சனி, 14 மே, 2022

கடம்போடுவாழ்வு - 6

கடம்பொடுவாழ்வு கிராமத்தைக் கடைசியாகச் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கிருந்து ஜூட். இதற்கு முந்தைய 1, 2, 3, 4, 5 ல் ஊரைச் சுற்றிய பதிவும் படங்களும். பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 

இந்தக் கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் 80 % மேல்.  அருகிலுள்ள ரயில் நிலையங்கள், நாங்குனேரி, வள்ளியூர். 

சுற்றிப் பார்க்க - மிக அருகில் தலையணை அருவி அதன் வழி கொஞ்சம் மேலே சென்றால் இன்னும் நிறைய களக்காடு காட்டில், கொடுமுடியாறு அணை (வள்ளியூர்), திருக்குறுங்குடி கோயில்-நம்பி மலை, குத்திரபாஞ்சான் அருவி - பணகுடி, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் - நாங்குனேரி என்று நிறைய உள்ளன. எல்லாமே அருகில்தான். மூன்றாவது விழி இல்லாத காலத்தில் சென்ற இடங்கள். இந்த முறை சென்றிருந்த போது மழை காரணமாகப் பல இடங்களில் அனுமதி இல்லை.  செல்ல முடியவில்லை.

குறைவான செலவில் அடிக்கடிச் சுற்றி வர நிறைய இடங்கள். வெகு அருகிலேயே மலைப்பகுதி. களக்காடு, மகேந்திரகிரி மலை உள்ளேயே நிறைய மனதிற்கு ரம்மியமான எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காத பகுதிகள். அருகில் திருநெல்வேலி வடக்கே, என்றால் தெற்கே நாகர்கோவில்.  

ஏர்வாடியிலிருந்து செல்லும் போது கடம்போடுவாழ்வு கிராமத்திற்குள்(தெற்குப் பகுதி) நுழைகிறோம் என்பதற்கான அடையாளம் இந்த மாதா கோயில் தெரிந்துவிடும்

வீட்டருகில் இருந்த குளத்திற்குச் சென்று (முந்தைய பதிவில் படம்) வரும் போது இந்தக் குடிசை அழகாக இருந்தது. ஆனால் இவ்வளவுதான் 


வெள்ளை நத்தை 
குச்சிப் பூச்சி - Stick Insect இந்தக் குட்டிப் பூச்சிகளுக்கு உடல் நீளமாக இருக்கிறதுபார்த்தீங்க இல்லையா? இவை நடக்கும் போதுதான் இவை குச்சிப் பூச்சிகள்னே தெரியும், இருக்கும் சூழலுக்கு ஏற்பத் தங்களை வைத்துக் கொள்வதால் குச்சி போலவே இருக்கும். நீண்ட ஆன்டெனாக்கள் உண்டு. பூச்சிகளிலேயே நீண்ட பூச்சிகள் இவைதான். இவற்றிலும் பல சைஸ்க்கள் இருக்கின்றன. பச்சை மற்றும் பழுப்பு நிறத்திலும் இவற்றைப் பார்க்கலாம். இதோ கீழே குச்சிப் பூச்சி நடப்பதைப் பாருங்கள்! அழகோ அழகு!


வீட்டின் முன் உள்ள மின்சாரக் கம்பிகளில் புறாக்கள் 

வயல்களின் இடயில் ஒரு வீட்டினை அடுத்து ஒரு பெரிய கிணறு, படிகளுடன். வீட்டிற்குச் சென்றதும் அத்தை கேட்ட முதல் கேள்வி, "ஏட்டி அந்தக் கிணற பாத்தியா? ஃபோட்டோ புடிச்சியா?"


நீர்க்காகங்கள் (Cormorants) மாலையில் தங்கள் இருப்பிடம் நோக்கிப் பறக்கின்றன. இப்படித்தான் ஒரு வடிவத்தில் சொல்லி வைத்துப் பயிற்சி எடுத்தது போல் பறக்கும்.  இராணுவ வீரார்கள் அணி வகுப்பு பார்த்திருப்பீர்கள் அது போன்று இவர்களில் யார் கட்டளை பிறப்பிப்பார் என்று தெரியவில்லை சற்று தூரம் சென்றதும் வேறு ஒரு வடிவம் திரும்பி அழகாக எடுக்கும். இப்படிச் சுற்றி சுற்றி சுற்றிப் பல வடிவங்கள் மாறி மாறி பறப்பது கண் கொள்ளாக்காட்சி. என் கேமராவின் திறன் இவ்வளவுதான். 

ஆடுகள் மேய்வது தெரிகிறதா? ஊரைச் சுற்றி வந்து நடைப்பயிற்சி செய்த போது எடுத்த படம்

இடதுப்பக்கம் தெரிகிறதா ஈரமான புதிதாய் எழுப்பப்பட்ட வரப்பு? மழையில் வரப்பு உடைந்து வயலில் தேங்கியிருந்த அதிகமானத் தண்ணீரை வடித்துவிட்டு வரப்பை மீண்டும் உயர்த்தி எழுப்பிக் கொண்டிருந்தார் ஒருவர். 

வீட்டின் பெரிய முற்றம். எனக்கு மிகவும் பிடித்த இடம். இங்கு அமர்ந்துதான் காய் நறுக்குதல், மருதாணி இலை உதிர்த்தல் எல்லாம். பௌர்ணமி அன்று எல்லோரும் சுற்றி அமர்ந்து நிலாச்சாப்பாடு சாப்பிட வசதியான இடம். அடுக்களை அருகில் முற்றம் 

https://youtu.be/a5QfeuWrAnk

மழைத் துளிகளின் ஆரம்ப இசை 'ஸ' வில் தொடங்கி 'ஸ' விலேயே ஸ்ருதி தாவி 'கொட்டும்' ரிதமாய் மாறத் தொடங்கிய போது  முற்றத்தில் ரசித்துவிட்டு தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா     கீழே....

வீட்டு வாசலில் கொட்டு வாசிக்கும் மழை!

https://youtu.be/clLVSjfAI7c

முற்றத்தில் இருந்து வாசலுக்கு வந்த  போது   மழையின் தனியாவர்த்தனம்! டெம்போ, சுருதி கூடியிருக்கிறதோ! 


இது வீட்டை ஒட்டிய அடுத்த வீட்டிற்கும் அதற்கு அடுத்த வீட்டிற்கும் இடையில் உள்ள முடுக்கின் வழி பின் பக்கத்திலிருந்து ஓடை போல தண்ணீர் ஓடி வந்தது. ஓடி வந்த தண்ணீர் வீடுகளின் முன் தெருவில் ஓடிய தண்ணீரோடு கலந்து வாய்க்கால் போல ஓடியது. இப்படி ஓடிய தண்ணீர் எல்லாம் முந்தைய பதிவில் ஒரு வாத்துகள் நீந்தும் குளம் ஒன்றின் படம் போட்டிருந்தேனே அந்தக்குளத்தில் போய் சேரும் என்று சொன்னார்கள். மழை சற்று நின்ற பிறகு எடுத்ததால் தண்ணீர் வரத்துக் குறைந்திருந்தது.

ஏர்வாடி - களக்காடு முக்கியச் சாலையை இணைக்கும் ரோடு. இந்த இடத்தில்தான் வீடிருக்கும் தெரு இணைகிறது.   எதிர்ப்புறத்திலிருந்து தெருவிற்குள் வந்து கொண்டிருந்த மழைத்தண்ணீர் குறைந்திருந்தது. தீபாவளி அன்று மழை கொட்டித் தீர்த்தது.

கடம்போடுவாழ்வு - டாட்டா பைபை- படங்களில் என் அழகைப் பார்த்து ரசித்த நீங்கள், வாய்ப்பு கிடைத்தால் என்னைச் சந்திக்க வாருங்களேன். என் அழகை நேரில் ரசிக்கலாமே!


ஹூஃப்! ஸ்பாஆஆஆஆ ஹப்பா தொடரை முடித்துவிட்டேன்!
ஒரு வழியா கீதா, கடம்போடுவாழ்வு படங்கள் போட்டு பதிவுகளை முடித்துவிட்டாள். எல்லாரும் ஜோரா கைதட்டுங்க! இனி அடுத்து நாரோயிலாத்தான் இருக்கும்! என்ன கீதா, நாரோயில்தானே!? ஹிஹிஹி வழக்கம் போல் தாமதிக்குமாம்!


------கீதா


34 கருத்துகள்:

 1. உடம்போடு வாழ்வதை நான் அறிவேன். கடம்போடு வாழ்வதை இப்போதுதான் அறிந்தேன். ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா. சார் அது மேற்கு மலைத்தொடரின் அடியில் இருக்கும் அழகான கிராமம். பெயர் மிகவும் வித்தியாசமான பெயர்.

   மிக்க நன்றி செல்லப்பா சார்

   கீதா

   நீக்கு
 2. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் வழக்கம் போல் துல்லியம். மாதா கோவிலிருக்கும் முதல் படம் பசுமையுடன் கோவிலுமாக பார்க்கவே நன்றாக உள்ளது.

  அது என்ன நத்தையா? இல்லை நத்தை போல் இருக்கும் வேறு ஜந்துவா? குச்சிப்பூச்சிக்கு மேல் உள்ள படம். அந்த குச்சிப்பூச்சிதான் எவ்வளவு நீளம்?

  புறாக்கள் மின்கம்பிகள் அமர்ந்து எந்தக்கதை பேசுகிறதோ ? மின் கம்பியை லேசாக தொட்டில் மாதிரி ஒரு ஆட்டு ஆட்டுவித்தபடி அவைகள் அமர்ந்து பேசுவது பார்க்க நன்றாகத்தான் இருக்கும். வரிசையாக அமர்ந்திருப்பது வேறு மிகவும் அழகாக உள்ளது.

  நீர்காக்கைகளின் ஒழுங்கான பறக்கும் வரிசையும், அவைகளின் கட்டுப்பாட்டினை கூறுகிறது. இந்த மாதிரி அழகிய பறவைகளை கண்டு விட்டால் நம் மனது தான் எவ்வளவு சந்தோஷம் அடைகிறது.

  வீட்டு வாசலில் கொட்டும் மழையை கூட கலை கண்ணோட்டத்துடன் படமெடுத்து உள்ளீர்கள். தங்களது புகைப்பட கலைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். கடைசி படம் மழை மேகங்களுடன், மலைகளின் அழகுடனும் பசுமையுடனும் கண்களுக்கு விருந்தாக உள்ளது.

  கை கொட்டி நகைப்பது போலுள்ள வாத்தின் படம் நன்றாக உள்ளது. அடுத்தது நாகர் கோவில் பதிவுகளை பார்க்கப் போகிறோம் என்ற பெருமையுடன் அது கை கொட்டுவது போல் எனக்குத் தோன்றுகிறது. அதனுடன் நாங்களும் அடுத்து வரப்போகும் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம். காணொளிகளை பிறகு பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கமலாக்கா விரிவான கருத்திற்கு. அங்கு எல்லாமே அழகாக இருந்தது. மழை பெய்த நேரம் என்பதாலோ தெரியவில்லை பசுமை. இயற்கை. மழை எல்லாமே ரசிக்கும் வகையில். அதனால் கூடியவரையில் ஒளிப்படங்களும் காணொளிகளும் எடுத்தேன். நன்றாக வந்தாலும் வராவிட்டாலும்...மெதுவாகப் பாருங்கள்.

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 3. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது காணொளிகள் கண்டேன்.

  பறவைகள் பறக்கும்போது நானும் இப்படி நினைத்து இருக்கிறேன்.

  இவர்களுக்கு ஸ்டேரிங் பிடிப்பது யார் என்று ? அவைகள் ஓர் அற்புதமான காட்சிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி. காணொளிகள் பார்த்ததற்கு,

   //இவர்களுக்கு ஸ்டேரிங் பிடிப்பது யார் என்று ? அவைகள் ஓர் அற்புதமான காட்சிதான்.//

   ஆமாம் ஆமாம் கில்லர்ஜி!!

   மிக்க நன்றி கில்லர்ஜி, ரசித்ததற்கு

   கீதா

   நீக்கு
 4. குத்திரபாஞ்சான் அருவி! இப்படியொரு பெயரா? மகேந்திரரி மலை என்றால் சின்ன வயதில் படித்த மாயாஜால மந்திரக் கதைகள் நினைவுக்கு வருகின்றன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம். வித்தியாசமான பெயர்கள் கொண்ட அருவிகள் இங்கு இருக்கின்றன.

   மகேந்திர கிரி மலையில் மாயா ஜாலங்கள் உண்டாமே!!! பல கதைகள் இருக்கின்றன ஸ்ரீராம். அமானுஷ்யங்கள்.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 5. குச்சிப்பூச்சி நடக்கும் அழகைக் காட்ட மறுக்கிறது யூடியூப்! பார்க்கவில்லை! கிணறு சூப்பர். உட்கார்ந்திருக்கும் பறவைகளைவிட பறக்கும் பறவைகள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் நீங்க சொன்னதும்தான் என்னாச்சு என்று போய்ப்பார்த்தேன். வெளியிடல் கொடுக்காமல் விடுபட்டிருந்திருக்கிறது. இப்போது கொடுத்துவிட்டேன். முடிந்தால் பாருங்கள்

   //உட்கார்ந்திருக்கும் பறவைகளைவிட பறக்கும் பறவைகள் அழகு.//

   ஆமாம் ஆமாம் ஸ்ரீராம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் பறக்கும் பரவைகளைக் காணொளி ஒளிப்படங்கள் எடுப்பதும் ரொம்பப் பிடிக்கும் சில மட்டும்தான் என் மூன்றாவது விழியில் ஓரலவுவருகிறது.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 6. முற்றங்கள் அழகானவை. நான் அந்த மாதிரி வீடுகளில் குடியிருக்கக் கொடுத்து வைத்திருக்கவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் முற்றங்கள் அழகானவை. சின்ன வயதில் ஊரில் இருந்தவரை முற்றம் இருந்த வீடுதான். ஸ்ரீராம் இப்போது குடும்பமே சுருங்கிவிட்டதே. வீடும் கூட சின்னதாகத்தானே அதுவும் அடுக்குமாடி எனும் போது எங்கு முற்றம் பார்க்க முடியும். தனிவீடுகள் கட்டுபவர்களில் ஒரு சிலர் வைக்கிறார்கள். எதிர்காலத்தில் முடிந்தால் ஒரு வேளை நீங்கள் வேறு வீடு கட்டினால் அப்படி ஒன்று வைத்துக் கட்டுங்கள் அல்லது குழந்தைகளிடம் சொல்லுங்கள்!!!!!!! கனவு காண்போமே!

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 7. ஒலியில்லாமல் காணொளி கேட்டதால் பார்க்க மட்டுமே முடிந்தது! கேட்கவில்லை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ! அதிகாலை!! இல்லையா...

   என் மறதியின் காரணமாய், ஒரு வேளை நான் ஒலியைக் கட் செய்துவிட்டேனோ என்று காணொளி பார்த்தேன் நல்ல காலம் அதில் ஒலி இருந்தது.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 8. தேர்ந்தெடுத்த படங்கள் அழகு. குறிப்பாக பறவைகள், பின்னர் பூச்சிக், நத்தை. மழை ஒளிக்காட்சிகள் நன்றாக இருந்தாலும் இடங்கள் சரியில்லாததால் ரசிக்க முடியவில்லை. ஒரு சில ஒளி/ஒலி காட்சிகள் திறக்க முடியவில்லை. "வாங்க" சொல்லிவிட்டு நீங்களே அங்கிருந்து ஓடி விட்டீர்களே.

  இதை டைப் செய்யும்போது இங்கு திருவனந்தபுரத்தில் நல்ல மழை. ரோடெல்லாம் தோடு ஆகிவிட்டது. வீடு முற்றத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

  ஹப்பாடா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "வாங்க" சொல்லிவிட்டு நீங்களே அங்கிருந்து ஓடி விட்டீர்களே.//

   ஹாஹாஹாஹா ஜெகே அண்ணா அது நம் எல்லோருக்கும். இதைப் பார்த்துட்டு அடுத்ததுக்குத் தயாராகிவிடுவோம் என்று!!!

   ஆமாம் மழை ஒளிக்காட்சிகள் இடம் சரியில்லைதான். இயற்கையோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்தச்சத்தத்திற்காக எடுத்தேன் அண்ணா. நான் சென்றிருந்த இடமும் அப்படி வெளியில் எடுத்திருக்கலாம் ஆனால் என் மூன்றாவது விழியைப் பாதுக்காக்க வேண்டுமே. இதுவே எடுக்கும் போது விழித் திரையில் தண்ணீர் தூவானமாய் தெரித்தது.

   அட அங்கு நல்ல மழையா!! இங்கும் நல்ல மழை.

   //ரோடெல்லாம் தோடு ஆகிவிட்டது. // ஹாஹாஹா அங்கு டக்கென்று வடிந்துவிடுமே! இப்போது இல்லையோ?

   //வீடு முற்றத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.//

   ஆஹா வீட்டில் முற்றம் இருக்கிறதா...அதைப் பார்க்கவே நான் வர வேண்டும்! கேரளத்தில் பெரும்பாலும் தனி வீடுகள் முற்றம் உடையதாய் இருக்கும்தான்.

   ஒரு சில ஒளி/ஒலி காட்சிகள் திறக்க முடியவில்லை.//

   ஒன்று மட்டும் வெளியிடு கொடுக்காமல் விடுபட்டிருந்தது குச்சிப் பூச்ஹ்கி. அதையும் வெளியிட்டுவிட்டேன். ஒன்று கணினியிலிருந்து இங்கு போட்டிருக்கிறேன் யுட்யூபில் போடவில்லை அதனால் திறக்கவில்லையோ என்று நினைக்கிறேன்.

   மிக்க நன்றி ஜெகே அண்ணா

   கீதா

   நீக்கு
 9. பதிலைப் படிக்கும்போது தண்ணீர் வடிந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடிந்தது நல்லதாயிற்று. இல்லை என்றால் கொசு நிறைய வந்துவிடும்.

   கீதா

   நீக்கு
 10. இயற்கை எழில் கொஞ்சும் படங்கள் இத்தனை பதிவுகளிலும்.. நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டீர்கள்..

  இயற்கை என்றும் வாழட்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் துரை அண்ணா இந்த ஊரும் சுற்றுப் புறமும் மலைகளும் குளங்களும் வாய்க்கால்களும் என்று அருமையான இடங்கள்.

   ஆமாம் இயற்கை என்றும் இப்படியே பசுமையாக இருக்க வேண்டும்.

   மிக்க நன்றி துரை அண்ணா உங்கள் கருத்திற்கு.

   கீதா

   நீக்கு
 11. பதில்கள்
  1. ஆமாம் டிடி நிஜமாகவே, இந்த ஊர்கள் எல்லாம் இப்படியே பசுமையாக இருக்க வேண்டும். அருமையான ஊர்.

   மிக்க நன்றி டிடி கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 12. கடம்போடுவாழ்வு ஊர் அழகாக இருக்கிறது. உங்கள் பதிவுகள் வழி நாங்களும் ஒரு உலா வந்தோம். அழகிய சூழல். கிராம உலா வர ஆசையுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் வெங்கட்ஜி! அழகான ஊர். வாய்ப்புக் கிடைக்கும் போது தெற்குப் பகுதிகளுக்குச் சென்று வாருங்கள். வடக்கு பிரம்மாண்ட மலைத்தொடர் பனி சூழ் என்றால் தெற்கு கடலும், மலைகளும் என்று அது ஒரு தனி அழகு. கிராமங்களுக்கும் உலா போகலாம் ஜி.

   மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 13. கடம்போடு வாழ்வு ஊரின் எழில் மிகு காட்சிகள் மனதுக்கு மகிழ்வு தருகிறது.
  இயற்கை காட்சிகள் எப்போதும் மகிழ்ச்சி தரும்.
  நத்தையார் , குச்சி பூச்சி அருமை. குச்சி பூச்சி காணொளி மிக அருமை.

  மழை சர சரமாய் பெய்யும் மழை படம் அழகு.

  தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா
  மழை கொட்டும் காணொளியும் மிக அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிக்கா. இதில் என்ன மகிழ்ச்சி என்றால் வீட்டிலிருந்து தெரு முனைக்கு வந்தாலே மலைகளும் வயல்களும் தோட்டங்களும், குளங்களும் என்று அத்தனை அழகு., கோடையில் கூட ரொம்ப வற்றாது என்று நினைக்கிறேன்.

   நத்தையார் , குச்சி பூச்சி அருமை. குச்சி பூச்சி காணொளி மிக அருமை.

   மழை சர சரமாய் பெய்யும் மழை படம் அழகு.//

   மிக்க நன்றி கோமதிக்கா ரசித்தமைக்கு.

   தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா
   மழை கொட்டும் காணொளியும் மிக அருமை..//

   குறிப்பாக அந்தச் சத்தத்திற்காக எடுத்தேன். மிக்க நன்றி கோமதிக்கா எல்லாம் ரசித்தமைக்கும் கருத்திற்கும்

   கீதா

   நீக்கு
 14. கிணறு, பறக்கும் நீர் காகங்கள், மின் கம்பியில் அமர்ந்து இருக்கும் புறாக்கள் எல்லாம் அழகு. மேகம் வந்து மறக்கும் மலைத்தொடர் என்று பதிவு மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாப் படங்களையும் காணொளிகளையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 15. சகோதரி கீதா அவர்களே... ஒன்றை கவனித்தீர்களா... நீங்கள் போகும் இடமெல்லாம் மழை விடாமல் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது!!!... நீங்கள் வெயிலை பார்த்தே பல மாதங்கள் இருக்கும் என நினைக்கிறேன்!!!... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி கீதா அவர்களே... ஒன்றை கவனித்தீர்களா... நீங்கள் போகும் இடமெல்லாம் மழை விடாமல் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது!!!.//

   ஹாஹாஹாஹா...சகோ நாஞ்சில் சிவா, அதென்னவோ அப்போது காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதை.

   நீங்கள் வெயிலை பார்த்தே பல மாதங்கள் இருக்கும் என நினைக்கிறேன்!!!... வாழ்த்துக்கள்...//

   ஹாஹா ஹா இப்போது சமீபத்தில் இங்கும் வெயில் கொளுத்தியதே. இப்போது மழை!!!!!!

   மிக்க நன்றி நாஞ்சில் சிவா

   கீதா

   நீக்கு
 16. பதிவின் படங்களை மிகவும் ரசித்தேன்... முடுக்கு போன்ற சொற்களையும்.

  கிராமத்துச் சூழல் எப்போதுமே அழகு, எளிமை.

  நம்மூரில் (பெங்களூரில்) ஒரு வழியாக வெயில் முடியப்போகிறது போலிருக்கிறது. அதற்கேற்றபடி கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்கள்.

  /படங்களில் என் அழகைப் பார்த்து ரசித்த நீங்கள், வாய்ப்பு கிடைத்தால் என்னைச் சந்திக்க வாருங்களேன். என் அழகை நேரில் ரசிக்கலாமே!// - டக் என்று என்ன இப்படி எழுதியிருக்கிறாங்களே என்று யோசித்தேன்.

  பதிலளிநீக்கு
 17. வாங்க வாங்க நெல்லை!!!

  //பதிவின் படங்களை மிகவும் ரசித்தேன்... முடுக்கு போன்ற சொற்களையும்.//

  நன்றி நெல்லை...

  //கிராமத்துச் சூழல் எப்போதுமே அழகு, எளிமை.//

  ஆமாம்...அதுவும் திருநெல்வேலி மேற்குப் பக்கம் இருக்கும் கிராமங்கள் எல்லாமே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் அவை பசுமை அழகு என்றால் கிழக்குப் பகுதி கடற்கரை ஒட்டியவை அது தனி அழகு.

  நம்மூரில் (பெங்களூரில்) ஒரு வழியாக வெயில் முடியப்போகிறது போலிருக்கிறது. அதற்கேற்றபடி கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்கள்.//

  ஹாஹாஹா ஆமாம் வெயில் முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. இந்த முறை கொஞ்சம் கூடுதல் நாட்கள் வெயில். இப்போது மழை. இன்னும் மூன்று நாட்களுக்கு இருக்கும் என்று செய்தி. அதன் பின் ஜூன் பருவ மழை தொடங்கிவிடும் என்று நினைக்கிறேன்.

  ///படங்களில் என் அழகைப் பார்த்து ரசித்த நீங்கள், வாய்ப்பு கிடைத்தால் என்னைச் சந்திக்க வாருங்களேன். என் அழகை நேரில் ரசிக்கலாமே!// - டக் என்று என்ன இப்படி எழுதியிருக்கிறாங்களே என்று யோசித்தேன்.//

  ஹாஹாஹா நெல்லை அது கடம்போடுவாழ்வு - இப்படிச் சொல்லித்தானே எழுதியிருக்கிறேன் ஊர் சொல்வது போல!!! படத்தின் கீழே!!!
  ஓவர் டு கடம்போடுவாழ்வு என்று சொல்லிப் போட்டிருக்க வேண்டுமோ? அல்லது கடம்போடுவாழ்வின் அழைப்பு என்று....நீங்கள் சொன்ன பிறகுதான் ஓ அப்படியோ என்று தோன்றுகிறது

  மிக்க நன்றி நெல்லை...

  கீதா

  பதிலளிநீக்கு
 18. ஒரு நூல் எழுதுமளவிற்கு செய்திகள். வாய்ப்பிருப்பின் சிறு நூலாகக் கொணர முயற்சிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஐயா. உங்கள் ஊக்கத்திற்கும், முயற்சி செய்கிறேன். நூல் எழுத வேண்டும் என்றால் இன்னும் சில தகவல்கள் சரியாகக் கிடைக்க வேண்டும் ஐயா. இப்பகுதியைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது.

   மிக்க நன்றி ஐயா

   கீதா

   நீக்கு