வெள்ளி, 22 ஏப்ரல், 2022

கடம்போடுவாழ்வு - 5

இன்று உலக புவி தினமாம். பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பூமி மாசடைவதைத் தடுக்கவும்......அட போங்கப்பா. சும்மா கூவிக்கிட்டு! இதுக்கு ஒரு தினம்னு கொண்டாடிக்கிட்டு.....இதுவரை என்ன மாற்றம் நடந்தது? என்ன மாசுக்கட்டுப்பாடு? புகை கூடியுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் பெருகி உள்ளன. அப்புறம் எதற்கோ....அட போங்கப்பா..!

பூமியைக் காப்போம், இயற்கையைக் காப்போம் என்று சொல்லப்போவதில்லை. சொல்லுவதால் எதுவும் மாறப் போவதில்லை. நம்மால் எதுவும் இல்லாமல் இருக்க முடிவதில்லை. அடுத்து, நாம் சொல்லுகிறோமே நாம் ஏதாவது அதற்கு முயற்சி எடுத்தோமா என்று நினைத்துப் பார்த்த போது, நாமும் ஒன்றும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை, உண்மையைச் சொல்லப்போனால் பூமியின் இயற்கை அழிவதற்கும், கிரீன் ஹவுஸ் விளைவிற்கும், சுற்றுச் சூழல் மாசடவைதற்கும் நாமும் ஒரு காரணம்தானே.  

காரணமாக இருந்துகொண்டு காப்போம் என்று சொல்வது நியாயமில்லையே! ஊரார்க்கு உபதேசம்! எனவே சொல்லப் போவதில்லை. பூமிக்குத் தேவையானவை, நாமும் நம் எதிர்காலச் சந்ததியினரும் வளமாக, ஆரோக்கியமாக வாழத் தேவையானவை....
 




கடம்போடுவாழ்வில் ஐயனார், சுடலை ஆண்டவர் கோயில்கள்தான்.  எட்டெழுத்து பெருமாள் கோயில் என்று இருக்கிறது. பெருமாள் இருக்கிறார். அவ்வளவே. நான் படம் எடுத்தேன் ஆனால் சரியாக வரவில்லை. 
இது கடம்போடுவாழ்வு - வடக்குப்பகுதிக்குச் செல்லும் பாதை. சுற்றிலும் பசுமை பசுமைதான்.  சித்திப்பாட்டி வீட்டிலிருந்து அரைக்கிலோமீட்டர். அப்படிப் போகும் போது எடுத்தப் படங்கள்தான். 


வாழையின் இடையே ஆரைக்கீரை (ஆலக் கீரை, ஆராக்கீரை. ஆங்கிலத்தில் European water clover) கொத்துக் கொத்தாக வளர்ந்திருந்தது.  (இங்கு நம் வீட்டில் இருக்கும் குளியல் அறை அளவே இருக்கும் மண்ணில் நிறைய கொத்து கொத்தாக, தோட்டம் போன்று வளர்ந்திருந்தது. கஷாயம் செய்தும் குடித்தோம். கீரை செய்யும் போது சேர்த்தும் செய்தேன்) இது மழைக்காலத்தில், ஆற்றின் ஓரங்களில், தண்ணீர் இருக்கும் பகுதிகளில் நிறைய வளரும் நீர்த்தாவரம். நிறைய மருத்துவ பயனுள்ள கீரை. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள இணையக் களஞ்சியத்தில் தேடித் தெரிந்து கொள்ளலாம் என்பதால் இங்கு சொல்லவில்லை.



வடக்கூரில் உள்ள மிகப் பெரிய குளம். பாசனத்திற்கு உதவும் குளம். இந்த ஊரில் நிறைய குளங்கள், வாய்க்கால்கள் இருக்கின்றன. 

இந்தச் செடியும் தோட்டம் போல வளர்ந்திருந்தது. இது என்ன என்று கேட்க நினைத்தேன் அங்கு யாரும் இல்லாததால் அப்புறம் கேட்டுக் கொள்ளலாம் என்று படம் எடுத்துக் கொண்டு வந்து கேட்டால் யாருக்கும் பெயர் என்ன என்று தெரியவில்லை. கூகுளில் கேட்டால் அதுவும் சரியாகக் காட்டவில்லை.  இதோ கீழே இன்னும் நன்றாகத் தெரியும் படி க்ராப் செய்து படம் போட்டிருக்கிறேன்.
இது என்ன செடி என்று உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

குளத்தில் வளர்திருக்கும் செடிகளின் மீது கொக்குகள் ஏதோ மலர் மொட்டுகள் போல உட்கார்ந்திருக்கின்றன
இருந்த நாலு நாட்களில் இரு நாட்கள் மழை கொட்டித் தீர்த்தது. கடம்போடுவாழ்வு அடுத்த பதிவில் இன்னும் மழைப்படங்கள் மற்றும் வேறு சில படங்களுடன் நிறைவடையும்.

இதுவும் நாரைகள் பறக்கும் வீடியோதான். ஒரு விவசாயி நடந்து போய்க்கொண்டிருப்பார். 

இதுவும் ஒரு சின்ன காணொளி - குளத்தில் வாத்துகள்

https://youtu.be/3HP2oraJ8b8

பதிவில் இருக்கும் படங்களோடு சேர்த்து கொடுக்காத படங்களின் காணொளித் தொகுப்பு 

https://youtu.be/_azcnfOPhfg

அடுத்த பதிவில் சந்திப்போம்!! சென்ற பதிவைப் பார்த்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றியுடன்!


-----கீதா


(ஆங்கில இலக்கணம்  உதாரணங்களுடன் தமிழிலும், மலையாளத்திலும் விளக்கி, துளசி வீடியோக்கள் வெளியிடுகிறார்(றோம்). கூடவே குறிப்புகளும். யாருக்கேனும் பயன்படுமானால் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.  பயன்படுபவர்களுக்கு நீங்கள் சொல்லலாம்.)



46 கருத்துகள்:

  1. வாழைகளின் ஊடாக "ஆரைக்கீரை" அருமை. இந்த ஆரைக்கீரையை வைத்து ஒரு புலவர் "ஒரு காலில் நலிலை பந்தலடி" என ஔவையாரிடமே புதிர் போட... அதற்கு ஔவையார் சொன்ன பதில் இலக்கியத்தில் பிரசித்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நாஞ்சில் சிவா....ஆமாம் அதை நானும் வாசித்திருக்கிறேன். அதைச் சொல்ல நினைத்து இன்று கூட எழுதும் போது...அந்த லிங்க் எடுத்து வைத்திருந்தேன். சொல்லுவோம் என்று நினைத்து ஏனோ பதிவு போதும், இணையத்தில் தகவல்கள் இருக்கிறதே என்று சொல்லி முடித்துவிட்ரேன்.

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா.

      கீதா

      நீக்கு
    2. நீங்கள் கூட ஆரைக்கீரையைப் பத்தி எழுதியிருக்கீங்க இல்லையா?!!!

      சரி அப்படியே அந்தச் செடிப்படத்துக்கும் பதில் சொல்லிட்டுப் போங்க....கேட்டிருக்கிறேனே...

      கீதா

      நீக்கு
    3. நன்றி சகோதரி... அதன் பெயர் "நீர்முள்ளி"(Hygrophila auriculata). இதன் விதைகளை மருந்தாக நான் நிறைய சாப்பிட்டுள்ளேன். விரைவில் இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என இருக்கிறேன்.. நன்றி!

      நீக்கு
    4. சூப்பர் சூப்பர் நாஞ்சில் சிவா!! எழுதுங்க. உங்கள் கட்டுரைகள் அனைத்தும் ரொம்ப பயனுள்ளவை. குறிப்பாக அறிவியல் பாடம் படிக்கும் குழந்தைகளுக்குத் தமிழில் தெரிந்து படிக்க மிக மிகப் பயனுள்ளவையாக இருக்கின்றன.

      மிக்க நன்றி மீண்டும் வந்துகருத்து சொன்னமைக்கு. நான் அந்த ஊராருக்கும் சொல்லலாமே. அதை யாரோ அவர்கள் தோட்டத்தில் வளர்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
  2. படங்கள் தெளிவாக இருக்கின்றன.  வாழ்க்கையைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் முக்கியமானதே. இன்று புவி தினம், நாளை நீர் தினம் என்றெல்லாம் கொண்டாடலாம். 
    செடிகளைப்பற்றி கூகிளார் சொன்னது. 
    Daphnes
    PlantDescription
    Daphne is a genus of between 70 and 95 species of deciduous and evergreen shrubs in the family Thymelaeaceae, native to Asia, Europe and north Africa. They are noted for their scented flowers and often brightly coloured berries. Two species are used to make paper. Wikipedia
    Scientific name: DaphneHigher classification: ThymelaeaceaeRank: GenusOrder: MalvalesKingdom: PlantaeJayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் முக்கியமானதே. இன்று புவி தினம், நாளை நீர் தினம் என்றெல்லாம் கொண்டாடலாம். //

      ஆமாம். நான் அடிக்கடிச் சொல்வது.

      Daphne - மற்றும் டாஃப்னே வகைகள் பல இருக்கு பலவும் நான் கூகுளில் பிக்சர் செர்ச் செய்த போது வந்தது. Daphne gnidium மும் பார்த்தேன் கிட்டத்தட்ட உடனே பார்க்க அப்படி இருந்தாலும் நான் பொட்டிருக்கும் செடியின் இலை அமைப்பு வேறாக இருக்கிறது. பூக்களும் இல்லை, எனவே கூகுள் தந்த படங்களோடு ஒப்பிட்டு உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்பதால் இங்கு சொல்லவில்லை அண்ணா. Bmastru Giovanni இது லோக்கல் பெயர்.

      நன்றி அண்ணா

      மேலே முதல் கருத்து கொடுத்திருக்கும் நாஞ்சில் சிவா வந்தால் சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன் வந்திருக்கிறார் ஆனால் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் செடிகள் பற்றி அறிந்தவர் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார் அவர் தளத்தில். பெரும்பாலும் அறிவியல் பற்றித்தான் எழுதுவார். அவர் வேலை செய்வதும் அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த துறை.

      நாகர்கோவிலார்!!!!

      படங்கள் தெளிவாக இருக்கின்றன.//

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
    2. அந்த தாவரம் "நீர்முள்ளி" (Hygrophila auriculata) நீல நிறத்தில் பூக்கும். இதில் கருஞ்சிவப்பு நிறத்தில் பூப்பதை "செம்முள்ளி" என அழைக்கின்றனர். இது மிக பிரசித்தமான மூலிகை செடி. இந்த நீர்முள்ளியில் 8 வகையான சிற்றினங்கள் உள்ளன. இதன் வித்துக்களே அதிக அளவில் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விதைகள் நாட்டுமருந்து கடைகளில் தாராளமாக கிடைகின்றன.

      நீக்கு
  3. படங்கள் எல்லாமே வழக்கம்போல் அருமையாக வந்திருக்கின்றன. ரொம்பப் பொறுமையும் நிறைய நேரமும் செலவழிக்கணும். ஆரைக்கீரைப் பாடல் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கேன். சென்னையில் விற்பார்கள். அநேகமாக அங்கே கிடைக்காத கீரையே இல்லை எனலாம். இங்கே தேர்ந்தெடுத்த சில கீரைகளே கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் விற்பார்கள். அநேகமாக அங்கே கிடைக்காத கீரையே இல்லை எனலாம்.//

      ஆமாம் கீதாக்கா. அது போல பாண்டிச்சேரியிலும் கிடைக்கும் அதுவும் கிராமத்துப்பகுதிகளில் பாட்டிகள் தோட்டத்திலிருந்து கொண்டு வருவாங்க.

      இங்கும் பங்களூரிலும் சில கீரைகள் தான் கிடைக்கின்றன

      படங்கள் எல்லாமே வழக்கம்போல் அருமையாக வந்திருக்கின்றன.//

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  4. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    காணொளி கண்டேன்

    பெயருக்கு ஓர் தினம் இப்படி வருடம் முழுவதும் வைத்து இருக்கிறோம் அவ்வளவுதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி, கருத்திற்கும், காணொளி கண்டதற்கும்.

      பெயருக்கு ஓர் தினம் இப்படி வருடம் முழுவதும் வைத்து இருக்கிறோம் அவ்வளவுதான்...//

      அதே கில்லர்ஜி.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  5. அந்தச் செடி ஏதோ கீரை வகை எனவும் முள் இருக்கும் எனவும் மருந்துக்குப் பயன்படும் எனவும் எங்க பால்காரப் பையர் சொல்றார். நம்ம ரங்க்ஸாலேயே கண்டு பிடிக்க முடியலை. மாமியார் இருந்திருந்தால் உடனே சொல்லிடுவார். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா நீங்கதான் கீழ சொல்லிட்டீய்ங்களே, நாஞ்சில் சிவாவும் மேலே சொல்லியிருக்கிறார். நீர்முள்ளி கேட்டிருக்கிறேனே தவிர பார்த்தது இல்லை. அதனாலதான் கண்டுபிடிக்க முடியலை

      ஆமாம் பெரிவர்கள் அதுவும்கிராமத்தில் இருந்தவங்க கண்டிப்பா சொல்லிடுவாங்க. மாமாக்குத் தெரிந்திருக்கும்...டக்கென்று நினைவுக்கு வந்திருக்காது அதான் அப்புறம் சொல்லிட்டாரே!!

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  6. நம்மவருக்கு ரோஷம் வந்து நினைவும் வந்து விட்டது. அதன் பெயர் நீர் முள்ளியாம். சிறுநீரகக் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்தாம். குறிப்பாக சிறுநீர்ப்பாதையின் எரிச்சல், வலியைக் குணப்படுத்திச் சீராக்கும் தன்மை கொண்டதாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹாஹா.....நினைவுக்கு வந்துவிட்டதே!!!

      நல்ல விஷயம் கீதாக்கா. பாருங்க எவ்வளவு நல்ல மூலிகைகள் நம்மிடையே இருக்கின்றன. நமக்குத்தான் தெரியாம அதைப் பயன்படுத்தாமல் போகிறோம் போல.

      மிக்க நன்றி கீதாக்கா செடி பத்தி சொன்னதுக்கு. மாமாக்கும், பால்காரருக்கும் என் நன்றியைச் சொல்லிடுங்க கீதாக்கா

      கீதா

      நீக்கு
  7. https://tinyurl.com/mub2szcy மூலிகை வளம் பதிவில் காணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டியைக் குறித்துக் கொண்டேன் கீதாக்கா. பார்க்கிறேன்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  8. //இந்தச் செடியும் தோட்டம் போல வளர்ந்திருந்தது. இது என்ன என்று கேட்க நினைத்தேன் அங்கு யாரும் இல்லாததால் அப்புறம் கேட்டுக் கொள்ளலாம் என்று படம் எடுத்துக் கொண்டு வந்து கேட்டால் யாருக்கும் பெயர் என்ன என்று தெரியவில்லை.//

    இந்த தாவரத்தின் பெயர் "நீர்முள்ளி" (Hygrophila auriculata). நீர்ப்பாங்கான இடத்தில் வளர்வதாலும் தண்டு முடிச்சுகளில் முட்கள் அமைப்பு காணப்படுவதாலும் இது "நீர்முள்ளி" என்று அழைக்கப்படுகிறது.

    இது ஒரு மூலிகை செடி. முழு செடியும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இளம் ஊதா நிறத்தில் பூக்கும் சில செடிகள் கருஞ்சிவப்பு நிறத்தில்கூட பூக்கும். விதைகள் கருமை கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். இலைகள் கசாயமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் பிரசித்தம். இதன் விதைகள் சூரணமாகவும், லேகியமகவும் தயாரிக்கப்பட்டு ஆண்மை குறைபாட்டை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீர்க்கட்டை உடைக்க, சிறுநீரகம் சார்ந்த நோய்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா, நீர்முள்ளி பற்றிய விளக்கமான தகவல்களுக்கு. நீங்களும் பதிவு போடுங்கள்.

      மீண்டும் நன்றி

      கீதா

      நீக்கு
  9. //காரணமாக இருந்துகொண்டு காப்போம் என்று சொல்வது நியாயமில்லையே!//

    இது சகஜம்.  தமிழை ஒழிப்பவர்கள்தான் தமிழை வளர்ப்போம்னு குரல் கொடுப்பாங்க..   சாதியை ஒழிப்போம்னு சொறவங்கதான் அதை நினைவுபடுத்திக்கிட்டே இருப்பாங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அதே அதே....

      அது வேற ஒண்ணுமில்லை. நான் முன்ன அடிக்கடி பதிவிலும், கருத்திலும் சொல்லியதுண்டே அதான்..!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. படங்கள் அழகாய் எடுக்கப்பட்டிருக்கின்றன.  அழகான இடங்களை பார்த்தல் நம் கை அரிக்கும் - படம் எடுக்கச்ச்சொல்லி!  அந்தச் செடிக்கூண்டின் மேல் உட்கார்ந்திருப்பது குயில்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆமாம் கை அரிக்கும் உடனே எடுக்கச் சொல்லி!!!...

      இல்லை ஸ்ரீராம் அது குயில் இல்லை, கரிச்சான் குருவி/ரெட்டைவால் குருவி ஆங்கிலத்தில் ட்ரோங்கோ.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. செடி இலையைப் பற்றியும் ஒன்றும் தெரியாது எனக்கு!  நாஞ்சில் சிவா முதல் ஆளாய் வந்து விடை சொல்லி விட்டார் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் எனக்கும் அவ்வளவாகத் தெரியாது. 12வது படிக்கும் போது எடுத்த க்ரூப் அறிவியல். பாடத்தில் பாட்டனி வருமே அதில் கற்றதும், கூடவே பாடத்தில் இல்லாத ஆனால் பாடத்தோடு சம்பந்தப்பட்ட செடிகள் பற்றி அறியச் சொல்லி செடி கிடைத்தால் கொண்டுவரவும் சொல்லுவாங்க, இலைகள் அதன் அமைப்பு என்று. அப்புறம் ஹெர்பேரியம்னு செய்யணுமே ரெக்கார்ட் வேலை. அப்படி நிறைய தெரிந்து கொண்டது அதன் பின் ஆர்வம் ஏற்பட தெரிந்து கொள்ள நினைப்பது. அவ்வளவுதான் ஸ்ரீராம்

      ஆமாம் நாஞ்சில் சிவா பெரும்பாலும் இப்படியான பதிவுகள் தானே போடுவார்..அறிவியல் சார்ந்த, பொது அறிவு சார்ந்த விஷயங்கள்தான் எழுதுவார் என்பதால் அவர் சொல்லுவார் என்று நினைக்க வரும் சொல்லிவிட்டார்.

      கீதாக்காவின் மாமாவும். பால்காரரும் சொல்லிருக்காங்க அதை கீதாக்கா இங்கு சொல்லிட்டாங்க.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. எனக்கும் பூமிதினமென்ற செய்தி கைபேசியில் காட்டியது.அந்த பூமிக்கு நாம் தரும் மரியாதைதான் (முன்பு நம் பெரியவர்கள் கட்டுப்பாடுடன் தந்து கொண்டிருந்த கவனிப்புகள் ) வரவர இப்போது குறைந்து விட்டதாகத் உணர்கிறேன்.

    /காரணமாக இருந்துகொண்டு காப்போம் என்று சொல்வது நியாயமில்லையே! ஊரார்க்கு உபதேசம்!/ உண்மை. நீங்களும் இது பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள்.

    வழக்கம் போல் அழகான தெளிவான படங்கள் கண்களை கவர்கிறது. இயற்கை என்றுமே நம் கண்களை விட்டு அகலாது அல்லவா? நன்றாக படமெடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். கீரைகளில் படங்களும், அதன் பயனுமாக நீங்கள் விவரித்திருப்பது அருமை. இந்த மாதிரி பசுமையுடன் கீரையைப் பார்த்து நிறைய நாட்களாகி விட்டது.

    நீர்முள்ளி செடியின் பயன்களைப் பற்றி கருத்துரையில் தெரிந்து கொண்டேன். இயற்கை இப்படி நமக்கு தந்திருக்கும் பல வரங்களை நாம் இப்போதுள்ள கால வேறுபாடுகளில் புரிந்து கொள்ளாமல் போகிறோமோ என நினைக்கத் தோன்றுகிறது.

    அத்தனைப் படங்களும், ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் தரும் செய்திகளும் அருமை ரசித்துப் படித்தேன். நான் போன பதிவுக்கும், இதற்கும் தாமதமாக வந்து கருத்துரை தருகிறேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கமலாக்கா இப்போதைய வாழ்க்கை முறை மாறிவிட்டதே.

      வழக்கம் போல் அழகான தெளிவான படங்கள் கண்களை கவர்கிறது. இயற்கை என்றுமே நம் கண்களை விட்டு அகலாது அல்லவா? நன்றாக படமெடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.//

      மிக்க நன்றி கமலாக்கா.

      நீர்முள்ளி கேள்விப்பட்டிருந்தாலும் அதைப் பார்த்ததில்லை. இப்போது நானும் அதைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

      மிக்க நன்றி கமலாக்கா விரிவான கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  13. //இன்று உலக புவி தினமாம்//

    இருக்கட்டும் ... பூமிய விட்டுடுங்க.. பிழைச்சுப் போகட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை அண்ணா. உடல்நிலை சரியாகிவிட்டதா அண்ணா? ரொம்ப நாள் கழித்து இங்கு வந்திருக்கீங்க!

      இருக்கட்டும் ... பூமிய விட்டுடுங்க.. பிழைச்சுப் போகட்டும்...//

      ஹாஹாஅஹாஹா அதானே!!! ஏற்கனவே பாழ் பண்ணியாச்சே!

      மிக்க நன்றி துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  14. குளிரக் குளிர ஒரு கிராமத்தைச் சுற்றி வந்த மாதிரி இருக்கு.. அழகான படங்கள்.. படங்கள்.. இன்னும் இது போல எடுங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை அண்ணா அந்தக் கிராமம் ரொம்ப பசுமைதான்.

      //இன்னும் இது போல எடுங்கள்..//

      கண்டிப்பாக துரை அண்ணா. எடுக்காம இருக்க முடியுமா...கை துறு துறுன்னு வந்துவிடுமே.

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  15. அது நீர் முள்ளி.. சின்னச் சின்ன பூக்களோடு கணுவில் கூரிய முட்களோடு பச்சைப் பசேல் என்று இருக்கும்.. தஞ்சைப் பகுதியில் வயல் வரப்பு நீர்நிலை ஓரங்களில் நிறைய காணலாம்...

    நாங்கள் இப்போது இருக்கும் வீட்டில் அருகிலேயே நிறைய இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சைப் பகுதியில் வயல் வரப்பு நீர்நிலை ஓரங்களில் நிறைய காணலாம்...

      நாங்கள் இப்போது இருக்கும் வீட்டில் அருகிலேயே நிறைய இருக்கின்றன...//

      ஓ! யாரேனும் மருத்துவர்கள் எடுத்துக் கொண்டு செல்கின்றனரா? கடம்போடுவாழ்விலும் நிறைய பார்த்தேன். இப்போது இங்கு நீங்கள் எல்லோரும் சொன்னதிலிருந்து செடி பற்றித் தெரிந்தும் கொண்டேன்.

      மிக்க நன்றி துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  16. அழகான காட்சிகள்... படங்கள் வழி நாங்களும் கிராமத்தில் ஒரு உலா வந்த உணர்வு. நீர்முள்ளி குறித்த படமும் நண்பர்கள் தந்த மேலதிக தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் உலா.

    பதிலளிநீக்கு
  17. //இன்று உலக புவி தினமாம். பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பூமி மாசடைவதைத் தடுக்கவும்......அட போங்கப்பா. சும்மா கூவிக்கிட்டு! இதுக்கு ஒரு தினம்னு கொண்டாடிக்கிட்டு.....இதுவரை என்ன மாற்றம் நடந்தது? என்ன மாசுக்கட்டுப்பாடு? புகை கூடியுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் பெருகி உள்ளன. அப்புறம் எதற்கோ....அட போங்கப்பா..!//

    அப்படியாவது புவியை காக்க உங்களை போன்றவர்கள் நினைப்பார்கள் அதை படித்து ஒரு சிலர் கடைபிடிப்பார்களே கீதா.

    படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
    மழை காட்சி படம் அருமை. காணொளியும் நன்றாக இருக்கிறது.
    இரட்டைவால் குருவி, கரிக்குருவி உங்கள் படத்தில் இருக்கிறது. பச்சை வலை மேல

    எட்டெழுத்து பெருமாள் கோயில் என்று இருக்கிறது. பெருமாள் இருக்கிறார்.//
    இந்த கோயில் போய் இருக்கிறேன். பதிவும் போட்டேன் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அப்படியாவது புவியை காக்க உங்களை போன்றவர்கள் நினைப்பார்கள் அதை படித்து ஒரு சிலர் கடைபிடிப்பார்களே கீதா.//

    எங்கள் கோமதிக்கா எப்பவுமே நேர்மறைக் கருத்துதான் நல்ல கருத்து கோமதிக்கா. நானும் என்ன செய்தேன் என்ற நினைப்பு வரவேதான் அடுத்த வரிகள்.

    //படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
    மழை காட்சி படம் அருமை. காணொளியும் நன்றாக இருக்கிறது.
    இரட்டைவால் குருவி, கரிக்குருவி உங்கள் படத்தில் இருக்கிறது. பச்சை வலை மேல//

    ஆமாம் கோமதிக்கா இரட்டைவால், கரிக்குருவி.....மிக்க நன்றி அக்கா...

    //இந்த கோயில் போய் இருக்கிறேன். பதிவும் போட்டேன் என்று நினைக்கிறேன்.//

    அக்கா இந்த எட்டெழுத்து பெருமாள் கோயில் ஆங்காங்கே இருக்கிறது போலும். திருநெல்வேலிப் பகுதியில் இந்த எட்டெழுத்து பெருமாள் கோயில் திருநெல்வேலியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் ஒன்று இருக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள கோயில். அருகன்குளம்?

    சேந்திமங்கலம் எனும் இடத்திலும் இருக்கு.

    இது கடம்போடுவாழ்வு ஊருக்குள். அப்ப நீங்கள் இந்த ஊருக்குப் போயிருக்கிறீர்களே!!!! உங்கள் பதிவு பார்க்கிறேன் கோமதிக்கா. நான் வாசித்திருக்கிறேனோ? ஏதோ நினைவில் வருவது போல இருக்கு..

    மிக்க நன்றி கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் சொல்வது சரி, திருநெல்வேலி போகும் வழியில் எட்டெழுத்து பெருமாள் கோயில் பார்த்தேன்.

    கடம்போடுவாழ்வு போனது இல்லை.

    ஆராக்கீரை தெரியாது எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ சரி கோமதிக்கா.

      ஆராக்கீரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் கோமதிக்கா. பெயர் தெரிந்திருந்திருக்காதா இருக்கலாம்.

      மிக்க நன்றி கோமதிக்கா மீண்டும் வந்து பதில் சொன்னமைக்கு

      கீதா

      நீக்கு
  20. இனிய காட்சிகள் கீதா அக்கா ...

    பதிலளிநீக்கு
  21. காரணமாக இருந்துகொண்டு காப்போம் என்று சொல்வது நியாயமில்லையே! - சரியாக சொன்னீர்கள் சம்மட்டி அடிபோல.

    நான் படம் எடுத்தேன் ஆனால் சரியாக வரவில்லை. - இப்போதெல்லாம் நல்ல பாம்புகளுக்கே நல்லா வருவதில்லையாம்.

    கடம்போடுவாழ்வு - பெயர் நன்றாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் நல்ல பாம்புகளுக்கே நல்லா வருவதில்லையாம்.//

      ஹாஹாஹாஹா கோ சிரித்துவிட்டேன்....உங்களின் வார்த்தை விளையாட்டுத் திறமை ஏற்கனவே தெரிந்தது! உங்ககிட்ட செமையா மாட்டிக்கிட்டேன்!!!

      ஊரும் அழகா இருக்கும்.

      மிக்க நன்றி கோ!!

      கீதா

      நீக்கு
  22. படங்களின் பசுமை பார்வைக்குக் குளுமை . நன்றி

    பதிலளிநீக்கு