கடம்போடுவாழ்வு பற்றிய இரண்டாவது பகுதியை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. மூன்றாவது பகுதிக்கான படங்களை இன்னும் தொகுத்தபாடில்லை, பதிவு ஒரு சில வரிகள்தான் ஆனாலும் இன்னும் எழுதவில்லை என்று உண்மையைச் சொல்லலாம்!
ஆனா கீதா அப்படிச் சொல்லமாட்டாள்! கடம்போடு வாழ்வில் மழை கொட்டுகிறது, மழை நின்றதும்
சுற்றிப் பார்க்கலாம் என்று சொல்லி.......
இடையிடையே எனது மூன்றாவது விழியின் பார்வையிலே பகுதியைக் கொஞ்சம் புதுப்பிக்கலாமே என்று யோசித்திருந்த வேளையில் நான் எடுத்து வைத்திருந்த ஏரிகள், பறவைகள் படங்கள், சில 'திங்க' படங்கள், எழுதி முடிக்கப்படாத கதைகள் எல்லாம் போயி! போயிந்தி. கரெப்ட்டட் மீட்டெடுக்க முடியாத பென் ட்ரைவில். அதுக்குள்ள என்ன ஊழல் நடந்திச்சோ!!! அன்றைய தின ராசி பலன் 'மகிழ்ச்சி' யாம். யாருக்கு? என் நேரத்திற்கு!!!!!
எழுதுபவற்றை ஒரு ஃபோல்டர் என்றில்லாமல் கணினி, எக்ஸ்டேர்னல் ஹார்ட் டிஸ்க் என்று மூன்று நான்கு இடங்களில் சேமிப்பதுண்டு. இவற்றை சேமிக்க வேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் போயே போச்!
வேறு சில இன்னும் மீட்கப்படாமல் இருக்கும் வயசான ரிட்டையர்ட் ஹார்ட் டிஸ்கில். எப்போது மீட்கப்படுமோ யாமறியோம்! இந்த கணினி ட்ரைவ், எக்ஸ்டார்னல் ட்ரைவ் எதையும் நம்பக் கூடாது. முடியாது! அதனால இப்ப ஒன் ட்ரைவ், கூகுள் ட்ரைவ் லாக்கர்லயும் போட்டு வைச்சிருக்கேன். ஃப்ரீ க்ளவுட் லாக்கர் இருக்கிறதுதான். பார்த்து சேமிக்க வேண்டும். அதுவும் ஏமாத்தாம இருக்க வேண்டுமே!
வழக்கமாக நடைப்பயிற்சி செய்யும் இரு ஏரிகளைச் சுற்றியுள்ள பாதைகள் கொரோனா படுத்தியதில் மூடப்பட்டிருந்தன. ஒரு ஏரி 20 நிமிட நடையில். ஏரியைச் சுற்றி நடந்தால் 1 மணி நேரம். மொத்தம் 1 மணி நேரம் 20 நிமிடங்கள். வேக நடை.
மற்றொன்று 10 நிமிட நடையில் அருகில் உள்ளது. சுற்றி நடக்க 45 நிமிடம் நடைப் பயிற்சி. மொத்தம் 55 நிமிடங்கள். வேக நடையில். சமீபத்தில் திறக்கப்பட்டதும்
சென்ற மாதத்திலிருந்து அருகில் உள்ள ஏரியின் நடை பாதையில் நடைப்பயிற்சி.
பெரிய ஏரியின் படங்கள் எல்லாம் 'போயிந்தி'யில் சேர்ந்துவிட்டது. எனவே அருகில் இருக்கும் சிறிய ஏரியின் படங்கள் சில இப்பதிவில்.
காலை 7.45 க்குக் கூட இப்படித்தான் பனி இறங்கி சூழ்ந்து இருக்கு இது ஃபெப்ருவரி கடைசில. இப்போதும் கூட சில நாட்கள் இப்படித்தான் வெயில் வந்தாலும். எனவே சில படங்களில் லைட்டிங்க் சரியா இருக்காது.
இவ்வளவு அழகான ஏரி எப்படிக் கெடுகிறது பாருங்கள். ஏரியைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் வீடுகளின் கழிவு நீர் ஏரியில் வந்து சேர்கிறது. இப்படி ஏரியைச் சுற்றி ஆங்காங்கே கட்டிவிட்டிருக்காங்க பாருங்க. முதல் படத்திலும் இப்படி ஒன்று இருக்கும் பாருங்க, அது ஏரியின் வேறு ஒரு இடத்தில். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுக்கிறார்கள்? அரசு கவனிக்காதா? ஆச்சரியம்!
ஏரியின் அழகு. மூங்கில் மரத்தில் பறவைகள் அமர்ந்து இருக்கும் படம் அழகு.
பதிலளிநீக்குவீடுகளின் கழிவு நீர் ஏரியில் வந்து சேர்வதை தடுத்தால் ஏரி அழகாய் இருக்கும் பறவைகளின் வருகையும் அதிகமாக இருக்கும்.
மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கும் ரசித்தமைக்கும்.
நீக்கு//வீடுகளின் கழிவு நீர் ஏரியில் வந்து சேர்வதை தடுத்தால் ஏரி அழகாய் இருக்கும் பறவைகளின் வருகையும் அதிகமாக இருக்கும்.//
ஆமாம். ஆனாலும் பறவைகள் வருகின்றன. நான் ஃபெப்ருவரியில்தான் செல்லத் தொடங்கினேன் பார்க் திறந்த பிறகு. கொஞ்சம் பறவைகள் இருந்தன இப்போது சீசன் முடிவு அதனால பறவைகள் ரொம்பக் கம்மியாகிவிட்டன. ஆனால் எடுத்த பறவைகள் தகவல்கள் அப்புறம் பதிவில் போடலாம்னு இருக்கிறேன் கோமதிக்கா.
நன்றி அக்கா
கீதா
கீதா
விவரணம் அருமை.
பதிலளிநீக்குகீழிருந்து மேல் நான்காவது படத்தின் மரத்தை முழுமையாக எடுத்து இருக்கலாம்.
ஹாஹாஹா கில்லர்ஜி அந்த மரம் இந்த ஆங்கிள் எனக்குப் பிடித்தது வியூ பைண்டரில் பார்த்தப்ப உடனே க்ளிக்கி விட்டேன். முழுசா எடுத்தா நான் எடுக்க நினைத்த இரண்டும் வந்திருக்காதே அதனால். அதுக்கென்ன கில்லர்ஜி மரத்தை முழுசா எடுத்துப் போட்டுவிட்டால் போச்சு அடுத்த இப்பகுதிப் பதிவில்! போய்க் கொண்டுதான் இருக்கிறேனே தினமும். டன்!
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
கீதா
பாடுபட்டு படமும் பாடமும் கதையும் தேடி
பதிலளிநீக்குஹார்ட் டிஸ்கில் சேர்த்து வைக்கும் மானிடர்காள் கேளுங்கள்.
கூடு விட்டு ஆவி தான் போயின பின்
யாரே அனுபவிப்பார் அந்தச் சேமிப்பு.
அது என்னமோ ஸ்ரீராமூக்கு நடந்தது (பைல் மாயம்) கீதாவுக்கு நடக்கும் என்று யாரோ சாபம் விட்டு விட்டார்கள் போலும்.
ஆமாம் இந்த போட்டோ எல்லாம் எந்த ஊர். இந்தியா என்பது மட்டும் புரிகிறது. ஆனாலும் உங்கள் முத்திரை இல்லை. இதைவிட நன்றாக கோமதி அக்கா படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். மனதில் பட்டதை சொன்னதிற்கு கோவிச்சுக்காதீங்கோ!
Jayakumar
//ஹார்ட் டிஸ்கில் சேர்த்து வைக்கும் மானிடர்காள் கேளுங்கள்.
நீக்குகூடு விட்டு ஆவி தான் போயின பின்
யாரே அனுபவிப்பார் அந்தச் சேமிப்பு. // - நேற்று மனதில் நான் நினைத்துக்கொண்டிருந்ததை ஜேகே சார் பின்னூட்டத்தில் பார்க்கிறேன். என்னிடம் லட்சத்துக்கு மேல் புகைப்படங்கள் உண்டு. அவைகளை நான் go thru செய்தால் அந்த நாளில் நடந்தவையெல்லாம் மீண்டும் நினைவில் வரும், வெளிநாட்டுப் பயணங்கள் அங்கு நடந்தவை உட்பட. சட் என நான் இல்லாவிடில், அந்தத் தொகுப்பு எல்லாவற்றையும் பிறர் பார்க்க வாய்ப்பு வருமா? அதே நினைவுகள் எழுமா என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஜெகெ அண்ணா, ஹாஹாஹா கோபம் லாம் இல்லை. மீ கூல்.
நீக்குயாரேனும் ரசிக்கலாமே. இப்ப பலரும் போடும் படங்களை நான் ரசித்துப் பார்க்கலையா அது போல யாரேனும் ரசித்துப் பார்க்கலாம். ஓரிருவர் ரசித்தாலும் ஓகே தானே. இல்லை என்றாலும் நாம் போனபிறகு நமக்குத் தெரியவா போகிறது? எதையுமே நாம் பாசிட்டிவாகப் பார்க்கலாமே. நமக்கென்று ஏன் நினைக்க வேண்டும்?
என் கேமராவின் சக்திக்கு ஏற்ப இவ்வளவுதான் ஜெகே அண்ணா. கோமதிக்கா, கீதா மணிவாணன், ராமலக்ஷ்மி, வெங்கட்ஜி இவர்களின் படங்கள் அசாத்தியமாக இருக்கும் என்பதும் தெரியும். நான் எனது ஆத்ம திருப்திக்காக, ரசித்துப் புகைப்படம் எடுப்பதில் உள்ள ஆர்வத்தில் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிகாகத்தான் எடுத்து நான் பெற்ற இன்பம் பிடித்தவர்களுக்கும் கிடைக்கட்டுமே என்றுதான்.
மிக்க நன்றி ஜெ கே அண்ணா கருத்திற்கு
கீதா
அது சரி. படம் எடுத்த இடம் பெயர் ஒன்றும் சொல்லவில்லையே? பெங்களூர் தானா?
நீக்குஓ ஆமாம் ஜெ கே அண்ணா சொல்ல விட்டுப் போச்சு பாருங்க. அதேதான்.
நீக்குகீதா
ஏரியின் படங்கள் மனம் கவர்கின்றன்.
பதிலளிநீக்குகழிவுநீர் கலப்பதுதான் வேதனை
மிக்க நன்றி கரந்தை சகோ, கருத்திற்கும் ரசித்தமைக்கும்
நீக்குஆமாம் கழிவுநீர் கலப்பது வேதனைதான்.
கீதா
பெரும் மழை வந்து, வெள்ளம் வந்து, பிறகு வெயில் வந்து, எல்லாம் காய்ந்து.... பலவித வானிலைகள் மாறி பலப்பல மாதங்களாகிவிட்டாலும் இன்னும் கடம்போடு வாழ்வு முடிக்காமல் இருக்கிறாரே இந்தக் கீதா ரங்கன்(க்கா)
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹாஹா நெல்லை சிரித்து முடியலை. நிஜமாவே இதுதான் இப்போதைய கீதாவின் நிலை!!!!! ஹையோ விசாகப்பட்டினம் வேற இருக்கே நெல்லை!!! காஞ்சு கருவாடாகி!!! ஹாஹாஹாஹாஹா
நீக்குஅடுத்த பதிவு கடம்போடுதான் சீக்கிரம் அதை தொகுக்க வேண்டும். அது வேறு ஒன்னுமில்லை, அப்படியே படங்களைப் போட முடியாது பிக்ஸல் குறைத்தால் நல்லது என்பதால் அப்புறம் பேர் பொறிக்கவும்!! (ஹிஹிஹி)
கேமராவிலே ஒரு ஆப்ஷன் இருக்கிறது இமெயிலில் அனுப்பும் ஃபார்மாட்டா, பிரிண்டிற்கா என்றெல்லாம் அதில் இதுவரை முயற்சி செய்யவில்லை. அப்படிச் செய்து பார்க்க வேண்டும். என்ன பிக்ஸலில் வருகிறது என்று.
மிக்க நன்றி நெல்லை
கீதா
அக்கா resize , watermark எல்லா படங்களுக்கு ஒரே நேரத்தில் செய்யும் software உபயோகம் செய்யுங்க ஈசி யா வேலை முடியும் ...நான் use பண்றது fast stone image viewer ..free , handle பண்றது ரொம்ப சுலபம் ...
நீக்குஇதில resize செஞ்சு உங்க கூகுள் போட்டோஸ் ல save செஞ்சுடுங்க ...காணவே போகாது ..என்னோட எல்லா படங்களையும் இப்படி தான் நான் சேமிக்கிறது ..
வாங்க அனு. அனு நானும் வாட்டர் மார்க் பாத்திருக்கேன்..நிறைய ஃபோட்டோஸ் ஒரே டைம்ல செய்யலாம் தான்...இப்ப இன்னும் ஈசியா விண்டோஸ் 10 ல பிக்சர் ஓப்பன் பண்ணினௌடனேயெ க்ராப் இருக்குல்ல அதுல 4 ஆப்ஷன்ஸ் சைஸ் சேஞ்ச் பண்ண அது யூஸ் பண்ணிக்கிறேன்.
நீக்கு//.நான் use பண்றது fast stone image viewer ..free , handle பண்றது ரொம்ப சுலபம் ...//
இது யூஸ் பண்ணினது இல்ல. நன்றி அனு. இதையும் பார்க்கிறேன். நோட் செய்து கொண்டேன். மிக்க நன்றி அனு
கீதா
க்ராப்//
நீக்குஸாரி க்ராப் இல்ல ரி சைஸ் இமேஜ் ஆப்ஷன்...
கீதா
படங்கள் அத்தனையும் அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ
நீக்குகீதா
ஏரியில் கழிவு நீரை விடும் மனிதர்களை என்ன செய்யலாம்? இப்படித்தான் பல ஊர்களிலும் ஆறுகள்/ஏரிகள்/குளங்கள் வீணாகிப் போய் நீரும் கெட்டுவிட்டது. ஆனாலும் திருந்தாத ஜென்மங்கள்!
பதிலளிநீக்குஎல்லாப் படங்களுமே அழகு. கில்லர்ஜி சொன்னாப்போல் அந்த மரத்தை முழுசாக் காட்டி இருக்கலாமோ?
அனுமதி எப்படிக் கிடைத்தது என்பதுதான் எனக்கு ஆச்சரியும். இப்படி ஆன பிறகும் கூட அதிகாரிகள் கண்டுக்காம இருக்காங்களே. இப்போது ஏரியில் வளர்ந்திருக்கும் செடிகளை அகற்றும் வேலை நடைபெறுகிறது.
நீக்கு//இப்படித்தான் பல ஊர்களிலும் ஆறுகள்/ஏரிகள்/குளங்கள் வீணாகிப் போய் நீரும் கெட்டுவிட்டது. ஆனாலும் திருந்தாத ஜென்மங்கள்!//
ஆமாம் அதே..
எல்லாப் படங்களுமே அழகு. கில்லர்ஜி சொன்னாப்போல் அந்த மரத்தை முழுசாக் காட்டி இருக்கலாமோ?//
அக்கா முழு மரம் வந்திருந்தால் நான் எடுக்க நினைத்து ஃபோக்கஸ் செஞ்சது வந்திருக்காதே. இது மரத்தின் கிளை கொஞ்சமே கொஞ்சம் ஃப்ரேமில் தெரிந்ததும் அட இது அழகா இருக்கே என்று எடுத்தேன். முழு மரம் வந்தால் அந்தப் படகோ, பறந்து வந்து தண்ணீரில் லேன்ட் ஆகும் பறவையோ வந்திருக்காது அதுதான் என் ஃபோக்கஸ்...
மிக்க நன்றி கீதாக்கா படங்களை ரசித்தமைக்கு
கீதா
சேமித்து வைத்திருப்பது இப்படித் தோலையும் வரும் சோகமும், வேதனையும்...
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். இப்ப ஒன் ட்ரைவ், கூகுள் ட்ரைவில் அங்கங்க கொஞ்சம் எல்லாதுலயும் லிமிட் இருக்கிறதே. எக்ஸ்டர்னல் ட்ரைவிலும் போட்டு வைத்துவிடுகிறேன். அதனால்தான், இணையத்தில் இப்படிப் போட்டு வைக்கலாம், யுட்யூபில் போட்டு வைக்கலாம் என்று போட்டு வைக்கிறேன். விருப்பம் உள்ளவங்க பார்த்துக்கலாமே என்று.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
லைட்டிங் சரியில்லையா? நான் அதெல்லாம் பார்ப்பதே இல்லை! எடுத்தோம், பகிர்ந்தோம் என்று எதையோ எடுத்து பகிர்ந்து விடுவேன்!!!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா. ஸ்ரீராம் உங்கள் படங்களும் நல்லாத்தானே இருக்கு.
நீக்குஅப்படியும் எடுக்கலாம்தான். நான் புகைப்படக் கலை ஆர்வத்தில் தெரிந்து கொண்ட இந்த டெக்னிக்ஸ் கொஞ்சம் அனுபவ ரீதியாக முயற்சி செய்கிறேன் ஸ்ரீராம்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
படங்கள் யாவும் வெகு அழகு. ஏதேதோ எண்ணங்கள் தோன்றுகின்றன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் ரசித்தமைக்கு.
நீக்குஉங்கள் எண்ணங்களைக் கவிதையாக்கிவிடுங்கள்! ஸ்ரீராம்.
கீதா
அருமையான காட்சிகள் அக்கா ..
பதிலளிநீக்குஇங்க kaikondrahalli lake இருக்கு நாங்க நடைப்பயிற்சி செல்லும் இடம் ...உங்க காட்சிகள் போலவே இருக்கும் ...அந்த மரங்கள் , ஏரியில் நீர் , பறவைகள் மற்றும் சாக்கடை நீர் சேரும் இடம் எல்லாமே ...
தெரியும் அனு நீங்க நல்லா ரசிப்பீங்கனு. உங்கள் அருகில் இருக்கும் ஏரியின் படங்களும் போடுங்க. நிறைய பறவைகளும் எடுத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக மெதுவா போடலாம்னு
நீக்குமிக்க நன்றி அனு
கீதா
அனைத்துப்படங்களும் அழகு என்றாலும் அந்த ஒற்றைப்பறவையும் அதன் கீழுள்ள இரட்டைப்பறைவைகளும் கூடுதல் அழகு!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா படங்களை ரசித்தமைக்கு.
நீக்குகீதா
படங்கள் அனைத்தும் அழகு. இயற்கையை கெடுக்கும் விஷமிகள்.... அனுமதிக்கும் அரசு.... வேதனையான உண்மை.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி படங்களை ரசித்தமைக்கு.
நீக்குஆமாம் அரசும் அனுமதி எப்படி வழங்குகிறது என்பதுதான் வேதனை. ஆனால் அதுதான் உண்மை. மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு.
கீதா
படங்கள் நன்றாக இருக்கின்றன. செல்ஃபோனில் பார்ப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
பதிலளிநீக்குநன்றி பானுக்கா. ஆமாம் செல் ஃபோனில் ரசிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
பதிலளிநீக்குகீதா