோம் ஆனால் அரை நாள்தான் பயணம் செய்ய முடியும் என்பதால் பார்க்க வேண்டும்
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
ஜெ கே அண்ணா இப்பதான் செக் பண்ணினேன்....முதல் பதிவில் இருக்கிறதே...இடம் எங்கு என்ற விவரம் கருப்பு கலரில் போல்ட்
நீக்கு//ஓசூர் - கிருஷ்ணகிரி/சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் ஓசூரிலிருந்து 10 கிமீ தூரத்தில் காமன்தொட்டிக்கு அருகில் கோபசந்திரம் எனும் கிராமத்தில் ஒரு சிறிய குன்றின் உச்சியில் உள்ளது இந்த தக்ஷின திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்.//
இதோ இப்படிக் கொடுத்திருந்தேன்...
கீதா
சடாரி துளசி எல்லாம் கைங்கர்யமாக சிலர் செய்கிறார்கள் என்று அறிந்தேன். ஸ்ரீரங்கத்தில் அப்படிதான்.
பதிலளிநீக்குஓ! அப்படியா....இது புதுத் தகவல். இங்கு அர்ச்சகரேதான் தருகிறார்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
கீதா
கோவில் அர்ச்சகர்(களில் ஒருவர்)தான் தரணும் ஆனால் அரசு கெடுபிடிகளாலும், சிலர் இந்த கைங்கர்யத்தைச் செய்ய முன்வருவதாலும் அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். (வயதானவர்கள்). அவர்கள், பக்தர்கள் 10 ரூபாய் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார்கள். கோவில் நிர்வாகத்திற்கும் பைசா செலவில்லாமல் ஒரு வேலை நடக்கிறது என்ற சந்தோஷம்
நீக்குபிரசாதம் எனக்கு எந்தக் கோவில் அருளப்பப்படவில்லை. கடைக்காரர்கள்தான் வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர். அந்தப் பக்கமே நான் செல்லவில்லை!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஆமாம் நீங்களும் எப்பவும் சொல்லிட்டே இருக்கீங்க. ஹூம் அவர் காதுல விழலை போல...நானும் பிரசாத கடைகளில் வாங்குவதில்லை. வீட்டவர் சில சமயம் வாங்குவார்!
நீக்குஇன்று மிக முக்கிய பணி கீதாக்கான பணி இருக்கே!!! ஹாஹாஹாஹா வெளில போணும் சுற்றத்தான்!!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஊர் சுற்றியவர்களை நானும் (நாங்களும்) சந்தித்தோமே
நீக்குபுளியோதரையா, அட... நமக்கு எப்போதும் வெண்பொங்கல் தான் வாய்க்கும்!
பதிலளிநீக்குஆமாம் புளியோதரைதான். இங்கு பல முறை போனாதான் பிரசாதம் மாறுமா என்று தெரியும். இப்பத்தானே இக்கோயில் பத்தி தெரிகிறது. இது பழமையான கோயில் என்று சொல்ல முடியலை, அடுத்த முறை உங்களுக்குப் புளியோதரை ப்ராப்திரஸ்து!!!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஸ்ரீராமுக்கு 'எந்தப்' புளியோதரையும் ஓகே என்ற எண்ணம் கிடையாது. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் புளியோதரைதான் அவர் விருப்பம். உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஒரு சில தமிழக கோவில் புளியோதரையைத் தவிர வேறு கோவில்களின் (திருப்பதி, மேல்கோட்டை போன்ற கோவில்கள் உட்பட) புளியோதரை, பிரசாதம் என்ற தன்மையைத் தவிர, ருசிப்பதில்லை
நீக்குபடங்கள் அந்த இடத்தின் அழகை எடுத்துக் காட்டுகின்றன.
பதிலளிநீக்குஅந்த சாலை... ஏதேதோ எண்ணங்களை மனதில் விதைக்கிறது!
பரந்த வெண்மேகங்களுக்கு கீழே கோவில் கோபுரம்.. அழகு.
ஆமாம் ஸ்ரீராம் அழகோ அழகு இடம்
நீக்குஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - உங்கள் வரிகளில் எண்ணங்கள் கவிதையாகிடட்டுமே!!
ஆமாம் வெண் மேகங்களின் கீழ் கோபுரம் அழகு! ஸ்ரீராம் போன பதிவில் குன்றின்மீதே எடுத்த படத்தில் கோபுரம் வானைத் தொட்டு மேகம் கலைந்து அந்த கோபுரத்தின் உச்சி படும் இடம் மட்டும் கலைந்திருப்பது போல படம் போட்டிருந்தேன்!!!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
தகவல் சொன்னதற்கு பணமா?
பதிலளிநீக்கு"ஸார்.. அதுதான் கோவிலா?"
"ஆமாம்... பத்து ரூபாய் கொடுங்க பதில் சொன்னதற்கு!"
ஹையோ சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்.
நீக்குநாம முறைச்சாலும் நம்ம வீட்டவர் கேட்கமாட்டார் எனக்குத்தான் திட்டு விழும். அதனால tight zipped lips!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
நீங்கள் கொண்டு சென்ற புளியோதரையையும், கோவிலில் கொடுத்த புளியோதரையையும் ஒப்பிடவும்!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா....ஹையோ சாமி குத்தம் ஸ்ரீராம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குநான் கொண்டு சென்றது திருநெல்வேலி புளியோதரை. கோயிலில் கொடுக்கப்பட்ட புளியோதரை கர்நாடகத்துப் புளியோதரை மைனஸ் வெல்லம் அண்ட் தேங்காய்த்துருவல். எள்ளு போட்டிருந்தாங்க. புளியோதரைக்கான பெருங்காயம் வெந்தயம் சுவை தெரியவில்லை. ஆனால் நன்றாக இருந்தது என் சுவை அரும்புகளுக்கு!!!!!!
கீதா
ஆனால் கணவர் 'No comments' என்று என் கேள்விக்கு பதில் சொன்ன நினைவு. ஹா ஹா
நீக்குகாலையில் தெய்வதரிசனம்.
பதிலளிநீக்குபடங்கள் மிக அழகு. இந்தக் கோவில் இந்த மாத்த்துக்குள் செல்லணும் என நினைத்திருக்கிறேன்.
கோவிலிலும் புளியோதரை. நீங்களும் அதையே எடுத்துச் சென்றிருக்கிறீர்கள். உங்களிருவருடனும் நானும் ஒரு ஞாயிறு, அனுமதி இருந்தால் வருகிறேன்.
மிக்க நன்றி நெல்லை. கண்டிப்பாக போய்ட்டு வாங்க.
நீக்கு//கோவிலிலும் புளியோதரை. நீங்களும் அதையே எடுத்துச் சென்றிருக்கிறீர்கள். உங்களிருவருடனும் நானும் ஒரு ஞாயிறு, அனுமதி இருந்தால் வருகிறேன்.//
தாராளமாக! அனுமதிக்கு என்ன! வாங்க வாங்க. அடுத்த முறை எப்ப போவோம்னு திட்டமிடுறப்ப சொல்றேன் நெல்லை. இப்ப சமீபத்தில் இருக்காது என்று நினைக்கிறேன். ஏன்னா இந்த மாதம் இறுதியில் வீட்டவரின் ஆஃபீஸ் வேறு இடத்துக்கு மாறுது. அதன் பின்தான் அடுத்த மாதத்துக்குப் பிறகுதான். புரட்டாசி ஆகிடும் ஆனா அப்ப சனிக்கிழமை கூட்டம் இருக்குமாம். பார்ப்போம் கண்டிப்பா சொல்றேன் நெல்லை
மிக்க நன்றி நெல்லை
கீதா
படங்கள் வெகு சிறப்பாக இருக்கிறது அவ்வப்போது விளக்கம் சொன்னது அருமை
பதிலளிநீக்குகாணொளியும் கண்டேன் நன்று.
படங்களைப் பற்றியும் அதன் விளக்கம் பற்றியும், சொல்லி காணொளியும் கண்டமைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குகீதா
படங்கள், காணொளி எல்லாம் மிக அருமையாக இருக்கிறது கீதா.
பதிலளிநீக்குகாணொளி சூப்பர் , ஆற்றின் ஓட்டம் நன்கு தெரிகிறது.
ஆற்றின் பக்கத்தில் இருக்கிறது, ஏற்றத்தில் வேறு இருக்கிறது கோவில் காற்று நன்றாக இருக்கும், அதனால் வெயில் தெரியாது இல்லையா?
பிரசாதம் புளியோதரை கிடைக்கும் போது எல்லாம் என் கணவரை நினைத்து கொள்கிறேன், ஸ்ரீராம் போல புளியோதரை எதிர்பார்ப்பார்கள் கோவில்களில்.
கோவில்களில் புளியோதரை தவிர வேறு பிரசாதங்கள் கொடுத்தால் சொல்வது ஒரு "புளியோதரை கொடுக்க கூடாதா "என்பதுதான்.
படங்கள், காணொளி எல்லாம் மிக அருமையாக இருக்கிறது கீதா.
நீக்குகாணொளி சூப்பர் , ஆற்றின் ஓட்டம் நன்கு தெரிகிறது.//
மிக்க நன்றி கோமதிக்கா. ஆமாம் அக்கா நல்ல செம காற்று. ஆமாம் வெயில் அவ்வளவாகத் தெரியாது அக்கா. திரும்ப பேருந்து ஏற ஆற்றின் கரையிலிருந்து சாலைக்கு 2 கிமீ தூரம் நடக்கணுமே. அதுவும் ஆற்றிற்குப் போறப்ப இறக்கம். வரும் போது ஏற்றம். ஆனாலும் ரொம்பத் தெரியவில்லை சென்னை அளவு எல்லாம் தெரியலை
//பிரசாதம் புளியோதரை கிடைக்கும் போது எல்லாம் என் கணவரை நினைத்து கொள்கிறேன், ஸ்ரீராம் போல புளியோதரை எதிர்பார்ப்பார்கள் கோவில்களில்.
கோவில்களில் புளியோதரை தவிர வேறு பிரசாதங்கள் கொடுத்தால் சொல்வது ஒரு "புளியோதரை கொடுக்க கூடாதா "என்பதுதான்.//
புரிகிறாது கோமதிக்கா. நினைவுகள்...மாமாவுக்கும் புளியோதரை பிடிக்கும்! ஆஹா..
பொதுவாகவே வேறு பிரசாதம் கொடுத்தாலும் புளியோதரை கொடுத்தால் நல்லது என்றே தோன்றும்....
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
மலையும் காடும் வயல்களும் ஆறும் குன்றின் மேல் இருந்து பார்க்க அருமையாக இருந்து இருக்கும். ஆற்றில் கால்களை நனைத்து கொண்டு, பாறை மேல் அமர்ந்து கொண்டு போன கட்டுசாதத்தை சாப்பிட்டால் சொர்க்கம்தான்.
பதிலளிநீக்குகோவில் முகப்பு அலங்கார வளைவு, போகும் பாதை, மலை மேல் கோபுர தரிசனம் அனைத்து படங்களும் அருமை. நீலவானம், வெண்மேகம் எல்லாம் அழகு.
ஆற்றில் தண்ணீரில் வெண் நுரைகள் தெரிகிறதே!. ஆறு படத்தில் கரையில் தெரியும் தென்னைமரங்களும் அழகு.
ஆமாம் கோமதிக்கா, நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது. ஆமாம் ஆற்றில் கால்களை நனைத்துக் கொண்டு சாப்பிட அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. சொர்கமேதான்..
நீக்கு//கோவில் முகப்பு அலங்கார வளைவு, போகும் பாதை, மலை மேல் கோபுர தரிசனம் அனைத்து படங்களும் அருமை. நீலவானம், வெண்மேகம் எல்லாம் அழகு.//
மிக்க நன்றி கோமதிக்கா
//ஆற்றில் தண்ணீரில் வெண் நுரைகள் தெரிகிறதே!.//
ஆமாம் முதலில் இறங்கிய இடத்தில் ஆறு வேகமாக ஓடியதில் அந்த நுரைகள். ஆனால் இப்பக்கம் வந்ததும் இப்பக்கத்தில் ஆறு கொஞ்சம் அழுக்காக இருந்தது போல் தோன்றியது. ஓரங்களிலும். ரொம்ப சுத்தம் என்று சொல்ல முடியவில்லை கோமதிக்கா. அப்படியான ஆற்றினைக் கண்டு பல வருஷங்கள் ஆகிவிட்டது. காட்டிற்குள், மலைப்பகுதிக்குச் சென்றால் நீர் சுத்தமாக இருக்கும்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
புகைப்படங்கள், விபரங்கள் அனைத்தும் அருமை! அந்த தனிப்பாறை தண்ணீரில் கிடப்பது ஆமை கால்களை விரித்துக்கொண்டு கிடப்பது போல இருக்கிறது. பாறைகள் இடையே செல்லும் நதியும் ஆகாயமும் மிகவும் அழகு!
பதிலளிநீக்குகைப்படங்கள், விபரங்கள் அனைத்தும் அருமை! //
நீக்குமிக்க நன்றி மனோ அக்கா
அந்த தனிப்பாறை தண்ணீரில் கிடப்பது ஆமை கால்களை விரித்துக்கொண்டு கிடப்பது போல இருக்கிறது.//
ஆஹா அழகான கற்பனை! ரசித்தேன் மனோ அக்கா
பாறைகள் இடையே செல்லும் நதியும் ஆகாயமும் மிகவும் அழகு!//
மிக்க நன்றி மனோ அக்கா ரசித்தமைக்கு
கீதா
படங்களும் விளக்கங்களும் அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி
நீக்குகீதா
இங்கெல்லாம் என்றைக்கு செல்வது?..
பதிலளிநீக்குஉங்களால் நானும் கண்டு கொண்டேன்..
பதிவும் படங்களும் அழகு..
அதானே..
பதிலளிநீக்குபாலாஜியாவது பிரசாதம் கொடுக்காமல் அனுப்புறதாவது!..
புளியோதரை வாழ்க!..
ஹாஹாஹா அதானே!!!!
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
பார்க்க ஆசையைத் தூண்டும் இடம். வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.
பதிலளிநீக்குவாய்ப்புகிடைக்கும் போது சென்று வாருங்கள், ஐயா
நீக்குமிக்க நன்றி திரு ஜம்புலிங்கம் ஐயா
கீதா
படங்கள் மற்றும் காணொளி வழி இந்த இடத்தினை நானும் கண்டு மகிழ்ந்தேன். சிறப்பான இடம், அமைதியான இடம் என்று தெரிகிறது. உங்கள் வழி நாங்களும் இந்த இடத்தினைக் கண்டு ரசிக்க முடிந்தது. நன்றி.
பதிலளிநீக்குஆமாம் வெங்கட்ஜி. மிக மிக அமைதியான இடம் இயற்கையோடு ஒன்றிய இடம். ஆறும் மலையும், கோயிலும் என்று ....அழகான இடம்
நீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி நீங்களும் கண்டு மகிழ்ந்ததற்கு
கீதா
ஒவ்வொரு படமும் கதை பேசுது அக்கா .. அருமையான காட்சிகள்
பதிலளிநீக்குதொடரட்டும் பயணங்கள் ..
அனுபிரேம்
மிக்க நன்றி அனு. உங்களால் அறிந்து கொண்ட இடம் இது!
நீக்குநீங்களும் படங்கள் காணொளிகள் எடுத்துப் பகிரும் நபராச்சே!!!!
பயணங்கள் நிஜமாகவே புத்துணர்ச்சி தரும் ஒன்றுதான்.
மிக்க நன்றி அனு
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. தக்ஷின திருப்பதி பற்றிய இரண்டாவது பதிவு மிக அருமையாக உள்ளது. கோவிலும், கோவிலின் சிறப்பும், அதை சுற்றியுள்ள இயற்கை காட்சிகளும், மிக நன்றாக உள்ளது. நீங்களும் படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து எடுத்துள்ளீர்கள்.நானும் ரசித்தேன்.
காணொளியும் இனிய பாடல் இசையுடன் நன்றாக உள்ளது. ஓடும் ஆற்றின் படங்கள் காணொளியில் நன்றாக உள்ளன. நீரின் வேகம் அதிகமாக தெரிகிறதே. இதில் குளிப்பதென்றால் அங்கு பழக்கமானவர்களுக்குத்தான் அதன் ஆழம் தெரியுமல்லவா..! ஆனாலும் நீச்சல் தெரிந்திருந்தால் அவர்களுக்கெல்லாம் ஆற்று நீரைக்கண்டதும் குளிக்கும் ஆசையும் வந்து விடும்.
புளியோதரை பிரசாதம் கிடைத்தது சிறப்பு. பாலாஜி ஏமாற்றவில்லை...:))
ஒரு தகவல் சொன்னவர் பணமும் கேட்டதுதான் வியப்பு. (கிழிஞ்சுது கிரிஷ்ணகிரி.:)) அதன் வழிச்சாலையில்தான் இக்கோவிலும் உள்ளதல்லவா?கருத்தில் நீங்கள் சொன்ன வழியை நோட் செய்து கொள்கிறேன். சமயம் வாய்த்தால் ஒரு முறை சென்று பார்க்க வேண்டிய கோவில், இடங்கள். ) எங்கு சென்றாலும் இப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். இவர்களை மாற்றவும் முடியாது. ஏமாற்றவும் முடியாது. நாம்தான் தயை தாட்சண்யம் பார்த்து ஏமாற வேண்டும்.
இக் கோவிலைப்பற்றிய விபரங்கள் அறிய வைத்த தங்களுக்கு மிக்க நன்றி. நேற்று பதிவுலகம் வரவில்லை. அதனால் இன்று தாமதமாக வந்துள்ளேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவு அருமை. தக்ஷின திருப்பதி பற்றிய இரண்டாவது பதிவு மிக அருமையாக உள்ளது. கோவிலும், கோவிலின் சிறப்பும், அதை சுற்றியுள்ள இயற்கை காட்சிகளும், மிக நன்றாக உள்ளது. நீங்களும் படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து எடுத்துள்ளீர்கள்.நானும் ரசித்தேன்.//
நீக்குமிக்க நன்றி கமலாக்கா நீங்களும் ரசிப்பீங்கன்னு தெரியும். உங்கள் கற்பனையும் சிறகடித்துப் பறக்கும்!!!!
நீரின் வேகம் அதிகம் ஆமாம் பழக்கம் இல்லாதவங்களுக்கு. நாங்கள் அமர்ந்திருந்த பாறைகளின் ஓரத்தில் ஆழம் இடுப்பளவு இருந்தது தெரிந்தது அங்கிருந்தவங்க இறங்கியப்ப. கால் வைத்து வைத்துதான் இறங்க வேண்டும். எனக்கு ரொம்ப ஆசையாக இருந்தது. எனக்கும் நீச்சல் தெரியும்தான் ஆனால் வருடங்கள் ஆகிவிட்டது. ஆழம் பார்த்துதான் இறங்க வேண்டும் என்றாலும் ஆற்று நீர் ஓடும் இடத்தில் தான் குளிக்க வேண்டும். ஒதுங்கும் இடத்தில் அழுககக இருந்தது.
பாலாஜி பிரசாதம் கொடுக்காம ஏமாத்தமாட்டார் நல்ல காலம் சர்க்கரைப் பொங்கல் இல்லை!!!! ஹாஹாஹாஹாஹா
(கிழிஞ்சுது கிரிஷ்ணகிரி.:))//
சிரித்துவிட்டேன் கமலாக்கா...பாருங்க உங்களுக்கு வருது வசனம்!!!!! ஆமாம் கமலாக்கா....கிருஷ்ணகிரி போகும் வழியில் ஓசூர் தாண்டி....அந்தச் சாலையில் இருக்கு. நோட் செய்து கொண்டால் மட்டும் போதாது ஓசூர் போகும் வழியில் அப்படியே கொஞ்சம் இடப்பக்கம் நம்ம வீட்டாண்டை வந்தா புளியோதரை தயிர்சாதம் கட்டுச்சாதமும் உங்களுக்குக் கட்டித் தருவேன்.....இல்லை கோயில் பார்த்துட்டு ஆத்தோரம் உங்க கற்பனையை சிறகடிக்கப் பறக்க விட்டு எபிக்குக் கதை அல்லது கவிதையை புனைந்துவிட்டு அப்படியே வரப்ப நம்ம வீட்டாண்டை வந்தீங்கனா காஃபி டிபன் சிரமப்பரிகாரம் ஆற்றிவிட்டுப் போகலாம்....ரெண்டும் கூட ஒகேதான்...!!!!!
ஆமாம் அப்படிக்காசு கேட்கறவங்க இருக்காங்கதான் என்ன செய்ய? கொடுப்பதும் கொடுக்காததும் அவரவரவருக்குப் ப்ராப்திரஸ்து!!!!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இனி இந்த தாமதம் எனும் வார்த்தை எங்கிட்டக் கூடாது!!!! ஹாஹாஹாஹா
மிக்க நன்றி கமலாக்கா!!!
கீதா
ஓ... ஓசூர் போகும் வழியில்தான் தங்கள் வீடா? எலகங்கா என்று முன்னாடி சொன்னதாக நினைவு. தற்சமயம் லால்பாக் அருகில் என நான் நினைத்தேன். எனக்கும் இங்கு வழிகள் எல்லாம் ஒன்றும் தெரியாது. மகன் அழைத்து வந்தால் உண்டு. தங்கள் வீட்டிற்கு வரச் சொல்லி அன்பான அழைப்பு விட்டதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன் சகோதரி.
நீக்குஇந்த தடவை லால்பாக் மலர் கண்காட்சியில் எப்படியாவது உங்களை சந்திக்கலாம் என மனசுக்குள் ஒரு கற்பனை வந்தது. அது குறித்து எ. பி ஞாயிறு பதிவின் கருத்தில் கூட சொல்லியிருந்தேன் . ஆனால் அதற்கும் கூட்டம், கண்காட்சிக்கு வரிசையில் சென்று வர தாமதமாகுமென மகன் சொல்லி விட்டார். கோவில் சமயம் வாய்த்தால் பார்க்கலாம். தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.
கமலாக்கா...நாங்க ஜிப்சி கூட்டம். அப்பப்ப சட்டிபானை தூக்கிடுவோம்! லால்பாக் மலர்க்கண்காட்சிக்கு எல்லாம் வரிசையில் நிற்கவே வேண்டாம் கமலாக்கா. அது சும்மா அலங்காரம். நாங்கள் அதுக்கெல்லாம் போவதில்லை. வெளியிலேயே நிறைய அலங்காரங்கள் வடிவங்கள் இருக்கும். ஆங்காங்கே. அப்புறம் வெவ்வேறு பூ பண்ணைகள் விற்பனைக்கும் வைச்சிருப்பாங்க. அதை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடுவோம். பதிவு போடறப்ப சொல்றேன். நீங்க எப்போ வருவீங்கன்னு எனக்கு சொல்லிருந்தீங்கன்னா அதுக்கு ஏற்றாற்போல நாம் திட்டமிட்டிருக்கலாமே அக்கா...இனி அப்படிப் பண்ணிட்டா போச்சு...வரப்ப முன்னரே எனக்கு மெயில் வழி ஒரு தகவல் கொடுங்க....விவரம்சொல்கிறேன்.
நீக்குமிக்க நன்றி கமலாக்கா
கீதா
இந்தக் கோவிலைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், ஒரு முறை செல்ல வேண்டும். பெருமாள் அழைக்க வேண்டும். படங்கள், குறிப்பாக தெண்பெண்ணை ஆறு மிக அழகு.
பதிலளிநீக்குபானுக்கா, வாய்ப்பு கிடைக்கறப்பா சிட்டா பறந்து போய்ட்டு வந்துடுங்க. அழகான இடம்...தென்பெண்ணை ஆறு அழகு...சுற்றி இடம் தான் கொஞ்சம் அழுக்கு!!! பாறைகளில் சோப்பு போட்டுத் துணி தோய்ச்சுருப்பது தெரியும். துணிகள் ஆங்காங்கே கிடக்கும்..
நீக்குமிக்க நன்றி பானுக்கா
கீதா
புளியோதரை மணக்கும் வைணவப் பயணம். ஓசூர் தாண்டி கிருஷ்ணகிரி போகும் வழியிலா? தக்ஷின் திருப்பதி! ஹ்ம்... தக்ஷின் முழுவதும் திருப்பதியேதான்..
பதிலளிநீக்குபடங்கள் ப்ரமாதம். தூரத்துக் கோவில், கிட்டக்க ஆறு.. பச்சைப் புதர்கள்... அமர்க்களம். யாரிந்த கோகுல கிருஷ்ணன்? நல்லா க்ளிக்கியிருக்கிறாரே.
வாங்க ஏகாந்தன் அண்ணா! ஆமா ஓசூர் தாண்டி கிருஷ்ணகிரி போகும் வழில ஒரு 10 கிமீ தூரத்தில் ! அதைச் சொல்லுங்க தஷின் முழுவதும் நிறைய இருக்கிறார் பாலாஜி!!!
நீக்கு//படங்கள் ப்ரமாதம். தூரத்துக் கோவில், கிட்டக்க ஆறு.. பச்சைப் புதர்கள்... அமர்க்களம். யாரிந்த கோகுல கிருஷ்ணன்? நல்லா க்ளிக்கியிருக்கிறாரே.//
மிக்க நன்றி அண்ணா!!!
கோகுல கிருஷ்ணன்!! ஹாஹாஹாஹா கோகுலக் கிருஷ்ணனிடம் சொல்லிவிடுகிறேன். அவர் சார்பில் நன்றி இப்ப உங்களுக்கு!!!!!!!
கீதா
இயற்கை எழில் கொஞ்சும் அந்த படங்கள் அனைத்தும் மனதை கொள்ளை கொண்டதோடு மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டின. காணொளி கண்டேன் அருமை...
பதிலளிநீக்குஆமா சிவா, இந்த இடம் மிக அருமையான இடம். இப்படியே இருக்க வேண்டும் என்றும் மனம் விரும்புகிறது.
நீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா
கீதா
ஆறும் கோவிலும் கிராமமும் என அழகிய இடம் .
நீக்குபடங்கள் நன்று.