புதன், 13 ஏப்ரல், 2022

சில்லு சில்லாய் - 1 - டெலாய்டு ரோட்டிஃபர் (BDELLOID ROTIFER)

சென்ற பதிவு கடம்போடுவாழ்வு - 4 வதில் பசுமைப் படங்களை எல்லாம் பார்த்துவிட்டீர்கள்தானே!!? நன்றி.  இப்ப இந்தச் சில்லு செய்தி என்னன்னு பார்ப்போம்.

பார்த்தா டிஜிட்டல் தெர்மாமீட்டர் மாதிரி இருக்கு இல்லையா

சைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாகப் பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. (ரொம்ப பயமா ருக்கே!) இந்த நுண்ணுயிரிகள் எந்தவிதப் பாலினச் சேர்க்கையும் இன்றி தன்னைத் தானே இனப்பெருக்கம் செய்து கொள்ளுமாம். அதோட பெயர் டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer). அதன் மூக்கைச் சுற்றி புசு புசுவென்று சுருள் முடியா இருக்குமாம்!

"ஒரு பல செல் உயிரினம் உறைபனியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்கப்படலாம், பிறகு மீண்டும் உயிர் பெறும் என்பதைத்தான் நாம் இந்த ஆராய்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளும் செய்தி" என ரஷ்யாவில் இருக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசியோகெமிக்கல் அண்ட் பயாலஜிகல் ப்ராப்ளம்ஸ் இன் சாயில் சயின்ஸ் நிறுவனத்தைச் (Institute of physiochemical & Biological Problems in Soil Science) சேர்ந்த ஸ்டாஸ் மலவின் என்பவர் பத்திரிகை சங்கத்திடம் கூறினார்.

(இப்படி நம்ம நெருங்கிய சொந்த பந்தங்களை எல்லாம் செய்ய முடிந்தால்... ஆஹா!!!!)

இந்த உயிரினம் எந்தவிதக் கடினமான சூழலையும் தாங்கக் கூடிய வல்லமை பெற்றது.  உலகிலேயே கதிரியக்க எதிர்ப்புத் திறன் மிகுந்த உயிரினங்களில் இதுவும் ஒன்று என ´தி நியூ யார்க் டைம்ஸ்´ பத்திரிகை குறிப்பிட்டு இருக்கிறது. டெலாய்டு ரோட்டிஃபர்கள் உலகம் முழுக்க உள்ள நன்னீர் சூழலில் காணப்படும் ஒரு வகையான ரோட்டிஃபர் உயிரினம்.

(யப்பா நீ மாயாவி இல்லைதானே? உன்னை, நல்ல நீரில் வாழும் நல்லவர்னு விஞ்ஞானிகள் எல்லாம் சொல்றாங்க. உன்னால தொற்று வியாதி எதுவும் வராதுதானே! ஏனென்றால் ஏற்கனவே நாங்க ஒரு மாயாவியை சமாளிக்க முடியாம திணறிக் கொண்டிருக்கிறோம்.)

குறைந்த அளவிலான ஆக்சிஜன், உணவின்றி வாழும் பட்டினி நிலை, அதீத அமிலத் தன்மை, பல ஆண்டுகளாக நீரின்றி வாழ்வது போன்ற மிகச் சவாலான சூழல்களையும் இந்த உயிரினம் எதிர்கொள்ளக் கூடியது

(உனக்குக் குறைவான ஆக்சிஜன்! அந்த தக்கினெக்கை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தா உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டாகும்! எங்களுக்கு அந்த ஆக்சிஜன் இல்லாமத்தானே தவிக்கிறோம். )

50 மில்லியன் ஆண்டுகளாக இவை உயிர்வாழ புதிய வழிமுறைகளைக் கற்று கொண்டுள்ளனவாம்.  இதுல விஞ்ஞானிகள் க்ளோணிங்க் வேற செய்யறாங்களாம்!!

(இப்ப எங்களைப் பாடாய்ப்படுத்தும் மாயாவி கூட புதுசு புதுசா தன்னை உயிர்ப்பித்துக் கொண்டே போகுதே!! இதுவும் கூட ஒரு ஆராய்ச்சி சோதனைக் கூடத்திலிருந்து வெளியானதுதான் என்றும் சொல்லப்படுவதாலும் இது இயற்கையாக உருவானது அல்ல, இயற்கையாக இருந்தால் இப்படி உலகம் முழுவதும் பரவாது, மனிதனின் சுயநலம்தான் என்றும் சொல்லுவதை நம்பும்படியாக உள்ளதால்தான்...பயமாகீது!!!)

அறிவு ஜீவிகள் சாமியோவ்! உங்க பெயருக்காக, புகழுக்காக, நோபல் பரிசுக்காக இன்னும் என்னென்னத்துக்கும் புதுசு புசுதா கண்டுபிடிச்சுக்கோங்க ஆனால் உலகை அழிக்கும்படியாக எதுவும் கண்டுபிடிச்சிடாதீங்கப்பா!

---நன்றி கூகுள் செய்திகள் - பிபிசி தமிழ்

                                                       **************************

வீட்டுக்கு வீடு வாசப்படி போன்று நம் வீட்டிலும் குடும்ப அரசியல் இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்காமல், வம்புதும்பு இல்லாமல், அறிவியல், இயற்கை, பொதுவிஷயங்கள், நல்ல கட்டுரைகள், தலைப்புகள் என்று உரையாடுவது;  இசை, திரைப்படங்கள், வாசிப்பு போன்ற விஷயங்கள் என்றால் நானும் மகனும்  நிறைய பேசுவது; தனிப்பட்ட விருப்பங்களான புகைப்படம் எடுத்தல், வரைதல், கைவேலைகள், நட்பு வட்டம், உதவுதல், பயணங்கள்; என்று இருந்து வந்த காலம் வரை வீட்டில் நேர்மறை அலை அதிகமாக இருந்தது என்றே சொல்லுவேன். 

நண்பர் துளசியுடன் வலை தொடங்கிய போது, அவரின் உற்சாகம், உரையாடல், கொடுத்த ஊக்கம், குறும்படங்கள், ஆவி, குடந்தையார் நட்புவட்ட குறும்படங்கள் என்று எல்லாமும் சேர்ந்து நேர்மறை சக்தி கூடியது.  

பழைய பதிவுகளை, கதைகளைப் பார்த்த போதும், கவிநயா அவர்களின் பாடல்களைப் பாடிப் பதிந்தது மற்றும் ஆவி எழுதிய பாடல்களைப் பாடிப் பதிந்ததை எல்லாம்  கேட்ட போதும் அந்த நேர்மறை சக்தியின் வெளிப்பாடு தெரிகிறது. "அட! கீதா! நீயா? எங்க போச்சு இதெல்லாம்" என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்! 

சமீப வருடங்களாக குடும்பத்தில் முதல் பத்தி அவுட். குடும்ப விஷயங்கள் மட்டுமே ஆக்ரமித்ததால் குறைகள், சுமைகள், எப்போதும் அதே சிந்தனைகள், அதனால் எல்லோருக்கும் ஏற்பட்ட அழுத்தம் இவற்றால் வீட்டில் எதிர்மறை சக்தி அதிகம் பரவியதையும் உணர முடிந்தது/கிறது.  கற்பனை புதைந்து, எழுத்தும் சோர்வுற்றது. 

முன்பு போல நல்ல உருப்படியான விஷயங்களைப் பேசி, சூழலை மாற்றணும் என்று நானும் மகனும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.  இதுவும் கடந்து போகும்தான்!

போர்க்குதிரை போல பாயணும்னு நினைத்துத் தொடங்கிக் கடைசியில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு.......

கமான் கீதா கமான்! ரேஸ் வேண்டாம். நிதானமாக......பௌன்ட்ரி அடிக்காவிட்டாலும், டக் ஆகாமல் நிதானமாக செகன்ட் இன்னிங்க்ஸ் இறங்கினாலோ!..யெஹி ஹேய் ரைட் சாய்ஸ் பேபி! ஆஹா!


(இன்னுமொரு சில்லும் கொடுக்கலாம் என்று நினைத்து முன்னோட்டம் பார்த்த போது, பதிவு பெரிதாகிவிடும் அபாயம் இருந்ததால், இந்தச் சில்லோடு நிறுத்திக் கொண்டு அடுத்த சில்லு சில்லாய் - இல் பார்க்கலாம்...)

-------கீதா

37 கருத்துகள்:

  1. புதிய பயமுறுத்தல்..   சே..  புதிய செய்தி.  எங்கு பார்த்தீர்கள் இந்தச் செய்தியை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். இந்தச் செய்தி கூகுள் செய்தியில், பிபிசி ஆங்கிலம்/தமிழில் வந்தது. அதைக் குறித்தும் வைத்திருந்த பதிவு அந்தப் பாழாய்ப் போன பென் டிரைவுடன் போய்விட்டதே. நல்லகாலம் பதிவு மட்டும் ப்ளாகர் ட்ராஃப்டில் போட்டு வைத்திருந்தேன்.

      நன்றின்னு கூகுள் செய்தி நினைவு இருந்ததால் போட்டேன் ஆனால் எந்தத் தளம் என்பது கொஞ்சம் குழப்பம் இருந்ததால் பார்த்துப் போட நினைத்து மறந்திட...இன்று காலை நினைவு வந்தது. அதைப் பார்த்துச் சேர்த்துவிட்டு கருத்துகள் பார்த்தால் அதற்கு முன்னரே உங்கள் கருத்துகள் வந்திருந்தன. சேர்த்துவிட்டேன் ஸ்ரீராம்.

      செய்தி கொஞ்சம் பழசுதான் ஹிஹிஹி...உடனே எழுதியது ஆனால் முடிக்காமல் கீழே சொல்லப்பட்டிக்கும் விஷயத்தால் தேங்கிக் கிடந்தது. அதைத்தான் இப்போது முடித்து வெளியிட்டேன்.

      இதற்கு மட்டும் பதில் கொடுத்துவிட்டுப் போகிறேன். அப்புறம் தான் வலை உலா இங்கு பதில்கள் எல்லாம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. கொஞ்ச வருடங்களுக்கு முன் நிலவிலிருந்து எடுத்த மனித உடல் ஒன்று கண்விழித்துப் பார்த்ததாய் பயமுறுத்தினார்கள்.  சந்தர்ப்பத்தை விடாமல் நானும் ஒரு பதிவு போட்டிருந்தேன்.  இது சின்ன உயிரி என்றாலும் இதில்தான் ஆபத்தும் அதிகமிருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச வருடங்களுக்கு முன் நிலவிலிருந்து எடுத்த மனித உடல் ஒன்று கண்விழித்துப் பார்த்ததாய் பயமுறுத்தினார்கள்.//

      ஆ ஆ!! பதிவைத் தேடி எடுத்து வாசிக்கிறேன்...

      சந்தர்ப்பத்தை விடாமல் நானும் ஒரு பதிவு போட்டிருந்தேன்.//

      ஹாஹாஹாஹாஹா...நாம விடுவமா!

      // இது சின்ன உயிரி என்றாலும் இதில்தான் ஆபத்தும் அதிகமிருக்கும்!//

      ஆமாம் இன்னும் அடுத்த தகவல் இது பற்றி வரவில்லை. இதுவரை இதைப் பற்றி எதிர்மறை எதுவும் இல்லை. இது நல்ல விஷயம் ஆராய்ச்சிக்கு உதவுவது என்றே சொல்லப்படுகிறது

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. // (இப்படி நம்ம நெருங்கிய சொந்த பந்தங்களை எல்லாம் செய்ய முடிந்தால்... ஆஹா!!!!) //

    பூமி தாங்காது மக்கா...  இடம் பத்தாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா.....உண்மைதான் ஆனாலும் கற்பனைக்கு என்ன கட்டுப்பாடு!!!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. அதன் மூக்கின் முன் இருக்கும் முடிபோன்ற அமைப்பை ஆராய்ந்து அதுபோல செயற்கையாக தயாரித்து நாமும் வைத்து கொண்டால் குறைந்த அளவு ஆக்சிஜனில் ஜீவிக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! நல்ல ஐடியாதான்...சொல்லிடுவொம் ஆராய்ச்சியாளர்களிடம்!!! சாப்பாடு தண்ணீர் கூட இல்லாம வாழுதாமே ஏதோ ஞானியா இருக்குமோ!!!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. அப்போ கூட, அதன் வயிற்றுப்பகுதியை ஆராய்ந்து அது போல குறைந்த அளவு இரப்பை வைத்துக்கொண்டால், சிறிதாகச் சாப்பிட்டு எப்போதுமே ஒல்லியாக ஆரோக்கியமாக இருக்கலாம் என்று யோசிக்க மாட்டேங்கிறாரே

      நீக்கு
    3. நெல்லை - ஹாஹாஹாஹாஹா....

      நாமெல்லாம் 'திங்க' கூட்டமாக்கும்!!! ஹூம் நீங்க சொல்லியிருப்பதுக்கெல்லாம் வரம் வேண்டுமோ என்னமோ!!

      கீதா

      நீக்கு
  5. பதிவுக்கான தலைப்புத்தேர்வு அருமை.  எல்லோருக்கும் சோறும் காலமும் வரும்.  அதிலிருந்து மேலும் காலமும் வரும்.  நம்புவோம்.  மீள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்.

      உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது பகுதியை எழுதிய போது நீங்கள், நம் நட்புகள் நினைவுக்கு வந்தீ-தா -ங்க....

      எல்லோருக்கும் மகிழ்வுடன் இருப்போம் ஸ்ரீராம்

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  6. உண்மையைச் சொல்லணும்னா தலைப்பைப் பார்த்து ஏதோ ரோட்டி கீட்டின்னு சமையல் பதிவுன்னு நினச்சு வந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஆனா கூடவே கர்ர்ர்ர்ர்ர்ர் கன்னாபின்னானு உங்க கூடச் சண்டை.!!! ஹாஹாஹாஅ.

      திங்க பதிவு நான் எபி திங்கவுக்கு மட்டுமே அனுப்புவதாக்கும்!!!!!! எங்கள் தளத்தில் போடுவதே இல்லையே! அது நாங்கள் முதலிலேயே முடிவு செய்தது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. //அறிவு ஜீவிகள் உங்க பெயருக்காக, புகழுக்காக, நோபல் பரிசுக்காக//

    இதுதான் இந்த உலகம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம்.

    என்றுமே நான் சொல்வது விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வுக்கு கேடே... இந்த அலைபேசியின் தொடர்பும்கூட...

    பயனுள்ள தகவல்கள் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி! விஞ்ஞான வளர்ச்சியில் சில பல பாதகங்கள் இருக்கலாம்தான். ஆனால் அதற்காக வளர்ச்சியை நாம் குறை சொல்லுவது சரியல்ல என்பது என் கருத்து, கில்லர்ஜி. அதுவும் நாம் அதைப் பயன்படுத்திக் கொண்டே குறை சொல்லுவது.

      நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களும் வளர்ச்சியில் வந்தவைதானே.

      இதோ நாம் பேச முடிகிறது, எழுத முடிகிறது என்றால் இவைதானே காரணம்? நாம் வண்டி, கார், விமானம் பயன்படுத்தாமலா இருக்கிறோம். நடந்தா செல்கிறோம்?

      இப்போதும் கூட இதை எல்லாம் தவிர்த்துவிட்டு, ஓலைகளால் வேய்ந்த கூரை வீட்டில், இலைதழைகளால் உட்லை மறைத்துக் கொண்டு வாலாமே. வாழ முடியுமே ஒதுங்கிச் சென்று கற்கால மனிதன் போல. ஆனால் நாம் எந்த வசதியையும்விட்டுவிட்டு வாழவில்லையே. எழுதாமல் இருக்க முடியுமா? பேசாமல் இருக்க முடிகிறாதா? பயணம் செய்யாமல் இருக்க முடிகிறதா? எனவே பயன்படுத்திக் கொண்டு குறை சொல்வதை விட, நமக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு தேவையற்றதை ஒதுக்கிவிட்டு கூடியவரை இயற்கையோடு வாழலாமே. அதுவே நாம் செய்வதில்லை. வண்டிப்புகை உலகை வெப்பமயமாக்குகிறது ஆனால் நாம் இயற்கையைப் பராமரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வண்டியையும் பயன்படுத்துகிறோமே.

      எனவே நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம். வளச்சி என்பது தவிர்க்க இயலாத ஒன்று இதோ இன்று அறிவியல் வளர்ச்சியால் விளைந்த மூன்றாவது காதுதான் என்னை உங்களோடும் எல்லோரோடும் உரையாட வைக்கிறது. நடமாட வைத்திருக்கிறது. எனவே என்னைப் பொருத்த்வரை அறிவியல் வளர்ச்சியைக் குறை கூறுவதை விட அதன் நன்மைகளை நாம் எடுத்துக் கொண்டு பயனடையலாம். இல்லை என்றால் ஒதுங்கி வாழ்லாம்.

      //பயனுள்ள தகவல்கள் தொடரட்டும்.//

      ஆமாம் கில்லர்ஜி! நிச்சயமாக,.

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      கீதா

      நீக்கு
  8. சில்லு செய்தி தெரிந்து கொண்டேன்.
    டிஜிட்டல் தெர்மாமீட்டர் மாதிரிதான் இருக்கிறது.

    பழைய உற்சாகத்துடன் பதிவுகளை போடுங்கள்.

    உங்கள் எண்ணங்கள் நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா அந்தப் படத்தைப் பார்த்ததும் உடனே எனக்கு டிஜிட்டல் தெர்மாமீட்டர் தான் நினைவுக்கு வந்தது.

      //பழைய உற்சாகத்துடன் பதிவுகளை போடுங்கள்.உங்கள் எண்ணங்கள் நன்றாக இருக்கிறது.
      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.//

      ஆமாம் அக்கா மீண்டு வர வேண்டும். முன்போ போல் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதுதான்.

      மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  9. பதிவுக்குள் விமரிசனம். விமரிசனம் படித்து படித்து விமரிசன வியாதி உங்களுக்கு தொற்றிக்கொண்டு விட்டது. இப்போது அறிமுகப்படுத்திய கிருமி நல்லதா, கெட்டதா? 
    கவிநயா யார்? பிள்ளைகள் இல்லாமல் தனியாகும்போது எல்லா வீடுகளிலும் ஏற்படும் ஒரு வெறுமை மனதை கனமாக்கி எரிச்சல் ஊட்டுவது சகஜம். 

    ஆவி யார்? குதிரை போல் இல்லாவிடினும் வண்டிமாடு போல் குடும்பத்தை இழுத்துக்கொண்டு சீராக செல்வீர்கள். இது தவிர்க்க முடியாதது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஜெகே அண்ணா பதிவுக்குள் அடைப்பில் என் கருத்தைக் கொடுப்பது இல்லை என்றால் வேறுகலரில் கொடுப்பது எல்லாம் முன்பே நான் செய்வதுதான்.....பழைய பதிவுகளைப் பார்த்ததில் அதைத்தான் கீழே இரண்டாவது பகுதியில சொல்லியிருக்கிறேன்!!

      இந்த நுண்ணுயிரி நன்னீரில் வாழும் நல்ல நுண்ணியிரி என்று சொல்கிறார்கள். ஆல்கே வெரைட்டி, தாவரங்களுக்குப் பயன்படும் அளைவில்...பயனுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தேவைப்பட்டால் பெருக்கிக் கொள்ளலாம் வேண்டாம் என்றால் அப்படியே டார்மென்ட்டாக விட்டுவிடலாமாம்.

      //பிள்ளைகள் இல்லாமல் தனியாகும்போது எல்லா வீடுகளிலும் ஏற்படும் ஒரு வெறுமை மனதை கனமாக்கி எரிச்சல் ஊட்டுவது சகஜம்.//

      ஆமாம் அண்ணா. உண்மைதான்.... பொதுவாக நான் என்னை ரொம்ப பப்ளியாக வைத்துக்கொள்பவள். அது என் இயல்பு. இடையில் வேறு பல பிரச்சனைகள்.

      ஆவி என்பவர் எங்கள் நண்பர் கோவை ஆவி எனச் சுருக்கமாக அழைக்கப்படுபவர். ஸ்ரீராமிற்கும் நண்பர். என்னை ஸ்ரீராமிடம் நேரடியாக அறிமுகப்படுத்தியவர் ஆவிதான். ஆனந்தராஜா விஜயராகவன். நல்ல நண்பர். பாடல்கள் எழுதுவார். குறும்படங்கள் எடுத்திருக்கிறார். அதில் துளசி, துளசியின் படத்தில் ஆவி, நண்பர் குடந்தை ஆர் வி சரவணன், கணேஷ் பாலா, ராயசெல்லப்பா சார், நான் என்று ஒரு வட்டம்.

      //குதிரை போல் இல்லாவிடினும் வண்டிமாடு போல் குடும்பத்தை இழுத்துக்கொண்டு சீராக செல்வீர்கள். இது தவிர்க்க முடியாதது. //

      ஹாஹாஹா...உண்மைதான். அண்ணா நான் சொன்னது குடும்பம் அல்லாத திறமைகளுக்கு. நான் பதிவு எழுதுவதற்கு. அதற்கும் பொருந்திப் போகிறதுதான்.

      மிக்க நன்றி ஜெகே அண்ணா.

      கீதா

      நீக்கு
    2. கவிநயா யார்?//

      இதைச் சொல்ல விட்டுப் போயிற்று ஜெகே அண்ணா. துளசிதான் இதைப் பார்த்து எனக்கு நினைவூட்டினார். அதற்கு நீ பதில் சொல்லவில்லை என்று,

      கவிநயா அம்மா அவர்கள் அம்மன் பற்றி மட்டும் பாடல்கள் எழுதுபவர். வலைத்தளத்தில் அம்மான்பாடல்கள் என்று எழுதுவார். பெரும்பாலும் செவ்வாய் அன்று வெளியிடுவார். எனக்குச் சுப்புத்தாத்தா மூலம் வலையில் அறிமுகமானவர். ஓ இப்போது சுப்புத்தாத்தா யார் என்று சொல்ல வேண்டுமோ? இவரும் வலைப்பதிவர். பாடுவார். ஜாலியாகக் கிண்டலடிபார். தத்துவம் பேசுவார் ஆன்மீகம் பேசுவார். நிறைய. ஸ்ரீராம் கீதாக்கா வல்லிம்மா எல்லாருக்கும் தெரியும் எனக்கு லேட் அறிமுகம். சென்னை வாசி.

      சரி அவர் அறிமுகப்படுத்திய கவிநயாம்மா எழுதும் பாடல்களை நான் மெட்டமைத்துப் பாடி க்ளவுடில் அனுப்புவேன் அவர் அதை சுட்டி கொடுத்து வெளியிடுவார். நிறைய பாடல்கல் பாடியிருக்கிறேன். பெரிய பாடகி எல்லாம் இல்லை. பாத்ரூம் சிங்கர்!

      ஆனால் திடீரென்று தொண்டை சரியாக இல்லாமல், இப்போது கொரோனாவிற்குப் பிறகு கொஞ்சம் மோசமாகி இருப்பதால் பாடுவதில்லை. அதைத்தான் சொல்லியிருந்தேன்.

      கீதா

      நீக்கு
  10. தெர்மாமீட்டர் உயிரி நல்லதாக இருக்கட்டும்.
    நீங்கள் மீண்டும் விஷயங்களைத் தொகுத்து நல்ல
    படங்களோடு தொடருங்கள் கீதா.

    குடும்ப சூழ்னிலை கொஞ்சம் படுத்தல் தான். இருந்தாலும் ஒரு எஸ்கேப்
    வேண்டுமே!!
    அதற்காகத் தான் எழுத்து.

    வரும் தமிழ்ப் புத்தாண்டு சங்கடங்களைக் களைந்து
    நற்பலங்களைக்
    கொடுக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்த உயிரி நல்லதாக இருக்க வேண்டும் அப்படித்தான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

      குடும்ப சூழ்னிலை கொஞ்சம் படுத்தல் தான். இருந்தாலும் ஒரு எஸ்கேப்
      வேண்டுமே!!
      அதற்காகத் தான் எழுத்து.//

      ஹாஹாஹா ஆமாம் இருந்தாலும் எழுதவும் ஒரு உற்சாகம் வேண்டுமே. முயற்சி செய்கிறேன் தான்.

      வரும் தமிழ்ப் புத்தாண்டு சங்கடங்களைக் களைந்து
      நற்பலங்களைக்
      கொடுக்க வாழ்த்துகள்.//

      மிக்க நன்றி அம்மா.

      கீதா

      நீக்கு
  11. ஆவி எழுதிய பாடல்கள்...என்கிறீர்களே, ஆவி பாடல் கூட எழுதுமா? எந்த மொழியில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா !

      மிக்க நன்றி செல்லப்பா சார்.

      கீதா

      நீக்கு
    2. செல்லப்பா சார்... என்ன படம் என்று மறந்துவிட்டது. அதன் இயக்குநர், இசையமைப்பாளர் சேர்ந்து, கண்ணதாசன் ஆவியை வரவழைத்து, அதனை ஒரு பாடல் இயற்றச் சொல்லி (இசைக்கேற்றவாறு) அதனை படத்தில் வைத்துள்ளோம் என்று சொல்லியிருந்தார்கள். அதுதான் நினைவுக்கு வந்தது.

      ஆவியைக் கூப்பிட்டு பாடலும் எழுதச் சொல்லலாம், அரசியல் சந்தேகமும் கேட்டுக்கொள்ளலாம்.

      நீக்கு
    3. ஆ நெல்லை நிஜமாகவா!!?? தகவல் புதுசா இருக்கே நெல்லை உங்களுக்கென்று நிறைய தகவல்கள் கிடைக்குதுப்பா...

      கீதா

      நீக்கு
  12. சில்லு செய்தி ஜில்லுன்னு இருந்திச்சு!

    //"ஒரு பல செல் உயிரினம் உறைபனியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்கப்படலாம், பிறகு மீண்டும் உயிர் பெறும் என்பதைத்தான் நாம் இந்த ஆராய்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளும் செய்தி"//

    ஆஹா! செய்தி தந்த உங்களுக்கு கோடி புண்ணியம்!!... இனி இந்த உசுர விடுறதா இருந்தா உறைபனியில் கொண்டுபோய் விட்டுட்டு வந்துட வேண்டியதுதான்னு முடிவே பண்ணிட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ... அப்புறம் உங்க உறைந்த உடலை, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள், தமிழகத் தென்கோடியில் இருந்தவங்க எல்லாமே அண்டார்டிகாவிலிருந்துதான் வந்தவங்க என்று புதிதாகக் கண்டுபிடித்து எழுதிடப்போறாங்க.

      நீக்கு
    2. சில்லு செய்தி ஜில்லுன்னு இருந்திச்சு!//

      ஹாஹாஹா

      //ஆஹா! செய்தி தந்த உங்களுக்கு கோடி புண்ணியம்!!... இனி இந்த உசுர விடுறதா இருந்தா உறைபனியில் கொண்டுபோய் விட்டுட்டு வந்துட வேண்டியதுதான்னு முடிவே பண்ணிட்டேன்...//

      ஹாஹாஹா

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
    3. ஹாஹாஹா நெல்லை உங்க கருத்து பார்த்துச் சிரித்துவிட்டேன்...அட என் கருத்துக்கு முன்னமே வந்திருக்கா இது...இப்பத்தான் கண்ணுல படுகிறது!!! கமென்ட்ஸில் இன்று காலைதான் உங்கள் கமென்ட் பார்த்தேன் என்னவோ .

      கீதா

      நீக்கு
  13. உயிரி குறித்த தகவல் - நல்லதாகவே இருக்கட்டும்.

    பதிவுகள் தொடரட்டும்.

    தலைப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நல்லதாகத்தான் இருக்கும் என்றும் தெரிகிறது.

      மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  14. //நெருங்கிய சொந்த பந்தங்கள்// - அதில் எத்தனை உருப்படியானவர்கள் தேறுவார்கள், ஒவ்வொருவருக்கும்? ஒரு சிலர்தான் ரொம்பவே நல்லவர்களாக எனக்குப் படுகிறது.

    எங்க அம்மா, 'சிரிப்பும் புளிப்பும் சில காலம்' னு சொல்வாங்க. அதனால கொஞ்சம் வயது கூடும்போது குடும்பச் சுமைகள்தாம் நம் மனதைச் சுற்றிவரும். என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் எத்தனை உருப்படியானவர்கள் தேறுவார்கள், ஒவ்வொருவருக்கும்? ஒரு சிலர்தான் ரொம்பவே நல்லவர்களாக எனக்குப் படுகிறது.//

      ஹாஹாஹாஹா ஆமாம் ஆமாம் நெல்லை....அது போதுமே!!! ஹிஹிஹிஹி

      //எங்க அம்மா, 'சிரிப்பும் புளிப்பும் சில காலம்' னு சொல்வாங்க. அதனால கொஞ்சம் வயது கூடும்போது குடும்பச் சுமைகள்தாம் நம் மனதைச் சுற்றிவரும். என்ன செய்ய?//

      ஆமாம், நெல்லை ஆனால் பொதுவாக நான் கொஞ்சம் கூல் டைப். பெரிய கஷ்டங்கள் அதுவும் முன்பின் தெரியாத விஷயங்கள் நடந்த போது கூடத் தெரியவில்லை. இப்போது கொஞ்சம் நடைமுறை புத்தி தெளிவா இருப்பதாலோ என்னவோ இப்படி!!

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  15. அடைப்புக்குள் கருத்துகள் அருமை

    பதிலளிநீக்கு