சனி, 19 மார்ச், 2022

கடம்போடுவாழ்வு - 3

 

//இப்பத்தானே ஊருக்குள் வந்திருக்கோம். கொஞ்சம் ஆற அமர ஊரின் வளத்தை, செழிப்பை, உழைப்பைப் பார்க்க அடுத்த பகுதியில் ஊர் சுற்றுவோம்// என்று முடித்திருந்தேன். கடம்போடுவாழ்வு 2

அப்பதிவிற்கும், எனது மூன்றாவதுவிழியின் பார்வையில் பதிவிற்கும் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

வீட்டிற்குள் இருக்கும் சின்ன தோட்டத்தைப் பார்த்துவிட்டு வீதி உலா.


வீட்டில் பின்பக்கம் கதவு உண்டு. அதைத் திறந்தால் களக்காடு முக்கியச் சாலைக்குச் செல்லும் சாலை, தொடக்கப்பள்ளி, ஊருக்கான தண்ணீர்த்தொட்டி. சுற்றிலும் பசுமை.

வீட்டுத் தோட்டம் சிறியதுதான். என்றாலும் தென்னை, வாழை, மாமரம், மருதாணி, கறிவேப்பிலை, சப்போட்டா என்று அழகான தோட்டம். 

இதோ வீட்டு மருதாணி. ஒரு அத்தை பறிச்சு முற்றத்தில் போட, நாங்க இலைகளை எடுத்துக் கொடுக்க, இன்னொரு அத்தை அதை அரைக்க கை எல்லாம் சிவந்து. இது ரா பத்து பகல் பத்து மருதாணி!!! இரவு பகல்னு பத்திக்கும்னு சொல்லறத இப்படி!  நான் எல்லோருக்கும் மருதாணி வைத்துவிட, விட்டதுக்கே என் கைகள் ஒரே சிவப்புதான் போங்க.

இப்படியான மருதாணியைப் பார்த்துட்டு விடுவமா உடனே பறித்துப் போட்டதிலிருந்து விதைகளை எடுத்துக் கொண்டேன். ஆர்வமுள்ளவங்களுக்குக் கொடுக்கத்தான்.  நாங்க மூட்டை கட்டற கூட்டம். எங்க விதைச்சு…எங்க வளர்க்கறது.

முற்றத்துல மல்லி வேற. பொத்தி வைச்ச மல்லிகை மொட்டுன்னு மருதாணி விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு மருதாணி விரல்களின் இடுக்கு வழியே சைட்ல ஒரு பார்வை….ஹூம் அதுக்கு ஏத்த குட்டிப் பெண்கள் யாருமில்லை! இல்லேனா க்ளிக்கிருக்க மாட்டேனா!!!! 

மாலையில், சின்ன அத்தை என்னை வீதி உலாவுக்கு – இருக்கற சின்ன சின்ன 4 தெருவ காட்ட - கூட்டிக் கொண்டு சென்றார்.  தெருவைக் காட்ட என்பதை விட, ‘யென் அண்ணென் மக பாத்துக்க’ ன்னு என்னைக் காட்ட! இது தெற்கு கடம்போடுவாழ்வு. மெயின் ஊர் வடக்கு கடம்போடுவாழ்வு


ஊரின் குடிசைத் தொழில்???? பீடி சுற்றுதல். பெண்கள் பீடி கம்பெனிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றல் தொழில். கொரோனா டைம் வேற. பீடி சுற்ற தெந்து (பேச்சு வழக்கு) இலை – தெண்டு இலை பீஹார், மத்தியபிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் உள்ளே வைக்கப்படும் கொஞ்சம் நிக்கோட்டின் கோட் செய்த பக்குவப்படுத்தப்பட்ட புகையிலைகள் (துண்டு துண்டாக இருப்பது) கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து வருவதை கம்பெனிகள் விநியோகிக்க அதை இவர்கள் வீட்டிலிருந்தபடியே சுற்றிக் கொடுக்கிறார்கள். 

ஒரு நாளைக்கு 1000 சுற்றினால் 150-200 ரூ க்குள் கிடைக்குமாம். கம்பெனியைப் பொருத்து.  ஏதோ, பிள்ளைளுக்குப் படிக்க கொள்ள, திங்க ஆச்சுல்லா. 

இதைப் பற்றிய மேலதிகத் தகவல்களை இங்கு தரவில்லை. எல்லாம் நம் கூகுள் கொடைவள்ளல் செல்லத்திடம் கேட்டால் வாரி வழங்கும்! 

அந்தப் பூச்சைக் குட்டி என் அத்தை கையில் 

மேலே உள்ளவர்களின் வீட்டைக் கடந்ததும் இருக்கும் சர்ச்

வீட்டின் பின்புறம் களக்காடு மெயின் ரோடு செல்லும் சாலையில் இருந்து எடுத்த படம்.  அருகில்தான் இந்த மலை. 

மேலே படத்தில் உள்ள அதே மலைதான். மறுநாள் காலையில் அதன் தோற்றம். நான் தனியாகச் சுற்றிய போது கொஞ்சம் அருகே சென்று எடுத்த படம்.

களக்காடு வனப்பகுதி - திருக்குறுங்குடி நம்பி மலை. இதைக் கும்பகர்ணன் மலை என்று நம் மக்கள் சொல்கிறார்கள். கும்பகர்ணன் படுத்திருப்பது போல் இருப்பதாலாம். படத்தில் தெரியும் வீட்டின் மாடி க்ரில் மேலே பாருங்க ஒரு வெள்ளைக் கோடு தெரிகிறதா அதுதான் நம்பி அருவி! இல்லேனா கீழே உள்ள படத்தில் பாருங்க....

சுற்றிலும் காடும், அருவியும், ஆறுமா அதுக்கு நடுவில் உக்காந்து ஊரைப் பார்த்துக் கொண்டிருக்கும் மலைமேல் நம்பி இந்தச் செழிப்பான ஊர் கட்டிடங்களாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படத்திலும் நம்பி அருவியும், கோவில் வெள்ளை செவ்வகமாகவாகவும் தெரியும். பூதக்கண்ணாடி வைச்சுப் பார்த்துக்கோங்க!  

என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பிடித்த பகுதி நம்பி மலை, அருவி, சுனை தெள்ளத் தெளிவான (கிரிஸ்டல் க்ளியர்) ஆறு.

நாகர்கோவில் டு கடம்போடுவாழ்வு பதிவில் இதே மலை பேருந்து நெடுஞ்சாலையில் வந்த போது பேருந்திலிருந்து எடுத்த படத்தில் ஏர்வாடி அடையாளமான இந்த மொட்டை மலையின் வேறொரு பக்கம்.  இது ஊரினுள் இருந்து. சுற்றியுள்ள பகுதிகளிலும்,  இந்த ஊருக்குளும் எங்கு சென்றாலும் கண்ணில் படாமல் இருக்காது! 

கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம்தான். மக்களின் உழைப்பு வயல்களிலும், வாழைத் தோப்புகளிலும் தெரிந்தது.   

க்ளிக்ஸ் ரொம்ப பிடித்த விஷயமாச்சே. நம்முடன் வருபவர்களுக்குப் பொறுமை வேண்டும். அதனால் மறுநாள் எல்லாம் தனியே தன்னந்தனியேதான்.  சிங்கம் சிங்கிளாத்தான் போகுமாமே! ஆனால் நான் சிங்கப் பெண்ணில்லை!   

அப்படி க்ளிக்கிய இன்னும் பசுமையான வளமான படங்கள் எல்லாம் அடுத்த பதிவில். இப்பதிவே பெரிதாகிவிட்டதோ என்ற தயக்கத்தில் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

எனது பதிவுகளையும் பார்த்துக் கருத்து இடும் அனைவருக்கும் நன்றி!


------கீதா




34 கருத்துகள்:

  1. அழகிய படங்கள்...   உங்களுக்கு மறுபடி உங்கள் ஊர் ஞாபகமும் அங்கு கழித்த நாட்களும் நினைவுக்கு வந்திருக்கும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் ஊர் நினைவு வந்து கொண்டேதான் இருக்கிறது. ரொம்பவே...

      மிக்க நன்றி ஸ்ரீராம் படங்களை ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  2. செல்லக்குட்டி ஒன்று கையில்...   அழகிய பூனாச்சு!  ஆனால் அது உங்கள் அத்தை கையிலா இருக்கிறது?  நீங்கள் என்றே நினைத்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்தக் குட்டி பூன்னாச்சு அப்பெண்களின் நடுவில் ஒரு படத்திலும் இருக்கும் பாருங்க. ஆமாம் அதை அத்தைதான் கையில் எடுத்துக் கொண்டார்....உடனே ஒரு க்ளிக்...
      நான் வைத்துக் கொண்டால் செல்ஃபி தான் கேமாராவில் எடுக்க வேண்டும். அவங்களுக்கு எடுக்கறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க ..பூனாச்சுவைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் கேமரா. எடுப்பது கஷ்டமாச்சே..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. பீடி சுற்றும் தொழிலில் எவ்வளவு கிடைக்கும்?  அந்தத் தூளை எடுத்து அதற்குள் சுற்ற தனிக்கலை வேண்டும், பொறுமையும் வேண்டும்!  மேலும் இதிலேயே இந்தப் பழக்கமும் சில பேருக்கு வந்துவிடுமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லிருக்கேனே ஸ்ரீராம். கம்பெனியைப் பொருத்து 1000 சுற்றினால் ஒரு நாளைக்கு 150-200க்குள் கிடைக்கும். ஆமாம் சுற்றுவது தனி கலைதான். அந்த இலையையும் ஷேப் பண்ணிக்கறாங்க. சுற்றும் போது இலை பொடியாமல் ...

      இந்தப் பழக்கம் வருகிறதோ இல்லையோ இந்த மணம் பலருக்கும் நோய் உண்டாக்குகிறது என்று சொல்லப்படுகிறது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  4. அனைத்து படங்களும் அதற்கு நீங்கள் சொன்ன விவரங்களும் அருமை.
    கடம்பொடுவாழ்வு ஊர் அழகு. இயற்கை காட்சிகளை நீங்கள் தன்னதனியாக போய் எடுத்து வந்து கண்களுக்கு விருந்தாக பதிவு செய்தது மிகவும் மகிழ்ச்சி.

    //சின்ன அத்தை என்னை வீதி உலாவுக்கு – இருக்கற சின்ன சின்ன 4 தெருவ காட்ட - கூட்டிக் கொண்டு சென்றார். தெருவைக் காட்ட என்பதை விட, ‘யென் அண்ணென் மக பாத்துக்க’ ன்னு என்னைக் காட்ட!//

    அத்தையின் அன்பை , பாசத்தை உணர்ந்து கொண்டேன், நீங்கள் சொன்னதை ரசித்தேன்.
    அத்தையின் கையில் அழகாய் பூனைகுட்டி அழகாய் பார்க்கிறது.

    //சிங்கம் சிங்கிளாத்தான் போகுமாமே! ஆனால் நான் சிங்கப் பெண்ணில்லை! //

    நீங்கள் சொன்னாலும் சிங்கபெண்தான். இந்த பதிவில் ஊரின் தொழில், ஊரின் அழகை காட்டியதை போல அடுத்த பதிவிலும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை காட்சிகளை நீங்கள் தன்னதனியாக போய் எடுத்து வந்து கண்களுக்கு விருந்தாக பதிவு செய்தது மிகவும் மகிழ்ச்சி.//

      ஹாஹாஹா கோமதிக்கா கூட யாரேனும் வந்தால் சந்தோஷம் தான் ஆனால் வருபவர்களுக்குப் பொறுமை வேண்டுமே!! நான் ஆங்காங்கே நின்றுவிடுவேன். உள்ளே செல்வேன்....அதனால்தான்.

      அத்தையின் அன்பை , பாசத்தை உணர்ந்து கொண்டேன், நீங்கள் சொன்னதை ரசித்தேன்.
      அத்தையின் கையில் அழகாய் பூனைகுட்டி அழகாய் பார்க்கிறது.//

      ஆமாம் அக்கா. பாசமுள்ளவர். நன்றி அக்கா

      //நீங்கள் சொன்னாலும் சிங்கபெண்தான்.//

      ஹாஹாஹாஹ்

      ஆமாம் அக்கா அடுத்த் பதிவில் பசுமை இன்னும் வரும்

      மிக்க நன்றி கோமதிக்கா ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  5. அன்பின் கீதாமா,
    அருமையான படங்கள். பசுமை பொங்கும் ஊர்.
    அதில் பீடி சுற்றும் வேலையா.
    அடப் பாவமே. ஆரோக்கியமான தொழிலா அது?

    பத்திரமாக இருக்கட்டும்.
    உங்கள் அத்தை நல்ல அழகான ஸ்வெட்டர் போட்டிருக்கிறாரே.
    பூனைக்குட்டியின் சொகுசை என்ன வென்பது. மீண்டும்
    வருகிறேன். காலை பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா ப்சுமை பொங்கும் ஊர். களக்காடு பகுதியாச்சே.

      ஆமாம் இத்தொழில் ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாதுதான் ஆனால் அவர்களுக்கும் வயிற்றுப் பிழைப்பு..

      உங்கள் அத்தை நல்ல அழகான ஸ்வெட்டர் போட்டிருக்கிறாரே.//

      ஹாஹா ஆமாம் அவருக்கு நவம்பர் மாத அதுவும் மழைக்காலத்து குளிர் தாங்கும் சக்தி இல்லை. காரணம் உண்டு.

      பூனைக்குட்டி சொகுசுதான்..ஹாஹா

      மிக்க நன்றி வல்லிம்மா ரசித்தமைக்கு.

      கீதா

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    பசுமையை காக்க வேண்டும் என்பது அனைவர் எண்ணமுமாக இருக்க வேண்டும்.

    இதம்பாடல் குலதெய்வ கோயிலிலிருந்து... கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசுமையை காக்க வேண்டும் என்பது அனைவர் எண்ணமுமாக இருக்க வேண்டும்.//

      ஆமாம் கில்லர்ஜி எல்லோரது எண்ணமாகவும் இருக்க வேண்டும்

      //இதம்பாடல் குலதெய்வ கோயிலிலிருந்து... கில்லர்ஜி//

      சொல்லிருந்தீங்களே கோயிலில் பூஜை என்று. எஞ்சாய்!!!

      மிக்க நன்றி கில்லர்ஜி ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  7. எல்லாப் படங்களும் நன்றாக எடுத்திருக்கீங்க. ஆனால் நம்பி மலையில் அருவி வெள்ளைக்கோடாகத் தெரிந்தாலும் கோயில் எல்லாம் எனக்குத் தெரியவில்லை. மொட்டை மலையை முன்னர் பார்த்த நினைவு இல்லை. அழகாக வந்திருக்கு/பெயரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நம்பி மலையில் அருவி வெள்ளைக்கோடாகத் தெரிந்தாலும் கோயில் எல்லாம் எனக்குத் தெரியவில்லை. //

      தெரிவது கஷ்டம்தான் கீதாக்கா. அங்கு பார்க்கும் போது லேசாகப் பச பசப்பாகத் தெரியும்.

      மொட்டை மலையை முன்னர் பார்த்த நினைவு இல்லை. அழகாக வந்திருக்கு/பெயரும்.//

      முதல் பதிவில் கீதாக்கா. ஆனால் அது இப்படித்தான் இருக்கும் வேறுகோணத்தில். ஆனால் மொட்டை என்பதால் எப்படிப் பார்த்தாலும் இப்படித்தான்!!

      மிக்க நன்றி கீதாக்கா ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  8. என்ன இருந்தாலும் இந்த இயற்கை அழகுக்கு முன்னர் மற்றதெல்லாம் ஒன்றுமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதே அதே கீதாக்கா...ஹைஃபைவ்!

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  9. வந்தேன். வந்துட்டேன். இன்னைக்கு என்னமோ எல்லாரும் ஸ்டிரைக் பண்ணிட்டாங்க .

    படங்களில் மலைகள் படங்கள் அழகாக இருக்கின்றன. அதி கையில் பூனைக்குட்டியம் அழகாக இருக்கிறது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க ஜெகெ அண்ணா.

      // இன்னைக்கு என்னமோ எல்லாரும் ஸ்டிரைக் பண்ணிட்டாங்க .//

      ஹாஹாஹா இல்லை அண்ணா. கமென்ட் மாடரேஷன் இருப்பதால் நீங்கள் வந்த சமயம் கருத்துகள் எதுவும் இருந்திருக்காது. நான் இப்பத்தான் பப்ளிஷ் பண்ணினேன்.

      //படங்களில் மலைகள் படங்கள் அழகாக இருக்கின்றன. அதி கையில் பூனைக்குட்டியம் அழகாக இருக்கிறது.//

      மிக்க நன்றி அண்ணா. கேமராக்கு மலைகள் தான் பிடிச்சிருக்கு போல!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  10. பதில்கள்
    1. மிக்க நன்றி கணேசன் சகோ. இது உங்களின் முதல் வரவு என்று நினைக்கிறேன் மிக்க நன்றி அதற்கும்.

      கீதா

      நீக்கு
  11. சில நாட்களாய் DD பதிவுகள் பக்கம் வருவதில்லையே...   வெளியூர் சென்றிருக்கிறாரா?  நலமாய் இருப்பார் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் நானும் நோட் செய்தேன். அவரிடமே கேட்க நினைத்தேன். சமீபத்தில் அவர் இங்கு பங்களூர் வந்திருந்தார் ஜிஎம்பி சாரைப் பார்க்க அவர் வீட்டிற்குவந்திருந்தார். அப்போது என்னோடு பேசினார். என்னை வரமுடியுமா என்று கேட்டார் ஆனால் என்னால் செல்ல முடியாத நிலை. அவர் போனில் பேசினார்.

      நலமுடன் இருப்பார் என்று நினைக்கிறேன்.

      இதை எபியில் சொல்ல வந்தேன் அதற்குள் இங்கு கருத்து பார்த்ததும் இங்கே ...

      கீதா

      நீக்கு
    2. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மாமனார் 07.03.22 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்களாம் அதுதான் வலைத்தளம் வரவில்லையாம்.
      நான் விசாரித்தபோது சொன்னார்.

      நீக்கு
    3. கோமதிக்கா தகவலுக்கு மிக்க நன்றி. நம் எல்லோரது ஆழ்ந்த அஞ்சலிகளும்.

      கீதா

      நீக்கு
  12. வீட்டின் பின்புறத் தோற்றம் ,தோட்டம் மிக அருமை கீதாமா.மருதாணி!!!!! அச்சோ என்ன அழகா இருக்கும். உடனே
    சிகாகோக்கு அனுப்பவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா. மருதாணி செம கலர். பார்சல் அனுப்பிட்டா போச்சு ஆனால் நீங்கள் இருக்கும் ஊருக்கு விதைகள் அனுப்ப முடியாதே.

      விதைகள் இருக்கிறது.

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  13. பசங்களுக்கு உங்கள் படங்களை
    அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
    இயற்கையின் அழகுக்கு முன் வேறெதுவும் ஈடில்லை.
    மிக மிக நன்றி அன்பு கீதாமா.
    வெளியே எங்கேயும் போக முடியாத நிலையில்

    இது போன்ற பயணப்படங்கள்
    மனதில் மகிழ்ச்சியும் உரமும் கொடுக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசங்களுக்கு உங்கள் படங்களை
      அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.//

      ஆஹா மிக்க நன்றி வல்லிம்மா. சந்தோஷமாக இருக்கிறது.

      ஆமாம் இயற்கைக்கு ஈடு ஏதுமில்லை.

      //வெளியே எங்கேயும் போக முடியாத நிலையில்

      இது போன்ற பயணப்படங்கள்
      மனதில் மகிழ்ச்சியும் உரமும் கொடுக்கின்றன.//

      ஆமாம், அதே போல வெங்கட்ஜி தளத்தில் வந்த அவரது நண்பரின் பயணம் கேதார் தால் படங்கள் விவரங்கள் ஹையோ வாசித்தது மகிழ்வாக இருந்தது

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    நலமா? தங்களின் இந்தப்பதிவும் வழக்கம் போல அழகான அருமையான தொகுப்பு. மலைகளும் அருவி படங்களுமாக அழகான அத்தனை படங்களையும் கண்டு ரசித்தேன். மருதாணி செடி எங்கள் அம்மா வீட்டு தோட்டத்திலும் அப்போது இருந்தது. எத்தனை பேருக்கு பறித்து தந்துள்ளோம். கொடுத்து சிவந்த கைகள்.:)(ஆனாலும் கர்ணனுக்கு நிகராகுமா?)

    தங்களின் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி. தாங்கள் என் வருகைக்கு சந்தோஷபடும் போது மனதுக்குள் ஒரு உற்சாகம் பிறக்கிறது. மிகவும் நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க கமலாக்கா!!! உங்களின் இந்த வணக்கம் கண்டு எவ்வளவு நாளாச்சு!! நலம்...நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் கருத்து கண்டேன் எபியிலும். உடல்நலன் மகன் பற்றி சொன்னது எல்லாம்.

      மகனோடு நேரம் செலவழியுங்கள் வலை இருக்கவே இருக்கிறது எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். என்றாலும் உங்கள் வருகை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு கமலாக்கா..

      //எங்கள் அம்மா வீட்டு தோட்டத்திலும் அப்போது இருந்தது. எத்தனை பேருக்கு பறித்து தந்துள்ளோம். கொடுத்து சிவந்த கைகள்.:)(ஆனாலும் கர்ணனுக்கு நிகராகுமா?)//

      அது ஒரு காலம் இல்லையா? அருமையான காலம். இப்போது நினைவுகளாய். ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஒவ்வொரு பண்டிகை என்று மருதாணி வைத்துக் கொண்ட நாட்கள் ...மருதாணி இட்ட விரல்களோடு கோலாட்டம் போட்டது எல்லாம் நினைவுக்கு வரும்.

      மிக்க நன்றி கமலாக்கா இங்கும் வந்து கருத்து சொன்னமைக்கு . உடல்நலன் பார்த்துக்கோங்க...மகனோடு எஞ்சாய் மாடி!!

      நிம்ம மகனோடுகெ ஆனந்திசி!!!! (தப்பா சரியான்னு தெரியலை...சும்மா நானும் கற்றுக் கொள்கிறேன்னு காமிச்சுக்க வேண்டாமா!!! ஹிஹிஹி)

      கீதா

      நீக்கு
  15. இப்போதான் புரிந்தது. கடம் என்பதற்கு பீடி என்றொரு அர்த்தமும் உண்டு என்பது. கடம் போடு வாழ்வு : பீடி போடு வாழ்வு. OK?

    கலாய்ப்பில் பத்தாவதாய் சேர்த்துக் கொள்ளவும். 
    பி.கு.
     ஒரு காலத்தில் நானும் கிங், செய்யது, காஜா, தினேஷ் என்று குடித்தவன் தான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  16. இப்போதான் புரிந்தது. கடம் என்பதற்கு பீடி என்றொரு அர்த்தமும் உண்டு என்பது. கடம் போடு வாழ்வு : பீடி போடு வாழ்வு. OK?//

    ஹாஹாஹாஹா என்ன ஆராய்ச்சி!!!! கலாய்ப்புன்னு தெரியும்!

    நன்றி ஜெகெ அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அனைத்தும் அழகு. அனைத்தையும் ரசித்தேன்.

    பீடி சுற்றும் தொழில்... அதன் வாசம் பலருக்கும் பிடிப்பதில்லை! இவர்களுக்கு அதுவே தொழில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி. மன்னித்துக் கொள்ளவும் கொஞ்சம் தாமதமாக வெளியிட்டிருக்கிறேன். வேலைப் பளு.

      //பீடி சுற்றும் தொழில்... அதன் வாசம் பலருக்கும் பிடிப்பதில்லை! இவர்களுக்கு அதுவே தொழில்.//

      ஆமாம் ஜி. பாவம் தான் அவர்கள்.

      பொது இடங்களில் இந்த வாசம் வரும் போது முன்பெல்லாம் மூக்கைக் கொஞ்சம் மூடிக்கொள்ளத் தோன்றும். இருமல் வரும். நமக்கே அப்படி என்றால் அவர்களுக்கு? ஒருவேலை பழகிவிடும் போல.

      இப்ப மாஸ்க் போடுவது ஒரு விதத்தில் நல்லதோ!!

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு